| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3634 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –பகவத் தர்சன அபேக்ஷராய் இருப்பாருடைய துக்கங்களை போக்கும் திரு நாவாயை நமக்கும் ஒரு நாள் குறுகுகைக்கு உபாயம் உண்டோ என்கிறார்) 1 | அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1 | அவனை,Avanai - பரமபோக்யனான ஸர்வேச்வானானவனை ஆகத்து,Aagathu - தங்கள் உள்ளத்திலே சிறுத்தும் மனத்து ஒன்றிய,Siruththum manaththu onriya - நிலைநிறுத்தி வைத்துக்கொள்ள வேணுமென்கிற கருத்திலே ஒருமைப்பாடுடைய சிந்தையினார்க்கு,Sinthaiyinaarkku - மநோரதத்தையுடைய பக்தர்களுக்கு வினை ஆயின அறுக்கும்,Vinai aayina arukkum - அநுபவ விரோதிகளையெல்லாம் போக்கக் கடலதாய் வெறி தண் மலர்,Veri than malar - ஈறு மணம்மிக்குக் குளிர்ந்த புஷ்பங்களை கொண்ட சோலைகள் சூழ்,Solaigal soozh - சோலைகளாலே சூழப்பட்டதான திருநாவாய்,Thirunaavaai - திருநாவாயென்னும் திருப்பதியானது கொடியேற்கு,Kodiyerku - கொடியேனான வெனக்கு குறுக்கும் வகை உண்டு கொல் ஓ,Kurukkum vagai undu kol o - கிட்டும் வகையுண்டோ? |
| 3635 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (பெரிய பிராட்டியாரோடும் நப்பின்னைப் பிராட்டியாரோடுங் கூட அவன் எழுந்தருளியிருக்கிற திருநாவாயிலே போய்ப்புகுவது என்றைக்கோ வென்கிறார்.) 2 | கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன் வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன் நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய் அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2 | கொடி ஏர் இடை,Kodi eer idai - கொடிபோலாகிய இடையையுடையனாய் கோகனகத்தவன்,Koganakaththavan - தாமரையாளான பிராட்டிக்கு கேள்வன்,Kelvan - வல்லபனாய் வடிவேல் தட கண் மட பின்னை மணாளன்,Vadivel thada kan mada pinnai manaalan - உரிய வேல் போன்ற பெரிய எண்களை யுடைய அழகிய கப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளனாய் நெடியான்,Nediyan - மஹா புருஷனானவன் உறை,Urai - நித்யவாஸம்பண்ணுகிற சோலைகள் சூழ் திருநாவாய்,Solaigal soozh Thirunaavaai - சோலைகளாலேசூழப்பட்ட திருநாவாயை அடியேன் அணுக பெறும் நாள் எவை கொல்,Adiyean anuga perum naal evai kol - அடியேன் கிட்டப்பெறுவது என்னைக்கோ |
| 3636 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (திருநாவாயில் மஹா கோஷ்டியிலே சென்று சேர்ந்து அநுபவிக்கும் நாள் எதுவோ? அறிகிறிலேன் என்று அலமருகின்றார்.) 3 | எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும் கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன் நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய் அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3 | அணுக பெறுநாள் எவை கொள்ல என்று,Anuga perunaal evai kol enru - கிட்டப்பெறும் நான் எந்நாளோ வென்று எப்போதும்,Eppothum - எக்காலத்திலும் சுவையில் மனம் இன்றி,Suvaiyil manam inri - இரட்டைப்பட்ட நெஞ்சின்றிக்கே ஏகாக்ரசித் தனாய் கொண்டு கண் நீர்கள் கலுழ்வன்,Kan neergal kaluzhvan - கண்ணநீர் பெருவெள்ளம் நிற்பேன் நவை இல் திரு நாரணன் சேர்,Navai il Thiru Naranan ser - ஹேயப்ரத்யநீகளான திருமால் வர்த்திக்கிற திருநாவாய் அவையுள்,Thirunaavaai avaiyul - திருநாவாய்ப்பதியில் திருவோலக்கத்திலே புகல் ஆவது ஓர் நாள் அறியேன்,Pugal aavathu or naal ariyen - சென்று சேர்வதற்கீடான வொரு நானை அறிகின்றிலேன். |
| 3637 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (ஆத்மாவுள்ளவரையில் கைங்கரியம் பண்ணும்படி விஷயீகரிக்கப்பெற்ற நான் திருநாவாயில் நம்பின்னைப் பிராட்டியோடே கூடவிருக்கிற இருப்பிலே அடிமை செய்ப்பெறும் நாள் என்றோ! அறிகிலேன் என்கிறார்.) 4 | நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4 | நீள் ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய்,Neel aar malar solaigal soozh Thirunaavaai - ஓங்கி நிறைந்த பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருநாவாயிலே (எழுந்தருளியிருக்கிற) வாள் ஏய் தட கண்,Vaal ey thada kan - வாள் போன்ற பெரிய கண்களையுடையளாய் மட பின்னை மணாளா,Mada pinnai manaalan - நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனானவனே! நானும்,Naanum - அடியேனும் மீளா அடிமை பணி செய்ய புகுந்தேன்,Meelaa adimai pani seiya pugundhen - இடையறாத நித்ய கைங்கரியத்திலே நிரதனானேன். எனக்கு உள்ளன நான் அறியேன்,Enakku ullana naan ariyen - அறுக்கு எனக்கு நீ ஸங்கல் பித்துவைத்த நான் அறிகின்றிலேன். |
| 3638 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (என் கண்களின் விடாய்தீரத் திருநாவாயைக் கண்டு அநுபவிக்கப்பெறுவது என்றைக்கோ வென்கிறார்.) 5 | மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம் விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5 | மலர்மங்கைக்கும்,Malarmangaikkum - பெரிய பிராட்டியாருக்கும் மண் மடந்தைக்கும்,Man madandaikkum - பூமிப் பிராட்டிக்கும் மணாளன்,Manaalan - மணயாளனாய் உலகத்து உயிர் தேவர் கட்கு எல்லாம் கண்ணாளன்,Ulakaththu uyir thevar kadku ellaam kannaalaan - மண்ணுலகத்ததவர்க்கும் விண்ணுலகத்தவர்க்கு மெல்லாம் நிர்வாஹகனாய் வீண் ஆளன்,Veen aalan - பரமபதத்திலுள்ளாவைரயும் அடிமை கொள்ளுபவனான ஸர்வேச்வரன் விரும்பி உறையும் திருநாமாய்,Virumbi uraiyum Thirunaamaai - ஆதாரத்தோடு வர்த்திக்கிற திரு நாவாயை கண்ண ஆர கண்டு,Kanna aara kandu - கண்கள் வயிறு நிறையும்படி கண்டு இங்கு களிக்கிறது என்று கொல்,Ingu kalikkirathu enru kol - இங்கே ஆனந்திப்பது என்றைக்கோ? |
| 3639 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (எனக்காகத் திருநாவாயைக் கோயிலாகக் கொண்டு உறைகின்ற கோவலர்கோவே! உன்பக்கலிலே அநந்ய ப்ரயோஜனமான அன்மையுடையேனான வென்னுடைய கண்களின் விடாய் சொல்லத் தரமன்று; என்பசி தீராவிட்டாலும் என் கண்களின் பசி தீர்ந்தால் போதுமேயென்கிறார்.) 6 | கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள் தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6 | வண்டு ஆர் சோலைகள் சூழ் மலர் திருநாவாய்,Vandu aar solaigal soozh malar Thirunaavaai - வண்டுகள் நிறைந்த மலரையுடைய சோலைகள் சூழ்ந்த திருநாவாயை கொண்டு உறைகின்ற,Kondu uraiginra - உகங்தவிடமாகத் திருவுள்ளம்பற்றி வர்த்திக்கிற எம் கோவலர் கோவே,Em Kovalarkove - எம் கோபாலகிருஷ்ணனே! துரிசு இன்றி உனக்கே தொண்டு ஆய் ஒழிந்தேன்,Thurisu inri unakke thondru aai ozhindhen - க்ருத்திமமில்லாமல் உனக்கே தொண்டனாய்விட்டேன் கண்கள்,Kangal - எனது கண்களானவை இங்கு கண்டே களிக்கின்றது என்று கொல்,Ingu kande kalikkinrathu enru kol - இத் திருப்பதியிலே கண்டு ஆனந்திக்கப் பெறுவது என்றைக்கோ? |
| 3640 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (திருநாவாயிலே நித்யவாஸம் பண்ணியருளாநின்ற தேவரீர் அடியேனுடைய அநந்யகதித்வத்தைக் கண்டு அருள் செய்தருளவேணுமென்கிறார்.) 7 | கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவா சுரம் செற்றவனே திருமாலே நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7 | கே ஆகிய மா வலியை,Ke aagiya maa valiyai - பிரபுவாகத் தன்னை யயீமானித்திருந்த மஹாபலிடத்திளின்றும் நிலம் கொண்டாய்,Nilam kondai - பூமியை இரந்து பெற்றவளே தேவாசுரம் செற்றவனே,Devaasuram setravaney - தேவாஸீர யுத்த்தில் ஒரு தலைக்கு நிர்வாஹகனாயிருந்தவனே திருமாலே,Thirumaaley - திருமகள் கொழுநனே நாவாய் உறைகின்ற,Naavaai uraiginra - திருநாவாயிலே வர்த்திக்கிற என் நாரணநம்பீ,En Narananambi - எனது நாராயணமூர்த்தியே ஆஆ,Aa aa - ஐயோ இவன் அடியான் என்று அருளாய்,Ivan adiyaan enru arulaai - இவன் நமக்கு அடியவனன்றோவென்று க்ருபை பண்ணி யருள வேணும் |
| 3641 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (கீழ்ப்பாட்டில் “ஆவாவடியானிவனென்றருளாயே” என்றவர், இப்பாட்டில், அருளினாலுமருள்க ; அருளாதொழியினுமொழிக என்கிறார்.) 8 | அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய் மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8 | அருளாது ஒழிவாய்,Arulaathu ozhivaai - என்பால் அருள் செய்யாதிருக்கிலுமிரு அடியேனை,Adiyenai - அடியேன் பக்கலில் அருள் செய்த,Arul seydha - க்ருபைபண்ணி பொருள் ஆக்கி,Porul aakki - ஒரு உஸ்துவாக்கி உன்பொன் அடி கீழ் புகவைப்பாள்,Unpon adi keezh pugavaippaalo - உன் திருவடிகளின் கிழே வைத்துக் கொண்டாலும் கொள். தென் திருநாவாய் என் தேவே,Then Thirunaavaai en devey - அழகிய திருநாவாயில் வர்த்திக்கிற எம்பெருமானே மருளே இன்றி,Marule inri - ஒரு காலும் அஜ்ஞான கந்தமில்லாதபடி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளேதரு,Unnai en nenjaththu iruththum theruledharu - உன்னை என்னுடைய நெஞ்சிலேயிருத்தியநுபவிக்கும்படியான தெளிந்த அறிவைத் தந்தருள வேணும் |
| 3642 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (தாம் இப்படிச் சொல்லச் செய்தேயும் ஒரு விசேஷ கடாக்ஷம் செய்தருளாமையாலே ‘நான் இவ்வாசையோடே முடியா நின்றென். என்னுடைய அபிமதத்தைப் பெற்றுக்களிக்கப் போகிற பாக்யவான்கள் யாரோ?’ என்கிறார்.) 9 | தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன் மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி தேவன் விரும்பி உறையும் திரு நாவாய் யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9 | தேவர் முனிவர்க்கு,Devar munivarkku - தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் என்றும் காண்டற்கு அரியன்,Endrum kaandarku ariyan - (ஸ்வப்ரயத்நத்தினால்) எப்போதும் காணமுடியாதவனாய் மூவர் முதல்வன்,Moovar mudhalvan - பிரமன் சிவனிந்திரக்கும் ஸத்தோஹேது பூதனாய் ஒரு மூவுலகு ஆளி,Oru moovulagu aali - மூவுலகங்களையும் நீர்யஹிக்கு மாவனான தேவன்,Devan - எம்பெருமான் விரும்பி உறையும்,Virumbi uraiyum - ஆதரத்தோடு வர்த்திக்குமிடமான திருநாவாய்,Thirunaavaai - திருநாவாய்ப்பதியை இனி,Eni - நான் முடிந்தேனானா பின்பு துர்தோ,Thurdho - ஐயோ! |
| 3643 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (உன்னைக் காணப் பெறாமையாலே நெஞ்சழிந்து கூப்பிடா நின்றேன் காணென்கிறார்.) 10 | அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன் கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10 | நொந்து ஆர்,Nondhu aar - கொத்தாக நிறைந்துள்ள மலர் சோலைகள் சூழ்,Malar solaigal soozh - மலர்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட திருநாவாய்,Thirunaavaai - திருநாவாய்ப்பதியிலே வந்தே உறைகின்ற,Vande uraiginra - (பரமபதம் முதலான விடங்களையும் விட்) வந்து நித்யவாஸம் பண்ணுகிற எம் மா மணிவண்ணா,Em maa manivanna - எமக்குப் பரமபோக்யனான நீல மணிவண்ணனே! அந்தோ அணுக பெறும் நாள்என்று,Andho anuga perum naal enru - ஐயோ! உன்னைக்கிட்டிவாழப் பெறுவதுண்டோ வென்று எப்போதும்,Eppothum - ஸர்வகாலமும் சிந்தை கலங்கி,Sinthai kalangi - நெஞ்ச தளும்பி திருமால் என்று அழைப்பன்,Thirumaal enru azaippan - திருமாலே! யென்று கூப்பிடா நின்றேன். |
| 3644 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (இத்திருவாய்மொழி வல்லார் ஐஹிக ஆமுஷ்மிக ஸகலபோகங்களையும் புஜிக்கப் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத் திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன் பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11 | வண்ணம் மணி மாடம்,Vannam mani maadam - அழகிய மணி மாடங்களை யுடைத்தான நல் நாவாய் உள்ளானை,Nal naavaai ullaanai - விலக்ஷணமான திருநாவாயிவெழுந் தருளியிருக்கும் பெருமானைக் குறித்து திண் அம்மதின் தென் குருகூர் சடகோபன்,Thin ammadhin then kurukoor sadagopan - திடமாயழகிய மதிள்களையுடைத்தான திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடையதாய் பண் ஆர் தமிழ்,Pan aar tamizh - பண்ணிறைந்த தமிழான ஆயிரத்தில் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,Ippaththum vallaar - இப்பத்தையும் ஒதவல்லவர்கள் மண் ஆண்டு,Man aandu - இவ்விபூதியை நெடுங்காலம் ஆண்டு மல்லிகை மணம் கமழ்வர்,Malligai manam kamalvar - “ஸர்வகந்த:” என்னப்படுகிற எம்பெரு மானோடே ஸாம்யாபத்தி பெறுவர்கள் |