திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 11-6 மைந்நின்ற (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2002பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தமோ குணா அபிபூதராய் இருக்கையாலே ஸ்ரீ பரமாத்மாவுக்கு சரீரம் என்று உபாசிக்கப் போகாதவர்களை –செய்ந்நன்றி குன்றேல்மின் – அப்ராப்த விஷயங்களில் தாழ்வு செய்ய ஆசைப் பட்ட நீங்கள் –ஸ்ரீ சர்வேஸ்வரனையே ஏத்தப் பாருங்கோள்) 1
மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம் மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர் எந்நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர் செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே யேத்தீர்களே –11-6-1
பதவுரை Show / Hide
தொண்டர்காள், Thondarkal - (தகுதியற்றவிடத்திலே) தொண்டுபட்டிருப்பவர்களே!
மை நின்ற கரு கடல் வாய், Mai Nindra Karu Kadal Vaai - மைமாறாதே நின்றாப்போலே கறுத்திருந்துள்ள கடலிடத்து
உலகு இன்றி, Ulaku Inri - லோகமொன்று மில்லாமல்
வானவரும், Vaanavarum - தேவர்களும்
யாமும், Yaamum - (மனிதர்களான) நாமும்
எல்லாம், Ellam - (ஆகிய) எல்லாப்பொருள்களும்
நெய்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில், Neyninra Chakkarathan Thiruvayittril - நெய்யிட்டு விளங்காநின்ற திருவாழியையுடையனான எம்பெருமானுடைய திருவயிற்றில்
நெடுங்காலம், Nedungaalam - வெகுகாலம்
கிடந்தது, Kidandhadhu - அடங்கியிருந்தமை
ஓரீர், Oorir - அறிகின்றீரில்லையே
எந்நன்றி செய்தார் ஆ, Ennankuri Seithaar Aa - என்னவுபகாரம் பண்ணினார்களாகக் கொண்டு
எதிலோர் தெய்வத்தை, Edhiloor Deivaththai - விரோதிகளின் தேவதாந்தரங்களை
ஏத்துகின்றீர், Aethugindreer - துதிக்கின்றீர்கள்?
செய் நன்றி குன்றேல் மின், Sei Nandri Kunrheel Min - (எம்பெருமான்) செய்தநன்றியை மறவாதீர்கள்,
அண்டனையே, Andanaiye - (அந்த) ஸர்வேச்வரனையே
ஏத்தீர்கள், Aeththirgal - துதியுங்கோள்
2003பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவனுக்கு புறம்பாய் இருப்பது ஒன்றைப் பற்றி இவனைக் கை விட்டி கோளோ- லோகத்தின் உடைய சத்தை அவனுடைய பிரசாதாயத்தம் என்னும் இடம் அறியீர்களோ) 2
நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம் மல்லாண்ட தடக் கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்தன்று எல்லாரும் அறியாரோ வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர்களே –11-6-2
பதவுரை Show / Hide
நில்லாத, Nilladha - ஓரிடத்திலும் நிலைநில்லாத
பெரு வெள்ளம், Peru Vellam - மஹாப்ரளய வெள்ளமானது
நெடு விசும்பின் மீது, Nedu Visumpin Meedhu - நெடுகிய ஆகாசத்தின் மீது
ஓடி, Odi - வழிந்தோடி
நிமிர்ந்தகாலம், Nimirndhagaalam - ப்ரவஹித்தபோது
மல் ஆண்ட தடகையால, Mal Aanda Thadakaiyaal - மிடக்கையுடைய பெரிய திருக்கையினாலே
பகிரண்டம், Pagirandam - பகிரண்டங்களை
அகப்படுத்த காலத்து அன்று, Akappadutha Kaalathu Andru - (பிரளயங்கொள்ளாதபடி) அகப்படுத்திக்கொண்ட அந்த ஸமயத்திலே
தேவர் எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் (என்று) எல்லோரும் அறியாரோ, Thevar Emperumaan Undu Umizhndha Echchil Enru Ellorum Ariyaaro - தேவதைகளெல்லாம் எம்பெருமானது திருவயிற்றில் புகுந்து புறப்பட்ட எச்சில் என்பதை எல்லாரும் அறியமாட்டார்களே
அல்லாதார் தாம், Alladhaar Thaam - அப்படி எச்சிலாகாத தேவதைகள்
உளரே, Ulaare - உண்டோ? (இல்லை)
உலகு, Ulaku - லோகமானது
ஆவது, Aavathu - ஸத்தை பெற்றிருப்பது
அவன் அருளே, Avan Arule - அப்பெருமானுடைய க்ருபையின் அதீன மென்பதை
அறியீர்களே, Ariyeergale - அறிகின்றிலீர்களோ?
2004பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஐஸ்வர்ய சூசகமாய் எதிரிகளை முடிக்க வற்றான ஸ்ரீ திரு வாழியை உடையவன் உடைய குணங்களை அடைவு கெடச் சொல்லாத தண்ணிய ஷூத்ரங்களை-சஹிக்க அரிதாய் இருக்கிறவவர்கள் க்ரௌர்யம் இருந்த படி என்) 3
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால்வாய் ஒற்றைக் கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும் வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே –11-6-3
பதவுரை Show / Hide
நெற்றிமேல் கண்ணானும், Netrimeel Kannaanum - நெற்றிக் கண்ணனான சிவபிரானும்
நிறை மொழிவாய் நான்முகனும், Nirai Mozhivai Naanmukanum - வேதங்களை உச்சரிப்பவனான பிரமனும்
நீண்ட நூல் வாய் ஒற்றைக் கை வெண்பகட்டின் ஒருவனையும் உள்ளிட்ட, Neenda Nool Vaai Otrai Kai Venpakattin Oruvanaiyum Ullitta - நீண்டு தொங்குகின்ற வாயையும் துதிக்கையுமுடைய (ஐராவதமென்கிற) வெள்ளையானைப்பாகனான இந்திரனும் முதலான
அமரரோடும், Amararodum - தேவர்களெல்லாரையும்
வெற்றி போர் கடல் அரையன் விழுங்காமல், Vettri Por Kadal Arayan Vizhungamal - ஐயசீலனான ஸமுத்ரராஜன் விழுங்க வொண்ணாதபடி
தான் விழுங்கி, Thaan Vizhunki - தான் திருவயிற்றிலைவைத்து
உய்யக்கொண்ட, Uyyaakkonda - உஜ்ஜிவிப்பித்தருளின
கொற்றம் போர் ஆழியான், Kottam Por Azhiyan - யுத்தங்களில் வெற்றிபெறுகின்ற திருவாழியை யுடையனான எம்பெருமானுடைய
குணம், Gunam - திருக்குணங்களை
பாவா, Paavaa - துதிசெய்கில்லாத
சிறு தொண்டர், Siru Thondar - க்ஷுத்ரஜனங்களுடைய
கொடிய ஆறு ஏ, Kodiya Aaru Ae - கொடுத்தன்மை இருக்கிறபடி என்னே!
2005பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இனி இவர்களுக்கு ரஷகர் யாரும் இல்லை -என்று த்ரை லோகத்தையும் முறையாலே சத்வஸ்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் முழங்கா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருந்து உள்ள ஸ்ரீ திரு வயிற்றிலே வைத்து உம்மை உய்யக் கொண்ட –கனிந்து இருந்து களாம் போலே இருந்துள்ள ஸ்ரீதிரு உடம்பை உடைய ஒருவனையே – கழல் தொழுமா கல்லீர்களே) 4
பனிப் பரவித் திரை ததும்பப் பார் எல்லாம் நெடும் கடலேயான காலம் இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி முனித்தலைவன் முழங்கொளி சேர் திரு வயிற்றில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட கனிக்கவளத் திருவுருவத் தொருவனையே கழல் தொழுமா கல்லீர்களே –11-6-4
பதவுரை Show / Hide
பார் எல்லாம், Paar Ellam - பூமியடங்கலும்
பனி பாவை, Pani Paavai - குளிர்ந்துபரந்திருக்கிற
திரை, Thirai - அலைகளானவை
ததும்ப, Thadumba - எறியும்படி
நெடுங்கடலே ஆன சாலம், Nedungadale Aana Saalam - மஹாப்ரளய வெள்ளமே பரந்தபோது
இவர்க்கு, Ivarkku - இவ்வுலகத்தார்க்கு
இனி, Ini - இனிமேல்
களை கண் இல்லை என்று, Kalai Kan Illai Endru - ரக்ஷகராவார் ஆருமில்லை என்று
உலகம் ஏழினையும், Ulagam Ezhinaiyum - உலகங்களெல்லாவற்றையும்
ஊழில் வாங்கி, Oozhil Vaangi - முறையாலே வாங்கி
முழங்கு ஒலி சேர் திருவயிற்றில் வைத்து, Muzhangu Oli Seer Thiruvayittril Vaiththu - மஹாகோஷம் நிரம்பிய திருவயிற்றினுள் வைத்து
உம்மை, Ummmai - உங்களை
உய்யக் கொண்ட, Uyya Konda - உஜ்ஜீவிப்பித்தருளினவனும்
முனி தலைவன், Muni Thalaivan - ஸாத்விகர்களில் தலைவனும்
கனி களவம் திரு உருவத்து ஒருவனையே, Kani Kalavam Thiru Uruvaththu Oruvanaiye - கனிந்த களாப்பழம் போன்ற திருவுருவத்தை யுடையனுமான ஒரு பெருமானையே
கழல் தொழும் ஆ, Kazhal Thozhum Aa - திருவடிதொழும்படியை
கல்லீர்களே, Kalleergale - கற்கமாட்டீர்களோ?
2006பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சைதன்யம் உண்டாகில் வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து அத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகனாய் – அளவுடையவனாய் இருந்துள்ளவனுடைய பெயரான திரு நாமங்களையே பேசீர்களே) 5
பாராரும் காணாமே பரவை மா நெடும் கடலேயான காலம் ஆரானும் அவனுடைய திரு வயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து ஓராத உனர்விலீர் உணருதிரேல் உலகளந்த உம்பர் கோமான் பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே –11-6-5
பதவுரை Show / Hide
பார், Paar - பூமியிலே (- (நீங்கள்))
ஆரம் காணாமே, Aaram Kaanamae - ஒருவரையும் காணவொண்ணாதபடி
பாவை மாநெடு கடலே ஆன காலம், Paavai Maanedu Kadaley Aana Kaalam - பரந்திருந்துள்ள மஹா ப்ரளய வெள்ளமேயான சமயத்தில்
ஆரானும், Aaranum - எவரும்
அவனுடைய திருவயிற்றில், Avanudaiya Thiruvayittril - அப்பெருமானுடைய திருவயிற்றில்
நெடுங்காலம் கிடந்த்து, Nedungaalam Kidandthu - வெகுகாலம் வரையில் அடங்கியிருந்ததை
உள்ளத்து, Ullathu - நெஞ்சிலே
ஓராத, Ooradha - சிந்திக்கப்பெறாத
உணர்வு இலீர், Unarvu Ilir - மூடர்களே!
உணருதிர் எல், Unaruthir El - சேதனார்களாயிருப்பீர்களாகில்
உலகு அளந்த, Ulaku Alandha - உலகங்களை யளந்தருளின
உம்பர் கோமான், Umbar Koman - நித்யஸூரிநாதனாய்
பேராளன், Peralan - பெருமைபொருந்தியவனான எம்பெருமானுடைய
பேர் ஆன, Per Aan - திருநாமங்களான
பேர்கள் ஆயிரங்களுமே, Perkal Aayirangalume - ஸஹஸ்ரநாமங்களையே
பேசீர்கள், Pesirgal - பேசுங்கள்
2007பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு நம்மைப் பற்றப் பாராதே புறம்பே போயிற்றன-என்று வெறுத்து போய் இருக்க – அங்கே புதுசாக இருக்கிற தேவதைகளை கொண்டாடுகிற தொண்டீர் – அசேதனமாய் இருப்பது ஒன்றை வெந்நீர் ஆட்டுதிரோ – செய்ய மாட்டாத கிருபை அற்றீரே) 6
பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம் தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான் போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே –11-6-6
பதவுரை Show / Hide
பேய் இருக்கும், Pei Irukkum - (மனிசரொருவருமில்லாதபடி) பேய் பிசாசுகளேயிருக்க வேண்டும்படியான
நெடு வெள்ளம், Nedu Vellam - மஹாப்ரளய வெள்ளமானது
பெரு விசும்பின்மீது ஓடி, Peru Visumbinmidhu Odi - ஆகாசத்தின்மேல் வழிந்தோடி
பெருகுகாலம், Perugukalam - பிரவஹித்த காலத்திலே
தாய் இருக்கும் வண்ணமே, Thai Irukkum Vanname - பெற்றதாய்போல(ப்பரிந்து)
உம்மை, Ummmai - உங்களை
தன் வயிறு, Than Vayiru - தன் திருவயிற்றிலே
இருத்தி, Iruththi - இருக்கவைத்து
உய்யக்கொண்டான், Uyyaikkondan - உஜ்ஜீவிப்பித்தருளின பெருமான்
போயிருக்க, Poyirukka - வெறுக்கும்படியாக
இங்கு, Ingu - இங்கே
மற்று ஓர் புதுதெய்வம், Mattru Or Puthudeivam - மற்றொரு க்ஷுத்ரதேவதையை
கொண்டாடும், Kondaatum - கொண்டாடுகிற
தொண்டீர், Thondeer - தொண்டர்களே!
2008பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கிருபை பண்ணி சந்நிஹிதனாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கண்ணமங்கைக்கு நிர்வாஹகன் ஆனவனுடைய திருவடிகளைப் பேணி –அவனை ஹிருதயத்தில் எண்ணாத மனுஷ்யரை – பகவத் ஜ்ஞானமும் வேண்டா –வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா-அவைஷ்ணவர்களை நினையாத போது – இனிது என்கை) 7
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம் உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே –11-6-7
பதவுரை Show / Hide
மண் நாடும், Man Naadum - பூலோகமும்
விண் நாடும், Vin Naadum - சுவர்க்கமும்
வானவரும், Vaanavarum - தேவர்களும்
தானவரும், Thaanavarum - அசுரர்களும்
மறறும் எல்லாம், Mararum Ellam - மற்றுமுண்டான பொருள்களுமெல்லாம்
உண்ணாத, Unnaadha - தகைய வொண்ணாத
பெரு வெள்ளம், Peru Vellam - மஹாப்ரவாஹம்
உண்ணால், Unnaal - (உலகத்தை) விழுங்காதபடி
தான் விழுங்கி உய்யக் கொண்ட, Thaan Vizhunki Uyyak Konda - தான் திருவயிற்றிலே  வைத்து நோக்கி
கண்ணாளன், Kannaanalan - பரமதயாளுவும்
கண்ணமங்கை நகராளன், Kannamangai Nagaralan - திருக்கண்ணமங்கைத் தலத்திற்குத் தலைவனுமான எம்பெருமானுடைய
கழல், Kazhal - திருவடிகளை
சூடி, Soodi - சிரமேற்புனைந்து
அவனை, Avanai - அப்பெருமான்
உள்ளது, Ulladhu - நெஞ்சிலே
எண்ணாத, Ennaadha - சிந்திக்கமாட்டாத
மானிடத்தை, Maanidaththai - மனிசர்களை
எண்ணாத போது எல்லாம், Ennaadha Podhu Ellam - நினைக்கப்பெறாதகால மெல்லாம்
இனிய ஆறே, Iniya Aare - எமக்கு இனிதாகச் செல்லும் விதம் என்னே!
2009பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷ்யத்தின் அளவில்லாத ரஷண தர்மத்தாலே விஞ்சின திரு வயிற்றின் உடைய உள்ளே வைத்து உம்மை உய்யக் கொண்ட –கறுத்து இருந்துள்ள தேஜஸ்சை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை நினையாதார் தண்ணியவர்கள்) 8
மறம் கிளர்ந்து கரும் கடல் நீர் உரந்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால் புறம் கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில் வாங்கி அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட நிறம் கிளர்ந்த கருஞ்சோதி நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே –11-6-8
பதவுரை Show / Hide
மறம் கிளர்ந்த, Maram Kilarndha - கொடுமைபொருந்திய
கருங்கடல் நீர், Karungadal Neer - கருங்கடலின் வெள்ளமானது
உரம், Uram - வேகத்தோடு
துரந்து, Thurandhu - ஓடி
பரந்து, Parandhu - சுற்றும்பரம்பி
அண்டத்து அப்பால் புறம், Andhatthu Appaal Puram - அண்டகடாஹத்திற்கு அவ்வருகாக
ஏறி, Eri - வியாபித்து
கிளர்ந்த காலத்து, Kilarndha Kaalaththu - விரும்பத்தக்க
உலகம் ஏழினையும், Ulagam Ezhinaiyum - உலகங்களை யெல்லாம்
ஊழில், Oozhil - முறைமையாலே
வாங்கி, Vaangi - வாரிப்பிடித்து
அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து, Aram Kilarndha Thiru Vayittrin Akampadithil Vaiththu - தருமம் விஞ்சின திருவயிறினுட்புறத்திலே வைத்து
உம்மை, Ummmai - உங்களை
உய்யக்கொண்ட, Uyyaakkonda - உஜ்ஜீவிப்பித்த
கரு நிறம் கிளர்ந்த, Karuniram Kilarndha - கருமை மிக்கிருந்துள்ள
சோதி, Sothi - தேஜஸ்ஸையுடைய
நெடுந் தகையை, Nedun Thakaiya - ஸர்வேச்வரனை
நினையாதார் தாம், Ninaiyaadhar Thaam - சிந்திக்கப்பெறாதவர்க்ள
நீசர், Neesar - இழிகுலத்தவரேயாவர்
2010பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரளயம் தேடுகின்றது என்று இளைத்துக் காட்டி அல்லாத அவயவத்தோடு ஒத்த திரு வயிற்றின் உள்ளே வைத்து உம்மை உய்யக் கொண்ட –மேகம் போலே உதாரனான கையை உடையனாய் மணி போலே ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன் ஸ்ரமஹரமான ஸ்ரீ திருக் குடைந்தையை பாடி ஆடீர்களே) 9
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆவா வென்று தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே –11-6-9
பதவுரை Show / Hide
அண்டத்தின் முகடு, Andaththin Mugadu - அண்டபித்தியானது
அழுந்த, Azhundha - உள்ளே அழுந்தும்படியாக
அலை முந்நீர், Alai Munneer - அலைக்கின்ற கடலினுடைய
திரை, Thirai - அலைகளானவை
ததும்ப, Thadumba - செறிய
ஆ ஆ என்று, Aa Aa Endru - ஐயோவென்று
தொண்டர்க்கும், Thondarkkum - பக்தர்களுக்கும்
அமரர்களுக்கும், Amarararkkum - தேவர்களுக்கும்
முனிவர்க்கும், Munivarkkum - ரிஷிகளுக்கும்
தான் அருளி, Thaan Aruli - தான் கிருபைசெய்து
உலகம் ஏழும் உண்டு, Ulagam Ezham Undu - உலகங்களையெல்லாம் அமுது செய்தவிடத்திலும்
ஒத்த, Oththa - முன்போலவே யிருக்கப்பெற்ற
திருவயிற்றின் அகம்படியில் வைத்து, Thiruvayittrin Akampadiyil Vaiththu - திருவயிற்றினுட்புறத்திலே வைத்து
உம்மை, Ummmai - உங்களை
உய்யக்கொண்ட, Uyyaakkonda - உஜ்ஜீவிப்பித்தருளின
கொண்டல் கை, Kondal Kai - மேகம்போல் உதாரனாய்
மணி வண்ணன், Mani Vannan - நீலமணி நிறத்தனான பெருமானுடைய
தண் குடந்தை நகர், Than Kudanthai Nagar - திருக்குடந்தைப் பதியை
பாடி, Paadi - பாடிக்கொண்டு
ஆடீர்கள், Aadeergal - நர்த்தனம் செய்யுங்கோள்
2011பெரிய திருமொழி || (11-6–மைந்நின்ற) - (உலகத்தைப் ப்ரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி, உலகிற்கு உபதேசித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாட்டுக்கு இதையே பொருள் திரண்டு பரந்த சோலைகள் உடைய ஸ்ரீ திரு மங்கைக்கு நிர்வாஹகர் அறிந்து உரைத்தார் – இதையே பொருள் -ஸ்ரீ த்வயத்தின் க்ரமத்திலே பல சுருதி அருளுகிறார் – சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் -என்றும் குடந்தையே தொழுமின் என்றும் –உபக்ரமித்து – தண் குடந்தை பாடி ஆடீர்களே என்று உபதேசித்துத் தலைக் கட்டுகிறார்) 10
தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார் பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே –11-6-10
பதவுரை Show / Hide
தேவரையும், Thevaraiyum - தேவர்களையும்
அசுரரையும், Asuraraiyum - அசுரர்களையும்
திசைகளையும், Thisaigalaiyum - திருக்குக்களையும்
கடல்களையும், Kadalgalaiyum - ஸப்த ஸாகரங்களையும்
முற்றும் முற்றும் யாவரையும் ஒழியாமே, Mutrum Mutrum Yaavaraiyum Ozhiyamae - மற்றுமுள்ள எல்லாவற்றையும் ஒன்று தப்பாமல்
எம் பெருமான் உண்டு உமிழ்ந்த்து, Em Perumaan Undu Umizhndhu - எம்பெருமான் (பிரளய காலத்தில்) திருவயிற்றிலேவைத்து (ப்பின்பு) வெளிப்படுத்தியதை
அறிந்து, Arindhu - உள்ளபடியறிந்து
சொன்ன, Sonna - அருளிச்செய்த
கா வளரும் பொழில் மங்கை, Kaa Valarum Pozhil Mangai - பூந்தோட்டங் வளரப்பெற்ற சோலைகளை யுடையவருமங்கை நாட்டுத் தலைவரான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வாருடைய
ஒலி மாலை, Oli Maalai - சொல்மாலையாகிற இத்திருமொழியை
கற்று வல்லார் தாம், Kattru Vallar Thaam - ஓதி உணரவல்லவர்கள்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்று, Poovalarum Thiru Magalal Arul Petru - தாமரைப்பூவில் வளர்கின்ற பெரிய பிராட்டியாராலே அருள்செய்யப்பெற்று
பொன் உலகில், Pon Ulavil - நித்ய விபூதியிலே
பொலிவர், Polivar - விளங்கப்பெறுவர்கள்