Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: இன்பம் பயக்க (12 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3435திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு எங்கனே சொல்லிலும் ப்ரீதியை விளைக்கும் என்கிறார்.) 11
இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11
இங்கும் அங்கும்,Ingum angum - இவ்விபூதியிலுண்டான ஆச்ரயண வேளையிலும் அவ்விபூதியிலுண்டான கைங்கர்ய தசையிலும்
திருமால் அன்றி இன்மை கண்டு,Thirumaal andri inmai kandu - லக்ஷ்மீபதியல்லது வேறெருவர் உர்தேச்யால்லாமையை யறுதியிட்டு
அங்ஙனே வண் குரு கூர் சட கோபன்,Anggane van van Kurukoor Sadagopan - அவ்வண்ணமாகவே யிருப்பவரான ஆழ்வார்
இங்ஙனே சொன்ன,Anggane sonna - இப்படியருளிச் செய்த
ஒர் ஆயிரத்து இப்பத்தும்,Or aayirathu ippaththum - ஆயிரத்துள் இப்பதிகம்
எங்ஙனே சொல்லிலும்,Enggane sollilum - எப்படிச் சொன்னாலும்
இன்பம் பயக்கும்,Inbam payakkum - ஆனந்தாவஹமாகும்.
3436திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (எம்பெருமான் பிராட்டியோடு கூடு ஆனந்தமயனாக எழுந்தருளியிருக்குமிடமான திருவாறன்விளையிலே அநுபவித்து அடிமை செய்யுங்காலமும் ஆகுமோ வெம்கிறார்.) 1
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1
எழில் மலர் மாதரும் தானும்,Ezhil malar maadharum thaanum - அழகிய தாமரைமலரிற் பிறந்த பெரிய பிராட்டியாரும் தானும்
இன்பம் பயக்க,Inbam payakka - பரஸ்பரம் ஆனந்தம் மேலிடும் படியாக
இனிது உடன் வீற்றிருந்து,Inidhu udan veetrirundhu - இனிமையோடு கூட வெழுந்தருளியிருந்து
இ ஏழ் உலகை,I ezh ulagai - இவ்வுலகங்களையெல்லாம்
இன்பம் பயக்க ஆள்கின்ற,Inbam payakka aalkindra - இனிமையுற அடிமை கொண்டருளா நிற்கிற
எங்கள் பிரான்,Engal piraan - எம்பெருமான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற,Anputru amarnthu uraignra - மிகவும் திருவுள்ள முகந்து வர்த்திக்கிற
அணி பொழில் சூழ்திருவாறன் விளை,Ani pozhil soozhthiruvaaran vilai - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாறன் விளைத் திருப்பதியை
அன்புற்று அமர்ந்து,Anputru amarnthu - அன்போடு பொருந்தி
வலஞ் செய்து,Valanj seydhu - ப்ரதக்ஷிணம் பண்ணி
கை தொழும் நாள்களும் ஆகும் கொல்,Kai thozhum naalgalum aakum kol - கை தொழும்படியான நாட்களும் ஸமீபிக்கு மோ?
3437திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையில் விலக்ஷண நிரதிசய கந்த யுக்தமான திரு நீரைக் கொண்டு திரு நீர் இட்டு ப்ரதக்ஷிணம் பண்ணி கையாலே தொழவும் கூடவற்றே என்கிறார்.) 2
ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2
ஜயம் ஒன்று இன்றி ஆகும் கொல்,Jayam ondrum indri aakum kol - (நமது மநோரதம்) நிஸ்ஸந்தேஹமாக ஸித்திக்குமோ?
அகல் இடம் முற்றவும்,Akal idam mutravum - விஸ்தீர்ணமான உலகங்களெல்லாம்
ஈர் அடியே ஆகும் பரிசு நிமிர்ந்த,Eer adiye aakum parisum nimirndha - இரண்டடியிலேயே அடங்கும்படி வளர்ந்தருளின
திரு குறள் அப்பன்,Thiru kural appan - ஸ்ரீவாமனமூர்த்தி
அமர்ந்து உறையும்,Amarnthu uraiyum - விரும்பி வர்த்திக்குமிடமாய்,
மாகம் திகழ்,Maagam thigazh - பெரிய ஆகாசத்தளவும் ஓங்கி விளங்குகிற
கொடி மாடங்கள் நீடு மதிள்,Kodi maadangal needu madil - கொடிகட்டின மாடங்களையும் நெடிய திரு மதிள்களையுமுடைத்தான
திருவாறன் விளை மா கந்தம் நீர் கொண்டு தூவி,Thiruvaaran vilai maa kandham neer kondu thoovi - சிறந்த பரிமளம் பொருந்திய தீர்த்தத்தைக்கொண்டு தூவி
வலம் செய்து,Valam seydhu - ப்ரதக்ஷிணம் பண்ணி
கை தொழ கூடும் கொல்,Kai thozhu koodum kol - அஞ்ஜலிபண்ணி நேருமோ?
3438திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையில் எம்பெருமான் திருவடி மேலே நீ ஏறி அருளி இங்கே எழுந்து அருளக் கண்டாலும் அதனைத் தவிர்ந்து நாள் தோறும் திருவாறன் விளையை தொழக் கூட வற்றே என்கிறார்.) 3
கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3
வைகலும் கூடும் கொல்,Vaikalum koodum kol - (நமது மநொரதம்) எப்போதும் நிறைவேறப்பெறுமோ?
கோவிந்தனை,Govindhanai - ஆயர்தலைவனும்
மதுசூதனை,Madhusoothanai - மதுகைடபஹந்தாவும்
ஆடு பறவை மிசை கண்டு,Aadu paravai misai kandu - வெற்றியையுடைய கருடன் மேலே கண்டு
கைதொழுது,Kai thozhuthu - அஞ்ஜலிபண்ணி அவ்வளவேயல்லாமல்
அவன் உறையும்,Avan uraiyum - அப்பெருமான் நித்யவாஸம் பண்ணுமிடமாய்,
பாடும் பெரு புகழ் நால் மறை ஜந்து வேள்வி ஆறு அங்கம் பன்னினர்வாழ்,Paadum peru pugazh naal mazhai jandhu vaelvi aaru angam panninarvaaz - உரக்கப்பாடப்படுகிற மிக்க புகழையுடைய நான்கு வேதங்களென்ன, பஞ்சமஹாயஜ்ஞங்களென்ன, சீவீக்ஷி முதலான ஆறங்கங்களென்ன இவற்றிலே மிக்க பரிசய முள்ளவர்கள் வாழுமிடமாய்
நீடு பொழில்,Needu pozhil - பெரிய சோலைகளையுடையதான
திருவாறன் விளை,Thiruvaaran vilai - திருவாறன் விளைப்பதியை
நிச்சலும் தொழ வாய்க்கும் கொல்,Nichchalam thozha vaaykkum kol - எப்போதும் தொழுது கொண்டேயிருக்கும் படியான பாக்கியம் வாய்க்குமோ?
3439திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (திருவாறன்விளையிலே சென்று அநுபவிக்க ப்ராப்தியில்லையாகிலுமாகுக; அங்கு நின்றருளின் எம்பெருமான் திருவடிகளை இங்கேயிருந்தாகிலும நிரந்தரமாகச் சிந்தனை செய்யும் பாக்கியம் வாய்க்குமோ வென்கிறார்.) 4
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4
வாய்க்கும் கரும்பும் பெரு செந்நெலும் வயல் சூழ்,Vaaykkum karumpum peru chennelum vayal soozh - செழித்த கரும்புகளும் ஓங்கிய செந்நெற்களுமான கழனிகள் சூழப்பெற்ற
திருவாறன் விளை,Thiruvaaran vilai - திருவாறன் விளைப்பதியிலே,
வாய்க்கும் பெரு புகழ்,Vaaykkum peru pugazh - வாய்ந்த மிக்க கீர்த்தியையுடையவனும்
மூ உலகு ஈசன்,Moo ulagu eesan - மூவுலங்களுக்கும் ஸ்வாமியும்
வட மதுரை பிறந்த,Vada madurai pirandha - வடமதுரையில் அவதரித்தவனும்
வாய்க்கும் மணி நிறம்,Vaaykkum mani niram - அநுபவிக்க வாய்த்த நீலரத்னம் போன்ற நிறத்தையுடையனுமான
கண்ண பிரான் தன்,Kanna piraan than - ஸ்ரீ க்ருஷ்ணபகவானுடைய
மலர் அடி போதுகள்,Malar adi pothugal - விதஸிதமான திருவடித்தாமரைகளை
எப்பொழுதும்,Eppozhudhum - இடை வீடின்றி
ஈங்கு மனத்து நினைக்க பெற,Eengu manaththu ninaikka perra - இங்கேயிருந்து மனத்திலே நினைக்கும்படியான பேறு பெறுதற்கு
நிச்சலும் வாய்க்கும் கொல்,Nichchalam vaaykkum kol - எப்போதும் பாக்கியம் வாய்க்குமோ?
3440திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையினுடைய சம்ருத்தமான புகழை பாட நம்முடைய சகல துக்கங்களும் நீங்கும் என்கிறார்.) 5
மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5
மலர் அடி போதுகள்,Malar adi pothugal - பரமபோக்யமான திருவடித்தாமரைகளை
என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி,En nenjaththu eppozhudhum iruththi - எனது நெஞ்சிலே அநவரதமும் இருக்கும்படி பண்ணி
வணங்க,Vananga - தன்னையே வணங்குமாறு;
பலர் அடியார் முன்பு அருளிய,Palar adiyaar munbu aruliya - மற்றும் பல பக்தர்கள் இருக்கச்செய்தேயும் அவர்களுக்கு முன்னே எனக்கு க்ருபை பண்ணின
பாம்பு அணை அப்பன்,Paambu anai appan - அனந்தசாயியான எம்பெருமான்
அமர்ந்து உறையும்,Amarnthu uraiyum - உகந்து வர்த்திக்குமிடமாய்
மலாஜீல்,Malaajil - (தேவர்கள் வர்ஷித்த) புஷ்பங்களோடு கூடின
மணி நெடுமாடங்கள்,Mani nedumaadangal - மணிமயமான ஓங்கின மாடங்களையும்
நீடு மதிள்,Needu madil - நெடிய திருமதிள்களையுமுடைத்தான
திருவாறன் விளை,Thiruvaaran vilai - திருவாறம்விளைப்ப தியினுடைய
உலகம் மலி புகழ்,Ulagam mali pugazh - உலகமெங்கும் நிறைந்த திவ்ய கீர்த்திகளை
பாட,Paada - பாடினவளவிலே
நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடும்,Nam mel vinai ondrum nillaa kedum - நம்மிடத்துள்ள பாவங்கள் ஒன்றும் மிச்சப்படாதபடி எல்லாம் தொலைந்துபோம்.
3441திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (எம்பெருமான் பக்கலில் சாபலமுடையாரை விளித்து உங்களுடைய ஸகல துக்கங்களும் தொலையும்படி திருவாறன் விளையை நெஞ்சாலே நினையுங்கோளென்கிறார்.) 6
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6
அன்று அங்கு,Andru anggu - முன்பொரு காலத்தில்
அமர் வென்று,Amar vendru - பூசலிலே வெற்றி பெற்று
உருப்பிணி நங்கை,Urupini nangai - ருக்மிணிப் பிராட்டியினுடைய
அணி நெடுதோள் புணர்ந்தான்,Ani neduthol punarndhaan - அலங்காரங்களால் பரம போக்யமான திருத்தோள்களையணைந்தவனும்
என்றும் எப்போதும் துதிப்ப என் நெஞ்சம் உள்ளே இருக்கின்ற பிரான்,Endrum eppozhudhum thudhippa en nenjam ullae irukkindra piraan - ஓய்வின்றி நான் துதிக்கும்படி எனது நெஞ்சினுள்ளேயிருப்பவனுமான பெருமான்
நின்ற,Nindra - நித்யவாஸம் பண்ணுகிற
அணி திருவாறன் விளை என்னும் நீள் நகரம் அது,Ani thiruvaaran vilai ennum neel nagaram adhu - அழகிய திருவாறன் விளையென்கிற அந்த மஹா நகரத்தை
தொண்டீர்,Thondir - தொண்டர்களே!
உள்ளிதொழுமின்,Ullithozhumin - சிந்தித்துத் தொழுங்கோள்;
தீவினை ஒன்றும் நில்லா முற்றவும் கொடும்,Theevinai ondrum nillaa mutravum kodum - கொடிய பாவங்களொன்றும் சேஷியாதபடி நிலை குலைந்து முழுதும் நசித்துப்போம்.
3442திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (திருவாறன் விளையென்கிற திருப்பதியே தமக்கு ப்ராப்யமென்றும் அங்கு உறையும் எம்பெருமானே அதற்கு உபாயபூதனென்றும் தம்முடைய ஸித்தாந்தத்தை வெளியிடுகிறார் இப்பாட்டில்.) 7
நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7
மலர் சோலைகள் சூழ்,Malar Solaigal soozh - பூஞ்சோலைகள் சூழ்ந்த
திருவாறன் விளை அதுவே நீள் நகரம்,Thiruvaaran vilai adhuve neel nagaram - திருவாறன் விளையென்கிறதலமே பரமப்ராப்யம்;
நாள் நகரத்து,Naal nagaraththu - (அந்த) மஹாநாகரத்தில்
உறைகின்ற பிரான்,Uraikindra piraan - நித்யவாஸம் பண்ணுகிற மஹோபகாரகனாய்
நெடுமால்,Nedumaal - வியாமோஹமுவீ;யனாய்
கண்ணன்,Kannnan - ஸ்ரீ க்ருஷ்ணனாகத்திருவவதரித்தவனாய்
விண்ணவர் கோன்,Vinnavar koon - நித்யஸீரிகளுக்குத் தலைவனாய்
வாணபுரம் புக்கு,Vaanapuram pukku - பாணாஸுரனுடைய நகரிலே சென்று
முக்கண் பிரான் தொலைய,Mukkan piraan tholaiya - சிலபிரான் பங்கமடையும்படி
வெம் போர்கள் செய்து,Vem poorhal seydhu - கொடிய யுத்தத்தை நடத்தி
வாணனை ஆயிரம் தோள் துணித்தான்,Vaananai aayiram thol thuniththaan - பாணாஸுரனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்தவான் எம்பெருமான்
சரண்,Saran - (அந்தத் திருப்பதியையடைதற்கு) உபாயபூதன்;
அன்றி மற்று ஒன்று இலம்,Andri matru ondrum ilam - கீழ்ச் சொன்னவை தவிர ப்ராப்ய ப்ராபகங்களே யுடையோ மல்லோம்
3443திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (திருவாறன்விளையிலே புகவே நம்முடைய ஸகல துக்கங்களும் தொலையுமென்கிறார்.) 8
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8
அகல் இரு பொங்கையின் வாய் நின்று,Akal iru pongaiyin vaai ninru - மிகப் பெரிய பொய்கையிடத்திலே (முதலையின் வாயிலாகப்பட்டது) நின்று
நின் சரண் அன்றி மற்று ஒன்று இலன் என்று தன்; நீள் கழல் எத்திய ஆனையின்,Nin saran andri matru ondrum illan endru than; neel kazhal edhiya aanaiyin - ‘உன் திருவடிகளை யொழிய மற்றொரு புகலுடையே னல்லேன்’ என்று தன்னுடைய திருவடிகளைத் துதித்த கஜேந்திராழ்வானுடைய
நெஞ்சு இடர் தீர்த்த பிரான் சென்று,Nenju idar theertha piraan senru - செழும் நெஞ்சிலிருந்த இடரைப் போக்கின பெருமான் சென்று அங்கு இனிது உறைகின்ற பொழில் சூழ் திருவாறன் விளை (யை)
ஒன்றி ஸலம் செய்ய ஒன்றுமோ,Onri salam seyyum ondrumo - கிட்டி வலஞ் செய்யக் கூடுமோ?
தீ வினை உள்ளத்தின் சார்வு அல்லவே,Thee vinai ullaththin saarvu allavae - (அப்படி கூடுமாலீகில்) பாவங்கள் நெஞ்சில் பொருத்த முடையன வல்லவாம்.
3444திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (திரு வாறன் விளையை யநுபவிக்க ப்ரதப்தமாகும்போது ஸ்ரீ வைகுண்டம் கிடைப்பதானைலும் தம்முடைய திருவுள்ளம் அதனைப் பொருள்படுத்தாகென்று கூறும் முகத்தால் இத்திருப்பதியில் தமக்குள்ள ஆதராதிசயத்தை வெளியிட்டருளுகிறார்.) 9
தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9
தீ வினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி,Thee vinai ullaththin saarvu alla aagi - பாவங்கள் நெஞ்சில் சேர்த்தியற்று ஜஹருதயம் நிர்த்தோஷமாகிஸ
தெளி விசும்பு ஏறல் உற்றல்,Thel viumbhu eeral utrthal - திருநாட்டிலே போக ப்ராப்தமானலும் (அங்குச் செல்ல விருப்பமற்று)
என் சிந்தனை,En sindhanai - எனது நெஞ்சானது.
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று யாவரும் வந்து வணங்கும்,Naavinullum ullaththullum amaindha thozhilinullum navindru yaavarum vandhu vanangum - மநோ வாக்காயங்களினாலே பயின்று யாவரும் வந்து வணங்குமிடமான
பொழில் திருவாறன் விளையதனை,Pozhil thiruvaaran vilaiyadhanai - பொழில் திருவாறன் விளையதனை
மேலி வலம் செய்து கைதொழ கூடும் கொல் என்னும்,Maeli valam seydhu kaithozhu koodum kol ennum - பொருந்தி வலஞ்செய்து கைதொழ ப்ராப்த மாகுமோ! என்று இதனையே யெண்ணை நின்றது.
3445திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையை பிராப்யம் என்று இருக்க -அவன் திரு நாட்டைத் தரிலோ என்ன அவன் சர்வஞ்ஞான் அல்லனோ அறியானோ என்கிறார்.) 10
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10
சிந்தையினால் சொல்லினால் செய்கையால்,Sindhaiynaal sollinaal seykaiyaal - மனோவாக்காயங்களாலே
நிலத்தேவர் குழு வணங்கும்,Nilaththaevar kuzhu vanangum - பாகவத கோஷ்டி வணங்கப்பெற்ற
சிந்தை மகிழ்திருவாறன் விளை உறை,Sindhai makizthiruvaaran vilai urai - மகோஹரமான திருவாறன் விளையிலே வாழ்கிற
தீர்த்தனுக்கு அற்றபின்,Theerththanukku attrapin - பரமபவித்தரனான பெருமானுக்கு அற்றுத்தீர்ந்த பின்
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அலலா தன்மை,Sindhai matru ondrin thiraththathu allaa thanmai - எனது மனம் வேறெனறை உத்தேச்யமாக நினைத்திராத படியை
தேவபிரான் அறியும்,Deva piraan ariyum - ஸர்வஜ்ஞனான எம்பெருமான தானே அறியக்கடவன்;
சிந்தையினால் செய்வ,Sindhaiynaal seiva - நெஞ்சால் செய்யப்படுமவற்றில்
தான் அறியா தன மாயங்கள் ஒன்றும் இல்லை,Thaan ariya thana maayanghal ondrum illai - அவன் தானறியாத வஞ்சனாங்களொன்றுமில்லையே.
3446திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (இத்திருவாய்மொழியை ஒதுமவர்கள் நித்யஸூரிகள் போரவும் கௌரவிப்பர்களென்று அதனையே பலனாகக் கூறித் தலைக் கட்டுகிறார்.) 11
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11
தீர்த்தனுக்கு அற்றபின்,Theerththanukku attrapin - பரமபவித்திரனான எம்பெருமானுக்கு அநந்யார் ஹப்பட்டபின்பு
மற்று ஒர் சரண இல்லை என்று எண்ணி,Matru or saran illai endru enni - வேறொரு உபாயமில்லை யென்று அறுதியிட்டு
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனன் ஆகி,TheerththanukkE theertha manadhthanan aagi - அப்பெருமானுக்கே அறுதியாக்கப்பட்ட நெஞ்சையுடையவராய்க் கொண்டு
செழு குருகூர் சடகோபன் சொன்ன;,Sezhu kurukoor Sadagopan sonna; - செழு குருகூர் சடகோபன் சொன்ன;
தீர்த்தகங்கள் ஆயிரத்துள்,Theerththakangal aayiraththul - ஆயிரம் பாட்டும் ஆயிரம் தீர்த்தங்களென்னும் படியாக வுள்ளத்திலே
இவை பத்தும் வல்லார்களை,Ivai pathum vallaargalai - இப்பதிகத்தை ஓத வல்லவர்களைப் பற்றி
தேவர்,Devar - நித்யஸூரிகள்
வைகல்,Vaikal - எப்போதும்
தம் தேவியர்க்கு,Tham deviyarkku - தங்கள் மஹிஷிகளிடத்திலே
தீர்த்தங்களே,Theerththangalai - ‘இவர்கள் பரமபவித்தரங்களே’ என்று ஸபஹூமானமாகச் சொல்லுவர்கள்.