| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2829 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (தாம் மனோரதித்தபடியே தன் பாரிகரங்கனோடே கூடவந்து தம்மோட கலக்கையாலே எம்பெருமானுக்குப் பிறந்த புகரைப் பேசுகிறார்.) 1 | அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் செங்கமலம் செந்தாமரை யடிகள் செம் பொன் திருவுடம்பே –2-5-1 | என் ஆவி,En aavi - என் ஆத்மாவிலே அம் தாமத்து அன்பு செய்து,Am thamathu anbu seydhu - பரமபதத்ததிற் பண்ணும் விருப்பத்தைப்பண்ணி சேர்,Ser - வந்து பொருந்தின அம்தாமம்,Am thamam - அம்மானுக்கு அழகிய மாலையை யணிந்த வாள்,Vaal - ஒறியுள்ள முடி,Mudi - திருவபிஷேகமும் சங்கு ஆழி,Sanggu aazhi - சங்கு சக்கரங்களும் நூல்,Nool - பூணூலும் ஆரம்,Aaram - ஹாரமும் உள,Ull - உள்ளன; கண்,Kan - திருக்கண்கள் செம் தாமரை தடம்,Sem thaamarai thadam - செந்தாமரைத் தடதகமபோன்றுள் செம் கனி வாய்,Sem kani vaai - சிவந்து கனிந்த திருவதரம் செம் கமலம்,Sem kamalam - செந்தாமரையாகவே யிரா நின்றது; அடிகள்,Adigal - திருவடிகளும் செம் தாமரை,Sem thaamarai - செந்தாமரை மலராகவே திரு உடம்பு,Thiru utampu - திருமேனி செம் பொன்,Sem pon - செம்பொன்னாயிராநின்றது. |
| 2830 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (பிராட்டி முதலானவர்களும் தன் பக்கலில் ஒரோ. இடங்களைப் பற்றி ஸத்தை பற்றாராம்படியிருக்கிற எம்பெருமான் ஸகல அவயவங்களாலும் என்னோடே ஸம்ச்லேஷித்து அத்தாலே ஒளி மல்கப் பெற்றனென்கிறார் இதில்.) 2 | திருவுடம்பு வான் சுடர் செந்தாமரைக் கண் கை கமலம் திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ் ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2 | ஒருவு இடம் ஒன்று இன்றி,Oruvu idam onru indri - நீங்கின இடம் ஒன்றுமில் வாதபடி (ஸகல அவயவங்களிலும்) என்னுள் கலந்தானுக்கு,Ennul kalanthanukku - என்னோடு சேர்ந்தவானன எந்தை பெருமாற்கு,Endhai perumarku - என் சேர்ந்தவனான திரு உடம்பு,Thiru utampu - திருமேனி திவ்யமான ஒளியை உடைத்தாயிராநின்றது. கண்,Kan - திருக்கண்கள் செம் தாமரை,Sem thaamarai - செந்தாமரை மலர்களாயிராநின்றன; கை,Kai - திருக்ககைகள். கமலம்,Kamalam - தாமரைமலரே. திரு இடமே,Thiru idame - பிராட்டிக்கு இருப்பிடயாயிற்று; கொப்பூழ்,Koppoozh - திருநாபி அயன் இடமே,Ayan idame - பிராமனுக்கு உறைவிடமாயிற்று; ஒருவு இடமும்,Oruvu idamum - நீங்கின இடமும் அரனே,Arane - ருத்ரனுடையதே; ஓ,Oo - ஆச்சரீரயம். |
| 2831 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (பிராட்டி பிரமன்சிவன் முதலானார் மாத்திர மன்றியே ஸகலலோகங்களும் தன்னைப்பற்றி ஸத்தை பெறும்படி யிருக்கிற எம்பெருமான், இவ்வுலகங்களெல்லாம் தன்னை யொழிந்தால் படும்பாட்டைத் தான் என்னைப் பிரிந்து பட்டு என்னோட கலக்கையாலே மிகவும் புஷ்கலனானான் என்கிறாரிடத்தில்) 3 | என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம் மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம் மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3 | என்னுள் கலந்தவன்,Ennul kalanthavan - என்னுள் கலந்த வனாகி மின்னும்,Minnum - விளங்குகின்ற சுடர்மலைக்கு,Sudar malai kku - ஒளிபொருந்திய மலை போன்ற பெருமானுக்கு செம் கனி வாய,Sem kani vaai - சிவந்து கனிந்த திருவாய் செம் கமலம்,Sem kamalam - செந்தாமரை மலர் போன்றது; கண் பாதம் கை,Kan paadham kai - திருக்கண்களும் திருவடிகளும் திருக்கைகளும் கமலம்,Kamalam - செந்தாமரை மலரே; மன்னு முழு ஏழ் உலகும்,Mannu muzhu ezhu ulagum - நிலைபெற்ற ஸகல லோகங்களும் வயிற்றின் உள,Vayitrin ul - (அவனது) திருவயிற்றி லடங்கியுள்ளள தன்னுள்,Thannul - அவன்றனக்குள்ளே கலவாதது,Kalavaadhadhu - சேராதது எப்பொருளும் தான் இல்லை,Epporulum thaann illai - யாதொரு பொருளுமேயில்லை |
| 2832 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (என்னோடே கலந்த எம்பெருமான் யாவஜ்ஜீவம் அநுபவித்தாலும் கூஷணந்தோறும் புதியனாய்ப் பரம போக்யணாயிரா நின்றானே யென்று உள் குழைகின்றாரிதில்.) 4 | எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும் அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4 | எப்பொழுதும்,Eppozhuthum - எல்லா கூஷணமும் எந்நாள்,Ennal - எல்லா நாட்களும் எத்திங்கள்,Ettingal - எல்லா மாதங்களும் எவ்வாண்டு,Evvantu - எல்லா வருஷங்களும் எவ்வூழி ஊழி தொறும்,Evvooli ooli thorum - கற்பங்கள் தோறும் (அது பவித்தாலும்) தான் ஆய்,Thaan aay - தனக்குள்ளே அடங்கப் பெற்றவனாய் மரகதம் குன்றம் ஒக்கும்,Maragatham kunram okkum - மரதகமலையை யொத்திருப்பன்; கண்,Kan - (அவனது) திருக்கண்களும் அப்பொழுதைக்கு அப்பொழுது,Appozhuthaikku appozhudhu - அந்தந்தக் காலங்களிலே என் ஆரா அமுதம்,En aara amudham - எனக்குத் தெவிட்டாத அம்ருதமர்யிக்கு மெம் பெருமான் எப்பொருளும்,Epporulum - எல்லாப் பொருள்களும் அப்பொழுது தாமரை பூ,Appozhudhu thaamarai poo - அப்போதலர்ந்த தாமரை மலர் போன்றவை பாதம் அப்பொழுது கமலம்,Paadham appozhudhu kamalam - அப்போதலர்ந்த தாமரையே; கை,Kai - திருக்கைகளும் (அவ்வண்ணமே.) |
| 2833 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (எம்பெருமான் என்னோடு கலந்ததனால் பெற்ற அழகுக்கு உபமான மில்லை என்கிறார்.) 5 | ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம் பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5 | ஆரா அமுதம் ஆய்,Aara amudham aay - தெவிட்டாத அமுதமர்கி அல் ஆவி உள்,Al aavi ul - ஒரு பொருளல்லாத எனது நெஞ்சினுள்ளே கலந்த,Kalandha - கூடி நின்றவனாயும் கார்ஆர்கரு முகில் போல்,Kaarargaru mugil pol - கார்காலத்தில் பொருந்திய காளமேகம் போன்ற வனாயும் என் அம்மான்,En ammaan - எனக்கு நாதனாயு மிருக்கிற கண்ணனுக்கு,Kannanukku - ஸ்ரீக்ருஷ்ணுக்கு செம் பவளம்,Sem pavalam - சிவந்த பவழங்கள் வாய் நேரா,Vaai neraa - அதரத்திற்கு ஒப்பாக மாட்டா; கமலம்,Kamalam - தாமரைப் பூ கண் பாதம் கை,Kan paadham kai - திருக்கண் திருவடி திருக்கைகளுக்கு நேரா,Naeraa - ஒப்பாக மாட்டாது; பேர் ஆரம்,Per aram - பெரிய ஹாரங்களும் நீள் முடி,Neel mudi - உயர்ந்த திருவபிஷேகமும் நாண்,Naan - திரு அரைநாணும் பின்னும் இழை,Pinnun izhai - மற்றுமுள்ள திருவாய ரணங்களும் பல,Pala - அனேகங்கள். |
| 2834 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (ஆழ்வார் தம்மோடே எம்பெருமான் கலக்கும்போது ஒரு வடிவோடே கலந்து த்ருப்தி பெற மாட்டாதே பலவடிவுகள் கொண்டு கலந்து அநுபவிக்கும் படியை அருளிச்செய்கிறார்.) 6 | பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம் பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6 | பாம்பு அணை மேலாற்கு,Paambu anai melaarku - ஆதிசேஷனைப் பள்ளியாகக் கொண்டிருக்கும் பெருமானுக்கு பண்பு எண்ணில்,Panbu ennil - (என்னோடு கலவியாலுண்டான அழகை) நிரூபித்துப் பார்க்குமிடத்து, ஆபரணம்,Abaranam - திருவாபரணங்கள் பலபல,Palapala - மிகப் பலவாயிருக்கும் சோதி வடிவு,Sodi vadivu - ஒளியுருவான திருமேனி பல பல,Pala pala - மிகப் பலவாயிருக்கும் கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம்,Kandu undu kettu urru mondhu inbam - பார்த்தும் உண்டும் கேட்டும் ஸ்பர்சித்தும் மோந்தும் (உண்டாகிற) சுகங்களும் பல பல,Pala pala - மிகப்பலவாயிருக்கும்! ஞானமும்,Gnaanamum - ஞானங்களும் பல பல,Pala pala - மிக மிகவாம். |
| 2835 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (எம்பெருமான் சில திவ்விய சேஷ்டிதங்களைத் தமக்குக் காட்டியருளக் கண்டு அநுபவித்துப் பேசுகிறார்.) 7 | பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும் காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும் தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும் பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7 | பால் கடலுள்,Pal kadalul - திருப்பாற் கடலிலே பாம்பு அணை மேல்,Paambu anai mel - சேஷசயனத்தின் மீது பள்ளி அமர்ந்ததுவும்,Palli amarthaduvum - கண்வளர்தல் பொருந்தினதும். காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய்,Kaambu anai thol pinnai kku aay - மூங்கில் போன்ற தோள் களையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழ் ஏறு,Eezh er - ஏழு ரிஷபங்களை உடன்,Udan - ஏக காலத்தில் செற்றதுவும்,Settraduvum - தொலைத்ததும். தேன் பணைய சோலை,Then panaiya solai - தேனையும் கிளைகளையுமுடைய சோலையாகத் தழைத்த ஏழ் மராமரம்,Eezh maramaram - ஸப்த ஸால வ்ருஸங்களையும் எய்ததவும்,Eythadavum - துளை படுத்தினதும் பூ பிணைய,Poo pinaiya - அழகிய தொடுத்தலையுடைத்தான தண்,Than - குளிர்ந்த துழாய்,Thuzhai - திருத்துழாய் மாலையணிந்த பொன்,Pon - பொன் மயமான முடி,Mudi - திரு வபிஷேகத்தையடையவனாயும் அம் போர்ஏறு,Am pooreru - அழகியவனாயும்-போர்க்குரிய இடபம் போன்றவனுமான எம்பெருமான் (செய்த செயல்களாம்.) |
| 2836 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (எம்பெருமான் பராத்பரனாயிருந்து வைத்து என்னுடைய தாழ்ச்சியைக் கணிசியாதே என்னோடே வந்து கலந்த பெருங்குணத்தை நான் பேசவல்லேனல்லேனென்கிறார்) 8 | பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள் தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8 | பொன் முடி,Pon mudi - பொன் மயமான திருமுடியை யுடையனாய் அம் போர்ஏற்றை,Am pooretray - அழகிய போரேறு போன்றவனாய் எம்மானை,Emmaanai - எனக்கு நாதனாய் நால் தட தோள்,Naal tada thol - நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய் தன் முடிவு ஒன்றும் இல்லாத,Than mudivu ondrum illaadha - தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய் தண் துழாய் மாலையனை,Than thuzhai maalaiyanai - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனாய் என் முடிவு காணாதே,En mudivu kaanaadhae - எனது தாழ்வைக் கணிசியாமல் என் உள் கலந்தானை,En ul kalandhaanai - என்னோடு கலவி செய்தவனுமான பெருமானை நான் சொல் முடிவு காணேன்,Naan sol mudivu kaanen - நான் சொல்லி முடிக்கும் வகையறிகின்றிலேன்! என் சொல்வது,En solvadhu - என்னவென்று சொல்லலாம்! சொல்லீர்,Solleer - நீங்களே சொல்லுங்கள் |
| 2837 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (கீழ்ப்பாட்டில் “சொல்முடிவு காணேன் நான் சொல்லுவதென் சொல்லீரே” என்று தமக்கு எம்பெருமானைப் பேச முடியாமையாலே பேசவுந் தவிர்ந்த ஆழ்வார் பின்னையும் தம்முடைய நப்பாசையினால் ஸம்ஸாரிகளை யழைத்து என்னாயனான ஸர்வேச்வரனை எல்லாருங் கூடியாகிலும் ஒருவடிசொல்லுவோமே! என்கிறார்.) 9 | சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய் அல்லிமலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9 | என் அம்மானை,En ammaanai - எனக்கு ஸ்வாமியாய் என் ஆவி ஆவி தனை,En aavi aavi thanai - என் ஆத்மாவுக்கும் ஆத்மாவாயிருப்பவனாய் எல்லை இல் சீர்,Ellai il seer - எல்லையற்ற குணங்களையுடைய என் கரு மாணிக்கம் சுடதை சொல்லீர்-,En karu manikam suthathai solleer - எனது நீலரத்னம் போன்ற வொளியுருவையுடையனான பெருமானை சொல்லுங்கள். நல்ல அமுதம்,Nalla amudham - நல்ல அம்ருதமாய் பெறற்கு அரிய வீடும் ஆய்,Perarku ariya veedum aay - எளிதாகப் பெறுவதற்கு முடியாத மோக்ஷ நிலத்திற்கும் தலைவனாய் அல்லி மலர் விரை ஒத்து,Alli malar virai otthu - தாமரைப் பூவிலுள்ள பரிமளம் போல் பரமபோக்யனாய் ஆண் அல்லன் பெண் அல்லன்,Aan allan penn allan - ஆணுருவ மல்லாதவனாய்ப் பெண்ணுருவமு மல்லாதவனாயிருக்கின்றனவன். |
| 2838 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) ((ஆணல்லன்) எம்பெருமானைப் பேசித்தலைக்கட்டுவது மிகவும் ஆயாஸஸாத்யமென்கிறார்.) 10 | ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன் காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன் பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம் கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10 | எம்பெம்மானை கூறுதல்,Em pemmaanai koorudhal - எம்பெருமானைப் பற்றிச் சொல்லுவதானது கோணை பெரிது உடைத்து,Konai peridhu udhaithu - மிகவும் ப்ரயாஸமுடையதாயிருக்கிறது; (ஏனென்னில், அப்பெருமான்) ஆண் அல்லன்,Aan allan - ஆணுமல்லன், பெண் அல்லன்,Penn allan - பெண்ணுமல்லன் அல்லா அலியும்,Alla aliyum - இவ்விரண்டுமல்லாத நபும் அல்லன்,Allan - ஸயனுமல்லன் காணாலும் ஆகான்,Kaanaalum aagaan - கண்ணாற் பார்க்கவும் முடியாதவன் உளன் அல்லன்,Ulan allan - உள்ளவனல்லன் இல்லை அல்லன்,Illai allan - இல்லாதவனுமல்லன் பேணுங்கால்,Penungaal - (அடியார்) விரும்பின காலத்து பேணும் உரு ஆகும்,Penum uru aagum - அவர்கள் விரும்பின வடிவை யுடையவனாவன் அல்லனும் ஆம்,Allanum aam - அப்படியல்லாதவனாயுமிருப்பன் (ஆதலால் என்க) |
| 2839 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) ((கூறுதல்) இத்திருவாய்மொழியைக் கற்பார் இதிற்சொன்னபடியே எம்பெருமானைப் பாரிபூர்ணமாகத் திருநாட்டிலே நித்யாநுபவம் பண்ணப்பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. 11 | கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன் கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும் கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11 | ஒன்று கூறுதல் ஆரா,Ondru kurudhal aaraa - ஒரு குணத்தைச் சொல்லுதலும் முடியாத குடக் கூத்த அம்மானை,Kudak kootha ammaanai - குடக் கூத்தாடின கண்ணபிரானைப்பற்றி கூறுதல் மேவி,Koorudhal mevi - சொல்லுவதில் ஆசை கொண்டு குருகூர்சடகோபன் கூறின,Kurugoor Sadagoban koorina - அந்தாதி அந்தாதித் தொடையான ஓர்ஆயிரத்துள்,Oraayiraththul - ஆயிரம் பாசுரத்தினுள்ளே இப்பத்தும்,Ippaththum - இத்திருவாய்மொழியை கூறுதல் வல்லார்,Koorudhal vallaar - ஓத வல்லவர்கள் உளர் ஏல்,Ular yel - உண்டாகில்(அவர்) வைகுந்தம் கூடுவர்,Vaigundam kooduvar - பரமபதம் சேரப்பெறுவர் |