திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 5-1 அறிவது (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1348பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன் அறிகையும் அறியாது ஒழிகையும் ஆகிற இவ்வர்த்தம் கிடக்க சர்வ லோகேஸ்வரனாக சர்வருக்கும் சம்பிரதி பன்னன் விசேஷித்து என்னை அடிமை கொண்டவன்–அஸ்மத் ஸ்வாமின்) 1
அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான் குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம் நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப் பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1
பதவுரை Show / Hide
அறிவது அரியான், Arivathu Ariyan - (ஒருவர்க்கும் தம் முயற்சியாலே) அறியக் கூடாதவனும்
அனைத்து உலகும் உடையான், Anaiththu Ulagum Udaiyan - எல்லாவுலகங்கட்கும் ஸ்வாமியானவனும்
என்னை ஆள் உடையான், Ennai Aal Udaiyan - அடியேனை அடிமை கொண்டவனும்
குறிய மாணி உரு ஆய, Kuriya Maani Uru Aaya - வாமநப்ரஹ்மசாரி வேஷங்கொண்டவனும்
கூத்தன் (அவ்வேஷத்தோடு மாவலி வேள்வியில் எழுந்தருளும் போது), Kooththan Avvaeshaththodu Maavali Velviyil Ezhundharulum Podhu - விலக்ஷணமான நடையிட்டு எழுந்தருளினவனுமான பெருமான்
மன்னி அமரும் இடம், Manni Amarum Idam - இடைவிடாது நித்யவாஸம் பண்ணுமிடமாவது;-
சுரும்பு நறிய மலர்மேல் ஆர்க்க, Surumbu Nariya Malarmel Aarkka - ‘சுரும்பு’ என்னுஞ் சாதி வண்டுகள் மணம்மிக்க புஷ்பங்களின் மீது (இருந்து கொண்டு) ரீங்காரம் செய்யப்பெற்றதும்
எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட, Ezhil Aar Manjjnai Nadam Aada - அழகுபொருந்திய மயில்கள் கூத்தாடப் பெற்றதும்
பொறி சிறை கொள் வண்டு இசை பாடும், Pori Sirai Kol Vandu Isai Paadum - வரியையும் சிறகையுமுடைய வண்டினங்கள் இசைபாடப் பெற்றதுமான
புள்ளம் பூதக்குடி, Pullam Poodhakudi - திருப்புள்ளம் பூதக்குடியென்னுந் திருப்பதியாம்.
1349பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆலவாய் உடையான் கேட்க ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று நாம் பிரசித்தமாக சொல்லிப் போருமது இறே கயல் உகளா நின்றதாகில்-புள்ளுக்குத் தேடித் போக வேண்டுகிறது என் -என்ன ஸ்ரீ பிள்ளை -அவ்விடம் அறிந்தது இல்லையோ-பிள்ளைக்கு அன்றோ தேடுகிறது நிலமிதியாலே அவை தான் தூணும் துலாமும் போலே வளர்ந்து இருக்கும் அதில் இதுக்கு சாத்மிக்கும் அவை தேடித் போகா நிற்கும்) 2
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப் பொள்ளைக் கரைத்த போதகத்தின் துன்பம் தவிர்ந்த புனிதன் இடம் பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி யதனுள் போய் புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-2
பதவுரை Show / Hide
கள்ளம் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து, Kallam Kurall Aay Maavaliyai Vanchiththu - கபடமுள்ள வாமந ரூபியாகி மஹாபலியை ஏமாற்றி (- (புள்ளம் பூதங்குடி;–.))
உலகம் கைப்படுத்து, Ulagam Kaipaduthu - ஸகலலோகங்களையும் ஸ்வாதீனப்படுத்திக் கொண்டவனும்
பொள்ளை கரத்த போதகத்தின், Pollai Karathth Podhagatthin - துளைக்கையை யுடைய கஜேந்திரனது
துன்பம் தவிர்த்த, Thunbam Thavirtha - துயரத்தைப் போக்கியருளின
புனிதன், Punithan - பரம பவித்திரனுமான பெருமான் எழுந்தருளியிருக்கின்ற
இடம், Idam - இடமாவது;-
பள்ளம் செறுவில் கயல் உகள, Pallam Seruvil Kayal Ughal - தாழ்ந்திருக்கின்ற கழனிகளில் மீன்களானவை துள்ளித் துள்ளிவிளையாடா நிற்க
புள்ளு, Pullu - பக்ஷரிகளானவை
பழனம் கழனி அதனுள் போய், Pazhanam Kazhani Adhanul Poi - நீர் நிலைகளையுடைய கழனிகளினுள்ளே போய்
பிள்ளைக்கு இரை தேடும், Pillaiyikku Irai Thedum - தம் தம் குட்டிகளுக்கு உணவாகக்கூடிய சிறு மீன்களைத் தேடப்பெற்ற
1350பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராட்டி பக்கலிலும் ஆஸ்ரிதர் பக்கலிலும் ஒக்க வ்யாமோஹம் பண்ணுகிறவன் வர்த்திக்கிற தேசம்) 3
மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம் காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும் பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-3
பதவுரை Show / Hide
மேவா அரக்கர் தென் இலங்கை வேந்தன் வீய, Meva Arakkar Then Ilankai Vendan Veeya - பகையே இயற்கையான ராக்ஷஸர்கள் நிறைந்த தென்னிலங்காபுரிக்கு அரசனான இராவணன் முடியும்படி (- (புள்ளம் பூதங்குடி –.))
சரம் துரந்த, Charam Durandha - அம்புகளைப் பிரயோகித்தவனும்
மா வாய் பிளந்து, Maa Vaai Pilanthu - குதிரை வடிவுடன் வந்த கேசியென்னு மசுரனுடைய வாயைக் கீண்டொழித்தவனும்
மல் அடர்த்து, Mal Adarthu - மல்லர்களை வென்றவனும்
மருதம் சாய்த்த, Marudham Saayththa - இரட்டை மருத மரங்களை முறித்துத் தள்ளினவனுமான
மாலது, Maaladhu - எம்பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாவது;-
கா ஆர் தெங்கின் பழம் வீழ, Kaa Aar Thengin Pazham Veela - தோட்டங்களில் நிறைந்திருக்கிற தென்னை மரங்களினின்றும் தேங்காய்கள் (இற்று) கீழே விழுந்ததனாலே
கயல்கள் பாய, Kayalgal Paaya - மீன்களானவை (அஞ்சி) துள்ளி அப்பால் ஓடப் பெற்றதும்
குருகு இரியும், Kurugu Iridum - நாரைகளானவை சிதறியோடப் பெற்றதும்
பூ ஆர் கழனி எழில் ஆரும், Poo Aar Kazhani Ezhil Aarum - தாமரை முதலிய பூக்கள் நிறைந்த கழனிகளினால் அழகு மிக்கதுமான
1351பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வன்மை மிக்கு திரண்டு இருந்துள்ள தோள்கள் இருபதையும் துணித்த மிடுக்கை உடைத்தான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம்) 4
வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம் கற்பார் புரிசை செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள் பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-4
பதவுரை Show / Hide
வெற்பால் மாரி பழுது ஆக்கி, Verpaal Maari Pazhuthu Aakki - கோவர்த்தன மலையினால் பெருமழையை (தடுத்து) வீணாக்கினவனும் (- (புள்ளம் பூதங்குடி))
விறல் வாள் அரக்கர் தலைவன் தன், Virhal Vaal Arakkar Thalaivan Than - பலிஷ்ட்டனான இராவணனுடைய
வற்பு ஆர் திரள் ஐ நான்கு தோளும் துணித்த, Varpu Aar Thiral Ai Naangu Tholum Thuniththa - திண்மை பொருந்திய திரண்ட இருபது தோள்களையும் அறுத்தொழித்த
வல் வில், Val Vil - வலிய சார்ங்கத்தையுடையவனான
இராமன் இடம், Iraman Idam - இராமபிரான் வாழுமிடமாவது;-
கற்பு ஆர் புரிசை செய் குன்றம், Karpu Aar Purisai Sei Kunram - சிறந்த தேலைப்பாடுகள் பொருந்திய திருமதிள்களாகச் செய்யப்பட்டிருக்கிற மலைகளினாலும்
கவின் ஆர் கூடம், Kavin Aar Koodam - அழகிய க்ருஹங்களினாலும்
மாளிகைகள், Maaligaihal - மாளிகைகளினாலும்
பொற்பு ஆர் மாடம், Porpu Aar Maadam - அழகிய மண்டபங்களினாலும்
எழில் ஆரும், Ezhil Aarum - சோபை பொருந்திய
1352பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் அறியாத தோர் இடம் தேடி வைக்கும் யாய்த்து சாந்துப் பரணியிலே தயிரை வைக்கும் யாய்த்து – ஸ்ரீ நேமி யம் கையனான ஸ்ரீ நாராயணனுக்கு ஒளிக்கப் போமோ பூசும் சாந்து என் நெஞ்சமே -என்னும்படி நெஞ்சுக்கு ஆஸ்ரயமான தம் உடம்பிலே சிநேகத்தையும் போக்யதா புத்தியையும் பண்ணினாலும் அவன் விடாதே தனக்கு ஆக்கிக் கொள்வன் என்னுமது ஸ்புரிக்க -சாந்துப் பரணியிலே -என்கிறார்) 5
மையார் தடங்கண் கருங்கூந்தல் யாய்ச்சி மறைய வைத்த தயிர் நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயனிடம் செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்று அணையும் பொய்யா நாவில் மறை யாளர் புள்ளம் பூதங்குடி தானே –5-1-5
பதவுரை Show / Hide
மை ஆர் தடகண்கரு கூந்தல் ஆய்ச்சி, Mai Ar Thadakankaru Koondhal Aaychchi - மையணிந்த விசாலமான கண்களையுடையவளும் கறுத்த கூந்தலை யுடையவளுமான யசோதைப் பிராட்டி (- (புள்ளம் பூதங்குடி))
மறைய வைத்த தயிர் நெய் ஆர் பால், Marai Vaiththa Thayir Ney Ar Paal - கண் படாதபடி மறைத்து வைத்த தயிரையும் நெய்யையும் குடம் நிறைந்த பாலையும்
அமுது செய்த, Amuthu Seidha - (களவு வழியினால்) அமுது செய்த
நேமி அம் கை மாயன் இடம், Nemi Am Kai Maayan Idam - ஸுதர்சநஹஸ்தனான மாயோன் எழுந்தருளியிருக்குமிடமாவது;-
செம் கால் நாரை, Sem Kaal Naarai - சிவந்த கால்களையுடைய நாரைகள்
செய் ஆர், Sei Ar - கழனிகளில் நிறைந்திருக்கிற
ஆரல், Aaral - ஆரல் மீன்களை
இரை கருதி, Irai Karuthi - ஆஹாரமாகக் கொள்ள நினைத்து
சென்று அணையும், Sendru Anaiyum - (அங்கே) சென்று சேரப்பெற்றதும்
பொய்யா நாவில் மறை ஆளர், Poyyaa Naavil Marai Aalar - பொய்சொல்லி யறியாத நாக்கிலே வேதங்களைத் தாங்குமவரான அந்தணர் வாழப்பெற்றதுமான)
1353பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நப்பின்னை பிராட்டிக்காக கரு மாரி பாய்ந்தும் -குளத்தில் இரண்டு குச்சுகள் நடுவே குதிக்கை – அணைய வேணும் யாய்த்து வடிவு அழகு – மாறாத சினத்தை உடைத்தாய் காட்டு காட்டு என்று வருகிற இளைமையை உடைத்தான ருஷபங்கள் ஏழையும் ஊட்டியாக நெரித்த பரம பிரணயி யானவன் வர்த்திக்கிற தேசம்) 6
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய் மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம் மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-6
பதவுரை Show / Hide
மின்னின் அன்ன நுண் மருங்குல், Minnin Annan Nun Marungul - மின்னலோடு ஒத்த நுட்பமான இடையை யுடையவளும் (- (புள்ளம் பூதங்குடி))
வேய் ஏய் தட தோள், Veiy Aey Thada Thol - மூங்கில் போன்று பருத்த தோள்களை யுடையவளுமான
மெல்லியற்கா, Melliyarkka - இளம்பெண்ணாகிய நப்பின்னைப் பிராட்டிக்காக
அன்று, Andru - முன்பொரு காலத்தில்
மன்னு சினந்த ஏழ் மழ விடைகள், Mannu Sinantha Ezh Mazha Vidaigal - மாறாத கோபத்தையுடைய ஏழு இளங்காளைகளை
அடர்த்த மாலது இடம், Adartha Maalathu Idam - வென்றொழித்த பெருமானுடைய இருப்பிடமாவது;
மன்னு முது நீர், Mannu Muthu Neer - ஒருநாறும் தண்ணீர் வற்றாத ஆழ்ந்த நீர்நிலைகளிலுள்ள
அரவிந்தம் மலர் மேல், Aravindham Malar Mel - தாமரைப் பூக்களிலே
வரி வண்டு இசை பாட, Vari Vandu Isai Paada - வரிவண்டுகள் இசைபாடப் பெற்றதும்,
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும், Punnai Pon Aey Thaathu Uthirkkum - புன்னை மரங்கள் பொன்னிறமான தாதுகளை உதிர்க்கப்பெற்றதுமான
1354பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரதானனான இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்த மாம்படி – பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை ரஷித்து – நாம் இவனைத் தலை அறுக்கல் ஆகாது -என்று இரங்கி தோள்களைக் கழித்து விட்டான் ஆய்த்து ருத்ரன் விட்டுப் போனதாய்த்து இவனுக்கு இரக்கத்துக்கு அடி – மாறாத இவ் வாதிக்யத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம் –பரந்த கழனியில் உண்டான எழில் மிக்கு இருந்த –புள்ளம் பூதங்குடி தானே) 7
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து சடையானோடே வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம் குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7
பதவுரை Show / Hide
விலங்கல் குடை ஆ கொண்டு ஏந்தி, Vilangkal Kudai A Kondu Aendhi - (கோவர்த்தன) மலையைக் குடையாகக் கொண்டு தரித்து (- (புள்ளம் பூதங்குடி))
மாரி பழுது ஆ நிரை காத்து, Maari Pazhuthu A Nirai Kaathu - மழை பழுதாம்படி செய்து பசுக்கூட்டங்களை ரக்ஷரித்தருளினவனும்
சடையான் ஓட, Sadayaan Oda - ருத்ரன் (போரில் முதுகு காட்டி) ஓடினபின்
அடல் வாணன் தட தோள், Adal Vaanan Thada Thol - செருச் செய்யவந்த பாணாஸுரனுடைய விசாலமான புஜங்களை
துணித்த தலைவன் இடம், Thuniththa Thalaivan Idam - அறுத்தெறிந்தவனுமான பெருமானுடைய இருப்பிடமாவது;–
வண்டுகள் குடி ஆ உண்ண, Vandugal Kudi A Unna - வண்டுகளானவை கூட்டங் கூட்டமாக விருந்து உண்ணும்படி
கோலம் நிலம் மட்டு உகுக்கும், Kolam Nilam Mattu Ukukkum - அழகிய நீலமலர்கள் தேனைப் பெருக்காநின்ற
புடை ஆர் கழனி எழில் ஆரும், Pudai Ar Kazhani Ezhil Aarum - நாற்புறமும் சூழ்ந்த கழனிகளினால் அழகு வாய்ந்த
1355பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராஜாக்கள் அடைய முடியும்படி – அர்ஜுனனுக்கு சாரத்தியம் பண்ணி-ஈஸ்வர அபிமானியான ருத்ரன் கையில் ப்ரஹ்மா வினுடைய சாபத்தாலே ஒரு காலும் நிறையாது இருக்கிற தலை யோட்டையைத் தன் திரு மேனியில் ஜல பிந்துவாலே நிறைத்த என் ஸ்ரீ ஸ்வாமி வர்த்திக்கிற தேசம்) 8
கறையார் நெடுவேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைந்த வெந்தை விடம் மறையால் முத்தீயை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் பொறையால் மிக்க வந்தணர் வாழ் புள்ளம் பூதங்குடி தானே –5-1-8
பதவுரை Show / Hide
கரை ஆர் நெடு வேல் மறம் மன்னர் வீய, Karai Ar Nedu Vel Maram Mannar Veeya - ரத்தக்கறை மாறதே பொருந்தியிருக்கிற நீண்ட வேற்படையை யுடையவர்களான (துரியோதனாதி) பகை மன்னவர்கள் ஒழியும்படி (- (புள்ளம் பூதங்குடி,))
விசயன் தேர் கடவி, Vichayan Ther Kadavi - அர்ஜுநனுடைய தேரை நடத்தினவனும்,
இறையான் கையில் நிறையாத முண்டம், Iraiyaan Kaiyil Niraiyaadha Mundam - ருத்ரனுடைய கையில் ஒட்டிக்கொண்டதாய் ஒன்றாலும் நிரம்பாதிருந்த கபாலத்தை
நிறைத்த, Niraiththa - (பிச்சையிட்டு) நிறைத்தவனுமான
எந்தை, Endhai - எம்பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாவது
மறையால், Maraiyaal - வேதங்களாலும்
முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால், Muththi Avai Valarkkum Mannu Pugazhaal - நித்யாக்நிஹோத்ரம் செய்வதனாலுண்டான  நிலைநின்ற கீர்த்தியினாலும்
வண்மையால், Vanmaiyaal - ஔதார்யத்தினாலும்
பொறையால், Poraiyaal - பொறுமையினாலும்
மிக்க, Mikka - மேன்மை பெற்ற
அந்தணர், Andhanar - பிராமணர்கள்
வாழ், Vaazh - வாழப்பெற்ற
1356பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்கைக்கு அநாதிகாரிகளாய் இருக்கவும் கூடும் -என்று திர்யக் வேஷ பரிக்ரஹம் பண்ணினான் ஆய்த்து – ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே – அசூரர்களோடே கலந்து உரு மாய்ந்து போனத்தை பிரிக்கைக்காக நீரையும் பாலையும் பிரிக்கும் பதார்த்தத்தின் வடிவைக் கொண்டான் ஆய்த்து – பிரத்யுபகார நிரபேஷமாகவும்-உபகரித்த சுத்தியும் ஒரு சுத்தியே – சிலர் அபேஷிக்க அன்றிக்கே தன் பேறாக உபகரித்தான் ஆய்த்து) 9
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் இடம் மின்னு சோதி நவ மணியும் வேயின் முத்தும் சாமரையும் பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-9
பதவுரை Show / Hide
மண்ணும் விண்நாடும் தோன்றாது, Mannum Vinnadum Thondrathu - மண்ணுலகமும் விண்ணுலகமும் ஒன்றும் தெரியாதபடி
இருள் ஆய் துன்னி மூடிய நாள், Irul Aay Thunni Moodiya Naal - அந்தகாரமேயாய் நெருங்கி மூடிக்கிடந்த வளவிலே
அன்னம் ஆகி அருமறைகள் அருளிச்செய்த, Annam Aagi Arumaraigal Arulichcheytha - ஹம்ஸரூபியாய் அவதரித்து அருமையான வேதங்களை மீண்டும் வெளிப்படுத்தியருளின
அமலன், Amalan - பவித்திரனான பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாவது
மின்னு சோதி நவமணியும், Minnu Sothi Navamaniyum - விளங்குகின்ற தேஜஸ்ஸையுடைய நவரத்நங்களையும்
வேயின் முத்தும், Veyin Muthum - மூங்கில் முத்துக்களையும்
சாமரையும், Samaraiyum - சாமரங்களையும்
பொன்னும், Ponnum - பொன்களையும்
பொன்னி கொணர்ந்து அலைக்கும், Ponni Konarnthu Alaikkum - காவேரியானது தள்ளிக் கொண்டுவந்து அலையெறியப் பெற்ற  புள்ளம் பூதங்குடி
1357பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ராமோ ராமோ ராம -என்கிற படியே இரண்டு அஷரம் பிணைக்க வல்லார் எங்கும் உண்டு – ஸ்ரீ ஆழ்வாரும் ஒருவரே -என்னா நிற்கும் அத்தனை யாய்த்து – நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே யாய்த்து கொடை இருப்பது – இத் திரு மொழியை உபகரித்தவர் இறே – சொல் தான் ஈரைந்து இவை பாட-இதுக்கு மேற்பட்டது இல்லை இறே ரச்யதைக்கு- இவ்வாத்ம வஸ்துவை சோரக் கொடுக்கும் வினை நில்லாது) 10
கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல் கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10
பதவுரை Show / Hide
கன்று ஆ மறித்து, Kandru Aa Mariththu - கன்றுகளோடு கூடின பசுக்களை மடக்கி மேய்த்தவனும்
காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற, Kaaliyan Than Chennai Nadunga Nadam Payindra - காளிய நாகத்தின் தலையிலே (அந்த நாகம்) நடுங்கும்படி கூத்தாடினவனும்
பொன் தாமரையாள் தன் கேள்வன், Pon Thamaraiyal Than Kelvan - அழகிய தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு வல்லபனுமான பெருமானுடைய
புள்ளம்பூதங்குடி தன் மேல், Pullampoothangudi Than Mel - திருப்புள்ளம் பூதங்குடி விஷயமாக,
கற்றார் பரவும், –, Kattrar Paravum - கற்றவர்களால் கொண்டாடப்படுபவரும்
மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்
கார் ஆர் புயல் கை, Kaar Aar Puyal Kai - காளமேகம்போன்ற உதாரருமான
கலிகன்றி, Kalikanri - கலியனுடைய
சொல் இவை ஈர் ஐந்து பாட, Sol Ivai Eer Aindhu Paada - ஸ்ரீஸூக்தியாகிய இப்பத்துப் பாசுரங்களையும் பாடப்பெற்றால்
துயர் சோர நில்லா, Thuyar Soora Nillaa - துன்பங்கள் (இவ்வாத்மா) சோர்வு அடையும்படி தங்கியிருக்கமாட்டா