Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: மாணிக்கக்கிண்கிணி (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
75ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 1
மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன் னால் செய்த ஆய் பொன்னுடை மணி
பேணிப் பவள வாய் முத்திலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி–1-6-1
ஆணிப் பொன்னால் செய்த,Aanip Ponnal Seytha - மாற்றுயர்ந்த பொன்னால் செய்த
ஆய்,Aay - (வேலைப் பாட்டிற் குறைவில்லாதபடி) ஆராய்ந்து செய்த
பொன் மணி,Pon Mani - பொன் மணிக் கோவையை
உடைய,Udaiya - உடைய
மருங்கின் மேல்,Marungin Mel - இடுப்பின் மேலே
மாணிக்கம் கிண்கிணி,Manikkam Kinkini - (உள்ளே) மாணிக்கத்தை யிட்ட அரைச் சதங்கை
ஆர்ப்ப,Aarppa - ஒலி செய்யவும்
பவளம்,Pavalam - பவழம் போன்ற
வாய்,Vaai - வாயிலே
முத்து,Muthu - முத்துப் போன்ற பற்கள்
இலங்க,Ilanga - விளங்கவும்
பண்டு,Pandu - முற்காலத்திலேயே
காணி,Kaani - பூமியை
கொண்ட,Konda - (புவிச் சக்ரவர்த்தியினிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
கைகளால்,Kaigalal - திருக் கைகளாலே
பேணி,Peni - விரும்பி
சப்பாணி,Sappani - சப்பாணி கொட்டி யருள வேணும்;
கரு,Karu - கரு நிறமான
குழல்,Kuzhal - கூந்தலை யுடைய
குட்டனே,Kuttane - பிள்ளாய்!
சப்பாணி,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.
76ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 2
பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன்னரை யாடத் தனிச் சுட்டி தாழ்ந்தாட
என்னரை மேல் நின்றிழிந்து உங்க ளாயர் தம்
மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி–1-6-2
பொன்,Pon - ஸ்வர்ண மயமான
அரை நாணொடு,Arai Naanodu - அரை நாணோடு கூட
மாணிக்கம் கிண்கிணி,Manikkam Kinkin - (உள்ளே) மாணிக்கமிட்ட அரைச் சதங்கையும்
தன் அரை,Than Arai - தனக்கு உரிய இடமாகிய அரையிலே
ஆட,Aada - அசைந்து ஒலிக்கவும்
தனி,Thani - ஒப்பற்ற
சுட்டி,Sutti - சுட்டியானது
தாழ்ந்து,Thazhnthu - (திருநெற்றியில்) தொங்கி
ஆட,Aada - அசையவும்
என் அரை மேல் நின்று,En Arai Mel Ninru - என்னுடைய மடியிலிருந்து
இழிந்து,Izhinthu - இறங்கிப் போய்
உங்கள்,Ungal - உன்னுடைய (பிதாவான)
ஆயர் தம் மன்,Aayar Tham Man - இடையர்கட்கெல்லாம் தலைவரான நந்த கோபருடைய
அரை மேல்,Arai Mel - மடியிலிருந்து
கொட்டாய் சப்பாணி,Kottai Sappani - சப்பாணி கொட்டாய்
மாயவனே,Maayavane - அற்புதமான செயல்களை யுடையவனே!
சப்பாணி கொட்டாய்-;,Sappani Kottai - சப்பாணி கொட்டியருள வேணும்.
77ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 3
பன் மணி முத்து இன் பவளம் பதித்தன்ன
என் மணி வண்ணன் இலங்கு பொற் றோட்டின் மேல்
நின் மணி வாய் முத் திலங்க நின்னம்மை தன்
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி–1-6-3
என்,En - என்னுடைய
மணிவண்ணன்,ManiVannan - நீல மணி போன்ற நிறமுடையவனே!
பல்,Pal - பலவகைப் பட்ட
மணி,Mani - சதகங்களையும்
முத்து,Muthu - முத்துக்களையும்
இன் பவளம்,In Pavalam - இனிய பவழத்தையும்
பதித்த,Pathitha - அழுத்திச் செய்யப் பட்டதும்
அன்ன,Anna - அப்படிப்பட்டதுமான (அழகியதுமான)
இலங்கு,Ilangu - விளங்குகின்ற
பொன் தோட்டின் மேல்,Pon Thottin Mel - பொன்னாற் செய்த தோடென்னும் காதணியினழகுக்கு மேலே
நின் மணி வாய் முத்து,Nin Mani Vaai Muthu - உன்னுடைய அழகிய வாயிலே முத்துப் போன்ற பற்கள்
இலங்க,Ilanga - விளங்கும்படி (சிரித்துக் கொண்டு)
நின் அம்மை தன்,Nin Ammaithan - உன் தாயினுடைய
அம்மணி மேல்,Ammani Mel - இடையிலிருந்து
கொட்டாய் சப்பாணி,Kottai Sappani - சப்பாணி கொட்டாய்-;
ஆழி,Aazhi - திருவாழி மோதிரத்தை
அம் கையனே,Am Kaiyane - அழகிய கையிலுடையவனே!
சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.
78ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 4
தூ நிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலா அம்புலீ சந்திரா வா வென்று
நீநிலா நின் புகழா நின்ற ஆயர் தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி–1-6-4
வான்,Vaan - ஆகாசத்திலே
நிலா,Nila - விளங்குகின்ற
அம்புலி,Ambuli - அம்புலியே!
சந்திரா,Chandira - சந்திரனே!
தூ,Thoo - வெண்மையான
நிலா,Nila - நிலாவையுடைய
முற்றத்தே,Mutraththae - முற்றத்திலே
போந்து,Poanthu - வந்து
நீ,Nee - நீ
விளையாட,Vilaiyaada - (நான்) விளையாடும்படி
வா,Vaa - வருவாயாக
என்று,Endru - என்று (சந்திரனை அழைத்து)
நிலா,Nila - நின்று கொண்டு
நின்,Nin - உன்னை
புகழாநின்ற,Pugazhaninra - புகழ்கின்ற
ஆயர் தம்,Aayar Tham - இடையர்களுடைய
கோ,Ko - தலைவராகிய நந்த கோபர்
நிலாவ,Nilaava - மனம் மகிழும்படி
சப்பாணி கொட்டாய்-;,Sappani Kottai - சப்பாணி கொட்டி யருள வேணும்;
குடந்தை கிடந்தானே! சப்பாணி-.,Kudanthai Kidanthane!Sappani - குடந்தை கிடந்தானே! சப்பாணி-.
79ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 5
புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து
அட்டி யமுக்கி அகம் புக் கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக்கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி–1-6-5
புட்டியில்,Puttiyil - திருவரையிற் படிந்த
சேறும்,Serum - சேற்றையும்
புழுதியும்,Puzhiyum - புழுதி மண்ணையும்
கொண்டு வந்து,Kondu Vandu - கொணர்ந்து வந்து
அட்டி,Atti - (என் மேல்) இட்டு
அமுக்கி,Amukki - உறைக்கப் பூசி
அகம் புக்கு,Agam Pukku - வீட்டினில் புகுந்து
அறியாமே,Ariyamae - (எனக்கு நீ) தெரியாதபடி
சட்டி தயிரும்,Satti Thairum - சட்டியில் வைத்திருக்கும் தயிரையும்
தடாவினில்,Thadavinil - மிடாக்களிலிருக்கிற
வெண்ணெயும்,Vennaiyum - வெண்ணெயையும்
உண்,Un - உண்ணுகின்ற
பட்டி கன்றே,Patti Kanrae - பட்டி மேய்ந்து திரியும் கன்று போன்றவனே!
சப்பாணி கொட்டாய்-;,Sappani Kottai - சப்பாணி கொட்டாய்-;
பற்ப நாபா,Parpa Naaba - ப்ரஜாபதி பிறப்பதற்குக் காரணமான தாமரைப் பூவைக்கொண்ட நாபியை யுடையவனே!
சப்பாணி கொட்டாய்-.,Sappani Kottai - சப்பாணி கொட்டாய்-;
80ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 6
தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது
போருத்து வந்து புகுந்தவர் மண்ணாள
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி–1-6-6
தந்தை,Thandai - (எல்லார்க்கும்) பிதாவாகிய உனது
சொல்,Sol - பேச்சை
தாரித்து கொள்ளாது,Thariththu Kollaathu - (மனத்திற்) கொண்டு அங்கீகரியாமல்
போர் உய்த்து வந்து,Poar Uyiththu Vandu - யுத்தத்தை நடத்துவதாக (க்கருவத்துடன்) வந்து
புகுந்தவர்,Pugunthavar - (போர்க்களத்தில்) ப்ரவேசித்தவரும்
மண்,Mann - ராஜ்யத்தை
ஆள,Aala - (தாமே) அரசாளுவதற்கு
பாரித்த,Paariththa - முயற்சி செய்த
மன்னர்,Mannar - அரசர்களுமாகிய
நூற்றுவர்,Noorruvar - நூற்றுக் கணக்காயிருந்த துரியோதநாதிகள்
பட,Pada - மாண்டு போகும்படி
அன்று,Andru - (பாரத யுத்தம் நிடந்த) அக் காலத்திலே
பஞ்சவர்க்கு,Panjavarkku - பஞ்ச பாண்டவர்களுக்கு (வெற்றி உண்டாக)
தேர் உய்த்த,Ther Uyiththa - (பார்த்தஸாரதியாய் நின்று) தேரை ஓட்டின
கைகளால்,Kaigalal - திருக்கைகளாலே
சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.
தேவகி சிங்கமே,Devaki Singamae - தேவகியின் வயிற்றிற் பிறந்த சிங்கக்குட்டி போன்றவனே!
சப்பாணி-.,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.
81ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 7
பரந்திட்டு நின்ற படு கடல் தன்னை
இரந்திட்ட கைம் மேல் எறி திரை மோத
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க
சரந்தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்கவிற் கையனே சப்பாணி–1-6-7
பரந்திட்டு நின்ற,Parandhittu Nindra - (எல்லை காண வொண்ணாதபடி) பரவியுள்ள
படு கடல்,Padu Kadal - ஆழமான ஸமுத்ரமானது
தன்னை இரந்திட்ட,Thannai Irandhitta - (வழி விடுவதற்காகத்)தன்னை யாசித்த
கை மேல்,Kai Mel - கையின் மேலே
எறி திரை,Eri Thirai - வீசுகின்ற அலைகளினால்
மோத,Modha - மோதி யடிக்க
கரந்திட்டு நின்ற,Karandhittu Nindra - (முகங் காட்டாமல்) மறைந்து கிடந்த
கடல்,Kadal - அக் கடலுக்கு உரிய தேவதையான வருணன்
கலங்க,Kalanga - கலங்கி விடும்படி
சரம்,Saram - அம்புகளை
தொட்ட,Thotta - தொடுத்து விட்ட
கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும்.
சார்ங்கம் வில்,Sargam Vil - ஸ்ரீசார்ங்கமென்னும் தநுஸ்ஸை
கையனே,Kaiyane - (அப்போது) கையில் தரித்தவனே!
சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.
82ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 8
குரக்கினத்தாலே குரை கடல் தன்னை
நெருக்கி அணை கட்டி நீள் நீரிலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி யங் கையனே சப்பாணி–1-6-8
குரை,Kurai - கோக்ஷியா நின்ற
கடல் தன்னை,Kadal Thannai - ஸமுத்ரத்தை
நெருக்கி,Nerukki - (இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து
குரங்கு,Kurangu - குரங்குகளினுடைய
இனத்தாலே,Inaththaalai - கூட்டங்களைக் கொண்டு
அணை கட்டி,Anai Katti - ஸேதுவைக் கட்டி முடித்து
நீள் நீர்,Neel Neer - பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட
இலங்கை,Ilangai - லங்கையிலுள்ள
அரக்கர்,Arakkar - ராக்ஷஸர்களெல்லாம்
அலிய,Aliya - அழிந்து போம்படி
அடு கணையாலே,Adu Kanaiyaale - கொல்லும் தன்மையை யுடைய அம்புகளைக் கொண்டு
நெருக்கிய,Nerukkiya - நெருங்கப் போர் செய்த
கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும்.
நேமி,Nemi - திருவாழி ஆழ்வானை
அம் கையனே,Am Kaiyane - அழகிய கையிலேந்தினவனே!
சப்பாணி-.,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.
83ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 9
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்
உளந்தொட் டிரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி–1-6-9
தூணை,Thoona - கம்பத்தை
அவன்,Avan - அந்த ஹிரண்யாஸுரன் (தானே)
தட்ட,Thatta - புடைக்க
ஆங்கே,Aange - (அவன் புடைத்த) அந்த இடத்திலேயே
வான் உகிர்,Vaan Ukir - கூர்மையான நகங்களை யுடைய
சிங்கம் உருஆய்,Singam Uruaai - நரஸிம்ஹ ­மூர்த்தியாய்
வளர்ந்திட்டு,Valarnthittu - வளர்ந்த வடிவத்துடன் தோன்றி
உளம்,Ulam - (அவ்விரணியனது) மநஸ்ஸு (ஒருகால் இவ்விரணியனும் அநுகூலனாகக் கூடுமோ! என்று)
தொட்டு,Thotta - பரிசோதித்துப் பார்த்து (பின்பு)
இரணியன்,Iraaniyan - அவ்விரணியனுடைய
ஒளி,Oli - ஒளி பொருந்திய
மார்பு அகலம்,Maaarbu Akalam - மார்பின் பரப்படங்கலும்
பிளந்திட்ட,Pilandhitta - (நகத்தாற்) பிளந்த
கைகளால் சப்பாணி,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும்.
பேய்,Paey - பூதனையின்
முலை,Mulai - முலையை
உண்டானே,Undaane - உண்டவனே!
சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.
84ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 10
அடைந்திட்டு அமரர்கள் ஆழ் கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார் முகில் வண்ணனே சப்பாணி–1-6-10
அமரர்கள்,Amarar - தேவர்கள் (துர்வாச முனி சாபத்தினால் தாம் இழந்த ஐச்வர்யத்தைப் பெறுதற்காக)
அடைந்திட்டு,Adainthittu - (உன்னைச்) சரணமடைய (நீ)
ஆழ்கடல் தன்னை,Aazh Kadal Thannai - ஆழமான க்ஷிராப்தியை (உன்னுடைய படுக்குமிடமென்று பாராமல்)
விடைந்திட்டு,Vidaindhittu - நெருங்கி
மந்தரம்,Mantharam - மந்தர பர்வதத்தை
மத்து ஆக,Maththu Aaga - (கடைவதற்குரிய) மத்தாகும்படி
கூட்டி,Kooti - நேராக நிறுத்தி
வாசுகி,Vaasuki - வாசுகியென்னும் பாம்பாகிய
வன்வடம்,Vanvadham - வலிய கயிற்றை
கயிறு ஆக சுற்றி,Kayiru Aaga Sutri - (அந்த மந்தரமலையாகிற மத்திலே) கடை கயிறாகச் சுற்றி
கடைந்திட்ட,Kadaiynthitta - கடைந்த
கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும்.
கார்முகில் வண்ணனே,Kaarmugil Vannanae - காளமேகம் போன்ற நிறமுடையவனே!
சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.
85ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 11
ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர் தங் கோவினை
நாட் கமழ் பூம் பொழில் வில்லி புத்தூர்ப் பட்டன்
வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே–1-6-11
ஆள் கொள்ள,Aal Kolla - (அனைவரையும்) அடிமை கொள்வதற்காக
தோன்றிய,Thonriya - திருவவதரித்த
ஆயர் தம் கோவினை,Aayar Tham Kovinai - இடையர்களுக்குத் தலைவனான கண்ணனிடத்தில்
வேட்கையினால்,Vetchaiyinaal - ஆசையினால்
நாள்,Naal - எந்நாளிலும்
கமழ்,Kamazh - மணம் வீசுகின்ற
பூ,Poo - புஷ்பங்கள் வீசுகின்ற
பொழில்,Pozhil - சோலைகளை யுடைய
வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த
பட்டன்,Pattan - பெரியாழ்வார்
சொன்ன,Sonna - அருளிச் செய்த
சப்பாணி ஈர் ஐந்தும்,Sappani Eer Aindhum - சப்பாணி கொட்டுதலைக் கூறிய பத்துப் பாசுரங்களையும்
வேட்கையினால்,Vetchaiyinaal - இஷ்டத்தோடு
சொல்லுவார்,Solluvaar - ஓதுகிறவர்களுடைய
வினை,Vinai - பாபங்கள்
போம்,Pom - அழிந்து போம்.