| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3216 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (கண்ணபிரானுடைய அவதாராதிகளைக் சுருங்கவருளிச் செய்து ‘அந்தோ’! இவை என்னை மருமத்திலே நலியாகின்றனவே; தரித்து உன்னையநுஸந்திக்க முடியவில்லையே! என்று தளர்கின்றார்.) 1 | பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும் நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச் சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1 | பிறந்த ஆறும்,Pirandha aarum - ஸம்ஸாரிகளைப்போலே தானும் வந்து பிறந்தபடியும் வளர்ந்த ஆறும்,Valarndha aarum - தன்னை மறைத்துக்கொண்டு வளர்ந்தபடியும் பெரிய பாரதம்,Periya Baradham - மஹாபாரத யுத்தத்தில் கை செய்து,Kai seythu - சேனைகளை அணிவகுத்து ஐவர்க்கு,Aivarukku - பஞ்சபாண்டவர்களுக்கு திறங்கள் காட்டி யிட்டு,Thirangal kaatti yittu - வெற்றி வழிகளைக் காட்டிக்கொடுத்து செய்துபோன மாயங்களும்,Seithupona maayangalum - ஆக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்து முடித்துத் தன் நாமமே சென்று சேர்ந்த மாயங்களும் நிறந்தன் நாடு புக்கு,Niranthan naadu pukku - மருமமான ஹ்ருதய ப்ரதேசத்தினுள்ளே புகுந்து எனது ஆவியை,Enadhu aaviyai - என் ஆத்மாவை நின்று நின்று,Nindru nindru - இடைவிடாதே நின்று உருக்கி உண்கின்ற,Uruki unkindra - சிதிலமாக்கி நஸியா நின்றன; இ சிறந்தவான் சுடரே,E sirandhavaan sudare - இப்படிப்பட்ட சிறப்புப் பொருந்திய அபரிச்சேத்யதேஜோரூபனே! உன்னை சேர்வது என்று கொள்,Unnai saervadhu endru kol - உன்னை நான் கிட்டப் பெறுவது என்றைக்கோ? |
| 3217 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அபிமத விஷயத்தில் உன்னுடைய வியாபாரங்கள் என்னை சிதிலனாக்கா நின்றது என்கிறார்.) 2 | வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும் மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும் அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் முதுவைய முதல்வா! உனை என்று தலைப் பெய்வனே?–5-10-2 | வதுவை வார்த்தையுள்,Vadhu vai vaarthaiyul - விவாஹப்ரஸ்தாவத்திலே ஏறு பாய்ந்தனும்,Eru paaindhanum - விருஷங்களை மேல்விழுந்து கொன்றதும் மாயம் மாவினை,Maayam maavinai - கபடமாகக் ருதிரையுருக் கொண்டு வந்த அசுரனை வாய் பிளந்தும்,Vaai pilandhum - வாய்க்கீண்டு ஒழித்ததும் மதுவை வாதர் குழலார்,Madhuvai vaathar kuzhalaar - மதுவைப் பெருக்குகின்ற கூந்தலையுடைய இடைப் பெண்களோடு குரவை பிணைத்த குழகும்,Kuravai pinaittha kuzhagum - ராஸக்ரீடை பண்ணி ஒரு நீராக வந்திருந்ததும் அது இது உது என்னல் ஆவன அல்ல,Athu idhu udhu ennal aavan alla - ஒருபடியும் விசேஷித்துச் சொல்ல முடியாதவை. வையம்,Vaiyam - உலகங்கெல்லாம் முன் முதலில்,Mun mudhalil - மூலகாரணபூதனே! என்னை நைவிக்கும்,Ennai naivikum - என்னைச் சிதிலனாக்குகின்றன உன்னை என்று தலைப்பெய்வன்,Unnai endru thalaippeyvan - உன்னை என்னைக்குக் கிட்டுவேன்? |
| 3218 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் உன்னுடைய பால சேஷ்டிதங்களானவை என் நெஞ்சை உருகப் பண்ணா நின்றன என்கிறார்.) 3 | பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச் செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப் பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே.–5-10-3 | பெய்யும் பூ குழல் பேய் முலை உண்ட,Peyyum poo kuzhal pey mulai unda - பூக்களையுடைய கூந்தலையுடையளான பூதனையின் முலையைச் சுவைத்துண்ட பிள்ளை தேற்றமும்,Pillai thetrum - இளமைத் தெளிவும் ஓர் சாடு போந்து இற,Or saadu poandhu ira - (அஸுரா வேகங்கொண்ட) ஒரு சாரும் பேர்ந்து முறிந்து போம்படி செய்ய பாதம் ஒன்றால் செய்த,Seyya paadam ondraal seytha - சிவந்த திருவடியொன்றோடு செய்தருளின நீன் இது சேவகமும்,Neen idhu sevakamum - உன்னுடைய இளவீரமும் நெய் உண் வார்தையும்,Ney un vaarthaiyum - நெய்யை உண்ட விஷயம் ப்ரஸ்தாவத்திற்கு வந்த வளவிலே அன்னை, கோல் கொள்ள,Annai, kol kolla - தாயானவள் கையிலே கோலை யெடுத்துக்கொள்ள நீ,Nee - எல்லாரையும் நியமிக்கப்பிறந்த நீ உன் தாமரை கண்கள் நீர் மல்க,Un thaamarai kangal neer malg - உனது தாமரைபோன்ற திருக்கண்கள் நீர் நிறம்பும்படி பையவே நிலையும்,Paiyave nilaiyum - அஞ்சி நடுங்கிநிற்கும் நிலையும் வந்து,Vandhu - இப்போதும் என்னெஞ்சிலே வந்து தோன்றி என் நெஞ்சை உருக்குங்கள்,En nenjai urugungal - எனது உள்ளத்தை உருக்குகின்றன |
| 3219 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (பௌத்தாவாதார கதையைப் பேசி இப்படியும் ஒரு கள்ளவேடம் கொள்வதுண்டோ வென்று உருகுகிறார்.) 4 | கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும் வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4 | கள்ளம் வேடத்தை கொண்டுபோய்,Kallam vaadathai kondupoi - வேதபாஹ்ய புத்தரூபவேஷத்தைப் பரிந்ரஹித்து புரம் புக்க ஆறும்,Puram pukka aarum - திரிபுரத்திலே ப்ரவேசித்தபடியும் அசுரரை கலந்து,Asurarai kalandhu - அசுரரோடே செறிந்து உள்ளம் பேதம் செய்திட்டு,Ullam paedham seydittu - மன வேறுபாட்டையுண்டாக்கி உயிர் உண்ட உபாயங்களும்,Uyir unda upaayangalum - அவர்களுடைய உயிரைக் கவர்ந்த விரகுகளும் வெள்ளம் நீர் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்,Vellam neer sadaiyaanum ninnidai veru alamai vilanga nindradhum - கங்கா ப்ரவாஹத்தைத்ச் சடையிலே தாங்கியுள்ள சிவனும் உன்பக்கல் வேறுபாடின்றி ஒற்றுமை பெற்று விளங்க நின்றதும் (ஆகிய இவை) உள்ளும் உள் குடைந்து,Ullum ul kudainthu - என்னெஞ்சுக்குள்ளே அவகாஹித்து என் உயிரை உருக்கி உண்ணும்,En uyirai urukki unnum - என் ஆத்மாவை நீராகவுருக்கியுண்கின்றன. |
| 3220 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஆஸ்ரித விஷயமாக செய்த சேஷ்டிதங்களும் அநுஸந்திக்கும் தோறும் என் மனஸ் ஸூ அற வழியா நின்றது என்கிறார்.) 5 | உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும் வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும் மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள் எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5 | வானவர் கோனுக்கு உண்ண,Vaanavar koonukku unna - தேவேந்திரனுடைய ஆராதனைக்காக ஆயர் ஒருப்படுத்த,Aayar oruppadutha - இடையர்கள் ஸந்நாஹஞ் செய்த அடிசில் உண்டதும்,Adisil undadhum - ப்ரஸாதங்களையெல்லாம் தானே அமுதுசெய்தலும் வண்ணம் மால்வரையை எடுத்து மழை காத்தலும்,Vannam maalvaraiye eduthu mazhai kaathalum - அழகிய பெருமலையைக் குடையாக வெடுத்து மழையைத் தடுத்தும் மண்ணை முன் படைத்து,Mannai mun padaittu - பூமியை ஆதிகாலத்திலே ஸ்ருஷ்டித்து உண்டு உமிழ்ந்து கடந்து இடத்து மணந்த மாயங்கள்,Undu umizhndhu kadandhu idathu mantha maayangal - (ஸமய விசேஷங்களிலே) உண்டது உமிழ்ந்தது அளந்தது கிடந்தது மணந்தது ஆக இப்படியான மாயங்களுமாகிறவிவற்றை எண்ணுந்தோறும்,Ennunthorum - சிந்திக்கிறபோதெல்லாம் என் நெஞ்சு,En nenju - எம் மனமானது நின்று,Nindru - எப்போதும் எரி வாய் மெழுது ஓங்கும்,Eri vaai meluthu oongum - நெருப்பருகிலுள்ள மெழுகையொத்திரா நின்றது |
| 3221 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (நின்றது மிருந்ததும் கிடந்ததும் இன்ன இன்ன விடங்களிலே யென்று வகுத்துக் கூறாமையாலே ஆசாரியர்கள் பலபடியும் ஈடுபட்டு நிர்வஹிப்பார்கள்.) 6 | நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள் நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண் சுடரே!–5-10-6 | நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும்,Nindra aarum irundha aarum kidandha aarum - ஆங்காங்கு நிற்கிறபடிகளும் வீற்றிருக்கிற படிகளும் சயனித்திருக்கிறபடிகளும் நினைப்பு அரியன,Ninaippu ariyan - நெஞ்சாலும் நினைக்க முடியாதவையாயிருக்கின்றன ஒன்று அவர் உரு ஆய்,Ondru avar uru aay - (இங்ஙனே) பலபடியாய் அரு ஆய்,Aru aay - எனக்கு அநுபவிக்கைக்கு உருத்தெரியாத நின் மாயங்கள்,Nin maayangal - உனது அற்புதச் செயல்களை நின்று நின்று நினைக்கின்றேன்,Nindru nindru ninaikkindrein - சிறிது சிறிதாக நினைக்கப் பார்க்கின்றேன் உலகம் உண்ட ஒண் சுடரே,Ulagam unda on sudare - உலகங்களை அமுதுசெய்த ஒளியுவனே! உன்னை எங்ஙனம் நினை நிற்பனந்,Unnai enganam ninaipanand - உன்னை எப்படி நினைக்கலாவேன்! பாவியேற்கு ஒன்று உரையாய்,Paaviyera ondru uraiyaay - தரித்து நின்று நினைக்க முடியாத பாவத்தைப் பண்ணினவெனக்கு ஒரு நல்விரகு அருளிச் செய்ய வேணும். |
| 3222 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கண்ணாலே காணப் பெறாதே -ஆந்தர அனுசந்தானமேயாய் சிதிலனாய் போகாதே கண்ணாலே கண்டு தரித்து அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார்.) 7 | ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என் கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத் திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7 | உண்மையோடு இன்மை ஆய் வந்து,Unmaiyodu inmai ay vanthu - மெய்யனாய்த் தோற்றுகை பொய்யனாய்த் தோற்றுகை ஆகிற இரண்டுபடியோடுங்கூடி ஒண் சுடரோடு இருளும் ஆய் நின்ற ஆறும்,On sudarodu irulum ay ninra arum - ஒண்சுடராயும் இருளாயம் நிற்கிறபடிகளும் என் கண்கொளாவகை,En kangolavakai - என் கண் உன்னையநுபலியாதபடி கரந்து,Karandu - உள்ளேமறைந்து நின்று நீ என்னை செய்கின்றன,Ni ennai seykinran - நீ என்னைப் படுத்துகிறபாடுகளும் ஆகிறவிவற்றை எண் கொள் சிந்தையும்,En kol cintaiyum - என்ன வேணாமென்கிற அபி நிவேசங்கொண்ட சிந்தையோடே நைகின்றேன்,Naikindren - சிதிலனாநாநின்றேன் என் கரிய மாணிக்கமே,En kariya manikkame - என்னை யீடுபடுத்தின நீலமணியருவனே! உன் திரு உரு,Un thiru uru - உனது திவ்யரூபத்தை என் கண்கட்கு திண்கொள்ள,En kangatkku thin kollo - என் கண்களாலே திண்ணமாகக் காணும்படி ஒருநாள் அருளாய்,Oru nal arulay - ஒருநாளாகிலு“ கிருபை செய்தருளவேணும் |
| 3223 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -உன்னுடைய சர்வாதிகத்வ ஸூசகமான ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களைக் கேட்க்கும் தோறெல்லாம் என் நெஞ்சு நெகிழ்ந்து கண்ணீர் சோரா நின்றது -நான் என் செய்வேன் -என்கிறார்.) 8 | திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு அருவி சோருங் கண்ணீர் என் செய்கேன் அடியேனே.–5-10-8 | திரு உருவு கிடந்த ஆறும்,Thiru uruvu kidantha arum - அழகிய திருமேனிகள் வளர்த்தருளின படியும் கொப்பூழ்செம் தாமரை மேல்,Koppuzh sem thamarai mel - திருநாபிக் கமலத்திலே திசைமுகன் கரு உன்,Disaimugan karu un - நான்மகனாகிற கருவுக்குள்ளே வீற்றிருந்து,Veerirundhu - அந்தராத்மாவாக எழுந்தருளியிருந்து படைத்திட்ட கருமங்களும்,Padaittidu karumangalum - ஸ்ருஷ்டித்த வியாபாரங்களுமாகிற பொரு இல்,Poru il - எதிரில்லாத உன் தனி நாயகம் அவை,Un thani nayagam avai - உன்னுடைய பரத்வ ப்ரகாசமான அவற்றை கேட்கும்தோறும்,Kekkum thorum - (வேதாந்திகன் சொல்லல்) கேட்கிறபோதெல்லாம் என் நெஞ்சம்,En nenjam - என் நெஞ்சானது நின்று நெக்கு,Nindru nekku - கட்டுக்குலைந்து நெகிழ்ந்து நின்று கண் நீர் அருவி சோரும்,Kan neer aruvi sorum - கண்ணீர் அருவியாகப் பெருகாகின்றது; அடியேன் என் செய்கேன்,Adiyen en seyken - தரித்திருக்க மாட்டாத அடியேன் என்ன பண்ணுவேன்? |
| 3224 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (மாவலி பக்கலிலே மாணுருவாய்ச்சென்று மூவடிநிலம் இரந்தபடியும், அந்நிலையில்நின்றே இரண்டியாலே மூவுலகையும் அகப்படுத்திக் கொண்டு நீ நினைத்த காரியத்தை முடித்துக் கொண்ட அதிசயமும் ஆகியவிவற்றைச் சொல்லக் கேட்குந்தோறும் என்னுடைய நெஞ்சு கரைந்து உருகின்றதே!; உன்னையநுஸத்தித்தால் இங்ஙனே சிதிலனாகும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான் தரித்து நின்று உன்னையறுபவிப்பது என்றைக்கோ? (நொடிதல் – சொல்லுதல்.)) 9 | அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும் நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும் கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9 | மூன்று அடியை இரந்த ஆறும்,Moonru adiyai irandha arum - (மாவலியிடத்தே) மூவடி நிலத்தை யாசித்தபடியும் அங்கு நின்றே,Angu nindrae - யாசித்த அவ்விடத்தில் நின்று கொண்டே ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் முடிய,Azh kadalum mannum vinnum mudiya - ஆழ்ந்தகடல்களையும் மண் விண்ணுலகங்களையுமெல்லாம் ஈர் அடியால்,Eer adiyal - இரண்டடியாலே முடித்துக் கொண்ட முக்கியமும் அவை,Mudithukkonda mukiyamum avai - ஆக்ரமித்துக்கொண்ட தனி வீரமுமாகிய அவற்றைக்குறித்து நொடியும் ஆறு கேட்கும்தோறும்,Nodiyum aru kekkum thorum - (ஞானிகள்) சொல்லுகிறபடியைக் கேட்கும் போதெல்லாம் என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சு நின் தனக்கே,Nin thanakke - உன்திறத்திலேயே கரைந்து உகும்,Karainthu ugum - சிதிலமாகாநின்றது; கொடிய வல்வினையேன்,Kodiya val vinaiyen - மிகக்கொடிய பாபத்தைப் பண்ணின நான் உன்னை கூடுவது என்று கொல்,Unnai koodu vadhu endru kol - உன்னேடே கூடப்பெறுவது என்றைக்கோ? |
| 3225 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உன்னுடைய சமுத்திர மதன வைசித்யர்த்தை அனுசந்தித்து சிதிலன் ஆகா நின்றேன் -தரித்து நின்று உன்னை அனுபவிக்கும் விரகு சொல்ல வேணும் என்று பிரார்த்திக்கிறார்.) 10 | கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10 | நஞ்சு நாகம் அணையானே,Nanju Naagam Anaiyaane - சேஷசயனனே கூடி நீரை கடைந்த ஆறும்,Koodi Neerai Kadaintha Aarum - தேவாசுரர்களோடு கூடித் திருப்பாற் கடலைக் கடைந்தபவும் அமுதம் தேவர் உண்ண,Amudham Devar Unn - அம்ருதத்தைத் தேவர்கள் பூஜிக்க அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்,Asurarai Veedum Vannangale Seydhu Pona Vitthagamum - அசுரர்கள் அந்த அம்ருதத்தை விடும்படியாக ஸ்த்ரீ வேஷபரிச்சலும் பண்ணிப்போன விஸ்மயரீயாகாரமும் ஊடுபுக்கு,Oodupukku - உள்ளே புகுந்து எனது ஆவியை,Enadhu Aaviyai - என் ஆத்மாவை உருக்கி உண்டிடுகின்ற,Uruggi Undidugindru - நிர்பண்டமாக உருக்கிக் கபஸித்திக்கின்ற நின் தன்னை,Nin Thannai - உன்னை நாடும் வண்ணம் சொல்லாய்,Naadum Vannam Sollaay - நித்யாவாசம் பண்ணும் வழியை அருளிச் செய்யவேணும் |
| 3226 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலனாகப் பரமபதத்தில் ப்ரஹ்மாநந்த ப்ராப்தியை அருளிச் செய்கிறார்.) 11 | நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன் ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார் மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11 | நாகணை மிசை நம் பிரான் சரணே நமக்கு சரண் என்று,Naaganaai Misai Nam Piran Sarane Namakku Saran Endru - சேஷசாயியான எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று நாள் தொறும் ஏக சிந்தையன் ஆண்,Naal Thorum Eka Sinthaiyan Aan - ஸ்திரமான ஆத்யவஸாயத்தை யுடையராய்க் கொண்டு குருகூர் சடகோபன் மாறன்,Kurugoor Sadagopan Maaran - ஆழ்வார் ஆக,Aaga - தாம்ஸத்தைபெறுவதற்கு நூற்ற,Noortra - அருளிச் செய்த அந்தாதி,Andaadhi - அந்தாதித் தொடையான ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தினுள்ளே இவையும் ஓர் பத்தும் வல்லார், Ivaiyum Or Paththum Vallar - இத் திருவாய்மொழியை ஓத வல்லவர்கள் மாகம் வைகுந்தத்து,Maagam Vaikundaththu - பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்திலே வைகலும்,Vaigalum - ஆத்மாவுள்ளதனையும் மகிழ்வு எய்துவர்,Magizhvu Eydhuvar - ஆனந்திகளாயிருப்பார்கள். |