திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 7-2 புள்ளாய் ஏனமுமாய் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1558பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இனி வேறே நூறாயிரம் இதர விஷயங்கள் முகம் காட்டினாலும் அவற்றோடு செறியேன் – நான் நோவு படுகிற சம்சாரத்தில் நீயே முற்பாடனாய் வந்து நின்ற பின்பு அவற்றோடு பொருந்துமோ – ப்ரீதி அதிசயத்தாலே -ஒ -என்கிறார்) 1
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால் உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால் நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1
பதவுரை Show / Hide
புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து, Pul Aay Yenamum Aay Pugundhu - ‘ஹம்ஸரூபியாயும் வராஹ ரூபியாயும் என்னுள்ளே பிரவேசித்து (- (ஓ நறையூர் நின்ற நம்பீ!))
என்னை உள்ளம் கொண்ட கள்வா என்றலும், Ennai Ullam Konda Kalvaa Endralum - என உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட கள்வனே!’ என்று சொன்னவுடனே
என் கண்கள், En Kangkal - எனது கண்களில் நின்றும்
நீர்கள் சோர்தரும், Neerga Sortharum - கண்ணீர் பெருகுகின்றது :
ஆல், Aal - அந்தோ!;
நெஞ்சம், Nenjam - என்மனமானது
உன்னை, Unnai - எம்பெருமானான உன்னை
உள்ளியக்கால், Ulliyakkal - அநுஸந்திக்கப் புகுந்தால்
உள்ளே நின்று உருகி, Ulle Nindru Urugi - உள்ளே பிடித்து நீராக உருகிப்போவதனால்
உன்னை அல்லால், Unnai Allaal - (இப்படிப்பட்ட அன்புக்கு இலக்கான உன்னைத் தவிர்த்து (வேறொருவரையும்)
நள்ளேன், Nalleen - நேசிக்கமாட்டேன்.
1559பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புள்ளாய் ஏனமுமாய் புகுந்து -என்றார் கீழே –தாழ்ந்த ஜன்மத்தில் வேணுமாகில் பிறக்கிறாய் – நாட்டார் பிறக்கும் பிறவிகளில் பிறக்கல் ஆகாதோ – நாட்டில் நடையாடாத படியான நரசிம்ஹ ரூபத்தை யுடையையாய் – ஸ்ரீ நரசிம்ஹ வேஷ பரிக்ரஹம் பண்ணின அன்று தொடங்கி இவர் உடைய ஹிருதயத்திலே காணும் கிட்டுவது) 2
ஓடா வாளரியின் உருவாய் மருவி என்தன் மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா பாடேன் தொண்டர் தம்மைக் கவிதை பனுவல் கொண்டு நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-2
பதவுரை Show / Hide
ஓடா, Odaa - நாட்டில் எங்கும் நடையாடாத (- (ஓ நறையூர் நின்ற நம்பீ!- ;))
ஆள் அரியின் உரு ஆய், Aal Ariyin Uru Aay - நரஸிம்ஹரூபியாய்
என்றன் மாடே வந்து மருவி, Endran Maade Vandu Maruvi - என் பக்கல்வந்து பொருந்தி
அடியேன், Adiyen - அடியேனுடைய
மனம், Manam - மனத்தை
கொள்ள வல்ல மைந்தா, Kolla Valla Mainthaa - கவர்ந்து கொள்ளக் கூடிய மிடுக்கையுடையவனே!
பனுவல் கவிதை கொண்டு, Panoval Kavithai Kondo - இலக்கணம் வழுவாத கவிகளைக்கொண்டு
தொண்டர் தம்மை, Thondar Thammai - நீசர்களை
பாடேன், Paadeen - பாடுவது தவிர்ந்தேன்;
உன்னை அல்லால், Unnai Allaal - உன்னைத்தவிர (வேறொரு வரைக் கவிபாட)
நாடேன், Naadeen - முயலமாட்டேன்.
1560பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அஞ்சனம் போலே ஸ்ரமஹரமான வடிவை உடைய உன்னை அல்லது புறம்பே சிலரை – இப்போது புறம்பாக நினைக்கிறது -புறம்புற்றை திருப்பதிகளை – எத்தனை வேணும் என்று ப்ரேரித்தாலும் ப்ரீதி புரஸ் சரமாக ஏத்துமது இல்லை) 3
எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின் அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன் மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே –7-2-3
பதவுரை Show / Hide
எம்மானும், Emmaanum - என் தகப்பனும் (- (நறையூர் நின்ற நம்பீ!- ;))
எம் அனையும், Em Anaiyum - என் தாயும்
என்னை பெற்று, Ennai Petru - என்னைப் பிரஸவித்துவிட்டு
ஒழிந்ததன் பின், Ozhindadhan Pin - நீங்கிய பின்பு
அடியேனுக்கு, Adiyenukku - அடியேனுக்கு
அம்மானும், Ammanum - தகப்பனும்
அம்மனையும், Ammanaiyum - தாயும்
ஆகி நின்ற, Aagi Nindra - தானேயாய்நின்ற
நல், Nal - விலக்ஷணமாய்
மானம், Maanam - பெருமைபொருந்தி
ஒண், On - அழகியதான
சுடரே, Sudare - தேஜஸ் ஸ்வரூபியே!,
உன், Un - உன்னுடைய
மை மானம், Mai Maanam - மைபோன்ற
வண்ணம் அல்லால், Vannam Allal - திருமேனி நிறத்தையல்லது (வேறொன்றையும்)
மகிழ்ந்து, Magizhndu - மனமுவந்து
ஏத்த மாட்டேன், Aetha Maatten - துதிக்கமாட்டேன்.
1561பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே ஸ்ரீ பரம பதம் போலே இடம் பெற இருந்து என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் – அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் -உனக்கு உறைவிடம் இல்லாமை தான் செய்தாயோ நீ – உனக்கு அசங்குசிதமாக வர்த்திகைக்கு ஒரு ஸ்தானம் இல்லையோ -இத் தேசத்தை உடைய உனக்கு) 4
சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல் உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான் அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும் நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-4
பதவுரை Show / Hide
அணி வண்டு, Ani Vandu - அழகிய வண்டுகள் (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;))
கிண்டும், Kindum - குடையப்பெற்றதும்
நறை வாரும், Nirai Vaarum - தேன் பெருகப்பெற்றதுமான
பொழில், Pozhil - சோலையாலே
சூழ், Sool - சூழப்பட்ட
சிறியாயோர் பிள்ளையும் ஆய், Siriyaayor Pillaiyum Aay - மிகச் சிறுகுழந்தையாய்
உலகு உண்டு, Ulaku Undu - உலகங்களை உட்கொண்டு
ஓர் ஆல் இலை மேல், Or Aal Ilai Mel - ஒரு ஆலந்தளிரிலே
உறைவாய், Uraivaay - பொருந்தியிருந்தவனே!
என் நெஞ்சின் உள்ளே உளைவாய், En Nenjin Ullae Ulaivaay - எனது நெஞ்சுக்குள்ளே வஸிப்பவனே!
உறைந்தது தான், Uraindhadhu Thaan - (நீ இப்படி என்னெஞ்சினுள்ளே) வாஸஞ்செய்தருள்வதை
அடியேன், Adiyen - அடியேன்
அறியா திருந்தறியேன், Ariyaa Thirundhariyeen - தெரிந்துகொள்ளாமலிருக்கவில்லை
1562பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னையும் அடிமையில் மூட்டுகைகாக என்னுடைய ஹிருதயத்திலே புகுந்த உன்னைப் போக ஒட்டுவேனோ சேஷ பூதராவார் சேஷி செய்தபடி செய்யக் கண்டு இருக்குமவர்கள் அன்றோ ஒட்டேன் என்று நிர்பந்திக்கை உம்முடைய ஸ்வரூபத்துக்குப் போருமோ -என்ன – மடல் எடுக்க நினைப்பார் இது ஆம் இது ஆகாது என்று கார்யம் பார்த்தோ செய்வது – நீயோ சால நாண் உடையையாய் இருக்கிறாய் –-நீ முந்துற மடல் எடுத்து பின்னை அன்றோ மடல் எடுப்பித்தது – அவன் மடல் எடுக்கை யாகிறது -முற்பாடனாய் வர நிற்கை இறே) 5
நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால் ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல ஒட்டேன் நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-5
பதவுரை Show / Hide
நீண்டாயை, Neendaayai - நெடுமாலாகிய உன்னை (- (நறையூர் நின்ற நம்பீயோ!- ;))
வானவர்கள், Vaanavarkal - பிரமன் முதலியோர்கள்
நினைந்து, Ninaindhu - தியானித்து
ஏத்தி, Aethi - தோத்திரம்பண்ணி
காண்பு அரிது, Kaanbu Aridhu - காண்பதானது அஸாத்யமான காரியம்
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு, Aandai Enru Aadharikkap Paduvaaykku - ‘எம்பெருமானே!’ என்று (தேவர்களால்) ஆதரித்துத் துதிக்கப்படுகின்ற உன்விஷயத்தில்
நான் அடிமை பூண்டேன், Naan Adimai Poondhen - நான் அடிமைத் தொழில் செய்யப்பெற்றேன்;
என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை, En Nenjin Ullae Pugundhaayai - எனது மனத்திலுள்ளே புகுந்திருக்கிற உன்னை
போகல் ஒட்டேன், Pokal Ottaen - இனி வேறோரிடம் போக வொட்டேன்;
உனக்கு, Unakku - உன் விஷயத்திலே
நாண் தான் ஒழிந்தேன், Naan Thaan Ozhindhen - வெட்கமற்றவனானேன்.
1563பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ போகாதே கொள் -என்று காலைக் கட்டி வளைக்கலாம் படி என் பக்கலிலே அருளைப் பண்ணின ஸ்ரீ திரு நறையூரிலே வந்து நின்று ஆய்த்து-இவருக்கு அருளிற்று) 6
எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன் அந்தோ என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-6
பதவுரை Show / Hide
என் ஆர் உயிரே, En Aar Uyire - எனது அருமையான உயிர் போன்றவனே! (- (நறையூர் நின்ற நம்பீயோ!- ;) (ஆகப் பத்துத்தலைமுறையாக))
அரசே, Arase - என்னை ஆள்பவனே!
எனக்கு அருள் நந்தாமல் தந்த எந்தாய், Enakku Arul Nandamal Thanda Endathai - என் திறத்தில் கிருபையைக் குறைவின்றிச் செய்தருளின எம்பெருமானே!
எம் தாதை தாதை, Em Thathai Thathai - நானும் என் தகப்பனும் அவன் தகப்பனும்
அப்பால், Appaal - அவனுக்கு முன்புண்டான
எழுவர், Ezhvar - ஸப்த புருஷர்களும்
பழவடிமை வந்தார், Pazhavadi Mai Vandhaar - இயற்கையான அடிமையைச் செய்து வந்தவர்கள்;
என் நெஞ்சின் உள்ளே, En Nenjin Ullae - எனது மனத்தினுள்ளே
வந்தாயை, Vandhaayai - வந்து சேர்ந்த உன்னை
போகல் ஒட்டேன், Pokal Ottaen - இனி வேறிடம் போக வொட்டேன்
1564பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ போகில் நான் முடிவன் -என்கிறார் – இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் – நீர் வளைக்கிறது என்ன மிடுக்கு கொண்டு என்ன – நீர் குற்றம் கண்டு கை விடப் பார்க்கும் அன்றும்ந கச்சின் ந அபராத்யதி -என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள்) 7
மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர் வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன் நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-7
பதவுரை Show / Hide
நல் நெஞ்சம், Nal Nenjam - (அடியார் திறத்தில்) நல்ல ஹ்ருதயத்தை யுடையளான (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;))
அன்னம், Annam - அன்ன மென்னடையாளான பிராட்டி
மன்னும், Mannum - பொருந்தி வாழ்கிற
மன் அஞ்ச, Man Anja - க்ஷத்திரியர்களெல்லாரும் அஞ்சும்படியாக
ஆயிரம் தோள், Aayiram Thol - (கார்த்த வீரியார்ஜுநனுடைய) ஆயிரந் தோள்களையும்
மழுவின், Mazhuvin - கோடாவிப்படையினால்
துணித்த, Thuniththa - அறுத்தொழித்த
மைந்தா, Maindha - மிடுக்கனே?
என் நெஞ்சத்துள், En Nenjaththul - எனது நெஞ்சினுள்ளே
இருந்து, Irundhu - இருந்து வைத்து
இனி, Ini - இனிமேல்
இங்கு போய், Ingu Poi - இங்கு நின்றும் வேறோரிடம்போய்
பிறர் ஒருவர், Piraar Oruthar - வேறொருவருடைய
வல் நெஞ்சம், Val Nenjam - கடினமான நெஞ்சிலே
புக்கு இருக்க, Pukku Irukka - புகுந்திருக்க
ஒட்டேன், Ottaein - ஸம்மதிக்கமாட்டேன்;
வளைத்துவைக்கேன், Valaithuvaikken - தடைசெய்கின்றேன்.
1565பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விலஷணமான புஷ்பங்களிலே வண்டுகள் ஆனவை குடைந்து வண்டு உண்ணும் -என்கிறபடியே உள்ளே உள்ளே அவஹாகிக்கும் அத்தனை போக்கி வேறு ஒன்றில் போக ஒண்ணாத படி போக்யமான தேசத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவனே- அவ் ஊரில் அவஹாகித்தாருக்கு வேறேயும் ஓர் இடம் தேடித் போகலாம் படியோ அவ் ஊரில் போக்யதை இருப்பது) 8
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய் இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-8
பதவுரை Show / Hide
நல் போது, Nal Podhu - நல்ல புஷ்பங்களிலே (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;))
வண்டு கிண்டும், Vandu Kintum - வண்டுகள் குடையப்பெற்ற
இமையோர், Imaiyor - நித்யஸூரிகள்
எப்போதும், Eppodhum - எக்காலத்திலும்
பொன்மலர் இட்டு, Ponmalar Ittu - நல்ல பூக்களை ஸமர்ப்பித்து
தொழுது, Thozhudhu - வணங்கி
தங்கள், Thangal - தங்களுடைய
கை போது கொண்டு இறைஞ்சி, Kai Podhu Kondu Irainji - புஷ்பம் போன்ற கைகளினால் அஞ்ஜலிசெய்து
கழல் மேல், Kazhal Mel - திருவடிகளிலே
வணங்க நின்றாய், Vananga Nindraai - ஆச்ரயிக்குமாறு நிற்பவனே!
இப்போது, Ipodhu - இன்று
என் நெஞ்சின் உள்ளே, En Nenjin Ullae - எனது மனத்துள்ளே
புகுந்தாயை, Pugundhaayi - வந்துபுகுந்த வுன்னை
போகல் ஒட்டேன், Pokal Ottaen - வேறிடம் போகவொட்டேன்
1566பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்த படியை அனுசந்திக்க அனுசந்திக்க தமக்கு இனிதாக நின்றது –எனக்கு சர்வ வித போக்யமுமாய் உள்ளவனே – வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி அது கொண்டு பெற இருக்கை அன்றிக்கே இந்த சரீரம் தன்னையே கொண்டு பிராபிக்கப் பெற்றேன் – அது செய்த படி தான் எங்கனே என்ன –நீ வர நிற்கையாலே நான் இப் பேறு பெற்றேன்) 9
ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த தேனே தீன் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால் நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-9
பதவுரை Show / Hide
யான் ஆய், Yaan Aayi - எனக்கு அந்தராத்மாவாய் (- (நறையூர் நின்ற நம்பீயோ!- ;))
என் தனக்கு ஆய், En Thanakku Aayi - எனக்கு விதேயனாய்க் கொண்டு
அடியேன் மனம் புகுந்து, Adiyein Manam Pugundhu - அடியேனுடைய மனத்தினுட் பிரவேசித்த
தெனே, Thene - தேன்போல் இனியவனே!
தீம் கரும்பின் தெளிவே, Theem Karumbin Thelivae - இனிமையான கரும்பின் சாறுபோன்றவனே!
ஊன் ஏர் ஆக்கை தன்னை, Oon Aer Aakkai Thannai - மாம்ஸமயமான சரீரத்தை
உழந்து, Uzhandhu - (பலவகைகளாலும்) சிரமப்பட்டு
ஓம்பி வைத்தமையால், Oombi Vaiththamaiyaal - பேணிவைத்துக்கொண்டிருந்ததனால்
என் சிந்தை தன்னால், En Sindhai Thannal - என்னுடைய மனத்தினால்
நானே எய்த பெற்றேன், Naane Eytha Pettraen - (இப்போது உன்னை) நானே வந்தடையப்பெற்றேன்.
1567பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற சொல் தொடையைச் சொல்லும் அவர்கள்-இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் – அதுக்கு மேலே-போக பூமிகளிலே மேலாய் இருக்கிற ஸ்ரீ பரம பதத்திலே போய் இவ் வாத்மாவின் உடைய ஸ்வரூப அனுரூபமான முறையாலே நிரதிசய ஸ்வரூபா நந்திகளாய் பின்னை ஒரு நாளும் புநரா வ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவார்கள்) 10
நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக் கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன் சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில் நன்னீர்மையால் மகிழ்ந்து நெடும் காலம் வாழ்வாரே –7-2-10
பதவுரை Show / Hide
நல் நீர் வயல் புடை சூழ் நறையூர், Nal Neer Vayal Pudai Soozh Naraiyoor - நல்ல நீரையுடைய கழனிகளாலே நாற்புறமுஞ் சூழப்பட்ட திருநறையூரில்
நின்ற, Nindra - நித்யாவஸம் செய்தருள்கின்ற
நம்பியை, Nambiyai - எம்பெருமான் விஷயமாக,
கல் நீர மால் வரை தோள், Kal Neera Maal Varai Thol - ஒலிக்கின்ற அருவிநீரையுடைய பெரிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவரும்
மங்கையர் கோன், Mangaiyar Koon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் (அருளிச்செய்த)
சொல் நீர, Sol Neera - கொண்டாடிச் சொல்ல வேண்டுவதையே ஸ்வபாவமாகவுடைய
சொல் மாலை, Sol Maalai - இச்சொல் மாலைகளை
சொல்லுவார்கள், Solluvaargal - கற்பவர்கள்
சூழ் விசும்பில், Sozh Vizhumbil - பெரிய திருநாட்டில்
நல் நீர்மையால், Nal Neermaiyaal - (நித்தியகைங்கர்யமாகிற) சிறந்த ஸ்வபாவத்தோடு கூடி
நெடுங்காலம், Nedungkaalam - சாச்வதாமாக
மகிழ்ந்து வாழ்வார், Magizhndhu Vaazvaar - பரமாநந்தங்கொண்டு வாழப்பெறுவர்.