திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1628 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உகந்து அருளின நிலங்களும் இவர் திரு உள்ளமும் ஒக்க வாய்த்து அவன் விரும்பி இருப்பது – இப்படி இருக்கையாலே ஆஸ்ரயிப்பாருக்கு ஆஸ்ரயநீய ஸ்தானம் இவை இரண்டும் யாய்த்து – சல சயனன் -என்றது-அது அவனுக்குத் திரு நாமமாய்-ஜல சயனன் வர்த்திக்கிற இடம் சல சயனம் என்று ஊருக்கு பெயராகிறது) 1 | கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல சயனத்
துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே –7-9-1 | பதவுரை Show / Hideமனம், Manam - மனத்தில் நின்றும் கள்ளம், Kallam - க்ருத்ரிமச்செயல் விள்ளும் வகை கருதி, Vizhllum Vagai Karuthi - விட்டு நீங்கவேண்டும் வகையை விரும்பி கழல் தொழுவீர், Kazhal Thozuveer - (எம்பெருமானுடைய) திருவடிகளை ஆச்ரயிக்க வேண்டியிருக்கிறவர்களே! முது பரவை, Muthu Paravai - பழையதான கடலினுடைய திரை, Thirai - அலைகளினாலுண்டான வெள்ளம், Vellam - ப்ரவாஹமானது கரை எங்கும் விரிய, Karai Engum Viriya - கரைகளிலெல்லாம் பரவாநிற்க, தெள்ளும், Thellum - (அவ்வலைகளினால்) கொழிக்கப்பட்ட மணி, Mani - ரத்ணங்கள் திகழும், Thigazhume - விளங்கப்பெற்ற சிறுபுலியூர், Sirupuliyoor - சிறுபுலியூரில் சலசயனத் துள்ளும், Salasayanath Thullum - சலசயனமென்கிற ஸந்நிதியினுள்ளும் எனது உள்ளத் துள்ளும், Enathu Ullath Thullum - என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளும் உறைவாரை, Uraivaarai - நித்யவாஸம் பண்ணுகிற பெருமானை உள்ளீர், Ullir - சிந்தனை செய்யுங்கள். |
| 1629 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகியதாய் கண்டார்க்கு மேல் விழும்படியான வடிவை உடைய ஸ்ரீ வாமனன் ஆன ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை ஸ்மரியுங்கோள்) 2 | தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி
மருவிப் பிரிந்தவர் வாய் மொழி மதியாது வந்து அடைவீர்
திருவில் பொலி மறையோர் சிருபுலியூர்ச் சல சயனத்து
உருவக் குறளடிகள் அடி யுணர்மின் யுணர்வீரே –7-9-2 | பதவுரை Show / Hideஉணர்வீர், Unarveer - விவேகிகளே!, (- (சிறுபுலியூர், சலசயனத்து-,)) தெருவில், Theruvil - (வேலையற்றுத்) தெருக்கள் தோறும் திரிகின்றவர்களாய் சிறு நோன்பியர், Siru Nonpiyar - அற்பங்களான விரதங்களைக் கைக்கொண்டவர்களாய் நெஞ் சோற்றொடு கஞ்சி மருவி, Nenj Sotrrodu Kanjimaruvi - செஞ்சோற்றையும் கஞ்சியையுமுண்ண விரும்பி பிரிந்தவர், Pirindhavar - வைதிக கோஷ்டியிற் சேராதே தனிப்பட்டுப் பிரிந்தவர்களான ஜைநர் முதலானாருடைய வாய் மொழி, Vaai Mozhi - வாய்ப்பேச்சுகளை மதியாது, Madhiyadhu - திரஸ்கரித்து விட்டு வந்து அடைவீர், Vandhu Adaiveer - (எம்பெருமானளவிலே) வந்து சேருங்கள்; திருவில், Thiruvil - செல்வத்தினால் பொலி, Poli - விளங்குகின்ற மறையோர், Maraiyore - வைதிகர்கள் வாழ்கிற உருவம், Uruvam - அழகிய குறள், Kural - வாமநாவதாரஞ்செய்தருளிய அடிகள், Adigal - ஸ்வாமியினுடைய அடி, Adi - திருவடிகளை உணர்மின், Unarmin - சிந்தியுங்கள் |
| 1630 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்டிகோளே நாம் இருக்கிறபடி நீங்களும் இப்படியே இருக்கப் பாருங்கோள் -என்கிறார் – ஸ்ரீ சிறு புலியீர் சல சயனத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை ஒழிய வேர் ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை) 3 | பறையும் வினை தொழுது உய்மின் நீர் பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒரு பால் வயல் ஒரு பால் பொழில் ஒரு பால்
சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே –7-9-3 | பதவுரை Show / Hideபணியும் சிறு தொண்டீர், Paniyum Siru Thondheer - (தகாதவிஷயங்களில்) பணிவுள்ள சிறுதொண்டர்களே! (- (தொழுதலால்) (சிறுபுலியூர், சலசயனத்து-;)) நீர், Neer - நீங்கள் தொழுது, Thozhudhu - (சிறுபுலியூர்ச் சலசயனத்தைத்) தொழுது உய்மின், Uymin - உஜ்ஜீவியுங்கள்; வினை, Vinai - பாவங்கள் பறையும், Paraiyum - தொலைந்துபோம்; ஒருபால், Orupaal - ஒருபக்கத்திலுள்ள அறையும் புனல், Araiym Punal - ஒலிக்கின்ற ஜல்த்திலும் ஒருபால், Orupaal - மற்றொருபக்கத்திலுள்ள வயல், Vayal - கழனிகளிலும் ஒருபால், Orupaal - மற்றுமொருபக்கத்திலு்ள பொழில், Pozhil - சோலைகளிலும் சிறை வண்டு இனம் அறையும், Sirai Vandu Inam Araiym - சிறகுகளையுடைய வண்டுத் திரள்கள் ரீ்ங்காரஞ் செய்யப்பெற்ற உறையும், Uraiyum - பொருந்திவாழ்கின்ற இறை, Irai - பெருமானுடைய அடி அல்லது, Adi Allathu - திருவடிகளையன்றி ஒன்று, Ondru - வேறொன்றை இறையும், Iraiyum - சிறிதும் அறியேன், Ariyen - அறியமாட்டேன். |
| 1631 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம்மை அவர்கள் ஆப்தராக நினைத்து இருக்கிறபடியால் தாம் சொல்லிற்று கேட்பார்கள் -என்று பார்த்து தம்படியை அவர்களுக்கு அறிவித்து-நீங்களும் என்னைப் போலே அவனைக் கொண்டு உங்கள் விரோதிகளைப் போக்கிக் கொள்ளப் பாருங்கோள் என்கிறார்) 4 | வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு ஒருபால்
தானாகிய தலைவனவன் அமரர்க்கு அதிபதியாம்
தேனார் பொழில் தழுவும் சிறு புலியூர் சல சயனத்
தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே –7-9-4 | பதவுரை Show / Hideஒருபால், Orupaal - திருமேனியினொரு பக்கத்தில் (- (அடியேன் அறியேன்-)) வான் ஆர் மதி பொதியும் சடை, Vaan Aar Mathi Pothiyum Sadai - ஆகாசத்திலே பொருந்தி யிருக்கிற சந்திரன் அடங்கிய ஜடையை யுடையவனாய் மழுவாளி யொடு, Mazhuvaali Yodu - மழுவேந்தியான சிவனோடு கூடி தான் ஆகிய தலைவன் அவன், Thaan Aagiya Thalaivan Avan - தான் என்று சொல்லப்படும் தலைவனாயிருப்பவனும் அமரர்க்கு அதிபதி ஆம், Amararukku Adhipathi Aam - தேவர்கட்கு இறைவனான இந்திரனும் தானாயிருப்பவனும், தேன் ஆர் பொழில் தழுவும், Then Aar Pozhil Thazhuvum - தேன் நிறைந்த சோலைகள் தழுவப்பெற்ற சிறுபுலியூர், Sirupuliyoor - திருச்சிறுபுலியூரிலே சலசயனத்து, Salasayanathu - சலசயனமென்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனுமான ஆன் ஆயனது, Aan Aayanathu - கோபாலக்ருஷ்ணனுடைய அடி அல்லது, Adi Allathu - திருவடிகளையன்றி ஒன்று, Ondru - மற்றொன்றையும் |
| 1632 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அல்லாதார் செய்தபடி செய்ய அநந்ய கதியான என் பக்கலிலே உன்னுடைய கண் அழிவற்ற கிருபையைப் பண்ணி அருள வேணும்) 5 | நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே –7-9-5 | பதவுரை Show / Hideஇமையோர், Imaiyor - தேவர்கள் நாளும், Naalum - நாள்தோறும் எந்தாய் என, Endhai Enna - எம்பெருமானே! என்று சொல்லி தொழுது, Thozhudhu - அடிபணிந்து ஏத்தும், Aethum - துதிக்கப்பெற்ற இடம், Idam - திவ்யதேசமாய் எறி நீர் செந்தாமரை மலரும் சிறுபுலியூர், Eri Neer Senthamarai Malarum Sirupuliyur - அலைமோதும் நீர் நிலைகளிலே செந்தாமரைப் பூக்கள் மலரப்பெற்றதான சிறுபுலியூரிலுள்ளதான சலசயனத்து, Salasayanathu - சலசயனக்கோயிலிலே (எழுந்தருளியிருக்கிற) அம் தாமரை அடியாய், Am Thamarai Adiyaai - அழகிய தாமரைப் பூப்போன்ற திருவடிகளை யுடையவனே! நந்தா நெடு நரகத்திடை, Nandha Nedu Naragathidai - அழிவில்லாத பெரிய நரகத்திலே நணுகாவகை, Nanugavakai - (நான்) சேராதபடி உனது அடியேற்கு அருள் புரி, Unathu Adiyerku Arul Puri - உன் அடியானான என் திறத்தில் க்ருபை பண்ணவேணும், |
| 1633 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சிறுபுலியீர்ச் சலசயனத்தை தொழுகையே ஸ்வபாவமாக உடையாருடைய திருவடிகளைத் தொழுவார்க்கு துக்கங்கள் நில்லா –அவை தன்னடியே விட்டுப் போம்) 6 | முழு ஆம்பலும் அலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவாரவர் கண் வாய் முக மலரும்
செழுநீர் வயல் தழுவும் சிறுபுலியீர்ச் சலசயனம்
தொழு நீர்மை யது உடையார் அடி தொழுவார் துயர் இலரே –7-9-6 | பதவுரை Show / Hideமுழு நீலமும், Muzhu Neelamum - பூர்த்தியாகக் கறுத்திருக்கிற நீலோற்பவமும் (- (சிறுபுலியூர், சலசயனத்தை-,)) ஆம்பல் மலரும், Aambal Malarum - ஆம்பல் மலர்களும் அரவிந்தமும், Aravindhamum - தாமரைகளும் கழுநீரொடு, Kazhunirodu - செங்கழுநீர்ப் பூக்களும் விரவி, Viravi - சேர்ந்து மடவாரவர், Madavaaravar - (அங்குள்ள) மாதர்களினுடைய கண், Kan - கண்கள் போலவும் வாய், Vaai - அதரம் போலவும் முகம், Mugam - முகம் போலவும் அலரும், Alarum - விகஸிக்கப்பெற்ற செழு நீர் வயல், Sezhu Neer Vayal - செழித்த நீர் நிறைந்த வயல்களினால் தழுவும், Thazhuvum - சுற்றுஞ் சூழப்பட்ட தொழும் நீர்மையது உடையார், Thozhum Neermaiyathu Udaiyaar - தொழுகையையே ஸ்வபாவமாக வுடையவர்களினுடைய அடி, Adi - திருவடிகளை தொழுவார், Thozhuvar - தொழுமவர்கள் துயர் இலர், Thuyar Ilan - துக்கமற்றவரார். |
| 1634 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன் திருவடிகளில் அசாதாரணராய் இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –அடியேன் அறிகிறேன் இல்லை – எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் – இத்தால் சொல்லிற்று ஆயத்து –ஸ்ரீ சௌபரி பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும் இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான்) 7 | சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீயோம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுனதடியார் மனத்தாயோ வறியேனே –7-9-7 | பதவுரை Show / Hideசேய் ஓங்கு, Sei Ongu - மிகவும் உயர்ந்ததாய் தண், Than - குளிர்ந்ததான திருமாலிருஞ் சோலைமலை, Thirumaalirunj Cholaimalai - திருமாலிருஞ்சோலை மலையிலே உறையும், Uraiyum - நித்யவாஸஞ்செய்கிற மாயா, Maayaa - ஆச்சரியனே! (நீ) மறை நான்கினுளாயோ, Marai Naankinulayo - நால் வேதங்களினுள்ளே இருக்கின்றாயோ? தீ ஓம்பு, Thii Oombu - ஹோமத்தீயை வளர்க்கின்ற கை, Kai - கையையுடையரான மறையோர், Maraiyore - வைதிகர்கள் வாழ்கின்ற சிறு புலியூர் சலசயனத் தாயோ, Siru Puliyur Salasayanath Thaayo - சிறுபுலியூரில் சலசயனக் கோயிலுள்ளாயோ? உனது அடியார் மனத் தாயோ, Unathu Adiyaar Manath Thaayo - உனது அன்பர்களின் நெஞ்சிலுள்ளாயோ? அறியேன், Ariyen - அறிகின்றிலேன்; எனக்கு இது உரையாய், Enakku Ithu Urayai - எனக்கு இதை(த் தெரிய) அருளிச் செய்யவேணும். |
| 1635 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுபவ ஜனித ப்ரீதிக்குப் போக்கு விடுகைக்கு பலவாய்த் தலைகளை உடையனாய் சைத்யாதிகளை பிரக்ருதியாக உடைய ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி பிரயோஜன நிரபேஷமாக ரஷணத்திலே ஒருப் பட்டு இருக்கிறவனே – என் பக்கலிலே உன்னுடைய கிருபையைப் பண்ணி அருள வேணும்) 8 | மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஐவாய அரவணை மேல் உறை யமலா யருளாயே –7-9-8 | பதவுரை Show / Hideகிளி, Kili - கிளிகளானவை மடவார், Madavaar - ஸ்த்ரீகளினுடைய செவ்வாய், Sevvaai - சிவந்த வாயில் நின்று முண்டான மொழி, Mozhi - சொற்களை பயிலும், Payilum - ஆவ்ருத்திபண்ணாநின்ற சிறுபுலியூர்,, Siru Puliyur - சலசயனத்து-; ஐ வாய், Ai Vaai - ஐந்து வாயையுடைய அரவு அணை மேல், Aravu Anai Mael - அதிசேஷனாகிற சயனத்தில் மீது உறை, Urai - உறைகின்ற அமலா, Amalaa - நின்மலனே! மை ஆர், Mai Aar - அயணிந்ததாய் வரி, Vari - ரேகைகளையுடைத்தாய் நீலம் மலர், Neelam Malar - கரு நெய்தல் பூப்போன்றதான கண்ணார், Kannaar - கண்ணையுடையரான மாதர்களிடத்திலே மனம், Manam - மனத்தை விட்டிட்டு, Vittittu - விட்டொழித்து உய்வான், Uyvaan - உஜ்ஜீவிப்பதற்காக உன கழலே, Un Kazhale - உனது திருவடிகளையே தொழுது எழுவேன், Thozhudhu Ezhuvein - வணங்கியெழுகின்றேன்; அருளாய், Arulai - (அடியேன் மீது) க்ருபை செய்தருள். |
| 1636 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரதிசய போக்யனாய்க் கொண்டு ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடும் கூட சிறுபுலியூர்ச் சல சயனத்த்திலே சாய்ந்து அருளினவனே-ஸ்ரீ யபதியான உனது திருவடிகளை ஒழிய எனக்கு வேறு ஒரு புகல் இல்லை பிராப்யம் இல்லை) 9 | கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரை யுருவா பிறவுருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடலமுதே யுனதடியே சரணாமே –7-9-9 | பதவுரை Show / Hideகரு மா முகில் உருவா, Karuma Mukil Uruva - கறுத்துப் பெருத்த மேகம் போன்றவடிவையுடையவனே! (- (சிறுபுலியூர் சலசயனத்து-;)) கனல் உருவா, Kanal Uruva - (அன்பில்லாதார்க்கு அணுகவொண்ணாதபடி) நெருப்பைப்போலும் உருவமுடையவனே! புனல் உருவா, Punal Uruva - நீர்போலே குளிர்ந்த வடிவையுடையவனே! பெரு மால் வரை உருவா, Perumal Varai Uruva - மிகவும் பெரிய மலைபோன்ற உருவத்தையுடையவனே! பிற உருவா, Pira Uruva - மற்றுமுள்ள பொருள்களையும் வடிவாக வுடையவனே! நினது உருவா, Ninathu Uruva - உனக்கு அஸாதாரணமான திவ்யமங்களவிக்ரஹத்தை யுடையவனே! திரு மா மகள் மருவும், Thiru Ma Magal Maruvum - பெரிய பிராட்டியார் பொருந்தி வாழ்கிற அரு மா கடல் அமுதே, Aru Ma Kadal Amudhe - பெறுதற்கரிய சிறந்த கடலமுதம் போன்றவனே! உனது அடியே, Unathu Adiye - உனது திருவடிகளே சரண் ஆம், Saran Aam - (அடியேனுக்கு) புகலிடமாம். |
| 1637 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாபம் வருகைக்கு யோக்யமான தேசத்திலே இருக்கச் செய்தேயும் இவற்றை வாயாலே சொல்லி ஆஸ்ரயிக்க- பாபங்கள் தானே நமக்கு இவ்விடம் இருப்பிடம் அல்ல -என்று விட்டுப் போம்) 10 | சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே –7-9-10 | பதவுரை Show / Hideசீர் ஆர் நெடு மறுகில், Seer Ar Nedum Marukil - சீர்மைபொருந்திய நீண்ட திருவீதிகளை யுடைத்தான (- சலசயனக்கோயிலிலே (எழுந்தருளியிருக்கின்ற)) சிறுபுலியூர், Sirupuliyoor - சிறுபுலியூரில் சலசயனத்து ஏர் ஆர், Eer Ar - அழகுமிக்க முகில்வண்ணன் தன்னை, Mukilvannan Thannai - மேகம்போன்ற திருநிறத்தையுடையனாய் இமையோர் பெருமானை, Imaiyor Perumanai - நித்யஸூரிகட்குத் தலைவனான திருமாலைக்குறித்து,- கார் ஆர் வயல் மங்கைக்கு, Kar Ar Vayal Mangaiyku - கருமைபொருந்திய கழனிகளையுடைய திருமங்கை நாட்டுக்கு இறை, Irai - தலைவரான கலியன், Kaliyan - ஆழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை இவை, Malai Ivai - இச்சொல் மாலைகளை பாரார், Paarar - பூமியிலுள்ளவர்கள் பரவி, Paravi - சொல்லி தொழ, Thozha - (அப்பெருமானைத்) தொழுமளவில் பாவம், Paavam - பாவங்கள் பயிலா, Payila - நிற்கமாட்டா (தொலைந்துபோம்) |