| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2763 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (ஜகத் காரண பூதனும் ஸர்வாந்தர்யாமியும் திருமகள் கொழுநனுமான கண்ணபிரான் என்னுடைய சூழலை விட்டுப் போக மாட்டாதபடியானா னென்கிறார்) 1 | இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும் எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1 | இவையும்,ivaaiyum - ஸமீபத்திலுள்ள பொருள்களும் உவையும்,uvaiyum - நடுத்தரமாகவுள்ள பொருள்களும் இவரும்,ivarum - ஸமீபத்திலுள்ள சேதநர்களும் அவரும்,avarum - தூரத்திலுள்ள சேதநர்களும் உவரும்,uvarum - நடுத்தரமாகவுள்ள சேதநர்களும் யவையும்,yavaiyum - ஸகல அசேதனங்களும் யவரும்,yavarum - ஸகல சேதனர்களும் (பிரளய காலத்தில்) தன்னுள்ளே,thannulle - தனக்குள்ளே ஆகியும்,aagiyum - ஆகும்படி வைத்தும் காக்கும்,kaakkum - ரக்ஷித்தும் போருகிறவனும் அவையும்,avaiyum - தூரத்திலுள்ள பொருள்களும் அவையுள்,avaiyul - அந்த சேதநா சேதநங்களுக்கு அந்தர்யாமியானவனும் தனி முதல் எம்மான்,thani mudhal emmaan - ஒப்பற்ற காரண பூதனும் அஸ்மத் ஸ்வாமியும் கண்ணபிரான்,Kannabiraan - கண்ணனாக அவதரித்து ஸௌலப்யத்தைக் காட்டினவனும் என் அமுதம்,en amudham - எனக்கு அம்ருதம் போல் பரம போக்யனும் சுவையன்,suvaiyan - ரஸிகனும் திருவின் மணாளன்,Thiruvin maṇaaḻan - பெரிய பிராட்டியார்க்கு மணவாளனுமான பெருமாள் என்னுடை சூழல்,ennudai suuḻal - என்னுடைய சுற்றுப் பக்கத்தில் உளான்,ulaan - தங்கி யிரா நின்றான். |
| 2764 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (கீழ்ப்பாட்டிற் கூறியபடி பரிஸரத்திலே வந்து இருந்த நிலை ஸாத்மித்தவாறே என்னருகே வந்து நின்றானென்கிறார்) 2 | சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான் வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான் ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2 | பல பல சூழல் வல்லான்,pala pala suulal vallaan - மிகப் பல அவதாரங்கள் செய்ய வல்லவனும் தொல்லை யம் காலத்து,thollai yam kaalathu - முன்பொரு காலத்திலே கேசவன்,kaesavan - கேசவனென்னும் திருநாமமுடையவனும் வேழம்,velam - (குவலாயபீட மென்னும்) யானையினுடைய மருப்பை,maruppai - கொம்புகளை ஒசித்தான்,ocitthaan,osithan - ஒடித்து அவ் யானையை முடித்தவனும் விண்ணவர்க்கு,vinnavarkku - தேவர்களுக்கு எண்ணல் அரியான்,eṇṇal ariyaan - நினைத்ததற்கும் அருமையானவனும் உலகை,ulagai - பூமியை கேழல் ஒன்று ஆகி,kaelal onru aagi - ஒப்பற்ற வராஹ ரூபியாகி,இடந்து குத்தி யெடுத்து வந்தவனும் ஆழம்,aazham - ஆழமாகிய நெடுகடல்,netukadal - நீண்ட ஸமுத்ரத்திலே சேர்ந்தான்,serndhaan - திருக்கண் வளர்ந்தருள்பவனுமான என்னுடை அம்மான் அவன்,ennudai ammaan avan - அவ் வெம்பெருமான் என் அருகலிலான்,en arukalilaan - என்னருகிலுள்ளான். |
| 2765 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பெரியதிருவடி திருவன்நதாழ்வான் பிராட்டிமார் முதலானோர் ஓரொரு வகைகளாலே தன்னோடு ஸம்ச்லேஷ ரஸம் பெருமாபோலல்லாமல் எல்லா வகைகளிலுமுள்ள ஸம்ச்லேஷஸங்களையும் நான் பெறும்படி எனக்குத் தந்து என்னை ஒருகாலும் விடாதபடி யானான் எம்பெருமானென்கிறார்.) 3 | அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன் பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3 | அருகல் இல் ஆய,arukal il aay - ஒருநாளும் குறைபடுதலை உடையதல்லாத பெரு சீர்,peru seer - சிறந்த திருக்குணங்களை யுடையவனும் அமரர்கள்,amararkal - நித்ய ஸூரிகளுக்கு ஆதி முதல்வன்,aadhi mudhalvan - தலைவனும் கருகிய நீலம் நல்மேனிவண்ணன்,karugiya neelam nalmeenivanan - கறுத்த நீலமணிபோல் விலக்ஷணாமன திருமேனி நிறத்தை யுடையவனும் செம் தாமரை கண்ணன்,sem thamarai kannan - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவனும் பொரு சிறை புள்,poru sirai pul - செறிந்த சிறகையுடைய பெரிய திருவடியை உவத்து ஏறும்,uvathu aerum - விரும்பி வாஹனமாகக் கொள்பவனும் பூமகளார் தனி கேள்வன்,pumagalar thani kelvan - பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாதனுமான எம்பெருமான் என்னோடுடனே,ennodudane - என்னோடேகூடி நின்று ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன்,oru kathiyin suvai thandittu ozhivillan - ஒரு வழியாலுள்ள இனிமையைத் தந்து தவிருகிறானில்லை (ஸகலவித அநுபவங்களையும் தருகின்றானென்றபடி). |
| 2766 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (ஒன்றாலொன்று குறைவில்லாதவனாய் ஸர்வரக்ஷகனான எம்பெருமான் யசோதைப் பிராட்டியின் இடுப்பிலிருக்குமாபோலே என்னிடுப்பிலே வந்திருத்தல் தனக்குப் பெறாப்பேறு என நினைத்திராநின்றனென்கிறார்) 4 | உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர் மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான் கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4 | உடன் அமர் காதல்,udan amar kaadhal - கூடவே அமர்ந்திருக்கைக்கு விருப்பமுள்ள மகளிர்,magalir - பிராட்டிமார் (யாவரென்னில்) திருமகள்,thirumagal - ஸ்ரீமஹாலக்ஷ்மி மண் மகள்,man magal - பூமிப்பிராட்டி ஆயர் மடமகள்,aayar madamagal - இடைக்குலத்துப் பெண்ணாகிய நப்பின்னைப் பிராட்டி என்ற இவர் மூவர்,endra ivar muvar - என்று சொல்லப்பட்ட இம் மூவராவர்; ஆளும் உலகமும் மூன்றே,aalum ulagamum moondre - தன்னலாளப்படுகின்ற உலகங்களும் மூன்றேயாயிருக்கும்; ஆக இங்ஙனம் வாய்த்தவனும்) அவை,avai - அவ்வுலகங்களை உடன்,udan - விடாமலே ஒக்க விழுங்க,okka vizhunga - ஏக காலத்திலே உண்டு ஆல் இலை,aal ilai - ஆலிலையில் சேர்ந்தவன்,cērandhavan - கண் வளர்ந்தவனும் எம்மான்,emmaan - எனக்கு ஸ்வாமியும் கடல் மலி மாயம் பெருமான்,kadal mali maayam perumaan - கடலிற்காட்டிலும் மிகப் பெரிய மாயச் செயல்களால் பெருமை பெற்றவனுமான கண்ணன்,kannan - கண்ணபிரான் என் ஒக்கலையான்,en okkalaiyaan - என் இடுப்பிலே வந்தமர்ந்தான். |
| 2767 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பிரமன் சிவனிந்திரன் முதலானார்க்கும் ஜநகனான எம்பெருமான் என்று நெஞ்சிலே வந்து புகுந்தானென்கிறார்.) 5 | ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான் நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5 | ஒக்கலை வைத்து,okkalai vaithu - இடுப்பிலெடுத்துக் கொண்டு முலைப்பால் உண் என்று,mulaippaal un enru - ‘முலைப் பாலை யுண்பாய்’ என்று சொல்லி தந்திட,thandita - முலை கொடுக்க வாங்கி,vaangi - (அம் முலையைக்) கையாற்பிடித்து செக்கம்,chekkam - (அந்தப் பூதனையின்) நினைவு செக,sega - அவளோடே முடியும்படியாக அன்று,andru - அந் நாளில் அவள் பால்,aval paal - அவளது பாலையும் உயிர்,uyir - பிராணனையும் செக,sega - அழிய உண்ட,undu - அமுது செய்த பெருமான்,perumaan - ஸ்வாமியானதும், தக்கபிரானோடு,thakkabiraanoatu - நிகம்பரச் சாமியான ருத்ரனும் அயனும்,ayanum - பிரமனும் இந்திரனும்,indiranum - இந்திரனும் முதலாக,mudhalaga - முதலாக வுள்ள ஒக்கவும்,okkavum - எல்லாரையும் தோற்றிய,toatritiya - படைத்த ஈசன்,eesan - ஈசனானவனும் மாயன்,maayan - ஆச்சரிய குண சேஷ்டிதங்களை யுடையவனுமான எம் பெருமான் என் நெஞ்சில் உளான்,en nenjil ulaan - எனது இதயத்திலுள்ளானானான் |
| 2768 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (அநுகூலர்க்கு எளியனாய், பிரதிகூலர்க்கு அரியவனான எம்பெருமான் எனது மார்பிலிருந்து தோளிணைக்கு ஏறிவிட்டானென்கிறார். கீழ்ப் பாட்டிற் சொன்னதையே மறுபடியும் “மாயனென்னெஞ்சினுள்ளான்” என்று அநுபாஷணஞ் செய்தது ஈடுபாட்டின் மிகுதியைக் காட்டும். இது என்ன பெறாப் பேறு! என்று தலை சீய்த்துச் சொல்லுகிறபடி.) 6 | மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –1-9-6 | மாயன்,maayan - ஆச்சரியனான எம்பெருமான் என் நெஞ்சில் உள்ளான்,en nenjil ullaan - எனது நெஞ்சில் இருக்கின்றான்; மற்றும் யவர்க்கும்,matrum yavarkkum - வேறு யாருக்கேனும் அஃதே,akthe - அப்படி யிருப்பதுண்டோ? (இல்லை;) காயமும்,kaayamum - உடம்பும் சீவனும்,seevanum - உயிரும் தானே,thaane - தானேயாய் காலும்,kaalum - காற்றும் எரியும்,eriyum - நெருப்பும் அவனே,avane - அவன் தானேயாய், சேயன்,seyan - (சிலர்க்கு) தூரஸ்தனாய் அணியன்,anian - (சிலர்க்கு) ஸமீபஸ்தனாய் யவர்க்கும்,yavarkkum - எப்படிப்பட்ட ஞானிகளுக்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்,sindhaikkum kosaram allan - மனத்திற்கும் எட்டாதவனாய் தூயன்,thuyan - பரிசுத்தனாய் துயக்கன் மயக்கன்,thuyakkan mayakkan - (அநுக்ரஹ பாத்திரமாகாதவர்களுக்கு) ஸந்தேஹரூபமாயும் விபரீத ரூபமாயுமிருக்கும் ஞானங்களைப் பிறப்பிப்பவனான எம்பெருமான் என்னுடைய தோள் இணையான்,ennudaiya thol inaiyaan - எனது இரண்டு தோள்களிலுமுளனானான். |
| 2769 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (உலகில் நாயகியோடு கலவி செய்யவரும் நாயகன் அவள் உகக்குமாறு தன்னை அலங்கரித்துக்கொண்டு வருமாபோலே எம்பெருமானும் என்னோடு கலக்க விரும்பித் திருத்துழாய்; மாலையாலே மிகவும் அழகு பெறுவித்துக் கொண்டு வந்து எனது நாவிலே கலந்தானென்கிறார் இப்பாட்டில்) 7 | தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான் கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7 | தோள் இணை மேலும்,thol inai meelum - இரண்டு திருத் தோள்களிலும் நல் மார்பின் மேலும்,nal maarbin meelum - விலக்ஷணமான திரு மார்பிலும் சுடர் முடிமேலும்,sudar mudi meelum - ஒளி பொருந்திய திருமுடியிலும் தாள் இணைமேலும்,thaal inai meelum - இரண்டு திருவடிகளிலும் புனைந்த,punaintha - அணியப்பட்ட தண் அம் துழாயுடை அம்மான்,than am thuzhaayudai ammaan - குளிர்ந்தழகிய திருத் துழாயையுடைய ஸ்வாமியாய் கேள் இணை ஒன்றும் இலாதான்,kel inai ondrum ilaathaann - பொருத்தமான உபமானமொன்று மில்லாதவனாய் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,kilarum sudar oli moorthi - மென்மேலும் கிளர்கின்ற சிவந்த வொளியே வடிவெடுத்தவனான எம்பெருமான் நாள்,naal - நாடோறும் அணைந்து,anainthu - கிட்டி ஒன்றும் அகலான்,ondrum agalaan - சிறிதும் விலகாதவானய்க்கொண்டு என்னுடைய,ennudaiya - என்னுடைய நாவின் உளான்,naavin ulaan - நாவிலுள்ளவனாக ஆனான். |
| 2770 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (கலைகளெல்லாவற்றாலும் காணவேண்டியவனான எம்பெருமான் ப்ரமாணங்களாலே காணக்கடவதான தன் வடிவை என் கட்புலனுக்கு இலக்காக்கினானென்கிறார்) 8 | நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும் காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8 | நாவினுள் நின்று,naavinul ninru - நாவினிடத்தில் நின்றும் மலரும்,malrum - பரவுகின்ற ஞானம் கலைகளுக்கு எல்லாம்,gnanam kalaikaluku ellam - ஜ்ஞான ஸாதனமான எல்லாக் கலைகளினுடையவும் ஆவியும் ஆக்கையும் தானே,aaviyum aakkaiyum thaane - உயிரான அர்த்தமும் உடம்பான சப்தமும் தானிட்ட வழக்காம்படி யிருப்பவனும் அழிப்போடு அளிப்பவன் தானே,azhippoatu alippavan thaane - (அவற்றினுடைய) உத்பத்தி விநாசங்களும் தானிட்ட வழக்காம்படி யிருப்பவனும் பூ இயல் நால்,poo iyal naal - பூ மாறாத நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனும். பொருபடை ஆழிசங்கு ஏந்தும்,porupadai aazhisangu aendhum - (அத்திருத்தோள்களில்) போர் செய்கின்ற ஆயுதங்களாகிய திருவாழி திருச்சங்குகளைத் தரித்திருப்பவனும். காவி நல்மேனி,kaavi nalmeeni - கருநெய்தல் போன்று அழகிய திருமேனியை யுடையவனும் கமலம் கண்ணன்,kamalam kannan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனுமாகிய எம்பெருமான் என் கண்ணின் உளான்,en kannin ulaan - (இவ்வழகோடே) எனது கண்ணுக்குள்ளே யானான். |
| 2771 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பிரமன் முதலான பீபிலிகா பர்யந்தமாக ஸகல ஜகத்தையும் படைத்தருளின கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளே புகுந்தருளினான்) 9 | கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9 | கமலம் கண்ணன்,kamalam kannan - புண்டரீகாக்ஷன் என் கண்ணிணுளளான்,en kannin ulanaan - எனது கண்களுக்கு இலக்கானான்; காண்பன்,kaanban - (நானும் அவனைக்) காணா நின்றேன்; (இதுவரையில் அவனைக் காணப்பெறாத நான் இப்போது எங்ஙனே காணப் பெற்றேனென்னில்;) அவன்,avan - அப்பெருமான் கண்களாலே,kankalaale - (தனது) திருக்கண்களாலே அமலங்கள் ஆக விழிக்கும்,amalangal aaka vizhikkum - அஜ்ஞானம் முதலியமலங்கள் தொலையும்படி கடாக்ஷித்தருளினான்; (அதனாலே காணப் பெற்றேனெக்க;) ஐம்புலனும்,aimbulanum - மற்றுமுள்ள எல்லா இந்திரியங்களும் அவன் மூர்த்தி,avan moorthi - அப்பெருமானுக்கே விதேயங்களாயின; (அவன் யாவனென்னில்) கமலத்து நம்பி அயன் தன்னை,kamalathu nambi ayan thanai - தாமரையானாயும் ஜ்ஞாநாதி பரிபூர்ணனாயுமிருக்கிற பிரமனையும் கண் நுகலானொடும்,kaṇ nukalaanodum - நெற்றிக் கண்ணனாகிய சிவபிரானையும் தோற்றி,totri - தோற்றுவித்து (அவர்கள் முதலாக) அமலம் தெய்வத்தோடு,amalam teivathoodu - ஸாத்விகர்களான தேவர்களோடு கூடின உலகம்,ulagam - உலகங்களையும்; ஆக்கி,aakki - படைக்குமவன் என் நெற்றி உளான்,en netri ulan - (ஆக இப்படிப்பட்ட எம்பெருமான்) எனது நெற்றியிலே யானான். |
| 2772 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பிரமன் சிவனிந்திரன் முதலான மஹான்களுங்கூடத் தன்னைப் பெறுதற்கு ஸமயம் எதிர்பார்த்திருப்பாராய்த் தடுமாறும்படி யிருக்கிறவன் தான் என்னைப் பெறுகைக்கு அவஸரம் பார்த்து வந்து என் தலைமீது ஏறிவிட்டானென்கிறார்.) 10 | நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார் ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும் மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10 | ஒற்றை பிறை அணிந்தாலும்,otrai pirai aninthalum - சந்திரசேகரனாகிய சிவபெருமானும் நான்முகனும்,naanmuganum - பிரம தேவனும் இந்திரனும்,indiranum - தேவேந்திரனும் மற்றை அமரரும் எல்லாம்,matrai amararum ellaam - மற்றுமுள்ள எல்லாத் தேவர்களும் வந்து,vanthu - கிட்டி, நெற்றியுள்,netriyul - நெற்றியில் படிந்திருந்து நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி,ninru ennai aalum nirai malar paadhangaal soodi - என்னை யாள்கின்ற மலரொழுங் கமைந்த திருவடிகளை (த்தங்கள் தலையிலே) சூடிக் கொண்டு கற்றை துழாய் முடிகோலம் கண்ணபிரானை,katrai thuzhaay mudikolam kannabiraanai - செறிந்த திருத்துழாயாகிற வளைய மணிந்த எம்பெருமானை தொழுவார்,thozhvaar - வணங்கா நிற்பர்கள்; (அத்தகைய பெருமை வாய்ந்த எம்பெருமான்) எனது உச்சி உளான்,enathu ucchi ulan - என் தலையின் மேலே யானான். |
| 2773 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (இத் திருவாய் மொழியை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ் செய்வார் தலையிலே அப்பெருமானது திருவடிகள் நாடோறும் வந்து சேருமென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்..) 11 | உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன் இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11 | உச்சி உள்ளே நிற்கும்,ucchi ulle nirgum - (கீழ்ப்பாட்டிற் கூறியபடி) என் தலை மீதிருப்பவனும் தேவதேவற்கு,devadhevarukku - தேவாதி தேவனும் கண்ணபிரார்க்கு,kannabirarkku - கண்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானுக்கு இச்சை உள் செல்ல உணர்த்தி,ischai ul chella unaruthi - (தன் பக்கலிலே அவன் பண்ணின) ஆதரத்தைத் தாம் அறிந்த படியைத் திருவுள்ளத்திலே பட அறிவித்து வண் குருகூர் சடகோபன் சொன்ன இ ஆயிரத்துள்,van kurukoor sadagopan sonna i aayiraththul - சடகோபன் சொன்ன இத்திவ்யப்ரபந்தத்தினுள் இவையும் ஓர் பத்து,ivaaiyum oru paththu - இந்த அத்விதீயமான பத்துப் பாசுரங்களையும் என் பிராற்கு,en pirarkku - எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய,vinnappam seyya - (ஒருகால்) விண்ணபஞ் செய்யுமளவில் நீள் கழல்,neel kuzhal - (உலகமளக்க) நீண்ட (அவனது) திருவடிகளானவை நிச்சலும்,niscalum - எப்போதும் சென்னி,chenni - தலையில் பொரும்,porum - வந்து சேரும் |