| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 577 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 1 | விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே | விண், Vin - ஆகாசம் முழுவதிலும் நீலம் மேலாப்பு விரித்தால் போல், Neelam Melappu Virithaal pol - நீல நிறமான மேற் கட்டியை விரித்துக் கட்டினாற் போலிரா நின்ற மேகங்காள்!, Megangkaal - மேகங்களே! தெள் நீர் பாய், Thel Neer Paai - தெளிந்த தீர்த்தங்கள் பாயுமிடமான வேங்கடத்து, Vengadathu - திருவேங்கடமலையி லெழுந்தருளி யிரா நின்ற என் திருமாலும், En Thirumaalum - திருமாலாகிய எம்பெருமானும் போந்தானே, Pondhaane - (உங்களோடுகூட) எழுந்தருளினானோ? முலை குவட்டில், Mulai Kuvatil - முலை நுனியிலே கண் நீர்கள் துளி சோர, Kan Neergal Thuli sora - கண்ணீர் அரும்ப சோர்வேனை, Sorvenai - வருந்துகிற என்னுடைய பெண் நீர்மை ஈடு அழிக்கு மிது, Pen Neermai eedu Azhikku mithu - பெண்மையை உருவழிக்கிறவிது தமக்கு, Thamakku - அவர் தமக்கு ஓர் பெருமையே, Or Perumaiye - ஒரு பெருமையர யிரா நின்றதோ? |
| 578 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 2 | மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச் சாமத் திண் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல் ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே | மா முத்தம் நிதி சொரியும், Maa Mutham Nidhi Soriyum - சிறந்த முத்துக்களையும் பொன்களையும் கொண்டு பொழிகிற மா முகில்காள், Maa Mugilkaal - காள மேகங்களே! வேங்கடத்து, Vengadathu - திருமலையிலெழுந்தருளியிரா நின்ற உள் புகுந்து, Ull Pugundhu - உள்ளே புகுந்து கதுவப்பட்டு, Kadhuvapattu - கவ்வ, அதனால் பாதைப்பட்டு கங்குல், Kangul - இரவில் இடை ஏமத்து, Idai emathu - நடு யாமத்திலே சாமத்தின் நிறம் கொண்ட, Saamathin Niram Konda - நீலநிற முடையனான தாளாளன், Thaalaalan - எம்பெருமானுடைய வார்த்தை என்னே, Vaarthai Enne - ஸமாசாரம் ஏதாகிலுமுண்டோ? காமம் தீ, Kaamam Thee - காமாக்நியானது ஓர் தென்றலுக்கு, Or Thendralukku - ஒரு தென்றற் காற்றுக்கு நான் இலக்கு ஆய், Naan Ilakku Aay - நான் இலக்காகி இங்கு இருப்பேன், Ingu Irupen - இங்கு இருப்பனோ? (இது தகுதியோ?) |
| 579 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 3 | ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம் எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால் குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே | அளியத்த மேகங்காள், Aliyatha Megankaal - அருள் புரியக் கடவ மேகங்களே! ஒளி, Oli - தேஹத்தின் காந்தியும் வண்ணம், Vannam - நிறமும் வளை, Valai - வளைகளும் சிந்தை, Sindhai - நெஞ்சும் உறக்கத்தோடு, Urakkathodu - உறக்கமும் ஆகிய இவையெல்லாம் எளிமையால், Elimaiyal - என்னுடைய தைந்யமே காரணமாக என்னை இட்டு, Ennai Ittu - என்னை உபேக்ஷித்து விட்டு ஈடு அழிய, Eedu Azhiya - என் சீர் குலையும்படி போயின, Poyina - நீங்கப் போய் விட்டன ஆல், Aal - அந்தோ! குளிர் அருவி, Kulir Aruvi - குளிர்ந்த அருவிகளை யுடைய வேங்கடத்து, Vengadathu - திருமலையி லெழுந்தருளி யிருக்கிற என் கோவிந்தன், En Govindhan - எனது கண்ண பிரானுடைய குணம், Gunam - திருக் கல்யாண குணங்களை பாடி, Paadi - வாயாரப் பாடிக் கொண்டு (அந்தப் பாட்டே தாரகமாக) ஆவி, Aavi - பிராணனை காத்திருப்பேனே, Kaathiruppene - ரக்ஷித்திருக்க என்னால் முடியுமோ? |
| 580 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 4 | மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத் தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும் பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே | ஆகத்து மின் எழுகின்ற மேகங்காள், Aagathu Min Ezhuginra Megankaal - சரீரத்திலே மின்னல் தோன்றப் பெற்ற மேகங்களே! என் ஆகத்து, En Aagathu - என் மார்விலுண்டான இள கொங்கை, Ila Kongai - இள முலைகளை தாம் விரும்பி, Thaam Virumbi - அவ் வெம்பெருமான் விரும்பி பொன் ஆகம் புல்குதற்கு, Pon Aagam Pulkutharku - அழகிய தம் மார்வோடே அணைய வேணு மென்னும் விஷயத்தில் நாள் தோறும், Naal Thorum - நித்யமும் என் புரிவடைமை, En Purivadaimai - எனக்கு ஆசையிருக்கிறபடியை வேங்கடத்துத் தன் ஆகம், Vengaduthu Than Aagam - திருமலையிலே தனது திருமேனியில் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு செப்புமினே, Thirumangai Thangiya Seer Maarvarkku cheppumine - பிராட்டி எழுந்தருளி யிருக்கப் பெற்ற திரு மார்பு படைத்த பெருமானுக்கு சொல்லுங்கள் |
| 581 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 5 | வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத் தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறிப் பொழிவீர் காள் ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான் தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே | வேங்கடத்து, Vengadathu - திருமலையிலே தேன் கொண்ட மலர் சிதற, Then Konda Malar Sidhara - தேன் நிறைந்துள்ள புஷ்பங்கள் சிதறும்படி திரண்டு ஏறி பொழிலீர்காள், Thirandu Eri Pozhileerkaal - திரள் திரளாக ஆகாயத்திலேறி மழையைப் பொழிகின்றவையாயும் வான் கொண்டு கிளர்ந்து எழுந்த, Vaan Kondhu Kilarndhu Ezhundha - ஆகாயத்தைக் கபளீகரித்துக் கொண்டு ஒங்கிக் கிளம்புகின்றவையாயுமுள்ள மா முகில்காள்!, Maa Mugilkaal! - காள மேகங்களை! ஊன் கொண்டவள் உகிரால், Oon Kondaval Ukiraal - வலியள்ளவையாய் கூர்மை யுடையவையான நகங்களாலே இரணியனை உடல் இடந்தான் தான், Iraniyanai Udal Idandhaan thaan - ஹிரண்யாஸுரனுடைய உடலைப் பிளந்தெறிந்த பெருமான் கொண்ட, Konda - என்னிடத்துக் கொள்ளை கொண்டு போன சரி வளைகள், Sari Valaigal - கை வளைகளை தரும் ஆகில், Tharum aagil - திருப்பிக் கொடுப்பதாக விருந்தால் சாற்றுமின், Saatrumin - எனது அவஸ்த்தையை அவர்க்குத் தெரிவியுங்கள் |
| 582 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 6 | சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள் உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே | சலம் கொண்டு, Salam Kondu - ஸமுத்ர ஜலத்தை முகந்து கொண்டு கிளர்ந்து எழுந்த, Kilarndhu Ezhundha - மேற் கிளம்பி விளங்குகின்ற தண் முகில் காள், Than Mugilkaal - குளிர்ந்த மேகங்களே! மா வலியை, Maa Valiyai - மஹா பலியிடமிருந்து நிலம் கொண்டான் வேங்கடத்து, Nilam Kondaan Vengadathu - பூமியை ஸ்வாதீநப் படுத்திக் கொண்டவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற திருமலையிலே நிரந்து, Nirandhu - பரவி ஏறி, Eri - உயர விருந்து பொழிவீர் காள்!, Pozhiveer kaal! - பொழிகின்ற மேகங்களே! உலங்கு உண்ட, Ulangu unda - பெருங்கொசுக்கள் புஜித்த விளங்கனி போல் உள் மெலிய, Vilangani pol ul Meliya - விளாம்பழம் போல நான் உள் மெலியும் படி புகுந்து, Pugundhu - என்னுள்ளே பிரவேசித்து என்னை, Ennai - என்னுடைய நலம் கொண்ட, Nalam Konda - நிறைவுகளை அபஹரித்த நாரணற்கு, Naaranarku - நாராயணனுக்கு என் நடலை நோய், En Nadalai noi - எனது கஷ்ட வ்யாதியை செப்புமின், Seppumin - தெரிவியுங்கள் |
| 583 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 7 | சங்க மா கடல் கடைந்தான் த்ண் முகில்காள் வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே | சங்கம், Sangam - சங்குகளை யுடைத்தாயும் பெருமை வாய்ந்தது மா, Maa - பெருமை வாய்ந்ததாயுமான கடல், Kadal - கடலை கடைந்தான், Kadainthaan - கடைந்தருளின பெருமான் எழுந்தருளி யிருக்கிற வேங்கடத்து, Vengadathu - திருமலையில் திரிகிற விண்ணப்பம், Vinnapam - விஜ்ஞாபம் யாதெனில் கொங்கை மேல், Kongai Mel - எனது முலைகளின் மேல் (பூசப் பட்டுள்ள) குங்குமத்தின் குழம்பு, Kungumathin Kuzhambu - குங்குமக் குழம்பானது அழிய, Azhiya - நன்றாக அவிந்து போம்படி தண் முகில் காள், Than Mugilkaal - குளிர்ந்த மேகங்களே! செம் கண் மால், Sem kan maal - புண்டரீகாக்ஷனான அவ் வெம்பெருமானுடைய சே அடி கீழ், Se Adi keezh - செவ்விய திருவடிகளின் கீழ் அடி வீழ்ச்சி, Adi Veezhchi - அடியேனுடைய ஒரு நாள், Oru Naal - ஒரு நாளாகிலும் புகுந்து தங்கும் ஏல், Pugundhu Thangum Yel - அவன் வந்து ஸம்ஸ்லேஷிப்பானாகில் (அப்போது தான்) என் ஆவி தங்கும், En Aavi Thangum - என் பிராணன் நிலை நிற்கும் என்பதாம் உரையீரே, Uraiyire - (இவ் விண்ணப்பத்தை அப் பெருமானிடத்துச்) சொல்லுங்கள் |
| 584 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 8 | கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் வேங்கடத்துப் போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே | கார் காலத்து, Kaar Kaalathu - வர்ஷ காலத்திலே வேங்கடத்து எழுகின்ற, Vengadathu Ezhuginra - திருமலையிலே வந்து தோற்றா நின்ற கார் முகில்காள், Kaar Mugilkaal - காள மேகங்களே! போர் காலத்து, Por Kaalathu - யுத்த ஸமயத்திலே எழுந்தருளி, Ezhundharuli - (போர் களத்தில்) எழுந்தருளி பொருதவனார், Poruthavanar - போர் செய்து வெற்றி பெற்ற இராம பிரானுடைய பேர், Per - திரு நாமங்களை சொல்லி, Solli - ஸங்கீர்த்தநம் பண்ணி நீர் காலத்து எருக்கில் அம் பழ இலை போல் வீழ்வேனை, Neer Kaalathu Erukkil Am Pazha Ilai Pol Veezhvenai - மழைகாலத்தில் எருக்கம் பழுப்புக்கள் அற்று விழுவது போல் ஒசிந்து விழுகின்ற எனக்கு வார் காலத்து ஒரு நாள், Vaar Kaalathu Oru Naal - நெடுகிச் செல்லுகிற காலத்திலே ஒரு நாளாகிலும் தம் வாசகம் தந்தருளாரே, Tham Vasagam Thandharulare - தம்முடைய ஒரு வார்த்தையை அருளா தொழிவரோ? |
| 585 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 9 | மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே | வேங்கடத்தை, Vengadathai - திருமலையை பதி ஆக, Pathi aaga - இருப்பிடமாகக் கொண்டு வாழ்வீர்கள், Vazhveerkal - வாழ்கின்றவையாயும் மதம் யானை போல் எழுந்த, Madham Yaanai pol Ezhundhu - மத்த கஜம் போலே செருக்கிக் கிளர்ந்தவை யாயுமுள்ள மா முகில்காள், Maa Mugilkaal - காள மேகங்களே! பாம்பு அணையான், Paambu Anaiyaan - சேஷ சாயியான எம்பெருமானுடைய வார்த்தை, Vaarthai - வார்த்தை யானது என்னே, Enne - இப்படி பொய்யாய் விட்டதே தான், Thaan - அவ் வெம்பெருமான் தான் என்றும், Endrum - எப்போதைக்கும் கதி ஆவான், Kathi Aavaan - (ஆச்ரிதரகட்கு) ரக்ஷகனா யிருந்து வைத்து கருதாது, Karuthaadhu - அத் தன்மையை நினையாமல் ஓர் பெண் கொடியை, Or Pen Kodiyai - ஒரு பெண் பிள்ளையை வதை செய்தான், Vadhai Seidhaan - கொலை பண்ணினான் என்னும் சொல், Ennum Sol - என்கிற சொல்லை வையகத்தார், Vaiyagathaar - இப் பூமியிலுள்ளவர்கள் மதியாரே, Mathiyaare - மதிக்க மாட்டார்களே |
| 586 | நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 10 | நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய் மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம் போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ் ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே | நல் நுதலாள், Nal Nudhalaal - விலக்ஷணமான முகத்தை யுடையளாய் போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை, Pogathil Vazhuvadha Puthuvaiyar Kon Kodhai - பகவத நுபவத்தில் குறையாதவரான பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள் நாகத்தின் அணையான் வேங்கடக் கோனை, Naagathin Anaiyaan Vengada Konai - திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையனான திருவேங்கட முடையானை நயந்து, Nayandhu - ஆசைப்பட்டு உரை செய், Urai Sei - அருளிச் செய்ததாய் மேகத்தை விட்டு அதில் விண்ணப்பம், Megathai Vittu Adhil Vinnapam - மேகத்தை தூது விடுவதாக அமைந்த லிண்ணப்பமாகிய தமிழ், Thamizh - இத் தமிழ்ப் பாசுரங்களை ஆகத்து வைத்து, Aagathu Vaithu - ஹ்ருதயத்திலே வைத்துக் கொண்டு உரைப்பாரவர், Uraipaaravar - ஓத வல்லவர்கள் அடியார் ஆகுவர், Adiyaar Aaguvar - எம்பெருமானுக்கு நித்ய கைங்கரியம் பண்ணப் பெறுவர்கள் |