திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3161 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (தாய்மார்களே! என்னை நீங்கள் சீறுவது எதற்கு? சீறிப் பயனென்? வேணுமாகில் திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகைச் சீறுங்கோள்! ‘எதற்கு நீ இப்படிப்பட்ட வடிவழகு கொண்டாய்?” என்று நம்பியைச் சீறில் சிறுமந்தனையொழிய என்னைச் சீறுவது முறைமையன்று. நான் ஏதேனும் ஒரு கா புருஷனை கண்டு மோஹித்துப் படுகிறோனோ? அழகுதானே உருக்கொண்ட திருகுருங்குடி நம்பியையன்றோ நான் ஸேவிக்கப் பெற்றது. அப்படி ஸேவிக்கப்பெற்ற க்ஷணமே தொடங்கிச் சங்கும் சக்கரமும் செந்தாமரைக் கண்களும் செங்கனி வாயுமே என் முன்னே தோன்றாநிற்க, நான் அவற்றை வாய் பெவருவாதே பின்னை எதை வாய்பெருவுவேன்? ஆதலால் என்னை நீங்கள் முனிவது முறைமையன்று என்றாளாயிற்று.) 1 | எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1 | பதவுரை Show / Hideஅன்னைமீர்காள்,Annaimeerkaal - தாய்மார்களே! நீர்,Neer - நீங்கள் என்னை முனிவது,Ennai munivathu - என்னை சீறுவது திருக்குறும் குடி நம்பியை,Thirukkurum kudi nambiyai - திருக்குறுங்குடிப் பெருமானை நான் கண்ட பின்,Naan kanda pin - நான் ஸேவிக்கப் பெற்ற பின்பு என் நெஞ்சம்,En nenjam - என் மனமானது சங்கினோடும் நேமினோடும்,Sanginodum neminodum - சங்கு சங்கரங்களோடும் எங்ஙனேயோ,Enganeyo - எப்படிப் பொருந்தும்? எங்கள்,Engal - நாம் அநுபவிப்பதற்குரிய கோலம்,Kolam - அழகிய தாமரை கண்களோடும்,Thaamarai kangalodum - தாமரைபோன்ற திருக்கண்களோடும் செம் கனி வாய் ஒன்றினோடும்,Sem kani vaai ondrinodum - சிவந்த கனிபோன்ற ஒப்பற்றதான அதரத்தோடும் செல்கின்றது,Selginrathu - நடவாநின்றது. (என்னெஞ்சில் இவையே திகழ்கின்றனவென்றபடி.) |
| 3162 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி – அநந்தரம் -நம்பியுடைய ஒப்பனை அழகும் தோளும் சர்வ தேசத்திலும் வந்து நின்று அனுபவ விஷயமாகா நின்றது -என்கிறாள்) 2 | என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2 | பதவுரை Show / Hideஅன்னையீர் கான்,Annaimeer kaan - தாய்மார்களே! என்னை முனியாதே,Ennai muniyathe - என்னை வீணாகச் சீறாமல் என் நெஞ்சினால்,En nenjinaal - எனது நெஞ்சைக் கொண்டு நோக்கி காணீர்,Nokki kaaneer - அநுபவித்துப் பாருங்கோள்; தென் நெல் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்;,Then nel solai thirukkudungudi nambiyai naan kandapin; - தென் நெல் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்; மின்னும் நூலும்,Minnum noolum - பளபளவென்று ஜ்வலிக்கிற பூணூலும். குண்டலமும்,Kundalamum - மகர குண்டலமும் மார்பில்,Maarbil - திருமார்பில் விளங்குகின்ற திருமறுவும்,Thirumaruvum - ஸ்ரீவத்ஸமும் மன்னு பூணும்,Mannu poonum - எப்போது கழற்றாத ஆபரணங்களும் நான்கு தோளும்,Naangu tholum - சதுர்ப்புஜமும் எங்கும்,Engum - நான் போயிடமெங்கும் வந்து நின்றிடும்,Vandhu nindridum - வந்து நிற்கின்றன. |
| 3163 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி - நம்பியுடைய திவ்யாயுத வர்க்கம் உள்ளும் புறமும் ஓக்கத் தோற்றா நின்றது என்கிறாள்.) 3 | நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3 | பதவுரை Show / Hideஅன்னையரும்,Annaiyarum - தாய்மாரான நீங்களும் (என்னைப்பற்றி) நின்றிடும் என்று,Nindridum endru - இப்பெண் ஸ்தப்தையாய் நிற்கின்றாளென்று சொல்லியும் திசைக்கும் என்று,Thisaikkum endru - இப்பெண் அறிவழிந்து கிடக்கிறாளென்று சொல்லியும் நையும் என்று,Naiyum endru - இப்பெண் நைநின்றாளென்று சொல்லியும் முனிதிர்,Munithir - வெறுத்துரைக்கின்றீர்கள்; குன்றம் மாடம்,Kundram maadam - குன்றம்போன்ற மாடங்கணிந்த திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;,Thirukkudungudi nambiyai naan kanda pin-; - திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-; வென்றி வில்லும்,Vendri villum - ஜயசீலமான சார்ங்கமும் தண்டும்,Thandum - லௌமோதகியென்கிற கதையும் வாளும்,Vaalum - நந்தாவாளும் சக்கரமும் சங்கும்,Chakkaramum sangum - திருவாழி திருச்சங்குகளும் நின்று,Nindru - நிரந்தரமாக நின்று கண்ணுள் தோன்றி,Kannul thondri - என் கண்ணுள்ளே காணப்பட்டு நீங்கா,Neengaa - நீங்குகின்றனவில்லை; நெஞ்சுள்ளும்,Nenjullum - நெஞ்சினுள்ளும் நீங்கா,Neengaa - நீங்குகின்றனவில்லை. |
| 3164 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - திருத் தோள் மாலை திருப் பரி வட்டம் முதலானவை எல்லாம் என் பார்ஸ்வத்திலே நின்று என்னை நலியா நின்றன -என்கிறாள்) 4 | நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4 | பதவுரை Show / Hideகண்ண நீர்சன்,Kanna neersan - (இவனது) கண்ணீர்த் துளிகளானவை நீங்க இல்லா என்று,Neenga illaa endru - துடைத்தாலும் நிற்கின்றனவில்லை என்று சொல்லி தண்,Than - குளிர்ந்த மாலை,Maalai - மாலைவடிவமான தண் துழாயும்,Than thuzhaayum - திருத்துழாயும் பொன் முடியும்,Pon mudiyum - திருவபிஷேகமும் வடிவும்,Vadivum - திருமேனியும் அன்னையரும் முனிதிர்,Annaiyarum munithir - தாய்மார்களான நீங்களும் சீறுகின்றீர்கள். பாங்கு தோன்றும்,Paangu thondrum - திருவரைக்குப் பொருத்தமாகக் காணப்படுகிறது பட்டும்,Pattum - பட்டுபீதாம்பரமும் நாணும்,Naanum - திரு நாணும் தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்;,Thenkol solai thirukkudungudi nambiyai naan kanda pin; - தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்; பூ,Poo - அழகிய |
| 3165 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருக்குறுங்குடி நம்பிக்கு கீர்த்தி தகுதியானால் போலே -ஒன்றுக்கு ஓன்று தகுதியாய் இருக்கிற திருப் பவளம் முதலான திரு முகத்தில் அழகுகள் ஆனவை என் உயிர் நிலையில் நலியா நின்றன -என்கிறாள்.) 5 | பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5 | பதவுரை Show / Hideபக்கம் நோக்கி நிற்கும் என்ற,Pakkam nokki nirkum endra - ‘(இவள்) அவன் எந்த பக்கமாக வருகின்றானென்று எதிர்பார்த்திருக்கிறானென்றும், நையும் என்று,Naiyum endru - (வாக்காணாமையாலே) நைகின்றான் என்றும் சொல்லி அன்னையரும்,Annaiyarum - தாய்மாரான நீங்களும் நீண்ட புருவங்களும்,Neenda puruvangalum - நீண்டிருக்கின்ற புருவங்களும் தக்க,Thakka - தகுதியான தாமரைக்கண்ணும்,Thaamaraikannum - தாமரை போன்ற திருக்கண்களும் முனிதிர்,Munithir - முனிந்து பேசுகின்றீர்கள் தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;,Thakka keerthith thirukkudungudi nambiyai naan kandapin-; - தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-; தொக்க,Thokka - ஒன்றாகத்திரண்ட சோதி,Sothi - சோதியையுடைய தொண்டை வாயும்,Thondai vaayum - கொல்லைக்கனிபோன்ற அதரமும் பாவியேன்,Paaviyaan - பாவியாகிய என்னுடைய ஆவியின் மேலான,Aaviin melaana - உயிர்நிலையிலே நின்று கலியா நின்றன |
| 3166 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் திரு முக சோபையோடே கூடின ரூப தேஜஸ் வைலக்ஷண்யம் என் நெஞ்சிலே பூர்ணமாயிற்று என்கிறாள் .) 6 | மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6 | பதவுரை Show / Hideஇவன்,Ivan - இப்பெண்பிள்ளை நம் குலக்கு,Nam kulakku - நமது ப்ரபர்ரஸத்தானத்திற்கு மேலும்,Melum - காலமுள்ளதனையும் வன் பழி என்று,Van pazi endru - பெருத்த பழியாயிருப்பவன்’ என்று சொல்லி அன்னை,Annai - தாயானவள் காணகொடான்,Kaanakodaan - நான் நம்பியை ஸேவிக்கவொண்ணாதபடி நடை நின்றாள். சோலை சூழ் தன் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;,Solai soozh than thirukkudungudi nambiyai naan kanda pin-; - சோலை சூழ் தன் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-; கோலம்,Kolam - அழகியதாய் நின்,Nin - நீண்டதான கொடி மூக்கும்,Kodi mookkum - கற்பகக் கொடிபோன்ற திருமூக்கும் தாமரை கண்ணும்,Thaamaraikannum - தாமரைபோன்ற திருக்கண்களும் கனி வரவும்,Kani varavum - பழுத்த பழம் போன்ற அதரமும் நீலம் மேனியும்,Neelam maaniyum - நீல நிறத்ததான திருமேனியும் நான்கு தோளும்,Naangu tholum - நான்கு திருத்தோள்களும் என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சிலே நிறைந்தன,Nirainthana - நிரம்பியிருக்கின்றன. |
| 3167 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நம்பியுடைய திருமேனி அழகு வெள்ளம் என்னுடைய நெஞ்சில் வேர் விழுந்தது என்கிறாள்.) 7 | நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7 | பதவுரை Show / Hideஇவள் என் குடிக்கு,Ival en kudikku - ‘இப்பெண்பிள்ளை நம்முடைய ப்ரபந்த ஸந்தானத்திற்கு சிதைந்த நல்வழி என்று,Sithaintha nalvazhi endru - நிலைத்துநிற்கக் கூடிய கொடிய பழியாயிருப்பவள் என்று சொல்லி அன்னை,Annai - தாயானவள் காண கொடான்,Kaana kodaan - நம்பியை ஸேவிக்க வொட்டுகிறதில்லை சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;,Sirandha keerthith thirukkudungudi nambiyai naan kanda pin-; - சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-; நிறைந்த,Niraindha - பரிபூர்ணமான சோதி வெள்ளம் சூழ்ந்த,Sothi vellam soozhndha - தேஜஸ்ஸமூஹத்தாலே சூழப்பட்டு நீண்ட,Neenda - உத்துங்கமான பொன்மேனியோடும்,Pon maaniyodum - திருமேணியோடுகூட என் உள்ளே,En ullae - எனது நெஞ்சுக்குள்ளே நிறைந்து நின்று ஒழிந்தான்,Niraindhu nindru ozhindhaan - வியாபித்து நின்று விட்டான்; நேமி,Nemi - திருவாழியும் அம் கை,Am kai - அழகிய திருக்கையிலே உனது,Unadhu - உள்ளதாயிருக்கின்றது. |
| 3168 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அழகிய குழல் தாழ்ந்த தோள்களோடே கூடின மற்றும் உண்டான திவ்ய அவயவங்களிலே அழகுகள் என் முன்னே நின்று நலியா நின்றன என்கிறாள் ) 8 | கை யுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8 | பதவுரை Show / Hideநல் முகம் கையுள் வைக்கும் என்று,Nal mugam kaiyul vaikkum endru - (இப்பெண் பிள்ளையானவள்) அழகிய முகத்தைக் கையிலே இட்டு வைக்கின்றாள்’ என்றும் நையும் என்று,Naiyum endru - நைகின்றாள் என்றும் சொல்லி. அல்குலும்,Algulum - கடிப்ரதேசமும் சிறு இடையும்,Siru idaiyum - சிறுசிறு இடையும் வடிவும்,Vadivum - திருமேனியும் மொய்ய நின் சூழல்தாழ்ந்த தோள்களும்,Moyya nin soozhal thaazhndha tholgulum - செறிந்து நீண்ட நேச பாசங்கள் தாழ்ந்துவரப்பெற்ற திருத்தோள்களும் அன்னையரும்,Annaiyarum - தாய்மாரான நீங்களும் முனிதிர் கை கொள்,Munithir kai kol - சீறிப் பொடிகின்றீர்கள்; மை கோள் மாடத் திருக்குறங்குடி நம்பியை நான் கண்ட பின்-;,Mai kol maadat thirukkudungudi nambiyai naan kanda pin-; - மை கோள் மாடத் திருக்குறங்குடி நம்பியை நான் கண்ட பின்-; செய்ய தாமரை கண்ணும்,Seyya thaamarai kannum - செந்தாமரை போன்ற திருக்கண்களும் பாலியேன் முன் நிற்கும்,Paaliyaen mun nirkum - பாவியான என்னுடைய கண்முன்னே புலப்படா நின்றன. |
| 3169 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அழகு எல்லாவற்றோடும் கூட நம்பி வந்து என் நெஞ்சிலே புகுந்து எனக்கு மறக்க ஒண்ணாத படி ஒரு க்ஷணமும் என் நெஞ்சை விட்டு போகிறிலன் என்கிறாள்.) 9 | முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9 | பதவுரை Show / Hideமுன் நின்றாய் என்று,Mun nindraai endru - (சிறுக்கியான நீ) பலர் காணவந்து நிற்கின்றாய்? என்று என்னை நோக்கிச் சொல்லி தோழியர்களும் அன்னையரும்,Thoziyaragalum annaiyarum - தோழியர்களும் தாய்மார்களுமான நீங்கள் முனிதிர்,Munithir - கண்டிக்கின்றீர்கள் மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;,Mannu maada thirukkudungudi nambiyai naan kanda pin-; - மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-; சென்னி,Senni - திருமுடியிலே நீள்,Neel - நீண்டு தோன்றுகிற முடி ஆதி ஆய,Mudi aadhi aaya - திருவபிக்ஷேகம் முதலாகவுள்ள உவம்பு இல்,Uvampu il - எண்ணிறந்த அணி கலத்தன்,Ani kalathaan - சேர்த்தியழகு போருந்திய திருவாபரணங்களையுடைய அப்பெருமான் கன்னல்பால் அமுது ஆகி வந்து,Kannalpaal amuthu aagi vandhu - கண்ணனும் பாலும் அமுதமும் போலே பரம யோக்யனாய்வந்து என் நெஞ்சம் சுழியான்,En nenjam suzhiyaan - எனது நெஞ்சை விட்டுப் பேர்கின்றிலன் |
| 3170 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நம்பியுடைய திருமேனி என் நெஞ்சில் பிரகாசிக்கிற படி ஒருவருக்கும் கோசாரம் அன்று என்கிறாள்.) 10 | கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10 | பதவுரை Show / Hideஇவள்,Ival - இப்பெண்பிள்ளை கழிய மிக்கது ஓர் காதலன் என்று,Kazhiya mikkaadhu or kaadhalan endru - மிகவும் அதிசயித்த விலஷணமான காதலையுடையவள் என்று சொல்லி அன்னை,Annai - தாயானவள் காண கொடான்,Kaana kodaan - நம்பியை ஸேவிக்க வொட்டுகிறதில்லை ஏழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;,Ezh il keerthith thirukkudungudi nambiyai naan kanda pin-; - ஏழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-; தேவர் குழாங்கள்,Devar kuzhaangal - நித்ய ஸூரிகளின் திரள்கள் குழுவி,Kuzhuvu - நெருங்கி கை தொழ,Kai thozha - ஸேவிக்கும்படி சோதிவெள்ளத்தின் உள்ளே,Sothi vellathin ullae - தேஜஸ்ஸமுஹத்தினிடையிலே எழுவது,Ezhuvadhu - எழுகின்ற ஓர் உரு,Or uru - விலக்ஷணமான விக்ரஹமானது என் நெஞ்சுள் எழும்,En nenjul ezhum - எனது நெஞ்சுக்குள்ளே பிரகாசிக்கின்றது; (அது) ஆர்க்கும்,Aarkkum - எப்படிப்பட்டவர்கட்கும் அறிவு அரிது,Arivu aridhu - அறியமுடியாததேயாகும். |
| 3171 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யசித்தவர்களுக்கு பகவச் சேஷத்வம் ஆகிற ஸ்வரூப லாபம் பலமாக அருளிச் செய்கிறார்.) 11 | அறி வரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே.–5-5-11 | பதவுரை Show / Hideஅறிவு துரிய பிரானை,Arivu thuriya piranai - ஒருவர்க்குமறிய வொண்ணாக ஸ்வாமியாயும் ஆழி அம் கை யணையே,Aazhi am kai yanaiye - திருவாழியை அழகிய திருக்கையிலே உடையவனாயுமிருக்கிற எம்பெருமானையே அலற்றி,Alattri - வாய்வெருவி ஈறிய,Eeriya - பரிமளம் மிக்க நல் மலர் நாடி,Nal malar naadi - நல்ல பூக்களை நாடுபவரான நன் குருகூர் சடகோபன் சொன்ன-;,Nan kurukoor Sadagopan sonna-; - நன் குருகூர் சடகோபன் சொன்ன-; ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களுள் திருக் குறுங்குடி அதன் மேல்,Thiru kudungudi adhan mel - திருக்குறுங்குடி விஷயமாகப்பேசினதாய் குறி கொள்,Kuri kol - எம்பெருமானுடைய திவ்யாவயவ திவ்யாயுத திவ்யாபரணலாஞ்சனம்களை யுடையதான இவைபத்தும்,Ivaipaththum - இத்திருவாய்மொழியை அறிய,Ariya - பொருளும் தெரியும்படி கற்று,Katru - ஓதி வல்லார்,Vallar - தேறினவர்கள் ஆழ் கடல்,Azh kadal - ஆழ்ந்த கடல் சூழ்ந்த இந்நிலத்துள் வைட்டணவர்,Vaittanavar - சிறந்த ஸ்ரீஐவஷ்ணவர்களாகக் கொண்டாடப்படுவர்கள். |