திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 11-2 குன்றமெடுத்து (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1962பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தால் சொல்லிற்று ஆயிற்று என் என் அவனை என் முலையோடு கொடு வந்து சேர்க்க வல்லார் இல்லையோ -என்கிறாள்) 1
குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும் மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான் முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ –11-2-1
பதவுரை Show / Hide
குன்றம், Kundram - கோவர்த்தனமலையை
எடுத்து, Eduthu - குடையாக வெடுத்துப்பிடித்து
மழை தடுத்து, Mazhai Thaduthu - மழையைத்தடை செய்தவனாயும்
இளையாரொடும், Ilaiyarodum - இளம் பெண்களோடே
மன்றில், Manril - நாற்சந்தியிலே
குரவை பிணைந்த, Kuravai Pinaintha - கைகோத்துக் குரவைக் கூத்தாடினவனாயுமுள்ள
மால், Maal - கண்ணபிரான்
என்னை மால் செய்தான், Ennai Maal Seithaan - என்னை மதிமயங்கப் பண்ணிவிட்டான்
முன்றில், Munril - வாசலிலே
தனி நின்ற, Thani Nindra - தனியேநின்ற
பெண்ணைமேல், Pennai Mel - பனைமரத்தின் மீது
கிடந்து, Kidandhu - இருந்துகொண்டு
ஈர்கின்ற, Eerkingira - ஹிம்ஸிக்கின்ற
அன்றிலை, Anrilai - அன்றிற்பறவையை
கூட்டின், Koottin - கூட்டில் நின்றும்
பிரிக்ககிற்பவர்            ஆர்கொலோ, Pirikkakirbavar Arkoloo - பிரித்துவிடவல்லவர் யாரோ? (அறியேன்)
1963பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இந்த இடையனானவன் வாயிலே வைத்து-ஸ்த்தானே சத்தான நின்று ஏங்கி ஊதுகிற குழலானது என்னோடே பாலிசமான வியாபாரங்களை பண்ணா நின்றது) 2
பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே –11-2-2
பதவுரை Show / Hide
பூ குருந்து ஓசித்து, Poo Kurunthu Osiththu - பூத்திருந்த குருந்தமரத்தை முறித்தொழித்தவனாயும்
ஆனை காய்ந்து, Aanaik Kaayndhu - ரிஷபங்களைச் சீறிமுடித்தவனாயும்
அரி மா, Ari Maa - (கேசியென்ற) சத்துருவான குதிரையை
செகுத்து, Sekuthu - கொன்றவனாயும்
ஆங்கு, Aangu - கம்ஸனது அரண்மனை வாசலிலே
வேழத்தின், Vezhaththin - குவலயாபீடமென்கிற யானையினுடைய
கொம்பு கொண்டு, Kombu Kondo - தந்தத்தைப் பறித்தெறிந்தவனாயும்
வன்பேய், Vanpei - (பூதனையென்னும்) வலிய பேய்ச்சியினுடைய
முலை, Mulai - (நஞ்சு தீற்றிய) முலையை
வாங்கி, Vaangi - கையிற்பிடித்து
உண்ட அவ் வாயன், Unda Av Vayan - உறிஞசியுண்ட அப்படிப்பட்ட திருப்பவளத்தை யுடையவனாயுமிருக்கிற கண்ணபிரான்
நிற்க, Nirka - உதாஸீநனாயிருக்க
ஆயன், Aayan - அந்த கோபாலகிருஷ்ணனுடைய
வாய், Vaai - வாயிலே
ஏங்கு, Aengu - ஒலிக்கின்ற
இ வேய் குழல், I Vei Kuzhal - இந்த வேய்ங்குழலானது
என்னோடு, Ennodu - என்திறத்திலே
இளைமை ஆடும், Ilaiyai Aadum - சில சிறுச்சேவகங்கள் செய்யாநின்றது!
1964பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அப்போது இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டத்தையே நினைத்துக் கொண்டு இருக்கிற என்னை – சந்த்யா சமயத்திலே தென்றல் ஆனது வந்து நலியா நின்றது –அதுக்கு மேலே – வெளி நிலத்தில் நாகைத் தொடர்ந்து-அது கை புகுந்தால் அல்லது மீளாத படி இருக்கிற வ்ருஷத்தின் உடைய கழுத்தில் மணி யோசையானது ஆராட்சி இல்லாத இடத்தில் செயலைச் செய்யா நின்றது) 3
மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன் அல்லி மலர்த் தண் துழாயை நினைந்து இருந்தேனையே எல்லியின் மாருதம் வந்தடும் அதுவன்றியும் கொல்லை வல்லேற்றின் மணியும் கோயின்மை செய்யுமே –11-2-3
பதவுரை Show / Hide
மல்லொடு, Mallodu - மல்லர்களும்
கஞ்சனும், Kanjanum - கம்ஸனும்
துஞ்ச, Thunja - முடியும்படி
வென்ற, Vendru - வெற்றிபெற்ற
மணி வண்ணன், Mani Vannan - நீலமணிவண்ணனான கண்ணபிரானுடைய
அல்லி தண் துழாய் மலரையே, Alli Than Thuzhai Malaraie - இதழ்களை யுடையதாய்க்குளி திருந்துள்ள திருத்துழாய் மாலையையே
நினைந்திருந்தேனை, Ninaindhirundhenai - சிந்தித்துக்கொண்டிருக்கின்ற என்னை
எல்லியில் மாருதம், Elliyil Maarudham - அந்திப்போதில் வீசும் காற்றானது
வந்து, Vandhu - நானிருக்குமிடத்தில்வந்து வீசி
அடும், Adum - நலிகின்றது
அது அன்றியும், Athu Anriyum - அதுவுந்தவிர
கொல்லை வல் ஏற்றின் மணியும், Kollai Val Aetrin Maniyum - வெளி நிலங்களில் நின்றும் மீண்டுவருகிற வலியகாளைகளின் கழுத்து மணியோசையும்
கோயின்மை செய்யும், Koyinmai Seyyum - தெந்தரவுபடுத்தாநின்றது.
1965பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவருடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகளை அனுசந்திக்கும் போது எல்லாம் – கறுத்த தன்மையை உடைத்தாய் இருக்கிற கடல் ராத்ரியிலே என் எளிமை கண்டு மிகைத்து கூப்பிடா நிற்கும் – அதுக்கு மேலே –நான் வருந்தும் படியாக பலவானாய் இருக்கிற வாடையானது வாரா நின்றது – ஓர் அபலை இதுக்கு கடகிடவோ) 4
பொருந்து மா மரம் ஏழு எய்த புனிதனார் திருந்து சேவடி என் மனத்து நினைதொறும் கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அதுவன்றி வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் –11-2-4
பதவுரை Show / Hide
பொருந்து, Porundhu - தம்மில்தாம் பொருந்திநின்ற
மாமரம் ஏழும் எய்த, Mamaram Ezham Eytha - பெரிய ஸாலவ்ருக்ஷங்களேழையும் அம்புசெலுத்தித் துளைபடுத்தின
புனிதனார், Punithanar - பரமபாரிசுத்தரான பெருமாளுடைய
திரு உந்து, Thiru Unthu - ஐச்வர்ய ப்ரகாசமான
சே அடி, Sae Adi - திருவடிகளை
என் மனத்து, En Manathu - என் நெஞ்சிலே
நினை தொறும், Ninai Thorum - அநுஸந்திக்கும் போதெல்லாம்
கரு தண்மா கடல், Karuthu Thanma Kadhal - கறுத்துக் குளிர்ந்து பெரிதான கடலானது
கங்குல், Kangul - இரவுமுற்றும்
ஆர்க்கும், Aarkkum - ஆரவாரிக்கும்
அது அன்றியும், Athu Anriyum - அதுவுந் தவிர
வாடை, Vadai - வாடைக் காற்றும்
வருந்த, Varuntha - நான் பரிதபிக்கும்படியாக
வரும், Varum - வந்து வீசுகின்றது
இதற்கு, Idharku - இதற்குப் பாரிஹாரமாக
இனி என் செய்கேன், Ini En Seyken - இனி என்ன பண்ண வல்லேன்
1966பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபரான அவர் இடையாட்டாத்தோமான பின்பு இறே இவை நமக்கு இப்படியாகப் புகுந்தது – அவருடைய பிரணயித்வம் கண்டு நாம் அகப்பட்ட பின்பு இறே- இவை நமக்குப் பாதகமாகப் புக்கது – பூர்வ அபராதங்களுக்கு சேர்த்தி போராதாகிலும் ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பின்னை மணாளன் திறத்தோம் ஆன பின்பு அன்றோ-இவை இப்படி யாயிற்று – சாமான்யன் என்று ஈடும் ஈடெல்லாம் இட அமையும் என்பாரைப் போலே அவளோடு ஒரு சம்பந்தம் சொல்லி நலிகிறவை நலிந்தால் என்-என்பாராம்) 5
அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும் மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும் பொன்னம் கலை அல்குல் அன்னம் மென்னடைப் பூங்குழல் பின்னை மணாளர் திறத்த மாயின பின்னையே –11-2-5
பதவுரை Show / Hide
அன்னை முனிவதும், Annai Munivadhum - பெற்றதாய் சீறிச் சொல்லுவதும் (- (அதற்கு முன்பு இல்லை))
அன்றிலின்     குரல் ஈர்வதும், Anrilin Kural Eirvadhum - அன்றிற்பறவையின்குரல் ஹிம்ஸிப்பதும்
மன்னு மறிகடல் ஆர்ப்பதும், Mannu Marikadal Aarpadhum - எப்போதும் அலைமடியப் பெற்ற கடல் கோஷிப்பதும்
வளை சோர்வதும், Valai Soorvadhum - கைவளைக்ள கழல்வதும் (ஆகிய இவையெல்லாம்)
அம், Am - அழகிய
பொன் கலை, Pon Kalai - பொன்னாடையணிந்த
அல்குல், Alkul - நிதம்பத்தையுடையவளும்
அன்னம் மென் நடை, Annam Men Nadai - அன்னத்தின்நடை போன்று அழகிய நடையையுடையவளும்
பூ குழல், Poo Kuzhal - பூவணிந்த கூந்தலை யுடையவளுமான
பின்னை, Pinnai - நப்பின்னைப் பிராட்டியின்
மணாளர், Manalar - நாயகரான கண்ணபிரானுடைய
திறத்தம் ஆயின பின்னையே, Thiraththam Aayin Pinnaiye - விஷயத்தில் ஈடுபட்டோ மானபிறகே
1967பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கோழியும் கூகின்றது இல்லை –விடிவுக்கு பிராப்தமான இதுவும் கூட அரிதாக நின்றது – கூர் இருள் ஆயிற்றே –விடிந்த பின்பும் இருள் கால் வாங்குகிறது இல்லை) 6
ஆழியும் சங்கும் உடைய நாங்கள் அடிகள் தாம் பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார் தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே –11-2-6
பதவுரை Show / Hide
ஆழியும் சுங்கும் உடைய, Azhiyum Sungum Udaiya - திருவாழி திருச்சங்குகளை யுடையரான
நங்கள் அடிகள் தாம், Nangal Adigal Thaam - அஸ்மத்ஸ்வாமியான ஸர்வேச்வரன்
நம்மை, Nammai - நம்மை
பாழிமையான கனவின், Pazhimaiyana Kanavin - மிகப்பெரிதாய் ஸ்வப்நதுல்யமான ஸம்ச்லேஷத்தினால்
பகர்வித்தர், Pakarviththar - இப்படி கூப்பிடும்படியாகச் செய்துவிட்டார்
தோழியும் நானும் ஒழிய, Thozhiyum Naanum Ozhiy - தோழியும் நானும் தவிர
வையம், Vaiyam - மற்ற உலகத்தாரெல்லாரும்
துயின்றது, Thuyinrathu - உறங்கிவிட்டார்க்ள்
கோழியும், Kozhiyum - கோழிகூட
கூகின்றது இல்லை, Kookindrathu Illai - (விடிவுக்கு அறிகுறியாகக்) கூவுகினறதில்லை
கூர்இருள் ஆயிற்றே இன்னமும், Koorairul Aayitree Innamum - நள்ளிருளா யிருக்கின்றதே!
1968பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த காமன் -எனக்கு நன் மகன் –சாமங்கள் தோறும் காமாக்னியை தூவா நின்றான் – தனக்கு நான் அனுவர்த்த நீயையான ஆகாரம் கிடக்கச் செய்தே என்னுடைய இம்முலைகள் தாம் அவனுக்கு என்றே யாயிற்று வளருகிறது) 7
காமன் தனக்கு முறை யல்லேன் கடல் வண்ணனார் மா மணவாளர் எனக்குத் தான் மகன் சொல்லில் யாமங்கள் தோறும் எரி வீசும் என்னிளம் கொங்கைகள் மா மணி வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே –11-2-7
பதவுரை Show / Hide
காமன் தனக்கு முறை அல்லேன், Kaaman Thanakku Murai Allae - மன்மதனால் நான் நலியப்பெறுதற்கு முறையுடையே னல்லேன்
சொல்லில், Sollil - ஏனென்னில்
கடல் வண்ணனார், Kadal Vannanaar - கடல்வண்ணரான கண்ணபிரான்
எனக்கு மா மணவாளர், Enakku Maa Manavaalar - எனக்குச்சிறந்த நாயகராயிருக்கின்றார் (இவ்வழியாலே)
தான், Thaan - அந்த மன்மதன் தான்
எனக்கு மகன், Enakku Magan - எனக்கு மகனாகப் பெற்றான் (அப்படியிருந்தும்)
யாமங்கள் தோறு, Yaamangal Thoru - எப்போதும்
எரி வீசும், Eri Veesum - நெருப்பைத் தூவுகின்றாள்
என் இள கொங்கைகள், En Ilai Kongkaigal - எனது இளமுலைகளோ வென்னில்
மா மணி வண்ணர் திறத்த ஆய்வளர்கின்ற, Maa Mani Vannaar Thiratha Aayvalarkindra - நீலமணிவண்ணரான அப்பெருமாளை நோக்கியே வளர்கின்றனவாயுள்ளன
1969பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷகன் பாதகன் ஆனவாறே அவன் பரிகரமும் பாதகமாம் அத்தனை ஆகாதே – அவன் பாதகனாய் புக்கவாறே அவனை அனுவர்த்தித்த அவன் பரிகரமும் பாதகமாகப் புக்கது – இவள் சன்னதியிலே வர்த்திக்கில் இவளை அனுவர்த்தித்துக் கொண்டு பிராப்த காலத்தில் விடிய வேணும் என்று நினைத்து அது செய்யாத போன விடம் தெரியாத படி போனான் – இனி இருந்த படியாலே சரீரமானது சிதிலமாய் முடிந்து பிழைக்கும் இத்தனை போக்கி இனி நமக்கு ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை யாகாதே) 8
மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார் நெஞ்சு நிறை கொண்டு போயினர் நினைக்கின்றிலர் வெஞ்சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ நைஞ்சுடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே –11-2-8
பதவுரை Show / Hide
மஞ்சு உறு, Manju Uru - மேகமண்டலத்தைக் கிட்டி ஓங்கின (சிகரத்தையுடைய)
மாலிருஞ் சோலை, Maalirunj Cholai - திருமாலிருஞ் சோலைமலையிலே
நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணுகிற
மணாளனார், Manaalanar - எம்பெருமான்
நெஞ்சம், Nenjam - (எனது) நெஞ்சிலுள்ள
நின்ற, Nindra - அடக்கத்தை
கொண்டு போயினார், Kondu Poyinaar - அபஹாரித்துக்கொண்டு போனவராய்
நினைகின்றிலர், Ninaikindrilar - (இத்தலையை) மறந்தொழிந்தார்
வெம் சுடர், Vem Sudar - ஸூர்யனானவன்
போய், Poi - அஸ்தமித்துப்போய்
விடியாமல், Vidiyamal - மறபடியும் உதியாமல்
எவ்விடம் புக்கதோ, Evvidam Pukkatho - எங்கே புகுந்தொனித்தாலே
இனி, Ini - இப்படியான பின்பு
நமக்கு, Namkku - நம்முடைய
உடலம், Udalam - சரீரமானது
நஞ்சு, Nanju - சிதிலமாகி
துயினறால், Thuyinraal - முடிந்துபோமாகில்
நல்லது, Nallathu - நன்றாகும்
1970பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் முறை தப்பி நின்றான் – அவன் பரிகரமும் முறை தப்பி நின்றது – இனி நாமும் முறை தப்பி நின்றாகிலும் ஜீவிக்கும் அத்தனை – என்கிறாள்) 9
காமன் கணைக்கு ஓர் இலக்கமாய் நலத்தின் மிகு பூமரு கோல நம் பெண்மை சிந்தித்து இராது போய் தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால் கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ –11-2-9
பதவுரை Show / Hide
தோழி, Thozhi - வாராய்தோழீ
காமன்கணைக்கு, Kaamankanaikku - மன்மதபாணங்களுக்கு
ஓர்இலக்கம் ஆய், Oorilakkam Aay - இலக்காகி யிருப்பதனாலே
நலத்தின் மிகு, Nalaththin Migu - நன்மைமிக்கதாய்
பூமரு, Poomaru - விரும்பத்தக்கதாய்
கோலம், Kolam - அழகியதான
நம் பெண்மை, Nam Penmai - நமது பெண்மைக்குணத்தை
சிந்தித்து, Sindhithu - நினைத்துக்கொண்டு
இராது, Irathu - இவ்விடத்திலேயே இருந்திடாமல்
போய், Poi - புறப்பட்டுப்போய்
கார்முகில் வண்ணரை, Kaarmugil Vannarai - காளமேகச்யாமரான பெருமாளை
தூ மலர் நீர் கொடு, Thoo Malai Neer Kodu - பரிசுத்தமான புஷ்பங்களையும் தீர்த்தங்களையும் கொண்டு
நாம் தொழுது ஏத்தினால், Naam Thozhudhu Aethinaal - நாம் வணங்கித் துதித்தால்
கண்களால் காணல் ஆம் கொலோ, Kangkalal Kaanal Aam Kolo - (அவரை) கண்ணாலே ஸேவிக்கப் பெறலாமோ?
1971பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் சில நாள் போய் சில நாள் நிற்கை அன்றிக்கே ஒரு நாளும் ஒன்றும் நில்லாது –இவ்வளவு அன்றிக்கே மேல் பெறப் புகுகிற பேற்றின் கனத்தைச் சொல்லப் புகில் – வருந்தி பனை நிழல் போலே தங்கள் அளவிலே போகை அன்றிக்கே இவர்கள் இருந்த தேசத்திலும் கூட இன்றிக்கே ஒழியும் – பாதக பதார்த்தங்களின் கையிலே நோவு படாதே அவை தானே அனுகூலமாம் படி அவனோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவர்) 10
வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர் தங்கள் மேல் என்றும் நில்லா வினை யொன்றும் சொல்லில் உலகிலே –11-2-10
பதவுரை Show / Hide
வென்றி, Vendri - வெற்றியைத் தொழிலாகவுடைய (- (வினை ஒன்றும் நில்லா))
விடை ஏழ், Vidai Ezh - ஏழு ரிஷபங்களை
உடன், Udan - உடனே
அடர்த்த, Adarttha - திரஸ்காரித்த
அடிகளை, Adigalai - எம்பெருமான் விஷயமாக
மன்றில் மலி புகழ், Manril Mali Pugazh - நாற்சந்திகளிலே நிறைந்த புகழையுடையரும்
மங்கை மன், Mangai Man - திருமங்கை நாட்டுக்குத் தலைவருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
சொல், Sol - அருளிச்செய்த
ஒன்று நின்ற ஒன்பது, Onru Nindra Onbathu - ஒன்றோடே கூடி நின்ற ஒன்பது பாட்டாகிய இத்திருமொழியை
உரைப்பவர் தங்கள்மேல், Uraippavar Thangalmel - அநுஸந்திப்பவாக்ளிடத்திலே
வினை ஒன்றும், Vinai Onrum - ஒருவகையான கருமமும்
என்றும், Endrum - ஒருநாளும்
நில்லா, Nilla - நிற்கமாட்டாது
சொல்லில், Sollil - இன்னமும்பலனை விவாரித்து சொல்லப்புக்கால்
உலகிலே, Ulagile - அவாக்ளிருந்ததேசத்திலுங்கூட