| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3194 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 1 | ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே! சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1 | ஆரா அமுதே,ara amuthe - எவ்வளவு அநுபவித்தாலும் திருப்தியிறவாத அமுதமாகிய எம்மானே,emmane - எம்பெருமானே! அடியேன் உடலம்,adiyen udalam - என்னுடைய சரீரமானது நின்பால்,ninpaal - உன் திறத்தில் அன்பு ஆய் ஏ,anbu aay e - அன்புதானே வடிவெடுத்ததாகி நீர் ஆய் அலைந்து,neer aay alainthu - நீர்ப்பண்டமாக உருகி வியாகுலப்பட்டு கரைய,karaiya - கரையும்படியாக உருக்குகின்ற நெடுமாலே,urukkukindra netumale - உருகப்பண்ணாநிற்கிற ஸர்வேச்வரனே! சீர் ஆர் செந்நெல்,seer ar sennel - சீர்மைமிக்க செந்நெற்பயிர்கள் சவரி வீசும்,savari veesum - சாமரம்போல் வீசப்பெற்று செழுநீர்,sezhuneer - செழுமைதங்கிய தீர்த்தங்களையுடைத்தான திருகுடந்தை,thirukudandhai - திருக்குடந்தையிலே ஏர் ஆர் கோலம் திகழ,er ar kolam thigazha - அழகு பொருந்திய திருமேனி விளங்க கிடந்தாய்,kitandhai - சாய்ந்தருளினாய் (அவ்வழகை) கண்டேன்,kanden - ஸேவிக்கப் பெற்றேன் |
| 3195 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 2 | எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே! செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2 | எம்மானே,emmane - எல்லாவிதத்திலும் மஹானானவனே! என் வெள்ளை மூர்த்தி,en vellai moorthi - என்னை ஈடுபடுத்திக்கொண்ட பரிசுத்த ஸ்வரூபனே! என்னை ஆள்வானே,ennai aalvane - என்னை அடிமை கொள்பவனே! வேண்டும் ஆற்றால்,vendum aatral - திருவுள்ளமானபடியே எம் மா உருவும் ஆவாய்,em ma uruvum aavay - எப்படிப்ப்ட அவதார விக்ரஹங்களையும் பரிக்ரஹிப்பவனே! மா செம் கமலம்,ma sem kamalam - பெரிய செந்தாமரைகள் செழுநீர் மிசை,cezhuneer misai - அழகிய நீரினிடத்து கண்,kan - கண்டவிடமெங்கும் மலரும்,malarum - மலரப்பெற்ற திருகுடந்தை,thirukudandhai - திருக்குடந்தையிலே அ மா மலர்,a ma malar - அப்படிப்பட்ட சிந்த மலர்போன்ற திருக்கண்கள் துயில்பவனே! தான் என் செய்கேன்,than en seykayn - நான் என்ன பண்ணுலேன்! (இவ்வழகு கண்டு என்னால் தரிக்கப்போகிறதில்லையே’ |
| 3196 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 3 | என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள் செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3 | நான் என் செய்கேன்,naan en seykayn - அடியேன் என்ன செய்வேன்! களைகண் யாரே,kalai kan yaare - ரக்ஷகராவார் யாவர்! என்னை என் செய்கின்றாய்,ennai en seykinraay - என்னை என்ன செய்வதாக இருக்கிறாய்? உன்னால் அல்லால்,unnal allaal - உன்னைத் தவிர்த்து யாவராலும்,yaavaraalum - வேறு ஒருவிதமான உபாயத்தாலும் குறை ஒன்றும் வேண்டேன்,kurai onrum venden - சிறிதும் அபேக்ஷையடையேனல்லேன் கன் ஆர் மதில் சூழ் குடந்தை கிடந்தாய்,kan ar madil soozh kudandhai kitandhay - வேலைப்பாடு பொருந்திய மதிள்சூழ்ந்த திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே! அடியேன்,adiyen - அடியேனுடைய அரு,aru - ஆத்மாவானது வாழ்நாள்,vaalnaal - வாழும் காலத்தில் செல் நாள் எ நாள்,sel naal e naal - கழிகின்ற நாள்கள் எத்தனைநாளோ அ நான்,a naan - அந்த நாள்களெல்லாம் உன் தாய் பிடித்தே,un thay pitithey - உனது திருவடிகளைப் பற்றிக்கொண்டே செல,cel - நடக்கும்படி காண்,kaan - நடாக்ஷித்தருளவேணும். |
| 3197 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 4 | செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்! உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி! நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான் அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4 | செல காண்கிற்பார்,cel kaankirpar - மேலே மேலே காணவல்லவர்கள் காணும் அளவும்,kaanum alavum - எவ்வளவு காண்பர்பளோ அவ்வளவும் செல்லும் கீர்த்தியாய்,cellum keertiyay - வளர்ந்துசெல்கின்ற திருக்குணங்களையுடையவனே! கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே! நான் உன்னை காண்பான் அலப்பு ஆய்,naan unnai kaanpaan alappu aay - என் உன்னைக்காண வேண்டி அமைந்து உலப்பு இலானே,ulappu ilaane - அந்தத் திருக்குணங்கட்கு முடிவு இல்லாதவனே! எல்லா உலகும் உடைய,ella ulagum udaiya - எல்லாவுலகங்களுக்கும் ஸ்வாமியான ஒரு மூர்த்தி,oru moorthi - ஒப்பற்ற தலைவனே! நலத்தால் மிக்கார் குடந்தை,nalathaal mikkar kudandai - பக்திமிகுந்தவர்கள் வாழ்கின்ற திருக்குடந்தையிலே ஆகாசத்தை நோக்கி,aakaasathai nokki - (நீ வருதற்குரிய) வானத்தைப்பார்த்து அழுவன் தொழுவன்,azhuvan thozhuvan - அழுவதும் தொழுவதும் செய்யாநின்றேன். |
| 3198 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 5 | அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன் தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா! தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5 | செழு ஒண் பழனம்,sezu on palanam - செழுமைதங்கிய நீர்நிலங்களையுடைய குடந்தை கிடந்தாய்,kudandai kitandhay - திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே! செம் தாமரை கண்ணா,sem thaamarai kannaa - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனே! அழுவன் தொழுவன்,azhuvan thozhuvan - அழுவேன் தொழுவேன்; ஆடி காண் பன்,aadi kaan pan - கடனம் செய்து பார்ப்பேன்; பாடி அலற்றுவன்,Paadi alattruvan - வாயாரப்பாடிப் பிரலாபனம் செய்வேன்; தழு வல்வினையால்,thazhu valvinaiyaal - என்னைத் தழுவிக்கொண்டிருக்கிற வலிய பாவத்தினாலே பக்கம் நோக்கி,pakkam nokki - (எந்தப்பக்கமாக நீவருகிறாயோவென்று) பக்கந்தோறும் பார்த்து (எங்கும் வரக்காணாமையாலே) காணி கவிழ்ந்து இருப்பன் தொழுவனேனை,kaani kavilnthu iruppan thozhuvane'nai - வெட்கப்பட்டுத் தலைகவிழ்ந்திருப்பேன்; உன தாள் சேரும் வகையே,un thaal serum vakaiye - உன் திருவடியடையமாறு சூழ் கண்டாய்,soozh kandai - உபாயசிந்தை பண்ணவேணும். |
| 3199 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 6 | சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும் ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன் வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே! யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6 | வாழ் தொல் புகழார் குடந்தை,vaal thol pugazhaar kudandhai - விளங்குகின்ற அகாதியான புகழையுடையார் வர்த்திக்கிற திருக்குடந்தையிலே கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே! வானோர் கோமானே,vaanoor komaane - நித்யஸூரிகாதனே! யாழின் இசையே,yaazhin isaiye - வீணாகானம்போலே பரம் போக்யனானவனே! அமுதே,amuthe - அமிருதம் போன்றவனே! அறிவின் பயனே,arivin payane - அறிவுக்கும் பலனானவனே! அரி ஏறே,Ari ere - சிங்கமும் கஇடபமும் போன்று சிறந்தவனே! உன் அடி சேரும் ஊழ் கண்டு இருந்தே,un adi serum ooz kandu irunthe - நான் உனது திருவடிகளையடையும்படியான முறைமையைக் கண்டிருந்தும் தூரா குழி தூர்த்து,thura kuzhi thuruthu - ஒருநாளும் தூர்க்கவொண்ணாத இந்திரியக்குழிகளை நிறைத்துக்கொண்டு எனை நாள்,enai naal - எத்தனை காலம் அகன்று இருப்பன்,agandru iruppan - உன்னைவிட்டுப் பிரிந்திருப்பேன்! எளன் தொல்லை வினையை அறுத்து,elan tollai vinaiyai aruthu - (இப்படி அகன்றிருக்கைக்குக்காரணமான) எனது அநாதி பாபங்களைத் தொலைத்து சூழ் கண்டாய்,soozh kandai - என்னை ஸ்வீகரித்தருள வேணும். |
| 3200 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 7 | அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே! எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே! தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7 | அரி ஏறே,Ari ere - சிறந்த சிங்கமே! ஏன்,en - நான் அனுபவித்தற்குரிய அம் பொன் சுடரே,am pon sudare - அழகிய பொன்போன்ற ஒளியுருவனே! செம் கண் கரு முகிலே,sem kan karu mugile - சிவந்த கண்களையுடைய காளமேகம் போன்றவனே! எரி ஏய் பவளம் குன்றே,eri aye pavalam kunre - நக்ஷத்திர மண்டலத்தளவும் ஓங்கின பவளமலைபோன்றவனே! நால் தோள் எந்தாய்,nal thol endhay - சதுர்ப்புஜ ஸ்வாமியே! உனது அருகே,unathu aruke - உனது கிருபையினாலர் என்னை பீரியா அடிமை கொண்டாய்,ennai peeriya adimai kondai - என்னை அத்தாணிச் சேவகங் கொண்டவனே! குடந்தை திருமாலே,kudandai thirumale - திருக்குடந்தையில் வாழும் திருமாலே! இனி தரியேன்,ini thariyane - இனிமேல் தரித்திருக்ககில்லேன்! உன் சரணம் தந்து,un sarannam thandu - உனது திருவடிகளைக் கொடுத்தருளி என் சன்மம் களையாய்,en sanmam kalaiyaay - எனது சரீரத்தொடர்பைத் தவிர்த்தருளவேணும். |
| 3201 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 8 | களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன் வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா! தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8 | வளைவாய் நேமிபடையாய்,valaivay nemipadaiyaay - வளைந்த வாயையுடைய திருவாழியை ஆயுதமாகவுடையவனே! குடந்தை கிடந்த,kudandai kitandha - திருக்குடந்தையிலே சயனித்தருள்கின்ற மா மாயா,ma maaya - மஹாச்சர்யரூபனே! துன்பம் களைவாய்,thunbam kalivaay - எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி களைமா தொழிவாய்,kalaimaa thozhivaay - களையாவிட்டாலும் சரி களைகண் மற்று இலேன்,kalaikan matru ilen - வேறு சரணமுடையேனல்லேன்; உடலும் தளரா,udalum thalarā - உடல் தளர்ந்து எனது ஆவி,enathu aavi - என் உயிரானது சரிந்து பொம் போது,sarindhu pom podhu - நிலைகுலைந்து உத்க்ரமணமடையும்போது இளையாது,ilaiyathu - மெலியாமல் உன் தான்,un thaan - உன் திருவடிகளையே ஒருங்க பிடிந்து போது,orungga pitinthu pothu - ஒருமிக்கப் பிடித்துப் போகும்படி நீயே இசை,neeye isai - நீயே திருவுள்ளம்பற்ற வேணும். |
| 3202 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 9 | இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே! அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி! திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9 | என்னை,ennai - நெடுநாள் விமுகனாயிருன்னத வென்னை இசைவித்து,isaivithu - அடிமைக்கு இசையும்படி செய்து உன் தாள் இணை கீழ்,un thaal inai keel - உனது உபயபாதங்களின் கீழே இருந்தும் அம்மானே,irundhum ammaane - தங்கும்படி செய்தருளின ஸ்வாமியே! அசைவு இல் அமரர் தலைவர்,asaivu il amarar thalaivar - நித்யஸூரிகளுக்குள் தலைவரான அநந்தகருடவிஷ்வக்ஸேனர்களுக்கும் தலைவா,thalaiva - முதல்வனே! ஆதி பெரு மூர்த்தி,aadhi peru moorthi - ஸகலஜகத்காரணபூசமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே! திசை வில் வீசும் செழுமா மனிகள் சேரும்,disai vil veesum sezuma maniḵaḷ cerum - எங்கம் ஒளிவீசுகின்ற மிகச்சிறந்த ரத்னங்கள் சேருமிடமான திரு குடந்தை,tiru kutantai - திக்குடந்தையிலே அசைவு இல்,asaivu il - ஓய்வில்லாதபடி (அவதாரம்) உலகம் பரவ,ulagam parava - உலகமெல்லாம் துதிக்கும் படி கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே! காண வாராய்,kaana vaaraay - நான்கண்டு அநுபவிக்கும்படி வரவேணும் |
| 3203 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 10 | வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்! ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்! தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10 | வாரா,vaara - திருவுருவத்தோடு வாராமல் அரு ஆய் வரும்,aru aay varum - அரூபியாய் உள்ளேவந்து தோன்றுகின்ற என் மாயா,en maaya - என் மாயவனே! மாயா மூர்த்தியார்,maaya moorthiyaar - ஒருநாளும் அழியாத திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையவனே! ஆரா அமுது ஆய்,ara amuthu aay - எவ்வளவு அனுபவித்தாலும் திருப்திபிறவாத அமிருதமாய்க் கொண்டு அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,adiyen aavi agame tittipai - என் உள்ளுக்குள்ளே தித்தித்திருக்குமவனே! தீரா வினைகள் தீர,teera vingal teera - தொலையாத பாவங்களும் தொலையும்படியாக என்னை ஆண்டாய்,ennai aandaay - அடியேனை ஆண்டருளினவனே! திரு குடந்தை ஊரா,tiru kutantai oora - திருக்குடந்தைப்பதியோளே! அடியேன்,adiyen - அடியேன் உனக்கு ஆள்பட்டும்,unakku aalpattum - உனக்கு அடிமைப்பட்டும் இன்னம் உழல்வேனோ,innam uzhalveno - இன்னமும் கிலேப்படுவேனோ! |
| 3204 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 11 | உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11 | உழலை என் பின் பேய்ச்சி,uzhalai en pin peyschi - உழல்தடிபோன்ற எலும்புகளையுடைளான பூதனையினுடைய முலை ஊடு,mulai oodu - முலை வழியாக அவள் உயிரை உண்டான்,aval uyirai undaan - அவளது உயிரை முடித்த பெருமானுடைய கழல்கள் அவையே,kazalkal avaiye - திருவடிகளையே சரண் ஆக கொண்ட,saran aka konda - சரணமாகப்பற்றின குகூர் சடகோபன்,kukoor sadagopan - ஆழ்வார் குழலின் மலிய,kulalin maliya - குழலோசையித் காட்டிலும் இனிதாக சொன்ன,sonna - அருளிச்செய்த ஓர் ஆயிரத்துள்,or aayirattu - ஒப்பற்ற ஆயிரத்தினுள்ளே இ பத்தும்,i pattum - இப்பதிகத்தை மழலை தீர,malalai teera - தமது அறியாமை தொலையும்படி வல்லார்,vallaar - அதிகரிக்கவல்லவர்கள் மான் ஏய் நோக்கியர்க்கு,maan aay nokkiyarkku - மான்போன்ற நோக்கையுடைய திவ்யாப்ஸரன்ஸுக்களுக்கு காமர்,kaamar - ஆதரிக்கத்தக்கவராவர். |