திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1388 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெருமாள் உடைய இங்குத்தை வரவாறே பிடித்து ஆற்றாமைக்கு உடலாம்படி காணும் பிறந்த ப்ராவண்ய அதிசயம் – ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் -அன்று நேர்ந்த நிசாசரரை -என்று ராவண வதம் தொடங்கி ஸ்ரீ பெருமாளை அடி ஒத்தினார் –அது தெற்கு திரு வாசலாலே புகுந்து கிடந்தது – மந்தி பாய் -என்று ஸ்ரீ பரம பதமே தொடங்கி அடி ஒத்தினார் –ஸ்ரீ திரு மலையிலே புகுந்து கிடந்தது அங்கே பார்த்த வாறே நின்ற படியைக் கண்டார் – இன்னமும் போக்கிலே ஒருப்பாடு தோற்றி இருந்தது என்று அவ்விடமே தொடங்கி அடி ஒத்தினவாறே வடக்குத் திரு வாசலாலே புகுந்து படுக்கை இங்கேயாய் இருந்தது -என்று ஸ்ரீ பட்டர் ஸ்ரீ அமலனாதி பிரான் அருளிச் செய்யா நிற்க நான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார்) 1 | வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே –5-5-1 | பதவுரை Show / Hideவெருவாதாள், Veruvaathaal - அஞ்சாதவளாய்க் கொண்டு (- (என் பெண் பிள்ளையானவள்) (வேங்கடமே வேங்கடமே என்கின்றாள்–;)) வாய் வெருவி, Vaai Veruvi - வாய்பிதற்றுகின்றவளாய் என்குடங்கால் மருவாள், Enkudankaal Maruvaal - எனதுமடியில் பொருந்து கின்றிலள்; வாள் நெடு கண் துயில் மறந்தாள், Vaal Nedu Kan Thuyil Marandhaal - வாள்போன்று நீண்ட கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்; வண்டு, Vandu - வண்டுபோலவும் ஆர் கொண்டல், Aar Kondaal - பூர்ண மேகம்போலவும் உரு ஆளன், Uru Aalan - திருவுருவமுடையவனும் வானவர் தம் உயிர் ஆளன், Vaanavar Tham Uyir Aalan - நித்யஸூரிகளுக்கு உயிராயிருப்பவனும் ஒலி திரை நீர், Oli Thirai Neer - கோஷிக்கின்ற அலைநீர் பௌவம் கொண்ட திரு ஆளன், Pauvam Konda Thiru Aalan - பொருந்திய கடலில் நின்றும் கொள்ளப்பட்ட பிராட்டியை ஆள்பவனமான எம்பெருமான் என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - எனது பெண்பிள்ளை திறத்துச்செய்தவகைகளை நான் எங்ஙனம் சிந்திக்கேன், Naan Engnganam Sindhikkeen - நான் நினைக்கத்தான் முடியுமோ? |
| 1389 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து – தன் சௌலப்யத்தைக் காட்டி விலையாளா யடியேனை வேண்டுதியோ -என்று இவளை இட்டு சொல்லுவித்துக் கொள்ளுகைகாக திரு மெய்யத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் -பின்னானார் வணங்கும் சோதியில் போலே – யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவ -என்கிறபடியே முற்பாடரான சூரிகளுக்கும் அவ்வருகாய் இருந்து வைத்து இவ்வருகு உண்டான பிற்பாடருக்கும் உதவுகைக்காக இறே இங்கு வந்ததும் – தானே ரஷகன் என்று இருக்கும் இவளை வாய் விட்டுக் கூப்பிடும்படி பண்ணினானே- நமக்கு ஓன்று செய்யப் பிராப்தி உண்டோ -என்று இருக்கிறாள் இவள் பெறுவது அவனை யானால் இருந்த இடத்தே இருக்கப் போமோ -என்று இருக்கிறாள் மகள்) 2 | கலையாளா வகலல்குல் கனவளையும் கை யாளா என் செய்கேன் நான்
விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்னும் மெய்ய
மலையாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் ஏழு எய்த வென்றிச்
சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே –5-5-2 | பதவுரை Show / Hideஅகல் அல்குல் கலை ஆளா, Akal Alkul Kalai Aalaa - அகன்ற நிதம்பமானது வஸ்த்ரத்தை தரிக்கின்றதில்லை; (- (என் மகளை செய்தனகள் எங்ஙனம்) (நான் சிந்திக்கேன்)) கை கனம் வளையும் ஆளா, Kai Kanam Valaiyum Aalaa - கைகளானவை பொன் வளைகளை ஆள்கின்றனவில்லை; நான் என் செய்கேன், Naan En Seigkeen - (இதற்கு) நான் என்ன பண்ணுவேன்? அடியேன், Adiyen - “அடியவளாகிய என்னை விலை ஆள் ஆ, Vilai Aal Aa - பிறர்க்கு விற்கவும் உரிய வேலைக்காரியாக (க் கொள்ள) வேண்டுதியோ, Vendudiyoo - திருவுள்ளம் பற்றுவாயோ? வேண்டாயோ, Vendaayo - மாட்டாயோ?” என்னும், Ennum - என்கிறாள்; மெய்யம் மலை ஆளன், Meyyam Malai Aalan - திருமெய்யமலையை இருப்பிடமாக வுடையவனும் வானவர் தம் தலையாளன், Vaanavar Tham Thalaiyalan - நித்யஸூரிகளுக்குத் தலைவனாயிருப்பவனும் ஏழ் மாமரம் எய்த வென்றி சிலை ஆளன், Ezhu Maamaram Eytha Vendri Silai Aalan - ஸப்தஸாலவ்ருக்ஷங்களைத் துளைத்த ஜயசீலமான அம்மை உடையவனமான பெருமான் |
| 1390 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சக்கரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெற வேணும் என்று ஒரு நோன்பு நோற்று பெற்றால் போலே கவ்யங்கள் பாழ் போக ஒண்ணாது-இவற்றை புஜிப்பான் ஒரு பிள்ளை வேணும் என்று இதுக்கு அன்றோ இவனைப் பெற்றது ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை) 3 | மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே –5-5-3 | பதவுரை Show / Hideமான் ஆய மென் நோக்கி, Maan Aaya Men Nookki - மானின் நோக்குப் போன்ற அழகிய நோக்கை உடையளான என் மகள், (- (அம்மனைமீர் அறிகிலேன்–.)) வாள் நெடு கண் நீர் மல்கும், Vaal Nedu Kan Neer Malkum - ஒளி பொருந்திய நீண்ட கண்கள் நீர் நிரம்பப் பெற்றிருக்கின்றாள்; வளையும், Valaiyum - (இவளது) வளைகளும் சோரும், Soorum - (கையில் நின்று) நழுவாநின்றன; தேனாய, Thennaay - தேனைக்கொண்ட நறு துழாய், Naru Thuzhai - மணம்மிக்க திருத்துழாயினாலாகிய அலங்கலின், Alankalin - மாலையினுடைய திறம், Thiram - பரிசுகளை பேசி, Paesi - சொல்லிக்கொண்டு உறங்காள், Urangaal - உறக்கமற்றிருக்கின்றாள்; காண்மின், Kaanmin - (இந்நிலைமையைக்) கண் கொண்டுபாருங்கள்; கான் ஆயன், Kaan Aayan - காட்டிலே திரியுமவனும் கடி மனையீல், Kadi Manaiyil - காவலுள்ள வீடுகளிலும் தயிர் உண்டு, Thayir Undu - தயிரை உட்கொண்டு நெய் பருக, Ney Paruga - நெய்யைக் குடிக்கும்படியாக நந்தன் பெற்ற, Nandhan Pettra - நந்தகோபர் பெற்ற ஆன் ஆயன், Aan Aayan - கோபாலக்ருஷ்ணனுமான பெருமான் என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - என் பெண்பிள்ளையைப் பண்ணின படிகளை |
| 1391 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாயையும் அல்லாதாரையும் ஒக்க அபேஷிக்கும் படி நிருபாதிக பந்துவான தன் பக்கலிலே பாவ பந்தத்தை பிறப்பிக்கிறவன் வர்த்திக்கிற தேசம் எங்கே -என்னா நின்றாள் ஸ்வாமித்வம் இவை போலே ஔபாதிகம் அல்ல இறே எம்பெருமான் -என்னைத் தோற்பித்தவன் என்றே காணும் அவனை அறிவது இது இறே நமஸ் சப்தார்த்தம்) 4 | தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கை
யே யாரச் சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
பேய் மாய முலை உண்டு இவ்வுலகுண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே –5-5-4 | பதவுரை Show / Hideதாய் வாயில் சொல் கேளாள், Thaai Vaayil Sol Kelaal - தாயாகிய என்னுடைய வாய்ச் சொல்லை (என்மகள்) கேட்பதில்லை; (- (நங்காய்!, மங்கைமீர்!-;)) தன் ஆயத்தோடு அணையாள், Than Aayaththodu Anaiyaal - தனது தோழிமார்களுடன் கூடுவதில்லை; தட மென் கொங்கையே ஆர சாந்து அணியாள், Thada Men Kongaiye Aara Santhu Anaiyaal - பருத்து மெல்லிதான (தனது) முலைகளையும் அழகாக சந்தனத்தினால் (முன்பு போல) அலங்கரிக்கின்றாளில்லை எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும், Emperumaan Thiru Arangam Engae Ennum - ‘என் ஸ்வாமி யெழுந்தருளியிருக்கிற திருவரங்கம் எங்கே?’ என்கிறாள்; பேய் மாய முலை உண்டு, Pei Maaya Mulai Undu - பேய்ச்சியான பூதனை முடியும் படியாக (அவளது) முலைப் பாலைப் பருகி இ உலகு உண்ட பெருவயிற்றன், I Ulaku Unda Peruvayitran - இவ்வுலகங்களையும் அமுது செய்த பெரிய திருவயிற்றையுடையனான மா மாயன், Maa Maayan - மிகக் ஆச்சர்ய பூதன் என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - என் பெண்பிள்ளைக்குச் செய்தவற்றை பேசில், Pesil - சொல்லப்புகுந்தால் மதிக்கிலேன், Mathikkilaen - அளவிட்டுச் சொல்ல மாட்டுகின்றிலேன். |
| 1392 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ தம்மை வ்யபதேசிப்பது நாம் அறிய -இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ-இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ நம்பி- பெண்களுக்கு கையாளாய்-அத்தாலே தன்னைப் பூர்ணனாக நினைத்து இருக்குமவன் அன்றோ) 5 | பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-5 | பதவுரை Show / Hideபூண் முலை மேல் சாந்து அணியாள், Poon Mulai Mel Santhu Anaiyaal - ஆபரணங்கள் அணிந்த முலையின்மேல் சந்தனத்தை பூசுகின்றாளில்லை; (- (என் மகளை செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேன்)) பொரு கயல் கண் மை எழுதாள், Poru Kayal Kan Mai Ezhudhaal - ஒன்றோடொன்று சண்டை செய்யுமிரண்டு மீன்கள் போன்றுள்ள கண்களிலே மையிட்டுக் கொள்ளுகிறாளில்லை; பூவை பேணாள், Poovai Peenaal - (தான் வளர்த்துக் கொண்டிருந்த) பூவைப் பட்சியையும் ஆதரிக்கின்றாளில்லை; எத்தனையும் ஏண் அறியாள், Ethanaiyum Aen Ariyaal - எந்த வஸ்துவையும் நெஞ்சினால் நினைக்கின்றாளில்லை; எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும், Emperumaan Thiru Arangam Engae Ennum - ‘என் ஸ்வாமியின் திருவரங்கம் எங்கே?’ என்பதொரு வார்த்தையையே சொல்லிக் கொண்டிருக்கிறாள்; நாள் மலராள் நாயகன் ஆய், Naal Malaraal Naayagan Aay - செவ்வித்தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு வல்லபனானவனும் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி, Naam Ariya Aayppaadi Valarntha Nambi - நமக்கெல்லாம் தெரியும்படியாகத் திருவாய்ப்பாடியில் வளர்ந்தவனுமான பெருமான் ஆண் மகன் ஆய், Aan Magan Aay - பெரிய ஆண்பிள்ளையாய்க் கொண்டு |
| 1393 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தனை அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது காண்-இது குடிப் பிறப்புக்கு போராது காண் இது தர்மி லோபத்தைப் பலிப்பிக்கும் காண் அவன் ஸ்த்ரரைணன் காண் -என்று ஒரு ஹித வசனம் பண்ணினால் அதுக்கு உத்தரமாக என்னை அனந்யார்ஹை ஆக்கினவன் வர்த்திக்கிற தேசம் என்னா நின்றாள்) 6 | தாதாடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாதாளன் குடமாடி மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே –5-5-6 | பதவுரை Show / Hideதாது ஆடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள், Thaadhu Aadu Vanamaalai Thaarano Enru Enru Thalarndhaal - ‘தாதுக்கள் நிரம்பிய வனமாலையை எனக்குத் தந்தருளமாட்டானோ?’ என்று பலகால் சொல்லி சோர்வடைந்தாள்; (- (என் மகளை செய்தனகள் நான் எங்ஙனம் சொல்லுகேன்?)) யாதாலும் ஒன்று உரைக்கில், Yaadhalum Ondru Uraikkil - (அவளுக்கு அடக்கமுண்டாகும்படி நாம்) ஏதாவதொரு வார்த்தை சொன்னால் (அதற்கு மறுமொழியாக) எம்பெருமான் திரு அரங்கம் என்னும், Emperumaan Thiru Arangam Ennum - ‘எம்பெருமான் திருவரங்கம்’ என்கிற வார்த்தையொன்றே சொல்லுகின்றாள்; பூ மேல் மாது ஆளன், Poo Mael Maathu Aalan - பூவிற்பிறந்த பிராட்டிக்கு வல்லபனும் குடம் ஆடி, Kudam Aadi - குடக்கூத்தாடினவனும் மதுசூதன், Madhusoodhan - மதுவென்னமசுரனைக் கொன்றவனும் முன்னம் மன்னர்க்கு ஆய் தூது சென்ற ஆளன், Munnam Mannarkku Aay Thoodhu Sentra Aalan - முன்பொருகால் பஞ்சபாண்டவர்களுக்காக தூது நடந்தவனுமான ஸ்வாமி |
| 1394 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ விஷயத்திலும் இதர விஷயத்திலும் விரக்தியும் பகவத் விஷயத்தில் ப்ரீதியும் மாறாதே செல்லும்படியாய் இருப்பாள் ஒரு பெண் பிள்ளையை என்னைப் போலே புறம்பு பெற்றார் உண்டோ – அப்போது பீஷ்மாதிகள் அம்புக்கு தன்னை இலக்கு ஆக்கினால் போலே இப்போது தனக்காக இவளை காம ரசத்துக்கு இலக்கு ஆக்குகிறான் இப்போது இவளை அழிவுக்கு இட்ட படி என்னாலே பேசப் போமோ -என்கிறாள்) 7 | வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின வாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் தேர் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –5-5-7 | பதவுரை Show / Hideவார்ஆளும் இள கொங்கை, Vaar Aalam Il Kogai - கச்சையிட்டுக் கட்டி ஆளக்கடவதான (தனது) இள முலைகள் (- (என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேன்)) வண்ணம் வேறு ஆயின ஆறு எண்ணாள்;, Vannam Veeru Aayin Aaru Ennaal - நிறம் வேறுபட்ட விதத்தை நினைக்கின்றாளில்லை எண்ணில், Ennil - ஏதேனுமொன்றை எண்ணப்புகுந்தால் பேராளன் பேர் அல்லால் பேசாள், Peraalan Per Allaal Pesaal - ஸர்வேச்வரனது திருநாமங்களைத் தவிர வேறொன்றையும் பேசுகிறாளில்லை; இ பெண் பெற்றேன் நான், I Pen Petraen Naan - இப்படிப்பட்ட பெண்ணைப் பெற்றேன் நான் என் செய்கேன், En Seigken - என்ன பண்ணுவேன்?; தார் ஆளன், Thaar Aalan - திருமாலை சாத்திக்கொண்டிருப்பவனும் தண் குடந்தை நகர் ஆளன், Than Kudandhai Nagar Aalan - குளிர்ந்த திருக்குடந்தை நகரை ஆள்பவனும் ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக அமரில், Amaril - (பாரதப்) போரில் உய்த்த தேராளன், Uytta Theraalan - நடத்தப்பட்ட தேரையுடையனுமான பெருமான் |
| 1395 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கலக்கிற இடத்தில் தாழ நின்று பரிமாறின படியையும்-அதுக்கடியான சீலத்தையும் கலந்த போதை பரிமாற்றத்தின் வகைகளையும் – இதில் ஸ்ரோத்ரியன் ஆகைக்கு வ்யுத்புத்தி பண்ணின இடத்தையும் சொல்லா நிற்கும் –ஆஸ்ரித விஷயத்தில் வ்யாமோஹாதிசயத்தை உடையவன்-பெரியோன் என்றபடி – பிறவியை அறுப்பதான திரு நாமத்தை உடையவன் துக்க நிவர்தகமான திரு நாமங்கள் கிடீர் இவளுக்கு துக்கத்தை பண்ணுகிறது) 8 | உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-8 | பதவுரை Show / Hideஉறவு ஆதும் இவள் என்று என்று, Uravum Aadhum Ival Endru Endru - ‘தாய் தந்தையர் என்கிற உறவு முறைகளைச் சிறிதும் உடையளல்லள்’ என்று பலகால் சொல்லி (- (இப்பெண்பிள்ளையோ வென்னில்) (மாயவனே! மாதவனே! என்கின்றாள்;) (என் மகளை செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேன்)) பலர் ஒழியாது ஏசும் அலர் ஆயிற்று, Palar Ozhiyadhu Aesum Alar Aayitru - பலபேர்கள் எப்போதும் குறைகூறும்படியான பழி விளைந்திட்டது; மறவாதே எப்பொழுதும், Maravadhe Eppozhudhum - மறவாமல் ஸர்வகாலமும் பிறவாத பேராளன், Piravatha Peraalan - கருமங்காரணமான பிறப்பையுடையனாகாத பெருமை பொருந்தியவனும் பெண் ஆளன், Pen Aalan - பெண் பிறந்தாரைத் தனக்காகவுடையவனும் மண் ஆளன், Man Aalank - மண்ணுலகத்தவர்களை ஆள்பவனும் விண்ணோர் தங்கள் அறவாளன், Vinnor Thangal Aravaalan - நித்யஸூரிகளுக்குப் பரமதார்மிகனாயிருப்பவனுமான பெருமான் |
| 1396 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால்-இதுக்கு மேல் எனனால் போக்கடி தேடப் போமோ இவள் தன் திறத்து படாது இருக்க தானே வந்து இப்படி பண்ணி-தானே உபேஷிப்பதே முன் தீமை செய்வானும் தானேயாய்-உபேஷிப்பானும் தானே யாவதே) 9 | பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-9 | பதவுரை Show / Hideபந்தோடு கழல் மருவாள், Pandhodu Kazhal Maruvaal - பந்தையும் கழற்காய்களையும் தொடுகிறதுமில்லை; (- (என் மகள்) (என் மகளை செய்தனகள் அம்மனைமீர்! அறிகிலேன், அந்தோ!)) பை கிளியும் பால் ஊட்டாள், Pai Kiliyum Paal Oottal - (தனது) பசுமை தங்கிய கிளிக்குப் பாலூட்டுகிறதுமில்லை; பாவை பேணாள், Paavai Paenaal - (விளையாட்டுக் கருவியான) மரப்பாச்சியை நோக்குவதுமில்லை; திருஅரங்கன், Thiruarangan - “ஸ்ரீரங்கநாதன் வந்தானோ வாரானோ என்று என்றே, Vandaano Varaanoo Endru Endrae - வந்து விட்டானோ? என்றும் வரமாட்டானோ?” என்றும் சொல்லிக்கொண்டு வளையும் சோரும், Valaiyum Soorum - கைவளைகள் கழல நிற்கின்றாள் சந்தோகன், Sandhogan - சாந்தோக்ய உபநிஷத்தினால் ப்ரதிபாத்யனும் பௌழியன், Pauzhiyan - கௌஷீதகீப்ராஹ்மணத்தினால் ப்ரதிபாத்யனும் ஐந்து அழல் ஓம்பு, Ainthu Azhai Oombu - பஞ்சாக்நிகளினால் ஆராதிக்கப் படுபவனும் தைத்திரியன், Thaitthiriyan - தைத்திரிய உபநிஷத்தினால் பிரதிபாதிக்கப் படுபவனும் சாமவேதி, Saamavethi - ஸாமவேதப்ரதிபாத்யனுமான பெருமான் வந்து, Vandhu - இவ்விடம் வந்து |
| 1397 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதன் பொருளை ஆசார்யர்களோடே கற்று அறியுமவர்கள்-தனி முத்துக் குடைக் கீழே இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து ஸ்ரீ பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்) 10 | சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார்
கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே –5-5-10 | பதவுரை Show / Hideசேல் உகளும் வயல் புடை சூழ் திருஅரங்கத்து அம்மானை, Sel Uhalum Vayal Pudai Soozh Thiruarangathu Ammaanai - மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற கழனிகளினால் சுற்றும் சூழப்பட்ட திருவரங்கத்திலுள்ள எம்பெருமானை (- (இஹலோக ஐச்வர்யங்களையநுபவித்துப் பின்பு)) சிந்தை செய்த, Sindhai Seitha - தியானித்துக் கொண்டிருக்கின்ற நீலம் மலர் கண்மடவான் நிறை அழிவை, Neelam Malar Kanmadavaan Nirai Azhivai - கருநெய்தல் போன்ற கண்களை யுடையனான பரகால நாயகியினது அடக்கம் அழிந்தமையைக் குறித்து தாய் மொழிந்த அதனை, Thaai Mozhintha Adhanai - தாய்பேசின பாசுரமாக, நேரார் சாலன், Neraar Saalan - பகைவர்க்கு யமன் போன்ற வரும் வேல், Veel - வேற்படையையுடையரும் பரகாலன், Parakalan - பரகாலனென்ற திருநாமமுடையவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Malai - இச் சொல்மாலையை கற்று வல்லார் தாம், Kattru Vallar Thaam - ஓதி உணரவல்லவர்கள், மாலை சேர் வெண் குடை கீழ், Malai Ser Ven Kudai Keel - முத்துஸரங்கள் தொங்கவிடப் பெற்ற வெண்குடை நிழலில் மன்னவர் ஆய், Mannavar Aay - அரசர்களாயிருந்துகொண்டு போன் உலகில் வாழ்வர், Poon Ulagil Vazhvar - பரமபதத்தில் நித்யாநுபவம் பண்ணப்பெறுவர். |