Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: இருந்தும் வியந்து (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3513திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (நான் அர்த்தியாய்க் கூப்பிட்டழைக்க விடாயெல்லாம் தீரும்படி. தான் அர்த்தியாய் என்னெஞ்சிலே பெறாப்பேறு பெற்றானாகப் புகுந்திராநின்றானென்கிறார்.) 1
இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1
என்னை,Ennai - அடியனை
வியந்து,Viyandhu - திருவுள்ளமுவந்து
தன் பொன் அடி கீழ் இருத்தும் என்று,Than pon adi keezh iruththum endru - தன் திருவடிகளின் கீழே இருத்தியருள்வானாக வென்று
அருத்தித்து எனைத்தோர் பல நாள்,Aruththiththu enai thoor pala naal - அனேக காலம் நாள்தோறும்
அழைத்தேற்கு,Azhaiththaeerku - அழைத்துக் கூப்பிட்ட வென் விஷயத்தில்
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து,Poruththam udai vaamanan thaan pugundhu - ப்ராவண்யமுடையனான எம்பெருமான் தானே வந்து புகுந்து
என் தன் கருத்தை உற,En than karuththai ura - என்னுடைய கருத்தைத் தானுடையனாய்க்கொண்டு
கண்டு கொண்டு,Kandu kondu - என்னையே பார்த்துக்கொண்டு
வீற்றிருந்தான்,Veetrirundhaan - எழுந்தருளியிரா நின்றான்
3514திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (பிரபல விரோதிகளான இந்திரியங்கள் வலிமாண்டொழியும்படி தன்னழகாலே செய்து என்னை விஷயீகரித்தருளின பேருதவிக்கு, கஜேந்திராழ்வான் திறந்துச் செய்த உதவியும் ஒவ்வாதென்கிறார்.) 2
இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே–8-7-2
எனது ஏழை நெஞ்சு ஆளும்,Enathu ezhai nenju aalum - என்னுடைய சபலமான நெஞ்சைத் தங்களிஷ்டப்படி நடத்திக் கொண்டு போகிற
திருந்தாக ஓர் ஐவரை,Thirundhaaka or aivarai - துஷ்டபஞ்சேந்திரியங்களும்
தேய்ந்து அறமன்னி,Theyndhu aramanni - க்ஷயித்து முடியும் படியாக என்பால் பொருந்தியிருந்து
கண்டு கொண்டு இருந்தான்,Kandu kondu irundhaan - (நிதியெடுத்தவன் நிதினய்யே கண்டு கொண்டிருக்குமா போலே) என்னையே கண்டு கொண்டிருக்கின்றான்.
பெரு தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்தான்,Peru thaal kalitrrukku arul seydha perumaan thaan - பெரிய தாளையுடைய யானைக்கு அருள் செய்து ஸர்வாதிகனானவ்வன்
தரும் அருள் தான்,Tharum arul thaan - அந்த யானைக்கத் தந்த வருளை
இனி யான் அறியேன்,Ini yaan ariyaen - என்பக்கல் பண்ணின வருளைக்கண்ட பின்பு அருளாக மதிக்கின்றிலேன்.
3515திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (ஸர்வேச்வரன் தம் பக்கலிலே இப்படி அளவு கடந்த வியாமோஹத்தைப் பண்ணுகையாகிறவிது. ஆலோசித்துப் பார்த்தால் அஸம்பாவிதம்போல் தோன்றுகையாலே இது மெய்யாயிருக்க வழியில்லை, மருளோ? மாயமயக்கோ? என்று அலைபாய்கிறார்.) 3
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3
அருள் தான் இனியான் அறியேன்,Arul thaan iniyaan ariyaen - இவ்வருளல்லது மற்றோரருளை நானோர்ருளாக மதியேன்
அவன் தான்,Avan thaan - அப்பெருமான்
என் உன் இருள் அற,En un irul ara - எனது உள்ளிருள் தொலையும்படி
வீற்றிருந்தான்,Veetrirundhaan - (எண்ணுள்ளே) எழுந்தருளியிராநின்றான்,
இது அல்லால்,Idhu allaal - இவ்விருப்புத்தவிர
பொருள் தான் எனில்,Porul thaan enil - (அவனுக்கு) வேறு புருஷார்த்த முண்டோவென்னில்
மூ உலகும் பொருள் அல்ல,Moo ulagum porul alla - த்ரிலோகாதிபதித்வமும் ஒரு பொருளாகவுள்ள தன்று
ஈது மருள் தானோ,Idhu marul thaano - இது தான் என்ன ப்ரம்மோ!
மாயம் மயக்கு மயக்கே,Maayam mayakku mayakkae - (அவன் தான்) ஆச்சரியமான ப்ர்ரமகசேஷ்டிதங்களாலே மயக்குகிற படியோ?
3516திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (ஸர்வேச்வரன் தம் பக்கலிலே இப்படி அளவு கடந்த வியாமோஹத்தைப் பண்ணுகையாகிறவிது. ஆலோசித்துப் பார்த்தால் அஸம்பாவிதம்போல் தோன்றுகையாலே இது மெய்யாயிருக்க வழியில்லை, மருளோ? மாயமயக்கோ? என்று அலைபாய்கிறார்.) 4
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே–8-7-4
ஆயன்,Aayan - கோபலக்ருஷ்ணனாயும்
அமரர்க்கு,Amararukku - நித்யஸூரிகளுக்கு
அரி ஏறு,Ari yeru - அளவிடமுடியாத மேன்மையையுடையனாயு மிருக்கிற
எனது அம்மான்,Enathu ammaan - எம்பெருமான்
தேசம் திகழும் தன்திரு அருள் செய்து,Desam thigazhum than thiru arul seydhu - தேசப்ரஸித்த மாம்படியான தன் அஸாதாரண க்ருபையைப்பண்ணி
தனது தூய சுடர் சோதி,Thanathu thooya sudar sothi - தன்னுடைய நிர்மல தேஜோமய திவ்யமங்கள விக்ரஹத்தை
என் உள் வைத்தான்,En ul vaiththaan - எனது நெஞ்சினுள்ளே ஸுப்ரதிஷ்டிதமாக்கினான், (இது மெய்யேயாதலால்)
என்னை வஞ்சித்து மாயமயக்கு மயக்கான்,Ennai vanjiththu maaya mayakku mayakkaan - என்னிடத்தில் வஞ்சகனாய் ப்ரமிக்கச்செய்கிறானல்லன்
3517திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (“தேசந் திகழுந்தன் திருவருள் செய்தே“ என்று கீழ்ப்பாட்டிலருளிச்செய்த்தை இதில் விவரித்தருளுகிறார்.) 5
திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள்
திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே–8-7-5
திகழும் தன் திரு அருள் செய்து,Thigazhum than thiru arul seydhu - மிகப்பொலிகின்ற தன் திருவருளைப்பண்ணி
உலகத்தார் புகழும் புகழ் அது தான் காட்டி தந்து,Ulagaththar pugazhum pugazh adhu thaan kaatti thandhu - லோகத்தார் இதுகண்டு புகழுகிற அப்புகழையும் பிரபலப்படுத்தி
என்னுள் திகழும் மணி குன்றம்,Ennul thigazhum mani kundram - என்னுள்ளே, விளங்கரநின்றதொரு மாணிக்க மலைபோலே நின்றான்,
எனக்கு மற்று புகழும் புகழ் ஓர் பொருளே,Enakku matru pugazhum pugazh or porule - எனக்கு இந்நிலையொழிய வேறு விதமாக அவனைப் புகழ்வதும் ஒரு பொருளோ.
3518திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) ( உலகத்தார் எம்பெருமான் பக்கலில் அபேக்ஷிப்பது இரண்டு வகைப்பட்டது, ஐச்வர்ய கைவல்யாதிகளான இதர புருஷார்த்தங்களை யபேக்ஷிப்பதென்பதொன்று, அவையொன்றும் வேண்டாதே “எமக்கு நீயே வேணும்“ என்று அவன்றன்னையே அபேக்ஷிப்பது மற்றொன்று. இவ்விதமாகவே, எம்பெருமான் உபகரித்தருளுகிறவிதமும் இரண்டுவகைப்பட்டது, சிலர்க்கு இதர புருஷார்த்தங்களைக் கொடுத்துவிடுதல், சிலர்க்குத் தன்னையே கொடுத்துவிடுதல். ஆழ்வார்க்கு அவன் உபகரிப்பது இதர புருஷார்த்தங்களையன்றே, தன்னையே யன்றோ கொடுப்பது. அது கிடைத்ததாகவன்றோ ஆழ்வாரும் களிப்பது. இப்படி, தன்னையே தமக்குத் தந்தருளினதானது, தன்னை வேறு யாரும் கொள்வாரில்லையென்பதனாலன்று, என் பக்கலுள்ள அபிநிவேசத்தாலே தந்தானென்கிறாரிப்பாட்டில்.) 6
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6
கரு மாணிக்கம் குன்றத்து,Karu maanikkam kundrathu - கருமாணிக்க மலையின் மேலே
தாமரை போல்,Thaamarai pool - தாமரைக்காடு அவர்ந்தாற்போன்ற
திரு மார்வு கால் கண் கை செம்வாய் உந்தியான்,Thiru maarvu kaal kann kai sem vaai undhiyaan - திருமார்பு முதலிய திவ்யாவயவங்களையுடையனான பெருமான்
மற்று பொருள் தன்னில்,Matru porul thannil - மற்றுள்ள புருஷார்த்தங்களிலே
எனக்கும் ஓர் பொருள் சீர்க்கதரும் எல்,Enakkum or porul seerkkadharum el - எனக்கும் ஒரு புருஷார்த்தத்தைத் தந்து விட்டானாகில்
பின்னை அவன்,Pinnai avan - பின்னே அவன் உயர்ந்த
தன்னை ஆர்க்கு கொடுக்கும்,Thannai aarkku kodukkum - புருஷார்த்தமான தன்னை ஆருக்குக் கொடுப்பான்.
3519திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (எம்பெருமான் ஆழ்வாரோடே கலந்து முறுவல் செய்து நிற்க, அத் திருப்பவளத்திலழகை யனுபவித்துப் பேசுகிறார்.) 7
செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7
செம் வாய் உந்தி வெண் பல் சுடர் குழை தன்னோடு,Sem vaai undhi ven pal sudar kuzai thannodu - சிவந்தவாய் திருநாபி வெளுத்த திருமுத்து அழகிய மகரக்குழை ஆகிய அவற்றோடே கூட
எவ்வாய் சுடரும்,Evvaai sudarum - மற்றெல்லா அவயவங்களின் தேஜஸ்ஸும்
தம்மில் முன்வளாய்க் கொள்ள,Thammil munvalaik kollai - ஒன்றுக் கொன்ன முற்பட்டுச் சூழ்ந்துகொள்ள
செம் வாய் முறுவரோடு,Sem vaai muruvarodu - சிவந்த திருப்ப வளத்தின் முறுவலோடே கூட
எனது உள்ளத்து இருந்த,Enathu ullathu irundha - என்னெஞ்சினுள்ளே யிருக்கின்ற
அவ்வாய் அன்றி,Avvaai anri - அவ்வித மொழுய
மற்று அருள் யான் அறியேன்,Matru arul yaan ariyaen - வேறொன்றையும் நான் நினைக்கின்றிலே.
3520திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இப்படி தம்மிடத்திலே எம்பெருமான் நிர்ஹேதுகமாகச் செய்தருளின அருளையிட்டு நிர்ஹேதுகமாக அருள் செய்கையே அவனுக்கு இயல்பு என்று அவன்றன்படியை நிஷ்கர்ஷிக்கிறாரிப்பாட்டில்.) 8
அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8
மற்று அருள் அறியேன்,Matru arul ariyaen - வேறொன்றையும் உபகாரமாக நினைத்தருக்கின்றிலேன்,
என்னை ஆளும் பிரானார்,Ennai aalum piraanaar - என்னை அடிமை கொண்ட ஸ்வாமியானவர்
செய்வார்கட்கு,Seivaarukku - தாம் அருள் செய்ய நினைத்தவர்கட்கு
வெறிதே,Verithae - நிர்ஹேதுகமாகவே
உகந்து அருள் செய்வர்,Ugandhu arul seivar - திருவுள்ளமுகந்து க்ருபை பண்ணுவர்
மூ உலகும் நெறி ஆ,Moo ulagum neri aa - மூவுலகங்களையும் முறைதப்பாதபடி.
தம் வயிற்றில் கொண்டு,Tham vayittril kondu - தமக்குள்ளே கூடக் கொண்டு
சிறியேனுடை சிந்தையுள் நின்றொழிந்தாரே,Siriyenudai sindhaiyul nindrozhandhaar - க்ஷுத்ரனான என்னெஞ்சிலே நின்று விட்டாரே.
3521திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (எம்பெருமான் நிர்ஹேதுகமாகத் தம்மை விஷயீகரித்தமையைக் கீழ்ப்பாட்டிலருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி ஆழ்வீர்! ஒரு வ்யாஜமாத்ரமுமில்லாமல் எம்பெருமான் விஷயீகரிப்பனோ? ஏதேனுமொரு வ்யாஜ மிருக்குமே, அதைச் சொல்லிக்காணீர், என்று சிலர் கேட்பதாகக் கொண்டு, அவனுடைய விஷயீகாரத்தை விலக்காமையாகிற அனுமதிமாத்திரமே நான் பண்ணினது. இவ்வளவேயென்கிறாரிப்பாட்டில். “மன்னவைத்தேன் மதியாலே“ என்ற ஈற்றடி இப்பாட்டுக்கு உயிரானது. ஆசார்ய ஹ்ருதயத்தில் இரண்டாம் ப்ரகரணத்தில் (110) “மதியால் இசைந்தோமென்னும் அநுமதீச்சைகள் இருத்துவ மென்னாத வென்னை இசைவித்த என்னிசைவினது“ என்ற சூர்ணையின் பொருள் இங்கே அறியத்தக்கது.) 9
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே–8-7-9
வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும்,Vayittril kondu nindrozhandhaarum - தாயானவள் வயிற்றிலே வைத்து நோக்குமா போலே ரக்ஷகராகின்ற இந்நிலத்தரசர்களையும்
யவரும்,Yavarum - அவர்களுக்கும் மேலான பிரமன் முதலானாரையும்
வயிற்றில் கொண்டு நின்று,Vayittril kondu nindru - தம்முடைய ஸ்வரூபைக தேசத்திலே கொண்டு நின்று
ஒரு மூ உலகும்,Oru moo ulagum - மூவுலகங்களையும்
தன் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை,Than vayittril kondu nindra vannam nindra maalai - தன்னுடைய வயிற்றிலே கொண்டு அநாயாஸமாக இருக்கின்ற திருமாலை
மதியாலே,Madhiyalae - அவர் தந்த அனுமதியாலே
வயிற்றில் கொண்டு,Vayittril kondu - என்னுள்ளே கொண்டு
மன்ன வைத்தேன்,Manna vaiththen - பேராதபடி வைத்தேன்.
3522திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இப்படி யென்னுள்ளே புகுந்தவனை நான் இனியொரு நாளும் விட்டு வருத்தகில்லேனென்கிறார்.) 10
வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10
மொய்த்து ஏய் திரை மோது,Moiththu ey thirai modhu - செறித்து ஏய்த்த அலைகள் மோதப்பெற்ற
தண் பாற்கடலுள்,Than paarkadalul - குளிர்ந்த திருப்பாற்கடலிலே
வைத்து ஏய் சுடர் பாம்பு அணை நம்பரனை,Vaiththu ey sudar paambu anai namparanai - படமெடுத்துத் தகுதியான தேஜஸ்ஸையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய எம்பெருமானை
மதியால்,Madhiyal - அனுமதியாலே
எனது உள்ளத்து அகத்தே,Enathu ullaththu agaththae - என்னெஞ்சிலுள்ளே
வைத்தேன்,Vaiththen - பொருந்த வைத்தேன்,
என்றும் எப்போதும் எய்த்தே ஒழிவேன் அல்லேன்,Endrum eppothum eyththae ozhivaen allaen - இனி யொருநாளும் இளைத்துத் தளரமாட்டேன்
3523திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பயனாக ஜன்ம ஸம்பந்த நிவ்ருத்தியை யருளிச் செய்கிறார்.) 11
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11
சுடர் பாம்பு அணை நம் பரனை திருமாலை,Sudar paambu anai nam paranai thirumaalai - தேசுமிக்கசேஷயனனாய் அஸ்மத் ஸ்வாமியான திருமாலை
அடி சேர் வகைவண் குருகூர் சடகோபன்,Adi ser vagaivan kurukoor sadagopan - திருவடி பணிகையையே இயல்வாகவுடையரான ஆழ்வார்
முடிப்பான் சொன்ன,Mudippaan sonna - ஸம்ஸாரஸம்பந்தத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த
ஆயிரத்து,Aayiraththu - ஆயிரத்தினுள்
இ பத்தும்,I paththum - இப்பதிகம்
சன்மம் அற தேய்ந்து விட,Sanmam ara theyndhu vida - பிறப்பானது நன்றாகத் தொலைந்துபோம்படி
தன் கண்கள் சிவந்து நோக்கும்,Than kankal sivandhu nokkum - தன் கண்கள் சிவக்கப்பார்க்கும்