| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 338 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 1 | அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் மலை சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்களாடும் சீர் சிலம்பாறு பாயும் தென் திரு மாலிருஞ் சோலையே-4-2-1 | தெய்வம் மகளிர்கள்,Deivam Magalirgala - தேவ ஸ்திரீகள் சிலம்பு ஆர்க்க ,Silambu Aarka - (நமது) பாதச் சிலம்புகள் ஒலிக்கும் படி வந்து ,Vandhu - (பூலோகத்தில்) வந்து ஆடும் சீர்,Aadu Seer - நீராடும்படியான பெருமையை யுடைய சிலம்பு ஆறு,Silambu Aaru - நூபுர கங்கையானது பாயும்,Paayum - (இடைவிடாமல்) பெருகப் பெற்றுள்ள தென் திருமாலிருஞ் சோலை,Then Thirumaalirun Cholai - அழகிய திருமாலிருஞ் சோலையானது, அலம்பா,Alampaa - பிராணிகளை அலையச் செய்தும் வெருட்டா,Veruttaa - பயப்படுத்தியும் கொன்று,Konru - உயிர்க் கொலை செய்தும் திரியும்,Thiriyum - திரிந்து கொண்டிருந்த அரக்கரை,Arakkarai - ராக்ஷஸர்களை குலம் பாழ் படுத்து,Kulam Paazh Paduthu - ஸ குடும்பமாகப் பாழாக்கி குலம் விளக்கு ஆய் நின்றகோன்,Kulam Vilakku Aay Nintragon - (இக்ஷ்வாகு வம்சத்துக்கு விளக்காய் நின்ற பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமான) மலை,Malai - திருமலையாம். |
| 339 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 2 | வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை எல்லா விடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டொலி செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ் சோலையே–4-2-2 | பல்லாண்டு ஒலி,Pallandu Oli - மங்களசான கோஷமானது எல்லா இடத்திலும்,Ella Idathilum - எல்லா யிடங்களிலும் எங்கும்,Engum - திருமலையின் பரப்பெங்கும் பரந்து செல்லா நிற்கும் சீர்,Parandhu Sella Nirkum Seer - பரவிச் செல்லும் படியான பெருமையை யுடைய தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை வல் ஆளன்,Val Aalan - வலிய ஆண்மையை யுடையவனும் வாள்,Vaal - (சிவனிடத்துப் பெற்ற) வாளை யுடையவனுமான அரக்கன்,Arakkan - ராவணனுடைய தோளும் முடியும்,Tholum Mudiyum - தோள்களும், தலைகளும் தங்கை,Thangai - (அவனது) தங்கையாகிய சூர்ப்பணகையினது பொல்லாத மூக்கும்,Pollaadha Mookkum - கொடிய மூக்கும் போக்குவித்தான்,Pookkuvithaan - அறுப்புண்டு போம்படி பண்ணின எம்பெருமான் பொருந்தும்,Porundhum - பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடமான மலை,Malai - திருமலையாம். |
| 340 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 3 | தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை அக் கானெறியை மாற்றும் தண் மாலிருஞ் சோலையே-4-2-3 | எக் காலமும்,Ek Kaalamum - எப்போதும் சென்று,Senru - போய் சேவித்திருக்கும்,Sevithirukkum - திருவடி தொழா நின்றுள்ள அடியரை,Adiyarai - பாகவதர்களை அக் கான் நெறியை மாற்றும்,Ak Kaan Neriya Maatrum - அப்படிப்பட்ட (கொடுமையான) (பாவக்)காட்டு வழியில் நின்றும் விலக்கக் கடவதும் தண்,Than - தாப ஹரமுமான மாலிருஞ்சோலை,Maaliruncholai - மாலிருஞ்சோலை தக்கார் மிகார்களை,Thakkar Migargalai - (க்ருபா விஷயத்தில்) எம்பெருமான் ஒத்தவர்களும் (அவனிலும்) மேற்பட்டவர்களுமாயுள்ள மஹாத்மாக்களை சஞ்சலம் செய்யும்,Sanchalam Seyyum - அலைத்து வருந்தா நின்றுள்ள சலவரை,Salavarai - க்ருத்ரிமப் பயல்களை தெக்கு ஆம் நெறியே,Thekku Aam Neriye - தென் திசையிலுள்ள நரக மார்க்கத்திலே போக்கு விக்கும்,Pookku Vikkum - போகும் படி பண்ணா நின்ற செல்வன்,Selvan - ச்ரிய பதியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்குமிடமான) பொன் மலை,Pon Malai - அழகிய திருமலையாம் |
| 341 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 4 | ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர் தம் கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை வானாட்டில் நின்று மா மலர்க் கற்பகத் தொத்திழி தேனாறு பாயும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-4 | வான் நாட்டில்,Vaan Naatil - ஸ்வர்க்க லோகத்திலுள்ள மா மலர்,Maa Malar - பெரிய பூக்களை யுடைய கற்பகம்,Karpagam - கல்ப வ்ருக்ஷத்தினுடைய தொத்தில் நின்று,Thottil Ninru - பூங்கொத்தில் நின்றும் இழி,Izhi - பெருகா நின்ற தேன்,Then - தேனானது ஆறு பாயும்,Aaru Paayum - ஆறாய்க் கொண்டு ஓடா நிற்கிற தென்,Then - அழகை யுடைய திருமாலிருஞ்சோலை ஆன் ஆயர்,Aan Aayar - பசுக்களுக்குத் தலைவரான இடையர்கள் கூடி,Koodi - ஒன்று சேர்ந்து அமைத்து,Amaiththu - (இந்திரனுக்காக) ஏற்படுத்தின விழவை,Vizhavai - ஸமாராதனையை அமரர் தம் கோனார்க்கு ஒழிய,Amarar Tham Konarkku Ozhia - (அந்த) தேவேந்திரனுக்குச் சேர வொட்டாமல் தடுத்து கோவர்த்தனத்து,Govarthanathu - கோவர்த்தன மலைக்குச் (சேரும் படி) செய்தான் மலை,Seithaan Malai - செய்தருளின கண்ண பிரானுடைய திருமலையாம். |
| 342 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 5 | ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிருண்டவன் சென்றுறையும் மலை கரு வாரணம் தன் பிடி துறந்தோட கடல் வண்ணன் திரு வாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே–4-2-5 | ஒரு வாரணம்,Oru Varanam - (ஸ்ரீகஜேந்திராழ்வானாகிற ஒரு யானையினிடத்து பணி,Pani - கைங்கர்யத்தை கொண்டவன்,Kondavan - ஸ்வீகரித்தருளினவனும் கஞ்சன் தன்,Kanjan Than - கம்ஸனுடைய ஒரு வாரணம்,Oru Varanam - (குவலயாபீடமென்ற) ஒரு யானையினுடைய உயிர்,Uyir - உயிரை உண்டவன்,Undavan - முடித்தவனுமான கண்ணபிரான் சென்று,Senru - எழுந்தருளி உறையும்,Uraiyum - நித்ய வாஸம் பண்ணப் பெற்ற மலை,Malai - மலையாவது: கரு வாரணம்,Karu Varanam - கறுத்ததொரு யானை, தன் பிடி,Than Pidi - தன்னுடைய பேடை யானது துறந்து ஓட,Thurandhu Oda - (பிரணய ரோஷத்தினால்) தன்னை விட்டிட்டு ஓடப்புக, (அதுகண்ட அவ்வானையானது) கடல் வண்ணன் திரு ஆணை கூற,Athukanda Avvaanaiyanadhu Kadal Vannan Thiru Aanai Koora - “கடல் போன்ற நிறமுடைய அழகர் மேலாணை” என்று சொல்ல திரியும்,Thiriyum - (அப்பேடை யானது அவ்வாணைக்குக் கட்டுப்பட்டு அப்புறம் போக மாட்டாமல்) மீளா நின்றுள்ள தண்,Than - குளிர்ந்த மாலிருஞ்சோலை,Maaliruncholai - திருமாலிருஞ் சோலை மலையாம். |
| 343 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 6 | ஏவிற்றுச் செய்வான் ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை சாவத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் மலை ஆவத்தன மென்று அமரர்களும் நன் முனிவரும் சேவித்திருக்கும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-6 | ஏலிற்று,Elitru - (கம்ஸன்) ஏவின காரியங்களை செய்வான்,Seivaan - செய்து முடிப்பதற்காக ஏன்று எதிர்த்து வந்த,Enru Edhirththu Vanda - துணிந்து எதிரிட்டுவந்த மல்லரை,Mallarai - (சாணுரன் முதலிய) மல்லர்களை சாவ தகர்த்து,Saava Thagarththu - முடியும்படியாக நோக்கினவனும் சாந்து,Santhu - (கூனி யிட்ட) சாந்தை அணி,Ani - அணிந்து கொண்டுள்ள தோள்,Thol - தோள்களை யுடையவனும் சதுரன்,Sathuran - ஸமர்த்தனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற) மலை,Malai - மலையாவது: அமரர்களும்,Amarargalum - (பிரமன் முதலிய) தேவர்களும் நல் முனிவரும்,Nal Munivaram - (ஸனகர் முதலிய மஹர்ஷிகளும்) ஆவத்து தனம் என்று,Aavathu Thanam Endru - ஆபத்துக் காலத்துக்குத் துணையாயிருக்குமிடமென்று (நினைத்து) சேவித்து இருக்கும்,Seviththu Irukkum - ஸேவித்துக் கொண்டு இருக்குமிடமான தென் திருமாலிருஞ்சோலை |
| 344 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 7 | மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை யெழுவித்தவன் மலை கொன்னவில் கூர் வேற் கோன் நெடு மாறன் தென் கூடற்கோன் தென்னன் கொண்டாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-7 | மன்னர்,Mannar - (குரு தேசத்து) அரசர்கள் மறுக,Maruga - குடல் குழம்பும்படி மைத்துணன் மார்க்கு,Maiththunan Maarkku - மைத்துனன்மாரான பாண்டவர்களுக்கு (த் துணையாகி) ஒரு தேரின் மேல்,Oru Therin Mel - ஒரு தேரிலே முன் அங்கு நின்று,Mun Angu Ninru - முற் புறத்திலே நின்று கொண்டு மோழை யெழுவித்தவன் மலை,Mozhai Ezhuviththavan Malai - (நீர் நரம்பில் விட்ட வாருணாஸ்த்ரத்தின் வழியே) கீழுண்டான குமிழி யெறிந்து கிளரும்படி பண்ணின கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற) மலையாவது கொன்னவில்,Konnavil - கொலையையே தொழிலாக வுடைய கூர்,Koor - கூர்மை பொருந்திய வேல்,Vel - வேலை யுடையவனும் கோன்,Kon - ராஜ நீதியை வழுவற நடத்துமவனும் நெடு,Nedu - பெருமை பொருந்தியவனும் மாறன்,Maaran - ‘மாறன்‘ என்னும் பெயருடையவனும் தென்,Then - அழகிய கூடல்,Koodal - ‘நான் மாடக் கூடல்‘ என்ற பெயரை யுடைய மதுரைக்கு தென்னன்,Thennan - பாண்டி நாட்டுத் தலைவனுமான மலயத்வஸ ராஜனாலே கொண்டாடும்,Kondaadum - கொண்டாடப் பெற்ற தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை |
| 345 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 8 | குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங் கானிடைச் சிறு கால் நெறியே போக்கு விக்கும் செல்வன் பொன் மலை அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறு காலைப் பாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-8 | குறுகாத,Kurugaadha - திருமலையைக் கிட்டி அநுகூலாய் வாழலாமாயிருக்க, அது செய்யாமல் விலகுகின்ற மன்னரை,Mannarai - அரசர்களுடைய கூடு,Koodu - இருப்பிடத்தை கலக்கி,Kalakki - குலைத்து (அழித்து) வெம்,Vem - தீஷணமான கானிடை,Kaanidai - காட்டிலே சிறு கால் நெறியே ,Siru Kaal Neriye - சிறந்த வழியில் போக்குவிக்கும்,Pookkuvikkum - (அவ் வரசர்களை) ஓட்டுகின்ற செல்வன்,Selvan - திருமால் (எழுந்தருளியிருக்கிற) பொன் மலை,Pon Malai - சிறந்த மலையை யுடையவன் அறுகால்,Arukaal - ஆறு கால்களை யுடைய வரி வண்டுகள்,Vari Vandugal - அழகிய வண்டுகளானவை ஆயிரம் நாமம் சொல்லி,Aayiram Naamam Solli - (எம்பெருமானுடைய) ஸஹஸ்ர நாமங்களை ஆளாத்தி வைத்து சிறு காலைப் பாடும்,Siru Kaalaip Paadum - சிற்றஞ் சிறு காலையில் அடி பணியுமாற்றைக் கூறியவாறு பாடுமிடமான தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை |
| 346 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 9 | சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள் அந்திப் பலி கொடுத்து ஆவத் தனம் செய் அப்பன் மலை இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாயொப்பான் சிந்தும் புறவில் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-9 | பூதங்கள்,Boothangal - ஸ்ரீ வைஷ்ணவ பூதங்களானவை (தேக அபாஷணமே பண்ணிக் கொண்டு திரியும் நாஸ்திரிகர்களைக் கண்டால், அவர்களை) சிந்தப் புடைத்து,Sindhap Pudaiththu - (அவயங்கள்) சிதறும்படி அடித்துக் கொன்று செம் குருதி கொண்டு,Sem Kurudhi Kondu - (அதனால் அவர்களுடலினின்று புறப்படுகிற) சிவந்த ரத்தத்தைக் கொண்டு அந்தி,Andhi - அந்திப் பொழுதிலே பலி கொடுத்து,Pali Koduththu - (எம்பெருமானுக்கு) ஆராதந ரூபமாக ஸமர்ப்பித்து ஆபத்து தனம் செய்,Aapaththu Dhanam Sei - ஆபத் காலத்துக்குத் துணையாமிடமென்று ஸேவிக்குமிடமும் அப்பன்,Appan - ஸ்வாமி (எழுந்தருளியிருக்க மிடமுமான) மலை,Malai - மலையாவது, இந்திர கோபங்கள்,Indhira Gobangal - பட்டுப் பூச்சிகளானவை எம் பெருமான்,Em Perumaan - அனைவர்க்கும் ஸ்வாமியான அழகருடைய கனி வாய்,Kani Vaai - (கொவ்வைக்) கனி போன்ற திரு வதரத்திற்கு ஒப்பான்,Oppaan - போலியாக சிந்தும்,Sindhum - (கண்ட விடமெங்கும்) சிதறிப் பறக்கப் பெற்ற புறவில்,Puravil - தாழ்வரையை யுடைய தென் திருமாலிருஞ்சோலை.,Then Thirumaalirunjolai - தென் திருமாலிருஞ்சோலை |
| 347 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 10 | எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார் விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று மாலை வாய்த் தெட்டித் திளைக்கும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-10 | எண்ணிறந்த,Ennirandha - எண் இறந்த கணக்கிட முடியாதவர்களும் பெரு,Peru - பெருமை பொருந்தியவர்களுமான தேவிமார்,Devimaar - தேவியானவர்கள் எட்டு திசையும்,Ettu Thisaiyum - எட்டுத் திக்குகளிலும் விட்டு விளங்க,Vittu Vilangha - மிகவும் பிரகாசிக்க (அவர்கள் நடுவே) வீற்றிருந்த,Veeetrirundha - பெருமை தோற்ற எழுந்தருளி யிருந்த விமலன் மலை,Vimalan Malai - நிர்மலான கண்ணபிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலையானது; பட்டி,Patti - வேண்டினபடி திரியும் மலையான பிடிகள்,Pidigal - யானைப் பேடைகளானவை மாலைவாய்,Maalai Vaai - இரவிலே பகடு,Pagadu - ஆண் யானை மேல் உரிஞ்சி சென்று,Urinji Sendru - ஸம்லேஷித்துப்போய் தெட்டித் திளைக்கும்,Thetti Thilaikkum - அந்த ஸம்லேஷித்துப் போய் முற்றிக் களியா நிற்கும் |
| 348 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 11 | மருதப் பொழிலணி மாலிருஞ் சோலை மலை தன்னை கருதி யுறைகின்ற கார்க் கடல் வண்ண னம்மான் தன்னை விரதம் கொண்டேத்தும் வில்லி புத்தூர் விட்டு சித்தன் சொல் கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே–4-2-11 | மருதம் பொழில்,Marudham Pozhil - மருதஞ் சோலைகளை அணி,Ani - அலங்காரமாக வுடைய மாலிருஞ்சோலை மலை தன்னை,Maalirunjolai Malai Thannai - திருமாலிருஞ்சோலை மலையை கருதி,Karudhi - விரும்பி உறைகின்ற,Uraiginra - (அதில்) எழுந்தருளி யிருக்கின்ற கார் கடல் வண்ணன்,Kaar Kadal Vannan - கருங்கடல் போன்ற நிறத்தை யுடைய அம்மான் தன்னை,Ammaan Thannai - அழகப் பிரனாரை விரதம் கொண்டு,Viradham Kondu - மங்கள விரதமாகக் கொண்டு ஏத்தும்,Eaththum - துதிக்குமாறும் வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவருமான விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார். சொல்,Sol - அருளிச் செய்த இவற்றை கருதி,Karudhi - விரும்பி உரைப்பவர்,Uraippavar - ஓதுமவர்கள் கண்ணன்,Kannan - கண்ண பிரானுடைய கழல் இணை,Kazhal Inai - திருவடிகளை காண்பர்கள்,Kaanbargal - ஸேவிக்கப் பெறுவார்கள். |