திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1788 | பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு விஷயத்தை ஆசைப் பட்டு பெறாதே இருக்கிற நமக்கு நாட்டுப் பகையாக விட்டதே) 1 | தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் –9-5-1 | பதவுரை Show / Hideதவளம் இளபிறை, Thavalam Ilapirai - வெண்ணிறமுள்ள பாலசந்திரனும் துள்ளும் முந்நீர், Thullum Munnir - அலையெறிகின்ற கடலும் தண் மலர்தென்றலோடு, Than Malarthenralodu - குளிர்ந்து பூக்களில்படிந்து வீசுகின்ற தென்றற் காற்றும் அன்றில், Anril - அன்றிற் பறவையும் ஒன்றி, Onri - ஒன்று சேர்ந்து என் நெஞ்சகம், En Nenjachagam - என்மனமானது துவள, Thuvazhal - துர்ப்பலமாம்படியாகவும் சோர, Soora - சிதிலம்படியாகவும் ஈரும், Eerum - நோவுபடுத்துகின்றன; சூழ் பனி நாள், Sool Pani Naal - எங்கும் பனிபரவியிருக்கு மிக் காலத்தில் துயிலாது இருப்பேன், Thuyilaadhu Iruppein - கண்ணுறங்காதேகிடக்கிறேன்; இவளும் ஓர் பெண் கொடி என்று இரங்கார், Ivalum Oru Pen Kodi Endru Irangaar - இவள் ஒரு இளம்பெண் ணன்றோ? என்று மனமிரங்காதவராய் என்கலம் ஐந்தும், Enkalam Aindhum - எனது பஞ்சேந்திரிய வுணர்ச்சியையும் முன்கொண்டு, Munkondu - முன்பு கொள்ளை கொண்டு பிரிந்து போன குவளை மலர்நிறம் வண்ணர், Kuvazhai Malarniram Vannaar - கருநெய்தற்பூவின் நிறம் போன்ற நிறமுடையரான பெருமாள் மண்ணு, Mannu - நித்யவாஸம்பண்ணுகிற குறுங் குடிக்கே, Kurung Kudikke - திருக்குறுங்குடியிலேயே என்னை உய்த்திடு மின், Ennai Uyththidu Min - என்னைக் கொண்டு சேர்த்திடுங்கள் |
| 1789 | பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்முடைய ப்ராவண்யத்தை குண ஹானியாக உப பாதிக்கை அன்றிக்கே – ந கச்சின் ந அபராத்யதி -என்று பொறுப்பித்து அவன் திருவடிகளோடு சேர்க்குமவள் இருந்த இடத்தே கொடுபோய் பொகடுங்கள்) 2 | தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இளவாடை இன்னே
ஊதை திரி தந்து உழறி உண்ண ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
பேதையர் பேதமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் –9-5-2 | பதவுரை Show / Hideதாது அவிழ் மல்லிகை, Thadu Avizh Malligai - தாதுகள் விரிகிற மல்லிகைகளிலே (- (தோழிமார்களே!) (குறுங்குடிக்கே *** மின்.)) புல்கி, Pulki - போய் அணைந்து தண் மதியின், Than Mathiyin - குளிர்ந்த சந்தியனோடுகூட இன்னே வந்த, Innae Vantha - இப்படிவந்து வீசுகின்ற இளவாடை, Ilavaadai - மந்தமாருதமாகிற ஊதை, Oothai - குளிர்காற்றானது திரிதந்து, Thirithandu - இங்குமங்கும் உலாவி உழறி உண்ண, Uzhari Unna - துகைத்துமுடிக்க ஓர்இரவும், Ooriravum - ஒரு ராத்திரியும் உறங்கேன், Uranken - உறங்காதிருக்கிறேன்; பெய் வளையர், Pey Valaiyar - கைவளை கழலாதவர்களாய் உறங்கும் பேதையர், Urankum Paedaiyar - உறக்கமே போதுபோக்கான விவேகமற்ற பெண்கள் பேதைமையால், Paedaimaiyaal - தங்கள் அறிவீனத்தினால் இருந்து, Irundhu - வேலையற்றறிருந்து பேசிலும் பேச்சு, Pesilum Peichu - (என் விஷயமாக) என்ன பழி சொன்னாலும் சொல்லட்டும்; கோதை, Kothai - கூந்தலிலே நறுமலர், Narumalai - மணமிக்க பூக்களை அணிந்துள்ள மங்கை, Mangai - மணம்மிக்க பூக்களை அணிந்துள்ள மார்பன், Maarban - திருமார்பிலேயுடைய பெருமானது |
| 1790 | பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம் இனம் உள்ள ஊரிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் – தர்ச நீயமான மயில் நெருங்கி வர்த்திக்கிற பர்யந்தத்தை உடைத்தான ஸ்ரீ திருக்குறுங்குடி யிலே கொடு போய் பொகடப் பாருங்கோள்) 3 | காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் –9-5-3 | பதவுரை Show / Hideகாலையும், Kaalaiyum - காலைப்பொழுதும் மாலை ஒற்றுண்டு, Maalai Otrundu - மாலைப்பொழுதுபோதலு யிருந்து நலிகின்றது; கங்குல் நாழிகை, Gangul Naazhikai - இரவின் நாழிகை ஊழியின், Oozhiyin - கல்பகாலத்திற் காட்டிலும் நீண்டு, Neendu - பெருகி உலாவும் போல்வது ஓர்தன்மை புகுந்து நிற்கும், Ulaavum Polvadhu Oorthanmai Pugundhu Nirkum - (யமபடரைப் போலே) ஸஞ்சரிக்கிறாப் போன்றத்தன்மை பெற்றிருக்கின்றது, வாடை சொல்லில், Vaadai Sollil - வாடையின் தன்மையைப் பற்றிச் சொல்லப் புகுந்தால் பொங்கு அழலே, Pongu Azhale - எரிகின்ற நெருப்பே போன்றிருக்கும்; மாலவன், Maalavan - மிகப் பெரியவனாயும் மா மணிவண்ணன், Maa Manivannan - நீலமணிவண்ணனாயு மிருக்கிற அப்பெருமானுடைய மாயம், Maayam - (நம்மைக் கொல்வதற்கான மாயச் செய்கைகள்) மற்றும் உள, Matrum Ula - இன்னமும் பலவுண்டு; அவை வந்திடா முன், Avai Vandida Mun - அவையும் தலைகாட்டுவதற்கு முன்னமே கோலம் மயில் பயிலும் புறவின் குறுங்குடிக்கே,, Kolam Mayil Payilum Puravin Kurungkudikke - அழகிய மயில்கள் நெருங்கி வாழ்கிற புறவுகளையுடைய என்னை உய்த்திடுமின் |
| 1791 | பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அயர்வறும் அமரர்கள் தங்களுக்கு முடி மேலே மணியாக வைத்த சிரோ பூஷணமாக வைக்கப் பட்ட – அவனுடைய பெருமை பேசி-ஒரு மணி யோசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் -என்னுதல்- பேச -என்றதாகில்-ஒருவனுடைய நீர்மை இருக்கும் படியே ஒருவனைப் பிரிந்து ஒருத்தி படும் பாடே -என்று இரண்டு இடத்திலும் உள்ளாறும் நின்று சொல்லும்படியாக -என்றாகிறது) 4 | கரு மணி பூண்டு வெண்ணாகணைந்து காரி இமில் ஏறு அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன்
பெரு மணி வானவருச்சிவைத்த பேரருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் –9-5-4 | பதவுரை Show / Hideகருமணி பூண்டு, Karumani Poondhu - கறுத்தமணியைத் தரித்துக் கொண்டு (- (உறங்காது இருப்பேன்) (என்னை உய்த்திடுமின்-.)) வெண் நாகு அணைத்து, Ven Naaku Anaithu - வெளுத்த நாகுகளோடே அணைத்து கார்இமில், Kaarimill - கறுத்த முகப்பபை யடைத்தான எறு, Eru - காளைகளினுடைய அணர், Anar - கழுத்திலே தாழ்ந்து உலாவும், Thaazhnthu Ulaavum - தொங்குகின்ற ஒரு மணி, Oru Mani - ஒரு மணியினுடைய ஓசை, Osai - ஒலியானது என் உள்ளம், En Ullam - என் நெஞ்சை தள்ள, Thalla - சோர்வு படுத்த ஓர் இரவும், Or Iravum - ஒரு ராத்திரியும் வானவர், Vaanavar - நித்யஸூர்கள் உச்சி, Uchi - தங்கள் தலைமீது பெரு மணி, Peru Mani - சிறந்த ரத்னமாக வைத்த, Vaitha - வைத்துப் போற்றுகிற பெருமை, Perumai - பெருமைகளை பேசி, Paesi - பேசிக்கொண்டு நீர்குரு மணி கொழிக்கும் புறவின் குறுங்குடிக்கே, Neerkuru Mani Kozhikkum Puravin Kurungkudikke - ப்ரவாஹஜலமானது சிறந்த ரத்னங்களைக் கொண்டு தள்ளுகின்ற புறவுகளையுடைய திருக்குறுங்குடியிலேயே |
| 1792 | பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முன்பு சொன்னவை போல் அன்றிக்கே தனித் தனியே இவை முடித்து விடுமா போலே இரா நின்றது – தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி -என்னச் செய்தே பின்னையும் ஜீவித்து இருந்தோம் இறே – இவை நம்மை வைப்பன வன்றிக்கே இரா நின்றன) 5 | திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி
பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் –9-5-5 | பதவுரை Show / Hideதிண் திமில், Thin Thimil - திடமான முசுப்புடைய (- (ஆகையாலே) (குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்-.)) ஏற்றின், Aetrin - விருஷபத்தினுடைய மணியும், Maniyum - கழுத்துமணியும் ஆயன், Aayan - இடையனுடைய தீம் குழல் ஓசையும், Theem Kuzhal Osaiyum - மதுரமான புல்லாங்குழ லொழியும் தென்றலோடு கொண்டது ஓர்மாலையும், Thendralodu Kondathu Ormaalaiyum - தென்றற்காற்றோடு ஒருமித்த கோட்பாட்டை யுடையதான மாலைப்பொழுதும் ஆகிய இவை, Ivai - இவை அந்தி ஈன்ற, Andhi Eendra - அந்திப்பொழுது தோற்றுவிக்கிற கோலம் இளபிறை யோடு கூடி, Kolam Ilapirai Yodu Koodi - அழகிய இளம்பிறைச் சந்தி ரனையும் துணைகூட்டிக் கொண்டு நமக்கு, Namakku - நம் விஷயத்திலே பண்டைய அல்ல, Pandaiya Alla - முன் இருந்தாற்போலிருக்கின்றனவில்லை; பாவியேன், Paaviyen - பாவியான என்னுடைய ஆவியை, Aaviye - உயிரை வாட்டம் செய்யும், Vattam Seyyum - வாடச் செய்கின்றன; கொண்டல் மணி நிறம் வண்ணர், Kondal Mani Niram Vannarar - மேகத்தினுடையவும் நீலமணியினுடையவும் நிறம் போன்ற நிறமுடைய பெருமாள் பொருந்திவாழப்பெற்ற |
| 1793 | பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மறவாமை தேட்டமாம் தேசத்தை விட்டு அவனைக் கண் கண்டு அனுபவிக்கலாம் தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள் – கொடிக்கு தரை கிடக்க வேண்டாதே கொள் கொம்பிலே படரலாம் தேசத்திலே) 6 | எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக வேந்திழையார்
நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளரிள முல்லை புக்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –9-5-6 | பதவுரை Show / Hideஏந்து இழையார், Aendhu Izhaiyar - ஆபரணங்களணிந்துள்ள பெண்கள் (- (ஆகையாலே) (குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்:-)) எல்லியும் நல்பகலும் இருந்தே, Elliyum Nalpagalum Irundhe - இரவும் பகலும் போதுபோக்கற்று இருந்துகொண்டு ஏசிலும் எசுக, Esilum Esuga - பழிசொன்னாலும் சொல்லட்டும்: நல்லர், Nallar - (அவர்கள்) பாக்யவதிகளன்றோ? அவர் திறம் நாம் அறியோம், Avar Thiram Naam Ariyom - அவர்களைப் பற்றி நமக்கு ஆராய்ச்சிவேண்டா; நமக்கு, Namakku - நமக்கு நாண் மடம் அச்சம் இங்கு இல்லை, Naan Madham Acham Ingu Illai - பெண்மைக்குணங்கள் அற்றுப்போயின; வல்லன சொல்லி, Vallana Solli - தங்களாலியன்றவற்றை (வாய் கூசாமல்) சொல்லி மகிழ்வரேலும், Magizhvarelum - சிரித்தார்களேயாகிலும் நாம், Naam - நாம் மா மணி வண்ணரை, Maa Mani Vannarai - நீலமணிவண்ணரான பெருமாளை மறவோம், Maravom - மறக்கமாட்டோம்; கொல்லை, Kollai - தோட்டங்களிலே வளர், Valar - வளர்கின்ற இள முல்லை, Ila Mullai - இளமுல்லைக் கொடிகள் புல்கு, Pulgu - படரப்பெற்ற |
| 1794 | பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரியேன் என்கிற பாசுரத்தாலே பிரிவை உணர்த்தினான் ஆயிற்று – வ்யதிரேகத்தால் அறிந்து கொள்கிறாள் என்று – இவர் பிரியேன் என்கிற பாசுரத்தாலே யாகிலும் சொன்னார் அதுவும் வாய் கொண்டு சொல்ல மாட்டாமை -ஆது கொலோ -என்கிறாள் ஆயிற்று -இவள்) 7 | செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என
அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன்
கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –9-5-7 | பதவுரை Show / Hideநெடிய செம்கண், Nedhiya Semkan - நீண்டு சிவந்த திருக்கண்களையும் (- (குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்)) கரிய மேனி, Kariya Meeni - கறுத்த திருமேனியையுமுடையரான தேவர் ஒருவர், Thevar Oruthar - ஒரு பெருமாள் இங்கே புகுந்து, Inge Pugundhu - இங்கு எழுந்தருளி என் அங்கம் மெலிய, En Angam Meliya - எனது உடல் இளைக்கும்படியாகவும் வளை கழல, Valai Kazhala - வளைகள் கழன்றொழியும்படி யாகவும் ஆது கொலோ என்று சொன்ன பின்னை, Aathu Koloo Endru Sonna Pinnai - அப்படிப்பட்ட பிரிவை உணர்த்தினது முதலாக ஐங் கணை வில்லி, Aing Kanai Villi - ஐந்து அம்புகளையுடைய வில்லை ஆள்பவனான மன்மதன் என்னோடு ஆடும், Ennodu Aaduum - என்விஷயத்திலே காட்டுகின்ற தன் ஆண்மை அதனை, Than Aanmai Adhanai - தன்னுடைய பௌருஷத்தை அறிய மாட்டேன், Ariya Maatten - (எடுத்துச்செல்ல) அறிகின்றிலேன் ; கொங்கு அலர், Kongu Alar - தேன் ஒழுகுகின்ற தண், Than - குளிர்ந்த பணை, Panai - மரக்கொம்புகளால் சூழ், Sool - சூழப்பட்ட புறவின், Puravin - புறவுகளை யுடைய |
| 1795 | பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பந்துக்களை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை இறே – க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்கலாம் படி அன்று -இங்கு ஓடுகிற தசை இனி அங்கே போய்ப் புக்காலும் அவன் தன்னாலே பேறாம் படி எனக்கு பிரயோஜனம் உள்ளது – அதில் அவன் கருத்து அறிந்த படியையும் அறிந்து கார்யம் செய்யப் பாருங்கோள் – உனக்கு க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க ஒண்ணாமைக்கு இப்போது வந்தது என -என்ன) 8 | கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை யாம்பல் வந்து என
ஆவி யளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்து இட்டு
ஏவலம் காட்டி யிவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் –9-5-8 | பதவுரை Show / Hideகடலின் ஓசை, Kadalin Osai - ஸமுத்ரகோஷமானது (- (குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்)) கேவலம் அன்று, Kevalam Andru - ஸாமாந்யமன்று; கேண்மின்கள், Keenmingal - கேளுங்கள் ; ஆயன், Aayan - கோபாலனுடைய கை, Kai - கையிலுள்ள ஆம்பல் வந்து, Aambal Vandu - குழலோசை வந்து என் ஆவி அளவும் அணைந்து நிற்கும், En Aavi Alavum Anaindhu Nirkum - என்னுடைய பிராணன் வரையில் கிட்டி நிற்கின்றது; அன்றியும், Andriyum - அதற்கு மேலும் இவன் ஒருவன், Ivan Oruvan - (மன்மதனென்கிற) இப்பாவியொருவன் ஐந்து கணை, Ainthu Kanai - தனது) பஞ்சபாணங்களை தெரிந்திட்டு, Therindittu - நன்றாக ஆராய்ந்து ஏவலம் காட்டி, Evalam Kaatti - பிரயோகிக்க வல்லஸாமர்த்தியத்தைக் காண்பித்து இப்படியே புகுந்து, Ippadiye Pugundhu - என்மேல் நோக்கம் வைத்து எய்திடா முன், Eythida Mun - பிரயோகிப்பதற்கு முன்னமே கோவலர்கூத்தன், Kovalarkootthan - இடைச்சாதிக்கு ஏற்ற கூத்துகளில் வல்லவனான பெருமானுடைய குறிப்பு, Kurippu - திருவுள்ளக்கருத்தை அறிந்து, Arindhu - தெரிந்துகொண்டு |
| 1796 | பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கோவலர் கூத்தன் -என்றபடி இறே இனவாயர் தலைவன் ஆனவன் விரும்பி வர்த்திக்கிற தேசத்தில் கொடு போய் பொகடப் பாருங்கோள் – தன்னுடைய மநோ ஹாரி சேஷ்டிதங்களாலே நித்ய சூரிகளை தோற்ப்பித்துக் கொண்டு இருக்கிறவன் விரும்பி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் குறுங்குடியிலே) 9 | சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும்
போர்ப்பதோர் பொற் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை
மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –9-5-9 | பதவுரை Show / Hideஎன் கொங்கை, En Kongai - எனது முலைகள் (- (ஆகையாலே) (குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்-.)) அவன்தன், Avanthan - அவனுடைய மொய் அகலம், Moy Akalam - அழகிய திருமார்பை அணையாது, Anaiyadhu - அணையப்பெறாமல் வாளா, Vaalai - வீணாக மூர்த்திடுகின்றன, Moorthidikkinrana - பருக்கின்றன; கூத்தன், Kooththan - மநோஹரமான சேஷ்டிதங்களை யுடையவனும் இமையவர்கோன், Imaiyavarkon - நித்யஸூரிகட்குத் தலைவனுமான பெருமான் விரும்பும், Virumbum - விரும்பிவர்த்திக்கு மிடமான |
| 1797 | பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் வர்த்திக்கிற குறுங்குடி யிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள் – இதுக்கு வேறு ஒரு பலம் சொல்லா விட்டது -உகந்து அருளின தேச பிராப்தி தானே பலமாய் இருக்கையாலே) 10 | செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –9-5-10 | பதவுரை Show / Hideதென் இலங்கை, Then Ilangai - தென் திசையிலுள்ள இலங்கா புரியானது மலங்க, Malanga - கலங்கும்படியாக செற்றவன், Settravan - த்வம்ஸம்பண்ணினவனும் தேவபிரான், Devapiraan - தேவர்களுக்குப் பிரபுவானவனும் திரு மாமகனை டிபற்றும் என் நெஞ்சம் கோயில் கொண்ட, Thiru Mamakanai Tipratum En Nenjam Koyil Konda - பெரிய பிராட்டியாரைப் பெற்றுவைத்தும் என் மனதைக் கோயிலாகக்கொண்டுள்ளவனுமான பேரருளாளன், Perarulalan - பேரருளாளப்பெருமானுடைய பெருமை, Perumai - பெருமையை பேச கற்றவன், Pesakattravan - அருளிச் செய்ய வல்லவரும் காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களை யுடையவருமான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வாருடைய கண்ணகத்தும், Kannagathum - கண்களினுள்ளும் மனத்தும், Manathum - நெஞ்சினுள்ளும் அகலா, Akala - விட்டுநீங்காத கொற்றவன், Kotravan - ஸர்வேச்வரனாய் முற்றுலகு ஆளி, Mutrulagu Aali - ஸகலலோகநாதனான பெருமான் நின்ற, Nindra - நித்யவாஸம்பண்ணப்பெற்ற குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின் |