Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பொருமா நீள் படை (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2774திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (இத் திருவாய்மொழியிற் சொல்லுகிற அர்த்தத்திற்கு இப்பாசுரம் ஸங்க்ரஹ மென்னலாம். மஹாபலியானவன் எம்பெருமான் நம்மிடத்திற்கு அழகிய திருக் கோலங்கொண்டு எழுந்தருளப் போகிறான்’ என்று கனவிலும் கருதாதிருக்கையில், அவப் பக்கலில் தானே யாசகனாய்ச் சென்று நின்றாப் போலே எனக்கு நினைவின்றியே யிருக்கத் தானே வந்து தன் வடிவழகை என் கண்ணுக்கு இலக்காக்கினான்! என்று அவனது நிர்ஹேதுக விஷயீகாரத்தைச் சிந்தித்து உருகிப் பேசுகின்றார்.) 1
பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1
பொரு,poru - போர் செய்ய வல்ல
மா,maa - பெருமை தங்கிய
நீள் படை,neel padai - சிறந்த ஆயுதமாகிய
ஆழி சங்கத்தொடு,aali sangathodu - சங்கு சக்கரங்களோடு கூட
திரு மா நீள் கழல்,thiru maa neel kadal - தனது மிகச் சிறந்த திருவடிகளை
ஏழ் உலகும் தொழ,yel ulagum thozha - ஸகல லோகமும் தொழும்படியாக
ஒரு மாணி குறள் ஆகி நிமிர்ந்த,oru maani kural aagi nimirndha - ஒப்பற்ற பிரமசாரி வாமனனான் வளர்ந்தருளின
அ கரு மாணிக்கம்,a karu maanikkam - நீல மணி போன்ற அப் பெருமானை
என் கண்ணுளதாகுமே,en kannulathaagume - எனது கண்ணுக்கு இலக்காயினான்.
2775திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (எம்பெருமான் அடியார்களுக்குக் காட்சி தருந்தன்மை எப்படிப்பட்ட தென்றால், பரமபக்தி யுக்தர்க்கு முகங்காட்டுவது போலவே எண்ணிக்கையினால் தன்னைக் குறிப்பிடுமவர்களுக்கும் முகங்காட்டுந்தன்மை யுள்ளதென்று இப்பாட்டில் கூறப்படுகின்றது) 2
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணும் ஆய்,mannum neerum eriyum nal vaayuvum vinnum aay - பூமி முதலிய பஞ்ச பூதங்களையும் சரீரமாக வுடையனாய்க் கொண்டு
விரியும்,viriyum - ஜகத்தாகப் பரம்புகின்ற
எம் பிரானை,em piranai - எம்பெருமானை
காதன்மையால் தொழில்,kaadhanmaiyaal thozhil - பக்தியோடு தொழுதால்
கண்ணுள்ளே,kannullae - (அவன்) நான் காணும்படி இருப்பன்;
எண்ணிலும் வரும்,ennillum varum - ஒன்று இரண்டு என்று எண்ணினாலும் வந்து நிற்பன்;
என் இனி வேண்டுவம்,en ini venduvam - இனி மேல் என்னகுறை?
2776திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (எம்பெருமானுக்கு அடியார் திறத்தில் அளவிறந்த நீர்மைக்குக் காரணம் பிராட்டி ஸம்பந்தமே யென்று அதனை யநுஸந்தித்து அந்தத் திருமாலைத் தொழாய் நெஞ்சே யென்று திருவுள்ளத்திற்கு உரைக்கிறார்) 3
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3
மட நெஞ்சமே,mada nenjamae - விதேயமான மனமே!
எம் பிரானே,em pirane - எமக்கு உபகாரகனும்
எந்தை தந்தை தந்தைக்கும் தம் பிரானை,endhai thandhai thandhaikkum tham pirane - (நம்மளவில் நில்லாமல் நம் குலத்திற்கெல்லாம் நாதனாயிருப்பவனும்
தண் தாமரைக் கண்ணனை,than thaamarai kannaanai - குளிரக் கடாக்ஷிக்கின்ற தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
கொம்பு,kombu - வஞ்சிக் கொடியினும்
அராவு,araavu - ஸர்ப்பத்தினும்
நுண்,nun - நுட்பமான
நேர்,ner - நேர்த்தி பொருந்திய
இடை,idai - இடையை யுடையவளான பிராட்டியை
மார்பனை,maarpanai - மார்பிலே உடையனுமான
எம்பிரானை,em pirane - எம்பெருமானை
தொழாய்,thozhai - வணங்குவாயாக.
2777திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (“எம்பிரானைத் தொழாய் மடநெஞ்சமே!” என்று கீழே தாஞ்சென்னவாறே மேல்விழுந்து தொழுத நெஞ்சைக் கொண்டாடி, என்றைக்காவது நான் நைச்சியாநுஸந்தானம் பண்ணிப் பிரியப் பார்த்தவிடத்திலும் எம்பிரானை விடாமலே தொடர வேணுமென்று அந்த நெஞ்சையிரக்கிறார்.) 4
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4
நெஞ்சமே,nenjamae - மனமே!
நல்லை நல்லை,nallai nallai - நீ மிகவும் நன்மையை யுடையை;
உன்னைப் பெற்றால்,unnai petraal - உன்னை உதவியாகப் பெற்றால்
என் செய்யோம்,en seiyyom - எதைத் தான் செய்து முடிக்க மாட்டோம்; (எதையுஞ்செய்து முடிக்கலாம்)
இனி என்ன குறைவினம்,ini enna kurai vinam - இனி என்ன குறையை யுடையோம்?
மைந்தனை,maindhanai - நித்ய யௌவன முடையவனும்
மலராள் மணவாளனை,malaral manavaalanai - திருமகள் நாதனுமான எம்பெருமானை
துஞ்சும் போதும்,thunjum podhum - நான் அகன்று மறந்த போதும்
விடாது தொடர்,vidaadhu thodar - நீ விடாமல் தொடர்ந்து நில்;
கண்டாய்,kandai - முன்னிலையசை
2778திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (இத்திருவாய்மொழியை நிர்ஹேதுக விஷயீகார பரமாக பட்டர் நிர்வஹித்ததற்கு இப் பாசரமே நிதானமாயிருக்கும். கீழ் இரண்டாம் பாட்டில் “எண்ணிலும் வரும்” என்று ப்ரஸ்துதமான எண் தானுமில்லாமல் அவனே மேல் விழுந்து விஷயீகரித்தபடியை நெஞ்சுக்கு முதலிக்கிறார்.) 5
கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5
நெஞ்சே,nenje - மனமே!
கருமங்கள் வாய்க்கின்று,karumangal vaaykkinru - காரியங்கள் பலிக்குமிடத்தில்
ஓர் எண் தானும் இன்றியே,or en thaandum indriye - (நம்முடைய) நினைவு ஒன்றுமேயில்லாமல்
வந்து இயலும் ஆறு,vandhu ialum aaru - பலித்து வருகிறபடியை
கண்டாயே,kandaye - பார்த்தாயோ? (எங்ஙனே யெனில்)
உலகும் ஏழும்,ulagum ezhum - ஏழு லோகங்களையும்
உண்டானை,undaanai - (பிரளயத்தில்) விழுங்கினவனும்
ஓர் மூ அடி கொண்டானை,or moo adi kondaanai - (மற்றொருகால் அவ்வுலகங்களை) மூன்றடிகளாலே அளந்து கொண்டவனுமான பெருமானை
நீயும் : கண்டு கொண்டனை,neeyum: kandu kondanai - நீயும் காணப் பெற்றாயன்றோ?
2779திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (“விடாது தொடர் கண்டாய்” என்ற ஆழ்வாரை நோக்கி நெஞ்சானது, நான் விடாது தொடர்கிறேன். அவன் விட்டால் செய்வதென்? என்ன; நைச்சியாநுஸந்தானம் பண்ணி நாம் அகலாதொழியில் நம்மை யொரு நாளும் அவன் விடானென்கிறார்) 6
நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6
நெஞ்சமே,nenjamae - மனமே!
நீயும் நானும்,neeyum naanum - நீயும் நானுமாக
இ சேர் நிற்கின்,e ser nirkin - இந்த நிலையிலே நின்றால்
மேல்,mel - இனி மேல்;
இ உலகினில்,e ulaginil - இவ் வுலகத்தில்
தாயும் தந்தையும் ஆய்,thaayum thandhaiyum aay - மாதாவும் பிதாவுமாகி
வாயும்,vaayum - அவதரித்துள்ளவனும்
மணிவண்ணன்,manivannan - நீல மணி வண்ணனும்
எந்தை,endhai - எமக்கு ஸ்வாமி யுமாகிய
ஈசன்,eesan - ஸர்வேச்வரன்
ம ற்று ஓர் நோயும் சார் கொடான்,ma rr u oar noayum saar kodaan - வேறொரு துன்பமும் அணுகவொட்டான்;
சொன்னேன்,sonnaen - இது உண்மையாகச் சொன்னேன்.
2780திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) ( “ந அச்லீலம் கீர்த்தயேத்” என்று வேத புருஷன் சொன்னான்; அச்லீலமான விஷயத்தை வாயினாற் சொல்லக்கூடாது என்றபடி, நைச்சியாநுஸந்தானம் பண்ணி அவனை விட்டுப்பிரிதல் என்கிற அச்லீலத்தை இவர் தாமே *ப்ரஸ்தாவித்தமையால் அப்படியே வந்து புகுந்தது. அயோக்யன் என்று அகலுகிறாரிப்பாட்டில் .) 7
எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7
வானவர்,vaanavar - நித்ய ஸூரிகள்
எந்தை எம் பெருமான் என்று,endhai em perumaan endru - ‘எந்தையே! எம்பெருமானே! என்று
சிந்தையுள் வைத்து,sinthaiyul vaithu - மனத்தினால் சிந்தித்து
சொல்லும்,sollum - வாயினால் தோத்திரஞ் செய்யப்பெற்ற
செல்வனை,selvanaai - ஸ்ரீமானாகிய எம்பெருமானை
பாவியேன்,paaviyaen - பாவியாகிய நான்
எந்தையே என்றும்,endhaiye endrum - எந்தையே! என்றும்
எம்பெருமான் என்றும்,emperumaan endrum - எம்பெருமானே என்றும்
சிந்தையுள் வைப்பன்,sinthaiyul vaippan - மனத்தில் வைப்பேன்;
சொல்லுவன்,solluvan - வாயினாலுஞ் சொல்வேன்
2781திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) ( விலக்ஷணர்கள் தாமே ஈடுபடுதற்கரித்தான பகவத் விஷயத்தில் தாம் ஈடுபடுவது தகாதென்று உறுதிகொண்ட ஆழ்வார், பகவத் விஷயம் நடையாடாத தோரிடத்திலே கிடக்கவேணுமென்று போய் ஒரு குட்டிச் சுவரிலே முட்டாக்கிட்டுக் கொண்டு கிடந்தாராம்; அங்கே பெருஞ்சுமை யெடுத்துபோகிற ஒரு வழிப்போக்கன் சுமைக்கனத்ததனால் அதனைக் கீழே தள்ளுவான் ‘ஸ்ரீமந்நாராயணா! என்று சொல்லிக்கொண்டே தள்ளினானாக, அச்சொல் செவிப்பட்ட மாத்திரத்திலே தம்முடைய கரணங்கள் மீண்டும் பகவத் விஷயத்தில் ப்ரவணமானபடியைக் கண்டு வியக்கிறார்) 8
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8
செல்வம் நாராணன் என்ற,selvam naaranan endra - ஸ்ரீமந்நாராயணன் என்கிற வார்த்தையை
சொல் கேட்டலும்,sol kettalum - கேட்டவளவிலே
கண்,kan - கண்களானவை
பனி மல்கும்,pani malgum - நீர் ததும்புகின்றன
நாடுவன்,naaduvan - (எங்குற்றாய் எம்பெருமான்! என்று அவனைத்) தேடா நின்றேன்!
மாயமே,maayamae - இது ஆச்சரியமே;
நம்பி,nambi - எல்லாவற்றாலும் நிறைந்த அப்பெருமான்
நல் அல்லும் பகலும்,nal allum pagalum - நல்ல இரவும் பகலும்
இடை வீடு,idai veedu - இடைவிடாமல்
இன்றி நல்கி,indri nalki - கிருபை பண்ணி
நம்பி,nambi - என்மேல் விருப்பங்கொண்டு
என்னைவிடான்,ennaividaan - என்னை விடாதிருக்கிறான்.
2782திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (அவன் விடாதிருந்தாலிருக்கட்டும்; நீர் அவனை மறந்து ஸம்ஸாரிகளைப் போலே* உண்டியே உடையே உகந்தோடித் திரியமாட்டீரோ வென்ன, நான் எதையிட்டு அவனை மறப்பது? மறக்கும்வகை தெரியவில்லையே யென்கிறார்.) 9
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9
நம்பியை,nambiyai - கல்யாண குண பரிபூர்ணனும்
தென் குறுங்குடி நின்ற,then kurungudi nindra - திருக்குறுங்குடியிலே நிற்பவனும்
அ செம்போனே திகழும் திருமூர்த்தியை,a semponae thigazhum thirumoorthyai - அழகிய செம்பொன் போலவே பிரகாசிக்கின்ற திருமேனியை யுடையவனும்.
உம்பர் வானவர்,umbar vaanavar - மேலான நித்ய ஸூரிகளுக்கு
ஆதி,aadhi - காரண பூதனும்
அம் சோதியை,am sodhiyai - அழகிய ஒளி யுருவனுமாகிய
எம் பிரானை,em piranai - எம்பெருமானை
என் சொல்லி,en soll - என்னவென்று
மறப்பேன்,marappeen - மறப்பேன்
2783திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (வருந்தியாகிலும் அவன் பக்கலில் நின்றும் நெஞ்சை மீட்டு அவனை மறந்திருத்தாலோ வென்ன, தன்னை நான் மறவாமைக்காகத் தன்னுடைய அழகிய திருக் கண்களோடே கூட என்னுள்ளே புகுந்து எனக்கு மிகவுமெளியனாய்க் கொண்டு ‘இனிப்பேரேன்’ என்றிருத்தருளினானாதலால் அவனை நான் மறக்க விரகில்லையே யென்கிறார்கிறார்.) 10
மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10
மறப்பும் ஞானமும் ஒன்று,marappum gnaanamum onru - மறத்தலும் அறிதலுமாகிய ஒன்றையும்
நான் உணர்த்திலன்,naan unarthilan - நான் அறியேன்;
மறக்கும் என்று,marakkum endru - (இப்படி யிருக்க) இவன் நம்மை மறந்து விடுவன் என்று நினைத்து
செந்தாமரை கண்ணோடு,senthaamarai kannodu - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களோடு
மறப்பு அற,marappu ara - மறப்புக்கு அவகாசமில்லாதபடி
என் உள்ளே,en ullam - எனது நெஞ்சினுள்ளே
மண்ணினான் தன்னை,manninaan thannai - நிலை பெற்றிருந்தவனான
என் மணியை,en maniyai - எனது நீலரத்னமாகின எம் பெருமானை
இனி யான் மறப்பேனா,ini yaan marappeena - இனி நான் மறப்பேனோ? (ஒருநாளும் மறவேன்)
2784திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (ஸ்ரீ ஈடு - நிகமத்தில் , ‘இப்பத்தைக் கற்றவர்கள் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத புருஷார்த்தமான பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்,’ என்கிறார். ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – கல்வி என்றதுக்கு கைங்கர்யத்தை விவஷித்து அவதாரிகை) 11
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11
மணியை,maniyai - நீல மணி போன்றவனும்
வானவர் கண்ணனை,vaanavar kannanai - நித்ய ஸூரிநாதனும்
தன்னது ஓர் அணியை ,thannathu or aniyaai - தனக்கு தானே ஓராபரணமாயிறு பவனுமான பெருமானைக் குறித்து
தென் குருகூர்ச் சடகோபன்,then kurukoor sadakoopan - தென் குருகூர்ச் சடகோபன்
சொல் பணி செய்,sol pani sey - வாசிக கைங்கர்யம் செய்த
ஆயிரத்துள்,aayiraththuḷ - ஆயிரத்தினுள்
இவை பத்து,ivai pathu - இப்பத்துப் பாட்டையும்
உடன் ,udan - கருத்துடன்
தணிவு இலர் ,thanivu ilar - த்ருப்தி பெறாதவர்களாய்
கற்பர் ஏல் ,karpar ael - கற்பாராயின் (அவர்களுக்கு)
கல்வி வாயும் ,kalvi vaayum - ஞானம் நிரம்பும்