திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 4-10 ஒன்றும் தேவும் (11 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3106திருவாய்மொழி || (4-10–ஒன்றும் தேவும்) - (ஸகலஜகத்காரணபூதனான ஸர்வேச்வரன் திருநகரியிலே எளியனாய்க் காட்;சி தந்தருளா நிற்க, வேறு தெய்வத்தைத் தேடி யோடுகிறீர்களே! இது என்ன அறிவு கேடு! என்று வெறுக்கிறார்.) 1
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள் நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1
பதவுரை Show / Hide
தேவும், thevum - தேவர்களும்
உலகும், ulagum - அவர்களுக்கிருப்பிடமான உலகங்களும்
உயிரும், uyirum - மனிதர் முதலிய பிராணிகளும்
மற்றும் யாதும், matrum yaadhum - மற்றுமுள்ள எல்லாமும்
ஒன்றும் இல்லா அன்று, ondrum illa andru - சிறிதுமில்லாத அந்த ஊழிக்காலத்திலே
நான்முகன் தன்னொடு, naanmugan thannodu - பிரமனையும்
தேவர், thevar - தேவதைகளையும்
உலகு, ulagu - உலகங்களையும்
உயிர், uyir - பிராணிகளையும்
படைத்தான், padaithaan - படைத்தவனும்
நின்ற, nindra - சாஸ்த்ரங்களில் நிலைத்திருப்பவனுமான
ஆதி பிரான், aadhi piraan - ஆதிநாதனென்றும் எம்பெருமான்
குன்றம் போல் மணிமாடம் நீடு, kunram pol manimaadam needu - மலைபோன்ற திருமாளிகைகள் உயர்ந்திருக்கப்பெற்ற
திருகுருகூர் அதனுள், thirugurukoor adhanul - திருநகரியிலே
நிற்க, nirka - காட்சிதந்து கொண்டிருக்கும் போது
மற்றைதெய்வம், matraidheivam - வேறுதெய்வங்களை
நாடுதிர் ஏ, naaduthir ae - தேடியோடுகின்றீர்களே.
3107திருவாய்மொழி || (4-10–ஒன்றும் தேவும்) - (உலகர்களே! நீங்கள் எந்த தெய்வங்களைப் பணிகின்றீர்களோ, அந்த தெய்வங்களோடு உங்களோடு ஒரு வாசியில்லை; நீங்கள் எப்படி கார்யபூதர்களோ அப்படியே அவர்களும் கார்யபூதர்களேயல்லது காரணபூதர்களல்லர்; ஆகையாலே, அவர்களை நீங்கள் ஆச்ரயிப்பது போல உங்களையும் அவர்கள் ஆச்ரயிக்கலாம். உங்களைக் காட்டிலும் அவர்களுக்குச் சிறிது ஞானமும் சக்தியும் ஏறியிருக்கிறது என்கிற இவ்வளவே யல்லது வேறொரு வாசி யில்லை கிடீர்; உங்களோடு அவர்களோடு வாசியற அனைவர்க்கும் காரணபூதனான ஸ்ரீமந்நாராயணன் காட்சி தந்தருளுமிடமாகிய திருநகரியைப் பணியுங்கோளென்கிறார்.) 2
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில், மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப் பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2
பதவுரை Show / Hide
பல் உலகீர், pal ulageer - பலவகைப்பட்ட உலகர்களே!
நீர், neer - நீங்கள்
நாடி, naadi - தேடி
வணங்கும், vanangum - வணங்கும்படியாகவுள்ள
உம்மையும், ummaiyum - உங்களையும்
முன் படைத்தான், mun padaithaan - முன்னம் படைத்தவனும்
வீடு இல் சீர், veedu il seer - நித்யஸித்தங்களான திருக்குணங்களிலுண்டான
புகழ், pugazh - புகழையுடையனுமான
ஆதி பிரான் அவன் மேவி உறைகோயில், aadhi piraan avan mevi uraikoyil - ஆதிநாதன் விரும்பி யெழுந்தருளியிருக்குமிடமான
மாடம் மாளிகை சூழ்ந்து அழகு ஆய திரு குருகூர் அதனை, maadam maaligai soozhndhu azhagu aaya thiru kurukoor adhanai - மாடமாளிகைகளால் சூழப்பட்டு அழகு வாய்ந்த திருநகரியை
பாடி ஆடி, paadi aadi - பாடுதலும் ஆடுதலும் செய்து கொண்டு
பரவி, paravi - துதித்து
பரந்து செல்மின்கள், parandhu selminkal - எல்லாவிடத்திலும் பரவி நடவுங்கள்.
3108திருவாய்மொழி || (4-10–ஒன்றும் தேவும்) - (உலகங்களை ரகூஷித்தருள்வதற்காக எம்பெருமான் செய்து போரும் செயல்களை ஆராய்ந்து பார்த்தாலும் இவனே பரம புருஷனென்று அறியப்போது மென்கிறார்.) 3
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக் கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர் சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள் பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3
பதவுரை Show / Hide
பரந்த, parandha - விஸ்தீர்ணமான
தெய்வமும், dheivamum - தேவதாவர்க்கங்களையும்
பல் உலகம், pal ulagam - (அவர்களுக்குப்) பல உலகங்களையும்
படைத்து, padaithu - ஸ்ருஷ்டித்தும்
அன்று, andru - பிரளயம் வந்த காலத்திலே எல்லாவற்றையும் ஒரு சேர விழுங்கி
கரந்து, karandhu - உள்ளே யொளித்து வைத்தும்
உமிழ்ந்து, umizhndhu - பிறகு வெளிப்படுத்தியும்
கடந்து, kadanthu - (மஹாபலிடத்தில் தானம் பெற்று) அளந்து கொண்டும்
இடந்தது, idandhadhu - (மஹாவராஹமாய்) இடந்தெடுத்தும் ஆக இப்படிச்செய்த காரியங்களை
கண்டும், kandum - பிரமாணங்களாலே கண்டறிந்து வைத்தும்
தெளிய கில்லீர், theliya killeer - தெளியமாட்டாத
பல் உலகீர், pal ulageer - பலவகைபட்ட உலகத்தவர்களே!
அமரர், amarar - தேவர்கள்
சிரங்களால் வணங்கும், sirangalaal vanangum - தலையால் வணங்கப் பெற்ற
திருகுருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியில் எழுந்தருளியிருக்கிற
பரன், paran - பரம புருஷனுக்கு
திறம் அன்றி, thiram andri - பிரகாரமாயல்லது
மற்று, matru - வேறு ஸ்வதந்திரமாயிருப்பதொரு
தெய்வம் இல்லை, dheivam illai - தேவதை கிடையாது
பேசுமின், pesumin - அப்படிப்பட்ட தேவதையொன்று உண்டாகில் சொல்லுங்கள்.
3109திருவாய்மொழி || (4-10–ஒன்றும் தேவும்) - (அநுமாநத்தாலே ஈச்வரனை ஸாதிக்கவிரும்புமவர்களும் பசுபதியே ஸர்வேச்வரனென்று கூறுபவர்களுமான சிலரை இப்பாசுரத்தாலே நிராகரித்தருளுகிறார்.) 4
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின் தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள் ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4
பதவுரை Show / Hide
பேசநின்ற, pesanindra - உங்களால் பரதெய்வமாகப் பேசப்படுகின்ற
சிவனுக்கும், sivanukkum - ருத்ரனுக்கும்
பிரமன் தனக்கும், Biraman thanakkum - (அவனது தந்தையான) பிரமனுக்கும்
பிறர்க்கும், pirarkkum - மற்றுமுள்ள தேவதைகளுக்கும்
நாயகன் அவனே, naayagan avane - தலைவன் ஸ்ரீமந்நாராயணனே என்னுமிடத்தை
கபாலம் நல் மோக்கக்து, kabalam nal mokkakthu - கபாலமோக்ஷக்கதையினால்
கண்டுகொண்மின், kandu konmin - தெரிந்துகொள்ளுங்கள்
தேசம், dhesam - தேஜஸ்ஸுபொருந்திய
மா, maa - சிறந்த
மதிள் சூழ்ந்து, madhil soozhndhu - மதில்களால் சூழப்பட்டு
அழகு ஆய, azhagu aaya - அழகு பெற்றதான
திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியில் எழுந்தருளியிருக்கிற
ஈசன் பால், eesan paal - ஸர்வேச்வரன் விஷயத்திலே
ஓர் அவம் பறைதல், or avam paraidhal - தப்பான பேச்சுக்களைப் பேசுவது
இலிங்கியர்க்கு, ilingiyarkku - லிங்கப்பிரமாண வாதிகளுக்கு
என் ஆவது, en aavathu - என்னபலனைத்தரும்!
3110திருவாய்மொழி || (4-10–ஒன்றும் தேவும்) - (லைங்க புராணம் முதலாகச் சில குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளையும் பாஹ்ய ஸ்ம்ருதிகளையும் பிரமாணமாக்க் கொண்டு பேச வந்தவர்களை நிராகரித்தருளுகிறார்.) 5
இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான் மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள் பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5
பதவுரை Show / Hide
இலிங்கத்து இட்ட புராணத்தீரும், ilingathu itta puranatheerum - லிங்கமாஹாத்மிய விஷயமாகக் கல்பிக்கப்பட்ட புராணத்தைப் பற்றினவர்களாயும்
சமணரும், samanarum - ஜைநர்களாயும்
சாக்கியரும், saakiyarum - பௌநர்களாயும்
வலிந்து வாது, valindhu vaadhu - விதண்டாவாதம் செய்பவர்களாயுமிருக்கிற நீங்களாகவும்
மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான், matrum num dheivamum aaginindraan - தேவதாந்தரங்களாகவும் (இப்படி ஸர்வசரீரகனான)
பொலிந்து நின்ற பிரான், polindhu nindra piran - பொலிந்து நின்ற பிரானென்கிற எம்பெருமானை,
செந்நெல், sennel - செந்நெற்பயிர்களானவை
மலிந்து, malindhu - ஸம்ருத்திபெற்று
கவிரி வீசும், kaviri veesum - சாமரை வீசப்பெற்ற
திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே
கண்டீர், kandeer - ஸேவியுங்கோள்
ஒன்றும், ondrum - எள்ளளவும்
பொய் இல்லை, poi illai - அஸத்யமில்லை,
போற்றுமின், potrumin - துதியுங்கோள்
3111திருவாய்மொழி || (4-10–ஒன்றும் தேவும்) - (ஸ்ரீமந்நாராயணனே ஸர்வேச்வரனாகில் அவன் தன்னையே ஆச்ரயிக்கும்படி எங்களைப் பண்ணாமல் இதர தெய்வங்களைத் தொழுமாறு எங்களைச் செய்துவைத்தது ஏன்? என்று சிலர் கேட்பதாகக் கொண்டு அவர்களுக்கு உத்தரமளிக்கும் பாசுரம் இது. உங்கள் பாபந்தான் அதற்குக் காரணம் என்று விடை கூறிற்றாகிறது.) 6
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே; சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள் ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6
பதவுரை Show / Hide
மற்று ஓர் தெய்வம், matru or dheivam - வேறோரு தேவதையை
போற்றி பேண, potri pena - துதிக்கு ஆதரிக்கும்படியாக
புறத்து இட்டு, purathu ittu - வேறுபடுத்தி
உம்மை, ummai - உங்களை
இன்னே, inne - இப்போதுநீங்களிருக்கிற விதமாக
தேற்றி வைத்தது, thettri vaithadhu - தேவதாந்தரங்களை நம்பும்படியாக (எம்பெருமான்) செய்து வைத்ததானது
எல்லீரும், elleerum - எல்லாரும் (எதற்காகவென்றால்)
வீடு பெற்றால், veedu petraal - முக்தியுடைந்தால்
உலகு இல்லை என்றே, ulagu illai endrae - புண்யபாண விஷயமான சாஸ்த்ர மரியாதை குலைந்துபோகுமென்கிற காரணத்தாலேயாகும்;
சேற்றில், setril - சேற்றுநிலத்தில்
செந்நெல், sennel - செந்நெற்பயிர்களும்
கமலம், kamalam - தாமரையும்
ஓங்கி, oongi - ஓங்கி வளரப்பெற்ற
திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற
ஆற்றல் வல்லவன், aatral vallavan - பரமசக்தியுக்தனான பெருமானுடைய
மாயம் கண்டீர், maayam kandeer - மாயையேயாமத்தனை;
அது, Adhu - மாயையென்பதை
அறிந்து, arindhu - தெரிந்துகொண்டு
அறிந்து, arindhu - அது தப்பும் வழி அவன் திருவடிகளைப்பற்றுவதே’ என்றும் தெரிந்துகொண்டு
ஓடுமின, oodumin - திருவடியே சென்று சேரப் பாருங்கள்.
3112திருவாய்மொழி || (4-10–ஒன்றும் தேவும்) - (தேவதாந்தரங்களை ஆச்ரயிப்பதனால் என்னபலன் உண்டாகுமோ அது உங்களுக்கு இதுவரையில் தெரியாமையில்லை; இந்நாள் வரையிலே கைகண்ட பலன்தானே இனிமேலும் காணக்கடவதாயிருக்கும்; ஆனபின்பு கருளக்கொடியுடையானுக்கு அடிமை புகுவதுவே உறுவ தென்கிறார்.) 7
ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்; கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள் ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7
பதவுரை Show / Hide
ஓடி ஓடி, oodi oodi - ஸம்ஸார சக்ரத்தில் ஓடியோடி
பலபிறப்பும் பிறந்து, palapirappum pirandhu - பலபல யோனிகளிலே பிறந்து
பல் படி கால், pal padi kaal - வம்ச பரம்பரையாக
மற்று ஓர் தெய்வம் வழி ஏறி, mattru or dheivam vazhi eri - தேவதாந்தரங்களை அந்தந்த நூல்களிலே சொல்லியிருக்கிறபடி
பாடி ஆடி பணிந்து, paadi aadi panindhu - பலபடியாக வழிபட்டு
கண்டீர், kandeer - பலன் கைபுகுந்தமை கண்டீர்களே;
வானவர், vaanavar - தேவர்கள்
கூடி, koodi - திரண்டு
ஏத்த நின்ற, eatha nindra - துதிக்கும்படி நின்ற
திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற
ஆடு புள்கொடி ஆதி மூர்த்திக்கு, aadu pulkodi aadhi moorthikku - ஆடுங்கருளக்கொடியுடைய ஆதிநாதப் பெருமாளுக்கு
அடிமை புகுவது, adimai puguvadhu - அடியராயிருந்த தகுதி
3113திருவாய்மொழி || (4-10–ஒன்றும் தேவும்) - (மார்க்கண்டேயன் ருத்ரனை ஆராதித்துத் தன் அபேகூஷிதம் பெற்றானே யென்று சிலர் சொல்ல, அந்தக் கதையின் மருமமும் கேட்கலாகாதோ வென்கிறார்.) 8
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே; கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள் மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8
பதவுரை Show / Hide
அடிமையினால், adimaiyinaal - அடிமைசெய்து
புக்கு, pukku - உள்புகுந்து
தன்னை கண்ட, thannai kanda - தன்னைக்காணப்பெற்ற
மார்க்கண்டேயனவனை, markkandeyanavannai - மார்க்கண்டேயனென்று ப்ரஸித்த னானவனை
அன்று, andru - அக்காலத்தில்
நக்கபிரான், nakkapiraan - திகம்பரச்சாமியான ருத்ரன்
உய்யக்கொண்டதும், uyyakkondadhum - ரகூஷித்ததும்
நாராயணன் அருளே, naarayanan arule - நாராயணனுடைய வெண்ணிறமாக அலர்கின்ற
தட தாழை, thada thaazhai - பெரியதாழைகளை
வேலி, veli - வேலியாகவுடைய
திருகுருகூர் அதனுள், thirukurukoor adhanul - திருநகரியிலே
மிக்க, mikka - மேம்பாடுடைய
ஆதி பிரான் நிற்க, aadhi piraan nirka - ஆதிநாதப்பெருமாளிருக்க
மற்ற எ தெய்வம், matra e dheivam - வேறு எந்த தேவதைகளை
விளம்புதிர், vilambuthir - பேசுகிறீர்கள்?
3114திருவாய்மொழி || (4-10–ஒன்றும் தேவும்) - (வேத பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் பண்ணுகிற துஸ் தர்க்கங்களால் அழிக்க வொண்ணாத ஐச்வர்யத்தை யுடையனான எம்பெருமானெழுந்தருளி யிருக்கிற திருநகரியை ஆச்ரயியுங்கோள் பிழைக்க வேண்டியிருந்தீர்களாகில் என்கிறார்.) 9
விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால் அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும் வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9
பதவுரை Show / Hide
விளம்பும், vilambum - கண்டபடி சொல்லுவது தவிரப் பொருட்பொருத்தம் சிறிதுமில்லாதவைகளான
ஆறு சமயமும், aaru samayamum - ஆறுவகைப்பட்ட பாஹ்ய மதங்களும்
அவை ஆகிய, avai aagiya - அந்த பாஹ்யமதங்கட்குப் பரியாயமான
மற்றும், matrum - குத்ருஷ்டி மதங்களும்
தன் பால், than paal - தன் விஷயத்திலே
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய, alandhu kaandaṟku ariyan aagiya - எல்லை காணவொண்ணாதனாயிருக்கிற
ஆதி பிரான், aadhi piraan - ஸகலஜகத காரணபூதனான ஸர்வேச்வரன்
அழகும், azhagum - நித்யவாஸம் பண்ணுமிடமாய்
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய, valam kol than panai soozhnthu azhagu aaya - வளம் மிக்க குளிர்ந்த நீர் நிலங்களாலே சூழப்பட்டு அழகியதான
திருகுருகூர் அதனை, thirukurukoor adhanai - திருநகரியை
உம்மை, ummai - உங்களை
உய்யக் கொண்டு போகுறில், uyya kondu pokuril - உஜ்ஜிவிப்பித்துக்கொண்டு நடக்க வேண்டியிருந்தீர்களாகில்
உளம் கொள் ஞானத்து, uḷam kol nyaanathu - அந்தரங்க ஞானத்துக்குள்ளே
வைம்மின், vaimmin - வைத்துச் சிந்தனை செய்யுங்கள்.
3115திருவாய்மொழி || (4-10–ஒன்றும் தேவும்) - (தன் ஐச்வர்யத்தில் ஒன்றும் குறையாமல் திருநகரியில் வந்து நின்றருளின பொலிந்து நின்ற பிரானுக்கு அடிமை செய்கை தானே ஸ்வரூபாநுரூபமென்கிறார்.) 10
உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால் மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள் குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10
பதவுரை Show / Hide
எத்தேவும், Ethevum - எல்லாத் தேவதைகளும்
எ உலகங்களும், E ulagangalum - எல்லாவுலகங்களும்
மற்றும், Matrum - மற்றுமுண்டான சேதநர தேசனங்களுமாகிய
இத்தனையும், Ithanaiyum - இவையடங்கலும்
தன் பால், Than paal - தன்னுடையதான
மறு இல் மூர்த்தியோடு ஒத்து, maru il Moorthiyodu othu - நிஷ்கலங்கமான அஸாதாரண விக்ரஹம்போன்று (ஸகல விதத்தாலும் விதேயங்களாகியென்றபடி)
நின்ற வண்ணம் நிற்க, Nindra vannam nirka - குறையற நிற்குமிருப்பிலே
செறுவில், Seruvil - விளை நிலங்களில்
செந்நெல், Sennel - செந்நெற்பயிர்களும்
கரும்பொடு, Karumpodu - கருப்பஞ்சோலைகளும்
ஓங்கு, Oongu - வளரும்படியான
திருகுருகூர் அதனுள், Thirukurukoor adhanul - திருநகரியிலே
குறிய மாண் உரு ஆகிய, Kuriya maan uru aagiya - வாமநப்ரஹ்மசாரி வேஷமெடுத்தவனும்
நீள் குடக் கூத்தனுக்கு, Neel kuda koothanukku - (க்ருஷடணனாய்ப்) பெரிய குடக் கூத்தாடினவனுமான பெருமானுக்கு
ஆள் செய்வதே உறுவதாவது, Aal seivadhe uruvathavadhu - அடிமை செய்வதே உற்றதாம்
3116திருவாய்மொழி || (4-10–ஒன்றும் தேவும்) - (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டும் பாசுரம் இது.) 11
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான், நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11
பதவுரை Show / Hide
ஆள் செய்து, Aal seidhu - (உபதேச முகத்தாலே ஸம்ஸாரிகளைத் திருத்திப்பணிகொள்ளுகையாகிற) கைங்கரியத்தைப் பண்ணி
ஆழி பிரானை சேர்ந்தவன், Aazhi piraanai serndhavan - ஆழியங்கையனான பெருமானை அடைந்தவரும்
வண் குருகூர் நகரான், Van Kurukoor nagaraan - திருநகரிக்குத் தலைவரும்
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன், Naal kamazh magizh maalai maarbinan - பரிமளம் மாறாதமாலையைத் திருமார்பிலே அணிந்தவருமான
மாறன் சடகோபன், Maaran Sadagopan - ஆழ்வார்
வேட்கையால், Vetkaiyaal - ஆதரத்தோடு
சொன்ன பாடல் ஆயிரத்துள், Sonna paadal aayirathul - ஆயிரம்பாட்டினுள்ளே
இ பத்தும், I pathum - இப்பதிகத்தை
வல்லார், Vallar - ஓதவல்லவர்களுக்கு
மீட்சி இன்றி, Meetchi indri - மீண்டும் திரும்பிதலில்லாத
வைகுந்தம் மாநகர் மற்றது, Vaigundham maanagar mattrathu - ஸ்ரீ வைகுண்டமஹாநகரமாகிய அவ்விடம்
கையது, Kaiyadhu - கரஸ்தம்.