Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 4-4 நாவகாரியம் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
360ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 1
நாவ காரியம் சொல்லிலாதவர் நாள் தொறும் விருந் தோம்புவார்
தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனைச் சிந்தியாத அப்
பாவ காரிகளைப் படைத்தவன் எங்ஙனம் படைத்தான் கொலோ–4-4-1
நாவ காரியம்,Naava Kaariyam - நாவினாற் சொல்ல வொண்ணாத வற்றை
சொல்லில்லாதவர்,Sollillaadhavar - (ஒருநாளும்) சொல்லி யறியாத ஸ்ரீவைஷ்ணவர்கள்
நாள் தோறும்,Naal Thorum - நாடோறும்
விருந்து ஓம்புவார்,Virundhu Ombuvaar - (ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விருந்தளித்துக் கொண்டும்
தேவர் காரியம் செய்து,Thevar Kaariyam Seidhu - பகவதாராதநம் பண்ணிக் கொண்டும்
வேதம்,Vedham - வேதங்களை
பயின்று,Payindru - ஓதிக் கொண்டும்
வாழ்,Vaal - வாழுமிடாமன
திருக்கோட்டியூர்,Thirukkottiyur - திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்,)
மூவர்,Moovar - பிரமன், ருத்ரன், இந்திரன் என்ற மூவருடைய
காரியமும்,Kaariyamum - காரியங்களையும்
திருத்தும், Thiruththum - செய்து தலைக் கட்டுமவனும்.
முதல்வனை,Mudhalvanai - (எல்லார்க்கும்) தலைவனுமான எம்பெருமானை
சிந்தியாத,Sindhiyaadha - நெஞ்சாலும் நினையாத
அ பாவ காரிகளை,A Paava Kaariigalai - அப்படிப்பட்ட (மிகவுங்கொடிய) பாவஞ்செய்த பிராணிகளை
படைத்தவன்,Padaiththavan - ஸ்ருஷ்டித்தவன்
எங்ஙனம்,Engnganam - எதுக்காக
படைத்தான் கொல் ஓ,Padaiththaan Kol O - ஸ்ருஷ்டித்தானோ! (அறியோம்)
361ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 2
குற்ற மின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கு அனு கூலராய்
செற்ற மொன்று மிலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
துற்றி யேழுல குண்ட தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதவர்
பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு நோய் செய்வான் பிறந் தார்களே-4-4-2
குற்றம் இன்றி,Kutram Inri - ஒரு வகையான குற்றமுமில்லாமல்
குணம்,Gunam - (சமம், தமம் முதலிய குணங்களை)
பெருக்கி,Perukki - வளரச் செய்து கொண்டு
குருக்களுக்கு,Gurugukkalukku - (தம் தம்) ஆசாரியர்களுக்கு
அனுகூலர் ஆய்,Anukoolar Aay - (கைங்கரியம் பண்ணுவதற்குப்) பாங்காயிருப்பவர்களும்
செற்றம் ஒன்றும் இலாத,Setram Ondrum Ilaadha - பொறாமை யென்பது சிறிதுமில்லாதவர்களும்
வண் கையினார்கள்,Van Kaiyinaargal - கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்,Vazh - வாழுமிடமான
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
ஏழ் உலகு,Ezhu Ulagu - ஸப்த லோகங்களையும்
துற்றி,Thuttri - ஒரு கபளமாகத் திரட்டி
உண்ட,Unda - அமுது செய்தருளினவனும்
தூ,Thoo - பழிப்பற்ற
மணி வண்ணந்தன்னை,Mani - நீல மணி போன்ற நிறத்தை யுடையவனுமான எம்பெருமானை
தொழாதவர்,Thozhaadhavar - வணங்காதவர்
பெற்ற ,Petra - (தங்களைப்) பெற்ற
தாயர்,Thaayar - தாய்மாருமடய
வயிற்றினை,Vayittrinai - வயிற்றை
பெரு நோய் செய்வான்,Peru Noi Seivaan - மிகவும் கொடுமைப் படுத்தமைக்காக
பிறந்தார்கள்,Pirandhaargal - பிறந்தார்
362ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 3
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழலெழும்
திண்ணை சூழ் திருக் கோட்டியூர்த் திரு மாலவன் திரு நாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ணகிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக் கவளம் உந்து கின்றார்களே–4-4-3
நல் வண்ணம்,Nal Vannam - நல்ல நிறத்தை யுடைய
மணியும்,Maniyum - ரத்நங்களையும்
மரகதமும்,Maragathamum - மரகதகங்களையும்
அழுத்தி,Azhuthi - (ஒழுங்கு பட) இழைத்ததனால்
நிழல் எழும்,Nizhal Ezhum - ஒளி விடா நின்றுள்ள
திண்ணை,Thinnai - திண்ணைகளாலே
சூழ்,Sool - சூழப் பெற்ற
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருக்கிற)
திருமால் அவன்,Thirumaal Avan - திருமாமகன் கொழுநனுடைய
திரு நாமங்கள்,Thiru Naamangal - திரு நாமங்களை
எண்ண,Enna - (ஒன்று, இரண்டு என்று எண்ணுகைக்கா
கண்ட,Kanda - படைக்கப் பட்ட
விரல்களால்,Viralgalal - விரல்களாலே (அந்தத் திருநாமங்களை)
இறை பொழுதும்,Irai Pozhuthum - க்ஷண காலமும்
எண்ண இலாது,Enna Ilaadhu - எண்ண மாட்டாமல்
போய்,Poi - புறம்பே சென்று
உண்ணக் கண்ட,Unnak Kanda - (சரீர போஷணார்த்தமாக) உண்ணா நின்ற
தம்,Tham - தங்களுடைய
நம் ஊத்தை வாய்க்கு,Nam Ooththai Vaikku - அசுத்தமான வாயிலே
கவளம்,Kavalam - சோற்றுத் திரள்களை
உந்துகின்றார்களே,Undhugindraargale - (அவ் விரல்களினால்) தள்ளா நின்றார்களே! (இதென்ன கொடுமை.!)
363ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 4
உரக மெல்லணையான் கையில் உறை சங்கம் போல் மட வன்னங்கள்
நிரை கணம் பரந் தேறும் செங்கமல வயல் திருக் கோட்டியூர்
நரக நாசனை நாவிற் கொண்டழையாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்குங்கூறையும் பாவம் செய்தனதாங் கொலோ–4-4-4
உரகம் மெல்,Uragam Mel - திருவனந்தாழ்வானை ஸுகுமாரமான
அணையான்,Anaiyaan - படுக்கையாக வுடைய எம்பெருமானது
கையில் உறை,Kaiyil Urai - திருக் கையில் உள்ள
சங்கம் போல்,Sangam Pol - ஸ்ரீ பாஞ்ச ஜந்யம் போல் (வெளுத்த)
மட அன்னங்கள்,Mada Annangal - மடப்பம் பொருந்திய ஹம்ஸங்களானவை
ஏறும்,Erum - ஏறி யிருக்கப் பெற்ற
செம் கமலம்,Sem Kamalam - செந்தாமரை மலர்களை யுடைய
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
நரகம் நாசனை,Naragam Naasanai - (தன்னடியார்க்கு) நரக ப்ரவேசத்தை ஒழித்தருளுமவனமான எம்பெருமானை
நாவில் கொண்டு,Naavil Kondu - நாவினால்
மானிட சாதியர்,Maanida Saathiyar - மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்கள்
பருகும்,Parugum - குடிக்கின்ற
நீரும்,Neerum - தண்ணீரும்
உடுக்கும்,Udukkum - உடுத்துக் கொள்ளுகிற
கூறையும்,Kooraiyum - வஸ்திரமும்
பாவம் செய்தன தான் கொல் ஓ,Paavam Seithana Thaan Kol O - பாவஞ்செய்தனவோ தான்!:
364ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 5
ஆமையின் முதுகத்திடைக் குதி கொண்டு தூ மலர் சாடிப் போய்
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர்த் திருக் கோட்டியூர்
நேமி சேர் தடங் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை
பூமி பாரங்க ளுண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே–4-4-5
இள,Ila - இளமை பொருந்திய
வாளைகள்,Vaalagal - ‘வாளை’ என்னும் மீன்கள்
ஆமையின்,Aamaiyin - ஆமைகளினுடைய
முதுகத்திடை,Mudugaththidai - முதுகின் மேல்
குதி கொண்டு,Kudhi Kondu - குதித்துக் கொண்டும்
தூ மலர்,Thoo Malar - நல்ல புஷ்பங்களை
சாடிப் போய்,Saadi Poi - உழக்கிக் கொண்டும்
தீமை செய்து,Theemai Seidhu - (க்ஷுத்ர ஜந்துக்களைக் கலக்கி ஒட்டுகையாகிற தீம்புகளைச் செய்து கொண்டும்
விளையாடு,Vilaiyaadu - விளையாடுமிடமான
நீர்,Neer - நீரை யுடைய
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக்கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
நேமி,Nemi - திருவாழி யாழ்வானோடு
சேர்,Ser - சேர்ந்திருக்கிற
தட,Thada - பெரிய
கையினானை,Kaiyinaanai - திருக் கையை யுடையனுமான எம்பெருமானை
நினைப்பு இலா,Ninaippu Ilaa - (ஒரு காலும்) நினையாத
வலி நெஞ்சு உடை,Vali Nenju Udai - கடினமான நெஞ்சை உடையவர்களும்
பூமி பாரங்கள்,Bhoomi Paarangal - பூமிக்குச் சுமையாயிருப்பவர்களுமான பாவிகள்
உண்ணும்,Unnum - உண்கிற
சோற்றினை,Sotrinai - சோற்றை
வாங்கி,Vaangi - பிடுங்கி விட்டு, (எறிந்து)
புல்லை,Pullai - (அறிவற்ற பசுக்களுக்கு உண்வான) புல்லைக் கொண்டு
திணிமின்,Thinimin - (அவர்கள் வயிற்றைத்) துற்று விடுங்கள்.
365ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 6
பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால்
ஏதமொன்று மிலாத வண் கையினார்கள் வாழ்திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின் றேத்துவார் களுழக்கிய
பாத தூளி படுதலால் இவ் வுலகம் பாக்கியம் செய்ததே–4-4-6
பூதம் ஐந்தொடு,Poodham Ainthodu - பஞ்ச பூதமாகிய சரீரத்தினாலும்
ஐந்து வேள்வி,Aindhu Velvi - பஞ்ச மஹா யஜ்ஞங்களினாலும்
ஐந்து புலன்கள்,Aindhu Pulangal - (சப்தம் முதலிய) ஐந்து விஷயங்களினாலும்
(ஐந்து) பொறிகளால்,Aindhu Porigalal - பஞ்சேந்திரியங்களினாலும் (ஸம்பவிக்கக்கூடிய)
ஏதம் ஒன்றும் இலாத,Aedham Ondrum Ilaadha - குற்றமொன்றுமில்லாதவர்களும்
வண் கையினார்கள்,Van Kaiyinaargal - உதாரணமான கைகளை யுடையவர்கள்
வாழ்,Vaazh - வாழ்விடமான
திருக்கோட்டியூர்,Thirukkottiyoor - திருக்கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்)
நாதனை,Naadhanai - (எமக்கு) ஸ்வாமியும்
நரசிங்கனை,Narasinganai - நரஸிம்ஹ ஸ்வரூபியுமான எம்பெருமானை
நவின்று,Navindru - அநுஸந்தித்து
ஏத்துவார்கள்,Eaithuvaargal - துதிக்குமவரான பாகவதர்கள்
உழக்கிய பாதத் துளி,Uzhakkiya Paadhath Thuli - திருவடிகளினால் மிதித்தருளின தூளினுடைய
படுதலால்,Paduthalaal - ஸம்பந்தத்தினால்
இ உலகம்,I Ulagam - இந்த லோகமானது
பாக்கியம் செய்தது,Paakiyam Seithathu - பாக்யம் பண்ணினதாகக் கொள்ளப்படும்.
366ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 7
குருந்த மொன்றொசித் தானொடும் சென்று கூடி யாடி விழாச் செய்து
திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கருந்தட முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள்
இருந்த வூரிலிருக்கும் மானிடர் எத் தவங்கள் செய்தார் கொலோ–4-4-7
திருந்து,Thirundhu - (எம்பெருமான் ஸ்வரூபங்களைப் பிழையறக் கூறுகையாகிற) திருத்தத்தை யுடைய
நால் மறையோர்,Naal Maraiyor - நான்கு வேதங்களையுமோதின ஸ்ரீவைஷ்ணவர்கள்
ஒன்று குருத்தம்,Ondru Kuruththam - ஒரு குருத்த மரத்தை
ஒசித்தானோடும்,Osiththaanoodum - முறித்தருளின கண்ண பிரானை
சென்று கூடி,Senru Koodi - சென்று சேர்ந்து
ஆடி,Aadi - (அவனுடைய குணங்களிலே) அவகாஹித்து
விழாச் செய்து,Vizha Seithu - (விக்ரஹ ஸேவையாகிற) உத்ஸவத்தை அநுபவித்துக் கொண்டு
இரா பகல்,Eraa Pagal - இரவும் பகலும்
ஏந்தி,Eaendhi - மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
வாழ்,Vaazh - வாழுமிடமான
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்,)
கருந்தட,Karundhata - கறுத்துப் பெருத்த
முகில்,Mugil - மேகம் போன்ற
வண்ணனை,Vannanai - நிறத்தை யுடையனுமான எம்பெருமானைக் குறித்து
கடைக் கொண்டு,Kadai Kondu - நைச்சியாநுஸந்தானத்துடன்
கை தொழும்,Kai Thozhum - அஞ்ஜலி பண்ணா நின்றுள்ள
பக்தர்கள்,Bakthargal - பக்தியை யுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள்
இருந்த,Erundha - எழுந்தருளி யிருக்குமிடமான
ஊரில்,Ooril - ஊரிலே
இருக்கும்,Erukkum - நித்ய வாஸம் பண்ணுகிற
மானிடர்,Maanidar - மநுஷ்யர்கள்
ஏதலங்கள்,Eaethalangal - எப்படிப்பட்ட பாவங்களை
செய்தார் கொல் ஓ,Seithaar Kol O - அனுஷ்டித்தார்களோ! (அறியேன்.)
367ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 8
நளிர்ந்த சீலன் நயாசல னபிமான துங்கனை நாடொறும்
தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட செங்கண் மால் திருக்கோட்டியூர்
குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள்
விளைந்த்த தானியமு மிராக்கர் மீது கொள்ள கிலார்களே–4-4-8
நளிர்ந்த சீலன்,Nalirndha Seelan - குளிர்ந்த ஸ்வபாவத்தை யுடையவரும்
நயாசலன்,Nayaasalan - நீதிநெறி தவறாதவரும்
அபிமான துங்கனை,Abimaana Thunganai - இடைவிடாது எம்பெருமானை அநுபவிக்கையாலுண்டான) அஹங்காரத்தால் உயர்ந்தவரும்
நாள் தொறும் தெளிந்த செல்வனை,Naal Thorum Thelintha Selvanai - நாடோறும் தெளிந்து வரா நின்றுள்ள கைங்கர்ய ஸம்பத்தை யுடையவருமான செல்வ நம்பியை
சேவகம் கொண்ட,Sevagam Konda - அடிமை கொண்டவனாய்
செம் கண் மால்,Sem Kan Maal - செந் தாமரைபோன்ற கண்களையுடையவனாய் (அடியார் பக்கல்) மோஹமுடையனாய்
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில்
குளிர்ந்து உறைகின்ற,Kulirndhu Uraiginra - திருவுள்ளமுகந்து எழும் தருளி யிருப்பவனான எம்பெருமானுடைய
கோவிந்தன் குணம் படுவார்,Govindan Gunam Paduvaar - கல்யாண குணங்களைப் பாடுமவரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும்,Ulla Naattinul Vilaindha Thaniyamum - எழுந்தருளி யிருக்கிற நாட்டிலே விளைந்த தாந்யத்தையும்
இராக்கதர்,Raakkathar - ராக்ஷஸர்கள்
மீது கொள்ள கிலார்கள்,Meedhu Kolla Kilaargal - அபஹரிக்க மாட்டார்கள்
368ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 9
கொம்பினார் பொழில் வாய் குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழுங்கழனி யுடைத் திருக் கோட்டியூர்
நம்பனை நர சிங்கனை நவின்றேத்து வார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவரிவரென்று ஆசைகள் தீர்வனே–4-4-9
கொம்பின் ஆர்,Kombin Aar - கிளைகளாலே நெருங்கின
பொழில் வாய்,Pozhil Vaai - சோலைகளிலே
குயில் இனம்,Kuyil Inam - குயில்களின் திரள்
கோவிந்தன்,Govindan - கண்ண பிரானுடைய,
குணம்,Gunam - சீர்மைகளை
பாடு,Paadu - பாடா நிற்கப் பெற்றதும்,
சீர்,Seer - சிறந்த
செம் பொன் ஆர்,Sem Pon Aar - செம் பொன்னாலே சமைந்த
மதிள்,Mathil - மதிள்களாலே
சூழ்,Soozh - சூழப் பட்டதும்
செழு,Sezhu - செழுமை தங்கிய
கழனி உடை,Kazhani Udai - கழனிகளை யுடையதுமான
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்).
நம்பனை,Nambanai - (ரக்ஷகன் என்று) விச்வஸிக்கக் கூடியவனும்
நரசிங்கனை,Narasinganai - நரஹிம்ஹ ரூபியுமான ஸர்வேச்வரனை
நலின்று,Nalindru - அநுஸந்தித்து
ஏத்துவரர்களை,Eaithtuvarargalai - துதிக்கும் பாகவதர்களை
கண்டக்கால்,Kandakkaal - (யான்) ஸேவிக்கப் பெறுவேனாகில்
இவர் இவர்,Ivar Ivar - இந்த இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள்
எம்பிரான் தன்,Empiraan Than - எம்பெருமானுடைய
சின்னங்கள்,Sinnangal - அடையாளமாயிருப்பவர்கள்”
என்று,Endru - என்று அநுஸந்தித்து
ஆசைகள்,Aasaigal - நெடுநாளாய் பிறந்துள்ள ஆசைகளை
தீர்வன்,Theervan - தலைக் கட்டிக் கொள்வேன்.
369ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 10
காசின் வாய்க் கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்களே–4-4-10
காசின் வாய்,Kaasin Vaai - ஒருகாசுக்கு
கரம்,Karam - ஒரு பிடி நெல்
விற்கிலும்,Virkilum - விற்கும்படியான துர்ப்பிக் ஷகாலத்திலும்
சோறு இட்டு,Sooru Ittu - (அதிதிகளுக்கு) அன்னமளித்து
தேச வார்த்தை,Desa Vaarthai - புகழ்ச்சியான வார்த்தைகளை
படைக்கும்,Padaikkum - ஸம்பாதித்துக் கொள்ளுமவரும்
வண் மங்கையினார்கள்,Van Mangaiyinaargal - உதாரமான கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்,Vaazh - வாழுமிடமான
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற)
கேசவா,Kesavaa - கேசவனே!
புருடோத்தமா,Purudhooththamaa - புருஷோத்தமனே!
காவாது,Kaavaadhu - (தமக்குள்ள பொருள்களை ) மறைத்திடாது
மாறு இலி,Maatru Ili - பதில் உபகாரத்தை எதிர் பாராமல்
கிளர் சோதியாய்,Kilar Sothiyaai - மிகுந்த தேஜஸ்ஸை யுடையவனே!
குறளா,Kuralaa - வாமந வேஷம் பூண்ட எம்பெருமானே!
என்று,Endru - என்றிப்படி
பேசுவார்,Pesuvaar - (எம்பெருமான் திரு நாமங்களைப்) பேசுமவரான
அடியார்கள்,Adiyaargal - பாகவதர்கள்
எந்தம்மை,Endhammmai - அடியோங்களை
விற்கவும் பெறுவார்கள்,Virkavum Peruvaargal - (தம் இஷ்டப்படி) விற்றுக் கொள்ளவும் அதிகாரம் பெறுவார்கள்.
370ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 11
சீதநீர் புடை சூழ் செழுங்கழனி யுடைத் திருக் கோட்டியூர்
ஆதியானடியாரையும் அடிமை யின்றித் திரிவாரையும்
கோதில் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல்
ஏதமின்றி உரைப்பவர் இருடீகேசனுக் காளரே–4-4-11
சீதம் நீர்,Seetham Neer - குளிர்ந்த நீராலே
படை சூழ்,Padai Soozh - சுற்றும் சூழப் பெற்ற
செழு,Sezhu - செழுமை தங்கிய
கழனி உடை,Kazhani Udai - கழனிகளை யுடைய
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற)
ஆதியான்,Aadhiyaan - எம்பெருமானுக்கு
அடியாரையும்,Adiyaaraiyum - அடிமை செய்யும் பாகவதர்களையும்
அடிமை இன்றி,Adimai Inri - அடிமை செய்யாமல்
திரிவாரையும்,Thirivaaraiyum - திரிகின்ற பாவிகளையும் குறித்து,
கோதில்,Kothil - குற்றமற்றவரும்
பட்டர் பிரான்,Pattar Piraan - அந்தணர்கட்குத் தலைவரும்
குளிர,Kulira - குளிர்ந்த
புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
மண்,Man - நிர்வாஹருமான
விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார்
சொல்,Sol - அருளிச் செய்த இப் பாசுரங்களை
ஏதும் இன்றி,Eaathum Inri - பழுதில்லாதபடி
உரைப்பவர்,Uraippavar - ஓதுமவர்கள்
இருடீகேசனுக்கு,Irudheekesanukku - எம்பெருமானுக்கு
ஆளர்,Aalar - ஆட் செய்யப் பெறுவர்