திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 11-7 நீள் நாகம் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2012பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அமுதம் கொண்டுகந்த- பிறருக்கு உபகரித்தானாய் இராதே தன் பேறாக உகந்தான் – இப்படிச் செய்கிறது -உடையவன் ஆகையாலே – பூணார மார்வனைப்-இவர் தம்முடைய -அம்ருதம் –சர்வாபரண பூஷிதனாய் பெரிய திருவடி தோளில் இருந்த இருப்பு – ஒரு பொன் மலை மேலே ஒரு பொன் மலை இருந்தாப் போலே – இதுக்கு முன்பு கண்டவை என்றும் கண் அல்ல –ஷேபமாகக் கண்டோமே -என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப் பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக் காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே –11-7-1
பதவுரை Show / Hide
நீள் நாகம், Neel Naagam - நீண்ட வாஸுகி நாகத்தை
சுற்றி, Suttri - (கடைகயிறாகச்) சுற்றி
நெடு வரை, Nedu Varai - பெரிய (மந்தர) மலையை
நட்டு, Nattu - (மத்தாக) நாட்டி
ஆழ் கடலை, Aaz Kadhalai - ஆழ்ந்த கடலை
பேணான், Penaan - மதியாதவனாகி
கடைந்து, Kadaindhu - கடைந்து
அமுதம், Amudham - அம்ருத்த்தை
கொண்டு, Kondhu - தேவர்கட்கு எடுத்துத்தந்து
உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்த
பெம்மானை, Pemmanaai - பெருமானும்,
ஆரம் பூண் மார்வனை, Aaram Poon Maarvanai - ஹாரங்களையணிந்த திருமார்பையுடையனும்
புள் ஊரும், Pul Oorum - பெரிய திருவடியை ஏறிச்செலுத்துகின்ற
பொன்மலையை, Ponmalaiyai - பொன் மலைபோன்றவனுமான ஸர்வேச்வரனை
காணாதார், Kaanadhaarkal - ஸேவிக்கப் பெறாதவர்களுடைய
கண், Kan - கண்களானவை
என்றும், Endrum - ஒருநாளும்
கண் அல்ல, Kan Alla - கண்களே அல்ல
கண்டாம், Kandam - (இதைநாம் நன்கு) அறிவோம்
2013பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –இரண்டாம் திருவந்தாதி -என்று ஆஸ்ரிதர் ஈடுபட்டு நெஞ்சிலே எப்போதும் அனுபவித்து இருக்குமவனுடைய கீர்த்தி கேட்க வென்றால் கேளோம் என்னுமவர் செவி -செவி அல்ல – கேட்டோமே –ஷேபம்) 2
நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண் தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே –11-7-2
பதவுரை Show / Hide
நீள்வான், Neelvaan - நீண்டு வளர்வதற்காக
குறள் உரு ஆய், Kural Uru Aay - வாமநலேஷதாரியாய்
நின்று, Ninru - (யஜ்ஞசாலையிலேவந்து) நின்று
மாவலி, Mavali - மஹாபலியினிடத்தில்
மண், Man - (மூவடி) மண்ணை
இரந்து, Irantu - யாசித்து
தாளால், Thaalal - திருவடிகளாலே
அளவு இடம், Alavu Idam - அளந்து கொண்டவனும்
தக்கணைக்கு மிக்கானை, Thakkanaiyku Mikkaanai - அக்ரதாம்பலமளிப்பதற்குச் சிறந்தவனும்
தோளத மா மணியை, Tholadha Maa Maniyai - துளைபட்டு ஒளிமழுங்காத நீலமணி போன்றவனும்
தொண்டர்க்கு இனியானை, Thondarkku Iniyanai - பக்தர்களுக்குப் போக்யனுமான எம்பெருமானை
கேளா, Kela - கேட்கப்பெறாத
செவிகள், Sevigal - காதுகள்
செவி அல்ல, Sevi Alla - காதுகளேயல்ல
கேட்டோம், Kettom - (இதை நாம் பெரியோரிடத்துக்) கேட்டிருக்கின்றோம்.
2014பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் இரண்டு பாட்டாலே ஞாநேந்த்ரியன்களை நிரசித்த்தார் இனி மூன்று பாட்டாலே கர்மேந்திரியங்களை நிரசிக்கிறார் – இதில் அவனுடைய கீர்த்திகளை ஒழிய பேசுமவை கடலோசை பேச்சாய் இருக்கச் செய்தேயும் – அர்த்தம் இன்றிக்கே இருக்கிறாப் போலே – கேட்டுத் திரிகிறிகோள் இறே -என்று ஷேபம்) 3
தூயானைத் தூய மறையானைத் தென்னாலி மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட வாயானை மாலை வணங்கி யவன் பெருமை பேசாதார் பேச்சு என்றும் பேச்சல்ல கேட்டாமே –11-7-3
பதவுரை Show / Hide
துயானை, Thuyanaik - பரமபவித்திரனும்
தூய மறையானை, Thuya Maraiyanai - பரிசுத்தமான வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
தென் ஆலி மேயானை, Then Aali Meyaanai - அழகிய திருவாலிப்பதியிலே பொருந்தி வாழ்பவனும்
மேவாள் உயிர் உண்டு அமுது உண்டவாயானை, Mevaal Uyir Undu Amuthu Undavayanai - பொருத்தமற்றவளான பூதனையினுடைய உயிரை உறிஞ்சியுண்டு (அந்த விஷத்திற்குமாற்றாகத் தாயின்) முலைப்பாலமுதை உண்ட வாயையுடையவனுமான
மாலை, Malai - திருமாலை
வணங்கி, Vanangi - அடிபணிந்து
அவன், Avan - அப்பெருமானுடைய
பெருமை, Perumai - பெருமேன்மையை
பேசாதார், Pesathar - பேசப்பெறாதவர்களுடைய
பேச்சு, Peetchu - பேச்சுக்களானவை
என்றும், Endrum - ஒருகாலும்
பேச்சு அல்ல, Peetchu Alla - பேச்சுக்களாகமாட்டா
கேட்டோம், Kettom - (இதனை நாம் பெரியோர்களிடத்துக்) கேட்டிருக்கின்றோம்.
2015பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சிறுக்கனுக்கு விரோதியைப் போக்கி மாலை இட்டு இருந்தவனை –பிரேம பரவசராய் பாடும் பாட்டு அல்லது பாட்டு அல்ல) 4
கூடா விரணியனைக் கூருகிரால் மார்விடந்த ஓடா வடலரியை யும்பரார் கோமானைத் தோடார் நறுந்துழாய் மார்வனை யார்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமோ –11-7-4
பதவுரை Show / Hide
கூடா, Kooda - பகைவனான
இரணியனை, Iraniyanai - ஹிரண்யாஸுரனுடைய
மார்வு, Maarvu - மார்பை
கூர் உகிரால், Koora Ugral - கூர்மைபொருந்திய நகங்களாலே
இடந்த, Idantha - கீண்டருளின
ஓடா, Oda - (அவ்விரண்யனுக்குப் பின்வாங்காத
அடல், Adal - வீரம்பொருந்திய
அரியை, Ariyai - நாசிங்கமூர்த்தியானவனும்
உம்பரார் கோமானை, Umbarar Komanai - நித்யஸூரிகட்குத் தலைவனும்
தோடு ஆர் நறு துழலாய் மார்வனை, Thodu Ar Naru Thuzhalai Maarvanai - இதழ்கள் மிக்க நறுந்துளப மாலையணிந்த திருமார்பையுடையனுமான எம்பெருமானை
ஆர்வத்தால், Aarvaththal - அன்புடனே
பாடாதார், Paadathar - பாடப்பெறாதவர்களுடைய
பாட்டு, Paatu - பாட்டுக்களானவை
என்றும், Endrum - ஒருநாளும்
பாட்டு அல்ல, Paatu Alla - பாட்டுக்களாகமாட்டா
கேட்டோம், Kettom - (என்று நாம் பெரியோர்களிடத்தில்) கேட்டிருக்கிறோம்
2016பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்றைச் சொல்லி இன்னது உபமானம் என்ன ஒண்ணாத வடிவு – சொல்லும் இடத்தில் உபமானம் கொண்டு இழிய வேணும் – அவை தான் இதுக்குப் போராவாய் இருக்கும் – காமினிக்கு காந்தனுடைய தேஹமும் –ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லாருக்கும் படி – சங்கேந்தும் கையானைக் –தொழுகைக்கு இவன் கை போலே-தொழுவித்துக் கொள்ளுகைக்கு அவன் கை – தமச பரம -இத்யாதி – கை தொழாக் கையல்ல கண்டாமே –-தொழாக் கை கை யல்ல -என்று அந்வயம்) 5
மையார் கடலும் மணி வரையும் மா முகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும் கையானைக் கை தொழாக் கையல்ல கண்டாமே –11-7-5
பதவுரை Show / Hide
மைஆர் கடலும், Maiar Kadalum - கருங்கடலையும்
மணிவரையும், Manivaraim - நீலமணிமயமான மலையையும்
மா முகிலும், Maa Mugilum - காளமேகத்தையும்
கொய் ஆர் குவளையும், Koyi Ar Kuvalaiyum - பறிக்கவேணுமென்று விரும்பத்தக்க நீலோற்பலத்தையும்
காயாவும், Kaayavum - காயாம்பூவையும்
போன்று, Poondru - ஒத்து
இருண்ட, Irunda - கறுத்த
மெய்யானை, Meyyanaai - திருமேனியையுடையவனும்
மெய்யம் மலையானை, Meyyam Malaiyanaai - திருமெய்யமலையில்கோயில் கொண்டிருப்பவனும்
சங்கு ஏந்தும் கையானை, Sangu Aendhum Kaianaai - திருச்சங்கை ஏந்திக்கொண்டிருக்கின்ற திருக்கையையுடையனுமான பெருமானை
தொழா, Thozha - அஞ்சலிபண்ணாத
கை, Kai - கைகளானவை
கை அல்ல, Kai Alla - கைகளேயல்ல
கண்டாம், Kandam - (இதனை நாம் நன்கு) அறிவோம்.
2017பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுக்கு என்று இராத-ஞான இத்ரியங்கள்-கர்ம இந்த்ரியங்கள் அனைத்துக்கும் நிர்வாஹகமான மனஸ்ஸை இரண்டு பாசுரங்களால் நிரசித்து அருளுகிறார் – தான் நினைக்கும் அவை ஒழிய நினைக்குமவை ஹிருதயம் அன்று -என்கிறார் – ரத்ன பரிஷகன் கையிலே புகுந்து இவன் விலை இட்டால் இறே விலை பெறுவது) 6
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால் புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6
பதவுரை Show / Hide
கள் ஆர், Kal Aar - தேன்பொருந்திய
துழாயும், Thuzhayum - திருத்துழாயையும்
கணவலரும், Kanavalarum - அலரியும்
கூவிளையும், Koovilaiyum - பில்வபத்திரத்தையும்
முள் ஆர், Mul Aar - முட்கள் நிரம்பிய
முளரியும், Mulariyum - தாமரைப் பூவையும்
ஆம்பலும், Aampalum - ஆம்பல் மலரையும்
முன், Mun - கண்ணெதிரில்
கண்டக்கால், Kandakkaal - பார்த்தால்
புள் ஆய் ஓர் எனம் ஆய் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று, Pul Aayi Oor Enam Aayi Pukku Idanthan Pon Adikku Endru - ஹாம்ஸரூபியாய் அவதரித்தவனும் வராஹ ரூபியாயவதரித்துப் பூமியைப் பேதித்தெடுத்தவனுமான எம்பெருமானுடைய திருவடிகளுக்கு உரியவையென்று
உள்ளாதார், Ulladhaarkal - நினையாதவர்களுடைய
உள்ளத்தை, Ullathai - நெஞ்சை
உள்ளம் ஆ கொள்ளோம், Ullam Aa Kollom - நெஞ்சாகக் கொள்ள மாட்டோம்
2018பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபமானம் இல்லை என்று பேசாதே இருக்க மாட்டாரே – திவ்ய விக்ரஹத்துக்கு உபமானம் அபூமியானால் ஆத்மா குணங்களுக்கு உள்ளுப் போகார் இறே- இனி அவனுக்கு இது சேஷம் -என்னும் இத்தை இசையும் இத்தனை – நினைவுக்கு அநதிஷ்டமான நெஞ்சு -நெஞ்சு அல்ல) 7
கனையார் கடலும் கரு விளையும் காயாவும் அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும் சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல கண்டோமே –11-7-7
பதவுரை Show / Hide
கனை ஆர் கடலும், Kanai Ar Kadhalum - ஒலிமிக்க கடலையும்
கருவிளையும், Karuvilaiyum - கருவிளைப்பூபையும்
காயாவும், Kaayavum - காயாம்பூவையும்
அனையானை, Anaiyanai - ஒத்திருக்கின்ற எம்பெருமானை
அன்பினால் ஆர்வத்தால், Anbinal Arvaththal - அன்போடும் ஆற்றாமையொடும்
சுனை அர் மலர் இட்டு, Sunai Ar Malar Ittu - தடாகங்களில் நிரம்பிய பூக்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து
தொண்டர் ஆய் நின்று, Thondar Aayi Nindru - தொண்டர்களாயிருந்து கொண்டு
என்றும், Endrum - எப்போதும்
நினையாதார், Ninaiyathaar - நினைக்கப்பெறாதவர்களினுடைய
நெஞ்சு, Nenju - நெஞ்சானது
என்னும், Ennum - ஒருநாளும்
நெஞ்சு அல்ல, Nenju Alla - நெஞ்சாகமாட்டாது
கண்டாம், Kandam - (இதனை நாம் நன்கு) அறிவோம்.
2019பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் – மேன்மையால் குறையற்று சிவந்த கண்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை – நினைத்து அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும்-இரண்டையும் அறியாதவர்கள்) 8
வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த உறியார் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட சிறியானைச் செங்கண் நெடியானைச் சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமோ –11-7-8
பதவுரை Show / Hide
வெறி ஆர், Veri Ar - பரிமளம் மிக்க
கரு கூந்தல், Karuk Koondhal - கரிய கூந்தலையுடைய
ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகளாலே
வைத்த, Vaiththa - சேமித்துவைக்கப்பட்டதாய்
உறி ஆர், Uri Aar - உறிகளிலே பொருந்தியதாய்
நறு, Naru - மணம்மிக்கதான
வெண்ணெய், Vennaiy - வெண்ணெயை
தான் உகந்து உண்ட, Thaan Ugandhu Unda - தான் விரும்பி யமுதுசெய்த
சிறியானை, Siriya Anai - சிறியவனும்
செம் கண், Sem Kan - சிவந்த திருக்கண்களையுடையனுமான
நெடியானை, Nediyaanai - ஸர்வேச்வரனை
சிந்தித்து அறியாதார், Sindhiththu Ariyathaar - நெஞ்சாலும் நினைத்தறியாதவர்கள்
என்றும், Endrum - எப்போதும்
அறியாதார், Ariyathaar - அவிவேகிகளேயாவர்
கண்டாம், Kandam - நன்கு அறிவோம்
2020பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் தன்னைப் பேணாது ஒழிய தங்களைப் பேணித் திரியுமவர்கள மானிடவர் அல்லர் – பிரித்து அவயவங்களைச் சொல்லுகிறது என் – கட்டடங்க மனுஷ்யர் அல்லர் – என்று என் மனத்தே வைத்தேனே –ஸ்ரீ சர்வேஸ்வரன் குற்றங்களும் பொறுக்கும் இறே – அவன் கழித்த வன்றும் கிருபை பண்ணுமவர் இறே ஸ்ரீ ஆழ்வார் இருவரும் அகப்பட கை விடும்படி யானார்கள் – மித்ர பௌ பிகம் கர்த்தும் -என்னும் அவளிலும் இவருக்கு வாசி உண்டு – தலை தான் போனது அவனுக்கு ஸ்வரூபம் நசிக்கும் இவனுக்கு) 9
தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –11-7-9
பதவுரை Show / Hide
வண்டு, Vandu - வண்டுகளானவை
தேனொடு, Thenodu - வாயில் தேனோடே
ஆலும், Alum - ஆரவாரிக்கின்ற
திருமாலிருஞ் சோலை, Thirumaliruncholai - திருமாலிருஞ்சோலை மலையை
தான் இடம் ஆ கொண்டான், Thaan Idam Aa Kondaaan - தனக்கு இருப்பிடமாக அமைத்துக் கொண்டவனும்
அன்று, Anru - முன்பொருகாலத்தில்
தட, Thada - விசாலமாய்
மலர், Malar - குவளைமலர்போன்ற
கண்ணிக்காய், Kannikkai - கண்களையுடையளான நப்பின்னைப்பிராட்டிக்காக
ஆன் விடை ஏழ், Aan Vidai Ezh - ஏழுரிஷபங்களை
அடர்த்தாற்கு, Adarthaarkku - வலியடக்கின பெருமானுக்கு
ஆள் ஆனார் அல்லாதார், Aal Aanaar Alladhaar - அடிமைப்பட்டவர்கள் தவிர மற்றையோர்
மானடவர் அல்லர் என்று, Maanadavar Allar Endru - மநுஷ்யகோடியில் சேர்ந்தவர்களல்ல ரென்று
என் மனத்து, En Manathu - என்னெஞ்சிலே
வைத்தேன், Vaithen - உறுதியாகநாட்டினேன்
2021பெரிய திருமொழி || (11-7–நீள் நாகம்) - (எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாரையும் ஆக்கிக் கொள்ளும் திருவடிகள் –திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை – இத் திருவடிகளைச் சூடும் ஸ்ரீ ஆழ்வார் –சேஷித்வத்துக்கு அவன் ஸ்ரீ திரு வாழியைப் பிடித்தால் போலே சேஷத்த்வத்துக்கு இவர் வேலைப் பிடித்த படி- முன்பே பாசுரம் இட்டுத் தந்தோம் – இனி சரீரத்தால் உள்ள விநியோகம் கொள்ளுங்கோள்) 10
மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக் கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10
பதவுரை Show / Hide
மெய்நின்ற, Mei Nindra - பிரகிருதியிலே அநுபவிக்க வேண்டிநின்ற
பாவம், Paavam - பாவங்கள்
அகல, Akala - ஒழிவதற்காக
கை நின்ற ஆழியான், Kai Nindra Azhiyan - திருக்கையில் பொருந்திய திருவாழியையுடையனான
திரு மாலை, Thiru Maalai - திருமகள் கொழுநனுடைய
சூழும் கழல், Soolum Kazhal - ஸர்வ்வ்யாபியான திருவடிகளை
சூடி, Soodi - முடிமேற்கொள்ளுமவராய்
கை நின்ற வேல் கை, Kai Nindra Vel Kai - கையும் வேற்படையுமாய் நிற்பவரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Malai - சொல்மாலையாகிய
ஐ ஒன்றும் ஐந்தும் இவை, Ai Ondrum Aindhum Ivai - இப்பத்துப்பாசுரங்களையும்
பாடி, Paadi - வாயாரப்பாடி
ஆடுமின், Aadumin - நர்த்தனம் பண்ணுங்கோள்