திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3-7 கள்வன் கொல் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1208பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இருவரும் இரண்டு முக்தர் ஆயிற்று –மாயா மிருகத்தை பிடித்து தா என்பாரும்-அதைப் பிடிப்பதாக அதன் பின்னே போவாரும் – லங்கத்வாரத்திலே சென்று நிற்கலாகாதோ என்று நில்லாதே-உத்தேச்ய பூமியிலே புக்கார்களோ அல்லர்களோ இருவரும் ஒருவருக்கு ஒருவராய் ஆழல் ஆயிற்று) 1
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ –3-7-1
பதவுரை Show / Hide
கள்வன் கொல்யான் அறியேன், Kalvan Kolyaan Ariyeen - (வந்து அழைத்துக் கொண்டு போனவன்) திருடனோ? (அன்றி உடையவன் தானோ?) எனக்குத் தொயிவில்லை; (- (இப்படி தம்பதிகளாகப்போன விவர்கள்))
கரியான் ஒரு காளை வந்து, Kariyaan Oru Kaalai Vandu - கருநிறத்தவனான ஒரு யௌவன புருஷன் வந்து,
வள்ளி மருங்குல், Valli Marungul - கொடி போல் நுட்பமான இடையை யுடையளாய்
என்தன் மடம் மானினை, Enthan Madham Maaninai - இள மான் போன்றவளான எனது மகளை
போத என்று, Podha Endru - வா வா என்றழைத்து,
வெள்ளி வளை கை பற்ற, Velli Valai Kai Patra - வெள்ளை வளைகளணிந்துள்ள கையைப் பிடிக்க, (உடனே அவள்)
பெற்ற  தாயாரை இட்டு அகன்று, Petra Thaayaarai Ittu Aghandru - பெற்ற வளர்த்த தாயாகிய என்னையும்  உபேக்ஷித்து விட்டொழிந்து(போய் விட்டாள்;)
அள்ளல் அம் பூ கழனி அணி, Allal Am Poo Kazhani Ani - சேற்று நிலங்களிலே அழகிய பூக்கள் நிறைந்த கழனிகளாலே அலங்கரிக்கப்பட்ட
ஆலி, Aali - திருவாலியிலே
புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேருவர்களோ?
1209பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காணாம்ருதமான அம்மான்பொடியை இட்டு கொண்டு போன படி- கண்ணால் கேட்டு கேளாதவற்றை வாயாலே கேட்டு -அவனுக்கு முன்னோக்கிப் போக ஒண்ணாதபடி அவன் பின்னே நடந்து ந சபுன ஆவர்த்ததே என்று புகுந்து-திர்யக்குகளும் கூட மீளாத ஊரிலே புகுவர் கொலோ) 2
பண்டு இவன் ஆயன் நங்காய் ! படிறன் புகுந்து என் மகள் தன் தொண்டை யஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின் கெண்டை யொண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து வண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-2
பதவுரை Show / Hide
நங்காய், Nangai - பெண்ணே!, (- (அயல் வீட்டுப் பெண்களில் ஒருத்தியை நோக்கி சொல்லுகிறாள்) (அப்படிப்பட்டவிவன் இப்போது) (தம்பதிகளாய்ச் சேர்ந்துகொண்ட அவ்விருவரும்))
இவன், Ivan - என் மகளைக்கொண்டுபோன விவன்
பண்டு, Pandhu - முன்பெல்லாம்
படிறன், Padiran - (பெண்களைத் திருடுவது முதலான) தீம்புகளைச் செய்கிற
ஆயன், Aayaan - இடையனாயிருந்தவன்
புகுந்து, Pugunthu - (என் வீட்டிலே ப்ரத்யக்ஷமாக) வந்து நுழைந்து
என் மகள்தன், En Magalthan - என் பெண்ணினுடைய
அம் செம்தொண்டை கனி வாய், Am Semthondai Kani Vaai - அழகிய சிவந்த ஆதொண்டைப் பழம் போன்ற அதரத்தை
நுகர்ந்தானை, Nugarnthaanai - (பானம் பண்ணினான்) அப்படி பானம்பண்ணின இவனை
உகந்து, Uganthu - (என் பெண்) விரும்பி
கொண்டை ஒரு கண் மிளிர, Kondai Oru Kan Milira - கொண்டைமீன் போலே அழகிய கண்கள் ஒளிவிட
கிளி போல் மிழற்றி, Kili Pol Mizhatri - கிளிபோலே மழலைச் சொற்கள் பேசிக்கொண்டு
அவன் பின் நடந்து, Avan Pin Nadandhu - அவன் பின்னே நடந்துபோய்
வண்டு அமர், Vandu Amar - வண்டுகள்படிந்த
கானல்மல்கும், Kaanalmalgum - கடற்கரைச் சோலை சூழ்ந்த
வயல், Vayal - கழனிகளையுடைய
ஆலி, Aali - திருவாலியிலே
புகுவர் கொலோ, Pughuvar Kollo - சென்று சேருவர்களோ?
1210பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பட்டர் இப்பாட்டை அருளிச் செய்து-ஒரு ஸ்திரியை விரூபை ஆக்கினவன் உடைய திறம் கேட்கில் அஞ்சுவன் என்கையாலே – இத்தலைக்கு ஒரு ஹானியாய் தோற்றா நின்றது –இது ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்யக் கூடாது இது எங்கனே சேரும்படி -என்று ஸ்ரீ ஆச்சானைக் கேட்க துடிப்பு இருக்க கை வேக வேணுமோ-ஸ்ரீ எம்பெருமானார் தானே அருளிச் செய்து வைத்தார் இறே -என்ன அருளிச் செய்த படி என்ன -என்று கேட்க – முன்பு ஒரு புணர்ந்து விட போக்கிலே பிறந்த பிரமாதத்தை கேட்டு அத்தை நினைத்து இப்பொழுது பயப்படுகிறாள் -என்று அருளிச் செய்தார்) 3
அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய் ! அரக்கர் குலப்பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே பஞ்சிய மெல்லடி எம் பணைத் தோளி பரக்கழிந்து வஞ்சி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-3
பதவுரை Show / Hide
வெம் சொல் நங்காய், Vem Sol Nangkaai - விரும்பத்தக்க வாய் மொழியையுடைய (அயல் வீட்டுப்) பெண்ணே!
அரக்கர் குலம் பாவை தன்னை மூக்கு, Arakkar Kulam Paavai Thannai Mooku - ராக்ஷஸகுலத்துப் பதுமை போன்ற சூர்ப்பணகையினுடைய மூக்கை
வெம் சினம், Vem Sinam - கடுங்கோபத்தாலே
அரிந்த, Arintha - அறுத்தொழித்த
விறலோன், Viralon - மிடுக்கையுடையனான அந்த யௌவந  புருஷனுடைய
திறம், Thiram - தன்மையை
கேட்கில், Kaetkil - கேள்விப்படுமளவில்
மெய்யே அஞ்சுவன், Meyye Anjuvan - உண்மையாக அஞ்சுகிறேன்!
பஞ்சிய மெல் அடி, Panjiy Mel Adi - பஞ்சுபோன்ற மிருதுவான அடியையுடையவனும்
எம் பணை தோளி, Em Panai Tholi - மூங்கில்போன்ற தோள்களை யுடையவளுமான என் மகள்
பாக்க்க்கழிந்து, Paakkazhindhu - பெரும்பழிக்கு இடமாகி (அவனோடு செல்ல, அவ்விருவரும்)
வஞ்சி அம் தண் பணை சூழ், Vanchi Am Than Panai Soozh - வஞ்சிக் கொடிகளாலழகிய குளிர்ந்த நீர் நிலகள் சூழ்ந்த
வயல், Vayal - கழனிகளையுடைய
ஆலி, Aali - திருவாலியிலே
புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேர்ந்திருப்பர்களோ?
1211பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்-இடையனை பிறந்தான் என்று ஆசைப் படுவாராய் ஆசைப்படா நின்றீர் கோள்-எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை – மாதவன் தன் துணையா நடந்தாள்-ஆழம் காலை மிதப் பெற்று புத்தி பண்ணினாள் அளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால்-தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்) 4
ஏது அவன் தொல் பிறப்பு ? இளையவன் வளை யூதி மன்னர் தூதுவனாயவனூர் சொல்லுவீர்காள் ! சொலீர் அறியேன் மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ? –3-7-4
பதவுரை Show / Hide
அவன், Avan - (என்மகளைக் கொண்டு போன) அவனுடைய (- (என்மகளோ வென்னில்) (சென்ற இருவரும்))
தொல் பிறப்பு, Thol Pirappu - பழைய ஜன்மம்
ஏது, Aethu - க்ஷத்ரிய ஜன்மமோ? இடைச்சன்மமோ? யாது கொல்?
அறியேன், Ariyen - நானறிகின்றிலேன்;
இளையவன், Ilaiyavan - குமரனாயும்
வளை ஊதி, Valai Oothi - சங்கை ஊதுமவனாயும்
மன்னர் தாதுவனாயவன், Mannar Thadhuvanayavan - பாண்டவர்களுக்காகத் தாதுசென்றவனாயுள்ள அவனுடைய
ஊர், Oor - ஊரையும்
அறியேன், Ariyen - அறிகின்றிலேன்;
சொல்லுவீர், Solluveer - சொல்லத் தெரிந்தவர்களே!
சொல்லீர், Sollir - சொல்லுங்கள்;
மாதவன் தன் துணை ஆ, Madhavan Than Thunai Aa - திருமால் தனக்குத் துணையாகப் பெற்று
நடந்தாள், Nadandhaal - (அவனோடு கூடச்) சென்றாள்;
தடம் சூழ் புறவின், Thadam Soozh Puravin - தடாகங்கள் சூழ்ந்த சோலைகளை யுடையதும்
போது, Podhu - பூக்களிலே
வண்டு ஆடு, Vandu Aadu - வண்டுகள் களித்துக் கூத்தாடப் பெற்ற
செம்மல், Semmal - பெருமைதங்கிய
புனல், Punal - தீர்த்தங்களையுடையதுமான
ஆலி, Aali - திருவாலியிலே
புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேருவர்களோ?
1212பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுடைய சர்வ அங்க சௌந்தர்யமும்-இவள் உடைய தோள் அழகு ஒன்றுக்கும் போரும் அத்தனை – இருவரும் கூட ஜல கிரீடை பண்ணி வர்த்திக்கலாம் தேசத்தில் புகுவர் கொலோ) 5
தாய் எனை என்று இரங்காள் தடந்தோளி தனக்கமைந்த மாயனை மாதவனை மதித்து என்னை யகன்ற இவள் வேயன தோள் விசிறிப் பெடையன்ன மென நடந்து போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் கொலோ ? –3-7-5
பதவுரை Show / Hide
தட தோளி இவள், Thada Tholi Ival - பெரிய தோள்களையுடைய என் மகள்
எனை, Enai - என் விஷயத்தில்
தாய் என்று இரங்காள், Thaai Endru Irangaal - பெற்றதாய் என்றும் இரக்கங்கொள்ளவில்லை;
தனக்கு அமைந்த, Thanakku Amaindha - தனக்குத் தகுந்த
மாயனை, Maayanai - ஆச்சரியனான திருமாலை
மதித்து, Mathiththu - கொண்டாடிக் கொண்டு என்னை அகன்ற என்னை விட்டு நீங்கினவளாய்
வேய் அன தோள் விசிறி, Vey Ana Thol Vichiri - மூங்கில் போன்ற தோள்களை வீசிக்கொண்டு
பெடை அன்னம் என நடந்து போயின, Pedai Annan Ena Nadandhu Poyina - அன்னப் பேடைபோல் நடந்து சென்ற
பூகொடியாள், Pookodiyal - அழகிய கொடிபோன்ற என் மகளும் (அவனும்)
புனல் ஆலி, Punal Aali - நீர்வளம்மிகுந்த திருவாலியிலே
புகுவர்கொலோ, Puguvarkolo - சென்று சேருவர்களோ?
1213பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரதிசய போக்யனுமாய்-சுலபனுமாய்-ரஷகனுமானவன் உடன் கூட-ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளுகிற போது ஸ்ரீ திரு அயோத்யை கோடித்தாற் போலே ஸ்ரீ திரு வாலியையும் கோடிக்கப் பண்ணி புகுகிறார்கள் இறே) 6
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ? –3-7-6
பதவுரை Show / Hide
என் துணை என்று எடுத்தேற்கு, En Thunai Endru Eduthetku - ‘இவள் நமக்கு உதவியாயிருப்பள்’ என்று வளர்த்து வந்த என் விஷயத்தில் (- (என் மகளானவள்) (இலங்கைக்குச் சென்று) (இருவரும்) (எழில் ஆலி புகுவர்கொலோ-.))
இறையேனும், Irayeenum - கொஞ்சமாகிலும்
இரங்கிற்றிலன், Irangittrilan - இரக்கங்கொண்டாளில்லை;
தன் துணை ஆய என்தன் தனிகைக்கும், Than Thunai Aay Enthan Thanikaikkum - (இதுவரையில்) தனக்கு உதவியாயிருந்த நான் தனியே யிருப்பதற்காகவும்
இரங்கிற்றிலள், Irangittrilal - இரக்கங் கொண்டாளில்லை;
வானவர்க்கு, Vaanavarkku - தேவர்களுக்கு
வன் துணை ஆய், Van Thunai Aay - சிறந்த துணையாய்
அரங்கத்து உறையும், Arangathu Uraiyum - கோயிலிலே கண் வளர்ந்தருளுகிற
இன் துணைவனொடும் போய், In Thunaivanodum Poy - நல்ல துணைவனான திருமாலோடே சென்று
1214பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே இருவரைக் கை விட்டால்-அங்கே இருவரைப் பற்ற வேணும் இறே) 7
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள் பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் மின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ? –3-7-7
பதவுரை Show / Hide
மின்மையும், Minmaiyum - மின்னற் கொடியையும் (- (அவ்விருவரும்) (புகுவர் கொலோ சென்று சேருவர்களோ?))
வஞ்சியையும், Vanjiyaiyum - வஞ்சிக் கொடியையும்
வென்று, Vendru - தோற்கடித்து
இலங்கும், Ilankum - (மிகவும் ஸூக்ஷ்மமாக)விளங்காநின்ற
இடையாள், Idaiyal - இடையை யுடையளான என் மகள்,
அன்னையும் அத்தனும் என்று, Annaiyum Aththanum Endru - தாய் தகப்பனென்று கூட
அடியோமுக்கு, Adiyomukku - எங்கள் விஷயத்தில்
இரங்கிற்றிலள், Irangittrilal - தயை பண்ணினாளில்லை;
பின்னை தன் காதலன் தன், Pinnai Than Kaadhalan Than - திருமாலினது
பெரு தோள் நலம் பேணினள், Peru Thol Nalam Peeninal - பெருமை தங்கிய தோள்களோடே அணைந்துபெறும் ஸுகத்தையே விரும்பின வளாய்
நடந்து, Nadandhu - (அவனோடு கூட) நடந்து செல்ல,
புன்னையும் அன்னமும் சூழ், Punnaiyum Annanum Soozh - புன்னைப் பொழிலும் அன்னப் பறவைகளும் சூழ்ந்த
புனல், Punal - நீர்வளம் பொருந்திய
ஆலி, Aali - திருவாலியிலே
1215பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செழும் கோதை-லிலோ உபகரணங்களை விட்டு-அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்- தன்னைக் காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ) 8
முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப் பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-8
பதவுரை Show / Hide
முற்றிலும், Muttirulum - (வினையாட்டுக் கருவியான சிறுமுறத்தையும் (- (இருவரும்) (வயல் ஆலி புகுவர்கொலோ-.))
பைங்கிளியும், Paingiliyum - பச்சைக் கிளியையும்
பந்தும், Pandhum - பந்தையும்
ஊசலும், Oosalum - ஊஞ்சலையும்
சிற்றில்பேசுகின்ற, Sitrilpesugirn - சிறிய கூட்டிலிருந்து பேசுகிற
மென் பூவையும், Men Poovaiyum - மெல்லிய நாகணவாய்ப ; பறவையையும்
விட்டு அகன்ற, Vittu Aghandra - விட்டிட்டு வெளியேறின
செழு கோதை தன்னை, Sezhu Kothai Thannai - அழகிய பூமாலை போன்றவளும்
முற்று இழையை, Muttru Izhaiyai - நிறைந்த ஆபரணங்களையிணந்த வளுமான என் மகளே
பெற்றிலேன், Petrilein - நான் கண்ணால் காணப்பெற்றிலேன்;
மற்று எல்லாம் கைதொழ, Mattru Ellam Kaithozha - எல்லோருங் கண்டு ஸேவிக்கும் படியாக
பிறப்பு இலிபின்னே நடந்து போய், Pirappu Ilipinnai Nadandhu Poi - நித்யனான எம்பெருமான் பின்னே  நடந்துசென்று.
1216பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஈஸ்வரனைக் காட்டில் ஸ்ரீ பிராட்டி-அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே ஸ்ரீ பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே இவளுடைய கண்கள்) 9
காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப்பாவை யொப்பாள் பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய் வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-9
பதவுரை Show / Hide
ரவி அம் கண்ணி, Ravi Am Kannni - நீலோற்பலமலர்போன்று அழகிய கண்களையுடையவளும், (- (இருவரும்) (வயல் ஆலி புகுவர்கொலோ-.))
யெண்ணில் கடி மா மலர்பாவை ஒப்பாள், Yennil Kadi Maa Malarpavai Oppaal - ஆலோசிக்குமிடத்தில், பெரிய பிராட்டியாரோடு ஒப்பாகச் சொல்லத் தகுந்தவளும்
தாவிசேர்அன்னம் அன்னத் நடையாள், Thavicheraannam Annath Nadayaal - இறகையுடைய அன்னப்பேடையின் நடைபோன்ற நடையையுடையவளும்
ஈடு பணை தோளி, Eedu Panai Tholi - மூங்கில் போன்ற தோள்களையவளுமான  என் மகள்
பாவியேன் பெற்றமையால், Paaviyen Petramaiyaal - பாவியான என்னுடையவயிற்றிற் பிறந்த குற்றத்தினால்
பரக்கழிந்து, Parakazhindhu - பெரும்பழிக்கு இலக்காகி
நெடுமாலொடும் போய், Nedumaalodum Poi - ஸர்வேச்வரனோடு கூடச் சென்று
வாவி, Vaavi - நடைவாவிகளும்
அம் தண்  பணை, Am Than Panai - அழகிய குளிர்ந்த தடாகங்களும்
சூழ், Sool - சூழ்ந்த
1217பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் –தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா – ஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்) 10
தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் என்று காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும் மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே –3-7-10
பதவுரை Show / Hide
தாய், Thaai - தாயானவள்
நின்று மனம் இரங்க, Ninru Manam Irangka - வயிறொயி நிற்க
தனியே, Thaniye - தாயினிடம் சொல்லாமல் தன் இஷ்டப்படியே
நெடு மால் துணை ஆ, Nedu Maal Thunai Aa - ஸர்வேச்வரனைத் துணையாகக் கொண்டு
போயின, Poyin - புறப்பட்டுப் போன
பூ கொடியாள், Poo Kodiyal - அழகிய கொடிபோன்ற என் மகளும் (அவனும் ஆகிய இருவரும்)
புனல் ஆலி, Punal Aali - நீர்வளம் மிக்க திருவாலியிலே
புருவர் என்று, Puruvaar Endru - சென்று சேர்ந்திருப்பர்களோ என்று சிந்தைப்படுவதாக
காய் சினம் வேல் கலியன், Kaai Sinam Vel Kalyan - எதிரிகளைத் தபிக்கச் செய்கின்ற கோபத்தையும் வேலையுமுடையரான திருமங்கையாழ்வார்
ஒலிசெய், Olisei - அருளிச்செய்த
தமிழ் மாலை பத்தும், Tamil Maalai Pathum - இத்தமிழ்ப் பாமாலை பத்தையும்
மேவிய நெஞ்சு உடையார், Meviya Nenju Udaiyaar - (கற்க) விரும்பும் மனமுடைய வர்கட்கு
விண் உலகு, Vin Ulagu - பரமபதம்
தஞ்சம் ஆவது, Thanjam Aavathu - ப்ராப்யபூமியாம்.