திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1888 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவைக் காட்டி வாழ்வித்ததுவே அன்றிக்கே சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும்) 1 | பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி –10-5-1 | பதவுரை Show / Hideபூ கோதை ஆய்ச்சி, Poo Kothai Aaychchi - புஷ்பங்களணிந்த மயிர்முடியை யுடையளான யசோதையினால் (- (சப்பாணி)) கடை, Kadai - கடையப்பட்ட வெண்ணெய், Vennai - வெண்ணெயை புக்கு உண்ண, Pukku Unna - (கள்ளத்தனமாய்ப்) புகுந்து அமுது செய்தவளவில் அவள், Aval - அந்த யசோதை ஆங்கு, Aangu - அவ்விடத்திலேயே ஆர்த்து, Aarththu - (தாம்பினால்) கட்டி புடைக்க, Pudaikka - அடிக்க புடை உண்டு, Pudai Undu - அடிபட்டு ஏங்கி இருந்து, Aengi Irundhu - (சற்றுப்போது) அழுது கொண்டிருந்த (பிறகு) சிணுங்கி, Sinungi - சீராட்டப்பெற்று விளையாடும், Vilaiyadum - விளையாடுகின்ற ஓங்கு ஓதம் வண்ணனே, Ongu Otham Vannane - தேங்கின கடல் போன்ற வடிவையுடையவனே! சப்பாணி, Sappaani - சப்பாணி கொட்டவேணும் ஒளி மணி வண்ணனே, Oli Mani Vannane - ஒளிபொருந்திய மணி போன்ற நிறமுடையவனே! |
| 1889 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தயிரையும் நெய்யையும் களவு கண்டு புசிக்கை போராததொரு செயல் இறே இப்படி போராத செயலைச் செய்தோம் என்று லஜ்ஜிக்கவும் அறியாதே தனக்கு பொருந்தின செயலைச் செய்தானாய் அத்தாலே என்னை எழுதிக் கொண்டு இருக்கிறவனே – தனக்குத் தகுதியான செயலைச் செய்தானாய் செய்ததுக்கு லஜ்ஜிக்கவும் கூட அறியாத மௌக்த்த்யத்திலே யாயிற்று இவளும் தோற்றது) 2 | தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்
டே ஏய் எம்பிராக்கள் இரு நிலத்து எங்கள் தம்
ஆயர் அழக வடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-2 | பதவுரை Show / Hideதாயர் மனங்கள் தடிப்ப, Thaayar Manangal Thadippa - தாய்மாருடைய நெஞ்சு துடிக்கும்படியாக (- (சப்பாணி கொட்டாய்) (சப்பாணி கொட்டாய்)) தயிர் நெய் உண்டு, Thayir Ney Undu - தயிரையும் நெய்யையும் வாரி யமுதுசெய்து ஏய், Ey - பொருத்தமான காரியம் செய்த்தாக நினைத்திருக்கிற எம் பிராக்கள், Em Pirakkal - எம்பெருமானே! இரு நிலத்து, Iru Nilathu - விசாலமான இப்பூமண்டலத்திலே எங்கள் தம் ஆயர், Engal Tham Aayar - எங்கள் இடைச்சாதிக்குள்ளே அழக, Azhaga - அழகிற் சிறந்தவனே! அரவிந்தம், Aravindham - தாமரைப் பூப்போன்ற அடிகள் வாயவனே, Adigal Vaayavane - திருவடிகளையும் திருமுகத்தையு முடையவனெ! மால் வண்ணனே, Maal Vannane - கரிய திருமேனியனே! |
| 1890 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாகவதர்களோடே அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே –இங்கனே தாவா மோரை உருட்டி பிரயோஜனபரமான தயிரையும் நெய்யையும் அமுது செய்யும் யாயிற்று- உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே ஸ்ரீ தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே – எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய்) 3 | தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம்மோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி –10-5-3 | பதவுரை Show / Hideதா, Thaa - தாவி (- (சப்பாணி கொட்டாய்) (தாமரைக் கண்ணனே சப்பாணி)) மோர் உருட்டி, Moar Urutti - மோர்ப்பானைகளை உருட்டி விட்டு தயிர் நெய் விழுங்கிட்டு, Thayir Ney Vizhungittu - தயிரையும் நெய்யையும் விழுங்கிவிட்டு தாமோ தவழ்வர் என்று, Thamo Thavazhvar Endru - ‘இப்படி பெரிய காரியத்தைச் செய்தவரோ (ஒன்று மறியாத குழந்தை போலத்) தவழ்கின்றார்’ என்று சொல்லி ஆய்ச்சியர் தாம், Aaychiyar Tham - இடைச்சிகள் தாம்பினால் ஆர்க்க, Thampinaal Aarkka - தாம்பால் கட்டவும் கையால் மோதர, Kaiyala Modhara - கைகளால் அடிக்கவும் தழும்பு இருந்த, Thazhumbu Irundha - அதனால் காய்ப்பேறிக் கிடக்கின்ற தாமோதரா, Thamodharah - தாமோதரனே! |
| 1891 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே லோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற மற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் – ஜாத்யுசிதமான வ்ருத்தியை உடையவனே கன்றுகள் மேய்க்குமவனே) 4 | பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-4 | பதவுரை Show / Hideபெற்றார், Petraar - தாய் தந்தையருடைய (- (சப்பாணி கொட்டாய்)) தளை, Thalai - கால்விலங்கு கழல, Kazhala - கழன்று விழும்படி பேர்ந்து, Perndhu - வந்தவதரித்து அங்கு, Angu - அவ்விடத்தில் அயலிடத்து உற்றார் ஒருவரும் இன்றி, Ayaliadathu Utrar Oruvarum Inri - நெருங்கின உறவுமுறையார் ஒருவருமில்லாமற்போக உலகினில் மற்றாரும் அஞ்ச, Ulaginil Matraarum Anja - உலகத்திலுள்ள எல்லாரும் அஞ்சும்படியாக வஞ்கம் பெண் நஞ்ச உண்ட, Vanjkam Pen Nanja Unda - வஞ்சனையே வடிவாக வந்த பூதனையின் (முலையில் தடவின) விஷயத்தை அழுது செய்தருளின கன்று ஆயனே, Kandru Aayaney - கோபாலகிருஷ்ணனே! கார் வண்ணனே, Kaar Vannane - காளமேகநிறத்தனே! |
| 1892 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உனக்கு பருத்த அப்பங்களை இடைச்சிகள் தருவர்கள் –அவர்கள் பேரிட்டு எங்களை வாழ்விக்க வேணும் – கண்டு கொண்டு இருக்க வேண்டும் கைகளால் சப்பாணி கொட்ட வேணும்) 5 | சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி –10-5-5 | பதவுரை Show / Hideபேய்ச்சி முலை உண்ணட பிள்ளாய், Peychchi Mulai Unnada Pillai - பூதனையின் முலையை உறிஞ்சியுண்டே கண்ணபிரானே! (- (ஓர் ஆயிரம் சப்பாணி) (தடங்கைகளால் சப்பாணி கொட்டாய்)) வரம் தர, Varam Thara - என் கோரிக்கையை நீ நிறைவேற்றுதற்காக நின்னை, Ninnai - உன்னை சோத்தம் என, Soththam Ena - சோத்தமென்று சொல்லிக்கொண்டு தொழுவன், Thozhuvan - தொழுகின்றேன் ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகள் பெரியன அப்பம் தருவர், Periyana Appam Tharuvar - பெரிய அப்பங்களை உனக்குக் கொடுப்பர்கள், அவர்க்காக சாற்றி, Avarkkaaga Saartti - அவர்களுக்காக வென்று ஒரு வியாஜமிட்டு |
| 1893 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கருவிளைப் பூவைக் காட்டா நின்றுள்ள நிறத்தையும் – ஆதி ராஜ்ய சூசகமான முடியையும் உடையனாய்க் கொண்டு ஸ்ரீ நந்த கோபர் கொண்டாடி வளர்க்க-வளர்ந்த செருக்கை உடையவனே – ஜாத்யுசிதமாம் படி குடமாடி வாழ்வித்த நீ சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும்) 6 | கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நானவலப்பம் தருவன் கருவிளைப்
பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே
கோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி –10-5-6 | பதவுரை Show / Hideகருவிளைப்பூ அவர், Karuvilaippoo Avar - காக்கணம் பூவைக் காட்டுகின்ற நிறமுடையவனே! (- (சப்பாணி கொட்டாய்)) நீள் முடி, Neel Mudi - நீண்ட திருவபிஷேக முடையவனே! நந்தன் தன் போர் ஏறே, Nandan Than Por Aere - நந்தகோபன் வளர்க்க வளர்ந்த செருக்கின காளையே! கோவலனே, Kovalane - பசுமேய்க்க வல்லவனெ! உன் வயிறு கேவலம் அன்று, Un Vayiru Kevalam Andru - உன் வயிறு ஸாமந்யமானதன்று, நான் வயிற்றுக்கு அவல் அப்பம் தருவன், Naan Vayirukku Aval Appam Tharuven - (உனது பெரிய) வயிற்றுக்குப் போரும்படியாக அவலும் அப்பமும் நான் தருவேன், குடம் ஆடீ, Kudam Aadi - குடக்கூத்தாடினவனே! |
| 1894 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிள்ளைத் தனத்திலே கண் அழிவு அற்று இருக்கச் செய்தே உன்னை நோக்கித் தந்து உபகரித்தவனே – அன்று பூதனை தன்னை முடித்து உன்னை நோக்கித் தந்த நீ இன்று நான் சொல்லிற்று செய்ய வேண்டாவோ) 7 | புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத்
துள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி –10-5-7 | பதவுரை Show / Hideபுள்ளினை வாய் பிளந்து, Pullinai Vaai Pilandhu - பகாசுரனுடைய வாயைக் கிழித்தெறிந்து (- (சப்பாணி கொட்டாய்,) (பேய் முலை உண்டானே! சப்பாணி)) பூ குருந்தம் சாய்த்து, Poo Kurundham Saaythu - பூத்திருந்த குருந்த மரத்தைச் சாய்த்து முறித்து துள்ளி விளையாடி, Thulli Vilaiyaadi - நிலத்தில் நில்லாமல் விளையாடல்களைச் செய்து தூங்கு உறி வெண்ணெயை, Thoongu Uri Vennaiyai - தொங்குகின்ற உறியிலுள்ள வெண்ணெயை அள்ளிய, Alliya - வாரியெடுத்த கையால், Kaiyala - கைகளாலே அடியேன் முலை நெருடும், Adiyen Mulai Nerudum - என்னுடைய முலையை (ப்பால் சுரப்பதற்காக) நெருடுகின்ற பிள்ளை பிரான், Pillai Piraan - பிள்ளையாயும் பிரவுவாயுமிருப்பவனே! |
| 1895 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பேய் என்று அவளை புத்தி பண்ணி முலை வழியே அவளைப் பிடித்து முலை உண்டு அவளை முடித்த திருப் பவளத்தை உடையவனே – உகவாதாரை அழியச் செய்வுதி-உகப்பார் சொல்லிற்றும் செய்ய வேண்டாவோ) 8 | யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாயா வலவைப் பெண் வந்து முலை தரப்
பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-8 | பதவுரை Show / Hideயாயும், Yaayum - பெற்ற தாயாகிய நானும் (- (சப்பாணி கொட்டாய்) (மால் வண்ணனே! சப்பாணி கொட்டாய்)) பிறரும், Pirarum - மற்றுமுள்ளவர்களும் அறியாத, Ariyadha - கண்விழித்திருக்கப் பெறாமல் உறங்கிக் கொண்டிருந்த யாமத்து, Yaamathu - நடுச்சாமத்திலே மாயம், Maayam - வஞ்சகையாய் அலவை பெண், Alavai Pen - துஷ்டஸ்த்ரீயான பூதனை வந்து, Vandhu - (கம்ஸனால் ஏவப்பட்டுத் திருவாய்ப்பாடிக்கு) வந்து முலை தா, Mulai Thaa - முலைகொடுத்தவளவிலே அவளை, Avalai - அப்பூதனையை பேய் என்று பிடித்து, Pei Endrupidithu - பேய்ச்சி யென்றறிந்து பிடித்துக்கொண்டு உயிர் உண்ட, Uyir Unda - (அம்முலைவழியே அவளது) பிராணனைக் கவர்ந்த வாயவனே, Vaivane - திருப்பவளத்தை யுடையவனே! |
| 1896 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூதனை வரும் அளவும் ஆறி இருந்து கிட்டிக் கொண்டு தப்பாத படி மேல் விழுந்து பிடித்து முலை உண்டு அவளை முடித்து தன்னைக் காத்த மகோதாரனே – உதாராராய் இருப்பாருக்கு அபேஷிதங்களை எல்லாம் செய்ய வேண்டாவோ) 9 | கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை
மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட
வள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-9 | பதவுரை Show / Hideகள்ளம் குழவி ஆய், Kallam Kuzhavi Aayi - மாயக் குழந்தையாய்ப் பிறந்து சகடத்தை, Sakadatthai - (அஸுரன் ஆவேசித்திருந்த வண்டியை காலால் தள்ளி உதைத்திட்டு, Kaalal Thalli Uthaithittu - திருவடியாலே தள்ளி யுதைத்தவனாயும் தாய் ஆய் வருவாளை, Thaai Aayi Varuvaalai - தாய்வேஷம் பூண்டு வந்த பூதனையை மெள்ள தொடர்ந்து பிடித்து, Mella Thodarndupidithu - விதானித்திருந்து மேல் விழுந்து பிடித்து ஆர் உயிர், Aar Uyir - (அவளது) அருமையான உயிரை உண்ட, Unda - கவர்ந்தவனான வள்ளலே, Vallale - உதாரனே! சப்பாணி கொண்டாய், Chappaani Kondaai - பால் வண்ணனே! சப்பாணி கொட்டாய் |
| 1897 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பேராளன் –ஸ்ரீ நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -என்னா-அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே பேராளன் -என்கிறார் – இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது – ஸ்ரீ பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று – இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது தம்மை அறியாமை இவ்வனுபவம் தானே பிறருக்கும் பலமாய் இருக்கிறது) 10 | காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10 | பதவுரை Show / Hideகார் ஆர் புயல் கை, Kaar Aar Puyal Kai - கார்காலத்து நிறையநீர் கொண்டெழுந்த மேகம் போன்ற ஔதார்யமுடையவராய் (- (சப்பாணி கொட்டாய்) (சப்பாணி கொட்டாய்)) மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவராய் பேராளன், Peraalan - பெருமை பொருந்தியவரான கலி கன்றி, Kali Kankri - திருமங்கையாழ்வாருடைய நெஞ்சில், Nenjil - திருவுள்ளத்திலே பிரியாது, Priyaadhu - ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாமல் இடம் கொண்ட, Idam Konda - நித்யவாஸம் பண்ணுகின்ற சீரானா, Seerana - சீர்மை பொருந்தியவனே! செம் தாமரை கண்ணா, Sem Thaamarai Kanna - செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடையவனே! தண் துழாய் தார் ஆளா, Than Thuzhai Thar Aala - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்துள்ளவனே! தட மார்வா, Thad Marvaa - விசாலமான திருமார்வை யுடையவனே! |