Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: மற்று இருந்தீர்கட்கு (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
617நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 1
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்
மற்று இருந்தீர்கட்கு, Matru Irundirgatku - என்னுடைய துணிவுக்கு மாறுபாடாக இருக்கின்ற உங்களுக்கு
அறியல் ஆகா, Ariyal Aaga - அறிய முடியாததாய்
மாதவன் என்பது ஓர் அன்பு தன்னை, Madhavan Enbathu Or Anbu Thannai - மாதவன் விஷயமான அபிநிவேசத்தை
உற்றிருந்தேனுக்கு, Utrirundhenuku - அடைந்திருக்கிற எனக்கு
உரைப்பது எல்லாம், Uraipathu Ellam - நீங்கள் சொல்லுவதெல்லாம்
ஊமையரோடு செவிடர் வார்த்தை, Oomaiyarodu Sevidar Vaarthai - ஊமையும் செவிடனுங் கூடி வார்த்தை சொல்லிக் கொள்வது போல் வீண் (இப்போது எனக்குச் செய்யத்தக்கது எதுவென்றால்)
புறத்து, Purathu - ஸமீப ப்ரதேசத்திலே
என்னை, Ennai - என்னை
பெற்றிருந்தாளை ஒழிய போய், Petrirunthalai Ozhiya poi - மெய் நொந்து பெற்ற தாயான தேவகியை விட்டொழிந்து
பேர்த்து ஒரு தாய் இல், Perthu oru thai il - வேறொரு தாயாகிய யசோதையின் க்ருஹத்திலே
வளர்ந்த, Valarndha - வளர்ந்தவனும்
மல் பொருந்தாமல் களம் அடைந்த, Mal Porundhaamal kalam adaindha - மல்ல யுத்த பூமியிலே மல்லர்கள் வந்து சேர்வதற்கு முன்னே தான் முற்பாடனாய்ப் போய்ச் சேர்த்திருப்பவனுமான
நம்பி, Nambi - கண்ண பிரானுடைய (நகரமாகிய)
மதுரை, Mathurai - மதுராபுரி யினுடைய
உய்த்திடுமின், Uythidumin - கொண்டு சேர்ந்து விடுங்கள்
618நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 2
நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்
இனி, Ini - இனி மேல்
நாணி, Naani - வெட்கப்பட்டு
ஓர் கரும்ம இல்லை, Or Karumam illai - ஒரு பயனுமில்லை (ஏனெனில்)
நால் அயலாரும், Naal ayalaarum - ஊரிலுள்ளாரெல்லாரும்
அறிந்தொழிந்தார், Arindhozhindhaar - (எனது செய்தியை) அறிந்து கொண்டார்கள்
பாணியாது, Paaniyadhu - காலதாமத மின்றி
மருந்து செய்து, Marundhu seidhu - வேண்டும் பரிஹாரங்களைச் செய்து
என்னை, Ennai - என்னை
பண்டு பண்டு ஆக்க உறுதிர் ஆகில், Pandu pandu aaka uruthir aakil - இப்போதைய விரஹாவஸ்தைக்கு முற்பட்டதான ஸம்ச்லேஷ தசைக்கும் முற்பட்டதான பகவத் விஷய வாஸனையையே அறியாத தசையிலிருந்த நிறத்தைப் பெற்றவளாகச் செய்ய நினைப்பீர்களாகில்
நீர், Neer - நீங்கள்
என்னை, Ennai - என்னை
ஆணையால், Aanaiyaal - ஸத்யமாக
காக்க வேண்டில் , Kaakka vendil - காப்பாற்ற விரும்புகிறீர்களாகில்
என்னை, Ennai - என்னை
ஆய்ப்பாடிக்கே, Aaypaadike - திருவாய்ப்பாடியிலே
உய்த்திடுமின், Uythidumin - கொண்டு சேர்த்து விடுங்கள்
மாணி உரு ஆய் உலகு அளந்த மாயனை காணில், Maani uru aay ulagu alandha maayanai kaanil - (மாவலியினிடத்தில்) வாமகரூபியாய்ச் சென்று (த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட பெருமானை ஸேவிக்கப்பெற்றால்
தலை மறியும், thalai mariyum - (இந்த நோயானது) தலை மடங்கும்
619நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 3
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பரிது மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்
கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற
நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்
தந்தையும், Thandhaiyum - தகப்பனாரும்
தாயும், Thaayum - தாய்மாரும்
உற்றாரும், Utraarum - மற்றுமுள்ள உறவினரும்
நிற்க, Nirka - இருக்கும் போது
தனி வழி, Thani vazhi - (இவள்) தான் தோன்றியாகத் தெருவிலே புறப்பட்டாள் என்கிற வார்த்தையானது
வந்த பின்னை, Vandha pinnai - உலகில் பரவின பிறகு
பழிகாப்பு அரிது, Pazhikaapu aridhu - அப் பழியைத் தடுப்பது முடியாது (நான் தனி வழி போகாதிருக்கவும் முடியவில்லை ஏனென்றால்)
நந்த கோபாலன், Nandha Gopalan - நந்த கோபருடைய
கடைத் தலைக்கே, Kadai thalaikke - திரு மாளிகை வாசலிலே
மாயவன், Maayavan - ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையனான கண்ண பிரான்
வந்து, Vandhu - எதிரே வந்து
உரு காட்டுகின்றான், Uru kaatukinraan - தன் வடிவைக் காட்டி இழுக்கின்றானே (இப்போது நீங்கள் செய்ய வேண்டிய தென்ன வென்றால்)
கொந்தளம் ஆக்கி பரக்கழித்து குறும்பு செய்வான் ஓர் மகனை பெற்ற, Kondhalam aaki parakazhithu kurumbu seivaan or maganai petra - (பெண்களைக்) குடிகெடுத்துக் குறும்பு செய்யும் பிள்ளையைப் பெற்றவனான
நள்ளிருட் கண், Nallirut kan - நடு நிசியிலே
என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்
620நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 4
அங்கைத் தலத்திடை யாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்
அம் கைத்தலத்திடை, Am kaithalathidai - அழகிய திருக்கைத் தலத்திலே
ஆழி கொண்டானவன், Aazhi kondaanavan - திரு வாழியை ஏந்தி யிருப்பவனான பிரானுடைய
முகத்து அன்றி விழியேன் என்று, Mugathu andri vizhiyen endru - முகத்தில் தவிர (மற்ற பேருடைய முகத்தில்) விழிக்க மாட்டேனென்று
செம் கச்சு ஆடை கொண்டு, Sem kachu aadai kondu - நல்ல கஞ்சுகமாகிற ஆடையினாலே
கண் ஆர்த்து, Kan aarthu - கண்களை மூடிக் கொண்டு
சிறு மானிட வரை காணில் நானும், Siru maanida varai kaanil naanum - க்ஷுத்ர மநுஷ்யர்களைக் கண்டால் வெட்கப்படா நின்ற
கொங்கைத் தலம் இவை, Kongai thalam ivai - இக் கொங்கைகளை
நோக்கி காணீர், Nokki kaaneer - (தாய்மார்களே!) நீங்கள் உற்று நோக்குங்கள் (இக் கொங்கைகளானவை)
கோவிந்தனுக்கு அல்லால், Govindhanuku allaal - கண்ண பிரானைத் தவிர்த்து
வாயில் போகா, Vaayil pogaa - மற்றொருவடைய வீட்டு வாசலை நோக்க மாட்டா (ஆகையாலே)
இங்குத்தை வாழ்வை ஒழிய போய், Inguthai vaazhvai ozhiya poi - நான் இவ்விடத்திலே வாழ்வதை யொழித்து
என்னை எமுனை கரைக்கு உய்த்திடுமின், Ennai Yamunai karaiku uythidumin - என்னை யமுநா நதிக் கரையிலே கொண்டு போட்டு விடுங்கள்
621நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 5
ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர் துழிதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்
அம்மனைமீர், Ammanaimir - தாய்மார்களே!
என், En - என்னுடைய
இது நோய், Idhu noi - இந்த வியாதியானது
ஆர்க்கும், Aarkum - எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்
அறியல் ஆகாது, Ariyal aagadhu - அறிய முடியாது (ஆனால்)
துழதிப்படாதே, Thuzathipadaathe - (இது அப்படிப்பட்ட நோயா! என்று) நீங்கள் துக்கப்படாமல்
நீர் கரை நின்ற, Neer karai nindra - காளிங்க மடுவின் கரையிலிருந்த
கடம்பை ஏறி, Kadampai eri - கடம்ப மரத்தின் மேல் ஏறி (அங்கிருந்து)
காளியன் உச்சியில், Kaaliyan uchchiyil - காளிய நாகத்தின் படத்தின் மேலே
நட்டம் பாய்ந்து, Nattam paainthu - ஒரு நர்த்தன வகையாகப் பாய்ந்து
போர் களம் ஆக, Por kalam aaga - அப்பொய்கை தானே யுத்தக் களமாம்படியாக
நிருத்தம் செய்த, Niruththam seydha - நர்த்தனம் செய்யப் பெற்ற
பொய்கை கரைக்கு, Poigai karaikku - மடுவின் கரையிலே
என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ப் போடுங்கள்
கார் கடல் வண்ணன் என்பான் ஒருவன், Kaar kadal vannan enbaan oruvan - நீலக் கடல் போன்ற திரு நிறத்தனான கண்ணபிரான்
தடவ, Thadava - (தனது திருக் கைகளால் என்னைத்) தடவுவானாகில்
தீரும், theerum - (இந் நோய்) தீர்ந்து விடும்
கை கண்ட யோகம், Kai kanda yogam - (இது தான்) கை மேலே பலிக்கக் கூடிய உபாயம்
622நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 6
கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின்
கார், Kaar - வர்ஷா காலத்தி லுண்டான
தண், Than - குளிர்ந்த
முகிலும், Mukilum - மேகமும்
கருவிளையும், Karuvilaiyum - கருவிளைப் பூவும்
காயா மலரும், Kaayaa malarum - காயம் பூவும்
கமலம் பூவும், Kamalam poovum - தாமரைப் பூவுமாகிற இவைகள்
வந்திட்டு, Vanditu - எதிரே வந்து நின்று
இருடீகேசன் பக்கல் போகு என்று என்னை ஈர்த்திடுகின்றன, Irudeekesan pakkal poku endru ennai eerthidukirana - “கண்ணபிரான் பக்கலில் நீயும்போ“ என்று என்னை வலிக்கின்றன (ஆகையாலே)
வேர்த்து, Verthu - பசுமேயக்கிற ச்ரமத்தாலே வேர்வை யடைந்து
பசித்து, Pasithu - பசியினால் வருந்தி
வயிறு அசைந்து, Vayiru asaindhu - வயிறு தளர்ந்து
வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று, Vendu adisil unnum podhu eethu endru - வேண்டிய ப்ரஸாதம் உண்ண வேண்டிய காலம் இது என்று
பார்த்திருந்து, Parthirundhu - (ரிஷி பத்னிகளின் வரவை) எதிர்பார்த்திருந்து
நெடு நோக்குக் கொள்ளும், Nedu nokku kollum - நெடுங்காலம் கடாக்ஷித்துக் கொண்டிருக்குமிடமான
பத்தவிலோசனத்து, Pathavilosanathu - பக்தவிலோச்நமென்கிற ஸ்தானத்திலே
உய்த்திடுமின், Uythidumin - (என்னைக்) கொண்டு சேர்த்து விடுங்கள்
623நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 7
வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல உறாமையும் உள் மெலிவும் ஓத வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னை
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்
வண்ணம் திரிவும், Vannam thirivum - (என்னுடைய) மேனி நிறத்தின் மாறுபாடும்
மனம் குழைவும், Manam kuzhaivum - மனத் தளர்ச்சியும்
உண்ணல் உறாமையும், Unnal uraamaiyum - ஆஹாரம் வேண்டியிராமையுமும்
உள் மெலிவும், Ul melivum - அறிவு சுருங்கிப் போனதுமாகிய இவை யெல்லாம் (எப்போது தணியுமென்றால்)
ஓதம் நீர் வண்ணன் என்பான் ஒருவன், Odham neer vannan enbaan oruvan - கடல் வண்ண னென்று ப்ரஸித்தனாய் விலக்ஷணனான கண்ண பிரானுடைய
தண் அம்துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட, Than amthuzhai enum maalai kondu soota - குளிர்ந்து அழகிய திருத்துழாய் மாலையைக் கொண்டு வந்து சூட்டுமளவில்
தணியும், Thaniyum - நீங்கும் (அத்திருத்துழாய் மாலை உங்களால் இங்கே கொண்டு வந்து கொடுக்க முடியாதாகில்)
மானம் இலாமையும், Maanam ilaamaiyum - மானம் கெட்டுப் போனபடியும்
வாய் வெளுப்பும், Vaai veluppum - வாய் வெளுத்துப் போனபடியும்
பலதேவன், Paladhevan - பலராமன்
பிலம்பன் தன்னை, Pilamban thanai - ப்ரலம்பாஸுரனை
பண் அழிய, pan azhiya - ஸந்தி பந்தங்கள் உருக் குலையும்படி
வென்ற, Vendra - கொன்று முடித்த இடமாகிய
பாண்டீரமென்னும், paandiramenum - பாண்டி வடத்து ஆலமரத்தினருகில்
என்னை உய்த்துடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்திடுங்கள்
624நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 8
கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்
கன்று இனம், Kanru inam - கன்றுகளின் திரள்கைள
மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான், Meykkalum meykka petran - மேய்ப்பதையே தொழிலாகப் பெற்றவனுமானான
காடு வாழ் சாதியும் ஆக பெற்றான், Kaadu vaazh saathiyum aaga petran - (வீட்டை விட்டுக் கழிந்து) காட்டிலேயே தங்கி வாழும்படியான சாதியிலும் பிறக்கப் பெற்றான்
பற்றி, patri - வெண்ணெய் களவில் பிடிபட்டு
உரலிடை, Uralidai - உரலிலே
ஆப்பும் உண்டான், aapum undaan - கட்டுப்படவும் பெற்றான் (ஸௌலப்ய காஷ்டையான இச் செயல்கள்)
பாலிகாள், Paalikaal - குணத்தையும் குற்றமாகக் கொள்ளும் பாவிகளே!
உங்களுக்கு, Ungalukku - உங்களுக்கு
ஏச்சுக் கொலோ, echchu kolo - தூஷணத்துக்கோ உடலாயிற்று? (இதுவரையில் நீங்கள் இழிவாகச் சொன்னவை நிற்க இனியாகிலும்)
கற்றன பேசி வசவு உணாதே, Katrana pesi vasavu unaadhe - நீங்கள் கற்ற கல்விகளைப் பேசி (என்னிடத்தில்) வசவு கேட்டுக் கொள்ளாமல்
காலிகள் உய்ய மழை தடுத்து, Kaaligal uyya mazhai thaduthu - பசுக்கள் பிழைக்கும்படி பெரு மழையைத் தடை செய்து
கொற்றம் குடை ஆக, Kotram kudai aaga - வெற்றிக் குடையாக
ஏந்தி நின்ற, endhi nindra - (கண்ண பிரனால்) தரிக்கப்பட்ட
கோவர்தனத்து, Govardhanathu - கோவர்த்தன மலையினருகே
என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்
625நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 9
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நமனை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்
கிளி, kili - (நான் வளர்த்த) கிளியானது
கூட்டில் இருந்து, kootil irundhu - கூட்டில் இருந்து கொண்டு
எப்போதும், epodhum6 - ஸதா காலமும்
கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும், Govindhaa govindhaa endru azhaikkum - கோவிந்தா கோவிந்தா வென்று கூவா நின்றது
ஊட்டு கொடாது, Ootu kodaadhu - உணவு கெடாமல் (பட்டினி கிடக்கும்படி)
செறுப்பன் ஆகில், Serupan aagil - துன்பப் படுத்தினேனாகில்
உலகு அளந்தான் என்று, Ulagu alandhaan endru - உலகளந்த பெருமானே! என்று
உயர கூவும், Uyara koovum - உரக்கக் கூவா நின்றது! (இந்தத் திருநாமங்கள் என் காதில் விழும் போதே என் சரீரம் புறப்படக் கிளம்புகின்றது ஆகையால்)
நாட்டில், Naatil - இவ் வுலகில்
தலை பழி எய்தி, Thalai pazhi eythi - பெருத்த அபவாதத்தை ஸம்பாதித்து
உங்கள் நன்மை இழந்து, Ungal nanmai izhandhu - உங்களுடைய நல்ல பேரைக் கெடுத்துக் கொண்டு
தலை இடாதே, Thalai idaathe - (பிறகு ஒருவரையும் முகம் நோக்க மாட்டாமல்) தலை கவிழ்ந்து நிற்க வேண்டாதபடி
சூடு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும், Soodu uyar maadangal soozhndhu thondrum - தலை யுயர்ந்த மாடங்களால் சூழப்பட்டு விளங்குகின்ற
துவராபதிக்கு, Thuvarapadhikku - த்வாரகையிலே
என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்
626நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 10
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே
தாழ் குழலாள், Thaazh kuzhalaal - தாழ்ந்த கூந்தலை யுடையளாய்
பொன் இயல்மாடம் பொலிந்துதோன்றும் புதுவையாகோன் விட்டு சித்தன் கோதை, Pon iyalmaadam polindhu thondrum Pudhuvaiyaakon Vittu chithan kodhai - பொன் மயமான மாடங்களினால் விளங்கித் தோன்றுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவராகிய பெரியாழ்வாருடைய (திருமகளான) ஆண்டாள்
மன்னு மதுரை தொடக்கம் ஆக வண் துவராபதி தன் அளவும் தன்னை, Mannu mathurai thodakkam aaga van Thuvarapathi than alavum thanai - ஸ்ரீமதுரை முதற்கொண்டு ஸ்ரீத்வாரகை வரைக்கும் (சொல்லப்பட்ட சில திவ்யதேசங்களில்) தன்னை (ஆண்டாளை)
தமர், Thamar - தன் உறவினர்
உய்த்து பெய்ய வேண்டி, Uythu peiya vendi - கொண்டு போய்ச் சேர்க்க வேண்டி
துணிந்த துணிவை, Thunindha thunivai - கொண்ட அத்யவஸாயம் விஷயமாக
இன் இசையால் சொன்ன, In isaiyaal sonna - இனிய இசையுடன் அருளிச் செய்த
செம் சொல் மாலை, Sem sol maalai - அழகிய சொல்மாலை யாகிய இத்திருமொழியை
ஏத்த வல்லார்க்கு, Etha vallaarku - ஓத வல்லவர்களுக்கு
இடம், Idam - வாழுமிடம்
வைகுந்தம், Vaikundham - பரமபதமேயாம்