Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: வார்கடா (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3480திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (குவலயாபீட வதம் மல்ல நிரஸநம் முதலான வீரச் செயல்களைச் செய்த சீர் கொள்சிற்றாய னெழுந்தருளியிருக்குமிடமான திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றுப்பதி எமக்கு நிர்ப்பயமான புகலிடமென்கிறார்.) 1
வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1
வார் கடா அருவி,Vaar kada aruvi - பாய்கின்ற மதநீராகிற அருளிப் பெருக்கையடைய
யானை மா மலையின்,Yaanai maa malaiyin - குவலயாபீட யானையாகிற பெரிய மலையினுடைய
மருப்பு,Maruppu - இரண்டு தந்தங்களாகிற
இணை குவடு,Inai kuvadu - இரண்டு சிகரங்களை
இறுத்து,Iruthu - முறித்து
உருட்டி,Urutti - (யானையை) முடித்தொழித்து
ஊர் கொள் திண்பாகன் உயர் செகுத்து,Oor kol thinpaagan uyar seguthu - யானையை நடத்த வல்ல சதிருடையனான பாகனது உயிரையும் முடித்து
அரங்கில்,Arangil - அரண்மனை வாசலில்
மல்லரை கொன்று,Mallarai konru - (சாணூர முஷ்டிக) மல்லர்களையும் தொலைத்திட்டு
சூழ் பரண் மேல் போர் கடாவு அரசர் புறக்கிட,Sool paran mel poor kadavu arasar purakkida - சுற்றுமுண்டான மஞ்சத்தின் மேலே நின்ற ரணவீரர்களான அரசர்கள் முதுகு காட்டியோடும்படியாகப் பண்ணி
மாடம் மீமிசை,Maadam meemisai - மாடத்தின் மேல் நிலத்திலேயிருந்த
கஞ்சனை,Kanjanai - கம்ஸனை
தகர்த்த,Thakartha - தொலைத்திட்ட
சீர் கொள் சிறு ஆயன்,Seer kol siru aayan - வீர ஸ்ரீயையுடைய கோபாலகிருஷ்ணன் எழுந்தருளியிருக்குமிடமான
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு,Thiruchchengundrooril thiruchchiraaru - திருச்செங்குன்றூர்த்திருச் திருச்சிற்றாறென்கிற திருப்பதியானது
எங்கள் செல் சார்வு,Engal sel saarvu - எங்களுக்குச் சென்று சேரும் புகலிடமாகும்.
3481திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஜகத் ஸ்ருஷ்ட்யாதி சமர்த்தனாய் திருச் செங்குன்றூரிலே நின்று அருளின எம்பெருமான் அல்லது எனக்கு நல்ல துணை இல்லை என்கிறார்.) 2
எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2
உங்கள் செல் சார்வு,Ungal sel saarvu - யாம் சென்று சேரும் புகலிடமாயும்
யாமுடை அமுதம்,Yaamudai amudham - நமக்குப் பரமபோக்யனாயும்
இமையவர் அப்பன்,Imayavar appan - தேவாதி தேவனாயும்
என் அப்பன்,En appan - எனக்கு ஸ்வாமியாயும்
பொங்கு மூ உலகும்,Pongu moo ulagam - பரந்த மூவுலகத்தையும்
படைத்து அழித்து அளிக்கும்,Padaiththu azhiththu alikkum - ஸ்ருஷ்டித்து ரக்ஷித்து ஸம்ஹரிப்பானாயும்
பொருந்தும் மூ உருவன்,Porundhum moo uruvan - மேலே சொன்ன முச்செயல்களுக்கும் பொருத்தமாக மூர்த்தித்ரயஸ்வரூபியாயும்
எம் அருவன்,Em aruvan - எமக்கு உயிரானவனாயும்
செம் கல் உகளும் தேம் பனை புடை சூழ்,Sem kal ukalum them panai pudai sool - செவ்விய மீன்கள் துள்ளும்படி தேன்மிக்க நீர் நிலங்கள் சூழ்ந்த
திருச் செங்குன்றூர் திருச்சிற்றாறு அங்கு,Thiruchchengundroor thiruchchiraaru angu - திருச்சிற்றாரென்னும்பதியிலே
அமர்கின்ற,Amarginra - அமர்ந்திருப்பவனாயு மிருக்கின்ற
ஆதியான் அல்லால்,Aadhiyaan allaal - ஆதிப்பிரானல்லது
என் அமர் துணைமற்று யாவர்,En amar thunaimatru yaavar - எனக்குற்ற துணை வேறுயார்? (யாருமிலர்)
3482திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஸ்ரீ வராஹமாய் பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்து அருளி திருச் செங்குன்றூரில் நின்று அருளின எம்பெருமானுடைய திருவடிகள் அல்லது வேறு சரணம் எனக்கு மநோ ரதத்திலும் இல்லை என்கிறார்.) 3
என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3
மையவர் பெருமான் என் அமர் பெருமான்,Maiyavar perumaan en amar perumaan - நித்ய ஸூரிநாதனாப் போலே என்க்குற்ற நாதனாய்
இரு நிலம் இடந்த எம்பெருமான்,Iru nilam idandha emperumaan - மாநிலத்தைப் பிரளயாபத்திலிருந்து இடந்தெடுத்த எமது நாதனாய்
முன்னை வல் வினைகள் முழுது உடன்மாள,Munnai val vinaigal muzhudhu udanmaala - அநாதியான வலிய தீவினைகளெல்லாம் ஒரு நொடிப் பொழுதில் மாளும்படியாக
என்னை ஆள்கின்ற எம்பெருமான்,Ennai aalkinra emperumaan - என்னை அடிமை கொண்டருளுகிற பெருமையை யுடையனாய்
தென் திசைக்கு அணி கொள்,Then dhisakku ani kol - தென் திசைக்கு அலங்காரமாகக் கொள்ளப்படுவதான
திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்ங்கரை மீபால் நின்ற,Thiruchchengundrooril thiruchchiraarangarai meepaal ninra - திருச்சிற்றாறென்னும் திருப்பதியின் மேலேப்பக்கதில்லெழுந்தருளி யிருப்பவனான
எம்பெருமான்,Emperumaan - அஸ்மத்ஸ்வாமியினுடைய
அடி அல்லால்,Adi allaal - திருவடிகளைத் தவிர்த்து
எனக்கு நினைப்பிலும் பிறிது சரண் இல்லை,Enakku ninaippilum piridhu saran illai - என்னுடைய மனோரது தசையிலும் வேறொரு புகல் இல்லை.
3483திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (மஹாபலியின் வலியை யடக்கியும் கடல் கடைதலாகிற அரிய பெரிய காரியத்தைச் செய்தும் அடியார்களது துன்பங்களைத் தொலைத்துத் திருச்சிற்றாற்றுப் பதியிலே நின்றருளினவனது திருவடிகளல்லது வேறெனக்கு அரணில்லை யென்கிறார்.) 4
பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4
பெரிய மூ உலகும் நிறைய,Periya moo ulagamum niraiya - இடமுடைத்தான மூவுலகும் நிறையும்படியாக
பேர் உருவம் ஆய் நிமிர்ந்த,Per uruvam aai nimirndha - பெரிய வடிவையுடையனாய்க் கொண்டு வளர்ந்த
குறிய மாண் எம்மான்,Kuriya maan emmaan - வாமனப் பிரமசாரியான என் ஸ்வாமியாய்
குரை கடல் கடைந்த,Kurai kadal kadaintha - கோஷிக்கின்ற கடலைக் கடைந்தவனாய்
கோலம் மாணிக்கம் என் அம்மான்,Kolam maanikam en ammaan - அழகிய ரத்னம் போன்ற திருவடிவை எனக்குக் காட்டித்தந்தருளின உபகாரகனாய்.
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி,Seri kulai vaazhai kamugu thengu ani - செறிந்த குலைகளையுடைய வாழை கமுகு தெங்குகளின் திரள்கள் சூழ்ந்த
திருச் செங்குன்றூ திருச்சிற்றாறு,Thiruchchengundroo thiruchchiraaru - திருச்சிற்றாற்றுத் திருப்பதியிலுள்ளவர்கள்
அறிய,Ariya - தன்னை உள்ளபடியறியும்படி
மெய்ம்மையே நின்ற,Meimmaye ninra - உண்மைப் பெருமையோடே நின்றருளாமவனான
எம்பெருமான்,Emperumaan - அஸ்மத்ஸ்வாமியினுடைய
அடி இணை அல்லது,Adi inai alladhu - திருவடியிணைகளல்லது
எனக்கு ஓர் அரண்பிறிது இல்லை,Enakku or aranpiridhu illai - எனக்கு வேறொரு ரக்ஷகமுமில்லை.
3484திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (மற்றும்பல திருப்பதிகளா முண்டாயிருக்க, ஆழ்வீர்! நீர் சிற்றாற்றிலே இவ்வளவு நிர்ப்பந்தம் கொள்வதேன்? என்று சிலர் கேட்பதாகக் கொண்டு அதற்கு மறுமொழி கூறுகின்றாரிதில்.) 5
அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5
அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை,Alladhu or aranum avaniil veru illai - திருச்சிற்றாறு தவிர்ந்த மற்ற கோவில்களில் ரக்ஷகனாயிருக்கின்றவனும் அவனிற் காட்டில் வேறுபட்ட வனல்லன்,
அது பொருள் ஆகிலும்,Adhu porul aagilum - என்கிறவதுவே உண்மைப் பொருளானாலும்
என் ஆவி,En aavi - என் உயிரானது
அவனை அல்லது அமர்ந்து அணைகில்லாது,Avanai alladhu amarnthu anaikillaadhu - அத்திருச்சிற்றாறெம்பெருமானை யொழிய வேறொருவனைப் பொருந்தி விரும்பமாட்டாது,
ஆதலால்,Aadhalaal - ஆகையினாலே
அவன் உறைகின்ற,Avan uraikinra - அப்பெருமான் நித்யவாஸம் பண்ணுமிடமானதும்
நல்ல நான்மறையோர்,Nalla naanmairaiyor - வைதிகோத்தமர்கள்
வேள்வியுள் மடுத்த,Veliuyul madutha - யாகத்திலிட்ட ஹவிஸ்ஸுக்களிலுண்டான
நறு புகை,Naru pugai - பரிமளம் மிக்க புகையானது
விசும்பு ஒளி மறைக்கும்,Visumbu oli maraikkum - ஆகாசத்திலுள்ள (ஸூரியன் முதலிய) சுடர்ப்பொருள்களை மறைக்கும் படியாயுள்ளதும்
நல்ல நீள மாடம்,Nalla neela maadam - விலக்ஷணமாக வோங்கின மாடங்களையுடையதுமான
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு,Thiruchchengundrooril thiruchchiraaru - திருச்சிற்றாற்றுப் பதியானது
எனக்கு நல் அரண்,Enakku nal aran - எனக்கு நிர்ப்பயமான புகலிடம்
3485திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (பரிவர்களின் மிகுதியைக் காட்டும் பாசுரமிது. இப்பாட்டுக்கு மூன்றாமடி உயிரானது, * மனக்கொள்சீர் மூவாயிரவர் வண் சிவனுமயனுந்தானு மொப்பார்வாழ் * என்பது. எம்பெருமானுடைய திருக்கலியாண குணங்களை மனத்திலே கொண்டு “இக்குணங்களை யுடையானுக்கு என்வருகிறதோ“ என்று அஸ்தாநே பயசங்கை பண்ணி வர்த்திப்பார் மூவாயிரவருளராம், அதைக்காட்டி எம்பெருமான் ஆழ்வாரைத் தேற்றுவித்தபடியாலே அதைப் பாசுரத்திலே கூட்டி அநுஸந்தித்தாராயிற்று.) 6
எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளியம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6
எனக்கு நல் அரணை,Enakku nal aranai - எனக்கு நிர்ப்பயமான புகலிடமாயும்
எனது ஆர் உயிரை,Enadhu aar uyirai - என்னுடைய ஸத்தையை நிர்வஹித்துப் போருமவனாயும்
இமையவர்தந்தை தாய் தன்னை,Imayavarthanthai thaai thannai - நித்ய ஸூரிகளுக்கும் ஸகலவித பந்துவானவனாயும்
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை,Thanakkum than thanmai arivu ariyaanai - ஸர்வஜ்ஞனான தனக்கும் தனது தன்மை அறியக்கூடாமலிருப்பவனாயும்
தட கடல் பள்ளி அம்மானை,Thada kadal palli ammaanai - விசாலமான கடலிலே பள்ளி கொள்பவனாயுமுள்ள ஸர்வேச்வரனை
மனம் கொள் சீர்,Manam kol seer - மனத்திலே கொண்ட பகவத் குணங்களையுடையவர்காளன
மூவாயிரவர்,Moovaayiravar - மூவாயிர மந்தணர்கள்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார்,Van sivanum ayanum thaanum oppaar - சிவனையும் பிரமனையும் திருமாலையும் மொத்தவர்களாய்க் கொண்டு
வாழ்,Vaazh - வாழுமிடமாய்
கனம் கொள் திண்மாடம்,Kanam kol thinmaadam - செறிந்து திண்ணிதான மாடங்களையுடைத்தான
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற தனுள்,Thiruchchengundrooril thiruchitraara thanul - திருச்சிற்றாற்றுப் பதியிலே
கண்டேன்,Kandaen - ஸேவிக்கப்பெற்றேன்
3486திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருச் செங்குன்றூரில் நின்று அருளின சீர் கொள் சிற்றாயன் -ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி தன் திரு அழகோடு என் இருதயத்திலே வந்து புகுந்தான் -என்கிறார்.) 7
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7
திருச்செங்குன்றூரில திருச்சிற்றாறதனுள் கண்ட அத்திருவடி,Thiruchchengundrooril thiruchchiraarathanul kanda aththiruvadi - திருச்சிற்றாற்றுப்பதியிலே நான் காணப்பெற்ற அந்த பொருமானானவன்,
செய்ய கமலம் திருக்கண்ணும்,Seyya kamalam thirukkanum - செந்தாமரை போன்ற திருக்கண்ணும்
செம் வாயும்,Sem vaayum - சிவந்த திருப்பவளமும்
செம் அடியும்,Sem adiyum - சிவந்த திருவடிகளும்
செய்ய கைவும்,Seyya kaivum - சிவந்த திருக்கைகளும்
செய்ய கமலம் திரு உந்தியும்,Seyya kamalam thiru undiyum - சிவந்த கமலத்தையுடைத்தான திருநாபியும்
கமலை செய்ய மார்பும்,Kamalai seyya maarbum - பெரிய பிராட்டியாரை யுடைத்தாய்ச் சிவந்ததான திருமார்வும்
செய்ய உடையும்,Seyya udaiyum - திருப்பிதகவாடையும்
ஆரமும்,Aaramum - கோலமாமணியாரங்களும்
படையும்,Padaiyum - திவ்யாயுதங்களும்
திகழ,Thigazha - விளங்க
என்றும் என் சிந்தை உளான்,Endrum en sindhai ulaan - எந்நாளும் என்னெஞ்சினுள்ளே யுறைகின்றான்.
3487திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (இப்படி யென்னெஞ்சிலே திகழாநிற்கிற திருச்சிற்றாற்றெம்பெருமானைப் புகழும்படியறிகின்றிலே னென்கிறார்.) 8
திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8
என் சிந்தையுள் திகழ இருந்தானை,En sindhaiyul thigazha irundhaanai - என்னெஞ்சினுள்ளே விளங்கிக் கொண்டிருப்பவனும்
நால் மறார் செழு நிலம் தேவர்,Naal maraar sezhunilam dhevar - நான்கு வேதங்களையு மோதின விலக்ஷண ப்ராஹமணர்கள்
திசை கை கூப்பி ஏத்தும் திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை யானை,Dhisai kai koopi aeththum thiruchchengundrooril thiruchchiraarangkai yaanai - திசைகள் தோறும் நின்று கைகூப்பித் துதிக்கும்படியான திருச்சிற்றாற்றுப் பதியிலுள்ளவனும்
புகர் கொள்வானவர்கள் புகல் இடம் தன்னை,Pugar kolvaanavargal pughal idam thannai - சிறந்த தேவர்களுக்கும் புகலிடமாயிருப்பவனும்
வன்கைய் அசுரர் வெம் கூற்றை,Vankaiy asurar vem kootrai - மிடுக்கரான அசுரர்களுக்கு வெவ்விய யமன் போன்றவனும்
பொருந்து மூ உலகும் படைப்போடு கெடுப்பு காப்பு அவன்,Porundhu moo ulagam padaipodu keduppu kaappu avan - தன்னோடு பொருந்திய மூவுலகத்தினுடையவும் ஸ்ருஷ்டி ப்ரளய ரக்ஷணங்களுக்குக் கடவனுமான பெருமானை
புகழும் ஆறு அறியேன்,Pugazhum aaru ariyaen - புகழும் விதம் இன்னதென்ற்று அறிகின்றிலேன்
3488திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (பிரமன் முதல் எறும்பளவாகவுள்ள ஸகல ஜந்துக்களினுடையவும் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணுவான் திருச்சிற்றாற்றெம்பெருமானே யென்னுமிடம் அர்த்த வாதமன்று, மெய்யே யென்கிறார்.) 9
படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9
கொடை பெரு புகழார்,Kodai peru pugazhaar - ஓளதாரியத்தால் மிக்க புகழையுடையராய்
இனையர்,Inaiyar - இன்னாரின்னா ரென்று ப்ரஸித்தி பெற்றவர்களாய்
தன்னானார்,Thannaanar - எம்பெருமான் றன்னோடொத்த ஜ்ஞாந சக்திகளை யுடையராயிருக்குமவர்கள்
கூரிய விச்சையோடு ஒழுக்கம் நடை பலி,Kooriya vichchaiyodu ozhukkam nadai bali - கூர்மையான ஞானமும் (அதற்கு தக்க) அனுட்டானமும் நித்ய்யாத்ரையான பகவதாராதனமும் இயல்வாகப் பெற்றிருக்குமிடமான
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதன்,Thiruchchengundrooril thiruchchiraaru amarnthu naadhan - திருச்சிற்றாற்றுப்பதியில்
படைப்பொடு கெடுப்பு காப்பு அவன்,Padaipodu keduppu kaappu avan - ஸ்ருஷ்டி ஸம்ஹார்ரக்ஷணங்களுக்கு நிர்வாஹகனாயிருக்குமவன்
பிரமன் பரம்பரன்,Brahman paramparan - ப்ரஹ்மஸ்வரூபியா யிருக்கிற பராத்பரன்
சிவபிரான் அவனே,Sivaabiraan avane - சிவஸ்வரூபியுமானவன்
இடை புக்கு,Idai pukku - மேற் சொன்ன இருவர்க்கு மிடையிலே ரக்ஷகனாய்ப் புகுந்து
ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே,Or uruvum ozhivu illai avane - ஒரு பதார்த்தைத்தையும் விட்டு நீங்காமல் ஸர்வாந்தர்யாமி யாயிருக்குமவன்
யாவையும் தானே,Yaavayum thaane - சேதநாசேதந விபாகமின்றிக்கே எல்லாம் தன்னதீன மாயிருக்கப் பெற்றவன்
புகழ்வு இல்லை,Pugazhvu illai - இதில் அதிசயோக்தியானது ஒன்றுமில்லை.
3489திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (ஸர்வேச்வரனாயிருந்து வைத்து ஸகல ப்ராணிகளும் ஆச்ரயிக்கலாம்படி திருச்சிற்றாற்றுப்பதியிலே நின்றருளும் பெருமானைப் பெற்றேனென்கிறார்.) 10
அமர்ந்த நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி
அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே–8-4-10
அமர்ந்த நாதனை,Amarnthu naadhanai - நாதனென்றால் தகும் தகுமென்னும்படியான நாதனாய்
அவர் அவர் ஆகி,Avar avar aagi - தன் பக்கலில் அர்த்திகளாக வருவாரெல்லார்க்கும் அபிமாரியாய்
அவர்க்கு அருள் அருளும் அம்மானை,Avarukku arul arulum ammaanai - அவர்கட்கு அபிஷ்டங்களை யளித்தருளும் ஸவாமியாய்
அமர்ந்த தண் பழனம்,Amarnthu than pazhanam - செறிந்து குளிர்ந்த நீர் நிலங்களையுடைய
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற் றங்கரையானை,Thiruchchengundrooril thiruchchiraar thangaraiyaanai - திருச்சிற்றாற்றுப் பதியிலெழுந்தருளியிருப்பவனுமாய்
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்,Amarnthu seer moovaayiravar vedhiyar - ஸ்ரீமான்களான மூவாயிரம் பிராமணர்களுக்கு வாஸஸ்தானமாய்
அவனி தேவர் வாழ்வு,Avani dhevar vaazhvum - நிலத்தேவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழுமிடமான அப்பதியிலே
அமர்ந்த மானோனை,Amarnthu maanonai - பொருந்தியெழுந்தருளியிருக்கு மாச்சர்ய பூதனுமாய்
முக்கண் அம்மானை நான் முகனை,Mukkan ammaanai naan muganai - சிவனுக்கு பிரமனுக்கும் அந்தர்யாமியுமான பெருமானை
அமர்ந்தேன்,Amarnthen - கிட்டப் பெற்றேன்.
3490திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (இத்திருவாய்மொழி கற்கைக்கு, ஸம்ஸார நிவ்ருத்தியையும் பரமபதப்ராப்தியையும் பயனாகவருளிச் செய்கிறார்.) 11
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11
தேனை நன் பாலை கன்னலை அமுதே,Thenai nan paalai kannalai amudhe - தேனும் பாலும் கன்னலும் அமுதும் போலப் பரமபோக்யனாய்
இருந்து உலகு உண்ட அம்மானை வானம் நான்முகனை,Irundhu ulagu unda ammaanai vaanam naanmuganai - கட்டளைப்பட்ட ஜகத்தைக் காத்தருளின பெருமானாய் வானுலகத்தவனான சதுர் முகனை
மலர்ந்த தண் கொப்பூழ் மலர் மிசை படைத்த மாயோனை,Malarndha than koppool malar misai padaitha maayoonai - மலர்ந்து குளிர்ந்த திருநாபிக்கமலத்திலே யுண்டாக்கின் ஆச்சரிய பூதனுமான
கோனை,Koanai - ஸர்வேச்வரனைக்குறித்து
வண் குருகூர் வண் சடகோபன்,Van kurukoor van sadagopan - ஆழ்வார்
சொன்ன ஆயிரத்துள்,Sonna aayiraththul - அருளிச்செய்த ஆயிரத்து னுள்ளும்
இப் பத்தும்,Eppaththum - இத்திருவாய்மொழியானது
வானின் மீது ஏற்றி,Vaanin meedhu aetri - பரமபதத்திலே ஏறவிட்டு
அருள் செய்து,Arul seydhu - பகவத் கைங்கர்ய ப்ராப்து யாகிற அருளைச் செய்வித்து
பிறவி மா மாயம் கடத்தினை முடிக்கும்,Piravi maa maayam kadaththinai mudikkum - ஸம்ஸாரமாகிற ஆச்சர்ய நாடகத்தை முடித்துவிடும்.