திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1098 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரயோஜனாந்த பரராய் –தன்னை உகவாது இருப்பாருக்கும் கூட அபேஷித சம்விதானம் பண்ணுமவன்- நம்மை உகப்பாரையும் கிடைக்க வற்றோ என்று அவசர ப்ரதீஷனாய் இங்கே வந்து கிடக்கிற இந்நீர்மையை அனுசந்தியாதே புறம்பே உண்டு உடுத்து போது போக்குவாரை ஒரு வஸ்துவாக நினைத்து இரோம் என்கிறார்- கலங்குகை போலே காணும் மஹா மதிகளாவது அஸ்தாநே பயசங்கை பண்ணுவார்க்கு எல்லாம் பேராய் கொள்ளீர்-மஹா மதிகள் என்று – நித்ய சூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே – இது என்ன நீர்மை இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது – இது செய்யாதே இருப்பாரை – அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று- கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –எண்ணப் பெற்றிலோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே-அவ்வளவிலும் எண்ணோம் –என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு, வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார், மருவினிய
தண்ணார்ந்த கடன்மல்லைத் தலசயனத் துறைவாரை,
எண்ணாதே யிருப்பாரை யிறைப்பொழுது மெண்ணோமே. –2-6-1 | பதவுரை Show / Hideபெண் ஆகி, Pen Aagi - மோஹிநிபவதாரமெடுத்து, (- (அவர்களை வஞ்சித்துவிட்டு)) நண்ணாத வாள் அவுணரிடைபுக்கு, Nannaadha Vaal Avunaridhaipukku - பிரதிகூலர்களான அசுரர்களின் நடுவே புகுந்து வானவரை அமுது ஊட்டும் பெருமானார், Vaanavarai Amuthu Oottum Perumaanar - தேவர்களுக்குமாத்திரம் அமுதமனித்த ஸ்வாமியாயும், மருவ இனிய, Maruva Iniya - பொருந்தி வாழ்வதற்குப் பாங்கான தண் ஆர்ந்த, Than Aarntha - குளிர்ந்திநிரம்பிய கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - திருக்கடல்மல்லை யென்னும் திருப்பதியில் உறைவாரை, Uraivaaraik - நித்யவானம் செய்பவராயுமிருக்கிற ஸ்தலசாயிப்பெருமாளை எண்ணாதே இருப்பாரை, Ennaadhe Irupaarai - சிந்தியாமலிருப்பவர்களை இறைபொழுதும், Iraipozhudhum - அற்பகாலமும் எண்ணோம், Ennom - ஒரு பொருளாக நினைக்கமாட்டோம். |
| 1099 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முதல் தன்னிலே நம் குற்றம் அவன் திரு உள்ளத்திலே படாத படி பண்ணும் ஸ்ரீ பூமி பிராட்டியாரும் – அவன் தன் சர்வஞ்ஞத்வத்தாலே நம் குற்றத்தை கண்டானே ஆகிலும் -அவன் தன்னை – ந கச்சின் ந அபராத் யதி-என்று பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் அவன் பக்கலிலே கிட்ட இருக்கையாலே நமக்கு இனி இழக்க வேண்டாதபடி சுலபன் என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை ஹிருதயத்தில் அனுசந்திக்கும் அவர்கள் என்னை அடிமை கொள்ளுமவர்கள் என்கிறார்- நமக்கு புருஷகார பூதைகளான நாய்ச்சிமார்கள் அங்கே சேர இருந்தார்கள் என்று அனுசந்தித்தால் பின்னை நமக்கு கிட்டுகைக்கு ஒரு குறை இல்லை இறே – மாதா பிதாக்கள் சேர இருந்த இடத்தில் பிரஜைகளுக்கு சென்று கிட்டுகையில் ஒரு அருமை இல்லை கீழ்ப் பாட்டில் அங்கு நமக்கு எண்ணுகைக்கும் எண்ணாமைக்கும் பிராப்தி இல்லை –-இதுக்கு எல்லாம் கடவார் அவர்கள் என்கிறார் – அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மை கார்யம் கொள்ள வுரியார் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2 | பார்வண்ண மடமங்கை பனிநன்மா மலர்க்கிழத்தி,
நீர்வண்ணன் மார்வகத்தி லிருக்கையைமுன் நினைந்தவனூர்,
கார்வண்ண முதுமுந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம்,
ஆரெண்ணும் நெஞ்சுடையா ரவரெம்மை யாள்வாரே. –2-6-2 | பதவுரை Show / Hideபார்வண்ணம் மடம் மங்கை, Paarvannam Madham Mangai - ஆத்மகுணங்கள் நிறைந்த பூமிப்பிராட்டியும் (- (அதற்குப்பிறகு)) பனி நல் மா மலர் கிழத்தி, Pani Nal Maa Malar Kizhaththi - குளிர்ந்த சிறந்த தாமரை மலரில் தோன்றிய ஸ்ரீதேவியும் நீர் வண்ணன், Neer Vannaan - கடல்வண்ணனான எம்பெருமானுடைய மார்வு அகத்தில், Maarvu Agathil - திருமார்பிலும் இடப்பக்கத்திலும் இருக்கையை, Irukkaiyae - எழுந்தருளியிருக்கும் படியை முன் நினைந்து, Mun Ninaindhu - முந்துற அநுஸந்தித்து அவன் ஊர், Avan Oor - அப்பெருமானெழுந்தருளி யிருக்குமிடமாகிய கார் வண்ணம் முது முந்நீர் கடல்மல்லை தலசயனம், Kaar Vannam Muthu Munnir Kadalmallai Thalasayanam - கரிய கடலின் கரையிலேயுள்ள திருக்கடல்மல்லைத் திருப்பதியை எண்ணும் நெஞ்சு உடையார் ஆர், Ennum Nenju Udaiyaar Aar - சிந்திக்கவல்ல மனமுடையவர்கள் எவரோ அவர் எம்மை ஆள்வார், Avar Emmai Aalvaar - அப்படிப்பட்ட பாகவதர்கள் அடியோகங்களை அடிமை கொள்ளத்தக்கவர்கள். |
| 1100 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருதலைக் காமமாய் போகாமே இவன் வந்து கிடக்கிறது நமக்காக என்று தாங்களும் நினைக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் – அவர்கள் ஆளாத போது வேறு சிலருக்கு சேஷ பூதர் அல்லோம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3 | ஏனத்தி னுருவாகி நிலமங்கை யெழில்கொண்டான்,
வானத்தி லவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள,
கானத்தின் கடல்மல்லைத் தலசயனத் துறைகின்ற,
ஞானத்தி னொளியுருவை நினைவாரென் நாயகரே. –2-6-3 | பதவுரை Show / Hideஏனத்தின் உரு ஆகி, Eanathin Uru Aagi - வராஹரூபியாய்த் திருவவதரித்து நிலம் மங்கை, Nilam Mangai - பூமிப்பிராட்டியை எழில், Ezil - (முன்னிருந்த அழகு சிறிதும் குறையாமல்) அவ்வழகுடனே கொண்டான், Kondaan - (அண்டபித்தியில் நின்றும்) மீட்டுக்கொணர்ந்தவனும், வானத்திலவர், Vaanaththilavar - தேவர்கள் மகிழ்ந்து, Magizhndhu - ஆநந்தத்துடனே முறையால், Murayal - தங்கள் தங்கள் அதிகாரத்திற்குத் தகுதியாக ஏத்தி, Aethi - துதிக்க வலம் கொள்ள, Valam Kolla - பிரதக்ஷிணம் செய்வதற்குப் பாங்காக, கானத்தின் கடல்மல்லை தலசயனத்து உறைகின்ற, Kaanaththin Kadalmallai Thalasayanaththu Uraikindra - காட்டினிடையேயிருக்கிற திருக்கடல்மல்லையிலெழுந்தருளியிருப்பவனும், ஞானத்தின் ஒளி உருவை, Gnanaththin Oli Uruvai - ஞானலொளிபொருந்திய திருமேனியையுடையவனுமான பெருமானை நினைவார், Ninaivaar - சிந்திக்கும் பாகவதர்கள் என் நாயகர், En Naayakar - அடியேனுக்குத் தலைவராவர். |
| 1101 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் பிரதி பஷ நிரசன சமர்த்தனாய் இருக்கச் செய்தே ஆநு கூல்யத்தாலே கார்யம் கொள்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியை அனுசந்தித்து ஈடுபடுமவர்கள் என் ஒருவன் அளவன்றிக்கே என் குலத்துக்காக நாதர் ஆவார்கள் என்கிறார்- இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார் நமக்காக விறே -என்று நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – எங்கள் குல தெய்வமே- குல தைவதம் தத் பாதாராவிந்தம் –என்னும் அளவல்ல எங்களது-என்கிறார் நான்காம் பாசுரத்தில்) 4 | விண்டாரை வென்றாவி விலங்குண்ண, மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை,
கொண்டாடும் நெஞ்சுடையா ரவரெங்கள் குலதெய்வமே. –2-6-4 | பதவுரை Show / Hideவிண்டாரை, Vindaarai - சத்துருக்களை ராவணாதி ராக்ஷஸர்களை (- (கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை-;)) வென்று, Vendru - தோற்கடித்து ஆவி விலங்கு உண்ண, Aavi Vilangu Unna - (அவர்களுடைய) உயிரை (நாய் நரி முதலிய) மிருகங்கள் மேல்விழுந்து முடிக்கும் படியாகவும், மெல் இயலார் கொண்டாடும் மல் அகலம், Mel Iyalar Kondadum Mal Akalam - மாதர்கள் கொண்டாடப் பெற்றதும் மிடுக்கையுடையதுமான (அவர்களது) மார்வை அழல் ஏற, Azhala Eera - அக்நி ஆக்ரமித்து புஜிக்கும் படியாகவும் வெம் சமத்து, Vem Samathu - பயங்கரமான போர்க்களத்திலே கண்டாரை, Kandaarai - பார்த்துக்கொண்டிருந்த கொண்டாடும் நெஞ்சுஉடையாரவர், Kondadum Nenjuudaiyaaravar - புகழ்ந்து பேசும்படியான நெஞ்சுபடைத்த பாகவதர்கள் எங்கள் குலம் தெய்வம், Engal Kulam Deivam - எங்கள் குலத்துக்குத் தெய்வங்களாவர். |
| 1102 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குத்ருஷ்டிகள் சொல்லுகிறவற்றை ஆஸ்ரயித்து வர்த்தியாதே –ஆஸ்ரிதர்க்காக திரு வெக்காவில் படுக்கை மாறிக் கிடந்தவனை – ஓர் ஆஸ்ரிதனுக்காக தரை கிடக்கிற தேசம் –அவன் தனக்கு பரம ப்ராப்யமாக கொண்டு வந்து நிற்கிற தேசத்தை – கர்த்தவ்யம் என்று தொழா நிற்கச் செய்தே புறம்பே-நெஞ்சு அந்ய பரமாய் இருக்கை அன்றிக்கே ஆசையின் கார்யம் தொழ வேண்டும் என்று தோற்றும்படி இருக்கை – திரு கடல் மல்லையைத் தொழுகிறவர்கள் உடைய அவ்வேற்றம் எல்லாம் நமக்கு உடலாக அவர்களை ஸ்நேஹி- என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | பிச்சச் சிறுபீலிச் சமண்குண்டர் முதலாயோர்,
விச்சைக் கிறையென்னு மவ்விறையைப் பணியாதே,
கச்சிக் கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்,
நச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே. –2-6-5 | பதவுரை Show / Hideபிச்சம் சிறு பீலி, Picham Siru Peeli - (மயிலிறகுகளினால் செய்யப்பட்ட) குடையையும் சிறிய விசிறியையு முடைய சமண் குண்டர் முதலாயோர், Saman Gundar Mudhalaayor - நீசரான சமணர் முதலானவர்கள் விச்சைக்கு இறை என்னும், Vichchaikku Irai Ennum - ஸர்வஜ்ஞனென்று சொல்லிக் கொண்டாடுகிற அவ் இறையை, Av Iraiyai - அந்த அமணச்சாமியை பணியாதே, Paniyadhe - பணியாமல். கச்சி கிடந்தவன் ஊர் கடல்மல்லை தலசயனம் நச்சி தொழுவாரை, Kacchi Kidandhavan Oor Kadalmallai Thalasayanam Nachchi Thozhuvaarai - கச்சியில் (திருவெஃகாவில்) பள்ளி கொள்ளும் பெருமானது திவ்யதேசமாகிய திருக்கடல் மல்லையை விரும்பித் தொழுகின்ற பாகவதர்களை என் தன் நல் நெஞ்சே!, En Than Nal Nenje - எனது நல்ல நெஞ்சமே! நச்சு, Nachchu - நீ விரும்பித்தொழு. |
| 1103 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே சுழிக்கும் நெஞ்சு உடையவர்களை மட நெஞ்சே––வலம் கொள் – நமக்கு அவர்கள் நின்ற நிலை போராதுஅவர்கள் பக்கல் அநுவர்த்தநத்திலே அந்வயிக்க வேணும் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6 | புலன்கொள்நிதிக் குவையோடு புழைக்கைமா களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும் சுமந்தெக்கும் நான்றொசிந்து,
கலங்களியங் கும்மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்,
வலங்கொள்மனத் தாரவரை வலங்கொள்ளென் மடநெஞ்சே. –2-6-6 | பதவுரை Show / Hideபுலன் கொள், Pulan Kol - இந்திரியங்களைக் கவர்கின்ற (மநோஹரமான) நிதி குவையோடு, Nidhi Kuvaivodu - பொற்குவியல்களையும் புழை கை மா களிறு இனமும், Puzhai Kai Maa Kaliru Inamum - துதிக்கையையுடைய பெரிய யானைக் கூட்டங்களையும் நலம் கொள் நவமணி குவையும், Nalam Kol Navamani Kuvaikum - நல்ல நவரத்னக் குவியல்களையும் சுமந்து, Sumandhu - தாங்கிக்கொண்டு நான்று ஒசிந்து, Naantru Osindhu - (ஏறின சரக்குகளின் கனத்தாலே) மிகவும் உள்ளழிந்து கலங்கள், Kalangal - கப்பல்களானவை எங்கும், Engum - பார்த்தவிடமெங்கும் இயங்கும், Iyankum - ஸஞ்சரிக்கப்பெற்ற மல்லை, Mallai - பெருமையையுடைத்தான கடல், Kadal - கடலின் கரையிலுள்ள மல்லைத் தலசயனம், Mallai Thalasayanam - மல்லாபுரியை வலம் கொள் மனத்தாரவரை, Valam Kol Manaththaravarai - பிரதிக்ஷணம் பண்ணவேணுமென்கிற விருப்பமுடைய பாகவதர்களை, என் மட நெஞ்சே, En Mada Nenchae - எனக்கு விதேயமான மனமே! வலம் கொள், Valam Kol - நீ அநுவர்த்திப்பாயாக. |
| 1104 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த ஸ்ரீ திருக்கடல் மல்லையையும் அங்கு கிடக்கிற ஸ்ரீ நாயனாரையும் தேடி இராதே தொழுவார்கள் உத்தேச்யராய் தொழு என் தூய் நெஞ்சே –ததீய சேஷத்தளவிலே நிற்கும்படியான சுத்தியை யுடையை யிறே நீ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7 | பஞ்சிச் சிறுகூழை யுருவாகி, மருவாத
வஞ்சப்பெண் நஞ்சுண்ட அண்ணல்முன் நண்ணாத,
கஞ்சைக் கடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்,
நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாயென் தூய்நெஞ்சே. –2-6-7 | பதவுரை Show / Hideபஞ்சி சிறு கூழை உரு ஆகி, Panjji Siru Kuzhai Uru Aagi - பஞ்சுபோலே மிருதுவாய் சிறிதான மயிர்முடியையுடையளான யசோதைப் பிராட்டியின் உருவெடுத்துக் கொண்டு (வந்தவளும்) மருவாத வஞ்சம் பெண் நஞ்சு, Maruvatha Vancham Pen Nanju - நெஞ்சில் இரக்கமற்றவளும் வஞ்சகமுடையவளுமான பூதனையென்னும் பேய்மகளினுடைய (முலையில் தடவியிருந்த) விஷத்தை உண்ட அண்ணல், Unda Annal - அமுது செய்த ஸ்வாமியும், முன், Mun - முன்னொருகால் நண்ணாத நஞ்சை கடந்தவன், Nannaadha Nanjai Kadandhavan - தன்னிடத்து அன்பு கொள்ளாமலிருந்த கம்ஸனை வென்று முடித்தவனுமான பெருமானுடைய ஊர், Oor - திவ்ய தேசமாகிய கடல்மல்லை தலசயனம், Kadalmallai Thalasayanam - திருக்கடன்மல்லையை நெஞ்சில் தொழுவாரை, Nenjin Thozhuvaarai - நெஞ்சாரத் தொழுகின்ற பாகவதர்களை என் தூய் நெஞ்சே, En Thoo Nenchae - எனது பரிசுத்தமான மனமே! தொழுவாய், Thozhuvaai - நீ தொழக்கடவை. |
| 1105 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருக் கடல் மல்லையைத் தொழுகை காதா சித்கமாகை தவிர்ந்து ஸ்வபாவம் ஆம்படியான நெஞ்சை யுடையாரை – அவர்களுக்கு ஊரைத் தொழுகை யாத்ரையானவோபாதி அவர்கள் தங்களை தொழுகை கிடாய் நெஞ்சே உனக்கு யாத்ரை – பாகவத சேஷத்வம் நன்று என்று உபதேசிக்கலாம் படி இறே உன் சுத்தி இருக்கிறது -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8 | செழுநீர் மலர்க்கமலம் திரையுந்த வன்பகட்டால்,
உழுநீர் வயலுழவ ருழப்பின்முன் பிழைத்தெழுந்த,
கழுநீர் கடிகமழும் கடன்மல்லைத் தலசயனம்,
தொழுநீர் மனத்தவரைத் தொழுவாயென் தூயநெஞ்சே. –2-6-8 | பதவுரை Show / Hideஉழுநீர் வயல், Uzhu Neer Vayal - எப்போதும் உழுதுகொண்டேயிருக்க வேண்டும்படியான இயற்கையுடைய கழனிகளிலே (- (என் தூய் நெஞ்சே! தொழுவாய்-.)) உழவர், Uzhuvar - க்ருஷி பண்ணுகிற உழவர்கள். செழு நீர் திரை, Sezhu Neer Thirai - அழகிய நீரின் அலைகளையும் கமலம் மலர், Kamalam Malar - தாமரை மலர்களையும் உந்து, Undhu - தள்ளுகிற வல் பகட்டால், Val Pagattal - வலிய எருதுகளைக்கொண்டு உழ, Uzha - உழுதல் செய்ய, பின் முன், Pin Mun - பின்னும் முன்னும் பிழைத்து எழுந்த, Pizhaithu Ezhuntha - உழவுக்குத் தப்பி யெழுந்த கழுநீர், Kazhunir - செங்கழுநீர் மலர்களினுடைய கடி கமழும், Kadi Kamazhum - பரிமளம் வீசப்பெற்ற கடல்மல்லை தலசயனம், Kadalmallai Thalasayanam - திருக்கடல்மல்லையை தொழுநீர் மனத்தவரை, Thozhunir Manaththavarai - வணங்குவதையே இயற்கையாகவுடைய நெஞ்சு படைத்த பாகவதர்களை |
| 1106 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே வந்து சாய்ந்து அருளின நீர்மையை அனுசந்தித்து தொழும் நெஞ்சு உடையாரை – அவர்கள் தொழும் விஷயத்தை தேடி இராதே-நெஞ்சே உனக்குத் தொழுகைக்கு விஷயம் அவர்கள் தாங்கள் கிடாய்- என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9 | பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு,
இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்,விசும்பில்
கணங்களியங் கும்மல்லைக் கடன்மல்லைத் தலசயனம்,
வணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே. –2-6-9 | பதவுரை Show / Hideபிணங்கள் அடு காடு அதனுள், Pinangal Adu Kaadu Adhanul - பிணங்களைச் சுடுகிற சுடுகாட்டிலே (- (என்தன் மட நெஞ்சே! வணங்கு-.)) நடம் ஆடு, Nadam Aadu - நடமாடுகின்ற பிஞ்ஞகனோடு, Pinjjanonodu - ருத்ரனோடுகூட இணங்கு, Inangu - பொருந்தி யிருக்கிற திரு சக்கரத்து எம்பெருமானார்க்கு இடம், Thiru Chakkarathu Emperumanarkku Idam - சக்ரபாணியான பெருமானுக்கு இடமானதும் விசும்பில் கணங்கள், Visumbil Kanangal - தேவ ஸமூஹங்கள் இயங்கும், Iyankum - வந்து ஸஞ்சரிக்கும் பெருமையுடையதுமான கடல் மல்லை தலசயனம், Kadal Mallai Thalasayanam - திருக்கடல் மல்லையை வணங்கும் மனத்தாரவரை, Vanangum Manaththaravarai - வணங்குதற்குரிய சிந்தை படைத்த பாகவதர்களை |
| 1107 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷிக்கைக்கு – கையில் வேல் பிடித்தால் போலே ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி – இத் திருமொழியை அப்யசிக்க வல்லார் –முடியை உடையராய் நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய் நித்ய ஸூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | கடிகமழு நெடுமறுகில் கடல்மல்லைத் தலசயனத்து,
அடிகளடி யேநினையு மடியவர்கள் தம்மடியான்,
வடிகொள்நெடு வேல்வலவன் கலிகன்றி யொலிவல்லார்,
முடிகொள்நெடு மன்னவர்தம் முதல்வர்முத லாவாரே. –2-6-10 | பதவுரை Show / Hideகடி கமழும் நெடுமறுகின், Kadi Kamazhum Nedumarugin - பரிமளம் வீசுகின்ற நீண்ட வீதிகளையுடைய கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - திருக்கடல்மல்லையி லெழுந்தருளியிருக்கிற அடிகள், Adigal - எம்பெருமானுடைய அடியேநினையும், Adiyeninaiyum - திருவடிகளையே தியானிக்கின்ற அடியவர்கள் தம், Adiyavarkal Tham - பாகவதர்கட்கு அடியான், Adiyan - தாஸபூதரும். வடிகொள் நெடு வேல் வலவன், Vadikol Neduveel Valavan - கூர்மை பொருந்திய பெரிய வேலைக்கொண்டு பொருவதில் வல்லவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வாருடைய ஒலி, Oli - இவ்வருளிச்செயலை வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள், முடி கொள் நெடு மன்னவர் தம் முதல்வர் முதல் ஆவார், Mudi Kol Nedumannar Tham Muthalvar Muthal Avar - கிரீடமணிந்த ராஜாதி ராஜர்களுக்கும் தலைவராகப் பெறுபவர்கள். |