| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3337 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (பிரானே! உன் திருவடிகளையே சரணமாகப்பற்றின வென்னை இந்திரியங்களை யிட்டு நலியப் பார்க்கிறாயே! இது தகுதியோ? என்கிறார்.) 1 | உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1 | எண்இலாபெரு மாயனே,Ennilaaperu Maayane - அளவிடமுடியாத ப்ரக்ருதி தத்வத்தை உபகரணமாக வுடையவனே! இமையோர்கள் ஏத்தும்,Imayorkal eththum - தேவர்களாலே துதிக்கப்படுபவனும் உலகம் மூன்று உடை,Ulagam moonru udai - மூவுலகங்களையும் சேஷமாசவுடையனுமான அண்ணலே,Annale - ஸ்வாமியே! அமுதே,Amuthe - பரம போக்யனே அப்பனே,Appane - மஹோபகாரங்கள் செய்பவனே! என்னை ஆள் வானே,Ennai aal vaane - என்னை நிர்வஹித்துக் கொண்டு போருமவனே!, என்னை,Ennai - அடியனே உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி,Ul nilaaviya aivaraal kumaithiitri - உள்ளே நிரந்தரவ லீஸம் பண்ணுகின்றபஞ்சேந்திரியங்களாலும் நலிவுறும்படி பண்ணி உன் பாதபங்கயம்,Un paathapankajam - உனது திருவடித்தாமரைகளை நண்ணிலா வகையே,Nannilaa vagaiye - கிட்டாதபடியாகவே இன்னும் நலிவான்,Innum nalivaan - இன்னமும் ஹிம்ஸிப்பதாக எண்ணுகின்றாய்,Ennungindraal - எண்ணியிருக்கிறாய் போலும் |
| 3338 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (எலியெலும்பனான வென்னை இந்திரியங்களாலே நோவுபடுத்தி அந்த நோவை அறிவிக்க முடியாதபடி கடக்க நிற்கிறாயே! என்கிறார்.) 2 | என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோது வித்திட் டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய் கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2 | கன்னலேஅமுதே,Kannale Amuthe - பரமபோக்யனே! கார் முகில் வண்ணனே,Kaar mugil vannaane - காளமேக நிறத்தனே! கடல் ஞாலம் காக்கின்ற,Kadal gnaalam kaakkindra - கடல் சூழந்த வுலகங்களை ரக்ஷித்தருள்கின்ற மின்னு நேமியினாய்,Minnu nemiyinaai - உஜ்ஜ்வலமான திருவாழியை யுடையவனே! வினையேனுடைய வேதியனே,Vinaiyenudaiya vedhiyane - பாவியேனான என்திறத்தாலே எட்டாத படி வேத வேத்யனாயிருக்குமவனே! என்னை ஆளும் வன் கோ ஒர் ஐந்து இவை பெய்து,Ennai aalum van ko ooRainthu ivai peithu - என்னை அடிமை கொள்ளுகிற கொடிய அரசர்கள் போன்ற இந்த பஞ்சேந்திரியங்களை ஏவி வைத்து இராப் பகல்,Iraap pagal - இரவும் பகலும் மோது வித்திட்டு,Modu vithittu - பிடிக்கச் செய்து நான்உன்னை அணுகாவகை,Naan unnai anugaavakai - நான் உன்னைக் கிட்டாதபடி செய்து போதி கணிடாய்,Seithu podhi kanidaai - பண்ணிப்போருகிறாய். |
| 3339 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (ஆழ்வீர்! உம்மை நான் இந்த ப்ரக்ருதியிலே வைத்தது ஒரு ப்ரயோஜனத்துக்காகக் காணும்’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக, பிரானே! என்னை இப்படி நலிவித்து என்ன ப்ரயோஜனம் கொள்ளப் பார்க்கிறாய்? என்கிறார்.) 3 | வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச் சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3 | ஆகி ஆகி,Aagi aagi - காரணபூதனாய்க் கொண்டு அகல் இடம் படைத்து,Akal idam padaiththu - விஸ்தாரமான ஜகத்தை ஸ்ருஷ்டித்து உண்டு,Undu - (பிரளயத்திலே) வயிற்றிலே வைத்து நோக்கி உமிழ்ந்து,Umizhndhu - பிறகு வெளிப்படுத்து (ஒரு கால்) அளந்து இடந்திட்ட,Idandhitta - (வரஹரூபியாய்) இடந்தவனே! சோதி நீள் முடியாய்,Sothi neel mudiyai - உஜ்ஜ்வலமாய் நீண்ட திருவபிஷேகத்தை யுடையவனே! தொண்டனேன் மது சூதன்னே!,Thondan en madhu soodhanne! - என்னை யீடுபடுத்திக் கொண்ட மதுசூதனனே விணையேனே,Vinaiyene - பாவியான வென்னை வேதியான நீற்கும் ஐவரால்,Vedhiyanaa neerkum aivaraal - இடைவிடாதே நலியும் பஞ்சேந் திரியங்களாலே மோதுவித்து உன் திருவடி சாதியாவகை,Modhuviththu un thiruvadi saadhiyaavakai - உன் திருவடிகளைக் கிட்டாதபடி நீ தடுத்து என் பெறுதி,Nee thaduththu en perudhi - நீ தடை செய்து என்ன பயன் பெற்றாயாகிறாய்; அந்தோ,Andho - ஐயோ! |
| 3340 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (பீரானே! உன் திருவடிகளைப் பெறுவதற்கு உபாயம் உன் திருவடிகளே யென்றிருக்கிற இந்த என்னுடைய அறிவுங்கூட அழியும் படி இந்திரியங்களைக் கொண்டு என்னைக் கலக்கி உன் திருவடிகளைச் சேராதபடி பண்ணவா நினைத்திருக்கிறாய் என்கிறார்.) 4 | சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப் போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய் யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!–7-1-4 | யாதும் யாவரும் இன்றி,Yaadhum yaavarum indri - சேதநாசேதநப் பொருள்களொன்றொழியாமல் நின் அகம் பால் ஒடுக்கி,Nin agam paal oduki - உன் திருவயிற்றின் ஏக தேசத்திலே ஒதுங்கும் படி பண்ணி ஓர் ஆலின் நீள் இலை மீது,Or aalin neel ilai meedhu - ஓர் ஆலமரத்தினுடைய சிறிய இலையின் மீது சேர்குழவி,Ser kuzavi - குழந்தையாய்க் கண்வளர்ந்தருளினவனே! வினையேன் வினை தீர் மருந்தே,Vinaiyen vinai theer marundhe - பாவியேனான வென்னுடைய பாவங்களைத் தீர்க்கும் மருந்தானவனே! ஒர் ஐவரை காட்டி,Or aivarai kaatti - பஞ்சேந்திலீயங்களைக் காட்டி நான் சூது அறியாவகை,Naan soodhu ariyaavakai - தான் உறுவது அறியாதபடி சுழற்றி,Suzhatri - என்னை மருளப்பண்ணி உன் அடி போது நான் அணுகா வகை செய்து,Un adi poadhu naan anugaa vakai seidhu - உன் திருவடி மலர்களை நான் கிட்டாதபடி பண்ணி போதி கண்டாய்,Pothi kandai - கண்காணாதபடி கடக்க நிற்கின்றாயே! |
| 3341 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (நான் ஒரு ஸமாதானம் செய்து கொள்ள முடியாதபடி விஷயங்களாலும் இந்திரியங்களாலும் என்னை ஹிம்ஸிப்பவர்களும் ஐவர்; ஹிம்ஸைக்குப் பரிகரமான வஸ்துக்களும் ஐந்து என்கிறார்._ 5 | தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம் வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5 | அடல் ஆழி ஏந்தி,Adal aazhi endhi - சேசு பொருந்திய திருவாழியைக் கையிலேதாங்கி அசுரர் வன்குலம்,Asurar van kulam - அசுரர்களின் பிரபலமான கூட்டங்களை மருங்கு வேர் அறுத்தாய்,Marungu ver aruththai - பக்கவேரோடே அறுத்தவனே! ஓ விண்ணுளார் பெருமானே,O vinnular perumane - ஓ நித்யஸூரிதாதனே! தீர் மருந்து இன்றி,Theer marundhu indri - மாற்று மருந்தில்லாதபடி (அபரிஹார்யமாக) ஐந்து நோய் அடும்,Aindhu noi adum - ஐந்து வகைப்பட்ட சப்தாதி விஷயங்களாகிற நோய்களாலே முடிக்கக்கடவதான செக்கில் இட்டு,Sekkil ittu - (சரீரமாகிற) செக்கிலே தள்ளி திரிக்கும் ஐவரை,Thirikkum aivarai - நெருக்கிற பஞ்சேந்திரியங்களை நேர் மருங்கு உடைத்தா அடைத்து,Ner marungu udaiththa adaitthu - நேரிலும் பக்கங்களிலுமாக நிறுத்தி நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்,Negizhppan okkinraai - நெகிழ விடுவான் போலேயிரா நின்றாய்; இனி மருந்து ஆகுவார்யார்,Ini marundhu aaguvaar yaar - இனி மரந்தாகக் கூடியவர் யார்? |
| 3342 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (நம்மிற் காட்டில் எவ்வளவோ மேம்பட்டவர்கள் என்று ப்ரஹித்தி பெற்றவர்களையும் நலியக்கடவ இந்திரியஙகள் என்னை என்ன பாடுபடுத்தா? என்கிறார்.) 6 | விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்? பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென் கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6 | விண் உளார்,Vin ulaar - விண்ணுலகில் உள்ளவர் களாய்க்கொண்டே பெருமாற்கு,Perumaarku - பராத்பரனான உனக்கு அடிமை செய்வாரையும்,Adimai seyvaaraiyum - அடிமைசெய்பவர் காளன நித்யஸூரிகளையும் மண்ணுள்,Mannul - இந்நிலத்திலே செறும்,Serum - மேலிட்டு நலியக்கூடிய ஐம்புலன் இவை,Aimpulan ivai - இந்த பஞ்சேந்திரியங்கள் என்னைப் பெற்றால் என் செய்யா,Ennaip peral en seyya - (இவற்றை வெல்லுதற்குரிய வலிமையற்ற) என்னிடம் வந்து சேர்ந்தால் இவை என்னதான் செய்ய மாட்டா? மற்று,Matru - அதற்கு மேலே நீயும் விட்டால்,Neeyum vittaal - சக்தனான நீயும் கை விட்டால் (என்செய்யா),(En seyya) - என்ன செய்யமாட்டா? (எதுவும் செய்யக்கூடுமன்றோ.) பண் உளாய்,Pan ulaay - ஸ்வரத்தை அறியுமவனே! கவிதன் உளாய்,Kavithan ulaay - (என்னுடைய ஆர்த்தியே வடிவெடுத்த சொற்களே யறியுமவனே! பத்தியின் உள்ளாய்,Pattiyin ullaay - என்னுடைய ஆற்றாமையை அறியுமவனே! பரம் ஈசனே,Param eesanee - பராத்பரனே! என் கண் உளாய் நெஞ்சு உளாய் சொல் உளாய்,En kan ulaay nenju ulaay sol ulaay - என்னுடைய கண்ணோடும் நெஞ்சோடும் வாகிந்திரியத்தோடும் வாசியற உள்ளே ஸந்நிதி பண்ணியிரப்பவனே! வந்து,Vandu - என்னளவில் வந்து ஒன்று சொல்லாய்,Ondru sollaay - (அபயமாக) ஒரு வார்த்தை யருளிச் செய்யவேணும். |
| 3343 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (அடியார்கட்கு அருந்தொழில் செய்தும் அபேக்ஷிதம் தலைக்கட்டுவதையே இயல்வாக வுடையனான உன்னுடைய கருணையில்லாயாகில் பிரபரமான இந்திரியங்களை நான் வெல்லுவதென்றொரு பொருளுண்டோ வென்கிறார்.) 7 | ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்? அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ!–7-1-7 | அன்று,Andru - பண்டொரு காலத்திலே தேவர் அசுரர்,Devar Asurar - தேவர்களும் அசுரர்களும் வாங்க,Vaang - வலிக்கும்படியாக அலைகடல்,Alaikadal - அலையெறிகிற கடலிலே அரவம் அளாவி,Aravam Alaavi - வாஸூதி யென்கிற பாம்பைச் சுற்றி ஓர் குன்றம்,Or Kunram - மந்தர மலையை வைத்த எந்தாய்,Vaittha Endhaay - நாட்டின் பெருமானே! கொடியேன் பருகு இன் அமுதே,Kodiyen Parugu Inn Amudhe - பாவியேனான நானும் பருகும் படியான இன்னமுதமே! உன்திரு அருள் இல்லை ஏல்,Unthiru Arul Illai Ael - உன்னுடைய கருபை இல்லை யாகில், ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஒர் ஐவர்வன் கயவரை,Ondru Solli Oruthinil Nirgiladha Or Aivarvan Kayavarai - ஆறியிருக்கமாட்டாத பஞ்சேந் திரியங்களாகிற பிரபலக் கொடியவர்களை யான் என்று வெல் கிற்பன்,Yaan Endru Vel Kirpan - அடியேன் என்றைக்கு வெல்ல வல்லவனாவேன்? |
| 3344 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (எனக்குண்டான ப்ரக்ருதி ஸம்பந்தத்தை யறுத்து, மனமொழி மெய்களாலே உன்னையே நான் நிரந்தரமாக அநுபவிக்கும்படி பண்ணி யருளவேணுமென்கிறார்.) 8 | இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!–7-1-8 | என் அம்மா,En Amma - என் ஸ்வாமியே! என் கண்ணா,En Kanna - எனக்கு எளியவனானவனே! இமையோர் தம் குலம்; முதலே,Imayor Tam Kulam; Mudhale - நிக்யஸூரிகளின் திரளுக்குத் தலைவனே! ஒர் ஐவர்,Or Aivar - சப்தாதி விஷயங்கள் ஐந்தும் இன் அமுது என தோன்றி,Inn Amudhu En Thondri - இனிய அமிருதம் போல் போக்யமாய்த் தோன்றி யாவரையும் மயக்க,Yaavaraiyum Mayakka - எப்படிப்பட்டவர்களையும் மயக்கும் படியாக நீ வைத்த முன்னம் மாயம் எல்லாம்,Nee Vaittha Munnam Maayam Ellam - நீ உண்டாகி வைத்த அநாதியான ஸம்ஸாரத்தை யெல்லாம் முழுவேர் அரிந்து,Muzhuver Arindhu - வாஸநையோடே போக்கி என்னை,Ennai - அடியனே உன் சின்னமும் திரு மூர்த்தியும்,Un Chinnamum Thiru Moorthiyum - உனது அஸாதாரண லக்ஷ்ணங்களான சங்கசக்ராதிகளையும் திவ்யமங்கள் விக்ரஹத்தையும் சிந்தித்து,Sindhitthu - நெஞ்சார நினைத்து ஏத்தி,Etti - வாயாரத் துதித்து கை தொழ,Kai Thoza - கையாரத் தொழும் படியாகப் பண்ணி எனக்கே அருள்,Enakke Arul - எனக்கென்று விசேக்ஷித்த க்ருபையைப் பண்ண வேணும். |
| 3345 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (விஷயங்களிலே ஆத்மாவைத் தள்ளும் இந்திரியங்கள் என்னை நலியாத படி பண்ணவேணும் என்று இரக்கிறார்.) 9 | குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய் நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள் பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9 | நிலம் முதல்,nilam mudhal - பூமி முதலாக இனி எவ்வுலகுக்கும்,ini evvulakkum - மற்றும் ஸகல லோகங்களுக்கும் நிற்பன செல்வன என,nirpana selvan ena - ஸ்தாவர ஜங்கம ரூபமான பொருள் பல,porul pala - பொருள்கள் பல வற்றையும் முதல் படைத்தாய்,mudhal padaitthaai - முன்னம் படைத்தவனே! என் கண்ணா,en kanna - என் கண்ணனே! என் பரம் சுடரே,en param sudare - என் பரஞ்சோதிவடிவனே!, குலம்,kulam - குலத்தை முதல் அடும்,mudhal adum - வேரோடே முடிக்கவல்ல தீவிகளை,theevigalai - பாபங்களை விளைக்கவல்ல கொடு வன்குழியினில்,kodu vankuzhiyinil - (சப்தாதி விஷயங்களாகிற) படுகுழியதிலே வீழ்க்கும் ஐவரை,veezhkum aivarai - தள்ளக்கூடிய பஞ்சோத்திரியங்களை வலம் முதல் கெடுக்கும் வலமே,valam mudhal kedukum valame - மூல பலத்தோடே முடிக்கும் படியான மிடுக்கை தந்தருள் கண்டாய்,tandarul kandai - அநுக்ரஹித்தருள வேணும். |
| 3346 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (பிரானே! உன் திருவடிகளிலே அடிமை செய்கைக்கு இடையூறாய் விஷயாநுபவங்களுக்குப் பாங்கான உடம்பை எனக்குத் தந்தாய்; அதுவே ஹேதுவாகப் பஞ்சேந்திரியங்களும் பெறுக்கவொண்ணாத ஹிம்ஸைகளைச் செய்கின்றன; அவற்றைப் பரிஹரித்தருளவேணும் என்று ஆர்த்தியோடே பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.) 10 | என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய் வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை வலித்து எற்று கின்றனர் முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10 | முன்,mun - முன்பொரு காலத்திலே பரவை அடைந்து,paravai adainthu - சுடலைக் கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி,amudham konda moorthi - அமுதத்தை யெடுத்து உதவிய ஸ்வாமியே! என் பரம் சுடரே,en param sudare - எனக்கு விதேயனான பரஞ்சோதியே! என்றிப்படி உன்னை நோக்கிக் கூப்பிட்டு உன் இணைதாமரை கட்கு,un inaithamarai kadgu - உனது உபய பாதங்கள் விஷயத்திலே அன்பு உருகிநிற்கு மது நிற்க,anbu uruginirku madhu nirka - அன்பினாலே உருகியிருக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க (அதற்கு விரோதமாக) சுமடு தந்தாய்,sumadu thandhai - ((அதற்கு விரோதமாக) சரீரமாகிற) சும்மாட்டைத் தந்தாயே! (அதனால்) வன் பரங்கள் எடுத்து,van parangal eduthu - பிரபலமான விஷயபாரங்களைச் சுமத்தி ஐவர்,aivar - பஞ்சேந்திரியங்கள் திசை திசை,disai disai - ஒவ்வொரு முலையாக வலித்து,valithu - இழுத்து எற்றுகின்றனர்,etrugindranar - பீடிக்கின்றனர்; ஓ,o! - இது பொறுக்கமுடிய வில்லையே. |
| 3347 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (இத்திருவாய்மொழியைப் பாடவல்லார்க்கு இந்திரியங்களால் நலிவு படவேண்டிய பாவங்கள் தொலையுமென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11 | கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப் புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும் கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11 | குணங்கள் கொண்ட,gunangal kondha - ஸத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களைக் கொண்ட. மூர்த்தி ஓர் மூவர் ஆய்,moorthi or moovar aay - மும்மூர்த்திகளுமாய் படைத்து அளித்து கெடுக்கும்,padaitthu alithu kettum - ஸ்வருஷ்டிஸ்திதிகளுமாய் அப்புண்டரீகம் கொப்பூழ்,appundariyam koppuul - அப்படிப்பட்ட பத்மநாபனாய் புனல் பள்ளி அப்பனுக்கே,punal palli appanuke - காரண ஜலத்திலே கண்வளர்ந்த பெருமானுக்கு தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,thondar thondar thondan sadagopan - தாஸாது தாஸராண ஆழ்வார் சொல் ஆயிரத்துள்,sol aayiraththul - அருளிச் செய்த ஆயிரத்தினுள் இப் பத்தும்,ip pattum - இப் பத்துப் பாசுரங்களையும் கங்குலும் பகலும்,Kangulum pagalum - ஸதாகாலமும் கண்டு பாட வல்லார்,kandu paada vallaar - பொருள் கண்டு பாடவல்லாருடைய வினை போம்,vinai poam - பாவங்கா தொலைந்துபோம். |