| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3227 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (திருவண்வண்டூரிலே சென்று எம்பெருமானுக்கு என் அபிநிவேசத்தைத் தெரிவியுங்கோளென்று சில குருகுகளை நோக்கி இரக்கின்றாள்) 1 | வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்! செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும் கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1 | வைகல்,Vaigal - எப்போதும் பூ கழி வாய்,Poo Kazhi Vaai - அழகிய நீர்நிலத்திலே வந்து மேயும்,Vandhu Meyum - வந்திருந்து இரையுண்கிற குருகு இனங்காள்,Kurugu Inangkaal - கொக்கின் கூட்டங்களே! செய் கொள் செந்நெல் உயர்,Sey Kol Sennel Uyar - கழனி நிரம்பிய செந்நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்திருக்கப்பெற்ற திரு வண் வண்டூர் உறையும்,Thiru Van Vandur Uraiyum - திருவண் வண்டூரிலே நித்யவாஸம் பண்ணா நிற்பவனும் கை கொள் சக்கரத்து,Kai Kol Chakkarathu - திருக்கையிலே திருவாழியாழ்வானைக் கொண்டவனும் கனி வாய்,Kani Vaai - கனிபோன்ற திருவந்ரத்தையுடையவனுமான என் பெருமானை,En Perumaanai - எம்பெருமானை கண்டு,Kandu - நேரில் பார்த்து கைகள் கூப்பி,Kaigal Koopi - அஞ்ஜலி செய்து வினையாட்டியேன் காதன்மை சொல்லீர்,Vinaiyaattiyen Kaadhanmmai Sollir - இங்ஙனே பிரிந்திருக்கும் பாவமுடையளான என்னுடைய ஆவலைச் சொல்லுங்கோள் |
| 3228 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஆர்த்தர்களுக்கு ஆர்த்தியைப் பரிஹரித்து ரக்ஷணம் செய்வதிலேயே தீக்ஷை கொண்டிருக்கின்ற எம்பெருமான் திருவண்வண்டூரிலே வேத யொலியையும் வேள்வி யொலியையும் காதாரக் கேட்டுக்கொண்டு தன்னுடைய ஆர்த்த ரக்ஷ தீக்ஷையையும் மறந்து அங்கே தங்கிக் கிடக்கிறான், அவனுடைய பதாரவிந்தங்களிலே சென்று அஞ்சலி பண்ணி நின்று என் விஷயமாகச் சில வார்த்தைகள் சொல்ல வேணுமென்று நாரையை இரக்கிறார்.) 2 | காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்! வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர் நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2 | காதல்மென் பெடையோடு,Kaathalmen Pedaiyodu - காதலையே நிரூபகமாகவுடைய அழகியபேடையோடு உடன்,Udan - கூட மேயும்,Meyum - இரை தேர்கின்ற கரு நாராய்,Karu Naarai - நல்லவர்ணமுடைய நாரையே! வேதம் வேள்வி ஒலி முழங்கும்,Vedham Velvi Oli Muzhangum - வேதகோஷமும் வைதிக்கரியைகளின் கோலாஹலமும் முழங்கப் பெற்ற தண்,Than - குளிர்ச்சி பொருந்திய திருவண்வண்டுர்,Thiruvanvandur - திருவண்வண்டூரிலே நாதன்,Naadhan - ஸர்வேச்வரனும் ஞாலம் எல்லாம் உண்ட,Gnaalam Ellaam Unda - (பிரளயகாலத்தில் ஸகல ஜகத்தையும் விழுங்கினவனுமான நம் பெருமானை,Nam Perumaanai - எம்பெருமானை கண்டு,Kandu - நேராகக் கண்டு பாதம் கை தொழுது,Paadham Kai Thozhudhu - அவனது திருவடிகளை நோக்கி அஞ்ஜலி பண்ணி அடியேன் திறம்,Adiyen Thiram - அடியேன் விஷயமாக பணியீர்,Paniyeer - ஒருவார்த்தைசொல்ல வேணும் |
| 3229 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (பக்ஷிகள் கூட்டங்கூட்டமாக உலாவுவது வழக்கம். அங்ஙனே கூட்டமாக அவை இருப்பது தன் காரியம் செய்த்தற்காகவேயென்று பராங்குச நாயகியின் கருத்துப்போலும். அவை செய்களூடு உழல்வது தங்கட்கு இரை தேடுகைக்காகவாகி வாகக் கருதி, பறவைகளா! செய்களூடு எதற்காக உழல்கின்றிர்கள்? எனக்காக நீங்கள் தேடும் எம்பெருமான் திருவண்வண்டூரிலன்றோ உறைகின்றான் என்கிறாள்.) 3 | திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்! சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும் கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3 | திறங்கள் ஆகி,Thirangal Aagi - திரள்திரளாக எங்கும்,Engum - பார்த்தவிடமெல்லாம் செய்களூடு,Seygaloodu - விளைநிலங்களிலே உழல்,Uzhal - உலாவுகின்ற புள் இனங்காள்,Pul Inangkaal - பறவைக் கூட்டங்களே! சிறந்த செல்வம் மல்கு,Sirandha Selvam Malku - உயர்ந்த ஐச்வரியம் விஞ்சியிருக்கிற திருவண்வணடூர்,Thiruvanvandur - திருவண்வண்டூரிலே உறையும்,Uraiyum - நித்யவாஸம் பண்ணுமவனும் கறங்கு சக்கரம் கை,Karangu Chakkaram Kai - சுழன்று வருகிற திருவாழியைக் கையிலேயுடையவனும் கனி வாய்,Kani Vaai - கனிபோன்ற அதரத்தையுடையவனுமான பெருமானை கண்டு,Perumaanai Kandu - எம்பெருமானை ஸேவித்து நீர்,Neer - நீங்கள் இறங்கி தொழுது,Irangi Thozhudhu - தாழ்ந்து தொழுது அடியேன் இடர்,Adiyen Idar - அடியேன் படுகிற கஷ்டத்தை பணியீர்,Paniyeer - சொல்லுங்கள். |
| 3230 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஒரு நொடிப் பொழுதும் பிரியாமே இடைவீடின்றிக் கலந்து வாழ்கின்ற அன்னப் பறவைகளை நோக்கி, திருவண்வண்டூரிலே நிரந்தரமாக நடைடிபறும் வேதவொலியைத் திருச்செவி சாத்திக்கொண்டு அ ங்கே கால் தாழ்ந்து வர்த்திக்கிற கடல்வண்ணனான பெருமானைக் கொண்டு என் பேரைச் சொல்லாதே ஒருத்தி உடல் நைந்து உருகுகின்றாளென்று சொல்லுங்கோளென்கிறாள்.) 4 | இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்? விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர் கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4 | இடல் இல்,Idal Il - பிரிந்துபடும் துக்கமில்லாத போகம் மூழ்கி,Pogam Moozhgi - இன்பத்தில் அவகாஹித்து இணைந்து ஆடும்,Inaindhu Aadum - கலந்து வாழ்கின்ற மடம் அன்னங்காள்,Madam Annangkaal - மடமைதங்கிய அன்னங்களே! விடல் இல்,Vidal Il - இடைவீடில்லாத வேதம் ஒலி முழங்கும்,Vedham Oli Muzhangum - வேதகோஷம் நிரம்பிய தண் திருவண்வண்டூர்,Than Thiruvanvandur - வேதகோஷம் நிரம்பிய குளிர்ந்த திருவண்வண்டூரிலே கடல் மேனி,Kadal Maeni - கடல்போன்ற திருமேனியையுடையவனும் பிரான்,Piran - மஹோபகாரகனும் கண்ணனை,Kannanai - ஆச்ரித ஸுலபனுமான நெடு மாலை கண்டு,Nedu Maalai Kandu - ஸர்வேச்வரனைக் கண்டு ஒருத்தி,Oruththi - ஒரு பெண்பிள்ளை உடலம் நைந்து,Udalam Nainthu - சரீரம் தளர்ந்து உருகும் என்று,Urugum Endru - உருகாநின்றாள் என்று உணர்த்துமின்,Unarththumin - அறிவியுங்கள்! |
| 3231 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சில அன்னங்களை குறித்து அவ்விடம் புக்காரை எல்லாம் மறப்பிக்கும் விஷயமாய் இருக்கும் -நீங்கள் அங்கு புக்கால் என்னையும் நினையுங்கோள் என்கிறாள் .) 5 | உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்! திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண் வண்டூர் புணர்த்த பூந்தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5 | ஊடல் உணர்த்தல் உணர்ந்து,Oodal Unarththal Unarnthu - (பிரிவு சிறிது உண்டா) ஊடலும் உணர்த்தலுமாகிற சிரமங்கள் நேருமென்ற்றிந்து உடன் மேயும்,Udan Meyum - கணப்பொழுதும் விட்டுப்பிரியாமல் கூடவே திரிகின்ற மடம் அன்னங்காள்,Madam Annangkaal - துவண்ட அன்னங்களே! திணர்த்த வண்டல்கள் மேல்,Thinartha Vandhalgal Mel - கொழுத்த வண்டல் மணல்களின் மேலே சங்கு சேரும்,Sangu Serum - சங்குகள் சேருமிடமான திரு வண்வண்டூர்,Thiru Vanvandur - திருவண்வண்டூரிலே புணர்த்த பூ தண் துழாய் முடி,Punartha Poo Than Thuzhai Mudi - தொடுக்கப்பட்ட அழகிய செவ்வித்துழா யணிந்த திருவபிஷேகத்தையுடையனான நம் பெருமானை கண்டு,Nam Perumaanai Kandu - நமது ஸ்வாமியைக் கண்டு புணர்த்த கையினர் ஆய்,Punartha Kaiyinar Aai - கை கூப்பினவர்களாய்க் கொண்டு அடியேனுக்கும்,Adiyenukkum - அடியேனுக்காகவும் போற்றுமின்,Potrumin - அத்தலைக்கு மங்களாசாஸனம் பண்ணுங்கோள் |
| 3232 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சில குயில்களைக் குறித்து திரு வண் வண்டூரில் சென்று எம்பெருமானைக் கண்டு உள்ள தசையை அறிவித்து அத்தலையில் நின்றும் ஒரு மாற்றம் கொண்டு வந்து என் மையல் தீருவதொரு வண்ணம் அருளிச் செய்ய வேணும் என்கிறாள் .) 6 | போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்! சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும் ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6 | புன்னை மேல் உறை,Punnai Mel Urai - புன்னை மரங்களின மேலே வாழ்கிற பூ குயில்காள்,Poo Kuyilkaal - அழகிய குயில்களே! யான்,Yaan - அடியேன் போற்றி இரந்தேன்,Potri Iranthen - துதித்து வேண்டுகின்றேன், வாளை,Vaalai - வாளை மீன்களானவை சேற்றில் துள்ளும் திரு வண்வண்டூர் உறையும்,Thiru Vanvandur Uraiyum - சேற்று நிலங்களிலே களித்து உகளப்பெற்ற திருவண்வண்டூரிலே வாழ்பவனும் ஆற்றல் ஆழி அம் கை,Aatral Aazhi Am Kai - சக்திமிகுந்த திருவாழியை அழகிய கையிலே உடையவனுமான அமரர் பெருமானை கண்டு,Amarar Perumaanai Kandu - தேவாதிதேவனைக் கண்டு மையல் தீர்வது ஒரு வண்ணம்,Maiyal Theervathu Oru Vannam - என்னுடைய வியாமோஹம் தீரும்படியான மாற்றம் கொண்டு அருளீர்,Maatram Kondu Aruleer - ஒரு நல்வார்த்தை கொண்டுவந்து உதவவேணும். |
| 3233 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நாங்கள் அவனை அறியும் படி எங்கனே என்று கேட்ட கிளிகளைக் குறித்து அவனுடைய அடையாளங்களை சொல்லி இவ்வடையாளங்களின் படியே அவனை அழகிதாகக் கண்டு எனக்காக அவனுக்கு ஒரு வார்த்தை அருவியுங்கோள் என்கிறாள்.) 7 | ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண் கிளியே! செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண் வண்டூர் கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7 | ஒண் கிளியே,On Kiliye - அழகிய கிளியே! செரு,Seru - ப்ரணயகலஹாஸ் ஓண் பூ பொழில் சூழ்,On Poo Pozhil Soozh - அழகியபூஞ் சோலைகளாலே சூழப்பட்டதும் செக்கர் வேலை,Sekkar Velai - செந்நிறமான பக்கப் பிரதேசங்களையுடையதுமான திருவண்வண்டூர்,Thiru Vanvandur - திருவண்வண்டூரிலே ஒரு வண்ணம் சென்று புக்கு,Oru Vannam Sendru Pukku - ஒரு விதமாகச் சென்று புகுந்து கரு வண்ணம்,Karu Vannam - கரிய வடிவமும் செய்ய வாய்,Seyya Vaai - சிவந்த அதரமும் செய்ய கண்,Seyya Kan - சிவந்த திருக்கண்களும் செய்ய கை,Seyya Kai - சிவந்த திருக்கைகளும் செய்ய கால்,Seyya Kaal - சிவந்த திருவடிகளும் செரு ஒண் சக்கரம் சங்கு,Seru On Chakkaram Sangu - போர்க்களத்திலே ஒண்மைபெற்று விளங்குகிற சக்கரமும் (கையை விட்டு அகலாத) சங்குமான அடையாளம்,Adaiyaalam - லக்ஷணங்களை திருந்த கண்டு,Thirundha Kandu - நன்றாகப் பார்த்து எனக்கு ஒன்று உரை,Enakku Ondru Urai - எனக்காக வொரு வார்த்தைசொல்லு. |
| 3234 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (திருவண்வண்டூரிலே சென்று அங்குறையும் எம்பெருமானுடைய திவ்ய அவயவ ஸௌந்தர்யத்தை நன்றாகக் கண்டு மீண்டு வந்து எனக்கொன்று சொல்ல வேணு மென்று பூவைப் பறவையைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 8 | திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய்! செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர் பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள் கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8 | ஒண் சிறு பூவாய்,On Siru Poovai - அழகிய சிறிய வடிவையுடைய பூவையே! செருந்தி நாழல் மகிழ் புன்னை சூழ்,Serundhi Naazhal Magizh Punnai Soozh - சுரபுன்னை, ஞாழல் மகிழமரம், புன்னை மரம் ஆகிய இவற்றால் சூழப்பட்ட தண் திருவண்வண்டூர்,Than Thiru Vanvandur - குளிர்ந்த திருவண்வண்டூரிலே (எழுந்தருளியிருக்கின்ற) பெரு தண் தாமரை கண்,Peru Than Thamarai Kan - பெரிய தண்டாமரை போன்ற திருக்கண்களையுடையவரும் பெரு நீள் முடி,Peru Neel Mudi - மிகப்பெரிய திருவபிஷேகத்தையுடையவரும் நால் தட தோள்,Naal Thada Thol - நான்கு தடத்தோள்களை யுடையவரும் கரு திண் மா முகில் போல் திரு மேனி,Karu Thin Maa Mugil Pol Thiru Maeni - கறுத்துத் திண்ணிய மஹாமேகம் போன்ற திருமேனியை யுடையவருமான அடிகளை,Adigalai - ஸ்வாமியை திருந்த கண்டு,Thirundha Kandu - நன்றாக ஸேவித்து எனக்கு ஒன்று உரையாய்,Enakku Ondru Uraiyaai - எனக்கொரு வார்த்தை சொல்லவேணும் |
| 3235 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (சில அன்னப்பறவைகளை நோக்கி ‘திருவண்வண்டூரெம் பெருமானிடத்துச்சென்று ஏகாந்தமாக என் விஷயம் விஜ்ஞாபிக்கவேணும்‘ என்று இரக்கிறாள். ‘திருவடிகளைச் சிக்கனப் பிடித்துக் கொண்டு‘ என்று சொல்ல வேண்டிய ஸ்தானத்திலே அடிகள் கை தொழுது என்கிறாள்.) 9 | அடிகள் கை தொழுது, அலர் மேல் அசையும் அன்னங்காள்! விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும் கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே.–6-1-9 | அலர் மேல் அசையும் அன்னங்காள்,Alar Mel Asaiyum Annangkaal - பூவின் மேலேயிருந்து உலாவுகின்ற அன்னங்களே! விடிவை,Vidivai - ஸுப்ரபாதகாலத்திலே சங்கு ஒலிக்கும்,Sangu Olikkum - சங்கு முழங்கப்பெற்ற திரு வண்வண்டூர்,Thiru Vanvandur - திருவண்வண்டூரிலே உறையும்,Uraiyum - எப்போதும் வாழ்கின்ற கடிய மாயன் தன்னை,Kadiya Maayan Thannai - கடுமையான மாயச் செயல்களையுடையனாய் அடியார்களுக்கு விதேயனாய் நெடு மாலை,Nedu Maalai - அடியார்பக்கலிலே மிகவும் வியாமோஹ முடையவனாயிருக்கிற எம்பெருமானை கண்டு,Kandu - சேவித்து அடிகள் கை தொழுது,Adigal Kai Thozhudhu - திருவடிவாரத்திலே அஞ்ஜலிபண்ணி கொடிய வல் வினையேன் திறம்,Kodiya Val Vinaiyen Thiram - மிகக்கொடிய பாபத்தையுடையேனான என் விஷயமாக வேறு கொண்டு,Veru Kondu - ஏகாந்தமாக கூறுமின்,Koorumin - புருஷகாரமான வார்த்தைகளைச் சொல்லுங்கள் |
| 3236 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (சில வண்டுகளைக் குறித்துக் கூறுகின்றாள். “எமது தலைவர் பெண் பிறந்தார் காரியமெல்லாம் செய்து தலைக் கட்டி விட்டோமென்றிரப்பர், அப்படி யன்றிக்கே, ரக்ஷ்ய வர்க்கத்திலே நானு மொருத்தி யிருக்கின்றதாகச் சொல்லுங்கோள்“ என்கிறாள்.) 10 | வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்! தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண் வண்டூர் மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10 | வெறி வண்டு இனங்காள்,Veri Vandu Inangkaal - பரிமளம் மிக்க வண்டினங்களே! உம்மை வேறு கொண்டு,Ummai Veru Kondu - உங்களிடத்திலே விலக்ஷணப்ரதிபத்தி பண்ணி யான் இரந்தேன்,Yaan Iranthen - அடியேன் ஒன்று தேறு நீர் பம்பை வடபால் திருவண்வண்டூர்,Theru Neer Pambai Vadapaal Thiru Vanvandur - தெளிந்தநீரையுடைய பம்பையாற்றின் வடபக்கத்திலுள்ள தான திருவண்வண்டுரிலே (எழுந்தருளியிருக்கின்ற) மாறு இல் போர் அரக்கன்,Maaru Il Por Arakkan - நிகரற்ற யுத்தம் செய்வதில்வல்லவனான இராவணனுடைய மதிள்,Mathil - மதிள்முதலிய யாவும் நீறு எழ,Neeru Ezha - பொடிபொடியாம்படி செற்று,Settru - இலங்கையையழித்து (அதனால்) உகந்த,Ugandha - திருவுள்ளமுவந்த எறு சேவகனார்க்கு,Eru Sevakanaarkku - மஹாவீரனான ஸ்ரீராமபிரானிடத்திலே என்னையும் உள்ள் என்மின்கள்,Ennaiyum Ull Enminkal - ரக்ஷ்யவர்த்திலே நானுமொருத்தி இருப்பதாகச் சொல்லுங்கோள். |
| 3237 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (இத்திருவாய்மொழி கற்பார் எம்பெருமானுக்கும் அவனடியார்கட்கும். விரும்பத் தக்கவராவர் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறது.) 11 | மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11 | மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்,Min Kol Ser Purinool Kural Aai - ஒளியையுடைத்தாய், திருமேனிக்குச் சேர்ந்த்தான் யஜ்ஞோபவீதமணிந்த வாமனமூர்த்தியாகி அகல் ஞாலம் கொண்ட,Agal Gnalam Konda - விசாலமான பூமி முழுவதையும் அளந்து கொண்ட வன் கள்வன்,Van Kalvan - மஹாவஞ்சகனான எம்பெருமானுடைய அடிமேல்,Adimel - திருவடிகள் விஷயமாக குருகூர் சடகோபன் சொன்ன,Kurukoor Sadagopan Sonna - நம்மாழ்வார் அருளிச் செய்த பண் கொள் ஆயிரத்துள்,Pan Kol Aayirathul - பண்மிகுந்த ஆயிரத்தினுள்ளே திருவண்வண்டூர்க்கு,Thiru Vanvandurukku - திருவண்வண்டூர் விஷயமான இன் கொள் பாடல்,In Kol Paadal - பரமபோக்யமான பாடலான இவை பத்தும்,Ivai Pathum - இப்பத்துப்பாசுரங்களையும் வல்லார்,Vallar - ஓதவல்லவர்கள் மின் இடையவர்க்கு மதனர்,Min Idaiyavarkku Madhanar - காமினிகளுக்குக் காமுகர்போல் எம்பெருமானுக்கு ஸ்ப்ருஹணீயராவர்கள் |