திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1718 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சதா ஏக ரூபமான வடிவை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு வந்து அவதரித்தவன் – சேஷ பூதனான நான் காணப் பெற்றேன்) 1 | வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக்கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே –8-8-1 | பதவுரை Show / Hideமுது முந்நீர், Muthu Munneer - கடல் வெள்ளம் (- (அடியேன் கண்டு கொண்டேன்-.)) வானோர் அளவும், Vaanor Alavum - தேவர்களின் எல்லையளவும் வளர்ந்த காலம், Valarntha Kaalam - பரந்து சென்ற காலத்திலே வலி உருவின் மீன் ஆய் வந்து, Vali Uruvin Meen Aay Vandhu - வலிகொண்ட வடிவையுடைய மீனாய்த் திருவவதரித்து வியந்து, Viyandhu - ஆச்சரியப்படும்படியாக உய்யக்கொண்ட, Uyyaikonda - எல்லாரையும் பிழைப்பித்தருளின தண் தாமரை கண்ணன், Than Thamarai Kannan - குளிர்ந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனும் ஆனா உருவின் ஆன் ஆயன் அவனை, Aana Uruvin Aan Aayan Avanai - விகாரமற்ற உருவையுடைய ஸ்ரீ கிருஷ்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானை, அம், Am - அழகிய மா, Maa - பரந்த விளை, Vilai - விளைவுமிக்க வயலுள், Vayalul - வயல்களை யுடையதும் கான் ஆர் புறவில், Kaan Ar Puravil - காடுகள் செறிந்த பர்யந்தங்களை யுடையதுமான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே |
| 1719 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேஜஸ்சை உடைத்தான அம்ருதமானது தோற்றும் அளவும் நீருக்கு இறாயாதாய வடிவை உடைய ஆமையாய்- மலை திரிந்து வரும்படியாக பரப்பை உடைத்தான கடலிலே அதுக்கு தாரக பூதனாய்க் கொண்டு கிடந்த விஸ்மய நீயனை ஸ்ரீ கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே) 2 | மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு
இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-2 | பதவுரை Show / Hideமலங்கு, Malangu - (உள்ளுக்கிடக்கிற) மீன்சாதிகள் (- (அடியேன் கண்டுகொண்டேன்-)) விலங்கு, Vilangu - தடுமாறும்படியான நெடுவெள்ளம், Neduvellam - பெரிய வெள்ளம் மறுக, Maruga - குழம்பும்படியாக அங்கு, Angu - ஆழமான அவ்விடத்திலே ஓர் வரை நட்டு, Or Varai Nattu - ஒரு (மந்தர) பர்வதத்தை நாட்டி இலங்கு சோதி ஆர் அமுதம், Ilangu Sothi Ar Amudham - விளங்குகின்ற தேஜஸ்ஸோடு கூடின அம்ருதமானது எய்தும் அளவு, Eydhum Alavu - தோன்றும் வரையில் ஓர் ஆமை ஆய், Or Amai Aayi - ஒப்பற்ற ஆமையா யிருந்துகொண்டு விலங்கல், Vilangal - அந்த மந்தரமலையானது திரிய, Thiriya - நாற்புறமும் திரிந்து வரும்படியாக தட கடலுள், Tada Kadalu - பெரிய அக்கடலிலே சுமந்து கிடந்த, Sumandhu Kidandha - (அம்மலையைத்) தாங்கிக்கொண்டிருந்த வித்தகனை, Vithagankalai - ஆச்சரியபூதனான பெருமானை கலங்கல் முந்நீர் கண்ணபுரத்து, Kalangal Munneer Kannapurathu - கலக்கமுள்ள கடலை அணித்தாக வுடைய திருக்கண்ணபுரத்திலே |
| 1720 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அண்டபித்தியிலே சென்று சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறுகைக்கு ஈடான வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை) 3 | பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3 | பதவுரை Show / Hideமுது முந்நீர், Muthu Munneer - கடல் வெள்ளம் (- (அடியேன் கண்டுகொண்டேன்-.)) பாராரளவும், Paararalavum - பூமிப்பரப்படங்கலும் பரந்த காலம், Paranda Kaalam - சூழ்ந்த காலத்தில் வளை மருப்பில், Valai Maruppil - வளைந்த கோரப்பல்லையுடைய ஏர் ஆர் உருவத்து, Aer Ar Uruvathu - அழகு மிக்க திருமேனியை யுடைய ஏனம் ஆய், Enam Aayi - வராஹமூர்த்தியாகி எடுத்த, Edutha - (பூமியை) உத்தரிப்பித்த ஆற்றல், Aatral - மிடுக்கையுடையனான அம்மானை, Ammaanai - ஸர்வேச்வரனை கூர் ஆர், Koora Ar - கூர்மை பொருந்திய (வாயலகுகளையுடைய) குருகு, Kurugu - நாரைகளானவை ஆரல், Aaral - ஆரல் மீன்களை இரை கருதி, Irai Karuthi - ஆஹாரமாகக் கொள்ள நினைத்து பாய, Paaya - (நீரில்) பாய்ந்தவளவிலே கயல், Kayal - கயல் மீன்கள் இரியும், Iridum - அஞ்சியோடும் படியுள்ளதும் கார் ஆர் புறவில், Kaar Ar Puravil - மேகங்கள் படிந்த சோலைகளை யுடையதுமான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில் |
| 1721 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ரு பஷமானது குலைந்து ஓடும்படி இருக்கிற சிம்ஹமும்-உளை மயிருமாய் மனுஷ்ய வேஷமும் சேராத வடிவு இரண்டும் சேர்ந்து தோன்ற –சத்ருவான ஹிரண்யனுடைய மார்வை யுத்தத்திலே பிளந்து வளைந்த திரு வுகிரை உடையவனை) 4 | உளைந்த வரியும் மானிடமும் உடனேத் தோற்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றொன் அகலம் வெஞ்சமத்து
பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4 | பதவுரை Show / Hideஉளைந்த, Ulaindha - கண்டபோதே அஞ்சி நடுங்க வேண்டும்படியான (- (அடியேன் கண்டுகொண்டேன்-.)) அரியும், Ariyum - சிங்கவுருவத்தையும் மானிடமும், Maanidamum - மனிதவுருவத்தையும் உடனாய் ஒன்றுவித்து, Udanai Onruvithu - ஒருசேரப் பொருந்தச் செய்து தோன்ற, Thondra - (நரஸிம்ஹரூபியாய்த்)தோன்ற (அப்போது) விளைந்த, Vilaintha - உண்டான சீற்றம், Seetrum - கோபத்தைக் கண்டு விண் வெதும்ப, Vin Vethumba - விண்ணுலகத்தவர்களும் அஞ்சி நடுங்க வேற்றோன், Vetroron - பகைவனான இரணியனுடைய அகலம், Agalam - மார்பை வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்திலே பிளந்து, Pilandhu - இருபிளவாக்கி வளைந்த உகிரானை, Valaindha Ukiraanai - வளைந்த நகங்களையுடைய பெருமானை, பெரு, Peru - பெருத்த தண், Than - அழகிய செந்நெல் குலை, Sennel Kulai - செந்நெற்கதிர்கள் தடிந்து, Thadinthu - வயிரம்பற்றி களம் செய், Kalam Sei - இருள் மூடியிருக்கப்பெற்ற புறவில், Puravil - சுற்றுப்பிரதேசங்களை யுடைத்தான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே |
| 1722 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சதா ஏக ரூபமான விக்ரஹத்தை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை – தோன்றுகின்ற வாமன வேஷம் அன்று கிடீர் இவனுக்கு நிலை நின்ற வடிவு) 5 | தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால்
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும்
கழு நீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-5 | பதவுரை Show / Hideதொழும் நீர், Thozhum Neer - கண்டவாறே வணங்கவேண்டும் படியான நீர்மையையுடைய (- (அடியேன் கண்டு கொண்டேன்-.)) வடிவின், Vadivin - வடிவு கொண்ட குறள் உரு ஆய், Kural Uru Aay - வரமந ரூபியாய் வந்து தோன்றி, Vandhu Thondri - அவதரித்து மாவலிபால், Mavalipaal - மஹாபலியினிடத்தில் முன், Mun - முன்பொருகால் முழுநீர் வையம், Muzhneer Vaiyam - கடல் சூழ்ந்த வுலகத்தை கொண்ட, Konda - இரந்து பெற்ற மூவா உருவின், Moova Uruvin - விகாரமற்ற ரூபத்தையுடையனான அம்மானை, Ammaanai - ஸர்வேச்வரனை, உழு நீர், Uzhu Neer - (எப்போதும்) உழுவதையே இயல்வாகவுடைய வயலுள், Vayalul - வயல்களிலே பொன் கிளப்ப, Pon Kilappa - பொன் விளையப் பெற்றதும் ஒருபால், Orupaal - வேறு சில இடங்களில் முல்லை, Mullai - முல்லைமலர்களும் முகையோடும், Mugaiyodum - கருமுகைமலர்களும் கழுநீர், Kazhunir - செங்கழுநீர்ப்பூக்களும் மலரும், Malarum - மலரப் பெற்றதுமான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே |
| 1723 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடித்த வாயை உடைய மழுவே ஆயுதமாக வந்து தோன்றி இருபத்தொரு படி கால் பூமி நெளியும்படியாக வந்து தோன்றின –ஷத்ரிய குலத்தை அறுத்துப் பொகட்ட வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை) 6 | வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-6 | பதவுரை Show / Hideவடி வாய், Vadi Vaai - கூர்மை பொருந்திய வாயையுடைய (- (அடியேன் கண்டுகொண்டேன்-.)) மழுவே, Mazhuve - கோடாலியையே படை ஆக, Padai Aaga - ஆயுதமாகக் கொண்டு வந்து தோன்றி, Vandhu Thondri - (பரசுராமனாய்த்) திருவவதரித்து மூ எழுகால், Moo Ezhugaal - இருபத்தொரு தலைமுறையளவும் படி, Padi - பூமியில் ஆர், Aar - நிறைந்திருக்கிற அரசு, Arasu - க்ஷத்ரியர்களாகிற களை, Kalai - விரோதிகளை கட்ட, Katta - தொலைத்த பாழியானை, Paazhiyaanai - மிடுக்குடையனான அம்மானை, Ammaanai - எம்பெருமானை,- வண்டு, Vandu - வண்டுகளானவை குடி ஆ, Kudi Aa - குடும்பமாக கொண்டு உண்ண, Kondhu Unna - (மதுவை) எடுத்துப் பருகும்படியாக கோலம் நீலம், Kolam Neelam - அழகிய நீலோற்பல மலர்கள் மட்டு, Mattu - மதுவை உகுக்கும், Ugukkum - பெருகச்செய்யப் பெற்ற கடி ஆர் புறவின், Kadi Aar Puravin - பரிமளம் மிக்க சுற்றுப் பிரதேசங்களையுடைய கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில் |
| 1724 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெவ்விய சீற்றத்தை உடைய கடியிலங்கை குடி கொண்டோட யுத்தத்திலே வெவ்விய போரை பண்ணின நம்முடைய ஸ்ரீ ஸ்வாமியை) 7 | வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-7 | பதவுரை Show / Hideவையம் எல்லாம், Vaiyam Ellam - உலகமெல்லாம் (- (அடியேன் கண்டுகொண்டேன்-.-)) உடன் வணங்க, Udan Vananga - ஒருமைப்பட்டு திருவடிகளில் விழுந்துவணங்க வணங்கா, Vanangaa - தான் ஒருவரையும் வணங்க வேண்டும்படியிராத மன்னன் ஆய், Mannan Aay - ராஜாதிராஜனாய் (இராமபிரானாய்) தோன்றி, Thonri - திருவவதரித்து வெய்ய சீற்றம், Veyya Seetrum - கடுமையான சீற்றத்தையுடையதும் கடி, Kadi - அரண்களையுடையதுமான இலங்கை, Ilankai - இலங்காபுரியிலுள்ளவர்கள் குடி கொண்டு ஓட, Kudi Kondu Oda - குடும்பத்தோடும் (யமலோகத்திற்கு) ஓடிச் செல்லும்படியாக வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்தில் வெம் போர் செய்த, Vem Por Seitha - கடுமையான யுத்தத்தை நடத்தின நம் பரனை, Nam Paranai - எம்பெருமானை,- செழு, Sezhu - அழகிய தண், Than - குளிர்ந்த கானல், Kaanal - நெய்தல் நிலத்தையுடையதும் மணம் நாறும் கைதை, Manam Naarum Kaithai - பரிமளம்மிக்க தாழைகளை வேலி, Veli - வேலியாகவுடையதுமான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே |
| 1725 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெற்றியே தொழிலாக உடைய வேலை உடைய ராஜாக்கள் விண்ணிலே செல்ல யுத்தத்திலே செற்ற வெற்றியை தொழிலாக உடையவனை) 8 | ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8 | பதவுரை Show / Hideஒற்றை குழையும், Otrai Kuzhaiyum - ஒரு காதில் தொங்குகிற திருக்குண்டலமும் (- (அடியேன் கண்டுகொண்டேன்-.)) ஒருபால், Orupaal - ஒரு பக்கத்தில் நாஞ்சிலும், Naanjilum - கலப்பையும் தோன்ற, Thondra - விளங்க தான் தோன்றி, Thaan Thondri - (பலராமனாய்த்) திருவவதரித்து, வெற்றி தொழிலார், Vettri Thozhilar - ஜயம்பெறுவதையே இயல்வாக வுடையரும் வேல், Vel - வேற்படையையுடையருமான வேந்தர், Vendar - அரசர்கள் விண் பால் செல்ல, Vin Paal Chella - வீரதஸ்வர்க்கத்திற்குச் சென்று சேரும்படி வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்தில் செற்ற, Settra - (அவ்வரசர்களை) அழியச் செய்ததனாலுண்டான கொற்றம், Kotrham - வெற்றியை தொழிலானை, Thozhilaanaik - தொழிலாகவுடைய பெருமானை,- செம் தீ மூன்றும், Sem Thee Moondrum - த்ரேதாக்நிகளெனப்படுகிற மூன்று அக்நிகளும் இல், Il - திருமாளிகை தோறும் இருப்ப, Iruppa - ஜ்வலித்துக் கொண்டிருக்கப்பெற்றதும் கற்ற மறையோர், Katra Maraiyor - கலைகளைக் கற்ற வைதிகர்களுடையதுமான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில் “ஒற்றைக்குழையும், Otrai Kuzhaiyum - ஒருகாதுக்குழையும்” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம். இதற்கு அரும்பதவுரைகாரர் |
| 1726 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அபர பஷத்திலே அஷ்டமியிலே நள் இருளிலே பிறந்தவனை) 9 | துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள்
இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த வம்மானை
உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-9 | பதவுரை Show / Hideதுவரி கனி வாய், Thavari Kani Vaai - இலவம் பூப்போலவும் கொவ்வைக்கனி போலவும் சிவந்த அதரத்தையுடையளான (- (அடியேன் கண்டுகொண்டேன்-.)) நிலம் மங்கை, Nilam Mangai - பூமிப்பிராட்டியானவள் துயர் தீர்ந்து, Thuyar Theerndhu - (பாவிகளைச் சுமப்பதனாலுண்டான) துக்கம் தொலைந்து உய்ய, Uyya - சுகப்படும்படியும், பாரதத்துள், Bharathaththul - பாரதப் போரில் இவரித்த, Ivariththa - எதிரிட்ட அரசர், Arasar - ராஜாக்கள் தடுமாற, Thadumara - நிலைகுழம்பும்படியாகவும் இருள் நாள், Irul Naal - இராப்பொழுதில் பிறந்த, Pirandha - திருவவதரித்த அம்மானை, Ammaanai - ஸ்வாமியை,- ஒரு பால், Oru Paal - ஒரு புறத்தில் உவரி ஓதம், Uvari Otham - கடலலைகள் முத்து, Muthu - முத்துக்களை உந்த, Unda - ஒதுக்கித்தள்ளவும் ஒரு பால், Oru Paal - இன்னொருபுறத்தில் ஒண், On - அழகிய செந்நெல், Sennel - செந்நெற்பயிர்கள் கவரி வீசும், Kavari Veesum - சாமரம் போல் வளைந்து வீசவும் பெற்ற கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே |
| 1727 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே கண்டு அடிமை புக்க –ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல பாவமானது போம்) 10 | மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே –8-8-10 | பதவுரை Show / Hideமீனோடு, Meenodu - மத்ஸ்ய ரூபியாயும் ஆமை, Aamai - கூர்ம ரூபியாயும் கேழல், Kezhal - வராஹரூபியாயும் அரி, Ari - நரஸிம்ஹ ரூபியாயும் குறள் ஆய், Kural Aay - வாமநமூர்த்தியாயும் முன்னும் இராமன் அய், Munnum Iraaman Ayi - பரசுராம மூர்த்தியாயும் தான் ஆய், Thaan Aay - ஸாக்ஷாதவதாரமான ஸ்ரீராமபிரானாயும் பின்னும் இராமன் ஆய், Pinnum Iraaman Aay - பலராமனாயும் தாமோதரன் ஆய், Thaamodharan Aay - கண்ணபிரானாயும் கற்கியும் ஆனான் தன்னை, Karkiyum Aanaan Thannai - கல்கியாயும் திருவவதாரஞ் செய்யுமியல் பினனான எம்பெருமானை கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே (ஸேவித்து) அடியன், Adiyan - சேஷபூதரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி செய், Oli Sei - அருளிச் செய்த தேன் ஆர் இன் சொல், Then Aar In Sol - தேன் போன்று மதுரமான சொற்களையுடைய தமிழ் மாலை, Tamizh Maalai - இத்தமிழ்ப்பாசுரங்களை செப்ப, Seppa - அப்யஸிக்குமளவில் பாவம், Paavam - பாவங்கள் நில்லா, Nilla - நிற்கமாட்டாமல் அகன்றொழியும், |