| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2864 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (இப்பதிகத்தில் கூறப்படும் பொருள். இப்பாசுரத்தில் சுருங்க வருளிச் செய்யப்படுகிறது.) 1 | அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது இருவரவர் முதலும் தானே இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம் புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1 | அரவு அணை மேல்,Aravu Anai Mel - ஆதிசேஷ சயனத்தின் மீது அணைவது,Anaivadhu - சேர்வது பூ பாவை ஆகம் புணர்வது,Poo Paavai Aagam Punarvadhu - பெரிய பிராட்டியின் திருமேனியைக் கூடுவது; (ஆகிய இவை நித்ய விபூதியில் எம்பெருமானுடைய காரியங்கள்) அவர் இருவர்,Avar Iruvar - ப்ரஸித்தர்களான பிரமன் ருத்ரன் என்கிற இருவர்க்கும் முதலும் தானே,Mudhalum Thaane - முதல்வனும் அப்பெருமான் தானேயாயிருப்பன்; (அவதார முகத்தாலே) எப்பொருட்கும்,Epporudkum - எல்லாப் பொருளுக்கும் இணைவன் ஆம்,Inaivan Aam - ஸஜாதீயனாயிருப்பன்; வீடு முதல் ஆம்,Veedu Mudhal Aam - மோக்ஷத்தை யளிப்பவனுமவனே; பிறவி கடல்,Piravi Kadal - ஸம்ஸார ஸமுத்ரத்தை நீந்துவார்க்கு,Neenthuvaarku - நீந்திக் கரையேற விரும்புமவர்கட்கு புணைவன்,Punai Van - தெப்பமாயிருப்பவனுமவனே. |
| 2865 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (கீழ்ப்பாட்டில் ‘வீடுமுதலாம்’ என்றதை விவாரிக்கிறதா யிருக்கின்றது இப்பாசுரம். எம்பெருமான் வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை, அவனோடுண்டான ஸம்பந்தமே போரும் மோக்ஷமளிப்பதற்கு-என்கிறார்.) 2 | நீந்தும் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும் நீந்தும் துயரில்லா வீடு முதலாம் பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2 | பூ தண் புனல் பொய்கை,Poo Than Punal Poikai - அழகிய குளிர்ந்த நீரையுடைய தடாகத்தில் யானை,Yanai - கஜேந்திராழ்வானுடைய இடர்,Idar - ஆர்த்தியை கடிந்த,Kadindha - தொலைத்தருளினவனும் பூ தண் துழாய்,Poo Than Thuzhai - துழாய் மாலையை யுடைவனுமான என் தனி நாயகன்,En Thani Naayagan - எம்பெருமானுடைய புணர்ப்பு,Punarppu - ஸம்பந்தமர்னது நீந்தும்,Neenthum - கடத்தற்கு அரிதான துயர்,Thuyar - துன்பத்திற்கு ஹேதுவான பிறவி உட்பட மற்று,Piravi Utpada Matru - பிறப்பு முதலாக மேலுமுள்ள எவ்வெவையும் நீந்தும்,Evvevaiyum Neenthum - எப்படிப்பட்ட துன்பங்களையும் கடத்தும் (அன்றியும்) துயர் இல்லா வீடு முதல் ஆம்,Thuyar Illa Veetu Mudhal Aam - துயர் சிறிதுமில்லாத மோக்ஷத்திற்கும் ஹேதுவாகும். |
| 2866 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) ( முதற்பாட்டில் “இருவரவர் முதலுந்தானே” என்றதை விவரித்துக் கொண்டு, அப்பெருமானுடைய ஐச்வர்ய ஸூசகமான சேஷ்டிதங்கள் எங்கும் ப்ரஸித்தமாகவே யுள்ளன வென்கிறார்.) 3 | புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம் புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர் புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3 | தன் புணர்த்த,Than Punarthu - தன்னைப் படைத்த உந்தியோடு,Undhiyodu - திருநாபியோடேகூட ஆகத்து,Aagathu - திருமேனியிலொரு பக்கத்திலும் மன்னி,Manni - பொருந்தியிருந்து புணாக்கும்,Punaakkum - லோக ஸ்ருஷ்டியைப் பண்ணுகிற அயன் ஆம்,Ayan Aam - பிரமனும் தானேயாயிருப்பன்; அழிக்கும் அரன் ஆம்,Azhikkum Aran Aam - ஸம்ஹாரிக்கிற ருத்ரனும் தானேயாயிருப்பன். தன் மார்வில்,Than Maarvil - தனது திருமார்பிலே புணர்த்த,Punartha - சேர்த்துக்கொள்ளப்பட்ட திரு ஆகி,Thiru Aagi - பிராட்டியை யுடையனாய் தான் சேர்,Thaan Ser - தானே தனக்குத் தகுதியான புணர்ப்பன்,Punarppan - செயலை யுடையனான அப்பெருமானது பெரு புணர்ப்பு,Peru Punarppu - பெரிய வியாபாரம் எங்கும்,Engum - எவ்விடத்தும் புலன்,Pulan - பரத்யக்ஷயோக்யமே. |
| 2867 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (அற்பமான விஷய ஸூகங்களைவிட்டு, அற்புத இன்பமயமான மோக்ஷ புருஷார்த்தத்தைப் பெற்றுக் களிப்புறபேண்டி யிருப்பீர்! எம்பெருமானுடைய திருக்குணங்களிலே இடைவிடாது அவகாஹித்துப் போருங்கோள், என்கிறார்) 4 | புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி நலமந்த மில்லதோர் நாடு புகுவீர் அலமந்து வீய அசுரரைச் செற்றான் பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4 | புலன் ஐந்து,Pulan Aindhu - சப்தாதி விஷயங்கள் ஐந்திலும் மேயும்,Meyum - மேய்கின்ற பொறி ஐந்தும்,Pori aindhum - பஞ்சேந்திரியங்களின் வசத்தில் நின்றும் நீங்கி,Neengi - விலகி நலம் அந்தம் இல்லர் ஓர்நாடு புகுவீர்,Nalam andham illar oornadu puguveer - ஆனந்தம் அளவிறந்திருப்பதான திருநாட்டிலே போய்ப்புக வேண்டியிருப்பவர்களே! அசுரரை,Asurarai - அசுரர்களை அலமந்து வீய செற்றான்,Alamandhu veeya setraan - குடல் குழம்பிச் சாகும்படி கொன்ற பெருமானுடைய பலம் முந்து சீரில்,Palam mundhu seeril - பலனே முந்தியிருக்கின்ற திருக்குணங்களில் ஓவாதே,Ovaadhe - அநவரதம் படிமின்,Padimin - அவகாஹியுங்கள். |
| 2868 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (முதற்பாட்டில் “இணைவனா மெப்பொருட்கும்” என்றது. இப்பாசுரத்தினால் விவரிக்கப்படுகிறது. ஹயக்ரீவ மத்ஸ்ய கூர்ம ராம க்ருஷ்ணாதி ரூபத்தாலே திருவவதாரங்கள் பண்ணி மூவுலங்களையுங் காத்தருள்பவனென்கிறது.) 5 | ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும் மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன் மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5 | ஓவா துயர்,Ova thuyar - இடைவிடாத துக்கத்தை விளைக்கிற பிறவி உள்பட,Piravi ulpada - ஜன்மம் முதலாக மற்று எவ்வெவையும்,Matru evvevaiyum - மற்றுமுள்ளவை யெல்லாவற்றுக்கும் (அதாவது ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகளுக்கென்றபடி) மூவா,Moova - ஒரு நாளும் கை வாங்காத தனி முதல் ஆய்,Thani mudhal aay - அஸஹாய காரண பூதனாய்க் கொண்டு. மூ உலகும் காவலோன்,Moo ulagum kaavalon - மூன்று லோகங்களையும் ரக்ஷிக்க வல்லவனாய் தேவ ஆதி தேவர் பெருமான்,Theva adhi devar perumaan - தேவர்களுக்கும் ஆதி தேவர்களான நித்ய ஸூரிகளுக்கும் அதிபதியாய் என் தீர்த்தன்,En theerdhan - என்னைப் பரிசுத்தனாக்க வல்லனான பெருமான் மா ஆகி,Maa aagi - ஹயக்ரிவனாக அவதரித்தும் ஆமை ஆய்,Aamai aay - கூர்மமாக அவதரித்தும் மீன் ஆகி,Meen aagi - மத்ஸ்யமாக அவதரித்தும் மானிடம் ஆம்,Maanitam aam - (ராம க்ருஷ்ணாதி ரூபேண) மநுஷ்யனாகவும் அவதரிக்குமவன் |
| 2869 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (“தேவாதி தேவபெருமான்” என்று கீழ்ப்பாட்டில் ப்ரஸ்தாவிக்கப்பட்ட பெரு மேன்மை, பண்டே அர்ஜூனன் நிரூபித்து நிர்ணயித்த விஷயமாதலால், மிக ப்ரஸித்தமானவதில் மற்றை யோருடைய ஆராய்ச்சி வேணுமோ வென்கிறார்.) 6 | தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6 | தீர்த்தன்,Theerthan - பரம பவித்திரனான கண்ணபிரானுடைய உலகு அளந்த சே அடி மேல்,Ulagu alandha se adi mel - உலகமளந்த திருவடிகளிலே பூ தாமம்,Poo thaamam - புஷ்பமாலையை பார்த்தன்,Paarthan - அர்ஜூனன் சேர்த்தி,Seerthi - ஸமாப்பித்து அவையே,Avaiye - அப்பூமாலையையே சிவன் முடிமேல்,Sivan mudimel - சிவபிரானுடைய தளைமேல் தான் கண்டு,Thaan kandu - தானே பார்த்து தெளிந்து ஒழிந்த,Thelinthu ozhindhu - நன்றாகத் தெளியப்பெற்ற பைந்துழாயான் பெருமை,Painthuzhaayana perumai - பைந்துழாய் மாலையனான பெருமானுடைய பெருமை பேர்த்தும் ஒருவரால்,Perthum oruvaraal - மற்ற பேர்களாலே பேச கிடந்ததே,Pesa kidandhadhe - பேசவேண்டும்படி யிரா நின்றதோ? |
| 2870 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (இவ்விபூதி எம்பெருமானுக்கே அஸாதாரண மென்னுமிடத்திற்குத் தனித்தனியே உபபத்திகள் பலபல வுளவென்கிறார்.) 7 | கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும் தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7 | கிடந்து,Kidandhu - (கடற்கரையில் வழி வேண்டிக்) கிடந்து இருந்து,Irundhu - (சித்திரக்கூட கிரியில் இருந்தும் நின்று,Nindru - (ராவணனை முடித்தபிறகு இலங்கை வாசலில் வீர ஸ்ரீயோடே) நின்றும். அளந்து,Alandhu - த்ரிவிக்ரமாவதாரஞ் செய்தும். கேழல் ஆய்,Kezhal aay - வராஹ ரூபியாகி கீழ் புக்கு,Keel pukku - பிரளய வெள்ளத்தின் கீழே புகுந்து இடந்திடும்,Idandhidum - அண்ட கடாஹத்தினின்றும் பூமியை ஒட்டு விடுவித்தெடுத்தும் (ஆக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்பவனாய்) தன்னுள்,Thannul - தனக்குள்ளே கரக்கும் (மூவுலகையும்) மறைத்து வைப்பவனாய் உமிழும்,Ummizhum - பிறகு வெளிப்படுத்துபவனாய் தட பெரு தோள் ஆர தழுவும்,Thada peru thol aara thazhuvum - மிகப் பெரிய திருத்தோள்கள் நிரம்பும்படி தழுவிக் கொள்பவனாய் (ஆக இப்படிகளாலே பார் என்னும் மடந்தையை,Paar ennum madandhaiyai - பூமிப்பிராட்டி திறத்திலே மால்,Maal - ஸர்வேச்வரன் செய்கின்ற,Seykinra - படுகிற மால்,Maal - வ்யாமோஹத்தை ஆர்காண்பார்,Aarkaanpaar - அறியவல்லாரார்? |
| 2871 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (எம்பெருமானது அறிபுதத் தொழில்கள் எப்படிப்பட்டவர்கட்கும் எல்லை காணமுடியா வென்கிறார்.) 8 | காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும் எண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8 | எம் ஈசன்,Em Isan - எமக்கு ஸ்வாமியான கண்ணனை,Kannanai - ஸ்ரீக்ருஷ்ணனை காண்பார்ஆர்,Kaanpaar aar - அறியவல்லார்யார்? காணும் ஆறு என்,Kaanum aaru en - அறியும் விதந்தான் யாது? (அவனுக்கு) ஊண்பேசில்,Oonpaesil - உணவு இன்னதென்று சொல்லப் புகுந்தால் எல்லா உலகும்,Ella ulagum - எல்லா வுலகங்களும் ஓர் துற்று,Or thutru - ஒரு கபளத்திற்கும் ஆற்றா,Aattra - போதாது; வீடோ,Veetoo - (அவனுக்கு) வீடாயிருக்குமிடமோ சேண்பால,Senpaal - எல்லா வுலகங்களுக்கும் மேற்பட்டு வெகு தூரத்திலுள்ளது; மற்று எப்பொருட்கும்,Matru epporutkum - (அவனோ) (தன்னை யொழிந்த) எவ் வகைப் பொருட்கும் உயிர்,Uyir - அந்தர்யாமி; ஏண்பாலும்,Yenpaalum - எண்ணப்பட்ட ஓரிடமும் சோரான்,Sooraan - விடாதவனாய் எங்கும்,Engum - எல்லா விடங்களிலும் பரந்து,Paranthu - வியாபித்து உளன் ஆம்,Ulan aam - இருப்பவனாவன் |
| 2872 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (கீழ்ப்பாட்டில் “ஏண்பாலுஞ் சோரான் பரந்துளனாமெங்குமே” என்றதில் சிலர் சங்கை கொண்டார்களாக, அவர்களை நோக்கிக் கூறுகின்றார்- எம்பெருமானுடைய வ்யாபகத்வத்திலே விப்ரதிபத்தியுடையார் இரணியன் பட்ட பாடுபடுவார்கள்; ஆகையாலே கெடுவிகாள்! அவன் பட்ட பாடு படாதே கிடிகோள்-என்கிறார்.) 9 | எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9 | கண்ணன் எங்கும் உள்ள என்ற,Kannan engum ulla enra - எம்பெருமான் எங்கு மிருக்கிறானென்று சொன்ன மகனை,Maganai - புத்திரனை (ப்தஹ்லாதனை) இரணியன்,Iranian - (பிதாவான) ஹிரண்யாசுரன் காய்ந்து,Kaaynthu - கோபித்து இங்கு இல்லை என்று,Ingu illai enru - இவ்விடத்தில் இல்லை கிடாய் என்று தூண் புடைப்ப,Thoon putappu - தூணை அறைய, அங்கு,Angu - அந்தத் தூணிலே அப்பொழுதே,Appozhudhe - அந்த க்ஷணத்திலேயே அவன் வீய,Avan veey - அவிவிரணியன்முடியும்படி தோன்றிய,Thondriya - ஆவிர்ப்பவித்த என் சிங்கப் பிரான்,En singapiran - நரஸிம்ஹ மூர்த்தியான எம்பிரானுடைய பெருமை,Perumai - மேன்மை ஆராயும் சீர்மைத்தே,Aaraayum seermaithae - ஆராய்தற்குரிய தன்மையதோ? |
| 2873 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (ஸம்ஸாரிகள் எம்பெருமானை மறந்து எப்படியாவது தொலையட்டும் அவர்களில் ஒருத்தனான நானும் அவர்களைப்போலே பாழ்பட்டொழியாமே ஒருவாறு உஜ்ஜீவிக்கப் பெற்றேனே! என்று தமக்கு நேர்ந்த லாபத்தைக் குறித்துக் களித்துப் பேசுகிறார்.) 10 | சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10 | சீர்மை கொள்,Seermai kol - மேன்மை பொருந்திய வீடு,Veedu - மோக்ஷமும் சுவர்க்கம்,Suvarkkam - ஸ்வர்க்கமும் நரகு,Narakku - நரகமும் ஈரு ஆ,Eeru aa - மேலெல்லையாக ஈர்மை கொள் தேவர் நடு ஆ,Eermai kol thaevar nandu aa - ஈர நெஞ்சுடையரான தேவர்கள் நடுவாக மற்று எப்பொருட்கும்,Matru yepporutkum - மற்றெல்லாப் பொருள்களுக்கும் வேர் ஆய் முதல் ஆய் வித்து ஆய்,Veer aa muthal aa vithu aai - மூவகைக் காரணமும் தானே யாய் பரந்து,Paranthu - எங்கும் வியாபித்து தனி நின்ற,Thani nindru - பரம விலக்ஷணனா யிருக்கின்ற கார்முகில் போல் வண்ணன்,Kaarmukil pol vannan - காளமேக நிறத்தனான என் கண்ணனை,En kannanai - எம்பெருமானை நான் கண்டேன்,Naan kandeen - நான் அநுபவிக்கப் பெற்றேன் |
| 2874 | திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (பரந்து சிவந்திருந்துள்ள திருக்கண்களையும் அவற்றுக்குப் பரபாகமாகக் கறுத்த திருமேனியையுமுடைய எம்பெருமானைக் குறித்து, ஆழ்வார்பண்ணின் மேலே அருளிச்செய்தவாயிரத்துள் இப்பதிகத்தை ஓதவல்லவர்கள், திருநாட்டிலே வீற்றிருந்து நித்யானந்த மனுபவிக்கப் பெறுவார்களென்று, இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று.) 11 | கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன் பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11 | கண் தலங்கள் செய்ய,Kan thalangal seiya - திருக்கண்கள் சிவந்திருக்கப் பெற்றவனாய் கரு மேனி,Karu meni - கரிய திருமேனியை யுடையனான அம்மானை,Ammaanai - ஸ்வாமி விஷயமாக வண்டு அலம்பும் சோலை வளம் வழுதி நாடன்,Vandu alampum solai valam vazhuthi naadan - வண்டுகள் ஒலிக்கின்ற சோலை வளம் பொருந்திய திருவழுதி நாட்டுக்குத் தலைவரான ஆழ்வார் பண் தலையில் சொன்ன,Pan thalaiyil sonna - தலைமையாகிய பண்களில் அமைத்துச் சொன்ன தமிழ் ஆயிரத்து,Thamizh aayirathu - இப்பத்தும் வல்லார் விண் தலையில்,Vin thalaiyil - பரமபதத்தில் வீற்றிருந்து,Veettrindru - வஸிக்கப்பெற்று எம்மா வீடு,Emma veedu - அறப்பெரிய ப்ரஹ்மானந்தத்தை ஆள்வர்,Aalvar - அநுபவிக்கப் பெறுவர் |