திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: அமலனாதிபிரான் (12 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
தனியன் 21அமலனாதிபிரான்- தனியன் || வடதிருக்காவேரி மற்றும் தென்திருக்காவேரி ஆகிய இரண்டுக்கும் நடுவே சயனித்துக்கொண்டிருக்கும் ஹரியான பெரிய பெருமாளைத் திருவடி தொடக்கமாக திருமுடி ஈறாக அனுபவித்து மகிழ்ந்த உள்ளத்தை உடையவரும், அந்தப் பெரிய பெருமாளைத் தவிர மற்ற விஷயங்களைக் காணமாட்டேன் என்று அறுதியிட்டவரும், லோக ஸாரங்க முனிவராலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரப்பட்டவருமான திருப்பாணாழ்வாரை நான் வணங்குகிறேன்.
பெரியநம்பிகள்
ஆபாத சூட மநுபூய ஹரிம் ஸயாநம் மத்யே கவேரது ஹிதுர் முதிதாந்தராத்மா | அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம் யோநிஸ்சிகாய மநவை முநிவாஹநம் தம் ||
பதவுரை Show / Hide
Ya:, ய: - யாவரொரு திருப்பாணாழ்வார்
Kaverathu hithu:, கவேரது ஹிது: - திருக்காவிரியின்
Madhye, மத்யே - நடுவில்
Sayaanam, ஸயாநம் - திருக்கண் வளர்ந்தருளுகிற
Harim, ஹரிம் - ஸ்ரீரங்கநாதரை
Aapaatha soodam, ஆபாத சூடம் - திருவடி தொடங்கித் திருமுடியளவாக
Anubooya, அநுபூய - அநுபவித்து
Mudhi thantharathma, முதி தாந்தராத்மா - உகந்தவராய்
Nayanayo: Vishyaantharaanaam Adhrashtruthaam, நயநயோ: விஷயாந்தராணாம் அத்ரஷ்ட்ருதாம் - (தமது) திருக்கண்கள் (அப்பெருமானைத் தவிர) மற்றொன்றையும் காணமாட்டாமையை
Nischikaya, நிஸ்சிகாய - அறுதியிட்டருளினாரோ
Tham, தம் - அப்படிப்பட்ட
Munivaahanam, முநிவாஹநம் - லோக ஸாரங்க மஹாமுநியை வாஹநமாகக் கொண்ட திருப்பாணாழ்வாரை
Manavai, மநவை - சிந்திக்கக்கடவேன்
தனியன் 22அமலனாதிபிரான்- தனியன் || லோக ஸாரங்க முனிவராலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரப்பட்டு, பெரிய பெருமாள் ஸந்நிதியில் தனியே புகுந்தவரும், பெரிய பெருமாள் காட்டிக் கொடுத்த திருவடித் தாமரைகள், அழகிய ஆடை, திருநாபி, மிகவும் இனியதான திருவயிறு, திருமார்வு, கழுத்து, சிவந்த வாய், அப்போதலர்ந்த தாமரை போன்ற கண்கள், திருமேனி ஆகியவற்றைக் கண்டவரும், எம்பெருமானைப் பாடுவதே வாழ்ச்சியாகக் கொண்டிருந்தவருமான திருப்பாணாழ்வார் திருவடிகளைக் கொண்டாடினோம்
திருமலை நம்பிகள்
காட்டவே கண்ட பாதகமல நல்லாடையுந்தி தேட்டரு முதரபந்தந் திருமார்வு கண்டஞ் செவ்வாய் வாட்டமில் கண்கள்மேனி முனியேறித் தனிபுகுந்து பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள் பரவினோமே
பதவுரை Show / Hide
Muni eri, முனி ஏறி - லோகஸாரங்கமுனியின் (தோளின்மேல்) ஏறி
Thani pugundhu, தனி புகுந்து - தனியே உள்ளே புகுந்து
Kaatave kanda, காட்டவே கண்ட - (எம்பெருமான்) காண்பித்தபடியே கண்டு ஸேவிக்கப்பட்ட
Paadha Kamalam, பாத கமலம் - திருவடித் தாமரைகளும்
Nal aadai, நல் ஆடை - சிறந்த திருப்பீதாம்பரமும்
Undhi, உந்தி - திருநாபியும்
Thetarum, தேட்டரும் - கிடைத்தற்கு அரிதான
UdharaBandham, உதரபந்தம் - பொன்அரைநாணும்
Thirumaarvu, திருமார்வு - பிராட்டி வாழ்கிற மார்பும்
Kandam, கண்டம் - திருக்கழுத்தும்
Sevvaai, செவ்வாய் - சிவந்த வாயும்
Vaattam il, வாட்டம் இல் - சோர்வுஇல்லாத
Kangal, கண்கள் - திருக்கண்களும் (ஆகிய இவற்றோடு கூடிய)
Meni, மேனி - திருமேனியை
Paattinaal kandu vaazhum, பாட்டினால் கண்டு வாழும் - பாசுரங்களின் அநுஸந்தானத்தோடேகூட ஸேவித்து ஆனந்தித்த
Paanar, பாணர் - திருப்பாணாழ்வாருடைய
Thaal, தாள் - திருவடிகளை
Paravinome, பரவினோமே - துதிக்கப்பெற்றோம்
927அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் அழகு மேல் விழுந்து தம்மை அடிமை கொண்டது என்கிறார். 1
அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
பதவுரை Show / Hide
அமலன், Amalan - பரிசுத்தனாய்
ஆதி, Adhi - ஜகத்கார பூதனாய்
பிரான், Piran - உபகாரகனாய்
என்னை, Ennai - (இழி குலத்தவனான) என்னை
அடியார்க்கு, Adiyarku - (தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு
ஆள்படுத்த, Aalpadutha - ஆட்படுத்துகையாலே வந்த
விமலன், Vimalan - சிறந்த புகரை யுடையனாய்
விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்யஸூரிகட்குத் தலைவனாயிருந்து வைத்து (ஆஸ்ரிதர்கட்காக)
விரை ஆர் பொழில், Virai Ar Pol - பரிமளம் மிக்க சோலைகளை யுடைய
வேங்கடவன், Vengadavan - திருவேங்கடமலையில் வந்து தங்குமவனாய்
நிமலன், Nimalan - ஆஸ்ரயிப்பார்க்கு அரியனாயிருக்கையாகிற குற்றமற்று;ஆஸ்ரித பாரதக்திரியத்தை வெளியிட்டு நிற்குமவனாய்
நின்மலன், Ninmalan - அடியாருடைய குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்ஸலனாய்
நீதி வானவன், Neethi Vanavan - சேஷ சேஷி முறை வழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய்
நீள் மதிள், Neel Mathil - உயர்ந்த மதிள்களை யுடைய
அரங்கத்து, Arangathu - கோயிலிலே (கண் வளர்ந்தருளுகிற)
அம்மான், Ammaan - ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய
திரு கமல பாதம், Thiru Kamala Padham - திருவடித் தாமரைகளானவை
வந்து, Vandhu - தானே வந்து
என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே, En Kannin Ullan Okkindrathe - என் கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே
928அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — முதல் பாட்டில் அவன் தொடர்ந்து வந்த படி சொன்னார் இப்பாட்டில் தாம் மேல் விழுந்த படி சொல்லுகிறார். 2
உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச் சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே
பதவுரை Show / Hide
உவந்த உள்ளத்தன் ஆய், Uvandha Ullathaan Aay - மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை யுடையவனாய்க் கொண்டு
உலகம் அளந்து, Ulakam Alanthu - மூவுலகங்களையும் அளந்து
அண்டம் உற, Andam Ur - அண்ட கடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி
நிவந்த, Nivandha - உயர்த்தியை அடைந்த
நீள் முடியன், Neel Mudian - பெரிய திருமுடியை யுடையவனாய்
அன்று, Andru - முற்காலத்தில்
நேர்ந்த, Neerndha - எதிர்த்து வந்த
நிசரசரரை, Nisarasararai - ராக்ஷஸர்களை
கவர்ந்த, Kavarntha - உயிர் வாங்கின
வெம் கணை, Vem Ganai - கொடிய அம்புகளை யுடைய
காகுத்தன், Kaakuthan - இராம பிரானாய்
கடி ஆர், Kadi Ar - மணம் மிக்க
பொழில், Pol - சோலைகளை யுடைய
அரங்கத்து, Arangathu - ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான
அம்மான், Ammaan - எம்பிரானுடைய
அரை, Arai - திருவரையில் (சாத்திய)
சிவந்த ஆடையின் மேல், sivandha Aadiyin Mel - பீதாம்பரத்தின் மேல்
என சிந்தனை சென்றது, Ena Sindhanai Sendradhu - என்னுடைய நினைவானது ஆம் பதிந்ததாம்
929அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — திருப் பீதாம்பரத்தின் அழகு திரு நாபீ கமலத்திலே வீசிற்று. 3
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான் அந்தி போல் நிறத் தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில் உந்தி மேல தன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே
பதவுரை Show / Hide
மந்தி, Mandhi - குரங்குகளானவை
பாய், Pai - (ஒரு கிளையில் நின்றும் மற்றொரு கிளையில்) பாயப் பெற்ற
வடவேங்கடம் மா மலை, Vadavengadam Ma Malai - வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே
வானவர்கள், Vaanavarkal - நித்ய ஸூரிகள்
சந்தி செய்ய நின்றான், Sandhi Seyya Nindraan - பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய்
அரங்கத்து, Arangathu - கோயிலிலே
அரவு இன் அணையான், Aravu in Anaiyaan - திருவனந்தாழ்வானாகிற போக்யமான படுக்கையை யுடையனான அழகிய மணவாளனுடைய
அந்தி போல் நிறத்து ஆடையும், Andhi pol nirathu aadiyum - செவ் வானம் போன்ற நிறத்தையுடைய திருப் பீதாம்பரமும்
அதன் மேல், Adhan mel - அப் பீதாம்பரத்தின் மேலே
அயனை படைத்தது ஓர் எழில் உந்திமேலது அன்றோ, Ayanaai padaithadhu oru ezhil undhimeladhu andro - பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகை யுடைய திருநாபிக் கமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ
அடியேன் உள்ளத்து இன் உயிரே, Adiyen ullathu in uyire - என்னுடைய மனஸ்ஸிலே விளங்குகிற இனிதான ஆத்ம ஸ்வரூபம்.
930அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — திரு நாபீ கமலத்தோடே சேர்ந்த திரு வுதர பந்தத்தை அனுபவிக்கிறார்- 4
சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன் மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே
பதவுரை Show / Hide
சதுரம், Sadhuram - நாற்சதுரமாய்
மா, Maa - உயர்ந்திருக்கிற
மதிள்சூழ், Mathilsoozh - மதிள்களாலே சூழப்பட்ட
இலங்கைக்கு, Ilangaikku - லங்கா நகரத்திற்கு
இறைவன், Iraivan - நாதனான இராவணனை
ஓட்டி, Ootti - (முதல் நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து (மறுநாட்போரில்)
தலை பத்து, Thalai Pathu - (அவனது) தலைபத்தும்
உதிர, Udhira - (பனங்காய்போல்) உதிரும்படி
ஓர், Or - ஒப்பற்ற
வெம் கணை, Vem Ganai - கூர்மையான அஸ்த்ரத்தை
உய்த்தவன், Uyththavan - ப்ரயோகித்தவனும்
ஓதம் வண்ணன், Otham Vannan - கடல் போன்ற (குளிர்ந்த) வடிவை யுடையவனும்
வண்டு, Vantu - வண்டுகளானவை
மதுரமா, Madhurama - மதுரமாக
பாட, Paada - இசைபாட(அதற்குத் தகுதியாக)
மா மயில் ஆடு, Maa Mayil Aadu - சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற
அரங்கத்து அம்மான், Arangathu Ammaan - திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு வயிறு உதர பந்தம், Thiru Vayiru Udara Bandham - திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது
என் உள்ளத்துள் நின்று, En Ullathul Nindru - என் நெஞ்சினுள் நிலைத்து நின்று
உலாகின்றது, Ulaaginradhu - உலாவுகின்றது
931அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — எனக்கு பற்றாசான ஸ்ரீ பெரிய பிராட்டியார் இருக்கிற திரு மார்பு கிடீர் என்னை ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யம் கொண்டது–என்கிறார். 5
பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான் கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே
பதவுரை Show / Hide
பாரம் ஆய, Paaram Aaya - பொறுக்க முடியாத சுமையாயிராநின்ற
பழ வினை, Pala Vinai - அநாதியான பாபங்களின்
பற்று அறுத்து, Patru Aruthu - சம்பந்தத்தைத் தொலைத்து
என்னை, Ennai - (அதனால் பாபம் நீங்கப் பெற்ற) அடியேனை
தன் வாரம் ஆக்கி வைத்தான், Than Vaaram Aakki Vaithaan - தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணி வைத்தான் (ரங்கநாதன்)
வைத்தது அன்றி, Vaithadhu Andri - இப்படி செய்து வைத்ததுமல்லாமல்
என்னுள் புகுந்தான், Ennul Pugundhaan - என் ஹ்ருதயத்திலும் ப்ரவேசித்து விட்டான்
(இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக நான்) கோரம் மா தவம், (Ippadippatta Paagiyaththaip Perutharku Uruppaaga Naan) Koram Maa Thavam - உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை
செய்தனன் கொல், Seydhanan Kol - (முற் பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ?
அறியேன், Ariyen - அறிகிறேனில்லை;
அரங்கத்து அம்மான், Arangathu Ammaan - ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு ஆரம், Thiru Aaram - பிராட்டியையும் முக்தாஹரத்தையும் உடைத்தான
மார்பு அது அன்றோ, Maarp Adhu Andro - அத் திரு மார்பன்றோ
அடியேனை, Adiyenai - தாஸனான என்னை
ஆள் கொண்டது, Aal Kondadhu - அடிமைப் படுத்திக் கொண்டது
932அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை உண்டாக்கிற்று -என்கிறார் – திருமார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம் 6
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன் அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே
பதவுரை Show / Hide
துண்டம், Thundam - ஒரு துண்டாயிருக்கிற (கலா மாத்ரமான)
வெண் பிறையன், Ven Piraiyan - வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய
துயர், Thuyar - (பிச்சை யெடுத்துத் திரிந்த) பாதகத்தை
தீர்த்தவன், Theerthavan - போக்கினவனும்
அம் சிறைய வண்டு, Am Siraiya Vantu - அழகிய சிறகை யுடைய வண்டுகள்
வாழ், Vaazh - வாழ்தற்கிடமான
பொழில் சூழ், Pozhil Soozh - சோலைகள் சூழப் பெற்ற
அரங்கம் நகர், Arangam Nagar - திருவரங்கப் பெரு நகரிலே
மேய, Mae, Meya - பொருந்தி யிரா நின்ற
அப்பன், Appan - ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய
அண்டர், Andar - அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும்
அண்டம், Andam - அண்டங்களையும்
பகிரண்டம், Pakirandam - அண்டாவரணங்களையும்
ஒரு மா நிலம், Oru Maa Nilam - ஒப்பற்ற மஹா ப்ருதிவியையும்
எழு மால் வரை, Ezh Maal Varai - ஏழு குல பர்வதங்களையும்
முற்றும், Muttrum - சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும்
உண்ட, Undu - அமுது செய்த
கண்டம் கண்டீர், Gandam Kandeer - திருக் கழுத்துக் கிடீர்
அடியேனை, Adiyenai - தாஸனான என்னை
உய்யக் கொண்டது, Uyyak Kondadhu - உஜ்ஜீவிப்பித்தது
933அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் – நீஞ்சப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே 7
கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல் மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம் ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார் செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
பதவுரை Show / Hide
கையின், Kaiyin - திருக் கைகளில்
ஆர், Aar - பொருந்தியிருக்கிற
சுரி சங்கு, Suri Sangu - சுரியையுடைய திருச்சங்கையும்
அனல் ஆழியர், Anal Aazhiyar - தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்
நீள் வரை போல், Neel Varai Pol - பெரியதொரு மலை போன்ற
மெய்யனார், Meyyanar - திருமேனியை யுடையராய்
துளபம் விரை ஆர், Thulabam Virai Aar - திருத்துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்)
கமழ், Kamazh - பரிமளியா நின்றுள்ள
நீள்முடி, Neelmudi - உயர்ந்த திருவபிஷேகத்தை யுடையராய்
எம் ஐயனார், Em Aiyanar - எமக்கு ஸ்வாமியாய்
அணி அரங்கனார், Ani Aranganar - அழகு பொருந்திய திருவரங்கத்திற் கண் வளர்ந்தருள்பவராய்
அரவு இன் அணை மிசை மேய, Aravu In Anai Misai May - திருவனந்தாழ்வானாகிற இனிய திருப்பள்ளியின் மீது பொருந்திய
மாயனார், Maayanar - ஆச்சரியச் செய்கைகளை யுடையரான ஸ்ரீ ரங்கநாதருடைய
செய்ய வாய், Seyya Vai - சிவந்த திருப்பவளமானது
என்னை, Ennai - என்னுடைய
சிந்தை, Sindhai - நெஞ்சை
கவர்ந்தது, Kavarnthadhu - கொள்ளை கொண்டது;
ஐயோ, Aiyo - (ஆநந்தாதிசயக் குறிப்பு.)
934அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — திருக் கண்கள் என்னை அறிவு கெடுத்தது என்கிறார். 8
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக் கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே
பதவுரை Show / Hide
பரியன் ஆகி, Pariyan Aagi - மிகவும் ஸ்தூலமான வடிவை யுடையனாய்க் கொண்டு
வந்த, Vandhu - (ப்ரஹ்லாதனை நலிய) வந்த
அவுணன், Avunan - அஸூரனான இரணியனுடைய
உடல், Udal - சரீரத்தை
கீண்ட, Keendu - கிழித்துப் பொகட்டவனும்
அமரர்க்கு, Amararku - பிரமன் முதலிய தேவர்கட்கும்
அரிய, Ariya - அணுக முடியாதவனும்
ஆதி, Adhi - ஜகத் காரண பூதனும்
பிரான், Piran - மஹோபகாரகனும்
அரங்கத்து, Arangathu - கோயிலில் எழுந்தருளியிருக்கிற
அமலன், Amalan - பரமபாலநனுமாகிய எம்பெருமானுடைய
முகத்து, Mugathu - திருமுக மண்டலத்தில்
கரிய ஆகி, Kariya Aagi - கறுத்த நிறமுடையவையாய்
புடை பரந்து, Putai Parandhu - விசாலங்களாய்
மிளிர்ந்து, Milarndhu - பிரகாசமுடையவையாய்
செவ்வரி ஓடி, Sevvary Oodi - செவ்வரி படர்ந்திருப்பனவாய்
நீண்ட, Neendu - (காதுவரை) நீண்டிருப்பவனாய்
பெரிய ஆய, Periya Aaya - பெருமை பொருந்தியவையுமான
அக் கண்கள், Ak Kangal - அந்தத் திருக்கண்களானவை
என்னை, Ennai - அடியேனை
பேதைமை செய்தன, Paedhaimai Seydhan - உந்மத்தனாகச் செய்துவிட்டன
935அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — ஊரழி பூசல் போலே திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார். 9
ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய் ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான் கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில் நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே
பதவுரை Show / Hide
மா, Maa - பெரிதான
ஆல மரத்தின் , Aala Marathin - ஆல மரத்தினுடைய
இலை மேல், Iai Mel - (சிறிய) இலையிலே
ஒரு பாலகன் ஆய், Oru Paalakan Aay - ஒரு சிறு பிள்ளையாகி
ஞாலம் ஏழும் உண்டான், Gnalam Yezhum Undaan - ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும்
அரங்கத்து, Arangathu - கோயிலிலே
அரவு இன் அணையான், Aravu In Anaiyaan - திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
கோலம், Kolam - அழகிய
மா, Maa - சிறந்த
மணி ஆரமும், Maani Aramum - ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்
முத்து தாமமும், Muthu Thaamamum - முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்)
முடிவு இல்லது, Mudivu Illadhu - எல்லை காண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்
ஓர் எழில், Oru Yezhil - ஒப்பற்ற அழகை யுடையதும்
நீலம், Neelam - கரு நெய்தல் மலர் போன்றதுமான
மேனி, Meni - திருமேனி யானது
என் நெஞ்சினை, En Nenjinai - எனது நெஞ்சினுடைய
நிறை, Nirai - அடக்கத்தை
கொண்டது, Kondadhu - கொள்ளை கொண்டு போயிற்று;
ஐயோ!, Aiyo! - இதற்கென் செய்வேன்? என்கிறார்.
936அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — நிகமத்தில் -இவ்வளவும் ஜ்ஞான சாஷாத் காரம் – மேல் லோக ஸாரங்க மஹா முனிகள் தோளில் வந்து புகுந்து விண்ணப்பம் செய்கிறார் . 10
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
பதவுரை Show / Hide
கொண்டல் வண்ணனை, Kondal Vannanai - காள மேகம்போன்ற வடிவையுடையனும்
கோவலன் ஆய் வெண்ணெய் உண்ட வாயன், Kovalan Aay Vennay Unda Vayan - கோபால குமாரனாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையனும்
என் உள்ளம், En Ullam - என்னுடைய நெஞ்சை
கவர்ந்தானை, Kavarnthaanai - கொள்ளை கொண்டவனும்
அண்டர் கோன், Andar Kon - நித்யஸூரிகட்குத் தலைவனும்
அணி அரங்கன், Ani Arangan - (பூமண்டலத்துக்கு) அலங்காரமான திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்வபனும்
என் அமுதினை, En Amudhinai - எனக்குப் பரம போக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனை
கண்ட கண்கள், Kanda Kangal - ஸேவிக்கப் பெற்ற (பரமபத நாதனையும்)
காணா, Kaana - காண மாட்டா.