திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3656 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (வடதளசயனனான மஹோபகாரகன் திருவடிகளிலே ப்ரேமத்தோடு பணிந்து அநவாத கைங்கரியம் பண்ணுங்கோளென்று, இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற ஆச்ரயணத்தைச் சுருக்கமாகவருளிச் செய்கிறார்.) 1 | மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1 | பதவுரை Show / HideVelai modhum madhil sul,வேலை மோதும் மதில் சூழ் - கடலலை மோதப் பெற்ற மதிளாலே சூழப்பட்ட Thirukkannapurathu,திருக்கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருப்பவனும் Aalin mel,ஆலின் மேல் - ஜலத்தின் மீது Aal amarnthaan,ஆல் அமர்ந்தான் - ஆலிலையில் கண் வள்ர்ந்தவமான Maalai,மாலை - ஸர்வேச்வரனை Kanni,கண்ணி - கிட்டி Adi inaigal,அடி இணைகள் - அவனது உபயபாதங்களையும் Kaalai maalai,காலை மாலை - இரவும் பகலும் Kamalam malar ittu,கமலம் மலர் இட்டு - தாமரைப்பூக்களை ஸமர்ப்பித்து Neer,நீர் - (அன்பர்களே!) நீங்கள் Vinai keda,வினை கெட - (உங்களுடைய) பாவம் தொலையும்படி Thozhudhu ezumin,தொழுது எழுமின் - வணங்கி உஜ்ஜீவியுங்கள் |
| 3657 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (“கள்ளவிழும் மலரிட்டு இறைஞ்சுமின் “என்று அருளிச் செய்கையாலே இன்ன மலரென்று ஒரு நிர்ப்பந்தமில்லை யென்பது காட்டப்படும். கீழ்ப்பாட்டில் “கமல மலரிட்டு ” என்றது– கமல மலரேயாக வேணுமென்றும் அதுபோன் சிறந்த மலரேயாக வேணுமென்றும் காட்டினபடியன்று என்பதை இப்பாட்டில் தெளியவைத்தாராயிற்று..) 2 | கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2 | பதவுரை Show / HideThondare,தொண்டரே - எம்பெருமானிடத்து ஆசையுள்ளவர்களே Neer,நீர் - நீங்கள் Kal avizhum malar,கள் அவிழும் மலர் - தேனொழுகுகின்ற புஷ்பங்களைப் பணிமாறி Iraijin,இறைஞ்சுமின் - வணங்குங்கள் Nalli serum,நள்ளி சேரும் - பெண் நண்டுகள் களித்த வாழப்பெற்ற கழனிகள் சூழ்ந்த Vayal sul kidankin,வயல் சூழ் கிடங்கின் - அகழ்களைப் பக்கங்களிலே யுடையதும்புடை Velli aaynth madhin soo zh,வெள்ளி ஏய்ந்த மதின் சூழ் - சுக்கிரனைத் தொட்டுக் கொண்டிருக்கிற மதிள்களாலே சூழப்பட்டதமான Thiru Kannapuram,திரு கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தை Ullli,உள்ளி - சிந்தனை செய்து கொண்டு Naalum,நாளும் - நாடோறும் Thozhudhu ezumin,தொழுது எழுமின் - வணங்கி உஜ்ஜீவியுங்கள் |
| 3658 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (திருக்கண்ணபுரத்திலே நின்றருளினவன் உபயவிபூதி நாதனாயிற்று; தொண்டர்களே உங்கள் துக்கங்கெட அநந்யப்ரயோஜநராய்க் கொண்டு ஆச்ரயியுங்கோளென்கிறார்) 3 | தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3 | பதவுரை Show / HideThondar,தொண்டர் - தொண்டர்களே Vantu paadum pozhi soo zh,வண்டு பாடும் பொழிழ் சூழ் - வண்டுகள் பாடுமிடமான் சோலைகளாலே சூழப்பட்ட Thiru Kannapurathu,திரு கண்ணபுரத்து - திருக் கண்ணபுரத்தி வெழுந்தருளியிருக்கிற Andam vaanan amarar perumaa nai,அண்டம் வாணன் அமரர் பெருமானை - அகிலாண்ட கோடி ப்ரஹ மாண்டநாயகனான எம்பெருமானை Thum tham thuyar poka,தும் தம் துயர் போக - உங்களுடைய துக்கம் தொலையும்படி Neer aegam aay,நீர் ஏகம் ஆய் - நீங்கள் அநந்ய ப்ரயோஜநர்களாய் Vindu vaadaa malar ittu,விண்டு வாடா மலர் இட்டு - மலர்ந்து வாடாத (அப்போதலர்ந்த) பூக்களைப் பணிமாறி Neer iraijumeen,நீர் இறைஞ்சுமீன் - நீங்களே தொழுங்கள் |
| 3659 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (ஆச்ரயிக்குமளவில் நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயியுங்கொள்; அவளுடைய புருணகாரபலத்தாலே பேறு தப்பாதென்கிறார்.) 4 | மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4 | பதவுரை Show / HideMaanai nokki mada pinai than kaelvanai,மானை நோக்கி மட பின்னை தன் கேள்வனை - மானை யொத்த கண்பார்வையை யுடையளான நப்பின்னைப்பிராட்டிக்கு நாதனும் Kaenai,கேணை - தேன்போல் இனியனுமான எம்பெருமானை Vaadaa malar ittu neer iraijchamin,வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சமின் - அப்போதலர்ந்த செவ்விப் பூக்களையிட்டு நீங்கள் தொழுங்கள் Vaanai undhum madhil soo zh,வானை உந்தும் மதிள் சூழ் - ஆகாசத்தை யளாவியிருக்கின்ற மதிகளாலே சூழப்பட்ட Thiru Kannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தை Nayanda perumaan thaane,நயந்த பெருமான் தான் - விரும்பியிருக்கின்ற சௌரிப்பெருமானே Saran aagum,சரண் ஆகும் - ரக்ஷகராவர் |
| 3660 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (கீழ்ச்சொன்னபடி பக்தி யோகத்தால் அவனை யாம்யிக்க அதிகாரிகளல்லாமல் தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினவர்களுக்கு எ ம்பெருமான் எல்லாப்படியானும் தக்ஷகனாய் தேஹாவஸானத்திலே அவர்களை இந்த ப்ரக்ருதியில் நின்றும் விடுவித்துத் திருநாட்டிலே கொண்டுபோய் வைத்தருள்லனென்கிறார்.) 5 | சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5 | பதவுரை Show / HideThanathaal adai tharukku,தனதாள் அடை ந்தார்க்கு - தனது திருவடிகளை உடைந்தவர்களுக்கு Charanam ellaam aagum,சரணம் எல்லாம் ஆகும் - ஸகலவித ரக்ஷசனுமாய் Maranam aanal,மரணம் ஆனால் - இந்த தேஹம் விட்டு நீங்கினவுடனே Vaikundam kodukkum,வைகுந்தம் கொடுக்கும் - பரமபதமளிக்கும் பெருமானுமாய்பிரான் Thiru Kannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரமாகிற Kaan,காண் - ஷேத்திரத்தை Aalan,ஆளன் - ஆள்பவனுமான எம்பெருமான் Anbu aagum,அன்பு ஆகும் - அன்புதானே வடிவெடுத்தவனாயிருப்பன் |
| 3661 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( தன தாளடைந்தார்க்கெல்லாம் அன்பனாகும்= “அநாலோசித விசேஷாசேஷ லோகசரண்ய!” என்று எம்பெருமானாரருளிச் செய்வதை இங்கு அநுஸந்திப்பது. தனது திருவடிகளையுடைந்தாரில் இன்னாரினையாசென்று வாசி பாராதே வஸிஷ்ட சண்டாள விபாகமற எல்லார்க்குமொக்க ஸ்நேஹிக்குமவன் எம்பெருமான் என்று ஆழ்வானருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம்.) 6 | அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6 | பதவுரை Show / HideThana thaal adainthaarkku ellaam,தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - தனது திருவடிகளைப்பற்றினாரெல்லார்க்கும் Anban aagum,அன்பன் ஆகும் - அன்பு செய்பவனாய் Sempon aagathu avunan udal keentavan,செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கிண்டவன் - சிவந்த பொன்போன்ற அடம்பையுடைய இரணியாசுரனது உடைலைக் கீண்டவனாய் Naan pon eyndha madhil sooal,நான் பொன் எய்ந்த மதிள் சூழ் - நல்ல பொன்னாலே யமைத்த மதிளாலே சூழப்பட்ட Thiru Kannapurathu Anban,திரு கண்ணபுரத்து அன்பன் - திருக்கண்ணபுரத்திலே விருப்பமுடையவனான எம்பெருமான் Thana meyyarkku,தன மெய்யர்க்கு - தன் திறத்திலே உண்மையாக ஸ்நேஹிக்குமவர்களுக்கு Naalum meyyan,நாளும் மெய்யன் - எப்போதும் உண்மையான ஸ்நேஹமுடையவன் |
| 3662 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( இப்படி மெய்யர்க்கே மெய்யனாயும் பொய்யர்க்கே பொய்யனாயுமிருக்கு மிருப்பைத் திருக்கண்ணபுரத்திலே காட்டிக் கொண்டு வர்த்திக்கும் பெருமான் , ஆகத்து அணைப்பார்கட்கு அணியன் தன்னை ஹருதயத்திலே வைப்பார்க்குக் கையாளாயிருப்பன்.) 7 | மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே –9-10-7 | பதவுரை Show / HideVirumbi thozhu vaarkku ellaam,விரும்பி தொழு வார்க்கு எல்லாம் - தன்னையே புருஷார்த்தமாக ஆசைப்பட்டு தொழுமவர்களெல்லார்க்கும் Meyyan aagum,மெய்யன் ஆகும் - மெய்யன்பனாய் Purame thozhuvaarkku ellaam,புறமே தொழுவார்க்கு எல்லாம் - பிரயோஜநாந்தாங்களுக்காக மேலெழுத் தொழுமவர்களுக்கெல்லாம் Poyyan aagum,பொய்யன் ஆகும் - தன்னை உள்ளபடி காட்டமாட்டாதவனாய் Seiyilvaalai ugalum Thiru Kannapurathu Aiyan,செய்யில்வாளை உகளும் திரு கண்ணபுரத்து ஐயன் - கழனிகளில் வாளை மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற திருக்கண்ண புரத்திலே யெழுந்தருளி யிருப்பவனான எம்பெருமான் Aagathu anaip paarkatku,ஆகத்து அணைப் பார்கட்கு - தங்கள் மனத்தில் ஊன்றவைத்துக் கொள்பவர்களுக்கு |
| 3663 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( மணியும் பொன்னுமிழக்கப் பெற்ற மதிலாளே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்திலே, திருநாட்டிலிருக்கும் படியில் ஒன்றுங்குறையாதே யெழுந் தருளியிருக்கும் சௌரிப் பெருமாளுடைய திருவடிகளையே உபாயமும் உபேயமுமாகப் பற்றுங்கள் என்றாராயிற்று) 8 | அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8 | பதவுரை Show / HideThana thaal adainthaarkku ellaam,தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - தன் திருவடிகளைப் பணிந்தவர் களெல்லார்க்கும் Aniyan aagum,அணியன் ஆகும் - அந்தரங்கனா யிருப்பன் Piniyum saaraa,பிணியும் சாரா - வியாதி முதலானவைகளும் அணுகமாட்டா Piravi keduthu aalum,பிறவி கெடுத்து ஆளும் - ஸம்ஸார ஸங்கத்தை யறுத்து அடிமை கொள்வன் Mani pon aayndha madhil soo'l,மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் - ரத்னங்களும் பொன்களும் பொருந்தின மதிளாலே சூழப்பட்ட Thirukkannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தி யெழுந்தருளிளிருக்கிற Paramaetti than paatham,பரமேட்டி தன் பாதம் - பரம புருஷனுடைய திருவடிகளை |
| 3664 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (பிறர்க்கு உபதேசஞ்செய்வது கிடக்க, தாம் முன்னம் அவனையாச்ரயித்துக் குறை தீர்ந்தபடியைப் பேசிக்களிக்கிறார்) 9 | பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9 | பதவுரை Show / HideVedham nvaar virumbum,வேதம் நாவர் விரும்பும் - வைதிகர்கள் விரும்பி வர்த்திக்குமிடமான Thirukkannapurathu,திருக்கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்ததருளியிருக்கிற Aadiyaanai,ஆதியானை - முழுமுதற்கடவுளான எம்பெருமானை Adainthaarkku,அடைந்தார்க்கு - ஆச்ரயித்தவர்களுக்கு Allal illai,அல்லல் இல்லை - துக்கமொன்று மில்லையாகும் Naalum paadham paniya,நாளும் பாதம் பணிய - (அப்பெருமானுடைய) திருவடிகளை எப்போதும் ஸேவிக்கு மளவில் Pini thaniyum,பிணி தணியும் - நோய்கள் அறும் Ekam saaraa,ஏகம்சாரா - பாவங்கள் சேரமாட்டா Ini,இனி - இப்படியான பின்பு En kurai,என் குறை - என்ன குறையுண்டு? (ஒரு குறையுமில்லை) |
| 3665 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (பத்தியையோ ப்ரபத்திலேயோ அனுஷ்டிக்க சக்தரல்லாதவர்கள் திருக்கண்ணபுரமென்று சொன்னவளவிலே ஸமஸ்ததுக்கங்களும் போமென்கிறார்) 10 | இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10 | பதவுரை Show / HideAllal illai,அல்லல் இல்லை - துக்கங்கள் தொலையும் எனக்கு இனி என் குறை Alli maadhar amarum thirumaarpavan,அல்லி மாதர் அமரும் திருமார்ப்பவன் - தாரையாளான பெரிய பிராட்டியாரு ருதையும் திருமார்பையுடைய பெருமான் Nallil aayndha madhil sul,நல்லில் ஏய்ந்த மதிள் சூழ் - கற்பணிமிக்க மதிளாலே சூழப்பட்ட Thiru Kannapuram solla,திரு கண்ணபுரம் சொல்ல - திருக்கண்ணபுரம் என்று சொன்ன வளவில் Naalum,நாளும் - ஒரு நாளும் Thuyarpaadu saara,துயர்பாடு சாரா - துக்கம் அணுகாது |
| 3666 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( பலனுரைத்துத் தலைக்கட்டவேண்டிய இப்பாசுரத்தில் “இப்பத்தும் பாடி பணிமிளவன்தாள்களே” என்று உபநெசரூபமாகவே யருளிச்செய்தாரெனினும் இதுவும் பயனுரைப்பதாகவே தலைக்கட்டும்) 11 | பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11 | பதவுரை Show / HideVinai patru,வினை பற்று - துக்க ஸம்பந்தம் Paadu saara,பாடு சாரா - அருகில் கிட்டாதபடி Ara venduveer,அற வேண்டுவீர் - அது கொலையவேணு மென்றிருப்பவர்களே Maadam needu GuruKoor,மாடம் நீடு குருகூர் - மாடமாளிகைகள் உயர்ந்த திருநகரியிலே அவதிர்த்த Sadagopan,சடகோபன் - ஆழ்வார் Sol,சொல் - அருளிச்செய்த thamizh aayiraththul ippattum,தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் - தமிழ் பாடல் ஆன ஆயிரத்துள் இப் பத்தும் – Paadi,பாடி - வாயாரப்பாடி Aadi,ஆடி - அதற்குச் சேர நர்த்தன்ம் பண்ணி Avan thaalgalae panimin,அவன் தாள்களே பணிமின் - அப்பெருமானுடைய திருவடிகளையே தொழுங்கள் |