திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1218 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகள் எங்கள் அபிமதங்கள் செய்ய வேணும் – என்று பிரார்திக்கிற ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நெஞ்சே நீயும் சென்று அனுபவி -என்கிறார்) 1 | நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே ! –3-8-1 | பதவுரை Show / Hideநந்தாவிளக்கே, Nandavilakke - ‘நித்யமாய் ஸ்வயம் ப்ரகாசமான ஞானத்தை ஸ்வரூபமாகவுடையவனே! (- (என் மனனே வணங்கு-.)) அளத்தற்கு அரியாய், Alaththarku Ariyai - அளவிட முடியாதவனே! நரநாரணனே, Naranarayananey - நரநாரயணாவதாரம் செய்தருளினவனே! கரு மா முகில் போல் எந்தாய், Karumaa Mukil Pol Endhaai - கறுத்துப் பெருத்த மேகம் போன்ற எம்பெருமானே எமக்கே அருளாய் என, Emakke Arulai Ena - எங்களுக்கே அருள் செய்ய வேணும் என்று சொல்லி இமையோர்நின்று பரவும் இடம், Imaiyorninru Paravum Idam - தேவர்கள் இந்நிலத்தில் வந்து நின்று துதிசெய்யுமிடமானதும், அம் தேன், Am Then - அழகிய தேன்சாதி வண்டுகள் எத்திசையும், Eththisaiyum - எல்லாவிடங்களிலும் கந்தாரம் இசை பாட, Kanthaaram Isai Paada - தேவகாந்தாரி ராகம் பாடவும் களி வண்டு, Kali Vandu - களி வண்டு சாதியிற் பிறந்த வண்டுகள் மாடே, Maade - பக்கங்களில் மிழற்ற, Mizhatra - ஆலாபனை பண்ணவும் மந்தாரம், Mandhaaram - பாரிஜாத மரங்கள் நிழல் துதைந்து நின்று, Nizhal Thuthaindhu Ninru - நிழல் தர நெருங்கி நின்று மணம் மல்கும், Manam Malkum - பரிமளம் நிறைந்திருக்கப்பெற்றதுமான நாங்கூர்;, Naangoor - திருநாங்கூரிலுள்ள மணிமாடக் கோயில், Manimaadak Koyil - மணிமாடக் கோயிலென்னுந்திருப்பதியை |
| 1219 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத்தைப் போக்கினவன் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்ற அருளினான் நெஞ்சே -உன் துக்கம் எல்லாம் கெட அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 2 | முதலைத் தனிமா முரண் தீர அன்று முது நீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய
விதலைத் தலைச் சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மானிடம் விண்ணனவும்
பதலைக்க போதததொளி மாட நெற்றிப் பவளக் கொழுங்கால பைங்கால் புறவம்
மதலைத் தலை மென்பெடை கூடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-2 | பதவுரை Show / Hideஅன்று, Anru - முன்பொருகாலத்தில் (- (மணிமாடக்கோயில் என் மனனே, வணங்கு,)) முதுநீர்தடத்து, Muthuneerthadathu - அகாதமான நீரை யுடைய பொய்கைக் கரையிலே முதலை தனி மா முரண் தீர, Muthalai Thani Maa Murandhira - முதலையினுடைய மிகப் பெரிய துஷ்டத்தனம் தீரும்படியாகவும் செம் கண் வேழம் உய்ய, Sem Kan Vezham Uyya - சிவந்த கண்களையுடைய கஜேந்திராழ்வான் உஜ்ஜீவிக்கும் படியாகவும் விதலைத்தலை சென்று, Vithalaithalai Sendru - (அவ்யானை) மிகவும் நடுங்கிக் கிடந்த ஸமயத்தில் எழுந்தருளி அதற்கே உதவி, Adharkae Uthavi - அந்த யானைக்கு உபகரித்து வினை தீர்த்த அம்மான் இடம், Vinai Theertha Ammaaan Idam - அதன் இடரை நீக்கின பெருமான் எழுந்தருளியிருக்குமிடமானதும், விண் அணவும், Vin Anavum - விண்ணுலகை அளாவியிருப்பனவாய் புதலை கபோதம், Puthalai Kapodham - கலசங்களையும் கபோத வொழுங்குகளையுமுடையனவாய் ஒளி மாடம் நெற்றி, Oli Maadam Netri - (இழைத்த ரத்னங்களினால்) ஒளி பெற்றனவான மாடமாளிகைகளினுடைய முகங்களிலே, பவளம் கொழுகால பைங்கால் புறவம், Pavalam Kozhukala Paingaal Puravam - அழகிய பவழத்தூண்போன்ற பசுமையான காலையுடைய புறா மதலைத்தலை மென் பெடை கூடும் நாங்கூர், Madhalaithalai Men Pedaikoodum Naangoor - கொடுங்கையின் மேலுள்ள மெல்லிய பேடையுடனே கலவி செய்யப்பெற்ற திரு நாங்கூரிலே |
| 1220 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையைப் போக்கி – அத்தாலே ப்ரீதியான ஸ்ரீ பிராட்டி கரத்தைப் போலே அணைக்க அவளோட்டை வரும் சம்ச்லேஷத்தை பெற்ற ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே –அப்போது சென்று அனுபவி என்கிறார்) 3 | கொலைப் புண் தலைக் குன்ற மொன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர் செய்து கொங்கு ஆர்
இலைப் புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மானிடம் ஆளரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி
மலைப்பண்ட மண்டத்திரை யுந்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே ! –3-8-3 | பதவுரை Show / Hideஅன்று, Anru - முன்பொருகாலத்தில், (- (இந்த ஸந்தோஷத்தினால்) (நாங்கூர்; * * * வணங்கு)) கொலை புண்தலை ஒன்று குன்றம் உய்ய, Kolai Pundhalai Ondru Kuntram Uyy - கொலைத்தொழில் செய்ய வல்லதும் புண்பட்ட தலையையுடையதும் மலைபோன்றதுமான ஒரு யானை உஜ்ஜீவிக்கும்படியாக கொடுமா முதலைக்கு இடர் செய்து, Kodumaa Muthalaikku Idar Seidhu - கொடுமையிற் சிறந்த முதலைக்கு துன்பமுண்டாக்கி கொங்கு ஆர் இலை புண்டரிகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட, Kongu Aar Ilai Pundarigathaval Inbam Anbodu Anaindhitta - பரிமளம் நிரம்பிய இலைகளையுடைய தாமரைப்பூவிற் பிறந்தவளான பிராட்டியின் சேர்த்தி யின்பத்தை அன்புடன் அநுபவிக்கப்பெற்ற பொன்னி, Ponni - காவேரியானது, ஆள் அரியால், Aal Ariyaal - வீரச் சிங்கங்களாலே அலைப்புண்ட, Alaippund - ஸம்ஹரிக்கப்பட்ட யானை, Yaanai - யானைகளினுடைய மருப்பும், Maruppum - தந்தங்களையும் அகிலும், Akilum - அகில் மரங்களையும் அணிமுத்தும், Animuthum - அழகிய முத்துக்களையும் வெண் சாமரையோடு, Ven Saamaraiyodu - வெளுத்த சாமரங்களையும் மலை பண்டம் அண்ட, Malai Pandam Andha - மலையில் விளையக்கூடிய மற்றும் பல வஸ்துக்களையுமெல்லாம் திரை, Thirai - அலைகளாலே உந்து, Undhu - தள்ளிக்கொண்டு பெருகப்பெற்ற |
| 1221 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மாலி சுமாலி தொடக்கமான ராஷசரை அடைய பண்டு இலங்கையிலே வென்ற ஸ்ரீ சர்வேஸ்வரனே ஸ்ரீ திரு மணி மாட கோயிலிலே வந்து நின்று அருளினான் -நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 4 | சிறையார் உவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் இடந்தான்
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி யாறங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே ! –3-8-4 | பதவுரை Show / Hideஅன்று, Anru - முன்பொருகாலத்தில், சிறை ஆர, Sirai Aar - சிறகோடு கூடின ஒன்று, Ondru - ஒப்பற்ற உவணம் புன், Uvanam Pun - கருடப்பறவையின் மீது ஏறி, Eri - ஏறிக்கொண்டெழுந்தருளி செருயில், Seruyil - யுத்த்த்தில் (எதிர்த்த) கறை ஆர் நெடுவேல் அரக்கர், Karai Ar Neduveel Arakkar - (ரத்தக) கறை நிரம்பிய பெரிய வேற்படையை யுடைய ராக்ஷஸர்கள் திசை நான்கும் நான்கும் இரிய, Thisai Naanthum Naanthum Iriya - எட்டுத்திசைகளிலும் (சிலர்) சிதறியோடும்படியாகவும் மடிய, Madiya - (பலர்) உயிர்மாண்டொழியும் படியாகவும் (செய்து) கடல் சூழ் இலங்கை, Kadal Soozh Ilangai - கடலால் சூழப்பட்ட லங்காபுரியை கடந்தான், Kadandhaan - ஒழித்த பெருமானுடைய இடம் தான், Idam Thaan - இருப்பிடமான முறையால் வளர்க்கின்ற மூத்தியர், Murayal Valarkkinra Moothiyar - முறைப்படி ஹோமஞ்செய்கிற மூன்று அக்நிகளையுடையாய் நால் தேவர், Naal Thevar - நான்கு வேதங்களையும் அதிகரித்தவராய் ஐ வேள்வி, Ai Velvi - பஞ்சமஹாயஜ்ஞங்களை அநுஷ்டிப்பவராய் ஆறு அங்கர், Aaru Angkar - வேதாங்கங்கள் ஆறையும் பயின்றவராய் ஏழின் இசையோர், Ezhalin Isaiyor - ஸப்தஸ்வாங்களையும் அறிந்தவரான மறையோர், Maraiyor - ஸவதிகப்ராஹ்மணர்கள் வணங்க, Vananga - (நித்யவாஸம்பண்ணிக் கொண்டு) வணங்குவதனால் புகழ் எய்து நாங்கூர், Pugazh Eydhu Naangoor - புகழ் பெற்றிருக்கின்ற திருநாங்கூரிலே மணிமாடக்கோயில், Manimadakoyil - என் மனனே வணங்கு. |
| 1222 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரதி கூல வர்க்கத்தைப் போக்கி இடைப் பெண்களோடு சம்ஸ்லேஷித்தவன் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினவன்-நெஞ்சே அத்தேசத்தை ஆஸ்ரயி-என்கிறார்) 5 | இழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான்
குழை யாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-5 | பதவுரை Show / Hideஇழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம், Izai Aadu Kongai Thalai Nanjam - ஆபரணங்கள் விளங்கப் பெற்ற (பேய்ச்சி பின்) முலையிலுள்ள விஷத்தை (- (இடம் தான்-;) (மணிமாடக்கோயில் என் மனனே! வணங்கு-.)) உண்டிட்டு, Undittu - (அவளுயிரோடு கூட) உண்டவனாரையும், இளகன்று கொண்டு, Ilakanru Kondu - வத்ஸாஸூரனை (எறிதடியாக)க் கொண்டு விளங்காய் எறிந்து, Vilangai Erinthu - கபித்தாஸூரன்மேல்சுழற்றி யெறிந்து இருவரையும் முடித்தவனாயும், வல் தாள் குருந்தம் தழைவாட ஒசித்து, Val Thaal Kurundham Thalaivada Osithu - வலிதான வேர்ப்பற்றை யுடைய குருந்தமரத்தை (அதன்) தழைகளெல்லாம் வாடியுலரும்படி முறித்தவனாயும் தட தாமரை பொய்கை புக்கான், Thada Thamarai Poigai Pukkan - பெரிய தாமரைக் தடாகத்திலிழிந்(து கோபிகளுடனே ஜலக்ரிடை செய்) தவனாபுமுள்ள பெருமானுடைய குழை ஆட, Kuzai Aada - மரங்களின் தளிர்கள் (மந்கமாருத்தாலே) அசைந்தாடுவதனால் மாடே வல்லி குலம் ஆட, Madae Valli Kulam Aada - அவற்றினருகேயுள்ள பூங்கொடிகளின் திரள் ஆடவும் குயில் கூவமழை ஆடு, Kuyil Koovamazhai Aadu - குயில்கள் கூவவும் மேகங்கள் உலாவுகின்ற சோலே, Sole - சோலைகளிலே முயில் ஆலும், Muyil Aalum - மயில்கள் நர்த்தனம் பண்ணவும் பெற்றதாய் நீடு கொடி மாடம் மல்கு நாங்கூர், Needu Kodi Madham Malku Nangoor - நீண்ட த்வஜங்கள் நாட்டப்பெற்ற மாடமாளிகைகளினால் நிறைந்திருக்கப்பெற்றதாம திருநாங்கூரிலே |
| 1223 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூதனையை அப்போதே பிராணன் போம்படி முலை உண்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திருமணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 6 | பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க்கழுதுக்கு இரங்காது அவள் தன்
உண்ணா முலை மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழு நீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து
மண் எனது இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-6 | பதவுரை Show / Hideபண்ணேர் மொழி ஆய்ச்சரியர் அஞ்ச, Panneer Mozhi Aaychariyar Anja - (பண்ணிசையோடொத்த பேச்சையுடையரான இடைச்சிகள் பயப்படும்படியான வடிவுடையவளாய் (- (மணிமாடக்கோயில் என் மன்னே! வணங்கு–;)) வஞ்சம் பகுவாய் கழுதுக்கு இரங்காது, Vanjam Pakuvai Kazhuthukku Irangathu - வஞ்சனையையும் பெரிய வாயையு முடையளான (பூதனையென்னும்) பேய்ச்சியினிடத்தில் தான் நோவுபடாமல் அவள் தன் உண்ணா முலைமற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம், Aval Than Unnaa Mulaimattraval Aaviyodum Udaney Suvaithan Idam - ஆப்பூதனையினது உண்ணத் தகாத முலைப்பாலை அவளுடைய உயிரோடு கூடவே உறிஞ்சியுண்ட பெருமானுடைய இருப்பிடமாய் ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று, Ongu Pain Thaal Kan Ar Karumpin Kazhai Thinru - உயர்ந்து பசுங்கால்களை யுடையனவாய் கணுக்கள் நிரம்பியவான கரும்புத் தடிகளைத் தின்று ஐவகி, Aivagi - நகரமாட்டாமல் அங்கேயே தாமஸித்துக்கடந்து (அதன்பிறகு) கழு நீரின் செழு நீர் தடத்து மூழ்கி, Kazhu Neerin Sezhu Neer Thadathu Moongki - செங்கழுநீர்ப் பூக்களோடு கூடிய அழகிய நீர் நிரம்பிய தடாகத்திலே முழுகி மண் ஏந்து, Man Aendu - (கொம்புகளில்) மண்ணைத் தாங்கிக்கொண்டிருக்கிற இள மேதிகள், Ila Methigal - இளைய எருமைகள் வைகும், Vaikum - (கரையேறாது நீரிலேயே) தாமஸித்திருக்கப்பெற்ற நாங்கூர், Nangoor - திருநாங்கூரிலே |
| 1224 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காளியனால் வந்த ஆபத்தை போக்கின ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 7 | தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன் மேல் அடி வைத்த அம்மானிடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண் நெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-7 | பதவுரை Show / Hideதளை (தாமரை), Thalai Thamarai - (தாமரைப் பூக்களும்) கட்டுவிரியாமல் மொக்காயிருக்கிற (- (மணிமாடக்கோயில் என் மனனே ! வணங்கு–.)) கட்டு அவிழ் தாமரை, Kattu Avizh Thamarai - கட்டு நெகிழ்ந்து அலர்ந்த தாமரைப் பூக்களும் வைகு, Vaiku - தங்கி யிருக்கப்பெற்ற பொய்கைத் தடம் புக்கு, Poykai Thadam Pukku - பொய்கையிலே புகுந்து, அடங்காவிடம் கால் அரவம் இளைக்க திளைத்திட்டு, Adangavidham Kaal Aravam Ilaikka Thilaithittu - (அப்பொய்கையினுள்) அடங்காமல் கிளர்ந்தெழுந்தாய் விஷத்தைக் கக்குகின்ற காளிய நாகம் இளைத்துப்போம்படி விளையாடி அதன் உச்சி தன்மேல் அடி வைத்த அம்மான், Adhan Uchi Thanmel Adi Vaiththa Amman - அதன் தலைமேலே திருவடியை நாட்டியருளின் பெருமானுடைய இடம், Idam - இருப்பிடமாய்;- வளை கை நுளைப்பாவையர், Valai Kai Nulaippaavai - வளையணிந்த கையையுடைய குறத்திகள், மா மதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில், Maa Mathiyam Thilaikkum Kodi Maaligai Soozh Theruvil - சந்திரன் விளையாடும்படி ஓங்கின, கொடிகளணிந்த மாளிகைகள் நிறைந்த வீதியிலே செழு முத்து, Sezhu Muthu - சிறந்த முத்துக்களை வெண் நெற்கு என, Ven Nerku Enna - வெளுத்த நெல்லுகளுக்குத் தருகிறோமென்று சொல்லிக்கொண்டு முன்றில் சென்று மாறும், Munril Sendru Maarum - ஒவ்வொரு வீட்டுவாசலிலும் போய் விற்பனை செய்யப்பெற்ற நாங்கூர், Nangoor - திருநாங்கூரிலே |
| 1225 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே பெண்களோடு நிரவதிக சம்ஸ்லேஷத்தைப் பண்ணின ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான்-நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 8 | துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் வேல் நெடுங்கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-8 | பதவுரை Show / Hideதுளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர்தம் துகில் வாரியும், Thulai Aar Karu Men Kuzhal Aaychiyartham Thugil Vaariyum - (சுருண்டிருக்கையாலே) துளைகள் பொருந்திய கறுத்த மெல்லிய கூந்தலையுடைய இடைச்சிகளினுடைய ஆடைகளை அபஹரித்தும் (- (மணிமாடக்கோயில் என்மனனே ! வணங்கு)) சிற்றில் சிதைத்தும், Sitril Sithaiththum - (அவர்களிழைக்கிற) சிறு மணல் வீடுகளை அழித்தும் முற்றா இளையார் விளையாட்டொடு, Muttira Ilaiyaar Vilaiyattodu - முற்றுதலில்லாத இளம் பெண்களுக்கு லீலா ரஸத்தையும் காதல் வெள்ளம், Kaadhal Vellam - ஆசைப்பெருக்கையும் விளைவித்த அம்மான், Vilaiviththa Amman - உண்டாக்கின பெருமானுடைய இடம், Idam - இருப்பீடமாய்; முதிராத இன் சொல் வளைவாய கிள்ளை, Muthiraadha In Sol Valaivaai Killaai - பரிபக்குவமாக மதுரமான சொல்லையும் வளைந்த வாயையுமுடைய கிளிகள் வேல் நெடு கண் முளை வாள் எயிறு மடவார் பயிற்று, Vel Nedu Kan Mulai Vaal Eiyiru Madavaar Payitru - வேல்போன்று நீண்ட கண்களையும், முளைக்கின்றவளவாய் ஒளியையுடைய பற்களையுமுடையரான வைதிக ஸ்திரீகள் அப்யாஸம் செய்விக்கிற மொழி கேட்டிருந்து, Mozhi Kaettirundhu - வேதச் சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்து மறை பாடும், Marai Paadum - வேதபாராயணம் பண்ணப்பெற்ற நாங்கூர், Nangoor - திருநாங்கூரிலே |
| 1226 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்த செயலையும்-திவ்ய ஆயுதங்கள் உடைய சேர்த்தி அழகையும் சொல்லி தேவர்கள் ஏத்த ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் – நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 9 | விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா ! விளங்கு சுடர் ஆழி என்னும்
படையோடு சங்கு ஓன்று உடையாய் ! என நின்று இமையோர் பரவும் இடம் பைந்தடத்துப்
பெடையோடு செங்கால அன்னம் துகைப்பத் தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்
மடையோட நின்று மது விம்மு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-9 | பதவுரை Show / Hideவிடை ஓடவென்று, Vidai Oadavendru - ‘(ஏழு) ரிஷபங்கள் பங்கமடையும்படி அவற்றை ஜயித்து (- (மணிமாடக் கோயில் என் மனனே! வணங்கு)) ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா, Aaychi Men Thol Nayandha Vikirtha - நப்பின்னைப் பிராட்டியினுடைய மெல்லிய புஜங்களை விரும்பியணைத்த விலக்ஷண புருஷனே! விளங்கு சுடர் ஆழி என்னும் படையோடு சங்கு ஒன்று உடையாய், Vilangu Sudar Aazhi Ennum Padaiyodu Sangu Ondru Udaiyaai - விளங்குகின்ற தேஜஸ்ஸையுடைய சக்ராயுதத்தையும் ஒப்பற்ற சங்கையும் உடையவனே!’ என நின்று, En Nindru - என்ற சொல்லாநின்று கொண்டு இமையோர் பரவும் இடம், Imaiyor Paravum Idam - தேவர்கள் துதிசெய்யுமிடமாய், பைந்தடத்து செம் கால அன்னம் பெடையோடு துகைப்ப, Painthadathu Sem Kaala Annan Pedaiyodu Thugaippa - அழகிய தடாகத்திலே, சிவந்த கால்களையுடைய அன்னப் பறவை பேடையோடு கூடி ஏறித் துகைப்ப, (அதனாலே துகைப்புண்ட) தொகை புண்டரிகத்திடை மது, Thokai Pundarikatthidai Madhu - திரளான தாமரைப் பூக்களினின்று பெருகின தேனானது செங்கழுநீர் மடை ஓட நின்று விம்மும், Chengaluneer Madai Oda Nindru Vimmum - செங்கழுநீர் மடைகளிலும் ஓடிப் பாயும்படியாகப் பெருகப்பெற்ற நாங்கூர், Nangoor - திருநாங்கூரில் |
| 1227 | பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத் திருமொழிக்கு கற்றாருக்கு பலம் சொல்லுகிறது –அனுகூல பிரதி கூல சீலர் என்று வாசி அன்றிக்கே லோகமாக தங்கள் காலிலே வந்து விழும்படி மத்தகத்தின் மேல் ஏறி கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய் – ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்து வந்து பூமிக்கு தாங்களே நிர்வாஹகராய் ஆகாசத்திலே சென்று கிட்டும் படியாக முத்துக் குடையின் கீழே கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு விரும்பப் படுவர்-நிரதிசய ப்ரீதி உடையார் ஆவார்கள் – ஐஸ்வர்யத்தை புருஷார்த்தமாக சொல்லுவான் என் என்று ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க ஸ்ரீ ஈச்வரனே ஆகிலும் ஒரு கால் பிறந்து அபிஷேகம் பண்ண அமையும் ஸ்ரீ பாகவத சேஷம் ஆகலாம் ஆகில் என்று காணும் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இருப்பது -என்று அருளிச் செய்து அருளினார்) 10 | வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டைய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களியானை மாதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே –3-8-10 | பதவுரை Show / Hideஎன்றும் தொண்டு ஆய தொல் சீர்வயல் மங்கையர்கோன் கலியன, Endrum Thondu Aaya Thol Seervayal Mangaiyarkon Kaliyana - நித்ய கைங்காரியம் செய்வதையே ஸஹஜகுணமாகவுடையரும் வயல் சூழ்ந்த மங்கை நாட்டிலுள்ளார்க் குத் தலைவருமான ஆழ்வார் ஒலி செய்தமிழ் மாலை, Oli Seithamil Maalai - அருளிச் செய்த தமிழ்த் தொடையான இத்திருமொழியை வல்லார், Vallaar - ஓதவல்லர்கள் கண்டார்வணங்க, Kandaarvananga - கண்டவரெல்லாம் காலிலே விழும்படி காளியனை மீதே, Kaaliyana Meedhe - மத்தகஜத்தின் மேலேறி (இருந்து) கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய், Kadal Soozh Ulakukku Oru Kaavalaraai - கடல் சூழ்ந்த மண்ணுலகம் முழுமைக்கும் தாங்களே துணையற்ற அரசராகி விண் தோய் நெடு வெண்குடை நிழலின் கீழ், Vin Thoi Nedhu Venkudai Nizhalin Keel - வானத்தளவுமளாவிய நீண்ட வெண்கொற்றக் குடையின் கீழிருந்து விரி நீர்உலகு ஆண்டு விரும்புவர், Viri Neerulagu Aandu Virumbuvar - ஆவாரண ஜலம் சூழ்ந்த பிரம்மாண்டத்தை ஆண்டு கொண்டு மகிழ்ந்திருக்கப்பெறுவர். |