| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 53 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 10 | வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே–1-3-10 | வஞ்சனையால் வந்த,Vanchanaiyaal vanda - வஞ்சக வேஷத்தோடே வந்த பேய்ச்சி,Peychi - பூதனையினுடைய முலை உண்ட,Mulai unda - முலையை அமுது செய்தவனாய் அஞ்சனம் வண்ணனை,Anjanam vannanai - மை போன்ற நிறத்தை யுடையவனான கண்ண பிரானை ஆய்ச்சி,Aaychi - யசோதைப் பிராட்டி தாலாட்டிய,Thaalattiya - தாலாட்டின படிகளை செம் சொல் மறையவர்,Sem sol maraivar - செவ்விய சொற்கள் நிறைந்த வேதங்களில் வல்லவரான ஸ்ரீவைஷ்ணவர்கள் சேர்,Ser - நித்ய வாசம் பண்ணப் பெற்ற புதுவை,Puthuvai - ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்த பட்டன்,Pattan - பெரியாழ்வார் (அருளிச் செய்த) சொல்,Sol - இப்பாசுரங்கள் எஞ்சாமை,Enjaamai - குறைவு படாமல் வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்க்கு இடர் இல்லை,Idar illai - துன்பம் ஒன்றுமில்லையாம். தான் ஏ,Thaan e - அசை |
| 234 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 1 | அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின் பின் என் செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-1 | அஞ்சனம் வண்ணனை,Anjanam Vannanai - மை போன்ற நிறத்தை யுடையனும் ஆயர் கோலம்,Aayar Kolam - இடைக் கோலம் பூண்டுள்ளவனும் கொழுந்தினை,Kozhuthinai - (அவ் விடையர்க்குத்) தலைவனும் பிள்ளையை,Pillaiyai - (எனக்குப்) பிள்ளையுமான கண்ணனை மனைகள் தொறும்,Manaigal Thorum - (தன் வீட்டிற் போலவே) அயல் வீடுகள் தோறும் திரியாமே,Thiriyame - (இஷ்டப்படி) திரிய வொட்டாமல் மஞ்சனம் ஆட்டி,Manjanam Aatti - (காலையில் குள்ளக் குளிர) நீராட்டி, கஞ்சனை,Kanjanai - கம்ஸனை காய்ந்த,Kaayndha - சீறி யுதைத்த கழல்,Kazhal - வீரக் கழலை அணிந்துள்ள அடி,Adi - திருவடிகள் நோவ,Nova - நோம் படியாக கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (மேய்க்கப் போ வென்று) என் செய போக்கினேன்,En Seiya Pokkinean - ஏதுக்காகப் போக விட்டேன்!; எல்லே பாவமே,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 235 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 2 | பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே கற்றுத் தூளி யுடை வேடர் கானிடைக் கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-2 | பாடியில்,Paadiyil - திருவாய்ப் பாடியில் பற்று மஞ்சள் பூசி,Patru Manjal Poosi - பற்றுப் பார்க்கும் மஞ்சளை(த்திருமேனி யெங்கும் பெண்கள் கையால் தனித் தனியே) பூசப் பெற்று, சிற்றில் சிதைத்து,Sitril Sithaithu - (அப் பெண்கள் இழைக்கும்) சிற்றில்களை உதைத்தழித்து (இப்படி) எங்கும்,Engum - எல்லா விடங்களிலும் தீமை செய்து,Theemai Seidhu - தீம்புகளைச் செய்து கொண்டு பாவை மாரொடு,Paavai Maarodu - அவ் விடைப் பெண்களோடே திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல், கன்று,Kanru - கன்றுகளினுடைய தூளி உடை,Thooli Udai - தூள்களை யுடைத்தாய் வேடர்,Vedar - (அடித்துப் பிடுங்கும்) வேடர்களுக் கிருப்பிடமான கான் இடை,Kaan Idai - காட்டிலே கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (திரியும் படியாக) என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனை எற்றுக்கு போக்கினேன்,Etrukku Pokkinean - ஏதுக்காக அனுப்பினேன்! |
| 236 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 3 | நன் மணி மேகலை நங்கை மாரொடு நாள் தொறும் பொன் மணி மேனி புழுதி யாடித் திரியாமே கன் மணி நின்றதிர் கானதரிடைக் கன்றின் பின் என் மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-3 | என்,En - என் மகனான மணி வண்ணனை,Mani Vannanai - நீல மணி போன்ற வடிவை யுடைய கண்ணனை, நல்,Nal - லோகோத்தரமான மணி,Mani - நவ மணிகள் பதித்த மேகலை,Megalai - மேகலையை (அணிந்துள்ள) நங்கைமாரொடு,Nangaimaarodhu - யுவதிகளோடு கூட நாள் தொறும்,Naal Thorum - தினந்தோறும் பொன் மணி மேனி,Pon Mani Meni - அழகிய நீல மணி போன்ற திருமேனியானது புழுதி ஆடி,Puzhuthi Aadi - புழுதி படைக்கப் பெற்று(விளையாடி) திரியாமே,Thiriyame - திரிய வொண்ணாதபடி கான்,Kaan - காட்டிலே கல்,Kal - (இவன் கன்றுகளை அழைக்கிற த்வநியாலும், அவை கூவுகிற த்வநியாலும்) மலையிலே மணி நின்று அதிர்,Mani Nindru Athir - மணியினோசை போல பிரதி த்வநி யெழும்பப் பெற்றுள்ள (பயங்கரமான) அதர் இடை,Athar Idai - வழியிலே கன்றின் பின்,Kanrin Pin - (வருந்தும்படியாக) கன்றுகளின் பின்னே போக்கினேன்,Pokkinean - போகவிட்டேனே! எல்லே பாவமே,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 237 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 4 | வண்ணக் கருங் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட பண்ணிப் பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே கண்ணுக் கினியானைக் கானதரிடைக் கன்றின் பின் எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-4 | கண்ணுக்கு இனியானை,Kannukku Iniyanai - கண்களுக்கு மிகவும் தர்சநீயனாய் எண்ணற்கு அரியானை,Ennarkku Ariyanai - (இத் தன்மையன் என்று) நினைக்க முடியாதவனாயுள்ள கண்ணபிரானை இப் பாடி எங்கும்,Ep Paadi Engum - இத் திருவாய்ப்பாடி முழுவதும் பல செய்து,Pala Seidhu - பல (தீமைகளைச்) செய்து (அத் தீமைகளினால்) வண்ணம் கரு குழல்,Vannam Karu Kuzhal - அழகிய கறுத்த கூந்தலை யுடையரான மாதர்,Maadhar - பெண் பிள்ளைகள் வந்து,Vandhu - (தாயாகிய என்னிடம் ஓடி) வந்து அலர் தூற்றிடப் பண்ணி,Alar Thoottidap Panni - பழி தூற்றும்படியாகப் பண்ணிக் கொண்டு திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல் கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (திரியும்படி) போக்கினேன்,Pokkinean - அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 238 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 5 | அவ்வவ் விடம் புக்கு அவ் வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் கொவ்வைக் கனி வாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே எவ்வம் சிலை யுடை வேடர் கானிடைக் கன்றின் பின் தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-5 | தெய்வம்,Deivam - தேவர்களுக்கு தலைவனை,Thalaivanai - நிர்வாஹகனான கண்ணனை அ அ இடம் புக்கு,A A Idam Pukku - (மச்சு மாளிகை முதலான) அவ்வவ் விடங்களில் (ஏகாந்தமாகப்) புகுந்து அ ஆயர் பெண்டிர்க்கு,A Aayar Pendirkku - (அவ்வவ் விடங்களிலுள்ள) அவ்விடைப் பெண்களுக்கு அணுக்கன் ஆய்,Anukkan Aai - அந்தரங்கனாய் கொவ்வை கனி,Kovvai Kani - (அவர்களுக்கு) கோவைப் பழம் போன்ற வாய்,Vaai - (தன்) அதரத்தை கொடுத்து,Koduthu - (போக்யமாக்க) கொடுத்துக் கொண்டு கூழைமை செய்யாமே,Koolaimai Seiyyaame - கூழ்மைத் தன்மடித்துத் திரிய வொட்டாமல் எவ்வும்,Evvum - துன்பத்தை விளைக்குமதான சிலை உடை,Silai Udai - வில்லை(க்கையிலே) உடைய வேடர்,Vedar - வேடர்களுக்கு(இருப்பிடமான) கான் இடை,Kaan Idai - காட்டிலே கன்றின் பின் போக்கினேன் ;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 239 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 6 | மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப் போய் படிறு பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே கடிறு பல திரி கானதரிடைக் கன்றின் பின் இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-6 | என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனாகிய கண்ண பிரானை வெண்ணெய்,Vennei - வெண்ணெயை மிடறு,Midaru - கழுத்திலே மெழுமெழுத்து ஓட,Mezhumezhuthu Oda - (உறுத்தாமல்) மெழுமெழுத்து ஓடும்படி விழுங்கி,Vizhunghi - விழுங்கி விட்டு போய்,Poi - (பிறரகங்களுக்குப்) போய் பல படிறு,Pala Padiru - பல கள்ள வேலைகளை செய்து,Seidhu - செய்து கொண்டு இ பாடி எங்கும்,E Paadi Engum - இவ் விடைச்சேரி முழுதும் திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல் பல கடிறு திரி,Pala Kadiru Thiri - பல காட்டானைகள் திரியப் பெற்ற கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே இடற,Idara - தட்டித் திறியும்படியாக கன்றின் பின் போக்கினேன் ;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 240 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 7 | வள்ளி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே கள்ளி யுணங்கு வெங் கானதரிடைக் கன்றின் பின் புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-7 | புள்ளின் தலைவனை,Pullin Thalaivanai - பெரிய திருவடிக்குத் தலைவனான கண்ண பிரானை வள்ளி,Valli - கொடி போன்று துடங்கு,Thudangu - துவளா நின்றுள்ள இடை,Edai - இடையை யுடைய மாதர்,Maadhar - இடைப் பெண்கள் வந்து,Vandhu - (தாயாகிய என்னிடத்தில்) வந்து (இவன் செய்த தீமைகளைச் சொல்லி) அலர் தூற்றிட,Alar Thoottida - பழி தூற்றிக் கொண்டிருக்கச் செய்தே துள்ளி,Thulli - (அதை ஒரு பொருளாக மதியாமல்) (நிலத்தில் நில்லாமல்) துள்ளி தோழரோடு,Thozharodu - (தன்) தோழர்களோடு கூட விளையாடி,Vilayaadi - விளையாடிக் கொண்டு திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல் கள்ளி,Kalli - (மழை யில்லாக் காலத்திலும் பசுமை மாறாத) கள்ளிச் செடியுங்கூட உணங்கு,Unangu - (பால் வற்றி) உலரும் படியாய் வெம்,Vem - மிக்க வெப்பத்தை யுடைய கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே |
| 241 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 8 | பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் என் இளங் கொங்கை அமுத மூட்டி யெடுத்து யான் பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின் என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-8 | என் இள சிங்கத்தை,En Ila Singathai - எனது சிங்கக் குட்டி போன்ற கண்ணபிரானை பன்னிரு திங்கள்,Panniru Thingal - பன்னிரண்டு மாஸ காலம் வயிற்றில் கொண்ட ஆ பாங்கினால்,Vayitril Konda A Paanginal - (என்) வயிற்றிலே வைத்து நோக்கின அப்படிப்பட்ட அன்புக்கேற்ப யான்,Yaan - (தாயாகிய) நான் என்,En - என்னுடைய இள,Ela - குழைந்திரா நின்றுள்ள கொங்கை,Kongai - முலையிலுண்டான அமுதம்,Amudham - பாலை ஊட்டி,Ootti - (அவனுக்கு) உண்ணக் கொடுத்து எடுத்து,Eduthu - வளர்த்து புலரியே,Pulariye - (இப்படியாக அருமைப்பட நோக்கின பிள்ளையை) (இன்று) விடியற் காலத்திலேயே (எழுப்பி) பொன் அடி நோவ,Pon Adi Nova - அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக கானில்,Kaanil - காட்டிலே கன்றின் பின் போக்கினேன்;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 242 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 9 | குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனை நான் உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடை கடிய வெங் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின் கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-9 | என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனான தாமோதரனை,Thaamodharanai - கண்ணபிரானை, குடையும்,Kudaiyum - குடையையும் செருப்பும்,Seruppum - செருப்பையும் கொடாதே,Kodaadhe - (அவனுக்குக்) கொடாமல் கொடியேன் நான் ,Kodiyen Naan - கொடியவளாகிய நான் உடையும்,Udaikum - (ஸூர்யனுடைய வெப்பத்தாலே) உடைந்து கிடப்பனவாய் கடியன,Kadiyana - கூரியனவாய்க் கொண்டு ஊன்று,Oonru - (காலிலே) உறுத்துவனவாய் வெம்,Vem - (இப்படி) அதி தீக்ஷ்ணமான பரற்கள் உடை,Parargal Udai - பருக்காங் கல்லை யுடைய கடிய வெம்,Kadiya Vem - அத்யுஷ்ணமான கான் இடை,Kaan Idai - காட்டிலே கால் அடி நோவ கன்றின் பின் போக்கினேன்,Kaal Adi Novu Kanrin Pin Pokkinen - அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே! எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம். |
| 243 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 10 | என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினே னென்று அசோதை கழறிய பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல் இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இட ரில்லையே–3-2-10 | என்றும்,Endrum - எப்போதும் எனக்கு,Enakku - (தாயாகிய) எனக்கு இனியானை,Eniyanai - இனிமையைத் தருமவனாய் என்,En - என்னுடைய மணி வண்ணனை,Mani Vannanai - நீல மணி போன்ற வடிவை யுடையனான கண்ணபிரானை கன்றின் பின் போக்கினேன் என்று,Kanrin Pin Pokkinen Endru - கன்றுகளின் பின்னே (காட்டில்) போக விட்டேனே!’ என்று அசோதை,Asothai - யசோதைப் பிராட்டி கழறிய,Kalariya - (மனம் நொந்து) சொன்னவற்றவை சொல்,Sol - அருளிச் செய்த பொன்,Pon - பொன் மயமாய் திகழ்,Thigal - விளங்கா நின்றுள்ள மாடம்,Maadam - மாடங்களை யுடைய புதுவையர்,Puthuvaiyar - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்களுக்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattan - பெரியாழ்வாருடைய இன்,En - போக்யமான தமிழ் மாலைகள்,Tamil Maalaigal - தமிழ்ச் சொல் மாலைகளை வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு இடர் இல்லை,Edar Ellai - (ஒரு காலும்) துன்பமில்லையாம். |
| 311 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 5 | பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து நஞ்சுமிழ் நாகம் கிடந் தநல் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப் பற அசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற–3-9-5 | பஞ்சவர்,Panchavar - பஞ்ச பாண்டவர்களுக்காக தூதன் ஆய்,Thoodhan Aay - (துரியோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய் பாரதம்,Bharatham - (அத்துரியோதனநாதிகள் தன்சொற்படி இசைந்துவாராமையால்) பாரத யுத்தத்தை கை செய்து,Kai Seithu - அணி வகுத்துச் செய்து, கஞ்சு உமிழ்,Kanju Umizh - விஷத்தைக் கக்குகின்ற நாகம் கிடந்த,Kaagam Kidandha - காளியன் கிடந்த நல் பொய்கை புக்கு,Nal Poigai Pukku - கொடிய மடுவிலே புகுந்து அஞ்ச பணத்தின் மேல் ,Anja Ak Kaaliyan Anjumbadi - (அக் காளியன்) அஞ்சும்படி (அவனது) படத்திலே பாய்ந்திட்டு,Paayndhittu - குதித்து நடமாடி அக்காளியனை இளைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க அருள் செய்த,Arul Seitha - அப் பாம்பின் பிராணனைக் கருணையால் விரட்டிட்ட அஞ்சனவண்ணனை பாடிப்பற;,Anjanavannanai Paadippara - அஞ்சனவண்ணனை பாடிப்பற; அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.,Asothaithan Singaththaip Paadippara - அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற. |