| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 182 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 1 | ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய் கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத் தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் 2-7-1 | தேனில், Thenil - தேனைக் காட்டிலும் இனிய, Iniya - போக்யனாயிருக்கிற பிரானே, Pirane - ப்ரபுவே! பற்றாதார் எல்லாம், Patraadhaar ellaam - பகைவரெல்லாரும் சிரிப்ப, Sirippa - பரிஹஸிக்கும்படி பானையில் பாலை பருகி, Paanaiyil paalai parugi - (கறந்த) பானையிலே யுள்ள பச்சைப் பாலைக் குடித்து (பின்பு) உன், Un - உன்னுடைய கரிய, Kariya - ஸ்யாமமான திருமேனி, Thirumeni - அழகிய திருமேனி வாட, Vaada - வாடும்படி கானகம் எல்லாம் திரிந்து, Kaanagam ellaam thirindhu - காட்டிடம் முழுதும் திரிந்து கொண்டு ஆநிரை, Aanirai - பசுக்களின் திரளை மேய்க்க, Meikkha - மேய்ப்பதற்கு நீ போதி, Nee pothi - ஸூ குமாரமான நீ போகிறாய்; அரு மருந்து ஆவது, Aru marundhu aavadhu - (நீ உன்னை) பெறுதற்கரிய தேவாம்ருதம் போன்றவனாதலை சம்சாரிகளுக்கு சம்சாரம் போக்கவும் நித்யர்களுக்கு போகம் அனுபவிக்க மருந்து அறியாய், Ariyaai - அறிகிறாயில்லை; செண்பகம் பூ, Senbagam poo - (இனி நீ கன்று மேய்ப்பதை விட்டிட்டு) செண்பகப் பூவை சூட்ட, Soota - (நான்) சூட்டும்படி வாராய், Vaaraay - வருவாயாக |
| 183 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 2 | கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய் உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய் -2-7-2 | கண்கள், Kangal - கண்களானவை உன்னை கண்டால், Unnai kandaal - உன்னைப் பார்த்தால் கரு உடை மேகங்கள், Karu udai mekangal - கர்ப்பத்தை யுடைய (நீர் கொண்ட) மேகங்களை கண்டால், Kandaal - பார்த்தால் (அதை) ஒக்கும், Okkum - ஒத்துக் குளிர்கின்ற உரு உடையாய், Uru udayaai - வடிவை யுடையவனே! உலகு ஏழும், Ulagu ezhum - ஏழுலகங்களும் உண்டாக, Undaaga - ஸத்தை பெறும்படி வந்து பிறந்தாய், Vandhu pirandhaai - திருவவதரித்தவனே! திரு உடையாள், Thiru udayaal - (உன்னை) ஸம்பத்தாக வுடைய பிராட்டிக்கு மணவாளா, Manavaala - நாயகனே! திரு அரங்கத்தே, Thiru arangatthae - கோயிலிலே கிடந்தாய், Kidandhai - பள்ளி கொண்டிருப்பவனே! மணம், Manam - வாஸனை மருவி கமழ்கின்ற, Maruvi kamazhkindra - நீங்காமலிருந்து பரிமளிக்கிற மல்லிகைப் பூ, Mallikai poo - மல்லிகைப் பூவை சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |
| 184 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 3 | மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய் பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7-3 | மச்சொடு மாளிகை ஏறி, Machodu maalikai eri - நடு நலையிலும் மேல் நிலையிலும் ஏறிப் போய் மாதர்கள் தம் இடம் புக்கு, Maadhargal tham idam pukku - பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து கச்சொடு, Kachodu - (அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும் பட்டை, Pattai - பட்டாடைகளையும் கிழித்து, Kizhithu - கிழித்து விட்டு காம்பு துகில் அவை, Kaambu thugil avai - (மற்றும் அப் பெண்கள் உடுத்துள்ள) கரை கட்டின சேலையையும் கீறி, Keeri - கிழித்துப் போட்டு நிச்சலும், Nichalum - (இப்படியே) ப்ரதி நித்யம் தீமைகள், Theemaigal - துஷ்ட சேஷ்டைகளை செய்வாய், Seyvaai - செய்பவனே! நீள் திருவேங்கடத்து, Neel thiruvenkatathu - உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற எந்தாய், Endhaay - ஸ்வாமியே! பச்சை, Pachai - பசு நிறமுள்ள தமனகத்தோடு, Thamanakathodu - மருக்கொழுந்தையும் பாதிரிப்பூ, Paathirippoo - பாதிரிப்பூவையும் சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |
| 185 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 4 | தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2-7-4 | புருவம், Puruvam - புருவங்களையும் கரு குழல், Karu kuzhal - கரு நிறமான கூந்தலையும் நெற்றி, Nettri - (இவ் விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு பொலிந்த, Polindha - விளங்குகின்ற முகில் கன்று போலே, Mugil kanru pole - மேகக் கன்று போலே உருவம் அழகிய, Uruvam azhagiya - வடிவமழகிய நம்பி, Nambi - சிறந்தோனே! (நீ) தெருவின் கண் நின்று, Theruvin kan nindru - தெருவிலே நின்று கொண்டு இள ஆய்ச்சி மார்களை, Ila aaychi maargalai - இடைச் சிறுமிகளை தீமை செய்யாதே, Theemai seyaadhe - தீம்பு செய்யாமலிரு; மருவும், Maruvum - மருவையும் தமனகமும், Thamanakamum - தமநிகத்தையும் (சேர்த்துக் கட்டின) சீர் மாலை, Seer maalai - அழகிய மாலைகள் மணம் கமழ்கின்ற, Manam kamazhgindra - வாஸனை வீசுகின்றன; இவை, Ivai - இவற்றை உகந்து, Ugandhu - மகிழ்ச்சி கொண்டு சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |
| 186 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 5 | புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய் கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய் அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் 2-7-5 | புள்ளினை, Pullinai - பகாஸுரனை வாய் பிளந்திட்டாய், Vai pilandhittai - வாய் கிழித்துப் பொகட்டவனே! பொரு, Poru - யுத்தோந்முகமான கரியின், Kariyin - குவலயாபீடத்தின் கொம்பு, Kombu - கொம்பை ஒசித்தாய், Osithaai - பறித்தவனே! கள்ளம் அரக்கியை மூக்கொடு, Kallam arakkiyai mookodu - வஞ்சனை யுடைய ராக்ஷஸியாகிய சூர்ப்பணகையின் மூக்கையும் காவலனை, Kaavalanai - (அவளுக்குப்) பாதுகாவலாயிருந்த ராவணனுடைய தலை, Thalai - தலையையும் கொண்டாய், Kondai - அறுத்தவனே! நீ, Nee - (இப்படிப்பட்ட) நீ வெண்ணெய், Vennai - வெண்ணெயை அள்ளி விழுங்க, Alli vizhungu - வாரி விழுங்க அஞ்சாது, Anjaadhu - சிறிதும் பயப்படாமல் அடியேன், Adiyen - (‘எப்போது குழந்தை பிறந்து வெண்ணெய் விழுங்கப் போகிறது?’ என்றிருந்த) நான் அடித்தேன், Adithen - அடித்தேன்; (அப் பிழையைப் பொறுத்து) தெள்ளிய, Thelliya - தெளிவான நீரில், Neeril - நீரிலே எழுந்த, Ezundha - உண்டான செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீரை சூட்டவாராய், Sootavaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |
| 187 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 6 | எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய் தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூ சூட்ட வாராய் -2-7-6 | நம்பி, Nambi - சிறந்தோனே!(நப்பின்னையை மணம் புணர்வதற்காக) எருதுகளோடு, Erudhugalodu - ஏழு ரிஷபங்களுடன் பொருதி, Poruthi - போர் செய்யா நின்றாய்; ஏதும், Yedhum - எதிலும் (ஒன்றிலும்) உலோபாய் காண், Ulopaai kaan - விருப்பமில்லாதவனாயிரா நின்றாய்;(தேகம் பிராணன் பேணாமல் கருதிய, Karuthiya - (கம்ஸன் உன் மேல் செய்ய) நினைத்த தீமைகள், Theemaigal - தீம்புகளை செய்த, Seydha - (நீ அவன் மேற்) செய்து கம்ஸனை, Kamsanai - அந்தக் கம்ஸனை கால் கொடு, Kaal kodu - காலினால் (காலைக் கொண்டு) பாய்ந்தாய், Paainthaai - பாய்ந்தவனே! தெருவின் கண், Theruvin kan - தெருவிலே(அக்ரூரர் மூலமா யழைக்கப் பட்டுக் கம்ஸனரண்மனைக்குப் போம் போது) தீமைகள் செய்து, Theemaigal seydhu - தீமைகளைச் செய்து கொண்டு போய் சிக்கென, Sikkenna - வலிமையாக மல்லர்களோடு, Mallarkalodu - (சாணூர முஷ்டிகரென்னும்) மல்லர்களுடனே பொருது வருகின்ற, Poruthu varugindra - போர் செய்து வந்த பொன்னே, Ponne - பொன் போலருமையானவனே! புன்னைப் பூ சூட்ட வாராய், Punnai poo sootta vaaraay - புன்னைப் பூ சூட்ட வாராய் |
| 188 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 7 | குடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய் குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்தி பூ சூட்ட வா -2-7-7 | குடங்கள், Kudangal - பல குடங்களை எடுத்து, Eduthu - தூக்கி ஏற விட்டு, Eera vittu - உயர்வெறிந்து கூத்து ஆட, Koothu aada - (இப்படி) குடக் கூத்தை யாடுவதற்கு வல்ல, Valla - ஸாமர்த்தியமுடைய எம் கோவே, Em kove - எம்முடைய தலைவனே மடம் கொள், Madam kol - மடப்பமென்ற குணத்தை யுடைய மதி முகத்தாரை, Mathi mugatharai - சந்த்ரன் போன்ற முகத்தை யுடைய பெண்களை மால் செய்ய வல்ல, Maal seiya valla - மயக்க வல்ல என் மைந்தா, En maindha - எனது புத்திரனே! முன், Mun - நரஸிம்ஹாவதாரத்திலே இரணியன் நெஞ்சை, Iraniyan nenjai - ஹிரண்யாஸுரனுடைய மார்பை இடந்திட்டு, Idandhittu - (திரு வுகிரால்) ஊன்ற வைத்து இரு பிளவு ஆக, Iru pilavu aaga - இரண்டு பிளவாகப் போம்படி தீண்டாய், Theendai - பிளந்தவனே! குடந்தை, Kudanthai - திருக் குடந்தையில் கிடந்த, Kidandha - பள்ளி கொள்ளுகிற எம் கோவே, Em kove - எமது தலைவனே! குருக்கத்திப் பூ சூட்டவாராய், Kurukkathi poo sootta vaaraay - குருக்கத்திப் பூ சூட்டவாராய் |
| 189 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 8 | சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7-8 | சீ மாலிகன் அவனோடு, See maligan avanodu - மாலிகன் என்ற பெயரை யுடையவனோடு தோழமை கொள்ளவும், Thozhamai kollavum - ஸ்நேஹம் செய்து கொள்ளுதற்கும் வல்லாய், Vallaai - வல்லவனாய் அவனை, Avanai - அந்த மாலிகனை நீ, Nee - நீ சாம் ஆறு எண்ணி, Saam aaru enni - செத்து போம் வழியையும் ஆலோசித்து சக்கரத்தால், Sakkarathal - சக்ராயுதத்தினால் தலை கொண்டாய், Thalai kondai - தலையையுமறுத்தாய்; ஆம் ஆறு, Aam aaru - நடத்த வேண்டியவைகளை அறியும், Ariyum - அறிய வல்ல பிரானே, Piraane - ப்ரபுவே! அணி, Ani - அழகிய அரங்கத்தே, Arangathey - கோயிலிலே கிடந்தாய், Kidandhaai - பள்ளி கொண்டிருப்பவனே! ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய், Emaatram ennai thavirthaai - இது தன்னாலே இறே இவர் ஏமாற்றத்தைப் பெரிய பெருமாள் தவிர்த்து அருளிற்றும் இருவாட்சி பூ சூட்ட வாராய், Iruvaatchi poo sootta vaaraai - இருவாட்சி பூ சூட்ட வாராய் |
| 190 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 9 | அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய் தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய் கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் -2-7-9 | அத்தாணியுள், Atthaaniyul - அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி) அமர்ர்கள், Amarrgal - தேவர்கள் சூழ, Soozha - சூழ்ந்திருக்க அங்கு, Angu - அவர்கள் நடுவில் அண்டத்து, Andhathu - பரம பதத்தில் இருத்தாய், Iruththaay - வீற்றிருப்பவனே! தொண்டர்கள், Thondargal - அடியார்களுடைய நெஞ்சில், Nenjil - ஹ்ருதயத்தில் உறைவாய், Uraivaai - வஸிப்பவனே! தூ மலரான், Thoo malaran - பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய பிராட்டிக்கு மணவாளா, Manavaalaa - கொழுநனே! உலகினை ஏழும், Ulaginaai yezhum - (பிரளய காலத்தில்) ஏழு உலகங்களையும் உண்டிட்டு, Undittu - உண்டு விட்டு ஓர் ஆல் இலையில், Or aal ilaiyil - ஒராவிலையில் துயில் கொண்டாய், Thuyil kondai - யோக நித்திரையைக் கொண்டவனே! நான், Naan - நான் உன்னை கண்டு, Unnai kandu - (நீ பூச் குடியதைப்) பார்த்து உகக்க, Ugakka - மகிழும்படி கருமுகைப் பூ சூட்ட வாராய், Karumukai poo sootta vaaraai - கருமுகைப் பூவை சூட்டவாராய் |
| 191 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 10 | செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம்மாலை பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே 2-7-10 | செண்பகம், Senbakam - செண்பகப் பூவும் மல்லிகையோடு, Mallikaiyodu - மல்லிகைப் பூவும் செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீர்ப் பூவும் இருவாட்சி, Iruvaatchi - இருவாட்சிப் பூவும் எண் பகர், En pakar - (இன்ன தின்னதென்று) (ஆகிய) எண்ணிச் சொல்லப் படுகிற பூவும், Poovum - மலர்களை யெல்லாம் கொணர்ந்தேன், Konarendhen - கொண்டு வந்தேன்; இன்று, Indru - இப்போது இவை சூட்ட , Ivai sootta - இப் பூக்களைச் சூட்டும்படி வா, va - வருவாயாக என்று, Endru - என்று பகர் மண் கொண்டானை, Pakar man kondanai - பகர்ந்த மண்ணைக் கொண்டவனை (தன்னது என்று சாஸ்திரம் பகர்ந்த லோகத்தை அன்றோ இரந்து கொண்டான் ) ஆய்ச்சி, Aaychi - யசோதை மகிழ்ந்து, Magizhndhu - மகிழ்ச்சி கொண்டு உரை செய்த, Urai seytha - சொல்லியவற்றை எண் பகர் வில்லிபுத்தூர், En pakar villiputhoor - ராகமாகவே சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கோன், Kon - நிர்வாஹகரான பட்டர் பிரான், Pattar piraan - பெரியாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த இம்மாலை, Immaalai - இந்தச் சொல்மாலையும் பத்தே, Patthe - ஒருபத்தே! |