| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3601 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) ( சில குயிற் பேடைகளை நோக்கி நீங்கள் என்னை முடிக்க வேண்டினால் அதற்கு இத்தனை பாரிப்பு வேணுமோ? கோழி வெண் முட்டைக்கு என் செய்வதெந்தாய் குறுந்தடி (கோழி முட்டையை யடிப்பதற்குச் சிறு தடிதான் வோணுமோ?) என்றாப்போலே, அபலையாய் அற்றுக்கிடக்கிற வென்னை முடிக்கைக்கு இவ்வளவு ஸம்பிரமங்கள் வேண்டியிருந்த தோவுங்களுக்கு? என்கிறாள்.) 1 | இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள் என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவகிலீர் என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1 | குயில் பேடைகாள்,Kuyil paedaikhaal - பெண் குயில்களே! இன் உயிர் சேவலும் நீரும்,In uyir sevavalum neerum - உங்களுடைய உயிர் போன்ற சேவல்களும் நீங்களும் கூவிக் கொண்டு,Koovik kondu - (கலவிக்காகப்)பரஸ்வரம் கூவிக்கொண்டு இங்கு,Ingu - என் கண் வட்டத்திலே எத்தனை,Eththanai - மிகவும் என் உயிர் நோவ,En uyir nov - என் பிராணன் நோவுபடும்படி மிழற்றேல்மின்,Mizhatrayelmin - தொனியைச் செய்யவேண்டா: என் உயிர் கண்ண பிரானை வர,En uyir kanna praanai vara - எனக்கு உயிரான கண்ண பிரான் இங்கு வந்துசேரும்படி நீர் கூவ கிலீர்,Neer koova kilir - நீங்கள் அழைக்க மாட்டீர்கள் என் உயிர் கூலி கொடுப்பார்க்கு,En uyir kooli koduppaarkku - என்னுயிரை வாங்கி அவன் கையிலே கொடுக்க நினைத்திருக்கு முங்களுக்கு இத்தனையும் வேண்டுமோ,Ethanaiyum vendumo - இவ்வளவு பாரிப்புக் தான் வேணுமோ? |
| 3602 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (சிலஅன்றிற் பேடைகளை நோக்கி நீங்கள் உங்களுடைய ஆண்களோடே கூடிக்கொண்டு இனிமையான கூஜிதங்களைச் செய்து அதனாலே என்னை நலிகின்றீர்களே இது நியாயமா? இப்படி நலிய வேண்டா–என்று இரக்கிறாள்.) 2 | இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் எத்தனை நீரும் உன் சேவலும் கரைந்து ஏங்குதீர் வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2 | அன்றில்பேடைகாள்,Andril paedaikhaal - பெண்ணன்றிற் பறவைகளே நீரும் நும் சேவலும்,Neerum num sevavalum - நீங்களும் உங்கள் சேவல்களும் எத்தனை கரைந்து ஏங்குதிர்,Eththanai karaindhu aenguthir - எவ்வளவோ கரைந்து உருந்துகிறீர்களே இத்தனை வேண்டுவது அன்று,Ithanai venduvathu andru - என்னைக் கொலை செய்ய இத்தனைபாரிப்பு வேண்டியதில்லை!; அந்தோ,Andho - ஐயோ, எதுக்கு இவ்வளவு பாரிப்பு? வித்தகன் கோவிந்தன்,Viththagan Govndhan - மாயக் கோபாலன் ஒருவர்க்கும் மெய்யன் அல்லன்,Oruvarkkum meyyan allan - நல்லார் தீயாரென்கிற வாசியின்றிக்கே அனைவர்க்கும் பொய்யனே இனி,Ini - ஆன பின்பு என் உயிர்,En uyir - என் பிராணன் அவன் கையதே ஆம் அத்தனை,Avan kaiyadhai aam aththanai - அவன் கைப்பட்டதேயன்றோ. |
| 3603 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அற நோவு பட்ட என்னை நலியாதே கொள்ளுங்கோள்என்று அன்றில் பேடைகளை திரியவும் மீளவும் இரக்கிறாள்.) 3 | அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள் எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3 | அன்றில் பேடைகாள்,Anril pedaikal - பெண்ணன்றில் பறவைகளே எனது ஆர் உயிர் அவன் கையுதே,Enathu ar uyir avan kaiyuthe - எனது அருமையானவுயீர் அவன் கைப்பட்டதே நீர் எவம் சொல்லி,Neer evam solli - நீங்கள் ஏதேதோ உக்திகளைப் பேசிக் கொண்டு குடைந்து,Kudainthu - ஸம்ச்லேஷித்து புடை சூழவே ஆடுதிர்,Pudai soolave aaduthir - என் கண் வட்டத்திலேயே திரிகின்றீர்கள்; தவம் செய்தில்லா,Thavam seidhu illaa - அவனைப்போலே பிரிவுக்கு ஆறியிருக்கும்படியான பாக்கியம் பண்ணாத இங்கு உண்டோ,Ingu undoo - (அங்கே போனபடியாலே) இங்கு இல்லையே நும் எங்கு கூக்குரல் கேட்டும்,Num engu kookkural keettum - உங்களுடைய பரேம கனமான தொனியைக் கேட்டும் எவம் சொல்லி,Evam solli - எத்தைச் சொல்லித் தரிப்பது? நிற்றும் |
| 3604 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (சில மயில்களை குறித்து, நீங்கள் உயரக்கூவி என்னுயிரை முடிக்கப் பார்க்கிறீர்களே! இது நீதியோ வென்கிறாள்.) 4 | கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான் மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள் வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4 | கோழிகாள்,Kozhikal - மயில்களே! கூக்குரல் கேட்டும்,Kookkural keettum - நீங்கள் பாஸ்பரம் அழைத்துக் கொள்ளுகிற தொனியைக் கேட்டும் நம் மாயன் கண்ணன்,Nam maayan kannan - நமது மாயக்கண்ணன் வெளிப்படான்,Velippadaan - வந்து தோன்றுகின்றவன் நீரும் சேவலும் மேல் கிளை கொள்ளேன் மின்,Neerum sevalum mel kilai kollen min - நீங்கள் ஆணும் பெண்ணுமாயிருந்து உயரக் கூவ வேண்டா நமக்கு,Namakku - என்னுடைய வாக்கும் மனமும் கருமமும்,Vaakkum manamum karumamum - காணத்ரய வ்ருத்தியும் ஆங்கதே,Aangathe - அப்பெருமான் பக்கலிலே யாயிற்று ஆக்கையும் ஆவியும்,Aakkaiyum aaviyum - உடலும் உயிரும் அந்தரம் நின்று உழலும்,Antharam ninru uzhalum - நடுவே நின்று தத்தளிக்கின்றன |
| 3605 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தன்னினவாய் இருந்து நலிகிற பூவைகளைக் குறித்து -அவன் தான் என்னை முடிக்கைக்கு அழகிதான நல் விரகு பார்த்தான் -உங்களுக்கு இங்கே விஷயம் இல்லை -என்கிறாள்.) 5 | அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள் நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5 | அந்தரம் நின்று,Antharam ninru - நடுவே வீணாகப் பரிச்சாப்படுகிற உழல்கின்ற யானுடைய பூனவ காள்,Yaanudaiya poonava kaal - என்னுடைய பூவைகளே ! நும் திறந்து எதும் இடை இல்லை,Num thirandhu ethum idai illai - உங்கள் உத்யோகத்திற்குச் சிறிதும் அவகாசமில்லை குழறேன்மின,Kuzhaarenmin - உங்கள் தொனியைக்காட்டி நலி வேண்டா இந்திர ஞாலங்கள் காட்டி,Indhira gnaalangal kaatti - (பண்டுமாவலியிடத்து) மாயா விநோதங்கள் காட்டி இவ் எழ் உலரும் கொண்ட,Iv el ularum konda - இவ்வேழுலகங்களையும் ஆக்ரமித்து கொண்டாடப் போலே என்னையும் கொள்ளை கொண்ட நம் திருமார்பன்,Nam thirumaarban - நமது திருமால் நம் ஆவி உண்ண,Nam aavi unna - நம்மூயிரையும் கொள்ளை கொள்ள நன்கு எண்ணினான்,Nangu enninaan - நன்றாக ஸங்கல்பித்தான் |
| 3606 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –அவன் பிரிந்த தசையில் அவன் திரு நாமங்களையும் சொல்லாமைக்கு அன்றோ உன்னை நான் வளர்த்தது – ஆனபின்பு அவன் திரு வடிவு போலே இருக்கும் உன் வடிவைக் காட்டி அதின் மேலே அவன் திரு நாமங்களையும் சொல்லி என்னை நோவு செய்யாதே கொள்ளாய் -என்று தன் கிளியைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 6 | நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6 | நன்கு எண்ணி,Nangu enni - எனக்கு ஆபத்திலே உதவுவாயென்று நன்மையை நினைத்து நான் வளர்த்த,Naan valartha - நான் போஷித்து வந்த சிறு கிளி பை தலே,Siru kili pai thale - சிறிய கிளிக் குட்டியே! இன் குரல் நீ மிழற்றேல்,In kural nee mizhaarel - இனிய குரலைக் கொண்டு நீ தொனி செய்யாதே (ஏனென்னில்) நின் செய்ய வாய் ஒக்கும் வாயுன்,Nin seiyya vaai okkum vaayun - உனது சிவந்த வாயையொத்த வாயையுடையவனும் கண்ணன் கை காலினன்,Kannan kai kaalinan - (உனது கண் கை காலோடொத்த) திருக்கண் திருக்கை திருவடிகளையிடையவனும் நின் பசும் சாமம் நிறத்தன்,Nin pasum saamam nirathan - உன்னுடைய பசுமை யழியாத சாமநிறம் போன்ற நிறத்தை யுடையனும் என் ஆர் உயிர்,En ar uyir - என்னுடைய அருமையான உயிர் போன்றவனுமான காகுத்தன்,Kaaguthan - இராமபிரான் கூட்டுண்டு நீங்கினான்,Koottundu neenginaan - என்னோடே கலந்துப் பிரிந்தான் |
| 3607 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (எம்பெருமானது வடிவுக்குப் போலியான மேக பங்க்திகளைக் கண்டு, உங்கள் வடிவைக் காட்டி என்னை முடியாதே கொள்ளுங்கோளென்கிறாள்.) 7 | கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய் வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல் கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள் காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7 | கூட்டுண்டு நீங்கிய,Koottundu neengiya - என்னோடு கலந்து பிரிந்த கோலம் தாமரை கண் செம்வாய்,Kolam thaamarai kan semvaai - அழகிய தாமரை போன்ற கண்களையும் சிவந்த அதாத்தையு முடையனாய் வாட்டம் இல் என் கரு மாணிக்கம்,Vaattam il en karu maanikam - இடைவிடாமல் என்னினைவிலேயேயிருக்கிற நீலரத்னம் போன்றவடிவையுடையனான மாயன் கண்ணன் போல்,Maayan kannan pol - மாயக் கண்ணனைப் போலயிருக்கிற கோட்டிய வில்லோடு மின்னும் மேகம் குழாங்கள் காள்!,Kottiya villodu minnum megam kuzhaangal kaal - வளைக்கப்பட்ட வில்லோடு கூடி மின்னுகிற மேகதிரள்களே! நும் உரு,Num uru - உங்கள் வடிவத்தை காட்டேன்மின்,Kaateenmin - காட்டாதே மறைத்துக்கொள்ளுங்கோள்; அது என் உயிர்க்கு காலன்,Adhu en uyirkku kaalan - அந்த உங்கள் வடிவம் என் பிராணனுக்கு மிருத்யு |
| 3608 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி-ஸ்ரீ கண்ணனுடைய திரு நாமங்களை சொல்லில் நான் முடிவன்-அவற்றைச் சொல்லாது ஒழிய வேணும் என்று உங்களை நான் இரக்க பின்னையும் அவற்றையே சொல்லிக் கொன்றி கோள் – நான் உங்களை வளர்த்த பிரயோஜனம் அழகிதாகப் பெற்றேன் என்று தன் குயில்களே இன்னாதாகிறாள்.) 8 | உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர் குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல் பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8 | குயீல் பைதல்காள்,Kuyil paithalkaal - குயிற் குட்டிகளே அது உயிர்க்கு காலன் என்று,Adhu uyirkku kaalan endru - (கண்ணனுடைய நாமமாகிற) அது என்னுயிர்க்கு மிருத்யுவென்று சொல்லி உம்மை யான் இரந்தேற்கு,Unmai yaan iranthearku - (அந்த க்ருஷ்ண நாமத்தைச் சொல்ல வேண்டாவென்) உங்களை வேண்டிக்கொண்ட என்னை கண்ணன் நாமமே குழறி கொன்றீர்,Kannan naamame kuzhaari kondreer - அந்தக் கண்ணன்நாமங்களையே அநக்ஷரமதுரமாகச் சொல்லிக் கொலை செய்கிறீர்கள் தயிர் பழஞ்,Thayir pazhanj - தயிரையும் பழைய சோற்றையும் சோற்றோடு பால் அடிசிலும் தந்து,Paal adisilum thanthu - பாலையும் செஞ்சோற்றையு மூட்டி சொல் பயிற்றிய,Sol payitriya - அவனது திருநாமங்களாகிற சொற்களை கற்பித்தத்ற்குக் கைம்மாறாக நல் வளம் ஊட்டீவீர்,Nal valam oottiveer - (இப்படி யென்னைக் கொலை செய்கையாகிற) நல்ல காரியம் செய்தீர்கள் பண்பு உடையீரே,Panbu udaiyeere - நீங்கள் நல்ல தர்மிஷ்டர்களே |
| 3609 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (மதுவைப் பருகிக் களித்துப் பாடுகிற சில வண்டுகளையும் தும்பிகளையுங் குறித்து உங்கள் தொனி என்னால் பொறுக்கப் போகிறதில்லையே; பாடாதே கொள்ளுங்கோள் என்கிறாள்.) 9 | பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின் புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல் தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–9-5-9 | பண்பு உடை வண்டொடு தும்பிகான்,Panbu udai vandodu thumbikaan - பாட்டின் நீர்மையை யுடைய வண்டுகளோடு கூடின தும்பிகளே நும் இன் குரல்,Num in kural - உங்களுடைய இனிய குரலானது புண் இரை வேல் கொடு குத்தால் ஒங்கும்,Pun irai vel kodu kutthal ongum - புண்ணின் புரையிலே வேலைக் கொண்டு குத்தினாற்போலேயிரா நின்றது பண் மிழற்றேன்மின்,Pan mizhaarelmin - பண்பாடு தலைத்தவிருங்கள் தண் பெரு நீர் தடம்,Than peru neer tadam - குளிர்ந்து நிரம்பின நீரையுடைய தடாகம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்,Thaamarai malarndhaal okkum - தாமரை மலரப் பெற்றாற்போலேயாய் பெரு கண் கண்ணன்,Peru kan kannan - மிகப் பெரிய கண்களை யுடையனான க்ருஷ்ணன் நம் ஆவி உண்டு,Nam aavi undu - நமது உயிரைக் கவர்ந்து எழ நண்ணினான்,Eza nanninaan - அகன்று போயினன் |
| 3610 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (சில நாரைக் குழாங்கள் அருகே யிருந்து மந்த்ராலோசனை செய்யுமாபோலே தென்பட்டன; தன்னை முடிப்பதற்கு அவை ஆலோசிப்பதாகக் கொண்டு அந்தோ! நான் முடிந்தேன் ; இனி நீங்கள் திரண்டு பயனென்கொல்? என்கிறாள்.) 10 | எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம் பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே–9-5-10 | யழனம் முதல் தாரை குழாய்கள்தான்,Yazhanam mudhal thaarai kuzhaaykal thaan - நீர்நிலங்களிலே திரிகிற நல்ல நாரைத் திரள்களே! தாமும் எழ நண்ணி,Thaamum eza nanni - நாம் இவ்விபூகியை விட்டெழுந்து நம் வானநாடனோடு ஒன்றினோம்,Nam vaananaadano du ondrinom - நம்பரம பத நாதனோடே சேர்ந்து பொருந்தி விட்டோம் இனி பயின்று என்,Ini painru en - (இனி நீங்கள் என்னை முடிக்கத் திரளவிருந்து) ஆலோசிப்பதில் என்ன லாபம்? இழை நல்ல ஆக்கையும்,Izai nalla aakkaiyum - ஆபரணாபிராமநான சரீரமும் பையவே,Paiyave - நாளடைவிலே புயக்கற்றது,Puyakkatradhu - வசையற்றதாயிற்று எங்கும்,Engum - உலகமெல்லாம் தழை நல்ல இன்பம் தலைப்பெய்து,Thazhai nalla inbam thalaippeythu - விஸ்தீர்ணமாய் நன்றான ஸுகத்தைப் பெற்று தழைக்க,Thazhaikka - வாழ்ந்திடுக |
| 3611 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (இப்பதிகத்திற்கு பாசுரம் நெஞ்சிலே பட்டால், ஆரேனுமாகிலும் உருகியே நிற்பர்கள் என்கிறார். பலனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரத்தில் ஒரு பலன் சொல்லதே இங்ஙனே சொல்லலாமோ வென்னில் இதுவும் பயனுரைத்த படியேயாம்; ஒன்றுக்கும் கரையாதே உருகாதே கல்லாயிருப்பவர்களையும் உருகச் செய்வது ஒரு பலனன்றோ.) 11 | இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத் தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத் தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே–9-5-11 | இன்பம் தலைப் பெய்து,Inbam thalaip peydhu - பேரின்பத்தை விளைவித்துக் கொண்டு எங்கும் தழைத்த,Engum thazhaitha - எங்கும் மவியாபித் திருக்கின்ற தன் புகழ்,Than pugazh - எம்பெருமான்றனது கீர்த்திகளை பல் ஊழிக்கு ஏத்த,Pal oozhikku aetha - ஊழிதோறூழியோவாமல் அதிக்கும்படியாக தனக்கு அருள் செய்த,Thanakku arul seitha - தமக்கு பரம கிருமை பண்ணின மாயனை,Maayanai - ஆச்சரிய குணசீலனான எம்பெருமானைக் குறித்து தென் குருகூர் சடகோபன் சொல்,Then kurukoor sadagopan sol - ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரத்தினுள்ளே இவை ஒன்பதோடு ஒன்றுக்கு,Ivai onbadhodu onrukku - இப்பதிகத்திற்கு மூ உலகும் உருகும்,Moo ulagam urugum - மூவுலகத்தவரும் உருகுவர்கள் |