திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 86 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 1 | தொடர் சங்கிலி கை சலார் பிலாரென்னத் தூங்கு பொன் மணி யொலிப்ப
படு மும் மதப் புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல்
உடங்கூடிக் கிண் கிணி யாரவாரிப்ப உடை மணி பறை கறங்க
தடந்தா ளிணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ–1-7-1 | பதவுரை Show / Hideசங்கிலி கை தொடர்,Sangili kai todar - இரும்புச் சங்கிலியின் தொடர்பு சலார் பிலார் என்ன,Salar pilar enna - ’சலார்பிலார்’ என்று சப்திக்கவும் தூங்கு,Thoongu - தொங்குகின்றனவும் பொன்,Pon - பொன் கயிற்றிற்கட்டி யிருப்பனவுமான மணி,Mani - மணிகள் ஒலிப்ப,Olippa - ஒலிக்கவும் படு,Padu - உண்டான மும்மதம் புனல்,Mummadham punal - மூன்று வகையான மதநீர் சோர,Sora - பெருகவும் நின்று,Nindru - இருந்து கொண்டு வாரணம்,Varanam - யானை பைய,Paiya - மெல்ல ஊர்வது போல்,Oorvathu pol - நடந்து போவது போல கிண் கிணி,Kin kini - காற் சதங்கைகள் உடன் கூடி,Udan koodi - தம்மிலே தாம் கூட்டி ஆரவாரிப்ப,Aravarippa - சப்திக்கவும் உடை,Udai - திரு வரையில் கட்டிய மணி,Mani - சிறு மணிகள் பறை கறங்க,Parai karanga - பறை போல் சப்திக்கவும் சார்ங்கம்,Sarngam - சார்ங்கமென்னும் வில்லை பாணி,Pani - கையிலேந்திய பிள்ளையாகிய இவன் தட தாள் இணை கொண்டு,Thada thal inai kondu - (தன்னுடைய) பெரிய பாதங்களிரண்டினால் தளர் நடை,Thalar nadai - இளநடையை நடவானோ,Nadavano - நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 87 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 2 | செக்க ரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போல
நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர் வெண் பல் முளையிலக
அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ–1-7-2 | பதவுரை Show / Hideசெக்கரிடை,Sekkaridai - செவ் வானத்திலே நுனி கொம்பில்,Nuni kombil - கொம்பின் நுனியிலே தோன்றும்,Thondrum - காணப்படுகிற சிறுபிறை முளை போல,Sirupirai mulai pola - சிறிய பிறைச் சந்திரனாகிய முளையைப்போல, நக்க,Nakka - சிரித்த செம் அவர் வாய்,Sem avar vai - மிகவுஞ் சிவந்த வாயாகிய தி்ண்ணை மீது,Thinnai meedhu - மேட்டிடத்தில் நளிர் வெண் பல் முளை,Nalir ven pal mulai - குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள் இலக,Ilaka - விளங்க அஃகுவடம்,Akkuvadam - சங்கு மணி வடத்தை உடுத்து,Uduthu - (திரு வரையில்) தரித்த ஆமைத் தாலி,Amai thali - ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை பூண்ட,Poonda - கழுத்திலணி்ந்து கொண்டவனும் அனந்த சயனன்,Anantha sayanan - திருவனந்தாழ்வான் மேலே படுப்பவனும் தக்க மா மணிவண்ணன்,Thakka ma manivannan - தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும் வாசுதேவன்,Vasudevan - வஸுதேவ புத்திரனுமான இவன் தளர் நடை நடவானோ .,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 88 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 3 | மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்
மின்னில் பொலிந்த தோர் கார் முகில் போலக் கழுத்திணில் காறை யொடும்
தன்னில் பொலிந்த இருடீ கேசன் தளர்நடை நடவானோ–1-7-3 | பதவுரை Show / Hideமின் கொடியும்,Min kodiyum - கொடி மின்னலும் ஓர் வெண் திங்களும்,Or ven thingalum - அதனோடு சேர்ந்திருப்பதும் களங்கமில்லாததுமான (முழுவதும்) வெண்மையாயுள்ள ஒரு சந்த்ரனும் சூழ்,Sool - (அவ்விரண்டையுஞ்) சுற்றிக் கொண்டிருக்கும் பரிவேடமும் ஆய்,Parivedamum aai - பரி வேஷத்தையும் போல பின்னல்,Pinnal - (திருவரையில் சாத்தின) பொற் பின்னலும் துலங்கும் அரசிலையும்,Thulanggum arasilaiyum - விளங்குகின்ற அரசிலை போல வேலை செய்த ஒரு திருவாபரணமும் பீதகம் சிறு ஆடையோடும்,Peedhagam siru aadaiyodum - (இவ்விரண்டையுஞ் சூழ்ந்த) பொன்னாலாகிய சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும், மி்ன்னில்,Minnil - மின்னலினால் பொலிந்தது,Polinthathu - விளங்குவதாகிய ஓர்,Or - ஒப்பற்ற கார் முகில் போல,Kar mugil pola - காளமேகம் போல கழுத்தினில் காறையோடும்,Kazhuthinil kaaraiyodum - கழுத்திலணிந்த காறையென்னும் ஆபரணத்தோடும் (கூடிய) தன்னில் பொலிந்த,Thannil polintha - (இவ்வாபரணங்கள் திருமேனிச்சுமை என்னும்படி இயற்கையான) தனது அழகினால் விளங்குகின்ற இருடீகேசன்,Irudheekesan - ‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திருநாமமுடைய இவன் தளர்நடை நடவானோ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 89 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 4 | கன்னற் குடம் திறந் தாலொத் தூறிக் கண கண சிரித்து வந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திரு மார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர் நடை நடவானோ–1-7-4 | பதவுரை Show / Hideகன்னல் குடம்,Kannal kudam - கருப்பஞ்சாறு நிறைந்த குடம் திறந்தால்,Thirandhal - பொள்ளல் வி்ட்டால் (அப் பொள்ளல் வழியாகச் சாறு பொசிவதை) ஒத்து,Othu - போன்று ஊறி,Oori - (வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய கண கண,Kana kana - கண கண வென்று சப்தமுண்டாகும்படி சிரித்து உவந்து,Uvandhu - ஸந்தோஷித்து முன் வந்து நின்று,Mun vandhu nindru - என் முன்னே வந்து நின்று முத்தம் தரும்,Mutham tharum - (எனக்கு) முத்தங்கொடுக்கும் தன்மை யுள்ளவனும் என் முகில் வண்ணன்,En mugil vannan - எனது முகில் போன்ற திரு நிறத்தை யுடையவனும் திரு,Thiru - பெரியபிராட்டியார் மார்வன்,Maarvan - மார்பிற் கொண்டுள்ளவனுமான இவன் தன்னை பெற்றேற்கு,Thannai petraerku - தன்னைப் பெற்ற எனக்கு தன்,Than - தன்னுடைய வாய் அமுதம்,Vaai amudham - அதராம்ருதத்தை தந்து,Thandhu - கொடுத்து என்னை,Ennai - (தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை யுடைய) என்னை தளிர்ப்பிக்கின்றான்,Thalirppikkinraan - தழைக்கச் செய்கிறான், தன் ஏற்றும்,Than etrum - (இவன்) தன்னோடு எதிர்க்கிற மாற்றலர்,Maatralar - சத்ருக்களுடைய தலைகள் மீதே,Thalaigal meedhe - தலைகளின் மேலே (அடியிட்டு) தளர்நடை நடவானோ.,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 90 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 5 | முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவது போல்
பன்னி யுலகம் பரவி யோவாப் புகழ்ப் பலதே வனென்னும்
தன் நம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ–1-7-5 | பதவுரை Show / Hideமுன்,Mun - முன்னே நல்,Nal - அழகிய ஓர்,Or - ஒப்பற்ற வெள்ளி பெருமலை,Velli perumalai - பெரிய வெள்ளிமலை பெற்ற குட்டன்,Kuttan - குட்டி மொடுமொடு,Modu modu - திடுதிடென்று விரைந்து,Viraindhu - வேகங்கொண்டு ஓட,Oda - ஓடிக்கொண்டிருக்க, பின்னை,Pinnai - (அந்தப் பிள்ளையின்) பின்னே தொடர்ந்தது,Thodarndhathu - (தன் செருக்காலே அப்பிள்ளையைப் பிடிப்பதற்காக) தொடர்ந்ததுமாகிய ஓர்,Or - ஒப்பற்ற கரு மலை,Karu malai - கரு நிறமான மலை பெற்ற குட்டன்,Kuttan - குட்டி பெயர்ந்து,Peyarnthu - தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு அடி இடுவது போல்,Adi iduvathu pol - அடி யிட்டுப் போவது போல, உலகம்,Ulagam - லோகமெல்லாங்கூடி பன்னி,Panni - (தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து பரவி,Paravi - ஸ்தோத்ரஞ்செய்தும் ஓவா,Ovaa - முடிவு காண முடியாத புகழ்,Pugazh - கீர்த்தியை யுடைய பலதேவன் என்னும்,Baladevan ennum - பலராமன் என்கிற தன் நம்பி ஓட,Than nambi oda - தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக்கொண்டிருக்க பின் கூட செல்வான்,Pin kooda selvaan - (அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான் தளர்நடை நடவானோ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 91 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 6 | ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இரு காலும் கொண்டு அங்கங்கு எழுதினாற் போல் இலச்சினை பட நடந்து
பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து
கரு கார்க் கடல் வண்ணன் காமர் தாதை தளர் நடை நடவானோ–1-7-6 | பதவுரை Show / Hideகரு கார் கடல் வண்ணன்,Karu kar kadal vannan - மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும் காமர் தாதை,Kamar thadhai - காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை,- ஒரு காலில்,Oru kaalil - ஒரு பாதத்திலே சங்கு,Sangu - சங்கமும் ஒரு காலில்,Oru kaalil - மற்றொரு பாதத்தில் சக்கரம்,Chakkaram - சக்கரமும் உள் அடி,Ul adi - பாதங்களின் உட் புறத்திலே பொறித்து,Porithu - ரேகையின் வடிவத்தோடு கூடிரேகையின் வடிவத்தோடு கூடி அமைந்த,Amaindha - பொருந்தி யிருக்கப் பெற்ற இரு காலும் கொண்டு,Iru kaalum kondu - இரண்டு திருவடிகளினாலும் அங்கு அங்கு,Angu angu - அடி வைத்த அவ்வவ் விடங்களிலே எழுதினால் போல்,Ezhuthinaal pol - சித்திரித்ததுபோல இலச்சினை பட,Ilachinai pada - அடையாளமுண்டாம்படி நடந்து,Nadandhu - அடி வைத்து பெருகா நின்ற,Perugaa nindra - (தனது வடிவழகைக் கண்டு) பொங்குகிற இன்பம் வெள்ளத்தின் மேல்,Inbam vellathin mel - ஆநந்தமாகிற ஸமுத்ரத்துக்கு மேலே பி்ன்னையும்,Pinnaiyum - பின்னும் பெய்து பெய்து,Peythu peythu - (ஆநந்தத்தை) மிகுதியாக உண்டாக்கிக் கொண்டு தளர்நடை நடவானோ ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 92 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 7 | படர் பங்கய மலர் வாய் நெகிழப் பனி படு சிறு துளி போல்
இடங்கொண்ட செவ் வாயூறி யூறி இற்றிற்று வீழ நின்று
கடுஞ்சேக் கழுத்தின் மணிக் குரல் போல் உடை மணி கண கணென
தடந்தாளினை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ–1-7-7 | பதவுரை Show / Hideபடர்,Padar - படர்ந்திருக்கிற (பெருத்திருந்துள்ள பங்கயம் மலர்,Pangayam malar - தாமரைப்பூ வாய் நெகிழ,Vaai negizha - (மொட்டாயிராமல்) வாய் திறந்து மலர பனிபடு,Panipadu - (அதில் நின்றும் பெருகுகி்ன்ற) குளிர்ச்சி பொருந்திய சிறு துளி போல,Siru thuli pola - (தேனினுடைய) சிறுத்த துளியைப்போலே இடம் கொண்ட,Idam konda - பெருமை கொண்டுள்ள செவ்வாய்,Sevvaai - தனது சிவந்த வாயினின்றும் ஊறிஊறி,Oori oori - (ஜலமானது) இடைவிடாமற் சுரந்து இற்று இற்று வீழநின்று,Itru itru veezha nindru - (நடுவே) முறிந்து முறிந்து கீழே விழும்படி நின்று -, கடும் சே,Kadum se - கொடிய ரிஷபத்தின் கழுத்தில்,Kazhuthil - கழுத்திலே கட்டப்பட்டுள்ள மணி,Mani - மணியினுடைய குரல் போல்,Kural pol - ஒலிபோலே உடை மணி,Udai mani - (தனது) திருவரையிற் கட்டிய மணி கண கண என,Kana kana ena - கண கண வென்றொலிக்க |
| 93 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 8 | பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய
அக்கு வடமிழிந் தேறித் தாழ அணி யல்குல் புடை பெயர
மக்க ளுலகினில் பெய்தறியாத மணிக் குழவி யுருவின்
தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர்நடை நடவானோ–1-7-8 | பதவுரை Show / Hideகரு,Karu - கருநிறமான சிறு,Siru - சிறிய பாறை,Parai - மலையினுடைய பக்கம் மீது,Pakka meedhu - பக்கத்திலே அருவிகள்,Aruvigal - (மேடுபள்ளமுள்ள இடங்களிற் பாய்கிற) நீரருவிகள் பகர்ந்து அனைய,Pakarnthu anaiya - ப்ரகாசிப்பதை ஒத்திருக்கிற அக்கு வடம்,Akku vadam - (திருவரையிற் சாத்திய) சங்கு மணி வடமானது ஏறி இழிந்து தாழ,Eri izhinthu thaazha - உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும் அணி,Ani - அழகிய அல்குல்,Algul - நிதம்பம் புடை,Pudai - பக்கங்களிலே பெயர,Peyara - அசையவும் உலகினில்,Ulaginil - உலகத்திலுள்ள மக்கள்,Makkal - மனிதர் பெய்து அறியா,Peythu ariya - பெற்றறியாத மணி குழலி உருவி்ன்,Mani kuzhal uruvin - அழகிய குழந்தை வழவத்தை யுடையவனும் தக்க மா மணிவண்ணன்,Thakka ma manivannan - தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும் வாசுதேவன்,Vasudevan - வஸுதேவ புத்திரனுமான இவன் தளர் நடை நடவானோ .,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 94 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 9 | வெண் புழுதி மேல் பெய்து கொண்ட அளைந்ததோர் வேழத்தின்
கருங்கன்றுபோல் தெண் புழுதி யாடித் திரிவிக் கிரமன்
சிறு புகர் படவியர்த்து ஒண் போதலர் கமலச் சிறுக் காலுரைத்து
ஒன்றும் நோவாமே தண் போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ–1-7-9 | பதவுரை Show / Hideதிரிவிக்கிரமன்,Thirivikraman - (தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன் வெள் புழுதி,Vel puzhudi - வெளுத்த புழுதியை மேல் பெய்து கொண்டு,Mel peythu kondu - மேலே போகட்டுக் கொண்டு அளைந்தது,Alaindhathu - அளைந்ததாகிய ஓர் வேழத்தின் கரு கன்று போல்,Or vezhathin karu kanru pol - ஒரு கரிய குட்டியானை போல, தெள் புழுதி,Thel puzhudi - தெளிவான புழுதியிலே ஆடி,Aadi - விளையாடி சிறு புகர் பட,Siru pugar pada - சிறிது காந்தி உண்டாக வேர்த்துப் போய், வியர்த்து,Viyarndhu - வேர்த்துப் போய், போது,Podhu - உரிய காலத்திலே அலர்,Alar - மலர்ந்த ஒள்,Ol - அழகிய கமலம்,Kamalam - தாமரைப் பூவை ஒத்த சிறு கால்,Siru kaal - சிறிய பாதங்கள் உறைத்து,Uraithu - (ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்) ஒன்றும் நோவாமே,Ondrum novamae - சிறிதும் நோவாதபடி தண் போது கொண்ட,Than podhu konda - குளிர்ந்த புஷ்பங்களுடைய தவிசின் மீது,Thavisin meedhu - மெத்தையின் மேலே தளர்நடை நடவானோ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 95 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 10 | திரைநீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண்மால் கேசவன் தன்
திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்தெங்கும் புடை பெயர
பெருநீர்த் திரை யெழு கங்கை யிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தருநீர் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ–1-7-10 | பதவுரை Show / Hideசெம் கண் மால்,Sem kan mal - சிவந்த கண்களையும் கரு நிறத்தையுமுடைய கேசவன்,Kesavan - கேசவனென்னுந் திருநாமமுடைய இவன், திரை நீர்,Thirai neer - அலைகின்ற நீரையுடைய ஸமுத்திரத்தின் நடுவில் சந்திரன் மண்டலம் போல்,Chandiran mandalam pol - (அசைந்து தோன்றுகிற) ப்ரதிபிம்ப சந்த்ர மண்டலத்தைப் போல தன்,Than - தன்னுடைய திரு நீர்,Thiru neer - அழகிய ஒளியை யுடைய முகத்து,Mugathu - திருமுகத்திலே துலங்கு,Thulangu - விளங்குகின்ற சுட்டி,Sutti - சுட்டியானது எங்கும்,Engum - எல்லா விடத்திலும் திழ்ந்து,Thizhnthu - ப்ரகாசித்துக் கொண்டு புடை பெயர்,Pudai peyar - இடமாகவும் வலமாகவும் அசையவும் பெரு நீர்,Peru neer - சிறந்த தீர்த்தமாகிய திரை எழு கங்கையிலும்,Thirai ezhu gangaiyilum - அலை யெறிகிற கங்கையிற் காட்டிலும் பெரியது,Periyathu - அதிகமான ஓர்,Or - ஒப்பற்ற தீர்த்த பலம்,Theertha balam - தீர்த்த பலத்தை தரும்,Tharum - கொடுக்கின்ற நீர்,Neer - ஜலத்தை உடைத்தான சிறு சண்ணம்,Siru sannam - சிறிய சண்ணமானது துள்ளம் சோர்,Thullam sor - துளி துளியாகச் சொட்டவும் தளர்நடை நடவான,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |
| 96 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 11 | ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே–1-7-11 | பதவுரை Show / Hideஆயர் குலத்தினில் வந்து,Aayar kulaththil vandhu - இடையர் குலத்திலே வந்து தோன்றிய,Thondriya - அவதரித்த அஞ்சனம் வண்ணன்,Anjanam vannan - மை போன்ற கருநிறமுடையனான கண்ணன் தன்னை,Thannai - தன்னை (க்கண்டு) தாயர்,Thaayar - தாய்மார்கள் மகிழ,Magizha - மனமுகக்கவும் ஒன்னார்,Onnar - சத்ருக்கள் தளர,Thalara - வருத்தமடையவும் தளர்நடை நடந்தனை,Thalar nadai nadaththana - தளர்நடை நடந்ததை வேயர்,Veyar - வேயர் குடியிலிருப்பவரெல்லாராலும் புகழ்,Pugazh - புகழப் பெற்ற விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வார் சீரால்,Seeraal - சிறப்பாக விரித்தன,Viridhthana - விவரித்துச் சொன்ன பாசுரங்களை உரைக்க வல்லார்,Uraikka vallaar - சொல்ல வல்லவர்கள் மாயன்,Maayan - ஆச்சர்யமான குணங்கள யுடையவனும் மணி,Mani - நீல மணி போன்ற வண்ணன்,Vannan - நிறமுடையனுமான எம்பெருமானுடைய தாள்,Thaal - திருவடிகளை பணியும்,Paniyum - வணங்க வல்ல மக்களை,Makkalai - பிள்ளைகளை பெறுவார்கள்,Peruvaarhal - அடைவார்கள். |