| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2719 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (அயர்வறுமமரர்களென்றிருக்கும் நித்யஸூரிகளாலே அநுபவிக்கத் தக்கவனான எம்பெருமானை அந்தோ! நான் மனமொழி மெய்களினால் தூஷித்து விட்டேனே யென்கிறார்) 1 | வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன் களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும் தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய் இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1 | வளம்,Valam - வளப்பம் பொருந்திய ஏழ் உலகின்,Ezh ulagin - ஏழுலகத்திற்கும் முதல் ஆய்,Mudhal aay - முதலாகிய வானோர் இறையை,Vaanoor iraiyai - நித்ய ஸூரி நாதனான எம்பெருமானை அரு வினையேன்,Aru vinaiyen - போக வொண்ணாத பாபத்தை யுடையோனாகிய நான் நினைத்து,Ninaithu - மனத்தினால் தியானித்து நைந்து,Nainthu - உடம்பும் கட்டுக் குலைந்து களவு ஏழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன்,Kalavu ezh vennay thodu unda kalvaa enpan - களவுத் தொழில் விளங்கும்படி வெண்ணெயை ஒளித்துண்ட கள்வனே!’ என்று சொல்லி யழைக்கின்றேன்; பின்னையும்,Pinnaiyum - அதற்கு மேலும் தளவு ஏழ் முறுவல்,Thalavu ezh muruval - முல்லை யரும்பு போலத் தோன்றுகிற புன்னகையை யுடைய பின்னைக்கு ஆய்,Pinnai kku aay - நப்பின்னைப் பிராட்டிக்காக வல் ஆனாயர் தலைவன் ஆய்,Val aanayar thalaivan aay - சிறந்த இடையர் தலைவனாய் வந்து இள,Ila - இளமை தங்கிய ஏறு ஏழும்,Eru ezhum - எருதுகளேழையும் தழுவிய,Thazhuvia - அணைத்து முடித்த எந்தாய்,Endhaay enpan - என் ஸ்வாமியே! என்பன்,enban - என்றும் சொல்லுவேன் |
| 2720 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டைக் காட்டிலும் இப்பாட்டு பரம விலக்ஷணமானது. கீழ்த் திருவாய்மொழிகளில் தாம் சொன்ன சொற்களுக்கு அநுதாபம் காட்டினார், கீழ்ப்பாட்டில். எம்பெருமானைக் கெடுத்துவிட்டேனென்று சொல்வதற்கும் நான் அதிகாரியல்லேனே; என் அதிகாரத்திற்குட்படாத வார்த்தையை நான் சொல்லிவிட்டேனே யென்று தடுமாறுகிறார்) 2 | நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2 | மாயோனே!,Maayone! - ஆச்சரியனான எம்பெருமானே! இமையோர்,Imaiyor - (பிரமன் முதலிய) தேவர்களும் முனிவரும்,Munivarum - (ஸநகன் முதலிய) ரிஷிகளுமான பலரும்,Palrum - பல பேர்களும் நினைந்து,Ninaindhu - (உனது குணங்களைச்) சிந்தித்து நைந்து,Naindhu - (அதனாலலே) சரீரமும் கட்டுக் குலைந்து உள் கரைந்து,Ul karaindhu - மனம் கரைந்து உருகி,Urugi - நெகிழ்ந்து புனைந்த,Punaindha - தொடுக்கப் பட்ட மாலைகளையும் நீர்,Neer - திருமஞ்சனத் தீர்த்தத்தையும் சாந்தம்,Saantham - சாத்துப் படியையும் புகையோடு,Pugaiyodu - தூபத்தையும் ஏந்தி,Aendhi - கையிலேந்திக்கொண்டு வந்து வணங்கினால்,Vananginaal - தொழுதால், நினைத்த எல்லாம் பெருள்கட்கும்,Ninaitha ellaam perul katkum - நினைக்கப்பட்ட ஸகல பதார்த்தங்களுக்கும் வித்து ஆய்,Vitthu aay - மூலமாகி முதலில் சிதையாமே,Mudhalil sidhaiyame - ஸ்வரூப விகாரம் பிறவாதபடி மனம் செய் ஞானத்து,Manam sei jnanathu - மனத்தினால் செய்யப்பட்ட ஸங்கல்ப ரூபமான ஞனாத்தை யுடைய உன்,Un - உன்னுடைய பெருமை,Perumai - பெருமையானது மாசு உணாதோ,Maasu unaadho - அழுக்கடையாதோ? |
| 2721 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ் இரண்டு பாட்டிலும் எல்லை கடந்த நைச்சியத்தை அநுஸந்தித்து அகலப் பார்த்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! நீர் இங்ஙனம் நம்முடைய மேன்மையைப் பார்த்து நெகிழ நினைத்தல் தகுமோ? நம்முடைய மேன்மையை மாத்திரமேயோ நீர் பார்ப்பது? நாம் எல்லாரோடும் கலந்தும் தாழ நின்றும் பொருந்தும் படியான சீலகுணத்தையும் பார்க்கவேண்டாவோ?’ என்று தனது சீலகுணத்தைக் காட்டும் முகமாக உலகளந்த வரலாற்றை நினைப்பூட்ட, அதனை அநுஸந்தித்து அகலவும் மாட்டாமல் அணுகவும் மாட்டாமல் நடுவே நின்று பேசிப் போது போக்குகிறபடியாய்ச் செல்லுகின்றது இப்பாசுரம். 3 | மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும் நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன் சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3 | மா யோனிகள் ஆய்,Maa yonigal aay - பெருமை யுள்ள பிறப்பை யுடையவர்களாய்க் கொண்டு நடை,Nadai - ஸ்ருஷ்டி முதலான வியாபாரங்களை கற்ற,Katra - அறிந்திருக்கிற வானோர்,Vaanor - தேவர்களும் முனிவரும்,Munivarum - ரிஷிகளும் பலரும்,Palrum - மற்றும் பலருமாகிய யோனிகளை,Yonikalai - காரண பூதர்களான பிராணிகளை நீ படை என்று,Nee padai endru - நீ படைக்க கடவாயென்று நிறை நான் முத்னை படைத்தவன்,Nirai naan mudhnai padaithavan - (ஞான சக்திகள்) நிறைந்த சதுர்முகனை ஸ்ருஷ்டித்தவன் எல்லா அறிவுக்கும் சேயோன்,Ella arivukkum seyon - எல்லா ஞானத்துக்கும் எட்டாதவன் திசைகள் எல்லாம்,Thisaigal ellaam - ஸகல லோகங்களையும் திரு அடியால்,Thiru adiyaal - திருவடியினால் தாயோன்,Thaayon - அளந்தவன் எல்லாவெவ் வுயிர்க்கும்,Ellavev uyirkkum - எவ் வகைப் பட்ட ஸகலமான பிராணிகளுக்கும் தாயோன்,Thaayon - தாயைப் போன்றவன்; தான்,Thaan - இப்படிப் பட்ட எம்பெருமான் ஓர் உருவனே,Oar uruvane - (ஸுசீல்ய மாகிற) ஒரு படியை யுடையவனா யிருக்கின்றானே! |
| 2722 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (ஆழ்வார் நைச்சியாநுஸந்தானம் பண்ணி அகல நினைத்தது கீழ்ப்பாட்டில் சிறிது தணியத் தொடங்கிற்று; அதைக்கண்ட சிலர் ‘ஆழ்வீர் இனி நீர் என் செய்வதாக நினைக்கிறீர்; அணுகப் பார்க்கிறீரோ?’ அகலப் பார்க்கிறீரோ?” என்று கேட்க நான் அகல நினைத்தாலும் ஸ்வாமியான அவன் விடுவதாக இல்லையே; அவன் ஒன்றாலொன்று குறைவில்லாதவனாயிருந்து வைத்தும் ஸ்ருஷ்டி முதலான க்ருஷிகளைப் பண்ணி ஒரு பொருளாகக் கொண்ட பின் நான் அகல்வேனென்றாலும் தன் ஸௌசீல்ய குணத்தினால் என்னை விடமாட்டாதவனாயிரா நின்றானேயென்கிறார்) 4 | தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும் வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –1-5-4 | தான்,Thaan - பிரம ருத்ராதிகளொருவருமின்றி ஒருவனேயாகி நின்ற தான் ஓர் உருவே,Or uruve - ஓருருவமுடையனாய்க் கொண்டே தன்னில்,Thannil - இப்படி மூவகைக் காரணமான தன் ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்திலே மூவர் முதலாய வானோர்,Moovar mudhalaaya vaanor - பிரம்மன் சிவன் இந்திரனாகிய மூவர் முதலான தேவர்களும் முனிவரும்,Munivarum - ரிஷிகளும் பலரும்,Palrum - பல சேதனர்களும் மற்றும்,Matrum - மற்ற மானிட சாதியும் மற்றும்,Matrum - மற்ற மிருகம் பறவை முதலான முற்றும் ஆய்,Mutrum aay - எல்லாமுமாகி தான்,Thaan - இப்படி ஸங்கல்பத்தோடு கூடி யிருக்கிற தான் தனி,Thani - நிமித்த காரணம் வேறு அல்லாமையால் தனியனான வித்து ஆய்,Vitthu aay - உபாதான காரணமாய்க் கொண்டு தன்னுள்ளே,Thannullee - தனக்குள்ளே ஓர்,Or - ஒப்பற்ற பெரு நீ,Peru nee - மஹத்தான அர்ணவத்தை தோற்றி,Thootri - தோன்றுவித்து அதனுள்,Adhanul - அதிலே கண் வளரும்,Kan valarum - நித்திரை செய்கிற வைகுந்தன்,Vaikundhan - பரமபத நாதன் வானோர் பெருமான்,Vaanor perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவன் மா மாயன்,Maa Maayan - மிகவும் ஆச்சரிய குண சேஷ்டிதங்களை வுடையவன் எம் பெருமான்,Em perumaan - எனக்கு ஸ்வாமி. |
| 2723 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இப்பாட்டுக்கு இரண்டுவகையான அவதாரிகை கூறுவர்; முதலிற் பண்ணின நைச்சியாநுஸந்தானம் தலை மடிந்து எம்பெருமான் விஷயத்திலே சிறிது ஆபிமுக்கியத்தைக் கீழ்ப் பாசுரத்திற்காட்டின ஆழ்வார் என்னை ஏவி அடிமை கொள்ளவேணுமென்று இப்பாட்டில் பிரார்த்திக்கின்றாரென்பது ஒரு அவதாரிகை ஆழ்வார்க்கு இப்போதுண்டான ஆபிமுக்கியம் நிலைத்திருக்கவேணுமென்றும். இவரைத் துடிக்கவிட்டே சேர்த்துக்கொள்ள வேணுமென்றுங் கருதிய எம்பெருமான் முகங்காட்டாதே மறைய நிற்க, அது தாளாமல் ‘அருவாய்’ என்று பிரார்த்திக்கிறாரென்பது மற்றொரவதாரிகை.) 5 | மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5 | மான் ஏய் நோக்கி மடவாளை,Maan Aye nokki madavaalai - மானை நிகர்த்த பார்வையை யுடையவளாகிய பெரிய பிராட்டியை; மார்பில் கொண்டாய்,Maarbil kondai - திரு மார்பிலே உடையனாய் (அது காரணமாக) மாதவா,Madhava - மாதவனென்ற திரு நாமம் பெற்றவனாய் கோவிந்தா,Govindha - கோவிந்தனே! வான் ஆர் சோதி,Vaan aar sodhi - வானுலகம் இடமடையும் படியான ஒளியை யுடைய மணிவண்ணா,Manivanna - நீலமணி போன்ற நிறமுடையவனே! மதுசூதா,Madhusoodha - மதுவென்னு மசுரனைக் கொன்றவனே கூனே சிதையா,Koone sidhaiya - (கூனியின்) கூன் ஒன்றே நிமிரும்படி (மற்ற ஒரு அவயவத்திற்கும் வாட்ட முண்டாகாதபடி) உண்டை வில் நிறத்தில்,Undai vil Nirathil - சுண்டு வில்லை நிமிர்க்கிற ரீதியிலே (சிறிதும் சிரமமின்றி) தெறித்தாய்,Theirthai - நிமிர்த்தவனே! நீ,Nee - நீ உன்,Un - உன்னுடைய தேனே மலரும் திரு பாதம்,Thene malarum thiru paadham - தேனோடு கூடி மலர்கின்ற திருவடித் தாமரைகளை வினையேன்,Vinaiyaen - பாபியான நான் சேரும் ஆறு,Seerum aaru - கிட்டுப் படியாக அருளாய்,Arulaay - கிருபை பண்ண வேணும் |
| 2724 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இப்பாசுரமும் கீழ்ப்பாசுரத்தோடு ஒக்கும். கீழ்ப்பாட்டிலுள்ள ‘நீயருளாய உன் தேனே மலருந் திருப்பாதஞ் சேருமமாறு வினையேனே’ என்பதை இப் பாட்டோடு கூட்டி உரைத்தருளினர். திருக்குருகைப் பிரான்பிள்ளான். ஆதலால் கீழ்ப்பாட்டில் அவதாரிகையே இதற்குமாகும்.) (நைச்சியாநுஸந்தானம்பண்ணி அகன்றது தவிர்ந்து அணுகி அபேக்ஷித்த போதே எம்பெருமான் முகங்காட்டாமையாலே அவனுடைய குண சேஷ்டிதங்கள் நினைவுக்கு வந்து நலிய, திருவுள்ள முடைந்து பேசுகிறார் என்னவுமாம்) 6 | வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6 | வினையேன்,Vinaiyaen - பாபியான என்னுடைய வினை தீர்,Vinai theer - பாபத்தை ஒழிப்பதற்குரிய மருந்து ஆனாய்,Marundhu aanaay - ஔஷமாயிருப்பவனே! விண்ணோர் தலைவா,Vinnor thalaiva - நித்யஸூரி நாதனே! கேசவா,Kesava - கேசவனே! மனைசேர் ஆயர் குலம் முதலே,Manaicher aayar kulam mudhale - குடிசைகளில் பொருந்திய இடையருடைய குலத்திற்கு முதல்வனானவனே! மாமாயனே,Maamaayanee - மிகுந்த ஆச்சரிய குணசேஷ்டிதங்களையுடையவனே! மாதவா,Madhava - மாதவனே! சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும்,Sinai aye thalaiya mara marangal eyzhum - கிளைகளோடு சேர்ந்து தழைகள் பொருந்திய ஆச்சாமரங்களை÷ழையும் (ஸ்ரீராமாவதாரத்தில்) எய்தாய்,Eydhaay - (ஓர் அம்பினால்) துளைபடுத்தினவனே! கிரீதரா,giridhara - ஸ்ரீதரனே! இனையாய்,Inaiyaay - இப்படிப்பட்ட ஸ்வரூபத்தை யுடைவனே! இனைய பெயரினாய்,Inaiya peyarinaay - இப்படிப்பட்ட திருநாமங்களை யுடையவனே! என்று,Endru - என்று சொல்லி அடியேன் நைவன்,Adiyaen naivan - நான் அழியா நின்றேன் |
| 2725 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டில் ‘நைவன்’ என்ற ஆழ்வாரை நோக்கின எம்பெருமான் ‘ இனி நாம் இவர்க்கு முகங்காட்டாதிருந்தால் இவர் முடிந்துவிடக்கூடும்’ என்றெண்ணி இவர்க்கு முகங் காட்டுவதாகத் திருவுள்ளம்பற்ற, அஃதறிந்த ஆழ்வார் பின்னையும் அவனது பெருமையையும் தமது சிறுமையையும் சிந்தித்துப் பின்வாங்குதலைத் தெரிவிக்கும் இந்தப் பாசுரம்.) 7 | அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7 | சிறிய ஞானத்தன்,Siriya gnanathan - அற்ப ஞானத்தை யுடையவனாகிய அடியேன்,Adiyen - நான் காண்பான்,Kaanbaan - காணும் பொருட்டு அலற்றுவன்,Alaattruvan - கூவுகின்றேனே! இதனில் மிக்கு,Idhanil mikku - இதனிலும் மேற்பட்டு ஓர் அயர்வு உண்டே,Or aiarvu undae - ஒரு அவிவேகமுண்டோ? |
| 2726 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இப் பாட்டின் ஸந்நிவேசத்தை ஊன்றி நோக்குமிடத்து எம்பெருமானுக்கும் ஆழ்வார்க்கும் விநோதமான வொரு ஸம்வாதம் நிகழ்ந்தமை நன்கு புலப்படும். கீழ்ப்பாட்டில் எல்லைகடந்த நைச்சியாநுஸந்தானம் பண்ணிப் பின்வாங்கின ஆழ்வாரை எம்பெருமான் நல்லதொருபாயத்தினால் தன்னோடு பொருந்தவிட்டுக் கொள்ளவேணுமென்று பார்த்து அவரோடே பேசத் தொடங்கினான்.) 8 | உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும் அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8 | மாயோனே,Maayone! - ஆச்சரிய குண சேஷ்டிதங்களை யுடையவனே! உலகு ஏழ்,Ulagu yezl - ஏழுலகங்களையும் முன்னமே உண்டாய்,Munnamae undaay - முற்காலத்திலே திருவயிற்றிலே வைத்தாய்; உமிழ்ந்து,Ummilntu - அவற்றை வெளிப்படுத்தி சிறு மனிசர்,Siru manisar - அற்ப மனிதருடைய உவலை,Uvalai - அருவருப்பான யாக்கை நிலை,Yaakkai nilai - உடம்பினது நிலைமையை எய்தி,Eythi - அடைந்து மாயையால் புக்கு,Maayaiyaal pukku - மாயையினால் இவ்வுலகில் வந்து சேர்ந்து வெண்ணெய்,Vennney - வெண்ணெயை உண்டாய்,Undaay - அமுது செய்தாய்; மண் தான் சோர்ந்தது உண்டேனும்,Mann thaann soarendhadhu undaenum - (திருவயிற்றிலே) மண் சட்டிகள் மிச்சப்பட்டிருந்தாலும் மனிசர்க்கு,Manisarkku - மனிதர்கட்டு ஆகும்,Aagum - உண்டாகக்கூடியதான பீர்,Beer - வெள்ளை மாந்தம் சிறிதும்,Sirithum - அற்பமும் அண்டாவண்ணம்,Andhavaannam - சேராதிருக்கும்படி மண் கரைய,Mann karaiya - அந்த மண்கட்டிகள் கரைவதற்கு நெய் ஊண் மருந்தோ,Nei oon marundho - நெய் அமுது செய்தது மருந்தோ? (அல்ல.) |
| 2727 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டில் எம்பெருமான் வெண்ணெயின் ப்ரஸ்தாவமெடுத்து ஆழ்வார் வாயை மூடுவித்தானே; அதற்குமேல் ஆழ்வார்- ‘எம்பெருமானே! திருவாய்ப்பாடியில் வெண்ணெய் உனக்குப் பரமயோக்யமென்பது மெய்யே; ஒப்பற்ற பரிவுடைய யசோதைப்பிராட்டி முதலானாருடைய வெண்ணை யாகையாலே அஃது உனக்கு அமுதமாயிருக்கும்; பாபியான என்னுடைய ஸம்பந்தம் உனக்கு விஷயமாயிருக்குமே, என்றார்; அது கேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்! அப்படி விஷமானாலும் நமக்குக் குறையில்லை காணும்; பூதனையின் கதை உமக்குத் தெரியாமையில்லையே; அவளுடைய விஷமும் நமக்கு அமுதமாயிற்றன்றோ; அதுபோலவே உம்மால் விஷமென்று நினைக்கப்படுவதும் எனக்கு அமுதமேயாகத் தடையில்லை’ என்று சொல்லிக் கொண்டு ஆழ்வாரது திருமேனியை மேல் விழுந்து கைக்கொள்ள 9 | மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும் தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9 | தீய,Theya - கொடிய நினைவை யுடையவளாய் அலவலை,Alavalai - பஹு ஜல்பிதங்களை யுடையவளாய் பெரு மா வஞ்சம்,Peru maa vanjam - மிகப் பெரிய வஞ்சகையான பேய்,Pei - பூதனை யானவள் வீய,Veya - முடியும்படி தூய் குழவி ஆய,Thooy kulavi aaya - பசுங்குழந்தையாகி விடம்பால் அமுது ஆ,Vidampal amuthu aa - (அந்தம் பூதனையின்) விஷங்கலந்த பால் அமிருதமாம்படி அமுது செய்திட்ட,Amuthu seydhita - அமுது செய்த மாயன்,Maayan - ஆச்சரிய ஸ்வபாவனுடன் வானோர் தனி தலைவன்,Vaanor thani thalaivan - நித்ய ஸூரிகளுக்கு அத்விதீய நாதனும் மலராள் மைந்தன்,Malaral maindhan - திருமகள் கொழுநனும் எவ் உயிர்க்கும் தாயோன்,Ev uyirkkum thaayon - எல்லா வுயிர்களுக்கும் தாய் போன்றவனும் தம்மான்,Thammaan - தனக்குந்தானே ஸ்வாமியும் என் அம்மான்,En ammaan - எனக்கு ஸ்வாமியும் அம்மா மூர்த்தியை,Amma moorthiyai - அப்படிப்பட்ட மேலான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமான பெருமானை சார்ந்து,Saarndhu - கிட்டி மாயோம்,Maayom - இருவரும் மாயாது வாழக்கடவோம். |
| 2728 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டைத் திருச்செல்வி சார்த்தின் எம்பெருமான் “அம் மாமூர்த்தியைச் சார்ந்து மாயோம்” என்ற வுறதியையறிந்து திருவுள்ளம் பூரித்து, எப்போதும் விட்டுப் பிரியகில்லாத திருநாட்டிலே இவ்வாழ்வாரைக் கொண்டுபோய் நித்யாநுபவம் பண்ணக்கருதி, ஒரு புதுமையுஞ் செய்ய வேண்டாதபடியான பரமபதத்தையும் தமக்காக அவன் கோடிக்கப்புக்கதைக் கண்டு ஈதென்ன வ்யாதோஹமோ! என்று ஈடுபடுகிறாரிதில்.) 10 | சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10 | சார்ந்த,Saarndha - சேர்ந்திருக்கிற இரு வல் வினைகளும்,Iru val vinai kalum - (புண்ய பாப ரூபங்களான இருவகைப் பட்ட வல் வினைகளையும் சரிந்து,Sarindhu - தொலைந்து மாயம் பற்று அறுத்து,Mayam patru aruthu - அஜ்ஞாந காரியமான விஷய ஸங்கத்தையும் தவிர்த்து தன்பால் தீர்ந்து மனம் வைக்க திருத்தி,Thanpal theerndhu manam vaikka thiruthi - தன்னிடத்திலே உறுதி கொண்டு நெஞ்சைப் பொருந்த வைக்கும்படி என்னைத் திருத்தி வீடு திருத்து வான்,Veetu thiruthu vaan - (எனக்குத் தருவதாக மோக்ஷ ஸ்தானத்திலும் சில : திருத்தங்களைச் செய்து ஒழுங்கு படுத்துவதாக ஆரம்பித்துவிட்டான்; ஆர்ந்த,Aarndha - பரி பூர்ணமான ஞானம் சுடர் ஆகி,Gnaanam sudar aagi - (ஸ்வயம் ப்ரகாச) ஞான வொளியை யுடையனாய் அகலம் கீழ் மேல் அளவு இறந்து,Agalam keel mel alavu irandhu - சுற்றும் கீழும் மேலும் எல்லை யற்று எங்கம் வியாபதித்தவனாய் நேர்ந்த,Neerndha - மிகவும் நுட்பமான உருஆய் அரு ஆகும் இவற்றின்,Uraay aru aagum ivattrin - அசித்தும் சித்துமாகிற இந்தப் பொருள்களுக்கு உயிர் ஆம்,Uyir aam - அந்தர்யாமியாகி நிற்கிற நெடு மால்,Nedumal - வ்யாமோஹமே வடிவான எம்பெருமான். |
| 2729 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்பார்க்கு ஒருவகைத் துன்பமும் நேரிடாதென்று பயனுரைத்துத் தலைகட்டுகிறார். எம்பெருமான் ஸேவை ஸாதிக்கவர ‘நான் அயோக்யன்’ என்ற அகன்று தாம் பட்ட வருத்தங்கள் இத் திருவாய்மொழி கற்பார்க்கு உண்டாக்கமாட்டாவென்றவாறு.) 11 | மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன் பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின் பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11 | மாலே,Maale - பெரியோனே! மாயம் பெருமானே,Mayam perumane - ஆச்சரிய குண நிதியே! மா மாயனே,Ma mayane - மஹத்தான ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே! என்று என்று,Endru endru - என்று இங்ஙனம் பல விதங்களான திருநாமங்களைச் சொல்லி மாலே ஏறி,Maale yēri - பித்தம் பிடித்து மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன்,Maal arulaal mannu kurukoor sadagopan - ஸர்வேச்வரனது க்ருபையினால் பொருந்தப் பெற்ற திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் பால் ஏய் தமிழர்,Paal aay thamizhar - (அருளிச் செய்ததான) பாலுக்குச் சமானமான இனிமை யுள்ள தமிழில் வல்லவர்களென்ன இசைகாரர்,Isaikaarar - இசையறிந்து பாடவல்லவர்களென்ன பத்தர்,Pathtar - பக்திமான்களென்ன ஆகிய இவர்களல்லாரும் பரவும்,Paravum - கொண்டாடும்படியமைந்த ஆயிரத்தின் பால்,Aayirathin paal - ஆயிரம் பாட்டினுள் பட்ட,Patta - தோன்றின இவை பத்தும்,Ivai pattum - இந்தப் பத்துப்பாட்டையும் வல்லார்க்கு,Vallarkku - ஓத வல்லவர்களுக்கு பரிவது இல்லை,Parivathu illai - யாதொரு துக்கமும் உண்டாக மாட்டாது. |