திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1828 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ உபய விபூதி உக்தனாய் இருந்து வைத்து –ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து – பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த கிலேசத்தைப் பரிஹரித்து – ஸ்ரீ கோவிந்தாபிஷேகம் பண்ணினவன் – பிற்பாடராய்-இடக்கை வலக்கையும் அறியாத சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கைக்காக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் – அவனோடு அணைக்கைக்கு ஈடான அழகை உடையவள்அணைந்தே விட வல்லளோ) 1 | மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ –9-9-1 | பதவுரை Show / Hideமூவரில், Moovarinil - த்ரிமூர்த்திகளுள் முன் முதல்வன், Mun Muthalvan - முக்கியனும் முழங்கு ஆர், Muzhangu Aar - (திரைக்கிளப்பத்தாலே கோஷித்தல் பொருந்திய கடலுள், Kadalul - திருப்பாற்கடலிலே கிடந்து, Kidandhu - திருக்கண்வளர்ந்தருளி உந்தி, Undhi - திருநாபியில் அலர், Alar - மலர்கின்ற பூ தன்னுள், Poo Thannul - (தாமரைப்) பூவிலே புவனம், Puvanam - உலகத்தை படைத்து, Padaiththu - ஸ்ருஷ்டித்து உண்டு, Undu - (பிரளயகாலத்தில்) திருவயிற்றில்வைத்து நோக்கி உமிழ்ந்த, Umizhndha - பிறகு வெளிப்படுத்திவனும் தேவர்கள் நாயகனை, Thevargal Nayakanai - நித்யஸூரிகளுக்கு நாதனும் திருமாலிருஞ் சோலை நின்ற, Thirumaliruncholai Nindra - திருமாலிருஞ்சோலை மலையில் நிற்பவனுமான கோவலர் கோவிந்தனை, Kovalaar Govindhanai - கோபாலக்ருஷ்ணனான எம்பெருமானை கொடி எர் இடை, Kodi Er Idai - கொடிபோன்ற இடையை யுடையளான என் மகள் கூடும் கொலோ, Koodum Kolon - அணையப்டபெறுவளோ? |
| 1829 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மூ வுலகும் படைத்த பிரதான மூர்த்தி தன்னை –ரஷணத்துக்கு இட்ட வீரக் கழல் த்வனியா நின்றுள்ள திருவடிகளை –அவற்றைக் காண்கைக்கு கண் படைத்த இவள் கண்டே விட வல்லளேயோ) 2 | புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னைச்
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே –9-9-2 | பதவுரை Show / Hideபுனை வளர், Punai Valar - புன்னைமரங்கள் வளரப்பெற்ற (- (திருக்கண்வளர்ந்தருளுகிற)) பூ பொழில் ஆர், Poo Pozhil Aar - பூஞ்சோலைகளை யுடையதும் பொன்னி சூழ், Ponni Soozh - திருக்காவேரியாலே சூழப்பட்டதுமான அரங்கம் நகருள், Arangam Nagarul - திருவரங்கம் பெரியகோயிலில் முனைவனை, Munaivanai - பிரதாநனும் மூ உலகும் படைத்த, Moo Ulakum Padaiththa - மூன்று லோகங்களையும் ஸ்ருஷ்டித்த முதல் மூர்த்தி தன்னை, Muthal Moorhthi Thannai - முக்கிய மூர்த்தியானவனும் சினை வளர் பூ பொழில் சூழ், Sinai Valar Poo Pozhil Soozh - பணைகள்மிக்க பூஞ்சோலைகளால் சூழப்பட்ட திருமாலிருஞ்சோலை நின்றான், Thirumaliruncholai Nindraan - திருமாலிருஞ்சோலையில் நிற்பவனுமான எம்பெருமானுடைய கனை கழல், Kanai Kazhal - (வீரக்கழலின்) ஒலியை யுடைத்தான திருவடிகளை கயல் கண்ணி, Kayal Kanni - கயல்போன்ற கண்களை யுடையளான எம் காரிகை, Em Kaarikai - எமது அழகியமகள் காணும் கொலோ, Kaanum Koloo - ஸேவிக்கப்பெறுவளோ? |
| 1830 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு மலையிலே நின்று அருளின –அண்டாந்தர வர்த்திகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை – அவனுக்கு ஈடாக ஒப்பித்து இருக்கிற இவள்அவ் ஒப்பனையோடு சென்று அணுக வல்லளேயோ) 3 | உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகனாய் ஆலிலை மேல்
கண் துயில் கொண்டுகந்த கரு மாணிக்க மா மலையை
திண்டிறல் மா கரி சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
அண்டர் தங்கோவினை இன்று அணுகும் கொலோ என்னாயிழையே –9-9-3 | பதவுரை Show / Hideஉலகு எழினையும், Ulaku Ezhinaiyum - ஸப்தலோகங்களையும் உண்டு, Undu - (பிரளயகாலத்தில்) திருவயிற்றினுள் அடக்கி ஒரு பாலகன், Oru Palagan - ஒரு சிறுகுழவியாய் ஆல் இலை மேல், Aal Ilai Mael - ஓராலிலையின்மீது கண் துயில் கொண்டு, Kan Thuyil Kondu - திருக்கண்வளர்ந்தருளி உகந்த, Ugantha - திருவுள்ள முவந்த கரு மாணிக்கம், Karum Manikkam - பெரிய கருமாணிக்கமலை போன்ற வடிவையுடைய திண் திறல் மா கரி சேர், Thin Thiral Maa Kari Seer - மிக்க வலிமை வாய்ந்த மதயானைகள் சேரப்பெற்ற திருமாலிருஞ்சோலை, Thirumaliruncholai - திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற, Nindra - நிற்பவனுமான அண்டர் தம் கோவினை, Andar Tham Kovinaik - தேவாதிதேவனை என் ஆய் இழை, En Aay Izhai - சுத்தமான ஆபரணங்களை யணிந்துள்ள என்மகள் இன்று, Indru - இப்போது அணுகும் கொல், Anugum Kol - கிட்டப்பெறுவளோ? |
| 1831 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சந்திர பதத் தளவும் ஓங்கின சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திரு மலையிலே வந்து சந்நிஹிதனாய் – நமக்கு எளியவன் ஆனவனை –அவ் வெளிமைக்கு தோற்று இருக்கிற இவள் கிட்ட வல்லளேயோ) 4 | சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
பங்கய மா மலர்க்கண் பரனை யெம் பரஞ்சுடரை
திங்கள் நன் மா முகில் சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை யின்று நணுகும் கொலோ என் நன்னுதலே –9-9-4 | பதவுரை Show / Hideமுன், Mun - முன்பொருகாலத்தில் (- (திருமாலிருஞ்சோலையில்)) சிங்கம் அது ஆய், Singam Adhu Aay - நாஸிம்ஹ மூர்த்தியாகி அவுணன், Avaunan - (இரணியனென்னும்) அசுரனுடைய திறல் ஆகம், Thiral Aagam - வலிமையுள்ள மார்பை கீண்டு, Keendu - எளிதாகக்கிழித்து உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்தவனும் மா, Maa - பெரிய பங்கயம் மலர், Pangayam Malar - தாமரைப்பூப்போன்ற கண், Kan - திருக்கண்களை யுடையவனும் பரனை, Paranai - எல்லாரினும் மேம்பட்டவனும் எம், Em - எமக்கு நாதனும் பரம் சுடரை, Param Sudarai - பரஞ்சோதியென்று ஓதப்பட்டவனும், திங்கள், Thingal - சந்திரமண்டலத்தோடும் மா முகில், Maa Mukil - மேகமண்டலத்தோடும் சேர், Ser - படிந்த (சிகரத்தையுடைத்தான) நல், Nal - விலக்ஷணமான நின்ற, Nindra - நிற்பவனுமான நங்கள் பிரானை, Nangal Piranai - எம்பெருமானை என் நல் நுதல், En Nal Nuthal - அழகிய நெற்றியை யுடையளான என் மகள் இன்று, Indru - இப்போது நணுகும் கொல், Nanugum Kol - சென்று சேர்ந்திடுவனோ? |
| 1832 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வாமன வேஷத்தைக் கொண்டு போய்ப் புக்கு வளர்ந்து –பூமியாந்தரிஷ்யாதிகள் மூன்றடியிலே அடங்கும்படி அளந்தவன் – ஸ்ரீ திருமலையிலே வந்து நின்ற –அயர்வறும் அமரர்கள் அதிபதியை அவர்களோடு ஒத்த ருசியை உடைய இவள் வணங்கித் தொழ வல்லள் கொலோ) 5 | தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்
தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை யின்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-5 | பதவுரை Show / Hideதானவன், Thaanavan - (மஹாபலியென்னும்) அசுரனுடைய (- (திருமாலிருஞ்சோலையில்) (என்பெண்மகள்)) வேள்வி தன்னில், Velvi Thannil - யாகத்திலே தனியே, Thaniye - அத்விதீயனான குறள் ஆய், Kural Aayi - வாமநமூர்த்தியாய் (எழுந்தருளி) நிமிர்ந்து, Nimirndhu - (உதகதானம் பெற்றவாறே) ஓங்கிவளர்ந்து வானமும், Vaanamum - மேலுலகங்களையும் மண் அகமும், Man Akamum - கீழுலகங்களையும் திரி விக்கிரமன், Thiri Vikkiraman - த்ஜீவிக்ரம மூர்த்தியானவனும் தேன் அமர் பூ பொழில் சூழ், Then Amar Poo Pozhil Soozh - தேன்மிக்க பூஞ்சோலைகளால் சூழப்பட்ட நின்ற, Nindra - நிற்பவனுமான வானவர் கோனை, Vaanavar Konai - தேவாதிதேவனை இன்று, Indru - இப்போது வணங்கி தொழவல்லள், Vanangi Thozhavallal - ஸேவிக்கப்பெறுவளோ? |
| 1833 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பர பக்திக்கும் அத்வேஷத்துக்கும் வாசி வையாதே தன்னைக் கொடுப்பான் ஒருவன் -என்கை – பர பக்தியையும் அத்வேஷத்தையும் பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் – அந்த அவதார பலம் இருக்கிறபடி –பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை – அக் குழலுக்கு தகுதியான அவயவ சோபையை உடையவள் கிட்ட வல்லளேயோ) 6 | நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –9-9-6 | பதவுரை Show / Hideநேசம் இல்லாதவர்க்கும், Nesam Illaadavarkkum - பரபக்தியில்லாதவர்களுக்கும் (- (திருமாலிருஞ்சோலையில்)) நினையாதவர்க்கும், Ninaiyaadavarkkum - (‘ஈச்வரனில்லை’ என்று நாஸ்திகவாதம் பண்ணுவதற்காகிலும் அவனை) நெஞ்சால் எண்ணாதவர்கட்கும் அரியான், Ariyaan - கிட்டக்கூடாதவனும், வாசம் மலர் பொழில் சூழ், Vaasam Malar Pozhil Soozh - மணம்மிக்கமலர்களையுடைய சோலைகளால் சூழப்பட்ட வட மா மதுரை, Vada Maa Madurai - திருவடமதுரையில் தேசம் எல்லாம் வணங்கும், Desam Ellam Vanangum - எல்லாத தேசத்தவர்களாலும் வந்து வணங்கப்படும் தான் நின்ற, Nindra - நிற்பவனும் கேசவன் நம்பி தன்னை, Keesavan Nambi Thannai - சிறந்த குழல்கற்றையை யுடையனுமான பெருமானை கெண்டை ஒண் கண்ணி, Kendai On Kanni - கெண்டைமீன் போன்ற கண்ணழகுடையளான என்மகள் காணும் கொலோ, Kaanum Koloo - காணப்பெறுவளோ? |
| 1834 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதி நிரசனத்தால் வந்த ஸ்ரமம் அடைய ஆற்றலாம் படியான தேசம் ஆயிற்று – தெளிந்த அருவிகள் ஆனவை கொழித்து எறடா நின்றுள்ள ஸ்ரீ திருமலையிலே – தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொடு நிற்கிறவனை – அந்த ஔதார்யத்துக்கு நாம் இலக்காக வேணும் என்று இருக்கிற இவளுடைய மநோ ரதம் ஒரு படித் தலைக்கட்ட வற்றேயோ) 7 | புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-7 | பதவுரை Show / Hideபுள்ளினை வாய் பிளந்து, Pullinai Vaai Pilandhu - பகாஸுரனுடைய வாயைக் கிழித்தவனும் (- (திருமாலிருஞ்சோலையில்)) பொரு மா கரி கொம்பு ஒசித்து, Poru Maa Kari Kombu Osiththu - போர்செய்ய முயன்றி (குவலயாபீடமென்னும்) மதகரியின் கொம்பை முறித்தவனும் கள்ளம் சகடு உதைத்த, Kallam Sakadu Uthaiththa - திருட்டெண்ணங்கொண்ட சகடாஸுரனை (த் திருவடிகளால்) உழைத்தொழித்தவனும் கரு மாணிக்கம் மா மலையை, Karum Manikkam Maa Malaiyai - பெரியகரிய மாணிக்கமலை போன்ற வடிவையுடையவனும் தெள் அருளி கொழிக்கும், Thal Aruli Kozhikkum - தெளிந்த அருவிகள் பிரவஹிக்கப்பெற்ற நின்ற, Nindra - நிற்பவனும் வள்ளலை, Vallalai - உதாரனுமான பெருமானை வாள் நுதலாள், Vaal Nuthalaal - ஒளிபொருந்திய நெற்றியை யுடையளான என்மகள் வணங்கி தொழ வல்லள் கொலோ, Vanangi Thozha Vallal Koloo - ஸேவிக்கப்பெறுவளோ? |
| 1835 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நித்ய சூரிகள் அனுபவித்த வடிவு அழகை இங்கு உள்ளார் இழவாத படி தனக்கு வாசஸ் ஸ்தானமாகப் போரும்படி தர்ச நீயமான பொழி லாலே சூழப் பட்ட ஸ்ரீ திருமலையிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை – தன் மயிர் முடியாலே இவனைத் துவக்க வல்ல இவள் அவனைத் தொழுதாளாய்த் தலைக் கட்ட வல்லளேயோ) 8 | பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு தேர் முன்னின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே –9-9-8 | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்பொருகாலத்தில் பார்த்தனுக்கு, Paarththanu Kku - அர்ஜுநன்பக்கலிலே அருளி, Aruli - அருள்கூர்ந்து பாரத்தது, Paaraththathu - பாரதயுத்தத்திலே ஒரு தேர் முன் நின்று, Oru Ther Mun Nindru - ஸாரதியாயிருந்து காத்தவன் தன்னை, Kaaththavan Thannai - ரக்ஷித்தருளினவனும், விண்ணோர், Vinnor - நித்யஸூரிகள் அநுபவிக்கவுரிய கரு மாணிக்கம் மா மலையை, Karum Manikkam Maa Malaiyai - கரிய பெரிய மாணிக்கமலை போன்றவடிவு படைத்தவனும் தீர்த்தனை, Theerththanai - பரமபவித்திரனும் பூம்பொழில் சூழ், Poombozhil Soozh - திருமாலிருஞ்சோலையில் நின்ற, Nindra - நிற்பவனுமான மூர்த்தியை, Moorththiyai - ஸ்வாமியை கை தொழவும் என் மொய் குழற்கு முடியும் சொல், Kai Thozhavu En Moy Kuzharkku Mudiyum Sol - ஸேவிப்பதற்கு அடர்ந்தகூந்தலை யுடையளான் என் மக்களுக்கு வாய்க்குமோ? |
| 1836 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷிக்கைக்கு பாங்காக ரஷ்ய வர்க்கம் உள்ள இடம் தேடி வேதைக சமதிகம்யனாய் வைத்து கண்ணுக்கு இலக்காகும் படி ஸ்ரீ திரு மலையிலே நின்றவனை – அது தன்னை பரதத்வோடு ஒக்கச் சொல்லலாம் படி எத்தனையேனும் சாலத் தண்ணியர்க்கும் முகம் கொடுத்துக் கொடு நிற்கிற இடம் இறே இவ்விடம் –-ஸ்வர்க்கத்தில் அப்சரஸ்கள் வந்து ஆஸ்ரயிக்க அவர்கள் உடைய சிலம்பின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தான ஆற்றை உடைய ஸ்ரீ திருமலையிலே வந்து நிற்கிற கல்யாண குணங்களாலும் உஜ்ஜ்வலிதனாகா நின்றுள்ள சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை கிட்டுக்கைக்கு யோக்யமான அழகை உடைய இவள் அவனைக் கிட்டிவிட வல்லளேயோ) 9 | வலம்புரி யாழியானை வரையார் திரடோளன் தன்னைப்
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச்
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற
நலந்திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே –9-9-9 | பதவுரை Show / Hideவலம்புரி ஆழியனை, Valampuri Aazhiyanai - சங்கும் சக்கரமுமுடையனும் (- (திருமாலிருஞ்சோலையில்)) வரை ஆர் திரள் தோளன் தன்னை, Varai Aar Thiral Tholan Thannai - மலைபோன்று திரண்ட திருத்தோழ்களை யுடையவனும் புலம்பரி நூலவனை, Pulambari Noolavananai - மநோஹரமான யஜ்ஞோபவீதத்தையுடையவனும் பொழில் வேங்கடம், Pozhil Vengadham - சோலைசூழ்ந்த திருவேங்கட மலையிலுள்ளவனும் வேதியனை, Vedhiyai - வேதப்ராதிபாத்யனும் சிலம்பு இயல் ஆறு உடைய, Silambu Iyala Aaru Udaiya - ‘சிலம்பு’ என்று சொல்லப்படுகிற நூபுரகங்கையை யுடைத்தான் நின்ற, Nindra - நிற்பவனும் நலம் திகழ் நாரணனை, Nalam Thigazh Narananai - திருக்கல்யாணகுணங்கள் விளங்கப் பெற்றவனுமான ஸ்ரீமந்நாராயணனை என் நல் நுதல், En Nal Nuthal - அழகிய நெற்றியையுடையளான என் மகள் நுணகும் சகால், Nunakum Sakal - கிட்டப்பெறுவளோ? |
| 1837 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாடலான பனுவல் பத்தையும் அப்யசிப்பார்க்கு பிராப்தி பிரதிபந்தங்கள் அடங்கலும் போம் – காணும் கொலோ என்கிற சம்சயம் இவர் தம்மோடேயாய் இவர் உடைய பிரபந்தம் அப்யசிப்பார்க்கு பிராப்தியில் ஒரு கண் அழிவு இல்லை) 10 | தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –9-9-10 | பதவுரை Show / Hideதேடற்கு அரயவனை, Theedarku Arayavananai - (ஒருவற்கும் தன்முயற்சியாலே) தேடிப்பிடிக்க முடியாதவனும் திருமாலிருஞ்சோலை நின்ற, Thirumaliruncholai Nindra - திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருப்பவனும் ஆடல் பறவையனை, Aadal Paravaiyai - (ஸந்தோஷத்திற்குப் போக்குவிடன) ஆட்டத்திற்சிறந்த பெரிய திருவடியை ஊர்தியாகவுடையனுமான ஸுந்தரபாஹுவை. அணி ஆய் இழை காணும் என்று, Ani Aay Izhai Kaanum Endru - அழகிய ஆபரணங்களையுடைய என்மகள் காணப்பெறுவளென்று. மாடம் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன, Maadam Kodi Mathil Soozh Mangaiyaar Kalikanri Sonna - மாடங்களில் நாட்டின் கொடிகளோடு கூடின திருமதிள்களாலே சூழப்பட்ட திருமங்கை நாட்லுள்ளர்க்கு தலைவரான ஆழிவார்ருளிச்செய்த பாடல், Paadal - பாடலாகிய பனுவல் பத்தும், Panoval Pathum - இப்பத்துப்பாசுரங்களையும் பயில்பார்க்கு, Payilpaarakku - கற்பவர்களுக்கு பாவங்கள் இல்லை, Paavangal Illai - பாவமொன்று மில்லையாகும். |