Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: வீடுமின் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2686திருவாய்மொழி || 1-2 வீடுமின் (எம்பெருமானைத் தவிர்ந்த மற்றெல்லா விஷயங்களையும் விட்டு எம்பெருமானது திருவடிகளிலே ஆத்மாவை ஸமர்ப்பியுங்கோளென்கிறார்.) 1
வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1
முற்றவும், mutravum - (பஜந விரோதியான ஸாத்ய ஸாதனங்கள்) எல்லாவற்றையும்
விடுமின், vidumin - விட்டுவிடுங்கள்;
வீடு செய்து, veeduu seidu - அப்படிவிட்டு
உம் உயி, um uyi - உங்களுடை ஆத்ம ஸ்துவை
வீடு உடையான் இடை, Veedu, Vidu udayan idai - மோக்ஷ நிர்வாஹகனான ஸ்வாமியிடத்திலே
வீடு செய்ய மின், Veedu, Vidu seyya min - ஸமர்ப்பியுங்கள்.
2687திருவாய்மொழி || எம்பெருமானைத் தவிர்த்த மற்ற விஷயங்களை விட்டு அவன் பக்கலிலே ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணப் பாருங்கொள் என்றார் கீழ்ப்பாட்டில்; அதுகேட்டவர்கள் ‘இது எங்ஙனே ஸாத்யமாகும்? நெடுநாளான வாஸநை பண்ணித் தொடர்ந்துவருகிற விஷயங்களை விட முடியுமோ? என்ன அவற்றின் குற்றங்குறைகளைக் காணவே நன்கு விடலாமென்கிறார் இப்பாட்டில். 2
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2
உயிர் மன்னு, uyir mannu - ஆத்மா பொருந்தி வர்த்திக்கிற
ஆக்கைகள், akkaigal - சரீரங்கள்
மின்னின், minnin - மின்னலைக் காட்டிலும்
நிலையில், nilayil - நிலையுடையன வல்ல;
என்னும் இடத்து, ennum itattu,idathu - என்று சொல்லுமளவில்
நீரே, neere - நீங்களே
இறை, irai - சிறிது
உன்னுமின், unnumin - ஆராய்ச்சி பண்ணிக் பாருங்கள்.
2688திருவாய்மொழி || விட வேண்டிய வஸ்துக்கள் பலபல கிடப்பதால் அவற்றையெல்லாம் தனித்தனியே எடுத்துரைத்தல் பெரும்பாடாகுமாதலால் விட வேண்டியவற்றைச் சுரங்க அருளிச்செய்கிறாரிதில். 3
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே –1-2-3
நீர் நுமது என்ற இவை, neer numathuendra ivai - அஹங்கார மமகாரங்களாகிற இவற்றை
வேர் முதல் மாய்த்து, veer mudhal maathu - (ருசி வாஸநைகளாகிற) பக்க வேரோடே முதலறுத்து
இறை, irai - ஸ்வாமியை
சேர்மின், sermin - அடையுங்கள்;
உயிர்க்கும், uyirkkum - ஆத்மாவுக்கு
அதன் நேர், adan ner - அதனோடு ஒத்து
நிறை இல், nirai il - பூர்த்தி இல்லை
2689திருவாய்மொழி || விட வேண்டிய விஷயத்தின் தோஷ மிகுதியை இரண்டாம் பாட்டிலருளிச் செய்தார்; பற்ற வேண்டிய பகவத் விஷயத்தின் நன்மை மிகுதியை இப் பாட்டிலருளிச் செய்கிறார் 4
இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-2-4
அவன் உரு, avan uru - அந்தப் பெருமானுடைய ஸ்வரூபமானது,
இல்லதும் அல்லது, illathum allathu - விகாராஸ்பதமாகையாலே அஸத்து என்னப்படுமதான அசேதநத்தின்படியை யுடையது மன்று
உள்ளதும் அல்லது, ullathum allathu - ஸத்து என்னப்படுபவனான ஜீவாத்மாவின் படியையுடையது மன்று;
எல்லை இல், ellai il - எல்லை யில்லாத
அ நலம், a nalam - அப்படிப்படட் ஆநந்த ஸ்வரூபியாயிருக்கும்; (ஆதலால்)
பற்று அற்று புல்கு, patru atru pulku - ஹேய விஷய ஸங்கத்தை விட்டு-(அப்பெருமானை) ஆச்ரயிக்க
2690திருவாய்மொழி || எம்பெருமானை பற்றுதற்கு இடையூறாகக் கைவல்ய மோக்ஷத்தில் நகையுண்டாகக் கூடியதாதலால் அந்த இடையூதன்னை விலக்கிக் கொள்ளுமாறு உபதேசித்தருளுகிறாரிப்பாட்டில். உலகத்தில் அவரவர்களது ருசியின்படி விருப்பங்கள் பலவகைப்படும். இஹ லோகத்திற்குப் பரிபூர்ண ஐச்வரியத்தையே சிலர் விரும்புவர்; தேவேந்திர பட்டத்தில் விருப்பமுள்ளவர்வகள் இவ்வுலகச் செல்வங்களிற் கண்வையார். நான்முகக் கடவுளது பதவியை விரும்புமவர் இந்திரபதவியிற் கண்வையார். ஆத்மாநுபவமாகிற கைவல்ய மோக்ஷத்தில் விருப்ப முடையார் கீழ்ச்சொன்னவற்றிற் கண்வையார் *உயர்வறவுயர்நலமுடையனாய் அயர்வறுமமரர்களதிபதியாய் *திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டனாக எம்பெருமானிடத்திலே பற்றுடையார் இவை யித்தனையிலும் கண் வையார். ஆகவே கைவல்ய மோக்ஷத்தில் கண்வைக்க வேண்டாமென்று நியமிக்கிறது இதில். 5
அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5
பற்று அற்றது எனில், patru atradhu enil - விஷயாந்தர ஸங்கம் அற்றொழிந்தது என்னுமளவிலேயே
உயிர், uyir - ஆத்துமா
வீடு உற்றது, veetu urratu - மோக்ஷத்தைப் பெற்றானாவன்; (கைவல்ய மோக்ஷமுண்டாகும்;)
அது, adu - அந்தக் கைவல்ய மோக்ஷத்தை
செற்று, setru - வெறுத்து
மன்ன உறில், manna uril - நிலை நிற்கும்படி பகவத் விஷயத்தைக் கிட்டப் பார்க்கில்
அற்று, atru - (ஆச்ரயிக்கும் போதே) எம்பெருமானுக்கென்றே அற்றுத் தீர்ந்து
இறை பற்று, irai patru - அந்த எம்பெருமானை பற்றுக
2691திருவாய்மொழி || ஆழ்வீர்! புறம்புள்ளவற்றைவிட்டுப் பரமபுருஷனைப் பற்றும்படி உபதேசிக்கிறீர்; அவன்தான் ஸர்வேச்வரனன்றோ? நமக்கு அவன் முகந்தருவானோவென்று ஸம்ஸாரிகள் சங்கிப்பதாகக் கொண்டு, எம்பெருமானை அப்படி நினைக்கலாமோ? ஈச்வரத்வம் வந்தேறி யென்னும்படி ஸௌசீல்யமே வடிவாயிருப்பவனன்றோ அவன் என்று ஸமாதாநம் பண்ணுகிறாரிதில். 6
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6
ஈசனும், eesanum - எம்பெருமானும்
பற்றிலன், patrilan - ஆச்ரிதர்களோடு பொருந்தி யிருப்பதையே இயல்வாக உடையனாய்
முற்றவும், mutravum - தாரகம் போஷகம் போக்யம் என்னும்படியான ஸகல ஸ்துவுமாகவும்
நின்றனன், nindranan - இரா நின்றான்: (ஒலோகமே!)
பற்றிலை ஆய், patrilai aai - எம்பெருமானோடு பொருந்தி யிருப்பதையே இயல்வாகவுடைத்தாய்
அவன், avan - அப் பெருமானுடைய
முற்றில், mutril - ஸகல கைங்கரியங்களிலும்
அடங்கு, adangu - அந்வயிப்பது.
2692திருவாய்மொழி || கீழ்ப்பாட்டில், எம்பெருமான் அடியார்களோடு புரையேறக் கலந்து பழகுவதையே இயல்வாகவுடையவனென்றார்; அவன் அப்படியிருந்தாலும், உண்மையில் அளவிடமுடியாத உபயவிபூதிச் செல்வத்தையுடையவனாயிருக்கையாலும் நாம் மிகப் புல்லியராயிருக்கையாலும் அவனோடு நமக்குச் சேர்த்தி எளிதாயிராதே; கடலிலே புகுந்த ஒரு துரும்பானது அலைமேல் அலையாகத் தள்ளுண்டுவந்து கரையில் சேருகிறார்போலே அப்பெருமானது ஐச்வரிய அலைகள் நம்மைத் தள்ளிவிடமாட்டாவோ? அம்மானாழிப்பிரானவனெவ்விடத்தான் யானார்” என்று பின்வாங்கப் பண்ணுமே! என்று ஒரு சங்கையுண்டானக, அதற்குப் பரிஹார மருளுகிறார்போலும் இப்பாசுரத்தினால்: 7
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது கண்டு அடங்குக உள்ளே –1-2-7
அடங்கு எழில், adangu ezhil - முற்றிலும் அழகியதான
சம்பத்து அடங்க, sampathu adanga - (எம்பெருமானுடைய) விபூதியை எல்லாம்
கண்டு, kandu - பார்த்து
அடங்க, adanga - அதெல்லாம்
ஈசனஃது, eesanadhu,eesanakdhu - எம்பெருமானுடையதான
எழில் என்று, ezil endru - ஸம்பத்து என்று துணிந்து
உள்ளே, ulle - அந்தப் பகவத் விபூதிக்குள்ளேயே
அடங்கு, adangu - சொருகிப் போவது
2693திருவாய்மொழி || என்ன உபகரணங்களைக்கொண்டு எம்பெருமானுக்கு அடிமை செய்வது? என்ன. புதிதாக ஸம்பாதிக்கவேண்டாமல் ஏற்கனவே அமைந்திருந்துள்ள மனமொழி மெய்கள் மூன்றையும் ‘இவை எம்பெருமானுக்கு அடிமைசெய்வதற்குறுப்பாகவே கண்டவை’ என்று அனுஸந்தித்து, புறம்பண்டான விஷயங்ளில் நின்றும் மீட்டு எம்பெருமான் பக்கலிலே ஊன்றவைப்பதென்கிறாரிப்பாட்டில். 8
உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8
உள்ளம், ullam - நெஞ்சு என்றும்
உரை, urai - வாக்கு என்றும்
செயல், seyal - உடல் என்றம்
உள்ள, ulla - ஏற்கெனவே யுள்ள
இம் மூன்றையும், im moondruyum - இந்த மூன்று உறுப்புக்களையும்
உள்ளி, ulli - ஆராய்ந்து பார்த்து
கெடுத்து, keduthu - அவற்றிற்குள்ள விஷயாந்தரப் பற்றைத் தவிர்த்து
இறை உள்ளில், irai ullil - எம்பெருமான் பக்கலிலே
ஒடுங்கு, odungu - அந்வயிப்பது.
2694திருவாய்மொழி || ஸ்ரீ ஆறாயிரப்படி - இப்படி அவன் பக்கலிலே கரணங்களை ஒடுங்கப் பண்ணவே பகவத் கைங்கர்ய பிரதிபந்தகங்கள் எல்லாம் போம் – பின்னையும் இவ் வர்த்தமான சரீரம் போந்தனையும் பார்த்திரு அத்தனையே விளம்பம் உள்ளது -என்கிறார் 9
ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9
அவன் கண், avan kan - அந்த எம்பெருமான் பக்கலிலே
ஒடுங்க, odunga - அந்வயிக்கவே
எல்லாம் ஒடுங்கலும், ellam odungalum - (ஆத்மாவை) ஒடுங்கப் பண்ணுவதான அவித்யை முதலானவை யெல்லாம்
விடும், vidum - விட்டு நீங்கும்:
பின்னும் , pinnum - அதற்குப் பிறகு
ஆக்கை விடும் பொழுது, akkai vidum pozhuthu - சரீரம் தொலையும் நாளை
எண், en - எதிர்பார்த்திருப்பது.
2695திருவாய்மொழி || ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - சாரார்த்தமாக திருமந்த்ரத்தை அருளிச் செய்து -இத்தாலே யாவச் சரீர பாதம் எம்பெருமானை ஆஸ்ரயுங்கோள் -என்கிறார் 10
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10
எண் பெருக்கு, en perukku - எண்ணிக்கை பெருகிக் கொண்டே யிருக்கும்படி அளவிறந்த
அ நலத்து, a nalathu - அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்களை யுடைய
ஒண் பொருள், on porul - சிறந்த பொருளாகிய ஜீவாத்ம வர்க்கத்தையும்
ஈறு இல, iru il - முடிவில்லாத
வண் புகழ், van pukaḻ,pughal - திருக் கல்யாண குணங்களையும் உடையனான
நாரணன், naranaṉ - நாராயணனுடைய
திண் கழல், tin kaḻal - (அடியாரை ஒருநாளும்) கைவிட கில்லாத திருவடிகளை
சேர், cer, ser - ஆச்ரயிப்பது.
2696திருவாய்மொழி || ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - நிகமத்தில் எம்பெருமானுடைய குணங்களைத் தொடுத்த ஆயிரம் திருவாய் மொழியும் ஆராய்ந்து சொல்லப் பட்டன இவை என்கிறார் 11
சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11
சேர் தடம், ser tadam - செறிந்த தடாகங்களை யுடைய
தென் சுருகூர் சடகோபன் சொல், then kurugoor,kurugur sadagopan sol - திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த
சீர் தொடை, seer thodai - கவி யுறுப்புக்களெல்லாம் நன்கு அமையப் பெற்ற
ஆயிரத்து, ayirattu - ஆயிரத்தினுள்ளே
இ பத்து, i pattu - இப்பத்துப் பாசுரமும்
ஓர்த்த, orta,ortha - ஆராய்ந்து சொல்லப்பட்டது.