திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1-8 பொன்னியல் (11 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
97பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 1
பொன்னியல் கிண் கிணி சுட்டி புறம்கட்டி தன்னிய லோசை சலஞ்சல னென்றிட மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற் போல் என்னிடைக் கோட்டரா அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோவச்சோ–1-8-1
பதவுரை Show / Hide
பொன் இயல்,Pon iyal - பொன்னாற்செய்த
கிண்கிணி,Kinkini - அரைச் சதங்கை பாதச் சதங்கைகளையும்
சுட்டி,Sutti - சுட்டியையும்
புறம்,Puram - (அதற்கு உரிய) இடங்களிலே
கட்டி,Katti - அணிந்து
தன்,Than - சதங்கைக்கு
இயல்,Iyal - பொருந்திய
இசை,Isai - சப்தமானது
சலன் சலன் என்றிட,Salan salan endrida - சலன் சலனென்று ஒலிக்க
மின் இயல்,Min iyal - மின்னலோடு பொருந்திய
மேகம்,Megam - மேகமானது
விரைந்து,Viraindhu - வேகமாக ஓடி வந்து
எதிர் வந்தால் போல்,Ethir vanthal pol - எதிரே வந்தாற் போலே
என் இடைக்கு ஒட்டரா,En idaiyku ottara - என் இடையிலிருக்க (விரும்பி) ஓடிவந்து
அச்சோ அச்சோ,Achcho achcho - (என்னை) அணைத்துக் கொள்ள வேணும் அணைத்துக் கொள்ள வேணும்
எம்பெருமான்,Emperuman - எங்களுடைய தலைவனே!
வாரா,Vaara - வந்து
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
98பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 2
செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல் பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப சங்கு வில் வாள் தண்டு சக்கர மேந்திய அங்கைகளாலே வந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவா வந்து அச்சோ வச்சோ–1-8-2
பதவுரை Show / Hide
செங்கமலம்,Sengamalam - செந்தாமரைப் பூவில்
தேன் உண்ணும்,Then unnum - தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற
வண்டே போல்,Vande pol - வண்டுகளைப் போல
பங்கிகள் வந்து,Pangigal vandhu - (உனது) கூந்தல் மயிர்கள் வந்து
உன் பவளம் வாய்,Un pavalam vai - பவளம்போற் செந்நிறமான உனது வாயில்
மொய்ப்ப,Moippa - மொய்த்துக் கொள்ளும்படி
வந்து,Vandhu - ஓடி வந்து
சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்
வில்,Vil - ஸ்ரீசார்ங்கத்தையும்
வாள்,Val - நந்தகத்தையும்
தண்டு,Thandu - கௌமோதகியையும்
சக்கரம்,Chakkaram - ஸ்ரீஸூதர்சநாழ்வானையும்
ஏந்திய,Enthiya - (பூவேந்தினாற்போல) தரித்துக் கொண்டுள்ள
அம் கைகளாலே,Am kaigalale - அழகிய கைகளாலே
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
வந்து,Vandhu - ஓடிவந்து
ஆர தழுவா,Ara thazhuvaa - திருப்தி உண்டாகும்படி நன்றாகத் தழுவி
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
99பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 3
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ–1-8-3
பதவுரை Show / Hide
பஞ்சவர்,Panjavar - பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்,Thoodhan aay - (துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்
பாரதம்,Paaratham - (அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்) பாரத யுத்தத்தை
கை செய்து,Kai seythu - அணி வகுத்துச் செய்து
நஞ்சு,Nanju - விஷத்தை
உமிழ்,Umizh - கக்குகின்ற
நாகம்,Naagam - (கானிய) ஸர்ப்பம்
கிடந்த,Kidandha - இருந்த
நல் பொய்கை,Nal poigai - கொடிய மடுவிலே
புக்கு,Pukku - புகுந்து
அஞ்சு,Anju - (ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி
பணத்தின் மேல்,Panathin mel - (அப்பாம்பின்) படத்திலே
பாய்ந்திட்டு,Paindhittu - குதித்து
அருள்செய்த,Arulseytha - (நடமாடி அக்காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க) (அப்பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட
அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;,Anjanam vannane Achcho achcho - அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;
ஆயர்,Aayar - இடையர்களுக்கு
பெருமானே,Perumane - தலைவனானவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
100பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 4
நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன தேறி அவளும் திரு வுடம்பில் பூச ஊறிய கூனினை உள்ளே யொடுங்க அன்று ஏற வுருவினாய் அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோ வச்சோ–1-8-4
பதவுரை Show / Hide
நாறிய,Naariya - ‘நல்ல வாசனை வீசுகின்ற
சாந்தம்,Santham - சந்தனத்தை
நமக்கு,Namakku - எங்களுக்கு
இறை,Irai - கொஞ்சம்
நல்கு என்ன,Nalku enna - கொடு என்று (நீ) கூனியைக் கேட்க
அவளும்,Avalum - அந்தக் கூனியும் (‘இவர்கட்குக் கொடுத்தால் நம்மைக் கம்ஸன் தண்டிப்பனோ?’ என்று அஞ்சாமல்)
தேறி,Theri - மனம் தெளிந்து
திரு உடம்பில்,Thiru udambil - (உனது) திருமேனியிலே
பூச,Poosa - சாத்த
ஊறிய,Ooriya - வெகுநாளாயிருக்கிற
கூனினை,Kooninai - (அவளுடைய) கூனை
உள்ளே,Ulle - (அவள்) சரீரத்திற்குள்ளே
ஒடுங்க,Odunga - அடங்கும்படி
அன்று,Andru - அக் காலத்திலே
ஏற,Era - நிமிர்த்து
உருவினாய்,Uruvinai - உருவினவனே!
அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-;
எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.,Emperumaan! vandhu achcho achcho - எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.
101பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 5
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழியங் கையனே அச்சோ வச்சோ–1-8-5
பதவுரை Show / Hide
கழல்,Kalal - வீரக் கழலை யணிந்த
மன்னர்,Mannar - ராஜாக்கள்
சூழ,Sool - தன்னைச் சுற்றியிருக்க (அவர்கள் நடுவில்)
கதிர்போல்,Kathirpol - ஸூரியன்போல
விளங்கி,Vilangi - ப்ரகாசமாயிருந்து (‘கண்ணனுக்கு எழுந்திருத்தல் குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலிய மர்யாதை
எழல் உற்று,Ezhal utru - (ஒன்றும் செய்யக்கூடாது’ என்று கட்டளையிட்டிருந்த தானே தனக்கும் தெரியாமல்)(முதலில்) எழுந்திருந்து
மீண்டு,Meendu - மறுபடியும்
இருந்து,Irundhu - (தானெழுந்தது தெரியாதபடி) உட்கார்ந்து கொண்டு
உன்னை,Unnai - உன்னை
நோக்கும்,Nokkum - (பொய்யாஸநமிடுதல் முதலியவற்றால் கொல்வதாகப்) பார்த்த
பெரிது கழலை உடை,Perithu kalalai udai - மிகவும் (வஞ்சனையான) ஆலோசனையை யுடைய
துச்சோதனனை,Thuchchodhananai - துர்யோதநினை (திருவுள்ளத்திலுள்ள சீற்றமெல்லாம் பார்வையிலே தோன்றும்படி)
அழல விழித்தானே,Azhal vizhiththane - உஷ்ணமாகப் பார்த்தவனே!
அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-;
ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை
அம் கையனே,Am kaiyane - அழகிய கையிலேந்தியவனே!
அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-;
102பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 6
போரொக்கப் பண்ணி இப் பூமிப் பொறை தீர்ப்பான் தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய் காரொக்கும் மேனிக் கரும் பெருங் கண்ணனே ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ–1-8-6
பதவுரை Show / Hide
இ பூமி, E poomi - இந்தப் பூமியினுடைய
பொறை,Porai - பாரத்தை
தீர்ப்பான்,Theerppan - தீர்ப்பதற்காக
போர்,Por - யுத்தத்தை
ஒக்க,Okka - (துர்யோதநாதிகளோடு) ஸமமாக
பண்ணி,Panni - செய்து
செழு,Sezhu - செழுமைதாங்கிய
தார்,Thar - மாலையை யுடைய
விசயற்கு ஆய்,Vijayarku aay - அர்ஜுநனுக்காக
தேர்,Ther - (அவனுடைய) தேரை
ஒக்க,Okka - (எதிரிகள் தேர் பலவற்றிற்கும் இது ஒன்றுமே) ஸமமாம்படி
ஊர்ந்தாய்,Oorndhai - பாகனாய்ச் செலுத்தினவனே!
கார் ஒக்கும்,Kaar okkum - மேகத்தோடு ஒத்த
மேனி,Meni - திருமேனியில்
கரும்பெருங் கண்ணனே,Karumperum kannane - கரியவாகிப் புடைபரந்து கண்களையுடையவனே!
வந்து,Vandhu - ஓடிவந்து
ஆர,Aara - நின்றாக
தழுவா,Thazhuvaa - தழுவிக்கொண்டு
அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு (அடங்கி நற்கின்ற)
போர் ஏறே,Por ere - போர் செய்யுந் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே!
அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-;
103பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 7
மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கது அன்று என்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்சோ வச்சோ சங்க மிடத்தானே அச்சோ வச்சோ–1-8-7
பதவுரை Show / Hide
மிக்க பெரும்புகழ்,Mikka perumpugazh - (ஔதார்யத்தால்) மிகுந்த கீர்த்தியை யுடைய
மா வலி,Maa vali - மஹாபலி (செய்த)
வேள்வியில்,Velviyil - யாகத்திலே (வாமநனாய்ச் சென்ற உனககு அந்த மஹாபலி நீ கேட்டதைக் கொöடுக்க முயன்ற வளவிலே)
இது,Ithu - நீ கொடுக்கிற விது
தக்கது அன்று,Thakkathu andru - தகுதியானதன்று’
என்று,Endru - என்று முறையிட்டு
தானம்,Thaanam - பூமி தானத்தை (அவன் தத்தம் பண்ணும் போது நீர் விழ வொட்டாமல்)
விலக்கிய,Vilakkiya - தடுத்த
சுக்கிரன்,Sukiran - சுக்கிராச்சாரியனுடைய
கண்ணை,Kannai - ஒரு கண்ணை
துரும்பால்,Thurumpaal - (உன் கையிலணிந்திருந்த) தர்ப்ப பவித்ரத்தின் நுனியால்
கிளறிய,Kilarriya - கலக்கின
சக்கரம் கையனே,Chakkaram kaiyane - சக்ராயுதமேந்திய கையை யுடையவனே!
அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-;
சங்கம்,Sangam - பாஞ்ச ஜன்யத்தை
இடத்தானே,Idaththane - இடக்கையிலேந்தினவனே!
அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-;
104பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 8
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ–1-8-8
பதவுரை Show / Hide
இது,Ithu - (வாமநனாய்ச் சென்ற திருமால் மாவலியிடத்தில் நீரேற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து அளக்கப் புகும் போது
அது கண்ட மஹாபலி புத்ரனான நமுசி ஓடிவந்து)
(யாசிக்கும் போதிருந்த வடிவம் மாறி யளக்கிற) இது

என் மாயம்,En maayam - என்ன மாயச் செய்கை!;
என் அப்பன்,En appan - என் தகப்பன்
அறிந்திலன்,Arinthilan - (நீ செய்யும் இந்தமாயத்தை) அறியவில்லை
முன்னைய வண்ணமே கொண்டு,Munnaiya vanname kondu - நீ யாசிக்க வந்த போதிருந்த வடிவத்தையே கொண்டு
அளவாய்,Alavaay - அளப்பாயாக
என்ன,Enna - என்று சொல்ல
மன்னு,Mannu - (இப்படி) பிடிவாதமாய் நின்ற
நமுசியை,Namusiyai - (அந்த) நமுசி யென்பவனை
வானில்,Vaanil - ஆகாசத்திலே
சுழற்றிய,Suzharriya - சுழலச் செய்த
மின்னு முடியனே,Minnu mudiyane - விளங்குகின்ற கிரீடத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ-;
வேங்கடம்,Vengadam - திருமலையிலே
வாணனே,Vaanane - வாழுமவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
105பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 9
கண்ட கடலும் மலையும் உலகேழும் முண்டத்துக் காற்றா முகில் வண்ணா ஓ ஒ வென்று இண்டைச் சடை முடி ஈசன் இரக்கொள்ள மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ–1-8-9
பதவுரை Show / Hide
கண்ட,Kanda - கண்ணாற்கண்ட
கடலும்,Kadalum - ஸமுத்ரங்களும்
மலையும்,Malayum - மலைகளும்
உலகு ஏழும்,Ulaku ezhum - கீழ் ஏழ் மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்களும் (ஆகிய எல்லாவற்றையுமிட்டு நிறைக்கப் பார்த்தாலும்)
முண்டத்துக்கு,Mundaththukku - (என் கையிலிருக்கிற ப்ரஹ்ம) கபாலத்துக்கு
ஆற்றா,Aatraa - போதாவாம்;
முகில் வண்ணா,Mugil vanna - மேக வண்ணனே!
ஓஒ!,Ooo - ஓஒ! (ஹாஹா!)
என்று,Endru - என்று கூப்பிட்டு
இண்டை,Indai - நெருங்கின
சடை முடி,Sadai mudi - ஜடா பந்தத்தை யுடைய
ஈசன்,Eesan - சிவன்
இரக்கொள்ள,Irakkolla - பிச்சை யெடுக்க
மண்டை,Mandai - (அவன் கையிலிருந்த ப்ரஹ்ம) கபாலத்தை
நிறைத்தானே,Niraiththane - (மார்பிலிருந்து உண்டான ரத்தத்தால்) நிறையச் செய்தவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
மார்வில்,Maarvil - திரு மார்பிலே
மறுவனே,Maruvane - ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
106பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 10
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்ன மதானானே அச்சோ வச்சோ அரு மறை தந்தானே அச்சோ வச்சோ-1-8-10
பதவுரை Show / Hide
மன்னிய,Manniya - நித்ய ஸித்தமான
நால் மறை,Naal marai - சதுர் வேதங்களும்
முற்றும்,Mutrum - முழுவதும்
மறைந்திட,Maraindhida - மறைந்து விட (அதனால்)
அன்னிய,Anniya - நெருங்கிய
பேர் இருள்,Per irul - பெரிய அஜ்ஞாநாந்தகாரம்
சூழ்ந்து,Soozhndhu - பரவி
உலகை,Ulakai - லோகங்களை
மூட,Mooda - மறைத்துக் கொள்ள
பின்,Pin - பின்பு
உலகினில்,Ulakinil - இந்த லோகங்களில்
பேர் இருள்,Per irul - (அந்த) மிகுந்த அஜ்ஞாகாந்தகாரமானது
நீங்க,Neenga - நீங்கும்படி
என்று,Endru - அக் காலத்தில்
அன்னம் அது ஆனானே,Annam adhu aanane - ஹம்ஸமாய் அவதரித்தவனே!
அரு மறை தந்தானே,Aru marai thanthane - (அந்த ரூபத்தோடு) அருமையான வேதங்களை உபகரித்தவனே!
அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ
107பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 11
நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருக வென்று ஆய்ச்சி யுரைத்தன மச்சணி மாடப் புதுவை கோன் பட்டன் சொல் நச்சலும் பாடுவார் நீள் விசும்பாள்வரே–1-8-11
பதவுரை Show / Hide
நச்சுவார் முன்,Nachchuvaar mun - (தன்னை) விரும்பிப்ப பக்தி பண்ணுமவர்களுடைய முன்னே
நிற்கும்,Nirkum - வந்து நிற்குந் தன்மையுள்ள
நாராயணன் தன்னை,Narayanan thannai - நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை
ஆய்ச்சி,Aaychchi - இடைக் குலத்தவளான யசோதை
அச்சோ வருக என்று உரைத்தன,Achcho varuga endru uraiththana - (அணைத்துக் கொள்ளுகையிலுண்டான விருப்பந் தோன்றும்படி) ‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை
மச்சு அணி,Machchu ani - பல நிலைகளால் அழகிய
மாடம்,Maadam - மாளிகைகளை யுடைய
புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்,Kon - நிர்வாஹகரான
பட்டன்,Pattan - பெரியாழ்வார்
சொல்,Sol - சொன்ன இப் பத்துப் பாசுரங்களையும்
பாடுவார்,Paaduvaar - பாடுபவர்கள்
நிச்சலும்,Nichchalum - எப்போதும்
நீள் விசும்பு,Neel visumbu - பரமாகாசமாகிற பரமபதத்திற்கு
ஆள்வர்,Aalvar - நிர்வாஹகராவர்.