திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 8-4 விண்ணவர் தங்கள் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1678பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சீல குணம் சத் கார்ய வாதம் கொண்டு அறிய வேண்டும்படியாய் இருக்கும் –அங்கு பிரமாணங்கள் சொல்ல அறியும் இத்தனை – இங்கு எத்தனையேனும் தாழ்ந்தாருக்கும் முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையைக் கண்ணாலே காண்கையாலே அது ஸ்பஷ்டம் ஆவது இங்கே யாயிற்று – கோல்களிலும் பணை களிலும் வைத்த மதுவை பானம் பண்ணக் கடவ உன்னை சர்வரச -என்கிற வஸ்துவைப் போய் அனுபவி என்று அன்றோ சொல்கிறது – ஸ்வாபதேசம்-சப்தாதி விஷய நிச்சாரதையும் –-பகவத் அனுபவ நிரதிசய சாரத்தையும் சிஷ்யருக்கு அறிவிக்கிறார்) 1
விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன் மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலி புகழ் சேர் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல் வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ –8-4-1
பதவுரை Show / Hide
கோல் தும்பி, Kool Thumbi - கொம்புகளில் திரிகின்றவண்டே!
விண்ணவர் தங்கள் பெருமான், Vinnavar Thangal Perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
திரு மார்வன், Thiru Maarvan - பிராட்டியைத் திருமார்பிற் கொண்டவனும்
மண்ணவர் எல்லாம் வணங்கும், Mannavar Ellam Vanangum - இந்நிலத்திலுள்ளார் எல்லாராலும் வணங்கப் படுபவனும்
மலி புகழ் சேர், Mali Pugazh Ser - நிறைந்த கீர்த்தியை யுடையவனும்
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருப்பவனுமான
எம்பெருமான், Emperumaan - ஸ்வாமியினுடைய
கதிர் முடிமேல், Kathir Mudimael - ஒளிபொருந்திய திருமுடியின் மீதுள்ள
வண்ணம் நறு துழாய், Vannam Naru Thuzhai - அழகியதும் மணத்ததுமான திருத்துழாயைக் கொண்டு
வந்து, Vandhu - இங்கே வந்து
ஊதாய், Oodhai - நீ ஊது.
1679பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருவடிகளை அக்ரமமாக ஏத்தி அதிலே விழுந்து எல்லாரும் ஸ்தோத்ரம் பண்ணி ஸ்நேஹத்தைப் பண்ணுகிற நிதித்யாசிதவ்ய -என்று விதிக்கிற விஷயத்தில் அன்றோ நான் உன்னைப் பற்றச் சொல்லுகிறது) 2
வேத முதல்வன் விளங்கு புரி நூலன் பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி காதன்மை செய்யும் கண்ண புரத் தெம்பெருமான் தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-2
பதவுரை Show / Hide
வேதம் முதல் வன், Vedham Mudhal Van - வேதங்களால் முழு முதற் கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும் (- (கண்ணபுரத்தெம்பெருமானுடைய,-) (அந்த நறுமணத்தைக் கொணர்ந்து)- (ஊதாய் கோல் தும்பீ!-.))
விளங்கு, Vilangu - (திருமேனியில்) விளங்குகின்ற
புரி நூலன், Puri Noolan - யஜ்ஞோபவீதத்தையுடையவனும்
பலரும், Palarum - எல்லாரும்
பாதம், Paadham - திருவடிகளை
பரவி பணிந்து ஏத்தி, Paravi Paninthu Aethi - ஆச்ரயித்து வணங்கித் துதித்து
காதன்மை செய்யும், Kaadhanmai Seyyum - பக்தி பண்ணுதற்கு உரியனான
தாது, Thaadu - தாதுகளையுடைத்தாய்
நறு, Naru - மணம்மிக்கதான
துழாய், Thuzhai - திருத்துழாயிலே
தாழ்ந்து, Thaazhnthu - படிந்து
1680பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தங்களை ஆஸ்ரயணீயராக நினைத்து இறுமாந்து இருக்கிறவர்கள் எல்லாரும் அவ்விறுமாப்பைப் பொகட்டு திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும் படி ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிறவன் – சஜாதீயர் உடைய யாத்ரை அமையாதோ உனக்கு) 3
விண்ட மலரெல்லாம் ஊதி நீ என் பெறுதி அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும் கண்டு வணங்கும் கண்ண புரத் தெம்பெருமான் வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ –8-4-3
பதவுரை Show / Hide
நீ, Nee - நீ (- (கோல் தும்பீ!-) (கண்ணபுரத்தெம்பெருமானுடைய,-) (வந்து ஊதாய்-))
விண்ட மலர் எல்லாம், Vindha Malai Ellam - விகஸித்த புஷ்பங்களி லெல்லாம்
ஊதி, Oothi - ஒலிசெய்து
என் பெறுதி, En Peruthi - என்னபேறு பெறுகின்றாய்? (ஒன்றுமில்லை)
அண்டம் முதல்வன், Andam Muthalvan - பரமபதத்துக்கு நிர்வாஹகனும்
அமருர்கள் எல்லாரும் பண்டு வணங்கும், Amarurgal Ellaarum Pandu Vanangum - தேவர்களெல்லாரும் (தங்கள் அஹங்காரந் தொலைந்து) ஸேவித்து வணங்கப் பெற்றவனுமான
வண்டு நறு துழாய், Vandu Naru Thuzhai - வண்டுகள் படிந்து பரிமளம் மிக்க திருத்துழாயைக் கொண்டு
1681பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாருக்கும் மேல் விழுந்து பற்ற வேண்டும்படியான வடிவை உடையனுமாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை அன்றோ பற்றச் சொல்லுகிறது) 4
நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய் சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக் கார்மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான் தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-4
பதவுரை Show / Hide
நீர்மலிகின்றது, Neermalikinrathu - ஸமுத்ரத்திலே வியாபித்த (- (கோல் தும்பீ-) (கண்ணபுரத் தெம்பெருமானுடைய-;))
ஓர் மீன் ஆய், Oru Meen Aayi - அத்விதீயமான மத்ஸ்யாவதாரமெடுத்தவனும்
ஓர் ஆமையும் ஆய், Oru Aamaiyum Aayi - விலக்ஷணமான கூர்மாவதார மெடுத்தவனும்
சீர் மலிகின்றது ஓர் சிங்கம் உரு ஆகி, Seer Malikinrathu Oru Singam Uru Aagi - சீர்மை மிகுந்த நரஸிம்ஹாவதார மெடுத்தவனும்
கார் மலி வண்ணன், Kaar Mali Vannan - மேகத்திற்காட்டிலும் சிறந்த வடிவு பெற்றவனுமான
தார், Thaar - மாலையிலே
மலி, Mali - பொருந்திய
தண், Than - குளிர்ந்த
துழாய், Thuzhai - திருத்துழாயிலே
தாழ்ந்து, Thaazhnthu - தாமதித்திருந்து
ஊதாய், Oodhai - (வந்து) ஊது.
1682பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்தூதாய்) 5
ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள் காராமையான கண்ண புரத் தெம்பெருமான் தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-5
பதவுரை Show / Hide
நீ, Nee - நீ (- (கண்ணபுரத்தெம்பெருமானுடைய -;))
ஏர் ஆர் மலர் எல்லாம், Ear Ar Malai Ellam - அழகு நிரம்பிய (மற்ற புஷ்பங்களிலெல்லாம்
ஊதி, Oothi - ஒலி செய்து
என் பெறுதி, En Peruthi - என்னபேறு பெறுவாய்;  (ஒன்றும் பெறமாட்டாய்.)
பார் ஆர் உலகம், Par Ar Ulagam - இப்பூமியிலே பொருந்திய ஜனங்களெல்லாம்
பரவ, Parava - வணங்குமாறு
பெரு கடலுள், Peru Kadalul - பெரிய ஸமுத்ரத்தினுள்ளே
கார் ஆமை ஆன, Kar Aamai Aan - பெரிய ஆமையாகத் திருவவதரித்த
தார் ஆர் நறு துழாய், Thar Ar Naru Thuzhai - மாலையிலே பொருந்திய பரிமளம் மிக்க திருத்துழாயிலே
தாழ்ந்து ஊதாய், Thazhndu Oodhai - வைகியிருந்து (வந்து) ஊது.
1683பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ அங்கே சென்றால் முகம் தருவிப்பார் உண்டு அவன் தான் விரோதி நிரசன சீலன்- என்றும் ஒக்க ஆபத்துக்களில் உதவிப் போந்தவன் உதவாது ஒழியிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன் ஆனபின்பு அவன் பக்கலிலே சென்று இங்கே வந்தூதப் பாராய் -என்கிறாள்) 6
மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன் பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடி மேல் தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-6
பதவுரை Show / Hide
மார்வில் திருவன், Marvil Thiruvan - திருமார்பிலே ஸ்ரீ மஹாலக்ஷிமியை யுடையவனும் (- (கோல் தும்பீ!-))
வலன் ஏந்து சக்கரத்தன், Valan Aendhu Chakkarathan - வலத்திருக்கையில் தரிக்கப்பட்ட திருவாழியையுடையவனும்
பாரை, Parai - (அண்டபித்தியில்) ஒட்டிக்கிடந்த பூமியை
பிளந்த பரமன், Pilanda Paraman - (மஹாவராஹமாகிக்) குத்திக் கொணர்ந்த மேன்மை வாய்ந்தவனும்
பரம் சோதி, Param Sothi - நிகரற்ற சோதியே வடிவெடுத்தவனும்
காரில் திகழ், Kaaril Thigal - கறுப்பு நிறத்தினால் விளங்குகின்ற
காயா, Kaayaa - காயாம்பூப்போன்ற
வண்ணன், Vannan - வடிவையுடையவனுமான பெருமானுடைய
கதிர் முடிமேல், Kathir Mudimael - ஒளி பொருந்திய திருமுடிமீதுள்ள
தாரில், Thaaril - மாலையில் (தொடுக்கப்பட்டிருக்கின்ற)
நறு, Naru - பரிமளம் மிக்க
துழாய், Thuzhai - திருத்துழாயில்
தாழ்ந்து, Thaazhnthu - தங்கியிருந்து
ஊதாய், Oodhai - (வந்து) ஊது.
1684பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கையாலே வளைத்து கார்யம் கொள்ளலாம் படி இருக்குமவன் – அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமனுக்கும் கூட உத்பாதகன் – மாலையாய் பரிமளிதமான திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்தூதாய்) 7
வாமனன் கற்கி மதுசூதனன் மாதவன் தார் மன்னு தாசரதியாய தட மார்வன் காமன் தன தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான் தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-7
பதவுரை Show / Hide
வாமநன், Vaamanan - வாமநாவதாரஞ் செய்தவனும் (- (கண்ணபுரத்தெம்பெருமானுடைய-;) (தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ!-.))
கற்கி, Karkki - கல்கியவதாரம் செய்யப் போகிறவனும்
மது சூதன், Madhu Soothan - மதுவென்னு மசுரனைக் கொன்றவனும்
மாதவன், Madhavan - திருமகள் கொழுநனும்
தார் மன்னு, Thar Mannu - (ரக்ஷகத்வஸூசகமான) மாலை பொருந்திய
தட மார்வன், Thada Marvan - பெரிய திருமார்பையுடையவனும்
தாசரதி ஆய, Dasarathi Aaya - தசரத புத்ரனாகத் திருவவதரித்தவனும்
காமன் தன் தாதை, Kaman Than Thathai - மன்மதனுக்குத் தந்தையுமான
தாமம், Thamam - மாலையிலுள்ள
நறு, Naru - பரிமளம் மிக்க
துழாய், Thuzhai - திருத்துழாயில்
1685பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதிகளுக்கும் மிருத்யு வானவன் – ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சந்நிஹிதனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய புகரை உடைத்தான திரு அபிஷேகத்தின் மேலே உண்டான-தர்ச நீயமான திருத் துழாய் மாலையிலே வந்தூதாய்) 8
நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில் சால மலரெல்லாமூதாதே வாளரக்கர் காலன் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல் கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ –8-4-8
பதவுரை Show / Hide
நெடு நீர், Nedu Neer - அதிகமான ஜலத்தையுடைய (- (கோல் தும்பீ!-) (கண்ணபுரத்தெம்பெருமானுடைய-;) (கொண்டு ஊதாய்-.))
வயல், Vayal - வயல்களிலுண்டான
நீலம் மலர்கள், Neelam Malargal - நீலோற்பல மலர்களிலும்
மருங்கில், Marungil - சுற்றிலுமுள்ள
மலர் எல்லாம், Malar Ellam - எல்லா மலர்களிலும்
சால, Sala - மிகவும்
ஊதாதே, Oothathe - ஒலிசெய்வது தவிர்த்து
வாள் அரக்கர் காலன், Vaal Arakkar Kalan - வாட்படையையுடைய ராக்ஷஸர்களுக்கு மிருத்யுவான
கதிர் முடி மேல், Kathir Mudi Mael - ஒளி பொருந்திய திருமுடி மீதுள்ள
கோலம், Kolam - அழகிய
நறு, Naru - பரிமளம் மிக்க
துழாய், Thuzhai - திருத்துழாயை
1686பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு அபூமியான இருக்கிற இடத்தில் போகச் சொல்லுகிறேனோ) 9
நந்தன் மதலை நிலமங்கை நற்துணைவன் அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான் கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல் கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ –8-4-9
பதவுரை Show / Hide
நந்தன் மதலை, Nandan Mathalai - நந்தகோப குமாரனும் (- (கோல் தும்பீ!-))
நிலம் மங்கை நல் துணைவன், Nilam Mangai Nal Thunaivan - பூமிப்பிராட்டிக்கு இனிய வல்லபனும்
அந்தம் முதல்வன், Andham Muthalvan - ஸம்ஹாரத்துக்குக் ஸ்ருஷ்டிக்குங் கடவனும்
அமரர்கள் தம் பெருமான், Amarar Galam Perumaan - நித்யஸூரிகட்குத் தலைவனும்
கந்தம் கமழ், Kandham Kamazh - பரிமளம் கமழப்பெற்றவனும்
காயா வண்ணன், Kaayaa Vannaan - காயாம்பூப்போன்ற நிறத்தனுமான பெருமானுடைய
கதிர் முடிமேல், Kathir Mudimael - ஒளிபொருந்திய திருமுடியின் மீதுள்ள
கொந்து, Kondhu - கொத்துக் கொத்தான
நறு, Naru - மணம்மிக்க
துழாய் கொண்டு, Thuzhaai Kondo - திருத்துழாயைக் கொணர்ந்து
ஊதாய், Oodhai - ஊது.
1687பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேஷ பூதரான நாங்கள் இவற்றைக் கொண்டு பாடும்படியாக நீ உன் ஹிருதயத்திலே கொண்டு அவன் பக்கலிலே அறிவித்து எங்களுக்கு அவன் முகம் தரும்படி பண்ணி எங்கள் குறையைத் தீர்க்கப் பாராய் – என்கிறார் பத்தாம் பாசுரத்தில் இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும்) 10
வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன் கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத் தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ –8-4-10
பதவுரை Show / Hide
வண்டு அமரும் சோலை, Vandu Amarum Solai - வண்டுகள் படிந்த சோலைகளையுடையதும் (- (கோல் தும்பீ!-))
வயல், Vayal - கழனிகளை யுடையதுமான
ஆலி, Aali - திருவாலி யென்கிற
நல் நாடன், Nal Naadan - நல்ல நாட்டுக்குத் தலைவரும்
கண்ட சீர், Kanda Seer - பிரத்யக்ஷமான திருக்குணங்களையுடையவரும்
வென்றி, Vendri - ஜயசீலருமான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Maalaik - இச்சொல் மாலையைக் கொண்டு,
கொண்டல் நிறம் வண்ணன், Kondal Niram Vannaan - மேகத்தின் நிறம்போன்ற நிறத்தையுடையனான
கண்ண புரத்தானை, Kanna Puraththaanai - திருக்கண்ணபுரத் தெம்பெருமானை
தொண்டரோம், Thondarom - அடியோங்கள்
பாட, Paada - பாடும்படியாக
நினைந்து, Ninaindhu - நீ நெஞ்சிற்கொண்டு
ஊதாய், Oodhai - ஊதவேணும்.