திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1228 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நல் உயிரான அமிர்தத்தை வாங்கி நம்மை ஆஸ்ரயித்த தேவ ஜாதி கார்யம் தலைக் கட்டப் பெற்றோம் இறே -என்று அது பெற்றால் அவர்களுக்கு உரும் இன்பத்தை தான் உடையேனாய் – அவ்வமுருதத்தை புஜித்தாருக்கு இழியக் கண்ட ராகராதிகளை தான் உடையனாய் இருக்கிறவன்- பெரிய ஹர்ஷத்தோடு நித்ய வாசம் பண்ணுகையாலே ஆஸ்ரிதருக்கு இனிதான தேசம்) 1 | சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-1 | பதவுரை Show / Hideசலம்கொண்ட இரணியனது அகல் மார்வம், Salamkonda Iraniyanadhu Akal Maarvam - தப்பு எண்ணங்கொண்ட ஹிரண்யாஸுரனுடைய அகன்ற மார்வைப் பிளந்தொழித்தவனுயும் பெரிய கடலைக் கடைந்து (- (மட நெஞ்சே ! வணங்கு-.)) தடகடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை, Tadakadala Kadainthu Amudham Kondo Ugandha Kaalai - பெரிய கடலை கடைந்து (அதில் தோன்றிய) அமுதத்தை (தேவர்களுக்காக), எடுத்து(க் கொடுத்து திருவள்ள முவந்தனையும் நித்ய யௌவனமுடையனுயும் நலம் கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான்;, Nalam Konda Karu Mukil Pol Thirumeni Amman - அழகிய நீலமேகம் போன்ற திருமேனியையுடையவனுயுமிருக்கிற எம்பெருமான் நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில், Naalthorum Magizhndhu Inidhu Maruvi Urai Koyil - எப்போதும் திருவுள்ள மூவந்து போக்கியமாக பொருந்தி வாழுமிடமாய் சலம் கொண்டு, Salam Kondo - தண்ணீரைப்பகுதி மலர்செழியும், Malarchezhiyum - புஷ்பங்களைச் சொரிகின்ற ஓண் மல்லிகை செருந்தி சண்பகங்கள், On Malligai Serundhi Sanbagangal - அழகிய மல்லிகைச் செடிககளும் சுரபுன்னை மரங்களும் சண்பக மரங்களும் மணம் நாறும், Manam Naarum - பரிமளம் வீசப் பெற்ற வண் பொழிலி னூடே, Van Pozhili Noodae - அழகிய சோலைகளினுள்ளே கயல் ஒடி வலங்கொண்டு விளையாடும் நாங்கூர், Kayal Odi Valankondu Vilaiyadum Naangoor - மீன்களானவை ஓடித்துள்ளி விளையாடப்பெற்ற திருநாகூரில் வைகுந்த விண்ணகரம், Vaikundha Vinnagaram - வைகுந்தவிண்ணகரமென்னுக் திருப்பதியை |
| 1229 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னுடைய ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்- பூமியில் இதுக்கு இவனே கடவான் இதுக்கு இவனே கடவான் என்னும்படி சமைந்த பிராமணர் நெருங்கி வர்த்திக்கிற தேசம்) 2 | திண்ணிய தோர் அரி யுருவாய்த் திசை யனைத்தும் நடுங்கத்
தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை
நண்ணி அவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண்ணில் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும்
ஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர்
மண்ணில் மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-2 | பதவுரை Show / Hideதிசை அனைத்தும் நடுங்க, Thisai Anaithum Nadunga - எல்லாத் திசைகளிலுள்ளவர்களும் நடுங்கும்படியாகவும் தேவரோடு தானவர்கள் திசைப்ப, Thevarodu Thaanavarkal Thisaippa - தேவரும் தானவரும் கலங்கும் படியாகவும் திண்ணிய ஒர்அரி உரு ஆய், Thinaiya Orari Uru Aayi - வலிமிக்க நரஸிம்ஹ ரூபியாய் இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர்மடுத்த நாதன், Iraniyanai Nanni Avan Maarvu Akalathu Ughirmadutha Nadhan - ஹிரண்யாஸுரனைக் கிட்டி அவனுடைய அகன்ற மார்விடத்து (திருக்கை) நகங்களை ஊன்றவைத்துப் பிளந்தொழித்த எம்பெருமான் எண்ணில் பெரு செல்வத்து, Ennil Peru Selvaththu - எண்ணமுடியாமல் மிகுந்த (அளவிறந்த) (நிர்தோஷத்வம் முதலிய) பெருஞ்செல்வத்தோடு கூடி எழில் விளங்கும் மறையும், Ezhil Vilangum Maraiyum - அழகு விளங்காநின்ற வேதங்களும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரு குணத்தோர், Ezhu Isaiyum Kelvigalum Iyanra Peru Gunaththor - ஸ்தப ஸ்வரங்களும் வேதார்ந்த சரவணங்களும் பொருந்திய மஹா குணசாலிகளாய் மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்து நாங்கூர், Mannil Migu Maraiyavargal Malivu Eydhu Naangoor - பூமிக்குள் சிறப்புப் பெற்ற வைதிக ப்ராமணர்கள் நிறைந்திருக்கப் பெற்ற திருநாகூரில் நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில், Naalthorum Magizhndhu Inidhu Maruvi Urai Koyil - வைகுந்த விண்ணகரம் மட நெஞ்சே வணங்கு |
| 1230 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அண்டமும் இந்த லோகத்தை சூழப் போந்து அலை எறிகிற அண்ட தீபங்களையும் எல்லாம் அமுது செய்த திரு வயிற்றை உடையவன் –இப்படி சர்வ நியந்தாவானவன் வர்த்திக்கிற கோயில்) 3 | அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்ட மது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி
இலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-3 | பதவுரை Show / Hideஅண்டமும் அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுது செய்த திருவயிற்றின், Andamum Alai Kadhalum Avanigalum Ellam Amudhu Seidha Thiruvayittrin - அண்டங்களும் இந்த அலையெறிகின்ற கடல்களும் பூமிகளும் ஆகிய எல்லாவற்றையும் (பிரளய காலத்தில்) உட்கொண்ட திருவயிற்றையுடையவனும் (- (மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்) (வைகுந்த * * * வணங்கு)) அரன் கொண்டு திரியும் முண்டம் அது நிறைந்தது, Aran Kondo Thiriyum Mundam Adhu Nirainthathu - ருத்ரன் தன் கையில் ஏற்றுக் கொண்ட திரிந்த தலையோட்டை நிறையச் செய்து அவன்கண் சாபம் அது நீக்கும், Avankal Sapam Adhu Neekum - அவனிடத்து நேர்ந்திருந்த பிரமஹக்கி சாபத்தைப் போக்கினவனுமான முதல்வன் அவன், Muthalvan Avan - ஜகத்காரண பூதனுன ஸவேச்வரன் எண் திசையும் பெரு செல்வம் பெரு செந்நெல் இள தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு, En Thisaiyum Peru Selvam Peru Senel Ila Thengu Kathali Ilai Kodi On Kulai Kamugodu - அழகிய குலைகளையுடைய பாக்கு மரங்களும் ஒன்றுக்கொன்று மிகைத்துக் கொண்டு வளம் சொரிய, Valam Soriyai - சேழித்து வளரபடிபற்றதும் வண்டுகள் பலவகையான ராகங்களைப் பாடப் வண்டு பல இசை பாட, Vandu Pala Isai Pada - வண்டகள் பலவகையான ராகங்களைப் பாடப் பெற்றதும் மயில் ஆலும் நாங்கூர், Mayil Aalum Nangoor - மயில்கள் ஆடப்பெற்றதுமான திருநாகூரில் |
| 1231 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவள் ஏறிட்டுக் கொண்டு வந்த வடிவைப் போக்கி தானாம்படி பண்ணி விட்டான் ஆயிற்று அநந்தரம் அவளும் கூப்பிட்டு கொண்டு தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே புகும்படி பண்ணின தோள் வலியை உடையவன் நித்ய வாசம் பண்ணுகிற கோயில்) 4 | கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சிலை இலங்கு மணி மாடத்துச்சி மிசைச் சூலம்
செழும் கொண்டல் அடடிரியச் சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகை மேல் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-4 | பதவுரை Show / Hideகலை இலக்கும் அகல் அல்குல் அரக்கரி குலக் கொடியை, Kalai Ilakkum Akal Alkul Arakkari Kulak Kodayai - நல்ல சேலை விளங்கப்பெற்ற அகன்ற நிதம்ப ப்ர தேசத்தையுடையளான சூர்ப்பணகையினுடைய (- (மகிழ்ந்து இனிது மருவி உறைகோயில்) (வைகுந்த * * * வணங்கு)) காதொடு மூக்கு உடன் அரிய, Kaadodu Mooku Udan Ariya - காதையும் மூக்கையும் உடனே அறுக்க அவள் கதறி தலையில், Aval Kathari Thalaiyil - அவ்வரக்கி வாய்விட்டு அலறி தன் தலைமேலே அங்கை வைத்து, Angai Vaiththu - உள்ளங்கையை வைத்துக் கொண்டு முலை இலங்கை ஒடி புக செய்த தட தோளன், Mulai Ilangai Odi Puga Seidha Thad Tholan - மலைமேலுள்ள இலங்கையிலே ஓடிப் புகுந்து அழம்படி பண்ணிளன மஹாபாஹுவான பெருமான் சிலை இலங்க மணி மாடத்து உச்சி மிசை குலம், Silai Ilanga Mani Maadathu Uchi Misai Kulam - ஓளி விளங்குகின்ற ரத்தனங்களிழைத்த மாளிகைகளின் மூடிமேலேயிரக்கிற குலங்கள் செழு கொண்ர்ல் அகடு இரிய, Sezhu Konral Akadu Iriya - அழகிய மேகங்களினுடைய கீழ்யிவற்றைப் பிளக்க (அதனாலே) சொரிந்த செழு முத்தம், Sorindha Sezhu Muththam - பெய்த அழகிய முத்துக்கள் முலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்து நாங்கூர், Mulai Ilangu Maaligai Mael Malivu Eydhu Nangoor - மலைப்போல் விளங்குகின்ற மாளிகைகளின் மேலே குவிந்து கிடக்கப்பெற்ற திருநாகூரில் |
| 1232 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்று இலங்கையை பொடி படுத்திய தோள் மிடுக்கை உடைய ஸ்ரீ பிராட்டிக்கு பண்ணின வியாபாரத்தை ஆஸ்ரிதர் எல்லாருக்கும் ஒக்கப் பண்ணினது போலே அவன் பிரீதியோடே வர்த்திக்கிற தேசம் ஆகையாலே கண்டார்க்கு எல்லாம் இனிதாமோபடி இருக்கிற தேசம்) 5 | மின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர
தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-5 | பதவுரை Show / Hideஅன்று மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கு ஆ, Andru Min Anaiya Nun Marungul Melliyarku Aa - முன்பொரு காலத்தில் மின்னல் போன்று நுட்பமான இடையுடைய ஸீதாபிராட்டிக்காக இலங்கைவேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர, Ilangai Vendan Mudi Orupadhu Thol Irupadhu Poi Uthira - இராவணனுடைய பத்துக் தலைகளும் இருபது தோள்களும் சின்னபின்னமாம்படி நிகரி இல் தன் சிலை விளைத்து, Nikari Il Than Silai Vilaitthu - ஒப்பற்ற தனது கோதண்ட வில்லை வளையச்செய்து (அம்புகளைச் செலுத்தி) இலங்கை பொடி செய்த தட தோளன், Ilangai Podi Seidha Thad Tholan - லுங்காபுரியைப் பொடியாகக் கின மஹாவீரன். செங்கலொடு, Sengalodu - செந்நெல்லும் செம் கமலம் சேல் கயல்கள் வாளை செய்கழு நீரோடு மிடைந்து கழனி மிடைந்து, Sem Kamalam Sel Kayalgal Vaalai Seykalzu Neerodu Midaindhu Kazhani Midaindhu - செந்தாமரைப்பூக்களும் மீன் விசேஷங்களும் செங்கழு நீர்பூக்களும் சேர்ந்து கொண்டு கழனி எங்கும் திகழ்ந்து மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்து நாங்கூர், Kazhani Engum Thigalndhu Mannu Pugazh Vedhiyargal Malivu Eydhu Naangoor - கழனிகளுக்குள்ள விடமெங்கம் விளங்கப்பெற்றிதும் நித்தியமான கீர்த்தியையுடைய வைதிகரிகள் நிறைந்திருக்கப் பெற்றதுமான திருநாகூரில் வைகுந்த * * * வணங்கு |
| 1233 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதியைப் போக்கப் பெற்றோமே என்று அத்தாலே தீப்தனாய் ஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம்) 6 | பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய
பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு
திண்மை மிகு மருதொடு நற் சகடம் இறுத்து அருளும்
தேவனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
உண்மை மிகு மறையொடு நற் கலைகள் நிறை பொறைகள்
உதவு கொடை என்று இவற்றின் ஒழிவில்லா பெரிய
வண்மை மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-6 | பதவுரை Show / Hideபெண்மைமிகு வடிவு கொடு வந்தவளை, Penmaimigu Vadivu Kodu Vandhavazhai - உத்தம ஸ்தீரியின் வடிவைப் பூண்டுக்கொண்டு (கொல்லுவதற்காக) வந்த பூனையானவள். (- (மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்)) பெரிய போயினது உருவு கொடுமாள், Periya Poyinathu Uruvu Kodumaal - தன் நிஜமான கொடிப் பேய் வடிவத்துடனே இறக்கும் படியாக உயிர்உண்டு, Uyirundhu - அவளது உயிரை உறிஞ்சியுண்டவனையும் திறமைமிகு மருதோடு நலசங்கம் இறுத்து அருளும் தேவன் அவன், Thiramaimigu Marudhodu Nalasangam Iruthu Arulum Devan Avan - திடமாக வேரூன்றிக் கிடந்த மருத மரத்தையும் கொடிய சகடத்தையும் முறித் தருளினவனுயுமுள்ள அப்பெருமான் உண்மை மிகு மறையோடு, Unmai Migu Maraiyodu - உள்ளது உள்ளபடி சொல்லுகிற வேதங்கடிளென்ன நல்களைகள், Nalkalailgal - (அந்த வேதங்களுக்கு வியாக்கியாமான) சிறந்த அதிஹாஸ புராணுதிகளென்ன (இவற்றறையும்) நிறை, Nirai - நிறைந்து கிடக்கிற பொறைகள், Poraihal - பொறுமை முதலிய குணங்களென்ன உதவ கொடை, Udhava Kodai - கேட்டார்கேட்டபடி கொடுக்கும் ஔதார்யமென்ன என்று இவற்றின் ஒழிவு இ;ல்லா, Endru Ivatrin Ozhivu Illa - ஏன்றிவை முதலான குணங்களையும் எப்போதும் உடையவர்களாய் பெரிய வண்மை மிகு மறையவர்கள், Periya Vanmai Migu Maraiyavargal - ஆத்ம ஸமமர்பணமாகிற சிறந்த ஔதார்மாய் உடையவர்காய் மலிவு எய்தும் நாங்கூர், Malivu Eydhum Naangoor - முலிந்திருக்கப்பெற்ற திருநாகூரிலே வைகுந்த விண்ணகரம் மட நெஞ்சே ! வண்ங்கு |
| 1234 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெண்ணெயையும் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யம் ஆகையாலே திரு உள்ளமானது குளிரும்படியாக அமுது செய்து அநந்தரம் இந்த லோகத்தை அடைய திரு வயிற்றிலே வைத்து ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்தை பண்ணுகையாலே இளகிப் பதித்து இருக்கிற-நிரவதிக சம்பத்து மாறாதே செல்லுகிற தேசம் ஸ்ரீ நாங்கூர் வைகுந்த விண்ணகரம்) 7 | விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து
வேல் நெடுங்கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய்
உளங்குளிர அமுது செய்து இவ் வுலகுண்ட காளை
உகந்தினிது நாள் தோறும் மருவி யுறை கோயில்
இளம்படி நற் கமுகு குலைத் தெங்கு கொடிச் செந்நெல்
ஈன் கரும்பு கண் வளரக் கால் தடவும் புனலால்
வளங்கொண்ட பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வண்ங்கு மட நெஞ்சே –3-9-7 | பதவுரை Show / Hideஇள கன்று கொண்டு விளங்கனியை உதிர எறிந்து, Ila Kankuru Konda Vilanganiyai Uthira Erindhu - (வத்ஸுஸர னென்கிற ஒரு இளங்கன்றைத் தூக்கி விளாம்பழங்கள் உதிரும் படி (கபி த்தாஸுரன் மேல்) வீசி யெறிந்தவனையும் வேல் நெடு கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர்வெண்ணெய், Vel Nedu Kan Aaychiyargal Vaiththa Thayirvennai - வேல் போன்ற நீண்ட கண்களைக் யுடையரான இடைச்சிகள் (உறிகளில்) சேமித்த வைத்த தயிரையும் வெண்ணெயையும் உளம் குளிர அமுது செய்து, Ulam Kulira Amuthu Seythu - தன் திருவுள்ளம் குளிரும்படி அமுதுசெய்தும் (அதனால்) திருபடதிபெறாதவன் போன்று) ஈன் கரும்ப, Een Karumbu - இனிய கரும்பகளும் (ஆகிய இவை) கண்வளர, Kanvalara - நாடோறும் செழித்தோங்கி வளரும்படி கால்தடவும் புணலால், Kaalthadavu Punalaal - அடியிலே பாய்கின்ற தண்ணீரினால் இஉலகு உண்ட, Iulagu Unda - இந்த லோகங்களையும்யெல்லாம் அமுது செய்தவனுயுமிருக்கிற காளை, Kaalai - நித்யயுவானான பெருமான் உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில் இள படி நல் கழுகு, Ila Padi Nal Kazhugu - இளமையை இயல்வாகவுடைய நல்ல பாக்கு மரங்களும் குலை தெங்கு, Kulai Thengu - குலைகளையுடைய தென்னை மரங்களும் கொடி செந்நெல், Kodi Sennel - வெற்றிலைக் கொடிகளும் செந்நெற்பயிர்களும் வளம் கொண்ட பெரு செல்வம், Valam Konda Peru Selvam - அழகு மிகுந்தம் மிக்க ஜச்சரியம் பொலிந்திருப்பதும் அணி, Ani - அழகியதுமான நாங்கூர்திருவாங்கூரிலே வைகுந்தவிண்ணகரம் மட நெஞ்சே வணங்கு |
| 1235 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கும் ருத்ரனுக்கும் என்னது என்று கூறிட்டு அனுபவிக்கும் படி திரு மேனியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற சீலத்தை உடையவன் –ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு நாதன் ஆனவன்) 8 | ஆறாத சினத்தின் மிகு நரகனுரம் அழித்த
அடலாழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும்
கூறாகக் கொடுத்தருளும் திரு யுடம்பன் இமையோர்
குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி
மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை யடைப்ப
மாறாத பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-8 | பதவுரை Show / Hideஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழத்த அடல் ஆழி தட கையன், Aaraadha Sinathin Migu Narakan Uram Azhatta Adal Aazhi Thada Kaiyan - தணியாமல் வளர்கின்ற கோபத்தினால் மிகுந்தவனான நரகாசுரனுடைய மிடுக்கை தொலைந்த தீக்ஷ்ணமான திரு வாழியை தனது தடங்கையிலே யுடையவனும் (- (மகிழ்ந்து இனிது மருவி உறை கோவில்) (வைகுந்த விண்ணகரம் மட நெஞ்சே ! வணங்கு;)) ஆலர் மகட்கும் அரற்கம் கூறு ஆக கொடுத்தருளும் திரு உடம்பன், Aalar Makadkum Ararkkam Kooru Aaga Koduththarulum Thiru Udanban - பெரிய பிராட்டியார்க்கும் சிவ பிரானுக்கும் பகுதியாகக் கொடுக்கப்பட்ட திருமேனியை யுடையவனும் இமையோர் குலம் முதல்வன், Imayior Kulam Muthalvan - நித்யஸூரிகள் திரளுக்கு நாதனுமான எம்பெருமான் மாறாத மலர் கமலாம், Maaradha Malar Kamalam - மாறாத மலரையுடைய தாமரைகள் செங்கழுநீர், Sengal Nheer - செங்கழுநீர்ப்பூக்கள் (ஆகிய இவற்றில் நின்று) மது வெள்ளம் ததும்பி ஒழுக உழவர், Madhu Vellam Thadumbi Ozhuga Uzhavar - தேன் வெள்ளமானது இடைவிடாது பாய்வதனால் பயிர்த் தொழில் செய்பவர்கள் வுயல் மடை அடைப்பு, Vuyal Madai Adaippu - (தங்கள் தங்கள்) கழனி மடைகளை யடைக்கப் பெற்றதும் மாறாத பெரு செல்வம் வளரும் அணி நாஞ்கூர், Maaradha Peru Selvam Valarum Ani Naangkoor - ஓயாத மிக்க செல்வம் வளர்வதுமான அழகிய திருநாங்கூரில் |
| 1236 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர்களோடே-சனகாதிகளோடே-புஷ்பாத் உபகரணங்களைத் தூவி எங்களுக்கு நாதனான ஸ்ரீ சர்வேஸ்வரனே எங்கள் பக்கலில் கிருபையை பண்ணி அருள வேணும்-என்னும் ஸ்ரீ சர்வேஸ்வரன் பிரீதி பூர்வகமாக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 9 | வங்கமலி தடங்கடலுள் வானவர்களோடு
மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி
எங்கள் தனி நாயகனே ! எமக்கு அருளாய் என்னும்
ஈசனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செங்கயலும் வாளைகளும் செந்நெல் இடைக் குதிப்பச்
சேலுகளும் செழும் பணை சூழ் வீதி தொறும் மிடைந்து
மங்குல் மதிய கடு உரிஞ்சி மணி மாட நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-9 | பதவுரை Show / Hideவங்கம் மலி தட கடலுள், Vangam Mali Thada Kadalul - மரக்கலங்கள் நிறைந்து கிடக்கிற பெரிய திருப்பாற்கடலிலே (- (மகிழ்ந்து இனிதுமருவி உறை கோயிவில்) (வைகுந்த விண்கரம் மட நெஞ்சே! வணங்கு-;)) வானவர்களோடு மா முனிவர் பலர்கூடி, Vaanavarkalodu Maa Munivar Palarkoodi - தேவர்களும் மஹர்ஷிகளும் பலர் ஒன்றுகூடி மா மலர்கள் துவி, Maa Malargal Thuvi - சிறந்த புஷ்பங்களைப் பணி மாறி எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும், Engal Thani Naayagane Emakku Arulai Ennum - எங்களுக்கு அத்விதீய நாதனானவனே! எமக்குக் கிருபை பண்ணவேணும் என்று வேண்டப்பெற்ற ஈசன் அவன், Eesan Avan - எம்பெருமான் செம் கயலும் வாளைகளும், Sem Kayalum Valaigalum - செவ்விய கயல் மீன்களும் வாளை மீன்களும் செந்நெலிடை குதிப்ப, Sennelidai Kudippa - செந்நெற் பயிர்களிடையே துள்ளிக் குதிக்க சேல் உகளும் செழு பணைசூழ் விதிதொறும் மிடைந்து, Sel Ugalum Sezhu Panaisuzhu Vidhithorum Midainthu - சேல் மீன்களும் டவே களித்து விளையாடப்பெற்ற அழகிய தடாகங்கள் பெரிய வீதிகள் தோறும் நெருங்கியிருக்கப் பெற்றதும். மங்குல மதி அகடு உரிஞ்சும் மணி மாடம், Mangula Mathi Akadu Urinjum Mani Madham - ஆகாசத்தில் திரிகிற சந்திரனுடைய கீழ்வயிறு தேயுமத்படியுயர்ந்த மணி மாடங்களை யுடையதுமான நாங்மூகூர், Nangmoogoor - திருநாங்கூரில் |
| 1237 | பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித அர்த்தமாக ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு இருக்கிற புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்-தமிழ் தொடை பத்தையும் வல்லார்கள் உபய விபூதியையும் தாங்கள் இட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்) 10 | சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும்
தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்
வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ்
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள்
தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே –3-9-10 | பதவுரை Show / Hideசங்கு மலி தண்டு சக்கரம் முதல் முன் வந்தும், Sangu Mali Thandu Chakkaram Mudhal Mun Vandhum - ஸ்ரீ பாஞ்சஜந்யமும் பொருந்திய கௌமோதகியும் ஸூதர்சநமும் முதலான திவ்யா யுதங்களை கண் முன்னே தரித்துக் கொண்டிருக்கிற நெடிய தாமரை கண் பிரான் தான், Nedhiya Thamarai Kan Piraan Thaan - நீண்ட தாமரை போன்ற திருக்கண்களையுடைய ஸர்வேச்வரன் அமரும் கோயில், Amarum Koyil - நித்யவாஸம் பண்ணுகிய ஸந் நிதியாய் வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்து நாங்கூர், Vangam Mali Kadal Ulagil Malivu Eythu Nangoor - கப்பல்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தில் பிரஸித்திபெற்ற திருநாங்கூரிலுள்ளதான் வைகுந்த விண்ணகர்மேல், Vaikundha Vinnakarmel - வைகுந்த விண்ணகரத் திருபதி விஷயமாக வண்டு அறையும் பொழில் சூழ் மங்கையர்த்தம் தலைவன், Vandu Araiym Pozhil Soozh Mangaiyartham Thalaivan - வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற சோலைகளினால் சூழப்பட்ட திருமங்களை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரும் மருவலர்தம் உடல் துணியவாள் வீசும்பரகாலன் கலிகன்றி சொன்ன, Maruvalartham Udal Thuniyavaal Veesumparakalan Kalikanri Sonna - பகைவருடைய சரீரங்கள் தொலையும்படி வாட்படையை வீசுகின்றவரும் பரகாலனென்னுந் திருநாமமுடையவருமான திருமங்கையாழ் வார் அருளிச் செய்த சங்கம் மலி தமிழ் மாலை இவை பத்து வல்லார்கள், Sangam Mali Tamil Maalai Ivai Paththu Vallarhal - சங்கப்புலவர்கள் கொண்டாடத்தக்க தமிழ்மாலையாகிய இப்பத்துப் பரசுரங்களையும் ஓதவல்லவர்கள் தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவார், Tharaniyodu Vizhumbu Aalum Thanmai Peruvar - பூமியையும் பரமபதத்தையும் ஆளும்படியான அதிசஙத்தைப் பெறுவார்கள். |