| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 349 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 1 | உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந் தோடிச் சென்ற உருப்பனை யோட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை பொருப்பிடைக் கொன்றை நின்று முறி யாழியும் காசும் கொண்டு விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ் சோலையதே–4-3-1 | உருப்பிணி நங்கை தன்னை,Uruppini Nangai Thannai - ருக்மிணிப் பிராட்டியை மீட்பான்,Meetpaan - கண்ணனுடைய தேரில் நின்றும்) திருப்பிக் கொண்டு போவதற்காக தொடர்ந்து,Thodarnthu - (அத் தேரைப்) பின் தொடர்ந்து கொண்டு ஓடிச் சென்ற,Odi Senra - ஓடி வந்த உருப்பனை,Uruppanai - உருப்பன் என்றவனை ஓட்டிக் கொண்டு இட்டு,Ottik Kondu Ittu - ஓட்டிப் பிடித்துக் கொண்டு (தேர்த் தட்டிலே) இருத்தி உறைத்திட்ட,Uraiththitta - (அவனைப்) பரிபவப் படுத்தின உறைப்பன் மலை,Uraippan Malai - மிடுக்கை உடைய கண்ண பிரான் (எழுந்தருளு யிருக்கிற)மலையாவது கொன்றை,Kondrai - கொன்றை மரங்களானவை பொருப்பு இடை நின்று,Poruppu Idai Nindru - மலையிலே நின்று முறி,Muri - முறிந்து பொன்,Pon - பொன் மயமான ஆழியும்,Aazhi Yum - மோதிரங்கள் போன்ற பூ நரம்புகளையும் காசும்,Kaasum - (பொற்காசு)போன்ற பூ விதழ்களையும் கொண்டு,Kondu - வாரிக் கொண்டு விருப்பொடு வழங்கும்,Viruppodu Vazhanguum - ஆதரத்துடனே (பிறர்க்குக்)கொடுப்பவை போன்றிருக்கப் பெற்ற வியன்,Viyan - ஆச்சரியமான மாலிருஞ்சோலை அதே,Maalirunjolai Adhe - அந்தத் திருமாலிருஞ்சோலையே யாம். |
| 350 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 2 | கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை நஞ்சுமிழ் நாகமெழுந் தணவி நளிர் மா மதியை செஞ்சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ் சோலையதே–4-3-2 | கஞ்சனும்,Kanjanum - கம்ஸனும் காளியனும்,Kaaliyanum - காளிய நாகமும் களிறும்,Kalirum - (குவலயாபீடமென்ற) யானையும் மருதும்,Maruthum - இரட்டை மருத மரங்களும் எருதும்,Eruthum - (அரிஷ்டாஸுரனாகிற) ரிஷபமும் வஞ்சனையின்,Vanjanaiyin - (தந்தாமுடைய) வஞ்சனைகளாலே மடிய,Madiya - (தாம் தாம்) முடியும்படி வளர்ந்த,Valarntha - (திருவாய்ப்பாடியில்) வளர்ந்தருளினவனும் மணி வண்ணன் மலை,Mani Vannan Malai - நீல மணி போன்ற நிறமுடையவனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கும்) மலையாவது: நஞ்சு,Nanju - விஷத்தை உமிழ்,Umizh - உமிழா நின்றுள்ள காகம்,Kaagam - (மலைப்) பாம்பானவை நளிர்,Nalir - குளிர்ந்த மா மதியை,Maa Mathiyai - (மலைச் சிகரத்தின் மேல் தவழுகின்ற) பூர்ணச்சந்திரனை,Poornachandiranai - (தமக்கு உணவாக நினைத்து) எழுந்து,Ezhnthu - (படமெடுத்துக்) கிளர்ந்து அணலி,Anali - கிட்டி செம் சுடர்,Sem Sudar - சிவந்த தேஜஸ்ஸை யுடைய நா,Naa - (தனது) நாக்கினால் அளைக்கும்,Alaikkum - (சந்திரனை) அளையா நிற்குமிடமான திருமாலிருஞ்சோலை அதே.,Thirumaalirunjolai Adhe - திருமாலிருஞ்சோலை அதே. |
| 351 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 3 | மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்தெறிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் மலை புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே–4-3-3 | மன்னு,Mannu - (தன்னை அழிவற்றவனாக நினைத்துப்) பொருந்திக் கிடந்த நரகன் தன்னை ,Naragan Thannai - நரகாஸுரனை சூழ்போகி,Soolpoghi - கொல்லும் வகைகளை ஆராய்ந்து வளைத்து,Valaiththu - (அவனைத் தப்பிப்போக முடியாதபடி)வளைத்துக் கொண்டு எறிந்து,Erinthu - (திரு வாழியாலே) நிரஸித்து கன்னி மகளிர் தம்மை,Kanni Magalir Thammai - (அவனால் சிறையிலடைத்து வைக்கப்பட்டிருந்த பதினாறாயிரத் தொரு நூறு) கன்னிகளையும் கவர்ந்த,Kavarntha - தான் கொள்ளை கொண்ட கடல் வண்ணன்,Kadal Vannan - கடல் போன்ற நிறமுடையவனான கண்ண பிரான் (எழுந்தருளியிருக்கிற) மலை,Malai - மலையாவது: புன்னை,Punnai - புன்னை மரங்களும் செந்தியொடு,Sendhiyodu - சுர புன்னை மரங்களும் புனம் வேங்கையும்,Punam Vengaiyum - புனத்திலுண்டாகிற வேங்கை மரங்களும் கோங்கும்,Kongum - கோங்கு மரங்களும் நின்று,Ninru - (புஷ்பங்களால் நிறைந்த ஒழுங்கு பட) நின்று பொன்னரி மலைகள் சூழ்,Ponnari Malaigal Sool - (திருமலைக்குப்) பொன்னரி மாலைகள் சுற்றினாற் போலே யிருக்கப் பெற்ற பொழில்,Pozhil - சோலைகளை யுடைய மாலிருஞ்சோலை அதே,Maalirunjolai Adhe - திருமாலிருஞ்சோலை அதே. |
| 352 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 4 | மாவலி தன்னுடைய மகன் வாணன் மகளிருந்த காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண் குறிஞ்சிப் பாவொலி பாடி நடம் பயில் மாலிருஞ் சோலையதே–4-3-4 | மா வலி தன்னுடைய,Maa Vali Thannudaiya - மஹாபலியினுடைய மகன் வாணன்,Mahan Vaanan - புத்திரனாகிய பாணாஸுரனுடைய மகள் இருந்த,Magal Irundha - மகளான உஷை இருந்து காவலை,Kaavalai - சிறைக் கூடத்தை கட்டு அழித்த,Kattu Azhitha - அரனோடே அழித்தருளினவனும் தனி காளை,Thani Kaalai - ஒப்பற்ற யுவாவுமான கண்ணபிரான் கருதும் மலை,Karudhum Malai - விரும்புகிற மலையாவது; கோவலர்,Kovalar - இடையர்களுக்கும் கோவிந்தனை,Govindhanai - கோவிந்தாபிஷேகம் பண்ணப் பெற்ற கண்ணபிரான் விஷயமாக குற மாதர்கள்,Kura Maathargal - குறத்திகளானவர்கள் குறிஞ்சி மலர்,Kurinji Malar - குறிஞ்சி ராகத்தோடு கூடின பா,Paa - பாட்டுக்களை ஒலி பாடி,Oli Paadi - இசை பெறப் பாடிக் கொண்டு (அப் பாட்டுக்குத் தகுதியான) நடம் பயில்,Nadam Payil - கூத்தாடுமிடமான மாலிருஞ்சோலை அதே |
| 353 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 5 | பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசு பாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் அலங் காரன் மலை குலமலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை நிலமலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே–4-3-5 | பலபல நாழம்,Palapala Naazham - பலபல குற்றங்களை சொல்லி,Solli - சொல்லி பழித்த,Pazhitha - தூஷித்த சிசு பாலன் தன்னை,Sisu Balan Thannai - சிசுபாலனுடைய அலவலைமை,Alavalaimai - அற்பத் தனத்தை தவிர்த்த,Thavirtha - (சாம தசையில்) போக்கி யருளின அழகன்,Azhagan - அழகை யுடையவனும் அலங்காரன்,Alangaaran - அலங்காரத்தை யுடையவனுமான கண்ண பிரான் (எழுந்தருளி மலை,Malai - மலையானது: குலம் மலை,Kulam Malai - தொண்டர் குலத்துக்குத் தலையான மலையும் கோலம் மலை,Kolam Malai - அழகை யுடைய மலையும் குளிர் மா மலை,Kulir Maa Malai - குளிர்ந்த பெரிய மலைகள் கொற்றம் மலை,Kotram Malai - ஜயத்தை யுடைய மலையும் நிலம் மலை,Nilam Malai - (நல்ல மரங்கள் முளைக்கும் பாங்கான) நிலத்தை யுடைய நீண்ட மலை,Neenda Malai - நீட்சியை யுடைய மலையுமான திருமாலிருஞ்சோலை அதே.,Thirumaaliruncholai Adhe - திருமாலிருஞ்சோலை அதே. |
| 354 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 6 | பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை பாண்டகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருக தோண்ட லுடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே–4-3-6 | பாண்டவர் தம்முடைய,Paandavar Thammudaiya - பஞ்சபாண்டவர்களுடைய (மனைவியாகிய) பாஞ்சாலி,Paanchaali - த்ரௌபதியினுடைய மறுக்கமெல்லாம்,Marukkam Ellam - மனக் குழப்பத்தை யெல்லாம் ஆண்டு,Aandu - (தன்) திருவுள்ளத்திற்கொண்டு, அங்கு,Angu - (அவள் பரிபவப்பட்ட) அப்போது (அத் துன்பங்களை யெல்லாம்) நூற்றுவர் தம்,Nootruvar Tham - (துரியோதநாதிகள்) தூற்றுவருடைய பெண்டிர் மேல்,Pendir Mel - மனைவியர்களின் மேல் வைத்த,Vaitha - சுமத்தின அப்பன்,Appan - ஸ்வாமியான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலை,Malai - மலையானது : பாண் தரு,Paan Tharu - பாட்டுக்குத் தகுதியான (ஜன்மத்தை யுடைய) வண்டு இனங்கள்,Vandu Inangal - வண்டு திரளானவை பண்கள்,Pangal - ராகங்களை பாடி,Paadi - பாடிக் கொண்டு மது,Madu - தேனை பருக,Paruga - குடிப்பதற்குப் பாங்காக (ச் சோலைகள் வாடாமல் வளர) தோண்டல்,Thondal - ஊற்றுக்களை யுடைய மலையாகிய தொல்லை மாலிருஞ் சோலை அதே,Thollai Maaliruncholai Adhe - அநாதியான அந்த மாலிருஞ் சோலையேயாம். |
| 355 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 7 | கனங் குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழு வேற்றுவித்த எழில் தோள் எம்பிரான் மலை கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலமெல்லாம் இனம் குழு வாடும் மலை எழில் மாலிருஞ் சோலையதே–4-3-7 | கனம்,Kanam - ஸ்வர்ண மயமான குழையாள் பொருட்டா,Kuzhaiyaal Porutaa - காதணியை யுடையாளான கணை,Kanai - அம்புகளை பாரித்து,Paariththu - பிரயோகித்து அரக்கர்கள் இனம்,Arakkargal Inam - ராஷஸ குலத்தை கழு ஏற்றுவித்து,Kazhuertruviththu - குலத்தின் மேல் ஏற்றின வனும் எழில் தோள்?,Ezil Thol - அழகிய தோள்களை யுடையவனுமான இராமன்,Raaman - இராமபிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலை,Malai - மலையான கனம்,Kanam - பொன்களை கொழி,Kozhi - கொழித்துக் கொண்டு வருகின்ற தெள் அருவி,TheL Aruvi - தெளிந்த அருவிகளிலே இனக்குழு,Inakuzhu - அறிஞர்கள் எல்லாம் அகல் ஞாலமெல்லாம்,Agal Gnaalam Ellam - விசாலமான பூமியிலுள்ளா ரெல்லாரும் வந்து சூழ்ந்த,Vandhu Soozhntha - வந்து சூழ்ந்து கொண்டு ஆடும்,Aadum - நீராடப் பெற்ற எழில்,Ezil - அழகிய மாலிருஞ் சோலையிலே அதே,Maaliruncholaiyile Adhe - திருமாலிருஞ்சோலை அதே. |
| 356 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 8 | எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த அரையனமரும் மலை அமரரொடு கோனும் சென்று திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ் சோலையதே–4-3-8 | எரி,Eri - நெருப்பை சிதறும்,Sitharum - சொரியா நின்றுள்ள சரத்தால்,Saraththaal - அம்புகளினால் இலங்கையினை,Ilangkaiyinai - இலங்கைக் காரனான ராவணனை தன்னுடைய,Thannudaiya - தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து,Vari Silai Vaa yil Peydhu - நீண்ட வில்லின் வாயிலே புகுரச் செய்து காய் நோட்டம்,Kaai Nottam - (அவனுடைய) வாக்கின் அநீதியை தவிர்த்து,Thavirthu - குலைத்து உகந்த,Ugantha - (தான் வெற்றி பெற்றமையாலே) மகிழ்ந்தருளின அரையன்,Araiyan - ஸ்வாமியான இராமபிரான் அமரும்,Amarum - எழுந்தருளி யிருக்கிற மலை,Malai - மலையாவது: அமரரொடு,Amararodu - தேவர்களோடு கூட கோனும்,Konum - (அவர்களுக்கு) தலைவனான இந்திரனும் திரி,Thiri - (இரவும் பகலும்) திரியா நின்ற சுடர்,Sudar - சந்த்ர ஸூர்யர்களும் சென்று,Sendru - வந்து சூழூம்,Soozhoom - பிரதக்ஷிணம் பண்ணப் பெற்ற திருமாலிருஞ்சோலை மலை அதே,Thirumaaliruncholai Malai Adhe - திருமாலிருஞ்சோலை மலை அதே |
| 357 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 9 | கோட்டு மண் கொண்டிடந்து குடங்கையில் மண் கொண்டளந்து மீட்டு மதுண்டு மிழ்ந்து விளையாடு விமலன் மலை ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை யென்று ஓட்டரும் தண் சிலம்பாறுடை மாலிருஞ் சோலையதே–4-3-9 | மண்,Mann - (ஹிரண்யாக்ஷனாலே பாயாகச் சுருட்டிக் கொண்டு போகப்பட்ட) பூமியை இடந்து,Edandhu - (வராஹர மாய் அவதரித்து) (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு லிடுவித்தெடுத்து கோடு,Kodu - (தனது) திரு வயிற்றிலே கொண்டு,Kondu - என்று கொண்டும், மண்,Mann - (மஹாபலியினால் தன் வசமாக்கிக் கொள்ளப்பட்ட) பூமியை குடங் கையில்,Kudang Kaiyil - (வாமந ரூபியாய் அவதரித்து) அகங்கையில் கொண்டு,Kondu - (நீரேற்று) வாங்கிக் கொண்டு அளந்து,Alandhu - அளந்தருளியும் மீட்டும்,Meettum - மறுபடியும் (அவாந்தர ப்ரளயத்திலே அந்தப் பூமி அழியப் புக.) அது,Adhu - அப் பூமியை உண்டு,Undu - திரு வயிற்றில் வைத்து நோக்கி உமிழ்ந்து,Umizhndhu - (பிம்பு பிரளங் கழித்தவாறே) (அதனை) வெளிப் படுத்தியும் விளையாடும்,Vilaiyaadum - (இப்படிப்பட்ட ஆச்சரியச் செயல்களாலே) விளையாடா நின்றுள்ள விமலன்,Vimalan - நிர்மல ஸ்வரூபியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற) மலை,Malai - மலையாவது; ஈட்டிய,Eettiya - (பெருகி வரும் போது) வாரிக் கொண்டு வரப் பெற்ற பல் பொருள்கள்,Pal Porulgal - பல தரப் பட்ட பொன், முத்து, அகில் முதலிய பொருள்கள் எம் பிரானுக்கு,Em Piraanukku - எம் பெருமானுக்கு அடியுரை என்று,Adiyurai Endru - ஸ்ரீபாத காணிக்கை யென்று ஒட்டரும்,Ottarum - (பெருகி) ஒடி வாரா நின்றுள்ள தண்,Than - குளிர்ந்த சிலம்பாறு உடை,Silambaaru Udai - நூபுர கங்கையை யுடைய மாலிருஞ் சோலை அதே,Maaliruncholai Adhe - திருமாலிருஞ்சோலை மலை அதே |
| 358 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 10 | ஆயிரம் தோள் பரப்பி முடியாயிரம் மின்னிலக ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை ஆயிர மாறுகளும் சுனைகள் பல வாயிரமும் ஆயிரம் பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே-4-3-10 | ஆயிரம்,Aayiram - பலவாயிருந்துள்ள தோள்,Thol - திருத் தோள்களை பரப்பு,Parappu - பரப்பிக் கொண்டும். முடி ஆயிரம்,Mudi Aayiram - ஆயிரந் திருமுடிகளும் மின் இசை,Min Isai - (திருவபிஷேகத்திலுள்ள சத்தங்களினால்) மிகவும் விளங்கும்படியாகவும் பை,Pai - பரந்த ஆயிரம் தலைய,Aayiram Thalaiya - ஆயிரந்தலைகளை யுடைய அனந்தன்,Ananthan - திருவந்தாழ்வான் மீது சயனன்,Sayanan - பள்ளி கொண்டருளுமவனான எம்பெருமான் ஆளும்,Aalum - ஆளுகின்ற மலை,Malai - மலையாவது, ஆயிரம் ஆறுகளும்,Aayiram Aarugalum - பல நதிகளையும் பல ஆயிரம் சுனைகளும்,Pala Aayiram Sunaigalum - அனேகமாயிரந் தடாகங்களையும் ஆயிரம் பொழிலும் உடை,Aayiram Pozhilum Udai - பல பூஞ்சோலைகளையுமுடைய |
| 359 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 11 | மாலிருஞ் சோலை யென்னும் மலையை யுடைய மலையை நாலிரு மூர்த்தி தன்னை நால் வேதக் கடலமுதை மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளில் மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே–4-3-11 | மாலிருஞ்சோலை என்னும்,Maaliruncholai Ennum - திருமாலிருஞ்சோலை என்கிற மலையை,Malaiyai - திருமலையை உடைய,Udaiya - (தனக்கு இருப்பிடமாக) உடையவனும் மலையை,Malaiyai - ஒரு மலை சாய்ந்தாற்போன்றுள்ளவனும் கால் இரு மூர்த்தி தன்னை,Kaal Iru Moorththi Thannai - திருவஷ்டாக்ஷர ஸ்வரூபி யானவனும் நால் வேதம் கடல் அமுதை,Naal Vedham Kadal Amudhai - நான்கு வேதங்களாகிய கடலில் ஸாரமான அம்ருதம் போன்றவனும் மேல் இருங் கற்பகத்தை,Mel Irung Karppagaththai - (ஸ்வர்க்க லோகத்திலுள்ள கல்ப வ்ருக்ஷத் தினம்) மேற்பட்டதும் பெரிதுமான கல்பங்ருஷமாயிருப்பவனும் வேதாந்தம்,Vedhaantham - வேதாந்தங்களிற் கூறப்படுகின்ற விழுப்பொருளில்,Vizhupporulil - சிறந்த அர்த்தங்களுள் மேல் இருந்த,Mel Irundha - மேற்பட்ட அர்த்தமாயிருப்பவனும் விளக்கை,Vilakkai - தனக்குத் தானே விளங்குபவனுமான எம்பெருமானைக் குறித்து விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார் விரித்தன,Viriththana - அருளிச் செய்தவை இப் பாசுரங்கள். |