திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3-5 வந்து (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1188பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எனக்கு தாரகனுமாய்-நிரதிசய போக்யனுமான நீ ஸ்ரீ திருவாலியை இருப்பிடமாக உடையையாய் வைத்து தனக்கு என ஓர் இடம் இல்லாதாரைப் போலே என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே – அந்யதா அஞ்ஞானமான தேசத்தை இருப்பிடமாக உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து என் ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே) 1
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே அந்தளி ரணியார சோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும் செந்தழல் புரியும் திருவாலி யம்மானே –3-5-1
பதவுரை Show / Hide
அம் தளிர்அணி ஆர் அசோகின் இளதளிர்கள் அவை, Am Thalirani Aar Asokkin Ilathalirgal Avai - அழகிய தளிர்களாலுண்டான அழகு பொருந்திய அசோக மரத்தினது இளந்தளிர்களானவை
எங்கும், Engum - எல்லாவிடங்களிலும் பாளியிருப்பதனாலே
செம் தழல் புரையும், Sem Thazhal Puraiyum - சிவந்த அக்கி ஜ்வலிப்பது போலேயிருக்கப்பெற்ற
திரு ஆலி அம்மானே, Thiru Aali Ammaane - திருவாலியில் எழுந்தருளியிருக்கும் பெருனானே!, எனக்குச் செல்ல மானவனே!
என் ஆர்உயிரே, En Aaruyire - எனது அருமையான உயிர்போன்றவனே!,
வந்து, Vandhu - நீயாகவே நிர்ஹேதுக் விஷயீகாரம்பண்ணி
உனது அடியேன் மனம் புகுந்தாய், Unathu Adiyean Manam Pugundhai - உன்னடியனான என்னுடைய மனத்திலே வந்து புகுந்தருளினாய்;
புகுந்ததற்பின், Pugundhatharpin - அப்படி நீ வந்து புகுந்த பின்பு
வணங்கும் என் சிந்தனைக்கு, Vanangum En Sindhanaikku - வணக்கமுற்ற என் மனத்துக்கு
இனியாய், Iniyai - போக்யனானாய்
1189பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளிற்று இவர் நெஞ்சிலே புகுருகைக்கு விலக்காமைக்கு அவசரம் பெரும் அளவும் யாயிற்று – விலக்காமை பெற்று – இவர் ஹிருதயத்தில் புகுந்த பின்பு க்ருத்யக்ருத்யனாய் இருந்தான் ஆயிற்று விபரீத ஜ்ஞானம் ஜனகமான தேசத்தை இருப்பிடமாக உடையையாய் இருந்து வைத்து என்னுடைய ஹிருதயத்தில் புகுந்து இருந்தாயே) 2
நீல தடவரை மா மணி நிகழக் கிடந்தது போல் அரவணை வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் சோலைத் தலைக் கணமா மயில் நடமாட மழை முகில் போன்று எழுந்து எங்கும் ஆலைப் புகை கமழும் அணி யாலி யம்மானே –3-5-2
பதவுரை Show / Hide
சோலைத்தலை மாமயில் கணம் நடம் ஆட, Solai Thalai Maamayil Kanam Nadam Aada - சோலையிலே அழகிய மயில்களின் கூட்டமானது (களித்துக்) கூத்தாடும்படியாக (- (அணி ஆலி அம்மானே!-.))
ஆலை புகை மழைமுகில் போன்று எங்கும் எழுந்து கமழும், Aalai Pugai Mazhaimugil Ponderu Engum Ezhundhu Kamazhum - கருப்பஞ்சாறு அட்டபுகையானது காளமேகம்போலே எங்குங் கிளர்ந்து பரவி பரிமளிக்கப்பெற்ற
நீலம் தடவரை மாமணி நிகழ கிடந்தது போல், Neelam Thadavarai Maamani Nigazha Kidandhadhu Pol - நீலநிறமுள்ள பெரிய வொரு மலையானது (தன்மேல்) ஒரு நீலரத்னம் விளங்கப்பெற்றுப் படுத்திருப்பது போன்று
வேலைத்தலை அரவு அணை கிடந்தாய், Velaithalai Aravu Anai Kidandhai - திருப்பாற்கடலிலே சேஷசயனத்திலே (கௌஸ்துப மணி விளங்கப்) பள்ளி கொண்டிருந்தாய் முன்பு;
அடியேன் மனத்து இருந்தாய், Adiyean Manaththu Irundhai - (இப்போது) என்னுடைய மனத்திலே புகுந்து நீங்காதிருக்கின்றாய்
1190பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மநோ ரதத்தாலே நான் கால ஷேபம் பண்ணாத படியாக என் ஹிருதயத்திலே வந்து புகுந்தது இஹ லோகத்திலே எனக்கு விலக்காமைக்கு என்று இருந்தேன்) 3
நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி யிராமை என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில் செந்நெல் கூழை வரம் பொரீ இ அரிவார் முகத்தெழு வாளை போய் கரும்பு அந்நல் காடு அணையும் அணி யாலி யம்மானே –3-5-3
பதவுரை Show / Hide
எறி நீர்வளம் செறுவில், Eri Neervalam Seruvil - அலையெறிகின்ற நீர்வளம் பொருந்திய வயல்களிலே (- (அணி ஆலி அம்மானே !–))
செந்நெல் கூழை, Sennel Kuzhai - செந்நெற்பயிர்கள்
வரம்பு ஒரி இ, Varambu Ori I - வரப்புகளின்மேலே சாயவிட்டு
அரிவார்முகத்து, Arivaar Mugaththu - அறுக்கிறவர்களுடைய முகத்திலே
எழு வாளை, Ezhu Vaalai - (அக்கதிர்களில் நின்றும்) குதித்துப்பாய்ந்த மீன்களானவை (அபாயமுள்ள இவ்விடம் இனி நமக்குத் தகாதென்று அவ்விடம் விட்டுப்) புறப்பட்டுப் போய்
அ நல் கரும்பு காடு அணையும், A Nal Karumbu Kaadu Anaiyum - அப்படிப்பட்ட நல்ல கருப்பஞ் சோலைகளிலே சேரப்பெற்ற
நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி இராமை, Nennal Poi Varum Endru Endru Enni Iramai - ‘நேற்றுப்போனான், இன்று வருவன் இன்று வருவன்’ என்றிப்படி பாரித்துக்கொண்டு போதுபோக்கவேண்டாதபடி
என் மனத்தே புகுந்தது, En Manaththae Pugundhadhu - (ஸ்திரப்ரதிஷ்டையாக நீ) என் நெஞ்சிலே புகுந்தவிது
இம்மைக்கு என்று இருந்தேன், Immaikku Endru Irundhen - இந்த ஜன்மம் மழுமைக்குனமாம் என்று துணிந்திருக்கிறேன்.
1191பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன் பக்கலிலே வந்து சதைகரூபமான உன் திருவடிகளிலே எனக்கு மறவாமை யாகிற பேறு உண்டாம்படியாக – நான் அபேஷிக்க அன்றிக்கே தண்ணீர் பந்தல் வைப்பாரோபாதி நிர்ஹேதுகமாக செய்து அருளினாய் – தர்ச நீயமான ஸ்ரீ திரு வாலியிலே நிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனே) 4
மின்னின் மன்னு நுடங்கிடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் புன்னை மன்னு செருந்தி வண் பொழில்வாய் அகன் பணைகள் கலந்து எங்கும் அன்னம் மன்னு வயல் அணி யாலி யம்மானே –3-5-4
பதவுரை Show / Hide
புன்னை செருந்தின்னு வண் பொழில் வாய், Punnai Serundhinnu Van Pozhil Vaai - புன்னை மரங்களும் சுரபுன்னை மரங்களும் பொருந்திருயிருக்கிற அழகிய சோலைகளிலே
அகன் பனைகள் எங்கும், Akan Panaigal Engum - விசாலமான தடாகங்களிலெங்கும்
அன்னம் கலந்து மன்னும், Annam Kalandu Mannum - அன்னப்பற்றவைகள் சேர்ந்து வாழப்பெற்றதாயும்
வயல், Vayal - வயல்தளையடைத்தாயுமிருக்கிற
அணி ஆலி அம்மானே, Ani Aali Ammane - அழகிய திருவாலிநகரிக்கு இறைவனே!;
மின்னின் மன்னுநுடங்கு இடைமடவார்தம் சிந்தை மறந்து வந்து, Minnin Mannunudangu Idaimadavaartham Sindhai Marandhu Vandu - மின்னல் போன்று துவண்ட இடையையுடைய ஸ்த்ரிகளைப் பற்றின சிந்தனையை தவிர்ந்துவந்து
நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய், Nin Mannu Sevadhikke Maravaamai Vaiththai - உன் இணைத்திருவடிகளையே நான் நித்தியம் அநுஸந்திக் கும்படி அருள்செய்து வைத்திருக்கிறாய்;
ஆல், Aal - ஆச்சரியம்!.
1192பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர்க்கு விஸ்வாசத்தைப் பண்ணிக் கொடுக்குமவன் அன்றோ – எங்களுடைய நினைவு போலே தப்பிலும் தப்பி பலிக்கிலும் பலிக்கும் படி அன்று இறே உன் நினைவு இருக்கும் படி) 5
நீடு பல் மலரிட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம் வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா பாடலின் ஒலி சங்கினோசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும் ஆடலோசை யறா அணி யாலி யம்மானே –3-5-5
பதவுரை Show / Hide
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து, Paadal In Oli Sangin Osai Parandhu - (பகவத்விஷயப்) பாட்டுக்களின் மதுரமான தொனியும் சங்குகளின் முழக்கமும் எங்கும் வியாபித்திருக்கப் பெற்றதும்
பல் பணையால் மலி;ந்து, Pal Panaiyaal Malinthu - பலவகைப்பட்ட வாத்ய கோஷங்களாலும் நிறைந்திருக்கப் பெற்றதும்
எங்கும் ஆடல் அம்மானே, Engum Aadal Ammane - அழகிய திருவாலிநகரிக்கு ஸ்வாமியே!,
மரம் எய்த மா முனிவா, Maram Eytha Maa Munivaa - (ஸூக்ரிவனுடைய நம்பிக்கைக்காக) மராமரங்களேழின் மேலும் அம்புவிட்டுத் துளைத்த ஸத்யஸங்கல்பனே!,
நின் இணை அடி, Nin Inai Adi - உன் இணைத்திருவடிகளில்
பல் மலர்மாலை நீடு இட்டு, Pal Malarmalai Needu Ittu - பல வகைப்பட்ட புஷ்பமாலேகளை நெடுங்கலாம் ஸமர்ப்பித்து
தொழுது ஏத்தும் என் மனம் வாட, Thozhudhu Aeththum En Manam Vaada - ஸேவித்து துதிசெய்கின்ற அடியேனுடைய நெஞ்சு (உன்னைப்பிரிந்து)வாட்டமடையும் வகை
நீ நினையேல், Nee Ninaieyl - நீ நினைக்கலாகாது (என்னை விட்டு நீ பிரியலாகாது.)
1193பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரம போக்யமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து – சர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை கையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே – நான் உன்னை அபேஷியாதே இருக்க நீயே வந்து புகுந்த பின்பு இனிப் போகல ஒட்டேன்) 6
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும் அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6
பதவுரை Show / Hide
சந்தி வேள்வி சடங்கு நால் மறை, Sandhi Velvi Sadangu Naal Marai - ஸந்தியாவந்தனம் முதலிய நித்ய கரிமங்களையும் யாகம் முதலிய நைமித்திக கருமங்களையும் காம்ய கருமங்களையும் தெரிவிக்கிற நான்கு வேதங்களையும் (- (அணி ஆலி அம்மானே!-;))
ஆதியாய் ஓதிஓது வித்து வரும் அந்தணாளர் அறா, Aadhiyaai Othioathu Viththu Varum Andhanalaar Aru - அநாதிகாலமாகம தாங்கள் ஓதியும் பிறர்க்கு ஓதுவித்தும் வருக்கின்றன பிராம்மணர்கள் விட்டுநீங்காத (நித்யவாஸம் பண்ணுமிடமான)
நின்காமருசே அடி, Ninkamaruse Adi - உனது அழகிய திருவடிகளிலே
கந்தம் மா மலர்எட்டும், Kandham Maa Malarettum - மணம் மிக்க சிறந்த எட்டு வகைப் பூக்களையும் ஸமர்ப்பித்து
கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே, Kai Thozhudhu Ezhum Pundhiyen Manathae - வணங்கி உஜ்ஜீவிக்கவேணு மென்கிற அத்யவஸாய முடையேனான்  என்னுடைய நெஞ்சிலே
புகுந்தாயை போகல் ஒட்டேன், Pugundhaayi Pogaal Otten - வந்து புகுந்து வுன்னை இனி வேறோரிடம் போகவொட்டேன்
1194பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னைப் பெறுக்கைக்கு ஒரு முதல் இல்லாதபடி இருக்கிற எனக்கு ஸூஹ்ருதமானவனே நீயே வந்து புகுந்த பின்பு உன்னை நான் இனி போகல் ஒட்டேன் ஸ்ரீ வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு-அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு வாசி அற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே) 7
உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப் புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி அலவன் கண் படுக்கும் அணியாலியம்மானே –3-5-7
பதவுரை Show / Hide
நிலவு மலர்புன்னை நாழல் நீழல், Nilavu Malarpunnai Naazhal Neezhal - (இவற்றினுடைய நிழலில்) எப்போதுமுள்ள புஷ்பங்களை யுடைய புன்னை மரங்களென்ன ஞாழல் மரங்களென்ன (- (ஸமயம் பார்த்திருந்து))
தண்தாமரை மலரின் மிசை, Thanthamarai Malarin Misai - குளிர்ந்த தாமரைப் பூவின் மேலே
மலி அலவன்கண் படுக்கும், Mali Alavankann Padukkum - பெரிய ஆண் நண்டுகள் பள்ளி கொண்டிருக்கப் பெற்ற
திரை உலவு கடல், Thirai Ulavu Kadal - திரைக் கிளப்பத்தையுடைய திருப்பாற்கடலில்
பள்ளிகொண்டு, Pallikondru - சயனித்திருந்து
வந்து உன் அடியேன் மனம் புகுந்த அப்புலவ, Vandhu Un Adiyen Manam Pugundha Appulava - அங்கு நின்றும் ஒடிவந்து உனது தாஸனான என்னுடைய மனத்திலே புகுந்த அப்படிப்பட்ட ஸர்வஜ்ஞனே!
புண்ணியனே, Punniyaney - எனது பாக்கியம் வடிவெடுத்துள்ளவனே!
புகுந்தாயை போகல் ஒட்டேன், Pugundhaayi Pogaal Otten - என்னிடம் வந்து சேர்ந்தவுன்னை இனி வேறிடம் போகவொட்டேன்
1195பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினாய் அங்கு நின்றும் ஆஸ்ரிதனுக்காக ஸ்ரீ திருக் கடல் மல்லையிலே கண் வளர்ந்து அருளினாய் இவ்வோ இடங்கள் உனக்கு வாசஸ்தானமாய இருக்க என் பக்கல் கிருபை பண்ணி வந்து புகுந்தாய்) 8
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ கொங்கு செண்பக மல்லிகை மலர் புல்கி இன்னிள வண்டு போய் இளம் தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே –3-5-8
பதவுரை Show / Hide
இன் இளவண்டு, In Ilavandu - இனிய இள வண்டுகளானவை (- (அவை கொதித்தபடியாலே) (திரு ஆலி அம்மானே!- ;))
கொங்கு செண்பகம் மல்லிகை மலர்புல்கி, Kongu Senbagam Malligai Malarpulki - மணம் மிக்க செண்பகப்பூவையும் தழுவிப்பார்த்து
போய், Poy - அவற்றைவிட்டுப்போய்
இளதெங்கின் நாது அளையும், Ilathengin Naathu Alaiyum - இளைய தென்னை மரங்களின் பாளைகளிலே அளையப்பெற்ற
சங்கு தங்கு தட,கடல் கடல் மல்லையுள் கிடந்தாய், Sangu Thangu Thada Kadal Kadal Mallaiyul Kidandhai - சங்குகள் தங்கிய பெரிய திருப்பாற்கடலிலும் திருக்கடன் மல்லையிலும் (முன்பு) பள்ளி கொண்டிருந்தாய்;
இங்கு அருள் புரிந்து என்னுள் புகுந்தாய், Ingu Arul Purindhu Ennul Pugundhai - இப்போது கருணைகூர்ந்து என்னெஞ்சிலே பிரவேசித்தாய்;
இனி போயினால் அறையோ, Ini Poyinaal Arayyo - இனி நீயே விட்டுப்போக நினைத்தாயாகில் அறையோவறை
1196பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னை வன்னியமறுத்து ஆளுகிறவனே எனக்கு ஸ்வாமி ஆனவனே மாஸூச -என்று நான் உஜ்ஜீவிக்கும்படி ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்) 9
ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள் வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய் நீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு ஆதியாய் இருந்தாய் அணி யாலி யம்மானே –3-5-9
பதவுரை Show / Hide
நீதி ஆகிய வேதம், Neethi Aagiya Vedham - (காட்டார் அநுஷ்டிக்க வேண்டு மவற்றை) விதிக்குமவையான வேதங்களையும் (- (அணி ஆலி அம்மானே!–;))
மாமுனியாளர் தோற்றம், Maa Muniyalar Thotram - (அந்த வேதங்களிலுள்ள மந்திரங்களை தர்சநம் பண்ணினவர்களான) மஹர்ஷிகளின் வரலாற்றையும்
உரைத்து, Uraithu - வெளியிட்டவனாயும்
மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய், Mattravarkku Aadhi Aay Irundhai - மற்றுமுள்ள எல்லார்க்கும் காரணபூதனாயு மிருக்குமவனே!
வேதியா, Vedhiya - வேதமொன்றினாலேயே அறியத்தக்கவனே!
அரையா, Araiyaa - தேவாதி தேவனே!
எந்தாய், Endhai - எமக்கு ஸ்வாமியானவனே!
ஆயிரம் நாமமும் ஓதி, Aayiram Naamamum Othi - (உனது) ஸஹஸ்ர நாமங்களேயுஞ் சொல்லி;
பணிந்து ஏத்தி, Panindhu Aethi - வணங்கித் துதித்து
நின் அடைந்தேற்கு, Nin Adaindhaerku - உன்னைத் தஞ்சமாகப்பற்றி புள்ள எனக்கு
ஒரு பொருள் ஒரு மாற்றம் உரையாய், Oru Porul Oru Maatram Uraiyaai - ஒரு அர்த்தத்தையாவது ஒரு சொல்லையாவது அருளிச் செய்யவேணும்.
1197பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதில் உண்டான ஆதராதி அதிசயத்தாலே விட மாட்டாமை பிரித்து பிரித்து அருளிச் செய்கிறார்) 10
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென்னாலி யிருந்த மாயனை கல்லின் மன்னு திண தோள் கலியன் ஒலி செய்த நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடனே வல்லராய் யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே –3-5-10
பதவுரை Show / Hide
வண்டு புல்லி அறையும் பொழில் சூழ், Vandu Pulli Arayum Pozhil Soozh - வண்டுகளானவை ஒன்றோடொன்று அணைந்து இசைலே சுற்றிலுஞ் சூழப்பட்ட
தென் ஆலி இருந்த மாயனே, Then Aali Irundha Maayane - திருவாலியிலே எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாக,
கல்லின் திண் மன்னு தோள், Kallin Thin Mannu Thol - மலைபோலே திடமாயும் நித்யனாயு மிருக்கிற தோள்களையுடைய
கலியன் ஒலி செய்த, Kalyan Oli Seidha - திருமங்கை யாழ்வார்அருளிச்செய்த
நல்ல இன் இசை மாலே நாலும் ஓரைந்தும் ஒன்றும், Nalla In Isai Maale Naalum Ooraindhum Ondrum - அழகிய இனிய இசையை யுடைத்தான சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும்
நவின்று, Navindru - அபயளித்து
தாம் உடன் வல்லராய் உரைப்பார்க்கு, Thaam Udan Vallarai Uraipaarakku - அர்த்தாநுஸந்தாகம் பண்ணிக் கொண்டுரைக்கு மவர்கட்கு
வான் உலகு இடம் ஆகும், Vaan Ulaku Idam Aakum - பரமபதம் இருப்பிடமாகும்.