திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 7-10 பெரும் புறக்கடலை (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1638பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும் இதுக்கு முன்பு அனுபவித்து அறியாதது ஒன்றில் போலே பிறக்கிற ஆசை யானவனை –அம்ருதத்தை நீராகப் பாய்ச்சி வளர்த்தால் போலே நிரதிசய போக்ய பூதமான கரும்பு போலே இனியனாய் இருக்கிறவனை – அப்போதே நுகரலாம்படி பக்வ பலமாய் இருக்கிறவனை –பசித்த இடத்தே ஸூக போஜனம் பண்ணப் பெறுவாரைப் போலே அபேஷை பிறந்த இடத்தே கண்டு அனுபவிக்கப் பெற்றேன்) 1
பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யானை எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக் கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-1
பதவுரை Show / Hide
பெரு புறம் கடலை, Peru Puram Kadalai - விசாலமான இடத்தை யுடைத்தான கடல் போலே அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடையவனும்
அடல் ஏற்றினை, Adal Aetrinai - செருக்குடைய ரிஷபம் போலே மேனாணிப் புள்ளவனும்
பெண்ணை, Pennai - ஸ்திரீகளைப்போல் பாரதந்திரியமே வடிவாயிருப்பவனும்
ஆணை, Aanai - ஸ்வதந்தரனாயிருப்பவனும்
எண் இல் முனிவர்க்கு, En Il Munivarkku - எண்ணிறந்தயோகிகளுக்கு
அருள் தரும் தவத்தை, Arul Tarum Thavathai - அருள் தந்திடும் தவப்பயனாயுள்ளவனும்
முத்தின் திரள் கோவையை, Muththin Thiral Kovaiyai - முத்துத்திரளினாலாகிய மாலை போன்றவனும்
பத்தர் ஆவியை, Pathar Aaviyai - பக்தர்களுக்கு உயிர் நிலையாயிருப்பவனும்
நித்திலம் தொத்தினை, Niththilam Thoththinai - முத்துக்குவியல் போன்றிருப்பவனும்
அரும்பினை, Arumbinai - அரும்புபோல குமாரத் தன்மையுள்ளவனும்
அலரை, Alarai - மலர்ந்த புஷ்பம்போலே யௌவன பருவ முள்ளவனும்
அடியேன் மனத்து ஆசையை, Adiyen Manaththu Aasaiyai - அடியேனுடைய மனத்திலே புதிது புதிதாகத் தோன்றுகிற ஆசைக்கு இலக்கானவனும்
அமுதம் பொதி இன் சுவை கரும்பினை, Amudham Pothi In Suvai Karumbinai - அமுதத்தை நீராகப் பாய்ச்சி அதனால் வளர்ந்த இனிய சுவையை யுடைய கரும்புபோல் மதுரமானவனும்
கனியை, Kaniyai - கனிபோல் அப்போதே அநுபவிக்கத்தக்க போக்யனுமான எம்பெருமானை
சென்று நாடி, Sendru Naadi - தேடித்திரிந்து
கண்ண மங்கையுள், Kanna Mangaiyul - திருக்கண்ண மங்கையிலே
கண்டு கொண்டேன், Kandu Konden - ஸேவிக்கப்பெற்றேன்.
1639பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரதிசய போக்கியம் ஆனவனை –நெருக்கிக் கார்யம் கொள்ள வேண்டாதே அப்போதே பருகலாம்படி இருக்கிற கரும்பில் ராசம்சம் ஆனவனை – ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 2
மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை மைந்நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக் கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-2
பதவுரை Show / Hide
மெய் நலம் தவத்தை, Mei Nalam Thavathai - மெய்யாய் நன்றான பக்தியோகத்திற்கு ப்ரவர்த்தகனும் (- (கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன்-.))
திவத்தை தரும் மெய்யை, Thivaththai Tarum Meiyyai - பரமபதமளிக்வல்ல ப்ரபத்தி யோகத்திற்கு ப்ரவர்த்தகனும்
பொய்யினை, Poyyinai - (அன்பில்லாதார்க்குப்) பொய்யனாயிருப்பவனும்
கையில் ஓர் சங்கு உடை, Kaiyil Oru Sangu Udai - திருக்கையில் ஒப்பற்ற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடையவனும்
மை நிறம் கடலை, Mai Niram Kadalai - கறுத்த நிறத்தையுடை கடல்போன்றவனும்
கடல் வண்ணனை, Kadal Vannana - கடல்போல் கம்பீர ஸ்வபாவமுள்ளவனும்
மாலை, Malai - எல்லாரினும் மேம்பட்டவனும்
ஆலிலை பள்ளி கொள் மாயனை, Aalilai Palli Kol Mayanai - ஆலந்தளிரில் பள்ளி கொண்ட ஆச்சரியனும்
நென்னலை பகலை, Nennalai Pakalai - நேற்றைப்போதில் அநுபவிக்க்பபட்ட வஸ்துபோல் நெஞ்சை விட்டகலாத போக்யதையை யுடையவனும்
இற்றை நாளினை, Ittai Naalhinai - இன்று அநுபவிக்கப்படுகிற வஸ்து போன்றவனும்
நாளையாய் வரும், Naalaiyaai Varum - மேலுள்ள காலமும் இப்படியே அனுபவிக்க வுரியவனானவனும்
திங்களை, Thingkalai - மாஸத்துக்கு நிர்வாஹகனும்
ஆண்டினை, Aandhinai - ஸம்வத்ஸரத்துக்கு நிர்வாஹகனும்
கன்னலை, Kannalai - கன்னற்கட்டி போன்றவனும்
கரும்பினிடை தேறலை, Karumbinidai Therilai - கரும்புத் தடியிலுண்டான  சாறுபோன்றவனுமான பெருமானை
1640பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசாதாரணமான விக்ரஹத்தோடே ஸ்ரீ திருமலையிலே ஏக தேசமாய் இருக்கிறவனை – நசையை உடையோமாய்க் கொண்டு நம்மாலே ஆஸ்ரயிக்கப்படுகிற போக யோக்யமான காலம் ஆனவனை – அதுக்கு உறுப்பாக த்ரவ்யார்ஜனத்து ஈடான காலம் ஆனவனை சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 3
எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள் மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும் கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-3
பதவுரை Show / Hide
எங்களுக்கு, Engalukkum - எங்கள் விஷயத்தில் (- (சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்-,))
அருள் செய்கின்ற, Arul Seigindra - கிருபை பண்ணுகிற ஸர்வேச்வரனும்
வாசம் வார் குழலாள், Vaasam Vaar Kuzhalal - பரிமளம் விசா நின்றுள்ள கூந்தலையுடையவளான
மலை மங்கை தன் பங்கனை, Malai Mangai Than Panganai - பார்வதியைத் தனக்குப் பாதிபாகமாக வுடையவனான ருத்ரனை
பங்கில் வைத்து உகந்தான் தன்னை, Pangil Vaiththu Ugandhaan Thannai - தனது ஒரு பக்கத்திலே (இடஙகொடுத்து) வைத்து உகந்திருப்பவனும்
பான்மையை, Paanmaiyai - இப்படிப்பட்ட சீல குணமே ஸ்வபாவமாயுள்ளவனும்
பனி மா மதியம் தவழ் மங்குலை, Pani Maa Madhiyam Thavazh Mangulai - குளிர்ந்த பூரணசந்திரன் தவழப்பெற்ற ஆகாசமாய் நிற்பவனும்
சுடரை, Sudarai - ஸூர்யனக்கு அந்தர்யாமியா யிருப்பவனும்
வட மா மலை உச்சியை, Vada Maa Malai Uchiye - வேங்கட மலையின் கிகரந் தானாயிருப்பவனும்
நச்சி நாம் வணங்கப்படும், Nachchi Naam Vanangappadum - நம்மால் விரும்பி வணங்கப் படுபவனும்
கங்குலை, Gangulai - இராப்பொழுதுக்கு ப்ரவர்த்தகனும்
பகலை, Pagalai - பகற்பொழுதுக்கு ப்ரவர்த்தகனுமான பெருமானை
1641பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இந்த ஸ்வ பாவத்தைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனை –எனக்கு கைம்முதல் இல்லாத வன்று அழித்துக் கெடுத்து ஜிவிக்கலாம் படி யான நிதியானவனை –பொன் போலே ஸ்ப்ருஹநீயம் ஆனவனை – அப் பொன்னை அழித்தும் ஸ்வீகரிக்கக் கடவ ரத்னம் போலே ஸ்லாக்கியம் ஆனவனை – சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 4
பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக் காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4
பதவுரை Show / Hide
பேய் முலைத்தலை நஞ்சு உண்ட பிள்ளையாய், Pei Mulaitthalai Nanju Unda Pillaiyaai - பேய்ச்சியாகிய பூதனையுடைய முலையிடத்துண்டான விஷத்தை அமுது செய்த சிறுவனும், (- (சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன்-))
தெள்ளியார் வணங்கப்படும் தேவனை, Thelliyaar Vanangappadum Devanai - தெளிந்த ஞானிகளால் ஆச்ரயிக்கப்படுகின்ற தெய்வமாயிருப்பவனும்
மாயனை, Maayanai - ஆச்சரியனும்
மதிள் கோவல் இடைகழி மைந்தனை, Mathil Koval Idaikazhi Maindhanai - திருமதிளை யுடைய திருக்கோவலூரிலே இடைகழியிலுறைகின்ற யுவாவானவனும்
அன்றி, Andri - தவிரவும்
அந்தணர், Andhanar - அந்தணர்களினுடைய
சிந்தையுள், Sindhaiyul - மனத்திலேயிருந்து கொண்டு
ஈசனை, Eesanai - அவர்களை நியமிப்பவனும்
இலங்கும் சுடர் சோதியை, Ilankum Sudar Sothiyai - ஒளிபெற்று விளங்குகின்ற பெருஞ் சோதிமயமாயிருப்பவனும்.
எந்தையை, Endhaiyai - எனக்கு ஸ்வாமியம்
எனக்கு எய்ப்பினில் வைப்பினை, Enakku Eyppinil Vaippinai - எனக்குத் தளர்த்தி வருங்காலத்தில் (உதவக் கூடிய) நிதி போன்றவனும்
காசினை, Kaasinai - பொன் போன்றவனும்
மணியை, Maniyai - ரத்னம் போன்றவனுமான எம்பெருமானை
1642பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ்வளவும் போகப் பற்றாதார்க்கு காட்சி கொடுக்கைக்காக ஸ்ரீ திரு நின்றவூரிலே நிற்கிற முத்துத் திரள் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை – ஸ்வ ஸ்பர்சத்தால் வரும் ஸூகமாய் இருக்கிறவனை – தாரகம் ஆனவனை –-சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 5
ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினைக் காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-5
பதவுரை Show / Hide
ஏற்றினை, Aetrinai - காளைபோல் செருக்குடையவனும் (- (சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன்-.))
இமயத்துள் எம் ஈசனை, Imayathul Em Eesanai - இமயமலைத் திருப்பிரிதியிலெழுந்தருளியிருக்கின்ற ஸ்வாமியும்
இம்மையை, Immayai - இஹலோகத்ததுப் பலன்களை யளிப்பவனும்
மறுமைக்கு மருந்தினை, Marumaikku Marundhinai - பரலோகபுருஷார்த்தத்திற்கு ஸாதனமாயிருப்பவனும்
ஆற்றலை, Aatralai - பரிபூர்ணசக்தியே வடிவெடுத்தது போலிருப்பவனும்
அண்டத்து அப்புறத்து, Andaththu Appuraththu - அண்டங்களுக்கு அப்பாலுள்ள பரமபதத்தில்
உய்த்திடும், Uyththidum - (அன்பர்களைச்) செலுத்தவல்ல
ஐயனை, Aiyyanai - ஸ்வாமியும்
கையில், Kaiyil - திருக்கையில்
ஒன்று ஆழி, Onru Aazhi - ஒப்பற்ற திருவாழியை
ஏந்திய, Aendhiya - தரித்துக்கொண்டுள்ளவனும்
கூற்றினை, Koottinai - (எதிரிகட்கு) யமன் போன்றவனும்,
குரு மா மணி குன்றினை, Guru Maa Mani Kunrinai - சிறந்த நீலமணிமயமான மலைபோன்றவனும்
நின்றவூர் நின்ற நித்திலம் தொத்தினை, Ninravoor Nindra Niththilam Thoththinai - திருநின்றவூரி லெழுந்தருளி யிருக்கிற முத்துத்திரள் போன்றவனும்
காற்றினை, Kaatrinai - காற்றுப்போல் ஸுகமளிப்பவனும்
புனலை, Punalai - தண்ணீர்போல் உயிர்தரிக்கச் செய்பவனமான பெருமானை
1643பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வைஸ் ஸ்ப்ருஹநீயமானவனை-போக்ய-போகோ உபகரண போக ஸ்தானங்களாய் உள்ளவனை – காலமே சேஷித்த அன்று காலமாய் நின்றவனை – நித்தியமான திவ்ய ஆயுதங்களை ஏந்தும் திருக் கையை உடையவனை – நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை -என்றபடி – பிராமணர் உடைய மரியாதை போலே இருக்கிற சங்கல்பத்தை உடையவனை – பிராமணராலே அத்யயனம் பண்ணப் படுகிறவனை-என்றுமாம் –ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 6
துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர் செப்பினைத் திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி யொப்பனை யுலகேழினை யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர் கற்பினைக் கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6
பதவுரை Show / Hide
துப்பனை, Thuppanai - ஸத்யஸங்கல்பனும் (- (கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே-.))
துரங்கம், Thurangam - குதிரைவடிவாய் வந்த அஸுரன்
பட, Pada - அழியும்படி
சீறிய, Seeriyai - சீற்றங்கொண்ட
தோன்றலை, Thonralai - பெருமையிற்சிறந்தவனும்
சுடர் வான் கலன்பெய்தது, Sudar Vaan Kalanpeithathu - ஒளிபொருந்திய சிறந்த ஆபரணங்களை இட்டு வைப்பதற்குரிய
ஓர் செப்பினை, Oru Seppinai - ஒரு கரண்டகம் போன்றவனும்
திருமங்கை மணாளனை, Thirumangai Manalanai - திருமகள் கொழுநனும்
தேவனை, Devanai - அத்திருமகளுடைய சேர்த்தியால் விளங்குபவனும்
திகழும் பவளத்து ஒளி ஒப்பனை, Thigazhum Pavazhathu Olli Oppanai - விளங்குகின்ற பவழங்களின் ஒளியை ஒத்திருப்பவனும்
உலகு ஏழினை, Ulaku Ezhinai - ஏழுலகங்கட்கும் நியாமகனும்
ஊழியை, Oozhiyai - காலமாய் நிற்பவனும்
ஆழி ஏந்திய கையனை, Aazhi Aendhiya Kaiyanai - சக்கரமேந்திய திருக்கையை யுடையவனும்
அந்தணர் கற்பினை, Andhanar Karppinai - அந்தணர்களின் கல்விக்கு விஷயமாயிருப்பவனுமான எம்பிரானை
கழுநீர் மலரும் வயல், Kazhunir Malarum Vayal - செங்கழுநீர்ப்பூக்கள் மலரப்பெற்ற வயல்களை யுடைத்தான
1644பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதிகளைப் போக்குமவன் –விரோதி நிரசனத்தை சீலமாக உடைய உபகாரகனை – படபாமுகாக்னி ஜலம் அடைய தகன் பக்கலிலே வந்து சுவரும்படி இருக்குமா போலே சர்வ பதார்த்தங்களும் தன பக்கலிலே வந்து லயிக்கும்படி இருக்கும் சக்தியை உடையவனை – களிவண்டு அறையும் பொழில் ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே) 7
திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவதேவனை மூவரில் முன்னிய விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற கருத்தனைக் களிவண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-7
பதவுரை Show / Hide
திருத்தனை, Thiruthanai - எப்போதும் பூர்ணத்ருப்தி யுள்ளவனும் (- (கண்ணமங்கையுள், கண்டுகொண்டேன்-))
திசை நான்முகன் தந்தையை, Thisai Naanmugan Thandhaiyai - சதுர்முகப்ரஹ்மாவுக்கு ஜனகனும்
தேவதேவனை, Devadevanai - தேவாதிதேவனும்
மூவரில், Moovariyil - (‘அரி அயன் அரன்’ என்று சொல்லப்படுகிற மும்மூர்த்திகளுள்
முன்னிய, Munniya - முற்பட்டிருக்கிற
விருத்தனை, Viruthanai - தலைவனும்
விளங்கும் சுடர் சோதியை, Vilangum Sudar Sothiyai - விளங்குகின்ற தேஜோராசிமயமான திவ்யமங்களவிக்ரஹத் தையுடையவனும்
விண்ணை, Vinnai - மேலுலகங்கட்கு நியாமகனும்
மண்ணினை, Manninai - மண்ணுலகுக்கு நியாமகனும்
கண்ணுதல் கூடிய அருத்தனை, Kannuthal Koodiya Aruthanai - நெற்றிக்கண்ணனான சிவன் கூடப்பெற்ற (தனது திருமேனியிற்)பாதிபாகத்தையுடையவனும்
அரியை, Ariyai - ஹரியென்னுந் திருநாமமுடையவனும்
பரி கீறிய அப்பனை, Pari Keeriyah Appanai - குதிரையாய்வந்த அஸுரனைக் கிழித்த உபகாரனும்
அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற கருத்தனை, Appil Aar Azhai Aay Nindra Karuthanai - நீரிலுள்ள பாடபாக்நியானது ஜலமெல்லாம் தன்னிடத்தே வந்து சுவறும்படியிருக்குமா போலே ஸகலபதார்த்தங்களும்  தன்னிடத்தே வந்து லயிக்கும்படி யிருக்கிற முழுமுதற்கர்த்தாவுமான எம்பெருமானை
களி வண்டு அறையும் பொழில், Kali Vandu Araiym Pozil - களித்த வண்டுகள் இசைபாடுஞ் சோலைகளையுடைய
1645பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிருபாதிக சேஷியை-தன் பக்கல் ஆசை உடையார் தலை மேலே நிற்கிறவனாய்- அது தான் பெறாப் பேறாக நினைத்து பூர்ணனாய் இருக்கிறவனை – கம்சனுடைய துரபிசந்தியை அவன் தன்னோடு போக்கி உகவாதாரோடு செவ்வை அழியப் பரிமாறுமவனை – ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே) 8
வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக் கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-8
பதவுரை Show / Hide
வெம் சினம் களிற்றை, Vem Sinam Kalirrai - கொடிய கோபத்தையுடைய மதயானை போன்றவனும் (- (கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்-.))
விளங்காய் வீழ, Vilangai Veezha - (அஸுரனாவேசித்த) விளாமரத்தின் காய்கள் உதிர்ந்து விழும்படி
கன்று, Kanru - (அஸுரனானவொரு) கன்றை
வீசிய, Veesiya - தூக்கியெறிந்த
ஈசனை, Eesanai - ஸ்வாமியும்
பேய் மகள், Pei Makal - (பூதனையென்னும்) பேய்ச்சியானவள்
துஞ்ச, Thunja - முடியும்படி
நஞ்சு, Nanju - (அவளது முலையில் தடவியிருந்த) விஷத்தை
சுவைத்து உண்ட, Suvaithu Unda - ருசிபார்த்து (உயிருடன்) கவர்ந்த
தோன்றலை, Thonralai - இளமகனும்,
தோன்றல் வாள் அரக்கன் கெட, Thonral Vaal Arakkan Keda - (இலங்கைக்கு) அரசனாய் வாட் படையையுடையனான இராவணன் மாளும்படி
தோன்றிய, Thonriya - திருவவதரித்த
நஞ்சினை, Nanjinai - விஷம்போன்றவனும்,
அமுதத்தினை, Amudhatthinai - (அன்பர்க்கு) ஆராவமுதமாயிருப்பவனும்
நாதனை, Nadhanai - ஸர்வசேஷியாயிருப்பவனும்
நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை, Nachchuvaar Uchi Mael Nirkum Nambiyai - தன்னை ஆசைப்படுமவர்களின் தலைமீது நிற்கின்ற பரி பூர்ணனும்
கஞ்சனை துஞ்ச வஞ்சித்த வஞ்சனை, Kanjanai Thunja Vanchiththa Vanchanai - கம்ஸன் முடியும்படி அவனை வஞ்சித்த வஞ்சகனுமான பெருமானை
1646பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை–ததாமி புத்தியோகம் தம் -என்கிறபடியே தன்னைப் பிராபிக்கைக்கு ஈடான புத்தி யோகத்தை கொடுக்குமவனை – வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை – காணப் பெறாமையால் உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று கண்டு அனுபவிக்கப் பெற்றேன்) 9
பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9
பதவுரை Show / Hide
பண்ணினை, Panninai - ஸங்கீதம் போல் இனியனானவனும் (- (கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்-.))
பண்ணில் நின்றது ஓர் பான்மையை, Pannil Nirandhadhu Oor Paanmai - அந்த சங்கீதத்தின் ஸாரமான தன்மைபோன்ற தன்மையை யுடையவனும்
பாலுள் நெய்யினை, Paalul Neyyinai - பாலினுள்ளே நெய் மறைந்திருப்பது போல எங்கும் மறைந்துறைகின்றவனும்
மால் உரு ஆய் நின்ற விண்ணினை, Maal Uru Aay Nirnda Vinninai - மிக்க பரப்பையுடைத்தான நித்ய விபூதிக்கு நாதனும்
விளங்கும் சுடர் சோதியை, Vilangum Sudar Sothiyai - விளங்குகின்ற பரஞ்சோதிமயமான திருமேனியையுடையவனும்
வேள்வியை, Velviyai - யாகஸ்வரூபியும்
விளக்கின் ஒளி தன்னை, Vilakkin Oli Tannai - விளக்கொளிபோலே ஸ்வயம் ப்ரகாசனும்
மண்ணினை, Manninai - பூமிபோலே எல்லாவற்றையும் பொறுத்திருப்பவனும்
மலையை, Malaiyai - மலைபோல் ஒருவராலும் அசைக்க வொண்ணாதவனும்
அலை நீரினை, Alai Nirinai - தண்ணீர்போலே வேண்டுமிடங்களுக்கு வருவித்துக்கொள்ளவுரியவனும்
மாலை, Malai - அடியவரிடத்து வியாமோஹம் கொண்டிருப்பவனும்
மா மதியை, Ma Madiyai - சிறந்த புத்தியை யளிப்பவனும்
மறையோர்தங்கள் கண்ணினை, Maraiyortankal Kanninai - வைதிகர்களுக்குக் கண் போன்றிருப்பவனுமான பெருமானை
கண்கள் ஆரளவும் நின்று, Kankal Aralavum Ninru - கண்கள் த்ருப்தி பெறுமளவும் நின்று
1647பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது-என்னோடு அதிகரிக்கில் அறியலாம் ஒரு வசிஷ்டனோடே-ஒரு சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ அவனுக்கு ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ – இவை பத்தையும் –அனுசந்திப்பார்க்கு அடைவு படச் சொல்லுகையால் உண்டான அருமையாலே வல்லராய் உபாதான லோகங்களில் போக பூமிகள் எல்லாம் புக்கு அங்கு உண்டான போகங்களைப் புஜிப்பார்கள்) 10
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10
பதவுரை Show / Hide
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று, Kannamankaiyul Kandu Konden Enru - ‘திருக்கண்ணமங்கையில் (எம்பெருமானை) ஸேவிக்கப்பெற்றேன்’ என்று
காதலால் உரை செய்த, Kadalal Urai Seyta - அன்புடனருளிச் செய்த
வண்ணம் ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை, Vannam On Tamil Onpatotu Onru Ivai - இசையையுடைத்தாய் அழகியதான இத்தமிழ்ப் பாசுரங்ள் பத்தையும்
வல்லர் ஆய் உரைப்பார், Vallar Ay Uraippar - நிபுணராய்ச் சொல்லுமவர்கள்
மதியம் தவழ் விண்ணில், Madhiyam Taval Vinnil - சந்தியன் தவழப்பெற்ற மேலுலகங்களில்  (சென்று)
விண்ணவர் ஆய், Vinnavar Ay - தேவர்களாய்
மகிழ்வு எய்துவர், Makizhvu Eytuvar - (போகங்களையநுபவித்து) ஆநந்த மடைவர்கள்;
மெய்ம்மை சொல்லில், Meimmai Sollil - உண்மையாகச் சொல்லப் புகுந்தால்,
வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண, Ven Sangam Onru Entin Kanna - வெண்ணிறமாய் விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தைத் தரித்துள்ள பெருமானே!
குறிப்பு ஆகில், Kurippu Agil - திருவுள்ளமாயின்
கவியின் பொருள், Kaviyin Porul - இப்பாசுரங்களின் பொருள்
நின் தனக்கும் கற்கலாம், Nin Tanakkum Karkalam - (ஸர்வஜ்ஞனான) உனக்கும் கேட்டுணரத்தக்கதாகும்.