திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1992 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காணேடீ — தோழமையால் ஏடீ -என்கிறது ஆதல் – பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே ததிமுகனை குத்தினால் போலேஹர்ஷத்தாலே சொல்லுகிறாள் ஆதல் – இப்படி தன் ஸ்வரூபத்தை அழிய மாறி ஆஸ்ரித ரஷணத்துக்காக கிலேசப் பட்டவன் ஆனால் இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ – அவன் நிரதிசய ஆநந்த பரி பூர்ணனாய் இருக்கிறது நமக்காகவாய் இருந்த பின்பு இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ) 1 | மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே –11-5-1 | பதவுரை Show / Hideஏ, E - தோழீ! (- (நீ ஏத்திச் சொல்லுகிற புருஷன்) (என்று ஒருத்திசொல்ல) (மற்றொருத்தி அதற்கு மறுமாற்ற முரைக்கிறாள்)) மான் அமரும், Maan Amarum - மானையொத்த மெல் நோக்கி, Mel Nookki - மென்மையான கண்களை யுடையவளான கைதேவி, Kaithevi - விதேஹராஜவம்சத்துப் பிறந்தவளான ஸீதையை இன் துணை ஆ, In Thunai Aa - இனிய துணைவியாகக் கொண்டு கான் அமரும், Kaan Amarum - காட்டிலே பொருந்திய போய், Poi - போய் காடு, Kaadu - காடுகளிலே உறைந்தான் காண், Uraindhaan Kaan - வாஸம்பண்ணினான் காண் சாழலே, Saalale - தோழீ! கான் அமரும் கல் அதர் போய், Kaan Amarum Kal Adhar Poi - காட்டிலே பொருந்திய கல்நிலைந்தவழியே சென்று காடு, Kaadu - காடுகளிலே உறைந்த, Uraindha - ஸஞ்சரித்த பொன் அடிகள், Pon Adigal - திருவடிகளானவை வானவர் தம், Vaanavar Tham - தேவர்களினுடைய சென்னி, Sennai - முடியில் (அணியத்தக்க) மலர் கண்டாய், Malar Kandaai - புஷ்பங்களாயிராநின்றன காண். |
| 1993 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ராமன் சௌலப்யம் அனுபவித்தார் முதல் பாசுரத்தில் இது முதல் எட்டாம் பாசுரம் வரை ஸ்ரீ கிருஷ்ணன் சௌலப்யம் அனுபவிக்கிறார் – கர்ம வஸ்யர் உடைய ரஷணத்துக்கு வந்து பிறக்குமவன் ஆகையாலும் அவன் தான் சர்வ காரண பூதன் ஆகையாலும்-நமக்கு ஓர் குறை உண்டோ -என்கிறது) 2 | தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே –11-5-2 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! தந்தை, Thandai - தந்தையாகிய வஸுதேவருடைய தளை, Thalai - கால்விலங்கு கழல, Kazhala - கழன்று விழும்படியாக தோன்றி, Thonri - அவதரித்து போய், Poi - மதுரையில் நின்றும் பெயர்ந்து போய் ஆய்ப்பாடி, Aayppadi - திருவாய்ப்பாடியில் நந்தன், Nandan - நந்தகோபருடைய குலம், Kulam - குலத்திற்கு (க்கொழுந்தான) மதலை ஆய், Madalai Aay - பிள்ளையாய் வளர்ந்தான் காண், Valarnthaan Kaan - வளர்ந்தானன்றோ சாழலே, Saalale - தோழீ! நந்தன் குலம் மதலை ஆய் வளர்ந்தான், Nandan Kulam Madalai Aay Valarnthaan - இடைப்பிள்ளையாய் வளர்ந்தவன் நான் முகற்கு, Naan Mugarku - நான் முகனுக்கு தந்தை காண், Thandai Kaan - தகப்பன் காண் எந்தை பெருமான் காண், Endhai Perumaan Kaan - என்னுடைய குலநாதன் காண் |
| 1994 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் நேரே கிடையா விட்டால் களவு கண்டாகிலும் ஜீவிக்குமவன் ஆகையாலும் ரஷணத்தில் பர்யாப்தி பிறந்து இராதவன் ஆகிலும் நமக்கு ஒரு குறை உண்டோ) 3 | ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிற்று இவ்
வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் சாழலே –11-5-3 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! ஆழ்கடல் சூழ் வையகத்தார், Aazhkaadal Sooz Vayakaththaar - ஆழ்ந்தகடலால் சூழப்பட்ட பூமியிலுள்ளாரெல்லாரும் ஏச, Eesa - ஏசும்படியாக ஆய்ப்பாடி, Aayppadi - ஏசும்படியாக தாழ் குழலார் வைத்த, Thaal Kuzhalaar Vaiththa - தாழ்ந்த கூந்தலையுடைய இடைப்பெண்கள் சேமித்து வைத்திருந்த தயிர், Thayir - தயிரை உண்டான் காண், Undaan Kaan - வயிறா உட்கொண்டவன்ன்றோ சாழலே, Saalale - தோழீ! தாழ் குழலார் வைத்த தயிர் உண்டபொன் வயிறு, Thaal Kuzhalaar Vaiththa Thayir Undapon Vayiru - இடைச்சிகள் வைத்திருந்த தயிரை உட்கொண்ட திருவயிறானது இஏழ் உலகும் உண்டும், Iyaazh Ulakum Undum - இவ்வுலகங்களை யெல்லாம் அமுது செய்தவளவிலும் இடம் உடைத்து, Idam Udaiththu - இனன்மும் அவகாசத்தை யுடையதாயிருக்கின்றது. ஆல், Aal - ஆச்சரியம் |
| 1995 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ப்ரவணர் ஆகையாலே அது பின்னாட்டுகிறபடி – மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு தயிரை வருந்திக் கடைந்து உறியிலே சேமித்து வைத்த அன்று கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் – சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது – இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண்) 4 | அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
ஏறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே –11-5-4 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! அறியா தார்க்கு, Ariyaa Thaarakku - ஒன்றுமறியாதவர்களுக்குள்ளே ஆன் ஆயன் ஆகி, Aan Aayan Aagi - மாடுமேய்க்குமிடைக்குலத்தவனாய் ஆய்ப்பாடி, Aayppadi - இடைச்சேரியிலே உறி ஆர், Uri Aar - உறிகளிலே பொருந்தின நறு வெண்ணெய், Naru Vennyei - மணம்மிக்க வெண்ணெயை உண்டு, Undu - (களவுசெய்து) உட்கொண்டு உகந்தான் காண், Uganthaan Kaan - ஸந்தோஷதித்தான் காண் சாழலே, Saalale - தோழீ! உறி ஆர் நறுவெண்ணெய் உண்டு உகந்த, Uri Aar Naruvennyei Undu Ugantha - உறிகளிலே பொருந்திய நறுவெண்ணெயை உட்கொண்டு உவந்த பொன் வயிற்றுக்கு, Pon Vayirukku - திருவயிற்றுக்கு எறி நீர் உலகு அனைத்தும், Eri Neer Ulagu Anaiththum - கடல்சூழ்ந்த லோகங்களெல்லாம் எய்தாது, Eydhaadhu - போதாது ஆல், Aal - ஆச்சரியம் |
| 1996 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடைச்சிக்கு பரிச்சின்னனாய் இருந்தானே ஆகிலும் ஸ்வ யத்னத்தால் அறியும் ப்ரஹ்மாதிகளுக்கு அபரிச்சின்னனாய் இருக்கும்) 5 | வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே –11-5-5 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! (- (கண்ணி குறு கயிற்றால் கண்டுண்டான் ஆகிலும்)) வண்ணம், Vannam - அழகியதாய் கரு, Karuu - கறுத்த குழல், Kuzhal - கூந்தலையுடைய ஆய்ச்சியால், Aaychiyal - யசோதைப்பிராட்டியாலே மொத்துண்டு, Moththundu - அடியுண்டு கண்ணி குறு கயிற்றால், Kannni Kuru Kayittraal - முடிகளையுடைத்தாய் (எட்டம்போராதபடி) குறியதான கயிற்றினால் கண்டுண்டான் காண், Kandundaan Kaan - கட்டுண்டு கிடந்தான்காண் சாழலே, Saalale - தோழீ! இமையோர்க்கும், Imaiyorkkum - தேவர்களுக்கும் எண்ணற்கு, Ennarkku - நெஞ்சால் நினைப்பதற்கும் |
| 1997 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கேட்டார் நெஞ்சு ஈரும் படி த்வனிக்க இடையர் மனஸ் களிப்ப மன்றிலே மரத்தைக் காலிலே கட்டி ஆடினான் காண் – இப்படி இடையர் கண் வட்டத்திலே நிற்கிற வஸ்துவை ப்ரஹ்மாதிகள் கண் வட்டத்திலே கண்டு அறிவார் இல்லை) 6 | கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே –11-5-6 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! (- (மன்றில் மரக்கால்கூத்து ஆடினான் ஆகிலும்)) கன்ற, Kanru - (விரோதிகளின் நெஞ்சு) கன்றும்படியாக பறை கறங்க, Parai Karangka - பறைகள் ஒலிக்கவும் கண்டவர் தம், Kandavar Tham - பார்த்தவர்களினுடைய கண், Kan - கண்களானவை களிப்ப, Kalippa - கனிக்கவும் மன்றில், Manril - நாற்சந்திகளிலே மரக்கால் கூத்து ஆடினான் காண், Marakkaal Koothu Aadinan Kaan - மரத்தைக் காலிலேகட்டி யாடுவதொரு கூத்தை ஆடினானன்றோ? சாழலே, Saalale - தோழீ! இமை யோர்க்கும், Imai Yorkkum - தேவர்களுக்கும் என்றும், Endrum - என்றைக்கும் அரியன், Ariyan - அருமைப்பட்டவன் காண். |
| 1998 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (துர் உக்தி பண்ணுவதற்கு ஒருவரும் இல்லாத சமயத்தில் துர்யோதனில் குறைந்தார் இல்லாத இஜ் ஜகத்தை வயிற்றிலே வைத்து ரஷிததான் காண்) 7 | கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் வாகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிந்தான் சாழலே –11-5-7 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! (- (தூதன் ஆய் மன்னவனால் கொல்லுண்டான் ஆகிலும்)) கோதை வேல் ஐவர்க்கு ஆய், Kothai Vel Aivarkku Aay - (அரசர்க்குரிய) பூமாலையையும் வேற்படையையும் உடையவரான பஞ்சுபாண்டவர்களுக்கு விதேயனாய் மண் அகலம் கூறு இடுவான், Man Akalam Kooru Idhuvan - குரு பாண்டவாகட்குப் பூமியைப் பங்கிட்டுக் கொடுத்து சந்தி செய்வதற்காக தூதன் ஆய், Thoodhan Aay - தூதுசென்றவனாய் மன்னவனால், Mannavanaiyil - துரியோதனனென்னும் அரசனாயல் சொல் உண்டான் காண், Sol Undaan Kaan - இழிவான சொற்களைச்சொல்லப் பெற்றானன்றோ? சாழலே, Saalale - தோழீ! முன், Mun - முன்பொருகால் ஓதம் நீர் வையகம், Otham Neer Vayagam - கடல் சூழ்ந்த உலகத்தையெல்லாம் உண்டு உமிழ்ந்தான், Undu Umizhndhaan - (பிரளயங்கொள்ளாதபடி) வயிற்றிலே வைத்து நோக்கி வெளிப்படுத்தினான்காண்க. |
| 1999 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி தாழ்வு செய்தவன் லோகத்தில் ராஜாக்கள் ஆனார் முடி மேல் மாலையிலே காண் திருவடிகளை வைத்துக் கொண்டு இருப்பது – ராஜாதி ராஜ சர்வேஷாம் -இத்யாதி) 8 | பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்துத்
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்ஆகிலும்
தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே –11-5-8 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! (- (தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான்)) அன்று, Anru - பாரதப்போர்நிகழ்ந்த அக்காலத்தில் பார், Paar - பூமியிலுள்ள மன்னர், Mannar - அரசாகள் யாவரும் மங்க, Manga - மாளும்படியாக வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்திலே படைதொட்டு, Padaithottu - (பிரதிஜ்ஞைக்குமாறாக)ஆயுதமெடுத்து தேர்மன்னற்கு, Thermannarku - தேர்வீரனான அரிஜுனனுக்கு ஆய், Aai - துணையாய்(ஸராதியாகி) தேர் ஊர்ந்தான் காண், Ther Oornthaan Kaan - தேரைநடத்தினான் காண். சாழலே, Saalale - தோழீ! தார் மன்னர் தங்கள், Thaar Mannar Thangal - வெற்றி மாலைபுனையும் அரசர்களுக்கெல்லாம் தலை மேலான், Thalai Melan - தலைமேல் வீற்றிருப்பவன் காண். |
| 2000 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவு அழகாலும் வரையாதே தீண்டும் படி யாலும் ஆஸ்ரிதர்க்கு தாழ்வு செய்யும்படியாலும் – கிருஷணாவதாரத்தோடு போலியாய் இறே ஸ்ரீ வாமன அவதாரம் இருப்பது – உதாரனாய் இருக்கிற மஹா பலி யஞ்ஞ பூமியிலே அவன் கண் வட்டத்துக்கு உள்ளே நின்று மூன்றடி மண் இரந்தான் காண் – அவன் கண் வட்டத்தே நின்ற இவனை நாட்டில் கண்டவர் இல்லை கிடாய்) 9 | கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே –11-5-9 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! (- (வண்தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும்)) கண்டார், Kandaar - பார்த்தவர்களெல்லாரும் இரங்க, Iranga - மனமிரங்கும்படி கழிய குறள் உரு ஆய், Kazhiya Kurai Uru Aai - மிகக் குள்ளவடிவுடையவனாய்க் கொண்டு வண்தாரான், Vandthaaran - வள்ளல்தனத்தைக் காட்டுகின்ற தனிமாலையையணிந்த மாவலியினுடைய வேள்வியில், Velviyil - யாகபூமியிலே மண் இரந்தாண் காண, Man Irandhaan Kaan - மண்ணையாசித்தானன்றோ சாழலே, Saalale - தோழீ! விண்டு, Vindhu - விஷ்ணுவாய் ஏழ் உலகுக்கும் மிக்கான் காண், Ezhu Ulagukkum Mikkaan Kaan - எல்லாவுலகத்தினும் மேம்பட்டவன் காண் |
| 2001 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கிரித்ரிம வேஷத்தைக் கொண்டு சிலருக்குச் சென்று கிட்ட ஒண்ணாத படி ஸ்ரீ திருப் பாற் கடலிலே காண் அவன் கிடப்பது – சடக்கெனெ சென்று காண ஒண்ணாத படி ஸ்ரீ திருமலையிலே காண் அவன் நிற்பது -என்பார்கள் காண் அப்படி இருக்கிறவன் காண் ஆழ்வார் ஹிருதயத்தில் நின்றும் புறப்படத் தள்ளினாலும் புறப்படாதே கிடக்கிறான்) 10 | கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10 | பதவுரை Show / Hideஏடீ, Eadi - தோழீ! (- (ஒருவர்க்கும் எளியவனாகாதபடி)) கள்ளத்தால், Kallathaal - கபடவேடித்தினால் மாவலியை, Mavalaiya - மாவலியிடத்தில் மூ அடி மண் கோண்டு, Moo Adi Man Koondhu - மூன்றடிமண்ணை இரந்து பெற்று அளந்தான், Alandhaan - அளந்துகொண்டவன் வெள்ளத்தான், Vellaththaan - திருப்பாற்கடலிலே உள்ளான் வேங்கடத்தான், Vengadaththaan - திருமலையிலே உள்ளான் என்பர்காண், Enpar Kaan - என்று சொல்லுகிறார்களன்றோ? சாழலே, Saalale - தோழீ! வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும், Vellaththaan Vengadaththaan Aelum - திருப்பாற்கடலிலும் திருமலையிலும் அருமைப்படவுள்ளவனே யாகிலும் கலிகன்றி, Kalikanri - கலியனுடைய உள்ளத்தின் உள்ளே, Ullaththin Ullae - ஹ்ருதயத்தினுள்ளே |