திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1338 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரயநீய வஸ்து சந்நிஹிதமான இடம் என்று தோற்றும்படி யாய்த்து அத்தேசத்தில் போக்யதை இருப்பது எல்லாம் எங்கும் ஒக்க பக்வமாய்த்து அங்கு இருப்பது) 1 | ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1 | பதவுரை Show / Hideஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு, Aaychiyar Azaippa Vennai Undu - இடைச்சிகள் முறையிடும்படியாக வெண்ணெயை (த்திருடி) அமுதுசெய்தவனாயும் ஒருகால் ஆல் இலை வளர்ந்த, Orukaal Aal Ilai Valarntha - பிரளயகாலமாகிற ஒரு ஸமயத்தில் ஆலந்தளிரில் திருக்கண் வளர்ந்தருளினவனாயும் பேய்ச்சியை முலை உண்டு, Peychchiyai Mulai Undu - பூதனையினுடைய முலைப்பால் உண்டவனாயும் இணை மருது இறுத்து, Inai Maruthu Iruthu - இரட்டை மருதமரங்களை முறிந்துவிழச் செய்தவனாயும் பெரு நிலம் அளந்தவன், Peru Nilam Alandhavan - விசாலமான பூமியை (த்ரிவிக்ரமனாய்) அளந்துகொண்டவனாயுமிருக்கிற எம்பெருமான் கோயில், Emperumaan Koyil - எம்பெருமானுடைய இருப்பிடம் (எதுவென்றால்) காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும், Kaayththa Neel Kamugum Kathaliyum Thengum - காய்கள் நிறைந்து ஓங்கியிருக்கின்ற பாக்குமரங்களும் வாழைமரங்களும் தென்னை மரங்களும் எங்கும் ஆம், Engum Aam - எல்லாவிடங்களிலும் மலிந்திருக்கிற பொழில்களின் நடுவே, Pozhilgalin Nadhuvae - சோலைகளினிடையே வாய்த்த நீர் பாயும், Vaayththa Neer Paayum - போதுமான ஜலம் பாயாநிற்கிற மண்ணியின், Manniyin - மண்ணியாற்றின் தென்பால், Thenpaal - தென்கரையிலுள்ள திருவெள்ளியங்குடி அது, Thiruvelliyangudi Adhu - திருவெள்ளியங்குடியாகிற அத்தலமாம். |
| 1339 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கார் காலத்திலே நிறைந்த மேகம் போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன் ரஷணத்துக்கு பாங்கான இடம் -என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற கோயில்) 2 | ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக்
கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்
பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்
தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-2 | பதவுரை Show / Hideஅன்று, Andru - முற்காலத்தில் ஆ நிரை மேய்த்து, Aa Nirai Maeyththu - (கோபாலகிருஷ்ணனாய்ப் பிறந்து) பசக்கூட்டங்களை மேய்த்தவனாயும் அலை கடல் அடைத்திட்டு, Alai Kadal Adaiththittu - அலையெறிகின்ற கடலிலே அணைகட்டி (இலங்கையிற் சென்று) அரக்கர்தம் சிரங்களை உருட்டி, Arakkartham Sirangalai Urutti - ராக்ஷஸர்களுடைய தலைகளை அறுத்துத் தள்ளினவனாயும் கார்நிறை மேகம் கலந்தது, Kaarnirai Megam Kalandhadhu - கார்காலத்தில் திரண்டெழுந்த மேகத்தோடொத்த ஓர் உருவம், Oru Uruvam - விலக்ஷணமான வடிவையுடையனாயுமிருக்கிற கண்ணனார், Kannanaar - கண்ணபிரான் கருதிய கோயில், Karuthiya Koyil - திருவுள்ளமுவந்த திவ்ய தேசம் (எதுவென்றால்) நிரை பூ, Nirai Poo - வரிசை வரிசையாகப் பூத்திருக்கிற செருந்தி, Serundhi - ஸுரபுன்னை மரங்களினுடையவும் முத்து அரும்பி, Muthu Arumbi - முத்துப்போன்ற மொக்குகள் அரும்பியிருக்கிற புன்னை, Punnai - புன்னை மரங்களினுடையவும் பொதும்பிடை, Podumpidai - பொந்துகளிலே |
| 1340 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரத சாஸ்தரத்துக்கு வேண்டும் லஷணங்கள் எல்லாம் எழுதிக் கொள்ளலாம் படி பல வகைப் பட்ட ந்ருத்தங்களைப் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம்) 3 | கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்தவன் தன்
படமிறப் பாய்ந்து பன் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்
படவரவல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்
அடை புடை தழுவி அண்ட நின்று அதிரும் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-3 | பதவுரை Show / Hideமுன் கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி, Mun Kadu Vidam Udaiya Kaaliyan Thadathai Kalakki - (அந்த நாகத்தை) முன்பொருகால், மிகக் கொடிதான விஷத்தையுடைத்தான காளியநாகம் கிடந்த பொய்கையைக் கலங்கச்செய்து (- (திருவெள்ளியங்குடி அதுவே)) அலக்கழித்து, Alakkazhithu - வருந்தும்படிபண்ணி அவன் தன் படம் இற பாய்ந்து, Avan Than Padam Irapaayndhu - அக்காளியனுடைய படங்களானவை முறியும்படியாக (கடம்ப மரத்தினின்று பாய்ந்து) பல் மணி சிந்த, Pal Mani Sindha - (படத்திலுள்ள) மணிகளெல்லாம் சிந்தும்படியாக பல் நடம் பயின்றவன் கோயில், Pal Nadam Bayindravan Koyil - (அப்படங்களின் மீது நின்று) பலவகை நர்த்தனங்களைப் பண்ணின பெருமான் ஸந்நிதி (எதுவென்னில்) படம் அரவு அல்குல் பாவை நல்லார்கள், Padam Aravu Alkul Paavai Nallargal - படமெடுத்த பாம்போடொத்த நிதம்பத்தையுடையரான அழகிய மாதர்கள் பயிற்றிய நாடகத்து, Payitriya Naadakathu - பழகிய நாடகத்தினுடைய ஒலி, Oli - ஓசையானது அடை புடை போய் தழுவி, Adai Pudai Poi Thazhuvi - அடுத்த பக்கங்களிலெங்கும் சென்று பரவி அண்டம் நின்று அதிரும், Andam Nindru Adhirum - ஆகாசத்திலுஞ் சென்று அதிரப்பெற்ற |
| 1341 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கும் படியாக அடுத்து அணியாக ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின சர்வாதிகன் வந்து சாய்ந்து அருளின கோயில்) 4 | கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு வுருவன்
பறவை முன் உயர்த்துப் பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில்
துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால்
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-4 | பதவுரை Show / Hideமுன் கறவை காத்து, Mun Karavai Kaathu - முற்காலத்தில் பசுக்களை ரக்ஷரித்தவனாயும் (- (திருவெள்ளியங்குடி அதுவே–.)) கஞ்சனை காய்ந்த, Kanjanai Kaayndha - கம்ஸனைச் சீறி முடித்தவனாயும் காள மேகம் திருஉருவன், Kaala Megam Thiruruvan - காளமேகம் போன்ற திருமேனியை யுடையனாயும் பறவை முன் உயர்த்து, Paravai Mun Uyarndhu - பெரிய திருவடியை முன்னே கொடியாக வெடுத்தவனாயும் பாற்கடல் துயின்ற, Paarkadal Thuyindra - திருப்பாற் கடலிலே பள்ளி கொள்பவனாயுமிருக்கிற பரமனார், Paramanaar - ஸர்வேச்வரன் பள்ளி கொள் கோயில், Palli Kol Koyil - சாய்ந்தருளுமிடம் (எதுவென்றால்) துறை துறை தோறும் பொன் மணி சிதறும், Thurai Thurai Thoram Pon Mani Sidhirum - எல்லாத் துறைகளிலும் பொன்களையும் மணிகளையும் கொழிக்கின்ற தொகு திரை, Thogu Thirai - திருண்ட அலைகளை யுடைத்தான மண்ணியின் தென்பால், Manniyin Thenpaal - மண்ணியாற்றின் தென்கரையிலே, செறி மணி மாடம் கொடி கதிர் அணவும், Seri Mani Maadam Kodi Kathir Anavum - நெருங்க இழைக்கப்பட்ட மாணிக்கங்களை யுடைத்தான மாட மாளிகைகளிலுள்ள த்வஜங்கள் ஸூர்ய மண்டலத்தை ஸ்பர்சித்திருக்கப்பெற்ற |
| 1342 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கால் ஆஸ்ரிதன் பக்கல் வாத்சல்யத்தாலே சாரத்தியம் பண்ணி அதி ரத மகா ரதரான பீஷ்மாதிகள் தேரை விட்டு ஒடும்படியாக துடர்ந்த –செங்கண் மால் ஆஸ்ரித வாத்சல்யம் அடங்கலும் கண்ணிலே தோற்றும்படி இருப்பானாய்ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவன் வந்து வர்த்திக்கிற தேசம்) 5 | பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே –4-10-5 | பதவுரை Show / Hideஒரு கால், Oru Kaal - ஒரு சமயத்தில் (- (மற்றொரு சமயத்தில்) (திருவெள்ளியங்குடி அதுவே)) பாரினை உண்டு, Paarinai Undu - உலகங்களை வயிற்றினுள்ளே அடக்கிவைத்தவனாயும் பாரினை உமிழ்ந்து, Paarinai Umizhndu - அவ்வுலகங்களை வெளிப்படுத்தினவனாயும் பாரதம் கையெறிந்து, Bharatham Kaiyerinthu - பாரதயுத்தத்தில் கையுமணியும் வகுத்தவனாயும் தோரினை ஊர்ந்து, Thoorinai Oorndhu - (அர்ஜுநனுடைய) தேரை நடத்தி தோரினை துரந்த, Thoorinai Thurandha - (எதிரிகளினுடைய) தேர்களைப் பங்கப்படுத்தினவனாயுமுள்ள செம் கண் மால், Sem Kan Maal - புண்டரி காக்ஷன் சென்று உறை கோயில், Sendru Urai Koyil - வந்து நித்யவாஸம் பண்ணுகிற ஸந்நிதி (எதுவென்றால்) ஏர் நிரை, Aer Nirai - உழுகிற ஏர்களின் வரிசையையுடைய வயலுள், Vayalul - கழனிகளிலுள்ள வாளைகள், Vaalaihal - வாளை மீன்கள் மறுகி, Marugi - அஞ்சி இது எமக்கு இடம் அன்று என்று எண்ணி, Idhu Emakku Idam Andru Enni - ‘இந்த வயலானது நாம் வஸிக்கத் தக்கதன்று’ என்று நினைத்து சீர் மலி பொய்கை, Seer Mali Poigai - அழகுமிக்க தடாகங்களிலே சென்று அணைகின்ற, Sendru Anaikindra - சென்று சேரப்பெற்ற |
| 1343 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ – என்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்) 6 | காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன வுண்டு மண்டிச்
செற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-6 | பதவுரை Show / Hideபூளை காற்று இடை கரந்தன, Pooalai Kaatru Idai Karandhana - பூளைப்பூவானது பெருங்காற்றிலே உருமாய்ந்து ஒழிவதுபோல (- (திருவெள்ளியங்குடி அதுவே–.)) அரக்கர் கடல் சேனை அரந்தை உற, Arakkar Kadal Senai Arandhai Ura - ராக்ஷஸருடைய கடல் போன்ற சேனையானது துன்பமடையும்படியாகவும் கூற்று இடை செல்ல, Koottu Idai Sella - யமனிடம் சென்று சேரும்படியாகவும் கொடு கணை துரந்த, Kodu Kanai Thurandha - கொடிய அம்புகளைப் பிரயோகித்த கோலம் வில் இராமன் தன் கோயில், Kolam Vil Iraman Than Koyil - அழகிய வில்லையுடைய இராமபிரானுடைய ஸந்நிதி (எதுவென்றால்); ஊற்று இடை நின்ற வாழையின், Ootru Idai Nindra Vaalaiyin - நீரூற்று உள்ள நிலங்களிலே முளைத்திருக்கிற வாழை மரங்களினுடைய ஊழ்ந்து வீழ்ந்தன கனிகள், Oozhndhu Veelndhana Kanigal - (கனியப்பழுத்து) இற்று உதிர்ந்த பழங்களை கயல்கள், Kayalgal - கயல் மீன்கள் மண்டி உண்டு, Mandi Undu - மேல்விழுந்து புஜித்து சேற்றிடை உகள், Settridai Ugal - சேற்று நிலங்களிலே துள்ளி விளையாடப்பெற்ற திகழ் வயல் சூழ், Thigazh Vayal Soozh - விளங்குகின்ற கழனிகளால் சூழப்பட்ட |
| 1344 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சுத்த ஸ்வாபாவம் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் -என்னுதல் அன்றிக்கே-சுக்ரன் அத்தேசத்தை உபாசித்தான் என்று ஒரு பிரசித்தி உண்டு அத்தை சொல்லிற்று ஆகவுமாம் வெள்ளியார் -என்றது அவனை ஆதரித்து சொன்ன படி அன்றிக்கே –வெள்ளியார் வணங்க –வெள்ளி மலையை உடைய -ருத்ரன் வந்து ஆஸ்ரயிக்க ஸ்வப்ன லப்த்தம் தனம் யதா -என்கிறபடியே சடக்கென அவன் பாதகத்தைப் போக்கினவன்) 7 | ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-7 | பதவுரை Show / Hideஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த, Olliya Karumam Seivan Endru Unarntha - (வேண்டுவோர்க்கு வேண்டினபடி கொடுப்பதாகிற சிறந்த காரியத்தைச் செய்யக் கடவேனென்று ஸங்கல்பித்துக்கொண்ட (- (திரு வெள்ளியங்குடி அதுவே)) மாவலி, Mavali - மஹாபலியினுடைய வேள்வியில், Velviyil - யாகத்திலே தௌ;ளிய குறள் ஆய்புக்கு, Thau Liyak Kural Aaypukku - தெளிவுள்ள வாமந மூர்த்தியாய்க்கொண்டு பிரவேசித்து மூ அடி கொண்டு, Moo Adi Kondo - (அந்த மாவலியிடமிருந்து) மூவடி நிலத்தை இரந்து பெற்று திக்கு உற வளர்ந்தவன் கோயில், Thikku Ura Valarnthavan Koyil - எல்லாத் திசைகளிலும் வியாபிக்கும்படியாக வளர்ந்த பெருமான் வாழுமிடம் (எதுவென்றால்); அள்ளி அம் பொழில் வாய், Alli Am Pozhil Vaai - தாதுகளையுடையனவாய் அழகியவான சோலைகளிலே இருந்து வாழ், Irundhu Vazh - இருந்துகொண்டு மகிழ்கிற குயில்கள் அவை, Kuyilgal Avai - குயில்களானவை அரி அரி என்று அழைப்ப, Ari Ari Endru Azaippa - ‘ஹாரிர் ஹாரி:’ என்று கூவப்பெற்றதாய், வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான், Velliyar Vananga Virainthu Arul Seivaan - சுக்கிரன் வந்து உபாஸனை பண்ண அவனுக்கு விரைவில் அருள்செய்த பெருமானுடையதான |
| 1345 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டி போல்வாரை ஏறிட்டுக் கொள்ளக் கடவ மடியிலே துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை ஏறிட்டு தன்னுடைய தாள் மேல் கிடாத்தி -என்கிற இடத்துக்கு ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யநான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர் பிரதி கூல்யனான ஹிரண்யனை விட்டு ஆசை உடைய என்னை அன்றோ அம்மடியிலே ஏறிட்டுக் கொள்ள அடுப்பது -என்று தம்மைப் பார்த்து அருளிச் செய்தாராக – அவனுடைய பரந்த மார்வை கிழித்துப் பொகட்ட ஆஸ்ரித வ்யாமோஹத்துக்கு அவதி இல்லாதவர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 8 | முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர் தம் பெருமானை அன்று அரியாய்
மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பன்மணி களின் ஒளியால்
விடி பகல் இரவு என்று அறிவரிதாய திருவெள்ளியங்குடி யதுவே –4-10-8 | பதவுரை Show / Hideமுடி உடை அமரர்க்கு, Mudi Udai Amararukku - கிரீடம் பூண்டிருக்கிற தேவர்களுக்கு (- (மாயனார் மன்னிய கோயில்–.) (திரு வெள்ளியங்குடி அதுவே–.)) இடர் செய்யும், Idar Seyyum - துன்பங்களைச் செய்து கொண்டிருந்த அசுரர்தம் பெருமானை, Asuraratham Perumanai - இரணியாசுரனை முன் அன்று, Mun Andru - முற்காலத்தில் அரி ஆய் மடியிடை வைத்து மார்வைகீண்ட, Ari Aay Madiyidai Vaitthu Marvaikinda - நரசிங்கமாகி மடிமேல் வைத்துக்கொண்டு மார்பைக் கிழித்து முடித்தவனான புடியிடை மாடத்து தூண் அடியிடையில் பதித்த, Pudiyidai Maadathu Thoon Adiyidaiyil Pathitha - பூமியிலே உண்டான மாடங்களில் (நடப்பட்டிருக்கிற) தூணடியிலே அழுத்தியுள்ள பல் மணிகளின் ஒளியால், Pal Manigalil Oliyaal - பலவகைப்பட்ட ரத்னங்களின் ஒளியாலே விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய, Vidi Pakal Iravu Endru Arivu Aridhu Aaya - விடியற்காலமென்றும் பகற்காலமென்றும் இராக்காலமென்றும் அறியக் கூடாமலிருக்கிற |
| 1346 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் திருவடிகளிலே அசாதாரணராய் இருப்பார் பக்கலிலே கிருபையைப் பண்ணி இவர்கள் கூக்குரல் கேட்கைக்கு அடுத்து அணித்தாக ஸ்ரீ திருப் பாற் கடல் கோயிலிலே கண் வளர்ந்து அருளினவன்) 9 | குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி யரவணைத் துயின்ற வாழியான் அமர்ந்து உறை கோயில்
கடியுடைக் கமலம் அடியிடை மலர கரும்போடு பெரும் செந்நெல் அசைய
வடிவுடை அன்னம் பெடையோடு சேரும் வயல் வெள்ளியங்குடி யதுவே –4-10-9 | பதவுரை Show / Hideஅமரர், Amarar - பிரமன் முதலிய தேவர்கள் (- (ஆழியான் அமர்ந்து உறை கோயில்–) (வெள்ளியங் குடியதுவே)) குடி குடி ஆக கூடி நின்று, Kudi Kudi Aaga Koodi Nindru - குடும்பம் குடும்பமாகச் சேர்ந்திருந்து குணங்களே பிதற்றி நின்று ஏத்த, Gunangalai Pithattri Nindru Aetha - (தனது) திருக்கல்யாண குணங்களையே சொல்லிக் கொண்டு துதிக்கப்பெற்ற அடியவர்க்கு அருளி, Adiyavarkku Aruli - அடியார் திறத்தில் கிருபை பண்ணிக்கொண்டு அரவு அணை துயின்ற, Aravu Anai Thuyindra - சேஷசயனத்தில் திருக்கண் வளர்ந்தருள்கின்ற கடி உடை கமலம், Kadi Udai Kamalam - பரிமளத்தை யுடைத்தான தாமரைப் பூக்கள் அடியிடை மலர, Adiyidai Malara - (கரும்புகளின் உடையவும் செந்நெற்பயிர்களின் உடையவும்) அடி நிலங்ககைளிலே மலரப் பெற்றதும், கரும்பொடு பெரு செந்நெல் அசைய, Karumpodu Peru Chennel Asaiya - கரும்புகளும் பெருத்த செந்நெற் கதிர்களும் அசைந்து கொண்டிருக்கப் பெற்றதும் வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும், Vadivu Udai Annan Pedaiyodum Serum - அழகிய வடிவையுடைய அன்னப் பறவைகள் பேடையோடு கூடப்பெற்றதுமான வயல், Vayal - கழனிகளையுடைய |
| 1347 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமியை இடந்து திரு எயிற்றினில் கொண்டு அந்த ஸ்ரமம் ஆறும்படியாக கடல் திரைகளில் குருந் திவலைகள் துடை குத்தி உறக்கத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து ஸ்ரீ திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான்) 10 | பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இக் குரை கடல் உலகே –4-10-10 | பதவுரை Show / Hideபண்டு முன் அன்று ஒருகால் எனம் ஆகி பார் இடந்து, Pandhu Mun Andru Orukal Enam Aagi Paar Idandhu - முன்பொருகாலத்தில் வராஹரூபியாய்த் திருவவதரித்துப் பூமியைக் குத்தியெடுத்து எயிற்றினில் கொண்டு, Eiyirtrinil Konda - கோட்டின் மேற் கொண்டவனும் தெண் தரை வருட பால் கடல் துயின்ற, Then Tarai Varuda Paal Kadal Thuyindra - தெளிந்த அலைகள் (திருவடிகளின் மேல்) மோதும்படி திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருள்பவனும் திருவெள்ளியங்குடியானை, Thiruvelliyangudiyanai - திருவெள்ளியங்குடியில் திருக்கோயில் கொண்டிருப்பவனுமான எம்பெருமான் விஷயமாக, வண்டு அறை சோலை மங்கையர் தலைவன், Vandu Arai Solai Mangaiyar Thalaivan - வண்டுகள் முரலும் சோலைகளை யுடைய திருமங்கை காட்டில் உள்ளவர்களுக்கு ஸ்வாமியும் மானம் வேல், Manam Vel - பெருமை தங்கிய வேற்படையையுடையவருமான கலியன், Kaliyan - ஆழ்வாருடைய வாய் ஒலிகள் இவை, Vaai Oligal Ivai - ஸ்ரீஸூக்தியாகிய இத்திருமொழியை கொண்டு, Kondhu - காலில் கொண்டு பாடும் தவம் உடையார்கள், Paadum Thavam Udaiyargal - பாடும் பாக்கியமுடையவர்கள், குரை கடல் இவ்வுலகு ஆள்வர், Kurai Kadal Ivvalagu Aalvar - கோஷிக்கின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தை ஆளப்பெறுவகள். |