| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2730 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமானை ஆராதிக்கு முபகரணங்களின் ஸௌகர்யம் இப் பாசுரத்தில் அருளிச் செய்யப்படுகிறது.) 1 | பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர் பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1 | பரிவது இல்,Parivathu ill - துன்பமற்ற ஈசனை,Eesanai - ஸர்வேச்வரனை பாடி,Paadi - துதி செய்து விரிவது,Virivadhu - ஸ்வரூபவ விகாஸத்தை மேவல் உறுவேல்,Meval uruvel - பெற வேணுமென்கிற உறுதி யுடையவர்களே! புரிவதுவும்,Purivadhum - (அதன் பிறகு) ஸமர்ப்பிப்பதும் பிரிவகை இன்றி,Pirivakai indri - பிரயோஜனத்தைக் கொண்டு விலகிப் போதலின்றியே நல் நீர்,Nal neer - நல்ல தீர்த்தத்தையே தூய்,Thooy - ஸமர்ப்பித்து புகை பூவே,Pugai poove - ஏதேனுமொரு தூபமும் ஏதேனுமொரு புஷ்பமுமேயாகும். |
| 2731 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமானுக்கு இடுவதற்கு இன்னபொருள்தானென்கிற நியதியில்லையென்றார் கீழ்ப்பாட்டில்; பொருள் நியதியில்லாததுபோலவே அதிகாரி நியதியுமில்லையென்பது இப்பாசுரம்.) 2 | மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2 | அம்,Am - அழகிய மது வார்,Madhu vaar - தேன் ஒழுகுகின்ற தண்,Than - குளிர்ந்த துழாயான்,Thuzhaayan - திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனும் முதுவேதம் முதல்வனுக்கு,Mudhuvedham mudhalvanukku - பழமையான வேதங்களால் முழுமுதற் கடவுளாகச் சொல்லப் பட்டவனுமான பெருமானுக்கு எது பணி,Edu pani - (தகுதியாகச் செய்யக் கூடிய) கைங்கரியம் ஏது? என் பணி ஏது,En pani yedhu - (அதிலும்) நான் செய்யக் கூடிய கைங்கரியம் ஏது? என்னாததுவே,Ennaathadhuve - என்று சிந்தியாமலிருப்பதே ஆன் செய்யும் ஈடு,Aan seyyum edu - அடிமை செய்தற்கொப்பாகும். |
| 2732 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமான் விஷயத்தில் அடிமை செய்கைக்கு அதிகாரி நியதியில்லை யென்று காட்டப்பட்டது கீழ்ப்பாட்டில்; அஃது எதனாலென்ன; அடிமை செய்கையில் விருப்பமுடையவர்களை ஜாதி குணம் தொழில் முதலியவற்றால் நிஹீநரென்று கைவிடும் ஸவபாவம் எம்பெருமானுக் கில்லாமையாலே என்கிறது இப்பாட்டில்) 3 | ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3 | என் மனன்,en manan - எனது மனமானது ஈடும் எடுப்பும் இல்,eedum eduppum el - குற்றம் பார்த்துத் தள்ளி விடுதலும் குணம் பார்த்துக் கைக் கொள்ளுதலுமில்லாத ஈசன்,esan - ஸர்வேச்வரனுடைய மாடு,maadu - ஸமீபத்தை விடாது,vidadhu - விடுகிறதில்லை என் நா,en naa - எனது நாவானது அவன்,avan - அந்த ஸர்வேச்வரன் விஷயமான பாடல்,paadal - துதிகளை பாடும்,paadum - பாடுகின்றது; என் அங்கம்,en angam - எனது உடம்பு அணங்கு ஆடும்,anangu aadum - தைவாவேசங்கொண்டது போல் ஆடுகின்றது. |
| 2733 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (தம்முடைய மனமொழி மெய்களுக்கு எம்பெருமான் பக்கலிலுண்டான ஊற்றம் சிறிது போது உண்டாய் விடுகை யன்றியே நித்ய ஸூரிகளுக்குப் போலே நிரந்தர யாத்ரையானபடி சொல்லுகிறது இப்பாட்டு.) 4 | அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன் பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4 | அணங்கு என ஆடும்,Anangu Ena Aadum - தைவாவேசங் கொண்டாற்போல ஆடுகின்ற என் அங்கம்,En Angam - எனது சரீரம் வணங்கி வழிபடும்,Vanangi Vazhipadum - சேவித்து ஆராதிக்கும்படி நின்ற ஈசன்,Eesan - எம்பெருமான் (எப்படிப்பட்டவனெற்றால் அமரர்,Amarar - நித்திய ஸூரிகள் பிணங்கி,Pinangi - பரஸ்பர விவாத் செய்து பிதற்றும்,Pithatrum - பிதற்றும்படி யாயுள்ள குணம் கெழு,Gunam Kelu - பல திருக்குணங்கள் பொருத்திய கொள்கையினான்,Kolkaiyinaan - கோட்பாட்டை யுடையவன். |
| 2734 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (தம்முடைய மனமொழி மெய்களுக்கு எம்பெருமான் பக்கலிலுண்டான ஊற்றம் சிறிது போது உண்டாய் விடுகை யன்றியே நித்ய ஸூரிகளுக்குப் போலே நிரந்தர யாத்ரையானபடி சொல்லுகிறது இப்பாட்டு.நமக்கு ‘அநந்ய போக்யத்வம்‘ என்பதாக ஒரு ஸ்வரூபமுண்டு, அதாவது எம்பெருமானைத் தவிர்த்து மற்ற அற்ப பலன்களை விரும்பாமல் அவனையே பரம்போக்ய வஸ்துவாகக்கொண்டு அவனையே ஆசைப்படுவதாம். இப்படிப்பட்ட அதிகாரிகள் விஷயத்திலே அவன் அமுதமாகவே யிருப்பான் என்கிறது) 5 | கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் – விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே –1-6-5 | கொள்கை,Kolgai - குணம் பார்த்துக் கொள்ளுதலும் கொளாமை,Kolaamai - குணமில்லாமை பார்த்துத் தள்ளுதலும் இலாதான்,Ilaadhaan - இல்லாதவனாய் எள்கல்,Elgal - கைவிடுகைக்கு அடியான மனநெகிழ்ச்சியும் இராகம்,Raagam - கைக் கொள்ளுதற்கு அடியான ஆசையும் இலாதான்,Ilaadhaan - இல்லாதவனாய் விள்கை,Vilgai - வேறு பிரயோஜனங்களைக் கொண்டு விலகிப் போவதையும் விள்ளாமை,Villamai - தன்னையே விரும்பி விடாதிருப்பதையும் விரும்பி,Virumbi - எதிர் பார்த்து உள் கலந்தார்க்கு,Ul Kalantharkku - (விண்டு போகாமல்) தன்னில் கலந்தவர்கட்கு ஓர் அமுது,Or Amuthu - ஒப்பற்ற அமுதமாயிருப்பன் |
| 2735 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (கீழ்ப்பாட்டில்* விள்கை யிள்ளாமை விரும்பி* என்று சொன்ன சொற்போக்கிலே பிரயோஜநாந்தர பரர்கள் ப்ரஸ்தாவிக்கப் பட்டமையால், ஐயோ உள்கலந்தார்க்கு ஓரமுதாயிருந்து மெம்பெருமானை விட்டுப் பிரயோஜநாந்தர பரர்களாய் ஆபாஸமான அமுதத்தைப் பெற்றுக் கொண்டு விலகிப் போவாரும் சிலரே! என்று தேவர்களை நிந்திப்பதிலே நோக்காகச் சொல்லுகிறது இப்பாட்டு.) 6 | அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால் அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6 | அமரர்கட்கு,Amararkatku - தேவர்கட்கு அமுதம் ஈந்த,Amutham eentha - அமிர்தத்தைக் கொடுத்தவனாய் திமிர் சுடர் ஆழி,Thimir Sudar Aazhi, திருச் சக்கரம்m Thiru Chakkaram - வளர்கின்ற ஒளியை யுடைய திருச் சக்கரத்தை யுடையனாய் நெடு மால்,Nedumaal - எல்லை கடந்த பெருமையை நிமிர் திரை நீள் கடலான,Nimir Thirai Neel Kadalaa - அலை யெறிகின்ற விசாலமான திருப்பாற்கடலில் கண் வளர்ந்தருளி அமுதிலும்,Amuthilum - (அக்கடலிலுண்டான) அமிர்தத்தைவிட ஆற்ற இனியன்,Aatra Iniyan - மிகவும் போக்யன். |
| 2736 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (இங்ஙனம் பரம போக்யனான எம்பெருமானுடைய குணங்களை அநுபவித்துக் கொண்டு போது போதுபோக்குவதே ப்ராப்த மென்கிறாரிதில்) 7 | நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7 | நீள் கடல் சூழ்,Neel Kadal Soozh - நீண்ட கடலினால் சூழப்பட்ட இலங்கை,Ilangai - லங்கா புரிக்கு கோன்,kon - தலைவனாயிருந்த இராவணனுடைய தோள்கள்,Tholgall - இருபது தோள்களுடையும் தலை,Thalai - பத்துத் தலைகளையும் துணி செய் தான்,Thuni Sey dhaan - அறுத்தொழித்த ஸ்ரீராமபிரானுடைய தாள்கள்,Thaalkal - திருவடிகளை தலையில் வணங்கி,Thalaiyil Vanangi - தலையாலே வணங்கி நாள் கடலை,Naal Kadalai - காலாமகிய கடலை கழியின்,Kazhiyin - தாண்டுங்கள். |
| 2737 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (ஸ்ரீராமபிரானுடைய வீரசரிதத்தை யநுஸந்தித்து இதர விஷயப் பற்றுகளைத் தவிரவே, அவன்றானே இடையூறுகளைப் போக்கி நித்ய கைங்கர்யத்தைத் தந்தருள்வனென்கிறார்.) 8 | கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8 | தொண்டீர்கள்,Thondirkal - தொண்டர்களே! கழிமின்,Kazhimin - விஷயாந்தர ஸங்கத்தைக் கழித்து விடுங்கள் கழித்து,Kazhithu - அதனை கழித்து விட்டு அவனை,Avanai - அப் பெருமானை தொழுமின்,Thozhumin - தொழுங்கள்; தொழுதால்,Thozhudhaal - தொழுத மாத்திரத்தினால் (அவன்) வழி நின்றி,Vazhi Nindri - ஜன்ம பரம்பரையாய்த் தொடர்ந்து நின்ற வல்வினை,Valvinai - வலிய பாவங்களை மாள்வித்து,Maalvitthu - ஒழித்து அழிவு இன்றி,Azhivu Indri - சாச்வதமான ஆக்கம்,Aakkam - முக்கிய ஸம்பத்தை தரும்,Tharum - தந்தருள்வன் |
| 2738 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமான் தன்னைப் பற்றின மாத்திரத்திலே இப்படி இடையூறுகளை யெல்லாம் போக்கிப் பரம புருஷார்த்த்த்தையும் தந்தருளக் கூடுமோவென்ன பிராட்டி அருகேயிருக்கும்போது எதுதான் செய்யக்குறை? என்கிறார்.) 9 | தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன் பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9 | அ அரு பயன் ஆய,A Aru Payan Aaya - அப்படிப்படட் அருமைப் பயனான புருஷார்த்தத்தை திருமகனார் தனிகேள்வன்,Thirumaganaar Thanikelvan - பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாயகனாய்க் கொண்டு தரும்,Tharum - (பிராட்டியோடு கூடி நின்று) தந்தருள்வன்; பெருமை உடைய பிரானார்,Perumai Udaya Piranar - லக்ஷ்மீ சம்பந்தத்தாலே) மேன்மையை யுடைய (அந்த) ஸர்வேச்வரன் இருமை வினை,Irumai Vinai - இருவகைப் பட்ட (புண்ய பாப ரூபமான) கருமத்தை போக்குவான். |
| 2739 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமான் பிராட்டியோடுகூடி அடியார்க்குக் காரியஞ் செய்தருள்வது தாமதமாக நடைபெறுமோ என்ன; இல்லை ஒரு நொடிப்பொழுதிலே நடைபெறுமென்கிறது இப்பாட்டு.) 10 | கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண் கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10 | அடு,Adu - பகைவரை அழிக்கின்ற புள்,Pul - கருடப் பறவையை கொடி ஆ உயர்த்த,Kodi A Uyartha - த்வஜமாக எடுத்தவரும் வடிவு ஆர்,Vadivu Aar - விலக்ஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யடையவருமான மாதவனார்,Madhavanaar - லக்ஷ்மீபதியானவர் தீய வினைகள்,Theeya Vinaigal - கொடிய நொடி ஆகும் அளவை கண்,Nodi Aagum Alavai Kan - ஒரு நொடிப் பொழுதிற்குள்ளே கடிவார்,Kadivaar - போக்கி யருள்வார். |
| 2740 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் மீண்டும் இந்த ஸம்ஸாரநிலத்தில் வந்து பிறக்கப் பெறார்களென்று பயன்சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது.) 11 | மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11 | சடகோபன்,Sadagopan - ஆழ்வார் மாதவன் பால்,Madhavan Paal - லக்ஷ்மீ நாதனான எம்பெருமான் பக்கலில் (பக்தி யுக்தராய்) தீது அவம் இன்றி உரைத்த,Theethu Avam Indri Uraiththa - தனது மேன்மையைப் பார்த்து உதாஸீநனாயிருத்தல் அடியாருடைய குற்றங்களைப் பார்த்துக் கைவிட்டொழிதல் ஆகிய இருவகைக் குற்றமும் எம்பெருமானுக்கு இல்லை யென்பதை யெடுத்துரைத்த ஏதம் இல் ஆயிரத்து,Yetham el Aayirathu - வழுவற்ற இத் திருவாய் மொழியாயிரத்தில் இ பத்து,E Pattu - இப் பத்துப் பாசுரஙக்ளையும் ஓத வல்லார்,Otha Vallar - (குருமுகமாக) அதிகரிக்க வல்லவர்கள் பிறவார்,Piravaar - மீண்டும் பிறந்து வருந்த மாட்டார்கள் |